Followers

Search Here...

Friday, 13 January 2023

மகாபாரதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? அறிவோம்...

"மகாபாரதம்" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

ஸுத பௌராணிகரான உக்கிரஸ்ரவஸ், சௌனகர் மற்றும் குழுமி இருந்த ரிஷிகளுக்கும் வியாசர் கொடுத்த மஹாபாரத சரித்திரத்தை விவரித்தார்.


சுருக்கமாக மஹாபாரத நிகழ்வை சொல்லி விட்டு, எதற்காக "மகாபாரதம்" என்று பெயர் வைத்தார் வியாசர் என்று சொல்கிறார்.


पुर: अकिल सुरैः सर्वैः समेत्य तुलया धृतम्।

चतुर्भ्यः सरहस्येभ्यो वेदेभ्यो हि अधिकं यदा।।

तदाप्रभृति लोकेऽस्मिन् महाभारतम् उच्यते।

महत्त्वे च गुरुत्वे च ध्रियमाणं यत: अधिकम्।।

महत्त्वाद्भारवत्त्वाच्च महाभारतम् उच्यते।।

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।।

- மகாபாரதம் (வியாசர்)

தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு, வியாசரின் மகாபாரதம் கனமானதா? இல்லை நான்கு வேதங்கள் கனமானதா? என்று சோதித்தனர்.

நான்கு வேதங்களை காட்டிலும் பாரதம் கனமாக (விஷயங்களில், பலனில்) இருந்தது என்று நிர்ணயம் செய்தார்கள் 

அது முதல், இந்த உலகத்தில் இதற்கு "மஹாபாரதம்" என்று பெயர் கிடைத்தது 

இந்த பெயர் காரணத்தை அறிபவன் கூட, தான் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

तपो नकल्क: अध्ययनं नकल्कः

स्वाभाविको वेद विधि: नकल्कः।

प्रसह्य वित्ताहरणं नकल्क:

त: अन्येव भावोपहतानि कल्कः।।

- மகாபாரதம் (வியாசர்)

இதில் சொல்லப்பட்ட படி தவம் செய்தாலும் பாவம் போய் விடும்.

இதை படித்தாலும் பாவம் போய் விடும்.

இதில் சொல்லப்பட்ட படி அவரவர் ஆஸ்ரம தர்மத்தில் வாழ்ந்தாலும் பாபங்கள் அழியும்.

இந்த மஹாபாரதத்தை சொல்வதால் செல்வம் கிடைத்தாலும் அது பாவத்தை தராது.

ஆனால்,

மஹாபாரதத்தில் சொல்லப்பட்டதை கெட்ட எண்ணத்தோடு செய்தால், அனைத்துமே பாவ காரியங்கள் ஆகி விடும்.

No comments:

Post a Comment