பாண்டவர்களுக்கு எத்தனை மகன்கள் பிறந்தார்கள்? அறிவோம் மஹாபாரதம்
ततः पाञ्चाल विषयं गत्वा
स्वयंवरे द्रौपदीं लब्ध्वा अर्ध राज्यं
प्राप्य इन्द्रप्रस्थ निवासिन: तस्यां
पुत्रान् उत्पादयाम् आसु द्रौपद्याम्।।
प्रतिविन्ध्यां युधिष्ठिरः |
सुतसोमं वृकोदरः |
श्रुतकीर्तिमर्जुनः |
शतानीकं नकुलः |
श्रुतसेनं सहदेव इति।।
- மஹாபாரதம் (வ்யாஸர்)
பாஞ்சால தேசம் (punjab) சென்று, திரௌபதியை சுயம்வரத்தில் வென்று, கிடைத்த பாதி ராஜ்யமான இந்திரப்ரஸ்தத்தில் பாண்டவர்கள் வசித்தனர். அங்கு திரௌபதி மூலம் பாண்டவர்கள் 5 புத்திரர்களை பெற்றனர்.
யுதிஷ்டிரன் ப்ரதிவிந்த்யன் (1) என்ற புத்திரனை பெற்றார்.
பீமன் ஸுதஸோமன் (2) என்ற புத்திரனை பெற்றார்.
அர்ஜுனன் ஸ்ருதகீர்த்தீ (3) என்ற புத்திரனை பெற்றார்
நகுலன் ஸதாநீகன் (4) என்ற புத்திரனை பெற்றார்.
சஹதேவன் ஸ்ருதசேனன் (5) என்ற புத்திரனை பெற்றார்.
शैव्यस्य कन्यां देवकीं नामोपयेमे युधिष्ठिरः।
तस्यां पुत्रं जनयामास यौधेयं नाम।।
யுதிஷ்டிரன் ஸைப்யனின் பெண்ணான தேவகீயை மணந்தார். அவர்களுக்கு யௌதேயன் (6) என்ற புத்திரன் பிறந்தான்.
பிறகு, அர்ஜுனன் மதுரைக்கு எல்லையாக இருந்த மணலூர் (பாண்டிய தேசம்) அரசனின் (சித்ரவாஹனன்) பெண்ணான சித்ராங்கதாவை மணந்தார். அவர்களுக்கு பப்ருவாஹனன் (பாண்டிய மன்னன்) (13) என்ற புத்திரன் பிறந்தான்.
एते त्रयोदश पुत्राः पाण्डवानाम्
இவ்வாறு பாண்டவர்களுக்கு 13 புத்திரர்கள் பிறந்தார்கள்.
பாண்டிய தேச அரசி சித்ராங்கதா, அர்ஜுனனின் மூத்த மனைவியும், பாஞ்சாலியுமான (punjab) திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து இருக்கிறாள்.
அவள் மகனும், பாண்டிய அரசனுமான பப்ருவாஹனன் முதல் பிறகு 5000 வருடங்கள் வந்த பாண்டிய அரசர்கள் யாவரும் திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து வழிபாடு செய்து, அக்னியில் இருந்து தோன்றியவள் என்பதால், அவளுக்கு முன் தீ மிதித்து வழிபாடு செய்து இருக்கின்றனர் என்று தெரிகிறது.
இன்றைய பஞ்சாபில் கூட திரௌபதிக்கு வழிபாட்டு கோவில்கள் அதிகம் இல்லை. ஆனால் திரௌபதிக்கு தெற்கு பாரதமான தமிழ்நாட்டில் திரௌபதிக்கு கோவில்கள், வழிபாடுகள் அதிகம் காணப்படுகிறது.
ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது?
தமிழர்களுக்கும் திரௌபதிக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருக்கும்?
திரௌபதியை மணந்து கொண்ட அர்ஜுனன், தமிழகம் வந்தாரா?
மஹாபாரதம் படிக்கும் போது, இதற்கான விடை நமக்கு தெரிகிறது.
அது மட்டுமல்ல, அர்ஜுனன் பாண்டிய இளவரசியான சித்ராங்கதையை மணந்து கொண்டார் என்று தெரிகிறது.
