ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டிய பிரார்த்தனை)
ஸந்தியாவந்தனம் செய்த பிறகு,
கிழக்கு முகமாக உட்கார்ந்து (காலையில்), ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டியது)
மேற்கு முகமாக உட்கார்ந்து (மாலையில்), ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டியது). மாலை அக்னி மூட்டாமல், அக்னியை தியானித்து சொல்லலாம்.
அக்னி ஏற்படுத்தி முன்னால் வைத்துக் கொண்டபின், இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.
ஆசமனம்
ஒம் அச்யுதாய நம:
ஒம் அனந்தாய நம:
ஒம் கோவிந்தாய நம:
அங்கவந்தனம்:
ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும் போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.
கேசவ (வலக்கை கட்டைவிரலால் வலது கன்னம் ஸ்பரிசிக்க வேண்டும்)
நாராயண (வலக்கைக் கட்டைவிரலால் இடது கன்னம் ஸ்பரிசிக்க வேண்டும்)
மாதவ (வலக்கை மோதிர விரலால் வலது கண் ஸ்பரிசிக்க வேண்டும்)
கோவிந்த (வலக்கை மோதிர விரலால் இடது கண் ஸ்பரிசிக்க வேண்டும்)
விஷ்ணு (வலக்கை ஆள்காட்டி விரலால் வலது நாசி ஸ்பரிசிக்க வேண்டும்)
மதுஸூதன (வலக்கை ஆள்காட்டி விரலால் இடது நாசி ஸ்பரிசிக்க வேண்டும்)
த்ரிவிக்ரம (வலக்கை சிறு விரலால் வலது காது ஸ்பரிசிக்க வேண்டும்)
வாமன (வலக்கை சிறு விரலால் இடது காது ஸ்பரிசிக்க வேண்டும்)
ஸ்ரீதர (வலக்கை நடு விரலால் வலது தோள் ஸ்பரிசிக்க வேண்டும்)
ஹ்ருஷீகேச (வலக்கை நடு விரலால் இடது தோள் ஸ்பரிசிக்க வேண்டும்)
பத்மநாப (ஐந்து விரல்களால் சேர்த்து நாபி ஸ்பரிசிக்க வேண்டும்)
தாமோதர (ஐந்து விரல்களால் சேர்த்து தலை ஸ்பரிசிக்க வேண்டும்)
விக்னேச்வர த்யானம்
சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப-சா’ந்தயே !!
ப்ராணாயாமம்;.
ஓம் பூ:, ஓம் புவ:, ஓஹும் ஸூவ:
ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓஹும் ஸத்யம்
ஓம் தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்
ஓமாபோ: ஜ்யோதீரஸ:
அம்ருதம் ப்ரஹ்ம
பூர் புவஸ் ஸூவரோம்
என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை வசிப்பதாக ஐதிகம்)
ஸங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்’வர ப்ரீத்யர்த்தம், |
(காலையில்) ப்ராத ஸமிதாதானம் கரிஷ்யே
(மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே
பிறகு,
அக்னி பகவானிடம் கீழ் கண்டவாறு ப்ரார்த்தனை செய்கிறான் பிரம்மச்சாரி:
அக்னி பிரார்த்தனை:
பரித்-வாக்னே (ஸமித்தில் (அரச மர குச்சி) வெளிப்படும் அக்னி பகவானே !)
பரிம்-ருஜாமி (எனக்கு அருள் புரிய வேண்டும்)
ஆயுஷா-ச தனேன-ச (எனக்கு நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்க)
ஸுப்ரஜா; ப்ரஜயா பூயாஸம் (பிள்ளைகளில் நல்ல பிள்ளையாக நான் இருக்க)
ஸுவீர: வீரை: (வீரத்தில் சிறந்த வீரம் உடையவனாக இருக்க)
ஸுவர்ச்சா: வர்ச்சஸா: (ஞானத்தில், சிறந்த ஞானம் அமைந்தவனாக இருக்க)
ஸுபோஷ: போஷை: (உடல் ஆரோக்யத்தில் சிறந்த ஆரோக்கியம் உள்ளவனாக இருக்க)
ஸுக்ருஹ: க்ருஹை: (வசிக்கும் இடம், சிறந்த இடமாக இருக்க)
ஸுபதி: பத்யா (எஜமானனில் சிறந்த எஜமானன் (குரு) அமைந்தவனாக இருக்க)
ஸுமேதா: மேதயா (மேதை தனத்தில் சிறந்த மேதை உடையவனாக இருக்க)
ஸு-ப்ரஹ்மா ப்ரம்மசாரிபி: (ப்ரம்மச்சாரியில் சிறந்த ப்ரம்மச்சாரியாக இருக்க)
( என்று சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து )
ஓம் பூ: புவ ஸுவ: (என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)
அதி தேனு மன்யஸ்வ (அக்னிக்கு தெற்கு பாகத்தில், கீழிலிருந்து மேலாக ஜலம் விடவும்)
அனுமதேனு மன்யஸ்வ (தெற்கிலிருந்து வடக்காக ஜலம் விடவும்)
சரஸ்வதேனு மன்யஸ்வ (வடபுறம் கீழிருந்து மேலாக ஜலம் விடவும்)
பிறகு,
”தேவஸவித: ப்ரஸுவ” (இது கிடைக்க பெற அக்னி தேவனே! உம்மை பிரார்த்திக்கிறேன்.)
( என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)
ஹோமம்:
(கீழ்கண்ட 16 மந்த்ரங்களைச் சொல்லி, ஒவ்வொரு தடவையும் ”ஸ்வாஹா” என்று சொன்னபின், அக்னியில் ஸமித்தை (அரச மர குச்சி) ஒவ்வொன்றாக வைக்கவும்)
01)
ஒம் அக்னயே ! ஸமிதம் ! ஆஹார்ஷம் ! ப்ருஹதே ! ஜாத-வேதஸே !
யதாத்வம் ! அக்னே ! ஸமிதா ! ஸமித்யஸே ! ஏவம்-மாம் !
ஆயுஷா ! வர்ச்சஸா ! ஸந்யா !
மேதயா ! ப்ரஜயா !
பசுபி: ! ப்ரஹ்ம-வர்ச்சஸேன !
அந்நாத்யேன !
ஸமேதயா ! ஸ்வாஹா.
அக்னி பகவானே! ஆயுளாலும், சக்தியாலும், லாபத்தாலும், புத்தியாலும், மக்களாலும், பசுக்களாலும் நான் ஓங்கி வளர்ந்து அபிவிருத்தி ஆக வேண்டும். ப்ரம்ம தேஜஸ் அடைய வேண்டும். அதற்காக நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஆஹுதி செய்கிறேன்.
02)
ஏதோஸி ! ஏதி-ஷீ-மஹி ! ஸ்வாஹா
அக்னி பகவானே! நீங்கள் வளர்கிறீர்கள். அது போல, என்னையும் வளர செய்யுங்கள்.
03)
ஸமி-தஸி ! ஸமேதி-ஷீ-மஹி ஸ்வாஹா
அக்னி பகவானே! நீங்கள் பிரகாசிக்கிறீர்கள். அது போல, என்னையும் சுடர் விட்டு பிரகாசிக்க செய்யுங்கள்.
04)
தேஜோஸி ! தேஜ: ! மயி-தேஹி ! ஸ்வாஹா
அக்னி பகவானே! நீங்கள் வீர்யம் கொண்டு விளங்குகிறீர்கள். அது போல, என்னையும் ப்ரம்ம தேஜஸோடு (வீர்யம்) இருக்க செய்யுங்கள்.
05)
அபோ-அத்யா ! அந்வ-சாரிஷம் !
ரஸேநா ! ஸம-ஸ்ருக்ஷ்மஹி ! பயஸ்வான் !
அக்நே-ஆகமம் ! தம்மா: ! ஸகும்-ஸ்ருஜா !
வர்சஸா ! ஸ்வாஹா !
அக்னி பகவானே! என்னை ப்ரம்ம வர்சஸுடன் சேர்த்து வைப்பீராக..
06)
ஸம்மாக்நே ! வர்ச்சஸா ஸ்ருஜ ! ப்ரஜயா-ச ! தநேந-ச ! ஸ்வாஹா
அக்னி பகவானே! ப்ரம்ம வர்சஸும், நன் மக்களும், தனமும் அருள்வீராக.
