வேதம் :
வேதம் என்றால் "அறிவு (ஞானம்)" என்று பொருள்.
யாருடைய அறிவு?
பரமாத்மாவின் அறிவு.
பரமாத்மாவின் அறிவால் (வேதம்) தான்,
- பிரம்மா படைக்கப்பட்டார்,
- நாம் படைக்கப்பட்டோம்,
- உலகம் படைக்கப்பட்டது,
- அவரவர்களுக்கு தர்மங்கள் (rules) படைக்கப்பட்டது.
வேதத்தை மதிக்காதவன், பரமாத்மாவின் அறிவை (ஞானத்தை) அவமதிக்கிறான்.
வேதத்தை மதிக்காதவன், பரமாத்மாவின் அறிவை (ஞானத்தை) கொண்டு படைக்கப்பட்ட தன்னையே அவமதித்து கொள்கிறான்
பரமாத்மா ஏன் நம்மை படைத்தார்?
பரமாத்மா ஏன் உலகை படைத்தார்?
போன்ற கேள்விகளுக்கு பரமாத்மா என்ன நினைக்கிறார் என்று அறியும் போது, பதில் கிடைத்து விடும்.
வேதம் அவருடைய இதயத்திலிருந்து வெளிப்பட்டது என்பதால், பரமாத்மாவின் எண்ணத்தை, வேதம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அந்த வேதம் ஆகாசத்தில் சப்த ரூபமாகவே உள்ளது.
ஆதலால், வேதத்துக்கு "சப்த ப்ரம்மம்" என்றும் பெயர் உண்டு.
பரமாத்மாவின் இந்த ஞானம் (வேதம்) நான்கு கிளையாக (சாகை) பிரிந்து உள்ளது.
- * ரிக் சாகை
- * யஜூ சாகை
- * ஸாம சாகை
- * அதர்வண சாகை.
அபிவாதயே சொல்லி, தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் போது, 'தான் எந்த சாகையை படிப்பவன்?' என்று சொல்லி பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்கின்றனர்.
யஜு வேதம் படிப்பவர்கள், 'யஜு சாகா அத்யாயீ' என்று சொல்லி நமஸ்கரிக்கிறான்.
இந்த 4 சாகைகள், இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.
- சம்ஹிதை (தெய்வங்களை அழைக்கும் மந்திரங்கள் மட்டும்)
- ப்ராஹ்மணம் (மந்திரங்களின் விளக்கத்தை உபநிஷத் மூலம் சொல்கிறது)
வேதம் நான்கு கிளையாக (சாகை) பிரிந்து இருப்பதால், 'ரிக், யஜு, ஸாம, அதர்வண சாகைகள்' என்று சொல்கிறோம்.
நான்கும் "வேதம் தான்" என்ற ரீதியில் பார்க்கும் போது, அதனதன் கிளையாக இருக்கும் ப்ராஹ்மண பாகத்தையும் "சாகை" என்று சொல்வதுண்டு.
ரிக் சாகை:
* சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)
- பாஷ்கல சம்ஹிதை
- சாகல சம்ஹிதை
- கௌஷீதகீ சம்ஹிதை
சம்ஹிதைக்குள் ஸூக்தங்கள் பல உள்ளன.
மொத்தம் 1028 ஸூக்தங்கள் உள்ளது.
உதாரணத்திற்கு,
வாலகில்ய ரிஷியின் 11 சூக்தங்கள் நமக்கு கிடைக்கின்றன. இது போன்ற பல ரிஷிகளின் சேர்த்து , மொத்தம் 1028 ஸூக்தங்கள் உள்ளன.
1028 ஸூக்தங்களை, 10 மண்டலமாக அல்லது 8 அஷ்டகங்களாக பிரித்து கொண்டு படிக்கின்றனர்.
1028 ஸூக்தங்களில், மொத்தம் 10,552 ரிக் அல்லது வேத மந்திரங்கள் உள்ளன.
10 மண்டலத்தில் உள்ள விஷயங்கள்:
மண்டலம் 1 :
இதில் 191 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- ஜேதா (மதுசந்தஸின் பிள்ளை)
- மேதாதிதி (கண்வரின் பிள்ளை)
- சுனசேபர் (அஜீகர்தரின் பிள்ளை)
- தேவராதர் (விச்வாமித்ரரின் பிள்ளை)
- பராசரர் (சக்தியின் பிள்ளை)
- கௌதமர் (ரஹுகணரின் பிள்ளை)
- குத்ஸர் (அங்கிரஸரின் பிள்ளை)
- கச்யபர் (மரீசியின் பிள்ளை)
- கக்ஷீவான்
- அகஸ்தியர்
- அம்பரீஷ்ர்
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- அக்னி
- விச்வே தேவர்கள்
- இந்திரன்
- வாயு
- வருணன்
- அஸ்வினி தேவர்கள்
- சரஸ்வதி
- சப்த மருத்துக்கள்
- வனஸ்பதி
- பூஷா
- பகன்
- ஆதித்யன்
- ப்ரம்ஹணஸ்பதி
- ஸோமன்
- ரிபுக்கள்
- ஸவிதா
- விஷ்ணு
- ருத்ரன்
- ஸாத்யர்கள்
- உஷா
- ராத்ரி
- நதிகள்
இந்த ஸூக்தங்களில்,
- கர்பம் கலையாமல், சுக பிரசவம் ஆகும் மந்திரம் உள்ளது.