அர்ஜுனன் பிள்ளையே பிறகு பாண்டிய மன்னன் ஆனான் என்றும் தெரிகிறது.
மஹாபாரத போருக்கு பிறகு 4000 வருடங்கள் (பாண்டிய ஆட்சி இருந்த வரை) அர்ஜுனன் வம்சமே பாண்டிய மன்னர்களாக ஆண்டனர்.
அர்ஜுனன் பாண்டிய இளவரசி சித்ராங்கதையை மணக்க இடம் கொடுத்த திரௌபதிக்கு இந்த தமிழ் மண் தெரிவிக்கும் நன்றி என்று அறிய முடிகிறது.
மேலும், திரௌபதி அக்னியில் இருந்து வந்தவள் என்று காட்ட, தீ மிதிக்கும் வழிபாடும் ஏற்பட்டது என்று அறிய முடிகிறது.
மஹாபாரத காலத்தில் (3100BCE) "மதுரை"க்கு பெயர் என்ன இருந்து இருக்கிறது? என்று அறிய முடிகிறது.
பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?
சோழ அரசாட்சியும், சேர அரசாட்சி முடிந்ததும், பாண்டிய அரசாட்சி பல வருடங்கள் நடந்தது என்பது மாலிக் காபூர் வந்த சமயத்தில் அறிய முடிகிறது. இஸ்லாமியர்கள் தாக்கிய மீனாக்ஷி கோவிலில் இன்றும் உடைக்கபட்ட சிவ லிங்கம் கதை சொல்கிறது.
5000 வருடம் முன் மஹாபாரத காலத்தில் "மணிபூரம்" என்றும் மதுரை அழைக்கப்பட்டு இருக்கிறது.
பார்வதி தேவியே மலயத்வஜ பாண்டியனுக்கு மீனாக்ஷியாக பிறந்து இந்த பாண்டிய தேசத்தை ஆண்டாள். மலயத்வஜன் வம்சத்தில் வந்த பாண்டிய மன்னன் என்று சகாதேவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார், அன்று இருந்த பாண்டிய அரசர்.
பிற்காலத்தில் பெரியாழ்வார் இங்கு வந்து வசித்த போது, சில மைல் தூரத்தில் கள்ளழகர் இருக்கும் இடத்தை பார்த்தால் கோகுலம் போலவும், அங்குள்ள மலையை பார்த்தால் கோவர்த்தனம் போலவும், பிருந்தாவனம் போலவும், இந்த தலைநகரை பார்த்தால் மதுரை போலவும் தெரிய, அங்கேயே கடைசி வரை வசித்தார்.
மணிபூரம் தென்மதுரை போல இவருக்கு தெரிய, உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிஜமான மதுராவை வடமதுரை... வடமதுரை என்று குறிப்பிட்டு பாடுகிறார்.
அவர் காலத்துக்கு பிறகே, மதுரை என்ற பெயர் உண்டாகியது.
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் முக்தி பெற்ற ஸ்தலம் அழகர்மலை என்ற சோலைமலை என்ற திருமாலிருஞ்சோலை.
பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?
தமிழர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?
வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்
Connection between tamil people (Pandiya and chola) in mahabharat?
In 3 chapter, we see this connection. Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.
1st when Arjuna goes for theertha yatra, 2nd sahadeva when he goes for rajasuya yagya, 3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.
பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும், தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.
நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.
மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது
1. அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.
2. யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார். இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான். சபா பர்வம், அத்தியாயம் 33 https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1
कश्चैनम् अस्तं नयति कस्मिंश्च प्रति-तिष्ठति ॥Adi Parva
யார் சூரியனை உதிக்க செய்கிறார்?
சூரியனுக்கு பக்கத்தில் யார் போகிறார்கள்?
யார் சூரியனை அஸ்தமிக்க செய்கிறார்?
எதில் சூரியன் நிலை பெற்று இருக்கிறார்?
ब्रह्म आदित्यम् उन्नयति देवा: तस्य अभित: चराः।
धर्म: चा अस्तं नयति च सत्ये च प्रति-तिष्ठति ॥
பரமாத்மா (ப்ரம்மம்) சூரியனை (ஜீவனை) உதிக்க செய்கிறார்.