07)
வித்யுந்மே ! அஸ்ய-தேவா: ! இந்த்ரோ-வித்யாத் ! ஸஹ-ரிஷிபி: ! ஸ்வாஹா
அக்னி பகவானே! இப்படி ஹோமம் செய்யும் என்னை, இந்திராதி தேவர்களும், ரிஷிகளும் ரக்ஷிக்கும் படி அருள் செய்ய வேண்டும்.
08)
அக்நயே ! ப்ருஹதே ! நாகாய ! ஸ்வாஹா
அக்னி பகவானே! வான் உலகில் பெருமைமிக்க அக்னியே, நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஹோமம் செய்கிறேன்.
09)
த்யாவா ! ப்ருதிவீப்யாம் ! ஸ்வாஹா
அக்னி பகவானே! வான் உலகத்தில் உள்ளவர்களின் நன்மைக்காகவும், பூமியில் இருப்பவர்களின் நன்மைக்காகவும் நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஹோமம் செய்கிறேன்.
10)
ஏஷாதே-அக்நே ! ஸமித்தயா !
வர்த்தஸ்வ-ச ! ஆப்யாயஸ்வ-ச ! தயாஹம் !
வர்த்தமாந: ! பூயாஸம் ! ஆப்யாய-மாநஸ்ச ! ஸ்வாஹா !
அக்னி பகவானே! நாம் வைக்கும் ஸமித்தால் நீங்கள் பரிபூர்ணமாக இருப்பது போல, நானும் பரிபூர்ணமாக ஆகும் படி செய்யுங்கள்.
11)
யோமாக்நே ! பாகிநம் ! ஸந்தம் ! அதா-பாகம் ! சிகீர்ஷதி ! அபாகம்-அக்நே !தம்குரு ! மாம் அக்நே ! பாகிநம்-குரு ! ஸ்வாஹா !
அக்னி பகவானே! தகுதி இருந்தும் (என்ன காரணத்தாலோ) எனக்கு இன்று வரை கிடைக்காத பாக்கியங்களை, எனக்கு கிடைக்கும் படியாக செய்யுங்கள்.
12)
ஸமிதம்-ஆதாய ! அக்நே ! ஸர்வ-வ்ரத: ! பூயாஸம் ! ஸ்வாஹா !
அக்னி பகவானே! இந்த ஸமிதாதானம் செய்வதால், சர்வ விரதம் செய்த பலனை எனக்கு கிடைக்கும் படியாக செய்யுங்கள்.
13)
பூ: ஸ்வாஹா !
14)
புவ ஸ்வாஹா !
15)
ஸுவ ஸ்வாஹா !
16)
ஓம் பூ: புவ ஸுவ ஸ்வாஹா !
(என்று ஸமித்தை அக்னியில் சேர்த்த பிறகு )
அதிதேன்வ மக்கும் ஸ்தா: (அக்னிக்கு தெற்கு பாகத்தில், கீழிலிருந்து மேலாக ஜலம் விடவும்)
அனுமதேன்வ மக்கும் ஸ்தா (தெற்கிலிருந்து வடக்காக ஜலம் விடவும்)
சரஸ்வதேன்வ மக்கும் ஸ்தா (வடபுறம் கீழிருந்து மேலாக ஜலம் விடவும்)
பிறகு,
”தேவஸவித: ப்ராஸாவீ” (இது கிடைக்க பெற அக்னி தேவனே! உம்மை பிரார்த்திக்கிறேன்.)
(என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)
பிறகு,
"ஸ்வாஹா" என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் சேர்க்கவும்.
உபஸ்தானம்:
”அக்நே உபஸ்த்தாநம் கரிஷ்யே” (என்று கூறி எழுந்து நிற்கவும்)
பிறகு,
(இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அக்னி பகவானைப் ப்ரார்த்திக்கவும்)
யத்தே அக்நே ! தேஜஸ் தேநாஹம் ! தேஜஸ்வீ ! பூயாஸம் !
யத்தே அக்நே ! வர்ச்சஸ்-தேநாஹம் ! வர்ச்சஸ்வீ ! பூயாஸம் !