- ரோகம், விஷம் போன்ற உபாதைகள் நீக்கும் ஸூக்தங்கள் உள்ளன.
- சிற்சில இடங்களில், தேவதைகளின் ரூபம், ஆயுதம், குணம், வாஹனம் சொல்லப்படுகிறது.
- உரல், உலக்கை பற்றி கூட ஒரு பாடல் உள்ளது.
- புரூரவஸ், மது, துர்வஸூ, த்ருஹ்யு போன்ற அரசர்களை பற்றி குறிப்பு உள்ளது.
- அஸ்வினி தேவர்கள் ததீசிக்கு அருள் செய்தது பற்றி குறிப்பு உள்ளது.
- மருத்துக்களை இந்திரன் பேதித்த கதை உள்ளது.
- லோபமுத்ரா கதை உள்ளது.
- அகஸ்தியர், வாதாபி என்ற ராக்ஷஸன் கதை உள்ளது.
- இந்திரன் வ்ருத்ராசுரனை வதம் செய்த ஆதாரம் உள்ளது.
- த்ரிவிக்ரம அவதாரம் பற்றிய குறிப்பு உள்ளது.
மண்டலம் 2 :
இதில் 43 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- க்ருத்ஸமதர்
- கூர்மர் (க்ருத்ஸமதரின் பிள்ளை)
- பார்கவரான சௌனகர்
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- அக்னி
- இந்திரன்
- ராகா
- ஸினீவாலீ
- அதிதி
இந்த ஸூக்தங்களில்,
- இந்திரன் விஸ்வரூபனை தேவ புரோஹிதராக வரித்த கதை உள்ளது.
- இந்திரன் பர்வதங்களின் சிறகை வெட்டிய கதை இங்கு உள்ளது.
- தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
- துக்கத்தை நீக்கும் மந்திரம் உள்ளது.
மண்டலம் 3 :
இதில் 62 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- விசுவாமித்திரர்
- விசுவாமித்திரர் கோத்திரத்தில் வந்த பல ரிஷிகள்
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- அக்னி
- இந்திரன்
இந்த ஸூக்தங்களில்,
- சிந்து, சரஸ்வதி நதிகளின் பெருமை உள்ளது.
- இந்திரன் வ்ருத்ராசுரனை வதம் செய்த சரித்திரம் உள்ளது.
- விஷ்ணுவின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
- தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
- வேத மாதாவான, பிரசித்தமான காயத்ரீ பற்றி குறிப்பு உள்ளது.
- பாரத தேச மக்களை பற்றி குறிப்பு உள்ளது.
மண்டலம் 4 :
இதில் 58 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- வாமதேவர் (கௌதமரின் பிள்ளை)
- த்ரஸத்தஸ்யு (புருகுத்ஸரின் பிள்ளை)
- புருமீடர் (ஸஹோத்ரரின் பிள்ளை)
- அஜமீடர் என்ற ராஜரிஷி
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- அக்னி
- இந்திரன்
- அதிதி
இந்த ஸூக்தங்களில்,
- த்ரஸத்தஸ்யு, பௌர-குத்ஸரின் சரித்திரம் உள்ளது.
- இந்திரன் விஷ்ணுவின் அருளால், வ்ருத்ராசுரனை வதம் செய்த சரித்திரம் உள்ளது.
- தெய்வங்களை பற்றி கதைகள் கேட்பது, உண்மை பேசுதலின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
- தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
- உழவர்களின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
- கலப்பைக்கு தேவதையாக இருக்கும் சீதாதேவியின் பெருமை பற்றி குறிப்பு உள்ளது.
- பசுக்களின் பெருமை உள்ளது.
- நெய்யை (க்ருத ஸூக்தம்) பற்றிய பாடல்கள் உள்ளது
மண்டலம் 5 :
இதில் 87 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- ஆத்ரேய
- ஆத்ரேய கோத்திரத்தில் வந்த ரிஷிகள்
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- அக்னி
- இந்திரன்
- ஸூரியன்
இந்த ஸூக்தங்களில்,
- ஸ்வர்பானு என்ற அசுரனின் கதை உள்ளது.
- ஆசிர்வதிக்கும் (ஸ்வஸ்திவாசன) ஸூக்தம் உள்ளது.
- யமுனை நதியின் பெருமையும், அங்குள்ள ராதஸ் என்ற ஸ்ரீயை பற்றியும், அங்கு கிடைக்கும் பசும்பால், வெண்ணெய், நெய் பற்றியும் சொல்லப்பட்டு உள்ளது.
- தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
மண்டலம் 6 :
இதில் 75 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- பாரத்வாஜர்
- பாரத்வாஜ கோத்திரத்தில் வந்த ரிஷிகள்
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- அக்னி
- இந்திரன்
- விஷ்ணு
இந்த ஸூக்தங்களில்,
- ததீசியின் கதை உள்ளது.
- கோ (பசு) ஸூக்தம் உள்ளது.