தேவர்கள் (மனமும், புலனும்) சூரியனுக்கு (ஜீவனுக்கு) பக்கத்தில் போகிறார்கள்.
பரமாத்மாவின் சட்டம் என்ற தர்மமே (பக்தியால்) சூரியனை (ஜீவன்) அஸ்தமிக்க செய்கிறது (மோக்ஷம் அடைகிறான்)
சத்தியத்தில் (பரமாத்மாவின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு) சூரியன் (ஜீவன்) நிலை பெற்று இருக்கிறான்.
केनस्विद् श्रोत्रियः भवति केनस्विद् विन्दते महत्।
केनस्विद् द्वितीयवान् भवति राजन् केन च बुद्धिमान् ॥
எதனால் மனிதன் ஸ்ரோத்ரியனாகிறான் (வேதம் படித்தவன்)?
எதனால் மனிதன் மகத்தை (பெருமை) அடைகிறான்?
எதனால் மனிதன் துணை உள்ளவனாகிறான்?
எதனால் மனிதன் புத்திமானாகிறான்?
श्रुतेन श्रोत्रियो भवति तपसा विन्दते महत्।
धृत्या द्वितीयवान् भवति बुद्धिमान् वृद्ध सेवया ॥
வேதம் ஓதுவதால் மட்டுமே மனிதன் ஸ்ரோத்ரியனாகிறான்.
தவத்தால் (action without giveup) மனிதன் மகத்தை (பெருமை) அடைகிறான்
தைரியத்தினால் மனிதன் துணை உள்ளவனாகிறான்.
வயதானவர்களை கைவிடாமல் அவர்களுக்கு சேவை செய்யும் மனிதன் புத்திமானாகிறான்.
किं ब्राह्मणानां देवत्वं क: च धर्मः सतामिव।
क: च एषां मानुषो भावः किम् एषांअसतामिव ॥
ப்ராம்மணன் (MLA, MP) தேவ தன்மையை (ஸத்வ குணத்தை/சாஸ்திரத்தை மீறாத குணத்தை) எப்போது பெறுகிறான்?
ப்ராம்மணனிடம் (MLA, MP) இருக்க வேண்டிய சாது தர்மம் எது?
பிராம்மணன் (MLA, MP) எப்போது மனித தனமையை அடைகிறான்?
ப்ராம்மணனிடம் (MLA, MP) இருக்க கூடாத அசட்டு குணம் எது?
स्वाध्याय एषां देवत्वं तप एषां सतामिव।
मरणं मानुषो भावः परिवाद: असतामिव ॥
ப்ராம்மணன் வேதம் அத்யயனம் செய்வதால் தேவ தன்மை பெறுகிறான். (வேதம் படிக்க படிக்க சமம்-தமம் (மன அடக்கம், புலன் அடக்கம்) உண்டாகும், ஆத்மாவே நான் என்று அறிகிறான்)
ப்ராம்மணனிடம் இருக்க வேண்டிய குணம் - தவமே (வேதத்தின் அர்த்தத்தை நினைத்து கொண்டே இருப்பதே)
‘ஆத்மா நான்’ என்பதை மறந்து, தேகம் அழியும் மரணத்தை கண்டு பயப்படும் பிராம்மணன் மனித தனமையை அடைகிறான்
ப்ராம்மணனிடம் இருக்க கூடாத குணம் - பரநிந்தை (பிறரை பற்றி குறை சொல்வது)
किं क्षत्रियाणां देवत्वं क: च धर्मः सतामिव।
क: च एषां मानुषो भावः किं एषाम् असतामिव ॥
க்ஷத்ரியன் (Police/Army) தேவ தன்மையை (சாஸ்திரத்தை மீறாத குணம்) எப்போது பெறுகிறான்?
உலக நன்மைக்காக யாகங்கள் செய்வதே, க்ஷத்திரியனிடம் இருக்க வேண்டிய சாது தர்மம்
பயப்படும் போது க்ஷத்திரியன் மனித தன்மையை அடைகிறான்.
நம்பியவனை கைவிடுவதே க்ஷத்திரியனிடம் இருக்க கூடாத அசட்டு தர்மம்
किम् एकं यज्ञियं साम किम् एकं यज्ञियं यजुः।
का च: एषां वृणुते यज्ञं कां यज्ञो नातिवर्तते ॥
யாகத்திற்கு முக்கியமான ஸாமம் எது?
