"ஸூத குலத்தில் பிறந்தவர்களும் கல்வி அசாத்தியமான தேர்ச்சி பெற்று இருந்தார்கள்" என்று மகாபாரதம் காட்டுகிறது.
பரீக்ஷுத் "தக்ஷகன் என்ற நாக ராஜனால் கடிக்கப்பட்டு" மறைந்தார்.
அவர் மகனான, ஜனமேஜெயன் சர்ப யாகம் செய்து, "உலகில் இனி பாம்புகளே இருக்க கூடாது." என்று தீர்மானம் செய்தார்.
உதங்கர் மற்றும் மந்திரிகள் சம்மதிக்க, யாக சாலை அமைக்கும் பணி ஆரம்பம் ஆனது.
அங்கு ஒரு ஸ்தபதியும் வேலை செய்து வந்தார்.
அப்போது,
ஸூத குலத்தில் பிறந்த அந்த சிற்பி, வாஸ்து சாஸ்திரப்படி நில அளவு நடந்த இடத்தையும், கால சூழ்நிலையையும் பார்த்து,
"ஒரு பிராம்மணனால் இந்த யாகம் முழுமை அடையாமல் போகும்" என்றார்.
இதை கேட்ட ஜனமேஜெயன், யாக தீக்ஷை பெறுவதற்கு முன், வாயிற் காப்பாலனை பார்த்து,
"எனக்கு தெரியாமல் யாரும் உள்ளே வர கூடாது"
என்று கட்டளை இட்டார்.
स्थपति: बुद्धि-संपन्नो वास्तु-विद्या विशारदः।
इति अब्रवीत् सूत्र-धारः सूतः पौराणिक: तदा।।
एतच्छ्रुत्वा तु राजासौ प्राग् दीक्षा कालम् अब्रवीत्।
क्षत्तारं न हि मे कश्चिद् अज्ञातः प्रविशेदिति।।
Adi parva 1 51
கருப்பு துணியை கட்டி கொண்டு, புகையால் கண்கள் சிவக்க, மந்திர பூர்வமாக, ஜ்வலிக்கும் அக்னியில் சர்பயாகம் செய்ய ஆரம்பித்தனர்.
प्रावृत्य कृष्ण-वासांसि धूम्र संरक्त लोचनाः।
जुहुवु: मन्त्रवच्चैव समिद्धं जातवेदसम्।।
Adi parva 1 52
லட்சக்கணக்கான சர்ப்பங்கள் அக்னியில் வந்து வந்து விழுந்து உயிர் விட்டன.
குதிரைகள் போலவும், யானை துதிக்கை போலவும், மத யானைகள் போல பெரிய உடலுடனும், மிகுந்த பலமுள்ளதாகவும், ஈட்டிகளை போல பயத்தை உண்டு செய்யும் கொடிய விஷமுள்ள பல சர்ப்பங்கள், தாயின் (கத்ரு) சாபத்தால், தடியால் அடித்தது போல, கணக்கில்லாமல் தானாக அக்னியில் வந்து விழுந்தன.
घोरा: च परिघप्रख्या दन्दशूका महाबलाः।
प्रपेतुरग्नावुरगा मातृ-वाग्-दण्ड पीडिताः।।
Adi parva 1 52
அந்த சிற்பி கணித்தது போலவே, ஜரத்காருவின் மகனாக பிறந்த "ஆஸ்தீகர்" என்ற பிராம்மணர் வந்து ஜனமேஜெயனை சமாதானம் செய்து, யாகத்தை நிறுத்தினார்.
கொடிய விஷமுள்ள பல பாம்புகள், அதற்குள் அழிந்து விட்டன.
யாகம் பாதியில் தடைபட்டதால், பல பாம்புகள் தப்பித்தன.
ஏன் பல சர்ப்பங்கள் அழிய நேர்ந்தது? எந்த தாய் சாபம் கொடுத்தாள்?
இதற்கான காரணத்தை உலக ஸ்ருஷ்டி சமயத்தில் நடந்த சம்பவத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது.
உலக ஸ்ருஷ்டி உருவான காலம்...
கஷ்யபருக்கு பத்னிகளான
கத்ருவுக்கும் வினதாவுக்கும் ஒரு சமயம் அனாவசியமாக ஒரு போட்டி ஏற்பட்டது.
பாற்கடலில் அசுரர்கள், தேவர்கள் சேர்ந்து அமிர்தத்திற்காக கடைந்த போது, "உச்சைஸ்ரவஸ்" என்ற குதிரை வெளிப்பட்டது.