- வில்லின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
- தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
மண்டலம் 7 :
இதில் 104 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- வஸிஷ்டர்
- வஸிஷ்ட கோத்திரத்தில் வந்த ரிஷிகள்
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- அக்னி
- இந்திரன்
- விஷ்ணு
- ருத்ரன்
இந்த ஸூக்தங்களில்,
- மழையை தரும் பர்ஜன்யன் என்ற தேவதையின் பாடல் உள்ளது.
- பராசரின் கதை உள்ளது.
- வஸிஷ்டர் அவதாரம் சொல்லப்பட்டு உள்ளது. அவருடைய புத்ரர்களின் கதையும் உள்ளது.
- நமுசி என்ற அசுரனின் கதை உள்ளது.
- புரு, புரு-குத்ஸன், த்ரஸத்தஸ்யு போன்ற அரசர்களின் கதை உள்ளது.
- ஸ்யவனரின் கதை உள்ளது.
- சாந்தி சூக்தம் இங்கு உள்ளது.
- பாக்ய சூக்தம் இங்கு உள்ளது.
- அனைவரையும் தூங்க செய்யும் மந்திரம் இங்கு உள்ளது.
- தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
மண்டலம் 8 :
இதில் 103 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- கண்வர்
- கண்வ கோத்திரத்தில் வந்த ரிஷிகள்
- வைவஸ்வத மனு
- விரூப ஆங்கிரசர்
- ஜமதக்னி (ப்ருகுவின் பிள்ளை)
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- இந்திரன்
- விஷ்ணு
இந்த ஸூக்தங்களில்,
- ப்ருதுவின் (வேனனின் பிள்ளை) கதை உள்ளது.
- இந்திரன் நுரையால், நமுசியின் தலையை வெட்டி எறிந்து கதை உள்ளது.
- த்ரஸத்தஸ்யுயின் (புரு-குத்ஸரின் பிள்ளை) கதை உள்ளது.
- ஸிந்து அஸிக்னி என்னும் நதிகளின் பெருமை உள்ளது.
- 7 ஸிந்துக்களின் குறிப்பு உள்ளது.
- தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது
மண்டலம் 9 :
இதில் 114 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை, 'பவமான ஸூக்தங்கள்" என்று சொல்கிறோம்.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- ஆங்கிரஸர்
- ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த ஆயாஸ்யர்
- ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த உசத்யர்
- ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த ஆவத்-ஸாரர்
- ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த நித்ருவர்
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் ஒரே தெய்வம்:
- ஸோமன்
இந்த ஸூக்தங்களில்,
- ஸோம பானத்தின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
- ஸோம தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது
மண்டலம் 10 :
இதில் 191 ஸூக்தங்கள் உள்ளன.
இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:
- த்ரிதர்
- த்ரி-சிரஸூ (த்வஷ்டாவின் பிள்ளை)
- சங்கர் (யாமயான கோத்திரத்தை சேர்ந்தவர்)
- வஸூகர் (இந்திரனின் பிள்ளை)
- வஸூகரின் மனைவி
- கோஷா (கக்ஷீவானின் மகள்)
- சர்யாதி
- புரூரவஸ்
- ஊர்வசி
- ஸரமா என்ற பெண் நாய் (இந்திரனுக்கு சேவை செய்பவள்)
- பரசுராமர் (ஜமதக்னியின் பிள்ளை)
- வாகம் ப்ரூணி என்ற தேவீ
- ப்ருது (வேனனின் பிள்ளை)
இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:
- இந்திரன்
- விஷ்ணு
- அக்னி
இந்த ஸூக்தங்களில்,
- ஸ்ரீ ராம அவதாரத்தின் குறிப்பு (அக்னி ஸூக்தத்தில்) உள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் குறிப்பு (கர்ம ஸூக்தத்தில்) உள்ளது.
- விவாஹ (கல்யாண) மந்திரங்கள் இங்கு உள்ளது.
- பித்ரு மேத மந்திரங்கள் இங்கு உள்ளது.
- த்ரஸத்தஸ்யு (புரு-குத்ஸரின் பிள்ளை), நஹுக்ஷன், யயாதி, யது, துர்வஸூ, இக்ஷ்வாகு, சந்தனு போன்ற அரசர்களின் புகழ் பாடப்பட்டு உள்ளது.
- கங்கா, யமுனா, சரஸ்வதி, ஸரயு என்னும் நதிகளின் பெருமை உள்ளது.
- வைகுண்டன் என்ற ஒரு இந்திரன் பாடிய ஸூக்தம் உள்ளது.
- விஷ்ணுவே பரமாத்மா, அவரே புருஷன் என்று ப்ரம்மம் யார் என்பதை நிரூபிக்கும் 'புருஷ ஸூக்தம்" இங்கு உள்ளது.
- நாஸதீய-ஸூக்தம் இங்கு உள்ளது.
- ஹிரண்யகர்ப-ஸூக்தம் இங்கு உள்ளது.
- விஸ்வகர்ம-ஸூக்தம் இங்கு உள்ளது.
- வாக்தேவி (அம்ப்ரூணரின் பெண்) பரமாத்மாவின் பெருமையை பாடும் சூக்தம் இங்கு உள்ளது.
- புரூரவ-சக்கரவர்த்தியும் ஊர்வசியும் பேசிக்கொண்ட 2 அழகான ஸூக்தங்கள் இங்கு உள்ளது.
- மழைக்கு வேண்டிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
- யக்ஷ்ம ரோகம் நீங்க மந்திரம் இங்கு உள்ளது.