யாகத்திற்கு முக்கியமான யஜுஸ் எது?
யாகத்தை எது தாங்குகிறது?
யாகம் எதை மீறாமல் இருக்கிறது?
प्राणो वै यज्ञियं साम मनो वै यज्ञियं यजुः।
ऋग् एका वृणुते यज्ञं तां यज्ञो नातिवर्तते ॥
இதயத்தில் இருக்கும் பிராணனே யாகத்திற்கு முக்கியமான ஸாமம்.
மனமே யாகத்திற்கு முக்கியமான யஜுஸ்.
ரிக் மந்திரங்களே யாகத்தை தரிக்கிறது.
யாகம் ரிக் மந்திரங்களை மீறாமல் இருக்கிறது.
யாகம் செய்யும் போது, ரிக் மந்திரங்கள் சொல்லி பெருமாளை அழைக்கிறோம். பிறகு யஜுர் மந்திரங்கள் மன ஈடுபாட்டுடன் சொல்லி, பெருமாளுக்கு அக்னியின் வழியாக நெய்வேத்யம் செய்கிறோம். இதை ஏற்று கொண்ட பெருமாளை ஸாம கானம் பாடி ஆனந்தப்படுத்துகிறோம். உலகத்தில் ஏதாவது அடைய ஆசை இருந்தால், கடைசியாக, அதர்வண மந்திரங்கள் சொல்லி, நமக்கு தேவையான ஆசைகளை சொல்லி, அவரிடம் வரம் வாங்குகிறோம்.
எவன் தெய்வங்களுக்கும், அதிதிகளுக்கும் (வீட்டிற்கு திடீரென்று வந்தவர்களுக்கும்), தனக்கு வேலை செய்பவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தனக்கும் எவன் பூஜை (உணவு/மரியாதை) செய்வதில்லையோ, அப்படிப்பட்டவன், மூச்சு விட்டு கொண்டிருந்தாலும், அவன் உயிரில்லாதவனாகவே இருக்கிறான்.
இந்த உலகம் அனைத்தும் எதனால் மூடப்பட்டு இருக்கிறது?
अतिथिः सर्वभूतानाम् अग्निः सोमो गवामृतम्।
सनातनो अमृतो धर्मो वायुः सर्वमिदं जगत् ॥
அனைத்து உயிர்களுக்கும் அதிதியாக (விருந்தாளி) அக்னியே வருகிறார். அவருக்கு தேவையான உபசாரத்தை கட்டாயம் செய்து விட வேண்டும். (வயிற்றில் உள்ள அக்னியும் ஒரு அதிதியே)
மோக்ஷத்தை பற்றி சொல்லும் தர்மமே மிகவும் தொன்மையானது.
வெண்மையான பசும்பால் (மஞ்சள் கலந்தால் மருந்தாகவும் இருக்கும், பாயாசமாகி விருந்தாகவும் இருக்கும்) அம்ருதமாகும்.
இந்த உலகம் அனைத்தும் வாயுவால் மூடப்பட்டு இருக்கிறது.
किंस्विद् एको विचरते जातः को जायते पुनः।
किंस्विद् धिमस्य भैषज्यं किंस्विद् आवपनं महत् ॥
யார் ஒருவர் தனித்து திரிந்து கொண்டு இருக்கிறார்?
பிறந்த பிறகு மீண்டும் எவன் பிறக்கிறான்?
பனிக்கு எது மருந்து?
எல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ள பெரிய பாத்திரம் எது?
सूर्य एको विचरते चन्द्रमा जायते पुनः।
अग्नि: हिमस्य भैषज्यं भूमि: आवपनं महत् ॥
சூரியன் (ஆத்மா) ஒருவரே தனித்து திரிந்து கொண்டு இருக்கிறார்.
சந்திரன் (மனம்) தேய்ந்து பிறகு மறுபடி பிறக்கிறான்.
அக்னி (வேதவாக்கை புரிந்து கொள்ளும் போது) பனிக்கு (அஞானம்) மருந்து.
பூமியானது (உடல்) எல்லாவற்றையும் (வித்யை, அவித்யை) அடக்கி வைத்துள்ள பெரிய பாத்திரம்.
