Followers

Search Here...

Monday, 3 May 2021

சிவ தனுஸை எத்தனை பேர் இழுத்து வந்தனர்? தெரிந்து கொள்வோம். வால்மீகி ராமாயணம்

சிவதனுஸை எத்தனை பேர் இழுத்து வந்தனர்?

"நிமி சக்கரவர்த்தியின் 6வது தலைமுறையில் வந்த தேவவ்ரதனிடம் சிவதனுஷை சாக்ஷாத் சிவபெருமான் கொடுத்து வைத்தார்.

நான் யாகசாலையில் உழுத போது, பூமியிலிருந்து தானாக கிடைத்த பெண் சீதை.

அவளை என் பெண்ணாக பாவித்து வளர்த்து வருகிறேன்.




அவள் வளர்ந்து மணம் செய்து கொள்ள வேண்டிய பருவம் வந்தவுடனேயே, அவளை மணக்க அரசர்கள் அனைவரும் மிதிலையை முற்றுகை இட்டு விட்டனர்.

'எனக்கு வரதக்ஷிணையாக யார் இந்த சிவதனுஸை எடுத்து நாண் ஏற்றுகிறார்களோ! அவர்களே சீதையை மணம் செய்து தகுதி படைத்தவர்" என்று க்ஷத்ரியர்களான இவர்களுக்கு சொல்ல, அனைவரும் முயற்சி செய்தனர்.

சிவதனுஸை தூக்க முடியாமல், பலர் அசைக்க கூட முடியாமல் தோற்றனர்.

அவமானம் அடைந்த இவர்கள், மிதிலையை முற்றுகை இட்டனர். ஒரு வருடம் இவர்களால் மிதிலாபுரி அவதிப்பட்டது.

என்னுடைய பிரார்த்தனையை ஏற்று, தேவகணங்கள் மிதிலையை நாற்புறமும் சுற்றி கொண்டு, அனைவரையும் அடக்கி விரட்டினர்.

அந்த தனுஸை நான் உங்களுக்கும், கூடவே நின்று கொண்டிருக்கும் ராம, லக்ஷ்மணருக்கும் காட்டுகிறேன்"

என்று சொல்லி, தன் அமைச்சர்களிடம் எடுத்து வர சொன்னார் ஜனகர்.


ஜனகேன சமாதிஷ்டா:

ஸசிவா: ப்ராவிஸன் புரம் |

தத் தனு: புரத: க்ருத்வா

நிர்ஜக்மு அமிதொளஜச: ||

ந்ருனாம் சதானி பஞ்சாஸத்

வ்யாயதானாம் மஹாத்மநாம் |

மஞ்சுஷாம் அஷ்ட சக்ராம்

தாம் சமுஹு: தே கதன்சன ||

- வால்மீகி ராமாயணம்


जनकेन समादिष्ठाः सचिवाः प्राविशन् पुरम् |

तद् धनुः पुरतः कृत्वा निर्जग्मु अमितौजसः ||

नृणां शतानि पंचाशद् व्यायतानां महात्मनाम् |

मंजूषाम् अष्ट चक्रां तां समूहुस्ते कथंचन ||

- वाल्मीकि रामायण

ஜனகரின் ஆணைக்கு இணங்கி, அவருடைய அமைச்சர்கள் சென்று, சிவதனுஸை எட்டு சக்கரங்கள் பூட்டிய பெரிய தேரில் வைத்து, அரச மஹாமண்டபத்துக்குள் வந்தனர்.

பலம் பொருந்திய உயரமான ஆண்கள் 5000 பேர் சேர்ந்து கொண்டு, சிரமப்பட்டு சிவதனுஸை இழுத்து கொண்டு வந்தனர்.

