Followers

Search Here...

Friday, 26 May 2023

நல்லவன் கஷ்டப்படுகிறான்! கெட்டவன், கொள்ளைக்காரன் நன்றாக வாழ்கிறான் !! நானும் இவர்களை போல ஆகி விடலாமா? இதற்கு பதில் என்ன? மனு ஸ்ம்ருதி படியுங்கள்..

"நல்லவன் கஷ்டப்படுகிறான்!கொள்ளைக்காரன்,கெட்டவன் நன்றாக வாழ்கிறான் !! நானும் இவர்களை போல ஆகி விடலாமா?" இதற்கு பதில் என்ன? 

மனு ஸ்ம்ருதி படியுங்கள்..  ப்ரம்மாவின் புத்திரனான ஸ்வாயம்பு மனு சொல்கிறார்.


न सीदन्नपि धर्मेण मनो अधर्मे निवेशयेत् ।

अधार्मिकानां पापानाम् आशु पश्यन् विपर्ययम् ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

தான் அறத்தோடு (தர்மம்) வாழ்ந்து வறுமையில் வாடும் போது, அதே சமயம் அதர்மத்தோடு வாழும் ஒருவன் சௌக்கியமாக வாழ்கிறானே என்று மனம் தடுமாற கூடாது. "அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்" என்று அறிந்து, தானும் அதர்ம வழியில் செல்ல மனத்தை செலுத்தவே கூடாது.


न अधर्म: चरितो लोके सद्यः फलति गौरिव ।

शनैरावर्त्य मानस्तु कर्तुर्मूलानि कृन्तति ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

அதர்மம் செய்பவன் அதற்கான பாப பலனை உடனே அடைந்து விடுவதில்லை. ஆனால், காலம் கனியும் போது அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்.

यदि न आत्मनि पुत्रेषु न चेत् पुत्रेषु नप्तृषु ।

न त्वेव तु कृतो अधर्मः कर्तुर्भवति निष्फलः ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

ஒருவேளை, அதர்மம் செய்தவன் பாபத்தின் பலனை அழிவை சந்திக்காமல் போனாலும், அவன் பிள்ளையோ, பேரனோ அல்லது அவனது பிள்ளையோ அதன் பலனை அடைந்து அழிந்து போவார்கள். ஒரு நாளும் ஒருவன் செய்த அதர்மம் பலன் தராமல் போகாது.


अधर्मेणैधते तावत् ततो भद्राणि पश्यति ।

ततः सपत्नान् जयति समूलस्तु विनश्यति ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

ஒருவன் செய்த அதர்மங்கள் ஒரு நிலையை அடையும் வரை, அவன் சுகமாக சௌக்கியமாக வாழ்ந்து கொண்டு இருப்பான். தன்னை விட குறைந்த எதிரிகளையும் ஒழிப்பான். எப்பொழுது இவன் செய்த பாபம் ஒரு பரிபக்குவத்தை அடைகிறதோ, அப்போது தன்னுடைய சொத்து, சுகம், பிள்ளைகளோடு சேர்த்து, தானும் அழிந்து போவான்.

No comments:

Post a Comment