किंस्विद् एकपदं धर्म्यं किंस्विद् एकपदं यशः।
किंस्विद् एकपदं स्वर्ग्यं किंस्विद् एकपदं सुखम् ॥
தர்மம் எதில் நிலைபெறுகிறது?
புகழ் எதில் நிலைபெறுகிறது?
ஸ்வர்க்கம் எதில் நிலைபெறுகிறது?
சுகம் எதில் நிலைபெறுகிறது?
दाक्ष्यम् एकपदं धर्म्यं दानम् एकपदं यशः।
सत्यम् एकपदं स्वर्ग्यं शीलम् एकपदं सुखम् ॥
தர்மம் (அவரவர் கடமை) முயற்சியில் நிலைபெறுகிறது. (தர்மத்தை முயற்சியில்நிலைநாட்ட வேண்டும். தர்மம் தானாக அமையாது)
தானம் செய்ய செய்ய, புகழ் நிலைபெறுகிறது.
சத்தியத்தில் (உள்ளும் புறமும் உண்மையாக இருத்தல்) இருக்க இருக்க, ஸ்வர்க்கம் நிலைபெறுகிறது.
யக்ஷனே ! கேள். குலத்தாலோ, வேதம் ஓதுவதாலோ, சாஸ்திர அறிவினாலோ ஒருவன் ப்ராம்மணன் ஆவதில்லை. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் ப்ராம்மணன் ஆகிறான். இதில் சந்தேகம் இல்லை.
वृत्तं यत्नेन संरक्ष्यं ब्राह्मणेन विशेषतः।
अक्षीणवृत्तो न क्षीणो वृत्ततस्तु हतो हतः ॥
ஆதலால், பிராம்மணன் தன் ஒழுக்கத்தை பெரும் முயற்சி செய்து பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒழுக்க குறையற்ற பிராம்மணன் எந்த குறையும் இல்லாமல் மதிக்கப்படுவான். ஒழுக்கத்தை தொலைத்தவன் கெட்டு போனவனே !
पठकाः पाठकाश्चैव ये चान्ये शास्त्रचिन्तकाः।
सर्वे व्यसनिनो मूर्खा यः क्रियावान्स पण्डितः ॥
படிப்பவர்கள், படிப்பை சொல்லி தருபவர்கள், மேலும் பல சாஸ்திரங்களை சிந்தனை செய்பவர்கள், யாராக இருந்தாலும், தெரிந்து கொண்டதே பரம பிரயோஜனம் என்று நினைப்பார்களென்றால், அவர்களே மூடர்கள். எவன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவானோ , அவனே பண்டிதன்.
चतुर्वेदोऽपि दुर्वृत्तः स शूद्रादतिरिच्यते।
यो अग्निहोत्र परो दान्तः स ब्राह्मण इति स्मृतः ॥
நான்கு வேதத்தை அத்யயனம் செய்தவனே என்றாலும், ஒழுக்கமில்லாவிட்டால், அந்த பிராம்மணன் (MLA/MP) சூத்திரனுக்கும் (employee) கீழானவன்.
எந்த மனிதனால் பகலில் 5வது அல்லது 6வது காலத்தில், (12-4PM) (ஒரு பகலை 8ஆக பிரிப்பார்கள்) குறைந்தது ஒரு கீரையாவது தன் வீட்டில் சமைத்து சாப்பிட முடிகிறதோ! கடனில்லாதவனாகவும், வெளியூர் பயணம் செல்லவேண்டிய அவசியமில்லாதவனாகவும் எவன் இருக்கிறானோ,அவனே சந்தோஷமாக இருக்கிறான்.
अहन्यहनि भूतानि गच्छन्तीह यमालयम्।
शेषाः स्थावरमिच्छन्ति किमाश्चर्यमतः परम् ॥
இந்த உலகில் தினமும் எண்ணிலடங்கா உயிர்கள் யமலோகம் சென்று கொண்டே இருக்கிறது. மிச்சப்பட்டு இருக்கும் உயிர்கள் (மனிதர்கள்) தாங்கள் மட்டும் நிலையாக இருக்க போகிறோம் என்று நினைக்கிறார்கள். இதை காட்டிலும் ஆச்சர்யம் வேறு என்ன இருக்கிறது?