As clearly instructed by Janaka those high souled ministers have gone out and entered the palace-chambers, and they came out with an eight-wheeled coffer in which the bow of Shiva is ensconced, and those ministers got it tugged by five thousand (शतानि पंचाशद्) tall men of illimitable energy who somehow tugged it very difficultly, and thus the ministers have re-entered there keeping that bow afore of them





சிவ தனுஸை காண்பித்த ஜனகர், 

"இதோ இந்த சிவதனுஸை மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், மஹோரகர்கள், யக்ஷர்கள் போன்ற பலம் பொருந்தியவர்கள் கூட முயற்சி செய்தும், அசைக்க கூட முடியாமல் திரும்பினர்." என்று காண்பித்தார்.


விஸ்வாமித்திரர், 16 வயது கூட நிரம்பாத ராமபிரானை பார்த்து, "அந்த தனுஸை சென்று பார்" என்றார்.


அருகில் சென்று பார்த்த ராமர், விஸ்வாமித்ரரிடம் "ப்ரம்ம ரிஷி! நான் இந்த தனுஸை தொட்டு பார்க்கலாமா? இந்த அழகான தனுஸை எடுத்து நாண் ஏற்றி பார்க்க ஆசைப்படுகிறேன்" என்றார்.

பாடம் இத்யேவ தம் ராஜா

முனி: ச சம பாஷத |

லீலயா ச தனுர் மத்யே

ஜக்ராஹ வசனான் முனே ||

- வால்மீகி ராமாயணம்


बाढमित्येव तं राजा मुनिश्च समभाषत |

लीलया स धनुर्मध्ये जग्राह वचनान्मुनेः ||

- वाल्मीकि रामायण

ஜனகரும், விச்வாமித்ரரும் சம்மதம் தெரிவிக்க, சிவதனுஸின் நடுவே கை வைத்து தூக்கி, விளையாட்டாக எடுத்து விட்டார்.

ஆயிரக்கணக்கானவர்கள் இந்த காட்சியை பார்க்க, ராமர் சர்வ சாதாரணமாக சிவதனுஸை நாண் ஏற்ற ஆரம்பித்தார்.

நாண் ஏற்றுவதற்கு ஒரு முடிச்சை இழுத்து மேலே கட்ட ராமர் முயற்சிக்க, சிவதனுஸ் முறிந்து விழுந்தது.

மலை சுக்கு நூறாக வெடிக்கும் போது ஏற்படும் சத்தத்தை, முறிந்த சிவதனுஸ் ஏற்படுத்தியது.


விஸ்வாமித்திரர், ஜனகர், ராம லக்ஷ்மணர்களை தவிர, நொடி பொழுதில் நடந்து விட்ட இந்த நிகழ்வை பார்த்த அனைவரும், திகைத்து நின்றனர்.

भगवन् दृष्टवीर्यो मे रामो दशरथात्मजः |

अत्यद्भुतमचिन्त्यं चातर्कितमिदं मया ||

- वाल्मीकि रामायण


பகவன் த்ருஷ்ட வீர்யோ

மே ராமோ தசரதாத்மஜ: |

அதி அத்புதம் அசிந்த்யம்

ச அதர்கிதம் இதம் மயா ||

- வால்மீகி ராமாயணம்

ஜனகர் விஸ்வாமித்ரரை பார்த்து, "ப்ரம்ம ரிஷி!  தசரத மைந்தன் ராமரின் வீரம் இன்று கண்கூடாக கண்டேன்.

ஆச்சரியத்துக்கும் ஆச்சர்யம் இது.  அனுமானம் செய்து பார்க்க முடியாத நிகழ்வு. இது நடக்கவே நடக்காது என்றே நான் நினைத்திருந்தேன்.

என் மகள் சீதை, தசரத மைந்தன் ராமனை கணவனாக அடைவதால், ஜனக குலம் பெரும் பெருமை அடைய போகிறது என்று அறிகிறேன்.."

என்று கூறி ஆனந்தப்பட்டார் ஜனக மஹாராஜன்.

No comments: