Followers

Search Here...

Saturday, 14 May 2022

ராஜநீதி... அரசாட்சி எப்படி செய்ய வேண்டும்? வியாசர் 'ராஜ நீதியை' யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேஸிக்கிறார். அறிவோம் மஹாபாரதம்

ஆட்சி எப்படி செய்ய வேண்டும்? வியாசர் 'ராஜ நீதியை' யுதிஷ்டினுக்கு உபதேஸிக்கிறார். 

வ்யாசர் சொல்கிறார்.. 

आदाय बलिषड् भागं यॊ राष्ट्रं नाभिरक्षति

प्रतिगृह्णाति तत् पापं चतुर्थांशेन पार्थिवः

- வியாசர் மஹாபாரதம்

6ல் ஒரு பங்கு வரியாக (15% to Army/Police) பெற்றுக்கொண்டும் ராஜ்யத்தை காப்பாற்ற முடியாமல் போனால், அந்த ராஜ்யத்தின் மக்கள் செய்த பாவத்தில் 4ல் ஒரு பங்கு பாகத்தை ஆட்சி செய்பவன் பெறுகிறான்.

निग्रहाद् धर्मशास्त्राणाम् अनुरुध्यन्न अपेतभीः

कामक्रॊधाव् अनादृत्य पितेव समदर्शनः

- வியாசர் மஹாபாரதம்

எந்த பயமும் இல்லாமல் தர்ம சாஸ்திரப்படி தண்டனை கொடுத்து, தனிப்பட்ட ஆசையும் இல்லாமல், தனிப்பட்ட கோபமும் இல்லாமல், பாகுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் ஒரு தகப்பன் போல சமமாக பார்த்து கொண்டு, ஆட்சி செய்பவன் இருக்க வேண்டும். 

दैवेनॊपहते राजा कर्मकाले महाद्युते

प्रमादयति तत् कर्म न तत्राहु: अति करमम्

- வியாசர் மஹாபாரதம்

ஒரு நியாயமான ஒரு காரியத்தை ஆரம்பித்து, விதி வசத்தால் அந்த காரியம் தடைபட்டு நின்றால், ஆட்சி செய்பவன் குற்றவாளி ஆகமாட்டான்.

तरसा बुद्धिपूर्वं वा निग्राह्या एव शत्रवः

पापैः सह न संदध्याद् राष्ट्रं पण्यं न कारयेत्

- வியாசர் மஹாபாரதம்

ஆட்சி செய்பவன், தன் புத்தியாலும், தண்டனையாலும் எதிரிகளை அடக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுடன், பாவத் தொழில் செய்பவர்களுடன் ஆட்சி செய்பவன் சேர கூடாது. அரசாட்சியை தர்மப்படி நடத்த வேண்டும்.

शूरा: चार्या: च सत्कार्या विद्वांसश च युधिष्ठिर

गॊमतॊ धनिन: चैव परिपाल्या विशेषतः

- வியாசர் மஹாபாரதம்

மஹாவீரர்களையும், பண்புள்ளவர்களையும், அறிவுள்ளவர்களையும் ஆட்சி செய்பவன் கௌரவிக்க வேண்டும்.

யுதிஷ்டிரா! 

செல்வந்தர்களையும், பசுக்களை ரக்ஷிப்பவர்களையும் ப்ரத்யேகமாக ஆட்சி செய்பவன் கௌரவிக்க வேண்டும்.

व्यवहारेषु धर्म्येषु नियॊज्या: च बहुश्रुताः

गुणयुक्ते ऽपि नैकस्मिन् विश्वस्याच् च विचक्षणः

- வியாசர் மஹாபாரதம்

ப்ரத்யேகமாக சாஸ்திரம் (specialist) கற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் கற்ற துறையில் அதிகாரியாக அமர்த்தி தர்மப்படி காரியங்களை செய்ய நியமிக்க வேண்டும். எவ்வளவு நல்ல குணம் கொண்டவனாலும், ஒரே ஒரு மனிதனை மட்டும் ஆட்சி செய்பவன் நம்புவது நியாய தர்மம் அன்று.

अरक्षिता दुर्विनीतॊ मानी स्तब्धॊ ऽभ्यसूयकः

एनसा युज्यते राजा दुर्दान्त इति चॊच्यते

- வியாசர் மஹாபாரதம்

மக்களை காப்பாற்றாமல், மதிக்கத்தக்கவர்களை மதிக்காமல், அடக்கமில்லாமல், திமிரோடும், பொறாமையோடும் ஆட்சி செய்பவன் பாவத்தை அடைவதோடு, கெட்டவன் என்று பேசப்படுவான்.

ये ऽरक्ष्यमाणा हीयन्ते दैवेनॊपहते नृपे

तस्करै: चापि हन्यन्ते सर्वं तद् राजकिल्बिषम्

- வியாசர் மஹாபாரதம்

தெய்வ குற்றத்தாலும், திருடர்களாலும் ரக்ஷிக்கப்படாமல் எவர்கள் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுடைய கஷ்டமெல்லாம் அரசனை சேர்ந்த பாவமாகும்.

सुमन्त्रिते सुनीते च विधिवच् चॊपपादिते

पौरुषे कर्मणि कृते नास्त्य अधर्मॊ युधिष्ठिर

- வியாசர் மஹாபாரதம்

ஓ யுதிஷ்டிரா! நன்றாக ஆலோசித்து நீதி தவறாமல் மனித முயற்சியோடு (ஜன ஆந்தோலன்) ஒரு காரியம் செய்தால், ஆட்சி செய்பவனுக்கு பாவம் நேராது.

शत्रून् हत्वा हतस्याजौ शूरस्याक्लिष्ट कर्मणः

असहायस्य धीरस्य निर्जितस्य युधिष्ठिर

- வியாசர் மஹாபாரதம்

நன்றாக ஆலோசித்து, நீதி தவறாமல், ஆட்சி செய்பவன் செய்யும் முயற்சிகள் தெய்வீகமாய் முடிவதுமுண்டு. பயனற்று போவதும் உண்டு. 

विपद्यन्ते समारम्भाः सिध्यन्त्य अपि च दैवतः

कृते पुरुषकारे तु नैनॊ सपृशति पार्थिवम्

- வியாசர் மஹாபாரதம்

சிலசமயம் தர்மபடியான முயற்சிகள் பயனற்று போகலாம் என்பதால் முயற்சிகள் செய்யாமல் ஆட்சி செய்பவன் இருந்தால் பாவத்தை அடைகிறான். முயற்சி செய்தால், ஆட்சி செய்பவனுக்கு பாவம் சேராது.

இவ்வாறு வியாசர், யுதிஷ்டிர மஹாராஜனிடம் "ராஜ நீதியை" கூறி, சந்யாசியாக போக கூடாது, மக்களுக்காக 'தர்ம ஆட்சி செய்பவனாக இருக்க வேண்டும்' என்று உபதேசித்தார்.


No comments:

Post a Comment