तर्को अप्रतिष्ठः श्रुतयो विभिन्ना
नैको मुनिर्यस्य मतं प्रमाणम्।
धर्मस्य तत्त्वं निहितं गुहायां
महाजनो येन गतः स पन्था ॥
விவாதத்தால் தர்மத்தை நிர்ணயிக்க முடியாது (பேசுபவன் சாமர்த்தியமே ஜெயிக்கும்)
வேதத்திலோ ஒரு மந்திரம் பல அர்த்தங்களை கொண்டு இருக்கிறது.
அதை கொண்டும் உண்மையான தர்மத்தை நிர்ணயிக்க முடியவில்லை.
ஒரு முனிவர் சொல்லும் சாஸ்திரம் மற்றொரு முனிவர் சொல்வதற்கு மாறாக இருக்கிறது.
எது தர்மம் என்று அறிவது உண்மையில் ரகசியமாக தான் வைக்கப்பட்டுள்ளது.
ஆதலால்,
எந்த வழியில் பல பெரியோர்கள் சென்றார்களோ, அது தான் நாம் பின்பற்ற வேண்டிய தர்ம வழி.
पृथ्वी विभाण्डं गगनं पिघानं
सूर्याग्निना रात्रिदिवेन्धनेन।
मास: तु दर्वी परिघट्टनेन
भूतानि कालः पचतीति वार्ता ॥
பூமியே ஒரு பாண்டம் போல உள்ளது. ஆகாயம் அதற்கு மூடி போல இருக்கிறது. இந்த பூமி என்ற பாண்டத்தில், இரவு பகல் என்ற விறகுகளை வைத்து, சூரியன் என்ற அக்னி மூட்டி, மாதங்கள், காலங்கள் (ருதுக்கள்) என்ற கரண்டியை கொண்டு பூத உடல்களை கிளறி, பக்குவம் செய்து கொண்டே இருக்கிறது காலம். இதுவே தினமும் நடந்து வருகின்ற நிகழ்வு.
व्याख्याता मे त्वया प्रश्ना यथातत्वं परंतप।
पुरुषं त्विदानीं व्याख्याहि यश्च सर्वधनी नरः ॥
எதிரிகளை கொளுத்துபவனே! நான் கேட்ட கேள்விகளுக்கு உள்ளது உள்ளபடி விடை அளித்தாய்.
யார் புருஷன்?
யார் அனைத்து செல்வமும் உடைய மனிதன் என்று கருதப்படுகிறான்?
இதை விரிவாக கூறு.
दिवं स्पृशति भूमिं च शब्दः पुण्येन कर्मणा।
यावत्स शब्दो भवति तावत्पुरुष उच्यते ॥
புண்ணியங்கள் (நல்வினை) செய்வதால், பேரும் புகழும் பூமியில் மட்டுமல்லாது சொர்க்க லோகம் வரை பரவுகிறது. அந்த புகழ் சொல் எதுநாள் ஒருவனுக்கு இருக்கிறதோ, அது வரை "புருஷன்" என்று மதிக்கப்படுகிறான்.
तुल्ये प्रियाप्रिये यस् सुखदुःखे तथैव च।
अतीतानागते चोभे सवै पुरुष उच्येत ॥
எந்த மனிதன் விருப்பு-வெறுப்பு, சுக-துக்கம், வருமானம்-நஷ்டம் போன்ற இரட்டைகளை கண்டும் சமமாக இருக்கின்றானோ, அவனும் "புருஷன்" என்று மதிக்கப்படுகிறான்.
समत्वं यस्य सर्वेषु निस्पृहः शान्त मानसः।
सुप्रसन्नः सदा योगी स वै सर्वधनी नरः ॥
எந்த மனிதன் எந்த பொருளை கண்டாலும் சலனமில்லாமல், சம புத்தியோடு, ஆசை அற்றவனாக, சாந்தமான மனநிலையுடன், தெளிவுள்ளவனாக, எப்போதும் ப்ரம்மத்தையே தியானித்து கொண்டு இருக்கிறானோ, அந்த மனிதனே, எல்லா செல்வமும் உடையவன் என்று கருதப்படுகிறான்.