ராமபிரானும், சீதாதேவியும் வனம் செல்வதற்கு முன், எத்தனை வருடங்கள் அயோத்தியில் இருந்தார்கள்?
வனம் செல்லும் போது, ராமபிரானுக்கு வயது என்ன?
சீதாதேவிக்கு வயது என்ன?
सन्निदेशे पितुस्तिष्ठ यथा तेन प्रतिश्रुतम्।
त्वयाऽरण्यं प्रवेष्टव्यं नव वर्षाणि पञ्च च।।
- वाल्मीकि रामायण
சந்நிதேசே பிது: திஷ்ட
யதா தேன ப்ரதிஸ்ருதம் |
த்வயா அரண்யம் ப்ரவிஷ்டயம்
நவ வர்ஷாணி பஞ்ச ச ||
- வால்மீகி ராமாயணம்
"அப்பாவின் புகழை நிலைநிறுத்த, அவர் எந்த வாக்குறுதி எனக்கு கொடுத்தாரோ! அதன்படி, ராமா! நீ 9+5 = 14 வருடங்கள் வனத்திற்கு செல்" என்றாள் கைகேயி.
13 வருட வனவாசம் முடிந்து விட்டது.
விச்வாமித்ரரோடு வந்து, சீதையை மணம் செய்து கொண்ட போது.. ராமருக்கு வயது 12. இதை மாரீசன் ராவணனை பார்க்கும் போது சொல்கிறான்..
மாரீசன் ராவணனிடம் ராமபிரான் 12 வயது பாலகனாக இருக்கும் போதே, தன்னை அடித்து துரத்தியதை சொல்லும் போது, ராமபிரான் வயதை குறிப்பிட்டு சொல்கிறான்.
बालो द्वादश वर्षो अयम् अकृत अस्त्रः च राघवः |
कामम् तु मम यत् सैन्यम् मया सह गमिष्यति ||
- वाल्मीकि रामायण
பாலோ த்வாதச வர்ஷோ அயம்
அக்ருத அஸ்த்ர: ச ராகவ: |
காமம் து மம யத் ஸைன்யம்
மயா சஹ கமிஷ்யதி ||
- வால்மீகி ராமாயணம்
விஸ்வாமித்திரர் தசரதரிடம் ராமனை அனுப்பும் படி கேட்க, அப்பொழுது அனுப்ப மனமில்லாமல், தசரதர், "என் பிள்ளை ராமனுக்கு 12 வயது தான் ஆகிறது. அவன் யுத்தம் செய்ய தயாராக இல்லை' என்று சொல்லி பார்த்தார். அப்படிப்பட்ட பாலகன் ராமன், அஸ்திரங்களை பயன்படுத்த தெரியாதவன் சிறுவன் என்று நினைத்து, தைரியமாக ராக்ஷஸ படையுடன் யாகத்தை தடுக்க சென்றேன். என்று மாரீசன் ராமபிரானின் பலத்தை சொல்லி எச்சரித்து பார்த்தான்.
இன்னும் ஒரு வருடமே மீதம் உள்ள நிலையில், பஞ்சவடியில் மாரீசனின் உதவியை கொண்டு, ராமபிரானையும், லக்ஷ்மணரையும் அகற்றி விட்டு, தனியாக இருக்கும் சீதாதேவியிடம், போலி சாமியாராக தன்னை உருமாற்றி கொண்டு வந்தான் 10 தலை ராவணன்.
வந்திருப்பது பிராம்மணன் என்று மதித்து, ராமபிரானும், லக்ஷ்மணரும் வெளியில் சென்று இருப்பதால், கால் அலம்பி கொள்ள தீர்த்தம் கொடுத்து அமர சொன்னாள் சீதாதேவி..
பிறகு தன்னை பற்றி சொல்லும் போது, சீதாதேவி ராவணனிடம் சொன்னது...
उषित्वा द्वादश समा इक्ष्वाकुणां निवेशने।
भुञ्जाना मानुषान्भोगान्सर्वकामसमृद्धिनी।|
- वाल्मीकि रामायण
உஷித்வா த்வாதச சமா
இக்ஷ்வாகு நாம் நிர்வசனே |
புஜ்ஜானா மானுஷான் போகான்
சர்வ காம ஸம்ருத்தினீ ||
- வால்மீகி ராமாயணம்
12 (த்வாதச) வருடங்கள் நான் இக்ஷ்வாகு குடும்பத்தில் வசித்து வந்தேன். மனிதன் விரும்பும் அனைத்து விதமான சுகத்தையும் அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன்.
ततस्त्रयोदशे वर्षे राजामन्त्रयत प्रभुः।
अभिषेचयितुं रामं समेतो राजमन्त्रिभिः।।
- वाल्मीकि रामायण
தத: த்ரயோதசே வர்ஷே
ராஜ அமந்த்ரயத ப்ரபு: |
அபிஷேசயிதும் ராமம்
சமேதோ ராஜ மந்த்ரிபி: ||
- வால்மீகி ராமாயணம்
அதன் பிறகு, 13வது வருடத்தில், சக்கரவர்த்தியான அரசர், அரச மந்திரிகளை சபை கூட்டி, ராமபிரானுக்கு முடிசூட்ட ஆலோசித்தனர்.
मम भर्तामहातेजा वयसा पञ्चविंशकः।
अष्टादश हि वर्षाणि मम जन्मनि गण्यते।|
- वाल्मीकि रामायण
மம பர்தா மஹாதேஜா
வயசா பஞ்ச-விம்ஸக: |
அஷ்டாதச ஹி வர்ஷாணி
மம ஜன்மணி கன்யதே ||
- வால்மீகி ராமாயணம்
மஹா தைரியசாலியான என் கணவருக்கு அப்போது 25 வயது. நான் 18 வயது பூர்த்தி ஆகி இருந்தேன்.
No comments:
Post a Comment