ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை)
विसृज्य ब्राह्मणांस्तांस्तु
नियतो वाग्यतः शुचिः ।
दक्षिणां दिशम् आकाङ्क्षन्
याचेतैमान् वरान् पितॄन् ॥
- மனு ஸ்மிருதி
சாப்பிட்ட பிராம்மணர்கள் கிளம்பிய பிறகு, அமைதியாக அவர்களை சிறிது தூரம் பின் தொடர்ந்து, பிறகு தெற்கு முகமாக நின்று இவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்..
दातारो नो अभिवर्धन्तां
वेदाः सन्तति: एव च ।
श्रद्धा च नो मा व्यगमद्
बहुदेयं च नो अस्त्विति ॥
தாதாரோ நோ அபி-வர்தந்தாம்
வேதா சந்ததி: ஏவ ச |
ஸ்ரத்தா ச நோ மாவ்யகமத்
பஹுதேயம் ச நோ அஸ்த்விதி ||
- மனு ஸ்மிருதி
அள்ளி தானம் கொடுக்கும் குணமுள்ள புத்திரர்களால் என் குலம் பெருக வேண்டும்.
வேதம் ஓதுவதிலும், அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வதிலும், யாகங்களில் செய்வதிலும் ஆர்வமுள்ள சந்ததிகளால் என் குலம் பெருக வேண்டும்.
எங்கள் அனைவருக்கும் வேதத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறையாமல் இருக்கட்டும்.
மற்றவர்களுக்கு அள்ளி கொடுக்கும்படியான செல்வம் எங்களுக்கு கிடைக்கட்டும்.
இவ்வாறு பிரார்த்தனை செய்து ஸ்ரார்த்தம் முடிக்க வேண்டும்...
No comments:
Post a Comment