Followers

Search Here...

Friday, 6 May 2022

ப்ராம்மணத்துவம் அடைவது எப்படி? க்ஷத்ரியத்துவம் அடைவது எப்படி? வியாசர் பதில் சொல்கிறார்.

"ப்ராம்மணத்துவம் அடைய" என்ன வேண்டும்?

"க்ஷத்ரியத்துவம் அடைய" என்ன வேண்டும்?

பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.

பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.


அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர்

அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்ட யுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.


நிலத்திற்க்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும், 

'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்

என்று சொல்லி விட்டார்.


யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

அந்த சமயம், திரௌபதியும், "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினாள். 

இப்படி பலர் சொன்ன பிறகு, வியாசர் யுதிஷ்டிரரிடம் உபதேஸிக்கிறார்.

तपॊ यज्ञ: तथा विद्या भैक्षम् इन्द्रिय निग्रहः |

ध्यानम् एकान्तशीलत्वं तुष्टिर दानं च शक्तितः |

ब्राह्मणानां महाराज चेष्टाः संसिद्धि कारिकाः ||

- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)

மஹாராஜனே! தவம், யக்ஞம், ஆத்மாவை பற்றிய அறிவு, உயிர் தக்க வைக்க பிக்ஷை வாழ்க்கை, புலன் அடக்கம், தியானம், தனிமையை விரும்புவது, ஆத்ம சுகத்தில் இருப்பது, கிடைத்ததில் திருப்தி, தன் சக்திக்கு தகுந்த தானம் செய்வது,

இந்த தர்மங்கள்  அனைத்தும், ப்ராம்மணர்களுக்கு ப்ராம்மணத்துவம் 'ஸித்தி' அடைவதற்காக விதிக்கப்பட்டவை. 


क्षत्रियाणां च वक्ष्यामि तवापि विदितं पुनः |

यज्ञॊ विद्या समुत्थानम् असंतॊषः श्रियं प्रति |

दण्डधारणम् अत्युग्रं प्रजानां परिपालनम् |

वेद  ज्ञानं तथा कृत्स्नं तपॊ सुचरितं तथा |

द्रविणॊपार्जनं भूरि पात्रेषु प्रतिपादनम् |

एतानि राज्ञां कर्माणि सुकृतानि विशां पते |

इमं लॊकम् अमुं लॊकं साधयन्तीति नः श्रुतम ||

- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)

க்ஷத்ரியர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம் உனக்கு தெரிந்தாலும், மீண்டும் சொல்கிறேன்.

யாகம் செய்வதிலும், உலகம் மற்றும் ஆத்மா பற்றிய அறிவு, பொருள் சேர்ப்பதில் திருப்தி இல்லாமலும், புகழில் ஆசையும், ஆட்சியில் பாராபட்சம் இல்லாமல் தண்ட நீதியோடு நிர்வாகமும், அனைத்து உயிர்களையும் காப்பதும், வேதனையை அறிவதும், தவமும், ஒழுக்கமான தனிமனித வாழ்க்கையும், பொருள் ஈட்டுவதில் திறனும், அந்த பொருளை நல்ல தர்மங்களுக்கு கொடுப்பதும், அரசர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம்.

இப்படி க்ஷத்திரியன் க்ஷத்ரியத்துவம் அடையும் போது, இவ்வுலகில் மட்டுமல்ல, மேல் உலகிலும் புகழோடு இருப்பான்.

No comments:

Post a Comment