- புரி ஜகந் நாத மூர்த்தி ஆவிர்பாவத்திற்கு ஆதாரம் இங்கு உள்ளது.
- தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது
* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)
- ஐதரேய ப்ராஹ்மணம்
சுக்ல (அயாதயாம) யஜுர் சாகை:
எந்த ரிஷி, எந்த தேவதையை, எந்த சந்தஸில் வழிபட்டார் என்று தெளிவாக இருப்பதால், இந்த யஜு சாகைக்கு "சுக்ல யஜு" என்று பெயர்.
* சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)
- காண்வ சாகை சம்ஹிதை
- மாத்யந்தின சாகை சம்ஹிதை
சம்ஹிதைகளை, 40 அத்யாயமாக பிரித்து கொண்டு படிக்கின்ற்னர்.
* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)
- சதபத ப்ராஹ்மணம்
கிருஷ்ண (தைத்தரீய) யஜுர் சாகை:
எந்த ரிஷி, எந்த தேவதையை, எந்த சந்தஸில் வழிபட்டார் என்று தெளிவாக இல்லாததால், இந்த யஜு சாகைக்கு "கிருஷ்ண யஜு" என்று பெயர்
* சம்ஹிதை: (மந்திரங்கள்)
- தைத்தரீய சம்ஹிதை
சம்ஹிதையில்,
* 44 ப்ரச்னங்களும்
* 651 அனுவாகங்களும்
* 2198 பஞ்சாதிகளும் உள்ளன.
படிப்பதற்காக, 2 முறையில் பாடம் அமைத்து உள்ளனர்.
- ஸாரஸ்வத பாடம் இந்த பாடமுறையை 7 காண்டமாக பிரித்து உள்ளனர்.
- காண்டம் 1
- வாமன அவதாரம் சொல்லப்பட்டுள்ளது
- ஊர்வசி புரூரவ சம்பாஷணை சொல்லப்பட்டுள்ளது
- ரக்ஷோக்ன மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளது
- விஷ்ணு மஹிமை சொல்லப்பட்டுள்ளது
- மாதம், ருதுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- காண்டம் 2
- ஸுவர்பானு என்ற அசுரன் கதை சொல்லப்பட்டுள்ளது
- ஸ்வாயம்பு மனு பெருமை சொல்லப்பட்டுள்ளது
- இந்திரன், விஷ்ணு, அஸ்வினி குமாரர்கள் பெருமை சொல்லப்பட்டுள்ளது
- வ்ருத்ர உபாக்யானம் சொல்லப்பட்டுள்ளது
- விஸ்வரூபர் கதை சொல்லப்பட்டுள்ளது
- ரஜஸ்வலா நியமம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- வாக்குக்கும் மனசுக்கும் ஏற்பட்ட போட்டி பற்றி சொல்லப்பட்டுள்ளது
- காண்டம் 3
- விச்வாமித்ரருக்கும், வஸிஷ்டருக்கும் ஏற்பட்ட அஸூயை சொல்லப்பட்டுள்ளது
- நாபாநேதிஷ்டன் கதை சொல்லப்பட்டுள்ளது
- காண்டம் 4
- ஹிரண்ய ஸூக்தம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
- நக்ஷத்ர தேவதைகள் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
- கருத்மானின் மகிமை சொல்லப்பட்டுள்ளது
- மாதங்கள், ருதுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஸ்ரீருத்ரம், சமகம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
- விஸ்வகர்மா ஸூக்தம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
- காண்டம் 5
- சுனஸ்சேபன் கதை இங்கு சொல்லப்பட்டுள்ளது
- தேவதைகள் விதிக்கப்பட்ட பசுக்கள் இவை இவை என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது
- காண்டம் 6
- கத்ருவிற்கும் சுபர்ணாவிற்கும் நடந்த போட்டி இங்கு சொல்லப்பட்டுள்ளது
- ருத்ரன் பசுபதியானது பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
- விஷ்ணுவின் வராஹ அவதாரம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
- இந்திர வ்ருத்ர யுத்தம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
- காண்டம் 7
- வராஹ அவதாரம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
- கணித வாய்ப்பாடு இங்கு சொல்லப்பட்டுள்ளது
- பங்குனி உத்ரம் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
- சித்ரா பௌர்ணமியின் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
- ஒரு அழகான ப்ரச்னோத்தரி இங்கு சொல்லப்பட்டுள்ளது
- தேசியகீதம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
- அஸ்வத்தின் விராட் ரூபமான ஸ்துதி இங்கு சொல்லப்பட்டுள்ளது
- நீதி கதைகளும், இதிகாச புராணங்களும் இங்கு சொல்லப்பட்டுள்ளது
- பொதுவாகவே, பழைய கால சாரத்தையும், நாகரீக முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
- விஞ்ஞானிகள் பிரமிக்கும் அளவுக்கு அருண-ப்ரஸ்னத்தில் ககோளம் விஷயங்கள் அடங்கி உள்ளது.
- ஆர்ஷேய பாடம்
இங்கு ரிஷி, சந்தஸ், தெய்வம் தெரிந்து அத்யயனம் செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பாடமே சிறந்தது. இந்த முறையில் படிப்பதை போதாயனர், ஆபஸ்தம்பர், வித்யா-ரண்யர் போன்றோர் ஆதரிக்கின்றனர்.