யத்தே அக்நே ! ஹரஸ்- தேநாஹம் ! ஹரஸ்வீ ! பூயாஸம் !
ஹே அக்னி பகவன்! நீங்கள் பொலிவுடன் இருப்பதைப் போலவே, நானும் பொலிவுடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள்.
ஹே அக்னி பகவன்! தீயவர்கள் அருகில் வர முடியாதபடி நீங்கள் வீரியத்துடன் இருப்பதைப் போலவே, நானும் வீரியத்துடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள்.
ஹே அக்னி பகவன்!, உறங்கும் மக்களை எழுப்பும் சக்தி உள்ளவராக நீங்கள் இருப்பதைப் போலவே, நானும் சக்தி உள்ளவனாக இருக்க அணுகிரஹம் செய்யுங்கள்.
மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மய்யக்நி: தேஜோ ததாது !
மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மயீந்தர: இந்த்ரியம் ததாது !
மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மயிஸூர்யோ ப்ராஜோ ததாது !
அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள்.
அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் மகிமை கிடைக்க அணுகிரஹம் செய்யுங்கள்.
அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள்.
அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் பஞ்ச கர்ம இந்திரியங்கள், பஞ்ச ஞான இந்திரியங்கள் சக்தியுடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள்.
அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள்.
அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் ஞான வாழ்க்கை அமைய அணுகிரஹம் செய்யுங்கள்..
அக்நயே நமஹ !
மந்த்ரஹீநம் ! க்ரியாஹீநம் ! பக்திஹீநம் ஹீதாச’ன !
யத்ஹு-தம்து ! மயாதேவ ! பரிபூர்ணம் ததஸ்துதே !
ப்ராயச்சித்தாநி ! அசேஷாணி ! தப: கர்ம !
ஆத்மகாநிவை ! யாநிதேஷாம் !அசேஷாணாம் !
ஸ்ரீக்ருஷ்ண ! அனுஸ்மரணம் ! பரம் !
ஸ்ரீக்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண,
(என்று சொல்லி. அபிவாதயே சொல்லி விட்டு, நமஸ்காரம் செய்யவும்)
பிறகு
ரக்ஷா மந்த்ரம் :
(அக்னியிலிருந்து சிறிதளவு பஸ்மத்தை எடுத்து இடது உள்ளங்கையில் ஜலம் விட்டு மோதிர விரலால் கீழ்க்கண்ட மந்த்ரத்தைக் கூறி, குழைத்து அந்தந்த இடத்தில் ரக்ஷையாக இட்டுக் கொள்ளவும்)
மானஸ்-தோகே ! தநயே ! மாந-ஆயுஷீ ! மாநோகோஷு ! மாந: !
அச்’வேஷு ! ரீரிஷ: ! வீராந்மாந ! ருத்ரபாமித ! வதீ: ! ஹவிஷ்மந்த: ! நமஸா ! விதே மதே !
பிறகு,
மேதாவீ பூயாஸம் (நெற்றில்)
தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்)
வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்)
ப்ரஹ்ம் வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்)
ஆயுஷ்மாந் பூயாஸம் (கழுத்தில்)
அந்நாதோ பூயாஸம் (நாபியில்)
ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்)
இட்டுக்கொண்டு கை அலம்பி, கீழ் சொன்ன மந்திரத்தை சொல்லி கொண்டே. அக்னி பகவானைப் பார்த்து ப்ரார்த்தனை செய்யவும்.
ஸ்வஸ்தி ! ஸ்ரத்தாம் ! மேதாம் ! யச: ப்ரஜ்ஞாம் !
வித்யாம் ! புத்திம் ! ஸ்ரியம் பலம் ! ஆயுஷ்யம் !
தேஜ: ஆரோக்யம் ! தேஹி மே !
ஹவ்ய வாஹந ! ஸ்ரியம் தேஹி மே !
ஹவ்ய வாஹன ! ஓம் நம: இதி
(என்று சொல்லி அக்னியைப் ப்ரார்த்தித்து பின் ஆசமனம் செய்து)
‘‘ஒம் த்தஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து”
என்று சொல்லி ஒரு உத்தரணி தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் விட்டுக் கீழே விடவும்.
1 comment:
Thank you so much !
Post a Comment