Followers

Search Here...

Monday, 27 September 2021

சமஸ்க்ரிதம்" என்ன சொல்கிறதோ, அதையே தமிழ் மொழியும் பேசுகிறது... ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை சொல்கிறது...

வேத மொழியான "சமஸ்க்ரிதம்" என்ன சொல்கிறதோ, அதையே தமிழ் மொழியும் பேசுகிறது.

சமஸ்க்ரித மொழி -  

"தர்ம, அர்த்த, காம, மோக்ஷ" என்று சொல்கிறது.

அதை அப்படியே தமிழும், மொழி பெயர்த்து சொல்கிறது.

தமிழ் மொழி - 

"அறம், பொருள், இன்பம், வீடு" என்று சொல்கிறது.


 


சமஸ்க்ரித மொழி - 

வேத மந்திரங்களுக்கு 6 அங்கங்கள் உண்டு.

வேத  மந்திரத்துக்கு, 

கை எது? கால் எது? கண்  எது? காது எது? மூக்கு எது? முகம் எது? என்று கேட்கும் போது,

"கல்பம்" கையாக இருக்கிறது.

"சந்தஸ்" காலாக இருக்கிறது.

"ஜ்யோதிஷம்" கண்ணாக இருக்கிறது.

"நிருத்தம்" காதாக இருக்கிறது.

"சிக்ஷை" மூக்காக இருக்கிறது.

"வியாகரணம்" முகமாக இருக்கிறது.

என்று சொல்கிறது.


சங்கத்தமிழ் இலக்கியமான மணிமேகலை, சமஸ்க்ரித சொற்களையே தமிழோடு ஏற்று, அப்படியே சொல்கிறது.

கற்பம் கை

சந்தம் கால்

எண் கண்

தெற்றென் நிருத்தம் செவி

சிக்கை மூக்கு,

உற்ற வியாகரணம் முகம் பெற்று

சார்பில் தோன்றா ஆரண வேதக்கு

ஆதி அந்தம் இல்லை

அது நெறி எனும் வேதியன்

உரையின் விதியும் கேட்டு

- சங்கத்தமிழ் (மணிமேகலை)

சங்க தமிழ் இலக்கியமான மணிமேகலை, "ஆதி அந்தம் இல்லாத வேதமே சிறப்புடையது. அந்த வேத மந்திரங்களுக்கு 6 அங்கங்கள் உண்டு" என்று சொல்லும் பாடல் இது.

"மனிதர்களால் உருவாக்கப்படாத,  ஆகாசத்தில் ஒலி ரூபமாக என்றுமே இருக்கும், ஆதி அந்தம் இல்லாத வேத மந்திரங்களுக்கு,

'கற்பம்' என்ற 'கல்பம்' கையாக இருக்கிறது.

'சந்தம்' என்ற 'சந்தஸ்' காலாக இருக்கிறது.

'எண்'  என்ற 'ஜ்யோதிஷம்' கண்ணாக இருக்கிறது.

'நிருத்தம்' காதாக இருக்கிறது.

'சிக்கை' என்ற 'சிக்ஷை' மூக்காக இருக்கிறது.

'வியாகரணம்' முகமாக இருக்கிறது."

என்று மணிமேகலை பாடல், சமஸ்க்ரிதம் சொல்வதை அப்படியே சொல்கிறது.





தமிழ் மொழியில் "சமஸ்க்ரிதம்", 

தமிழ் பெயர்களில் "சமஸ்க்ரிதம்", 

சங்க இலக்கியங்களை எங்கு பார்த்தாலும் 'சமஸ்க்ரிதம்" இருக்கிறது.

'தமிழையும் சமஸ்க்ரிதத்தையும்  பிரிக்கவே முடியாது" என்பது சங்க இலக்கியங்கள்  காட்டுகிறது.


இன்றைய தமிழனுக்கு, "சூத்திரன்" சமஸ்க்ரித சொல் என்று கூட தெரியாது.

இன்றைய தமிழனுக்கு, "சுபவீர" சமஸ்க்ரித சொல் என்று கூட தெரியாது.

இன்றைய தமிழனுக்கு, மணிமேகலை,  புறநானூறு, பரிபாடல் போன்ற சங்கத்தமிழை படிக்க சொன்னால், அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது.

இன்றைய தமிழனுக்கு, சமஸ்க்ரித மொழியும், புரிந்து கொள்ள முடியாது.

சங்க காலத்தில் இருந்தே தமிழில் கலந்துள்ள சமஸ்க்ரிதமும், தமிழும் தெரியாத மூடர் கூட்டம்,

தனக்கே "கருணா, நிதி, உதய, சூரிய, ஆதித்யன், ராம, ஸ்வாமி (சாமி), ராஜா (ராசா), கலா"  என்று பெயர் வைத்துக்கொண்டு, 

"ஸ்தோத்திரம், பூஜை (பூசை), பலம், திராவிட" என்று சமஸ்க்ரித மொழியையே பயன்படுத்தி கொண்டு, 

"தான் பயன்படுத்துவது தமிழ்" என்று நினைத்து பயன்படுத்தி கொண்டு, சமஸ்க்ரித மொழி எதிர்ப்பு செய்கின்றனர்.

சமஸ்க்ரித பெயர், சமஸ்க்ரிதம் கலந்த தமிழ் பேசி கொண்டு, சமஸ்க்ரிதம் கூடாது என்று பிதற்றும் இந்த மூடர் கூட்டம் தான், "தன் மனைவிக்கு தாலி கட்டி விட்டு, தாலி  கட்டிக்கொள்ள கூடாது" என்று போராட்டமும் செய்கிறார்கள்.


இந்த மூடர் கூட்டத்துக்கு, "உன்னுடைய பெயர், நீ பயன்படுத்தும் பல சொற்களும் சமஸ்க்ரித மொழி தான்' என்று சொல்லி உண்மையை உணர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.

"தமிழன் என்று சொல்லிக்கொண்டு, ஒரு முட்டாள் கூட தமிழ்நாட்டில் அலைய விடாமல் பார்த்து கொள்வது" உண்மையான தமிழர்களுக்குள்ள கடமை

வேத அங்கங்களை அறிந்து கொள்ள... இங்கே படிக்கவும்..

குருநாதர் துணை

No comments:

Post a Comment