போதாயன ரிஷியின், க்ரூஹ்ய ஸூத்ரம், 5 விரதங்களை விதிக்கிறது. இதனாலும் ஆர்ஷேய பாட முறையே சிறந்தது என்று சொல்லப்படுகிறது. - ஹோத்ரு வ்ரதம்
- சுக்ரீய வ்ரதம்
- உபநிஷத் வ்ரதம்
- கோதாந வ்ரதம்
- ஸம்மித வ்ரதம்
- ப்ராஜா பத்யம்
- புரோடாச விஷயம் சொல்லப்பட்டுள்ளது
- யஜமான விஷயம் சொல்லப்பட்டுள்ளது
- ஹோதாக்களின் ஹோத்ரம் சொல்லப்பட்டுள்ளது
- பித்ருமேதம் சொல்லப்பட்டுள்ளது
- ஸௌம்யம்
- அத்வர்யுவின் விஷயம் சொல்லப்பட்டுள்ளது
- க்ரஹங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- தாக்ஷிணங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஸமிஷ்ட யஜுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- அவப்ருத யஜுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- வாஜபேயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- சுக்ரீயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஸவனங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஆக்யம் or ஆக்னேயம்
- அக்ன்யாதேயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- அக்னி ஹோத்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- அக்னி உபஸ்தானம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- அக்னி சயனம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஸாவித்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- நாசிகேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- வைச்வ-ஸ்ருஜம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஆருணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- வைஸ்வ-தேவம்
- ராஜ-ஸூயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- பசுபந்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- இஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- நக்ஷத்ரேஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- திவச்யேந்யபாகா என்ற இஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஸாத்ராயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- உப-ஹோமங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- அஸ்வமேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- புருஷமேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஸௌத்ராமணி பற்றி சொல்லப்பட்டுள்ளது
- அச்சித்ரங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- பசு-ஹோத்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- உபநிஷத்துக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ஸ்வாயம்புவம்
- காடகத்தில் பாடப்பட்ட விதியே இங்கும் சொல்லப்பட்டுள்ளது.
காடகத்தில் உள்ள வேதாந்த விஷயங்கள் முழுக்ஷுக்களுக்கு உபயோகமானது. - தைத்தரீய ப்ராஹ்மணம்
- ஹாஉ - இந்த கானம் "இந்த லோகமே தேவதையாக" குறிப்பிடுகிறது.
- ஹாஇ - இந்த கானம் "வாயு தேவதையை" குறிப்பிடுகிறது
- அத - இந்த கானம் "சந்திரன் என்ற தேவதையை" குறிப்பிடுகிறது
- இஹா - இந்த கானம் "ஆத்மா தேவதையை" குறிப்பிடுகிறது
- ஈ - இந்த கானம் "அக்னி தேவதையை" குறிப்பிடுகிறது
- ஒளஹோ அஹோ - இந்த கானம் "விச்வே தேவர்களை" குறிப்பிடுகிறது.
- ஊ, ரூ, நிஹவா, ர - இந்த நான்கு கானத்திற்கும், "ஆதித்யன் தேவதை" என்று காட்டுகிறது.
- ஜைமினி சாகை சம்ஹிதை
- கௌதம சாகை சம்ஹிதை கௌதம் சாகையை, 2ஆக பிரிக்கின்றனர்.
- பூர்வார்சிகம் (3 காண்டங்களாக, 5 அத்தியாயங்களை கொண்டுள்ளது)
- ஆக்னேய காண்டம் (1)
- ஐந்தர காண்டம் (3)
- பாவமான காண்டம் (1)
- உத்தரார்சிகம் (21 அத்தியாயங்கள் உள்ளது)
- வஸிஷ்டர்
- கச்யபர்
- வாமதேவர்
- ஸௌபரி
- விச்வாமித்ரர்
- சுனஸ்சேபர்
- ஸூஜனர்
- ரஹுகணர்
- ப்ருகு
- பரத்வாஜர்
- அஸிதர்
- தேவலர்
- பராசரர்
- ப்ரதர்தனர்
- ஸப்த ரிஷிகள்
- வைகானஸ ரிஷிகள்
- குத்ஸர்
- ஆங்கிரஸர்
- அக்னி
- இந்திரன்
- பூஷா
- விச்வே தேவர்கள்
- மருத்துக்கள்
- ஸோமன்
- ருத்ரன்
- விஷ்ணு
இந்த பாடமுறையை 5 காண்டமாக பிரித்து உள்ளனர்
இந்த 5 காண்டத்துக்கு, ப்ரஜாபதி, ஸோமன், அக்னி, விச்வேதேவர்கள், ஸ்வயம்பு என்ற 5 காண்ட ரிஷிகள் உள்ளனர்.
* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)
* ஆரண்யகம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)
ப்ரஹ்ம வித்யை தெரிந்து கொள்ள, கடோ உபநிஷத், தைத்தரீய உபநிஷத்துக்கள் இங்கு உள்ளது.* காடகம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)
காடகத்தில் உள்ள வேதாந்த விஷயங்கள் முழுக்ஷுக்களுக்கு உபயோகமானதுஸாம சாகை:
வேதங்களில் "ஸாம வேதமாக இருக்கிறேன்" என்று பகவான் சொல்கிறார்.
* சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)
ஸாம வேதத்திற்கு "கானமே" முக்கிய லக்ஷணமாக சொல்லப்பட்டு உள்ளது.
ஸாம கானத்திற்கு,
சிலர் 5 லக்ஷணங்கள் சொல்கின்றனர் (ப்ரஸ்தானம், உத்கீதம், ப்ரதிஹாரம், உபத்ரவம், நிதனம்)
சிலர் 7 விதமான ஸாமகானத்தை (ஆசாஸ்தி, ஸ்துதி ஸாங்க்யானம், ப்ரலாபம், பரிதேவனம், ப்ரைஷம், அன்வேஷணம், ஸ்ருஷ்டி) சொல்கின்றனர்
சிலர் 10 விதமான லக்ஷணங்கள் சொல்கின்றனர் (காயத்ரம், ரதந்தரம், வாமதேவ்யம், ப்ருஹத்-ஸாமம், வைரூபம், வைராஜம், சக்வரீ, ரேவதீ, யக்ஞாயக்ஞம், ராஜநம்)
சிலர் 16 விதமான கானத்தை சொல்கின்றனர்.
பூர்வார்சிகத்தில் உள்ள 5 அத்தியாயத்தில் 650 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது.
உத்தரார்சிகத்தில் உள்ள 21 அத்தியாயத்தில் 1225 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது.
மொத்தம், 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது
இந்த 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கீழே சொல்லப்பட்டுள்ள ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கீழே சொல்லப்பட்டுள்ள தெய்வங்களின் புகழ் பாடுகின்றன.
- நமுசியின் சிரசை நுரையால் கொய்தது சொல்லப்படுகிறது
- வராஹ அவதாரம்
- சொல்லப்படுகிறது
- த்ரிவிக்ரம அவதாரம்
- சொல்லப்படுகிறது
- விஷ்ணு ஸூக்தம்
- சொல்லப்படுகிறது
- புருஷ ஸூக்தம் சொல்லப்படுகிறது.
- சந்தோக ப்ராஹ்மணம் / அஷ்ட ப்ராஹ்மணம்
- அதர்வ சம்ஹிதை
- அதர்வா
- ஸிந்து த்வீபர்
- சாதனர்
- சந்தாதி
- ப்ருக்வங்கிரஸ்
- வஸிஷ்டர்
- சௌனகர்
- சுக்ரர்
- பரத்வாஜர்
- கபிஞ்ஜலர்
- கண்வர்
- விச்வாமித்ரர்
- உத்தாலகர்
- ரிபு
- பாதராயணி
ரிக் வேத மந்திரங்களே இங்கும் பாடப்படுகின்றன. கானத்தால் பேதமே தவிர, விஷயத்தில் பேதம் இல்லை.
* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)
* ஆரண்யகம்: (6வது அத்தியாயம்)
அதர்வண சாகை:
* சம்ஹிதை: (மந்திரங்கள்)
சம்ஹிதையை 20 காண்டங்களாக பிரிக்கின்றனர்.
மொத்தம், 5977 ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன.
இந்த 5977 ரிக்குகளை கண்டுபிடித்த ரிஷிகளின் பெயர்கள்:
இந்த 5977 ரிக்குகள் புகழும் தேவதைகளின் பெயர்கள்
- இந்திரன்
- அக்னி
- விஷ்ணு
- ருத்ரன்
- ஸோமன்
- அச்வினி குமாரர்கள்
- ஸூர்யன்
- கருத்மான்
- ப்ரஜாபதி
- மேதைத்தனத்தை வளர்க்க கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
- ரோகத்தை நீக்க கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
- ராக்ஷஸரகளை நாசம் செய்து, வெற்றியை தரக்கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
- மழையை மந்திரங்கள் இங்கு உள்ளது.
- சிறுநீரகம் கெட்டு, மூத்திரம் வெளி வராமல் இருந்தால், சரி செய்யும் மந்திரங்கள் இங்கு உள்ளது.
- இதயநோய் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது.
- வெண் குஷ்டம் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
- காய்ச்சல் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
- ரத்த பெருக்கான வாந்தி பேதி நிற்க குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
- யக்ஷ்ம (cancer) நீங்கவும் மந்திரங்கள் இங்கு உள்ளது
- சுக பிரசவமாக மந்திரங்கள் உள்ளது.
- நீண்ட ஆயுள் உண்டாக மந்திரங்கள் உள்ளது.
- உடல் நலத்திற்கு வேண்டிய மந்திரங்கள் உள்ளது.
- பரமகாமத்திற்கு மந்திரங்கள் உள்ளது.
- பாப விமோசனத்திற்கு மந்திரங்கள் உள்ளது,
- பயம் நீங்க மந்திரங்கள் உள்ளது
- பந்தம் நீங்க மந்திரங்கள் உள்ளது
- வயலில் பயிர்கள் வளர மந்திரங்கள் உள்ளது
- கோஷ்டத்தில் பசுக்கள் நன்கு வளர, மந்திரங்கள் உள்ளது
- காமத்தில் இச்சையுள்ள பெண்களை வசியம் செய்ய மந்திரங்கள் உள்ளது
- எதிரி படைகளை குழம்ப வைக்க மந்திரங்கள் உள்ளது
- இழந்த இடங்களை மீண்டும் பெற மந்திரங்கள் உள்ளது
- ராஜ லக்ஷணம் கூறப்பட்டு உள்ளது.
- மக்களால் அரசன் நியமிக்கப்படுவது பற்றி கூறப்பட்டு உள்ளது.
- ராஜ்யத்தை நிர்வாகம் செய்வது பற்றி கூறப்பட்டுள்ளது.
- சாலைகள் நிர்மாணம் செய்வது பற்றி கூறப்பட்டுள்ளது.
- பசுமடம் பற்றி கூறப்பட்டுள்ளது.
- க்ருஷி, வணிகம் முதலியவைகளின் அமைப்பு கூறப்பட்டுள்ளது. அதன் முன்னேற்றம் பற்றியும் கூறப்பட்டுள்ளது
- ப்ரஹ்ம வித்யை இங்கு சொல்லப்பட்டுள்ளது.
- ஆத்ம வித்யை இங்கு சொல்லப்பட்டுள்ளது
- பிறரை தூங்க செய்ய மந்திரம் இங்கு உள்ளது.
- விஷத்தை நீக்க மந்திரம் இங்கு உள்ளது.
- சங்க நாதத்தின் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது.
- பிசாச சமனம் செய்வது பற்றி சொல்லப்பட்டுள்ளது
- ராஜ்யாபிஷேகம் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
- தாய் பூமியின் (மாத்ரு பூமி/ராஷ்டிர தேவி) ராணுவ சேனையை கவனித்தல் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
- காமதேனுவின் மகிமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
- மரணத்தை தாண்டுவதை பற்றி சொல்லப்பட்டுள்ளது.
- உயிரை காப்பாற்றி கொள்வது பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
- உலகிலேயே முதன்மையானவனாய் ஆகும் வழி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
- குஷ்டரோகம் நீங்க மந்திரங்கள் உள்ளது.
- ஸ்ர்பநாசம் செய்ய மந்திரங்கள் உள்ளது.
- க்ருத்யைக்கு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.
- மாட்டின் வ்யாதியை நீக்க மந்திரங்கள் உள்ளது.
- குழந்தை உண்டாக மந்திரங்கள் உள்ளது.
- புது வீட்டிற்கு குடி போவதற்கான மந்திரங்கள் உள்ளது.
- ரக்ஷோக்னம் முதலிய விஷயங்களுக்கு மந்திரங்கள் உள்ளது.
- குழந்தை உண்டாக மந்திரங்கள் உள்ளது.
- கர்பத்தில் வளரும் சிசு ஆண் பிள்ளையாக பிறக்க, பும்ஸ-வனம் மந்திரங்கள் உள்ளது
- கர்பம் கலையாமல் இருக்க கர்ப-ரக்ஷண மந்திரங்கள் உள்ளது.
- கண் வியாதிக்கு ஏற்ற சிகிச்சை, மருந்து, மந்திரம் உள்ளது.
- தலைமுடி வளர தைலம், அதற்கான மந்திரங்கள் உள்ளது.
- கன்னிகைக்கு பொருத்தமான பதி கிடைக்க மந்திரம் உள்ளது.
- பையனுக்கு பொருத்தமான பெண் கிடைக்க மந்திரம் உள்ளது.
- பைத்தியம் தெளிய மந்திரம் உள்ளது.
- குஷ்ட ரோகம், யக்ஷ்ம ரோகம் நிவர்த்தி செய்ய மந்திரம் உள்ளது.
- அம்புபட்ட பட்ட இடத்தில் சிகித்ஸை செய்ய மந்திரங்கள் உள்ளது.
- கடன் அடைவதற்கு மந்திரம் உள்ளது.
- உணவு கிடைத்து கொண்டே இருக்க மந்திரம் உள்ளது.
- ஞாபக சக்திக்கு மந்திரங்கள் உள்ளது.
- அன்பு உண்டாக மந்திரங்கள் உள்ளது.
- கண்டமாலை என்ற ரோகம் நீங்க சிகித்ஸையும், மந்திரமும் உள்ளது.
- கெட்ட ஸ்வப்னங்கள் நீங்க மந்திரம் உள்ளது.
- கவசம் அணிவதற்கு மந்திரம் உள்ளது
- ப்ரதிஸர மணியை பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
- கர்ப தோஷ நிவாரணம் சொல்லப்பட்டுள்ளது.
- பலவிதமான மூலிகைகள் பற்றிய ரஹஸ்யங்கள் சொல்லப்பட்டுள்ளது.
- மது வித்யை சொல்லப்பட்டுள்ளது
- சாலை நிர்மானம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
- அதிதி ஸத்காரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
- காமத்தின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
- ஆத்ம வித்யை சொல்லப்பட்டுள்ளது.
- க்ருதயா பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.
- மணி பந்தனம் சொல்லப்பட்டுள்ளது.
- ஸர்வாதார வர்ணனம் சொல்லப்பட்டுள்ளது.
- கோமாஹாத்யம் சொல்லப்பட்டுள்ளது.
- ருத்ர ஸூக்தம் இங்கு உள்ளது.
- அன்னம், ப்ராணன் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
- ப்ரம்மசர்யம் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
- பூமியை பற்றி ஒரு பெரிய ஸூக்தம் இங்கு உள்ளது. பூமியின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
- வராஹ அவதாரம், த்ரிவிக்ரம அவதாரம், ப்ருது அவதாரம் சொல்லப்பட்டுள்ளது.
- முற்றிலும் உபநிஷத்து போல, வேதாந்த விஷயங்களே இங்கு உள்ளது
- விவாஹ மந்திரங்கள் யாவும் இங்கு கிடைக்கிறது
- இதிலும் உபநிஷத்து போல, வேதாந்த விஷயங்களே இங்கு உள்ளது.
- இங்கு 'வ்ராத் ஸூக்தத்தில்' பரமாத்மாவை 'வ்ராத்யன்' என்ற பதத்தினால் அழைக்கிறது. வ்ரதத்தினால் அடையப்படுபவன் என்பதால் பரமாத்மாவுக்கு இந்த பெயர் கொடுத்து அழைக்கிறது.
- கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க மந்திரம் இங்கு உள்ளது.
- துக்கத்திற்கு விமோசன மந்திரம் உள்ளது.
- கெட்டவர்களை நாசம் செய்ய, மந்திரங்கள் உள்ளது.
- அப்யுதம் (மங்களம்) உண்டாக பிரார்த்தனைகள் இங்கு உள்ளது
20 காண்டங்கள் உள்ளது:
காண்டம் 1:
காண்டம் 2:
காண்டம் 3:
காண்டம் 4:
காண்டம் 5:
காண்டம் 6:
காண்டம் 7:
காண்டம் 8:
காண்டம் 9:
காண்டம் 10:
காண்டம் 11:
காண்டம் 12:
காண்டம் 13:
காண்டம் 14:
காண்டம் 15:
காண்டம் 16:
காண்டம் 17:
காண்டம் 18:
இறந்த பிறகு ஒருவருக்கு செய்ய வேண்டிய கர்ம காரிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
- புருஷ ஸூக்தம் உள்ளது
- நக்ஷத்திரங்களை பற்றிய ஸூக்தம் இங்கு உள்ளது.
- சாந்தி கோஷம், தர்ப மணி, ஔதும்பர மணி, சதவார மணி போன்ற மணிபந்தங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.
- ராத்ரி தேவதை, காலம், வேதமாதா, பரமாத்மாவை பற்றிய விஷயங்களை பேசுகிறது
- இந்திரனின் பெருமையை பற்றிய சூக்தங்களே இங்கு உள்ளது
- அதர்வ ப்ராஹ்மணம்
காண்டம் 19:
காண்டம் 20:
* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)
இங்கு சொல்லப்பட்ட சம்ஹிதைகள் இன்று இருக்கிறது.
1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், இது போல பல சம்ஹிதைகள் காப்பாற்றி வந்த ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டு, அழிந்து விட்டது.
ஸாம வேதத்தில் 100க்கும் மேல் சம்ஹிதைகள் இருந்தன. அதில் இன்று இரண்டே இரண்டு மட்டும் தான் உள்ளது.
அதிலும் ஜைமினி சாகை என்ற சம்ஹிதை காற்றுள்ள வேதியர்கள் மிகவும் குறைவே.
இந்த சந்ததியினர் காப்பாற்றப்படாமல் இருந்தால், இந்த சம்ஹிதையும் மறைந்து போய் விடும்.
சம்ஹிதைகள் (மந்திரங்கள்) அத்யயனம் செய்து முடித்தாலேயே, அந்த வேதத்தை படித்ததாக ஆகும்.
மேலும்,
ப்ராஹ்மண பாகத்தில் உள்ள உபநிஷத்துக்களை தெரிந்து கொண்டால், வேத மந்திரங்களின் அர்த்தமும் (வேதாந்தம்) விளங்கும்.
ரிக் வேத சம்ஹிதை (மந்திர பாகம்) முழுவதையும், 45 மணி நேரம் தொடர்ந்து எதையும் பார்க்காமல், உச்சரிப்பு பிசகாமல் சொல்லும் வேத ப்ராம்மணர்கள் இன்றும் உள்ளனர்.
இதற்கு இவர்கள் தங்கள் பால்ய வயதான 7 முதல் 16 வயது வரை கடுமையான வ்ரதங்களுடன், தினமும் 4 மணிக்கு எழுந்து, உணவு கட்டுப்பாட்டுடன், 8 மணிநேரம் தினமும் பயிற்சி செய்து, பெற்றோருடன் வசிக்காமல், குருகுல வாசம் செய்து, வேதத்தில் உள்ள சம்ஹிதையை உச்சரிப்பு பிசகாமல் கற்று கொள்கின்றனர்.
இதற்கு மேல், ப்ராஹ்மண பாகத்தையும் தெரிந்து கொள்ள மேலும் பல வருடங்கள், ஆயுள் முழுக்க செலவு செய்து கற்று கொள்கின்றனர்.
இத்தகைய தவ வாழ்வு காரணமாக ப்ராஹ்ம்மணர்கள் மதிக்கப்பட்டனர்.
இன்றும் அத்தகைய வேத ப்ராஹ்ம்மணர்கள் மதிக்கப்படுகின்றனர்.
குருநாதர் துணை
No comments:
Post a Comment