இதை அசுரர்கள் எடுத்து பாதாள லோகம் சென்றார்கள்.
அதை எட்டி இருந்து பார்க்க சென்ற இருவரும், "அந்த திவ்யமான குதிரையின் வால் எப்படி உள்ளது?" என்று பேச ஆரம்பித்தனர். பிறகு திரும்பி செல்லும் போது, கருடனுக்கும், அருணனுக்கும் தாயான வினதா, "திவ்யமான அந்த குதிரையின் வால் மயிர் கூட வெள்ளையாக உள்ளதே" என்றாள்.
வீண் வாதம் செய்ய ஆசைப்பட்ட கத்ரு, அனாவசியமாக அந்த "குதிரையின் வால் மயிர் கருப்பாக தான் இருந்தது" என்றாள்.
இது வாக்குவாதத்தில் முடிந்து, கடைசியில் பந்தயத்தில் முடிந்தது.
"யார் சொல்வது பொய்யோ அவர்கள் மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும்" என்று முடிவு செய்தனர்.
இந்த நிலையில், கோடிக்கணக்கான பாம்புகளை பெற்ற கத்ரு, தன் பிள்ளைகளை எல்லாம் அழைத்து,
"நீங்கள் அனைவரும் அந்த குதிரையின் வாலில் ஏறி கொண்டு, அதன் வால்மயிர்கள் போல ஆகி, கருமையான நிறத்தோடு தொங்கி கொண்டு இருங்கள். நான் அடிமையாகாமல் இருக்க செய்யுங்கள்" என்றாள்.
कद्रूरुवाच।
कृष्णवालम् अहं मन्ये हयमेनं शुचिस्मिते।
एहि सार्धं मया दीव्य दासी-भावाय भामिनि।।
Adi parva 1-20
அவள் சொன்னதை ஏற்று கொள்ளாத சர்ப்பங்களை பார்த்து, "எதிர்காலத்தில், ஜனமேஜெயன் என்ற பாண்டவ வம்சத்து ராஜரிஷி, சர்ப்ப யாகம் செய்து, உங்களை பொசுக்குவான்" என்று சபித்தாள்.
सर्पसत्रे वर्तमाने पावको वः प्रधक्ष्यति।
जनमेजयस्य राजर्षेः पाण्डवेयस्य धीमतः।।
Adi parva 1 20
மகா கொடிய சர்ப்பங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதை கண்டு ப்ரம்ம தேவரும், "கத்ரு உலக நன்மையை கருதியே இப்படி ஒரு சாபத்தை தன் பிள்ளைகள் என்று பாராமல் கொடுத்தாள்" என்று அனைவரையும் சமாதானம் செய்தார்.
शापमेनं तु शुश्राव स्वयमेव पितामहः।
अतिक्रूरं समुत्सृष्टं कद्र्वा दैवादतीव हि।।
Adi parva 1 20
தேவ லோக பெண்ணான கத்ரு சொன்னபடியே, துவாபர யுக முடிவில், ஜனமேஜெயன் யாகம் செய்ய, தாய் பேச்சை மறுத்த அத்தனை சர்ப்பங்களும் அக்னியில் விழுந்து உயிர் விட்டன.
அன்று, அவள் (கத்ரு) சாபத்தை கேட்ட பிறகு, கார்கோடகன் என்ற நாகராஜன் கத்ருவிடம் "கருமை நிறத்தோடு அந்த குதிரையின் வால் மயிராக இருக்கிறேன்" என்றான்.
एवं शप्तेषु नागेषु कद्र्वातु द्विजसत्तम।
अद्विग्नः शापतस्तस्याः कद्रूं कर्कोटको अब्रवीत्।।
Adi parva 1 20
"அப்படியே ஆகட்டும்" என்று கத்ரு மறுமொழி சொன்னாள்.
1 comment:
ஸூத குலத்தில் பிறந்தவர்களும் கல்வியில் அசாத்தியமான தேர்ச்சி பெற்று இருந்தார்கள்" என்று மகாபாரதம் காட்டுகிறது.
"உலகில் பாம்புகளே இருக்க கூடாது" என்று ஜனமேஜெயன் யாகம் செய்து பெரும்பாலும் அழித்தார்.
தாயின் சாபத்தால் பாதி பாம்புகள் அக்னியில் பொசுங்கின... எந்த தாயின் சாபம் இது?
அறிவோம் மகாபாரதம்.
https://www.proudhindudharma.com/2023/03/Snake-curse-mahabharata.html
Post a Comment