இன்றைய கோவில்கள் நிலை:
* கோவில் நிர்வாகம், கோவில் நிலம், சொத்து, வருமானம், உத்சவங்கள், திருப்பணிகள் அரசு கவனிக்கிறது.
* 13000 கோவில்கள் (அதற்கு மேலும் இருக்கலாம்) தமிழ்நாட்டில் இருந்தாலும் (அதில் 108 திவ்ய தேசங்களில் 80க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும், நாயன்மார்கள் பாடிய சிவ ஸ்தலங்கள் ஆயிரம் இருந்தாலும்) இந்த 13000க்கும் மேற்பட்ட கோவில்களில் அதிகபட்சம் இவர்களுக்கு மீனாட்சி கோவில், திருவரங்கம், பழனி என்று 10 கோவில்கள் மட்டுமே பெரும் வருமானம் கொடுக்கிறது.
* 10 கோவில்களில் வரும் வருமானத்தை, அரசு பகிர்ந்து 13000 கோவில்களில் விளக்கு ஏற்றும் அளவுக்காவது உதவி செய்கிறது.
அது போக, இந்த 10 கோவில்களின் வருமானத்தில் வரும் மீதி பணத்தை கோவிலில் வேலை பார்க்கும் அதிகாரிகள் முதல் மூஞ்சூர் வரை சம்பளமாக பெறுகின்றனர்..
காலை 4மணிக்கு குளித்து பூஜை ஆரம்பித்து இரவு வரை பூஜை செய்து, கேலி செய்யும் மக்களை, பொறாமை படும் மக்களிடம் கோபப்படாமல் விபூதி, அர்ச்சனை செய்யும் அர்ச்சகனுக்கு 5000 ரூபாய் சம்பளம்.
"தட்டில் கிடைக்கும் காசை வாங்கி கொள்" என்று கிண்டல்..
12 வருடம் வேதம் படித்து, "கோவிலே கதி" என்று இருக்கும் அர்ச்சகருக்கு மதிப்பு இல்லை.
கோவிலை எப்போது மூட வேண்டும்?
யார் வந்தால் தனியாக மீண்டும் தீபாதாரனை காட்ட வேண்டும்?
என்று அரசு அலுவல் அதிகாரி தான் சொல்வார். அதை அர்ச்சகர் கேட்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு உள்ளே இருக்கும் மூலவர் கற்சிலை.. தெய்வமில்லை.
* இது தவிர, 10 கோவிலில் வரும் மீதி வருமானம் அரசாங்கமும் பொது செலவுக்கு எடுத்து கொள்ளும்.
இன்றைய நிலை:
* வேதம் படித்து அர்ச்சர் ஆகி 5000 ரூபாய் சம்பளம் வாங்கி வாழ முடியாததால், இவர்கள் சந்ததி குறைந்து விட்டனர். ப்ராம்மணர்களை விரட்ட, அவர்கள் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
வேலை வாய்ப்பு போட்டிகள், பிராம்மண வெறுப்பு உண்டாகி விட்டது.
* 10 கோவிலால் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கவனிக்கும் அரசு, மிச்சம் இருக்கும் 13000 கோவிலை குப்பை மேடாக ஆக்கி விட்டது...
காஞ்சியில் மட்டும் 18 திவ்ய தேசங்கள் உண்டு.
ஆனால் இவர்கள் கண்களுக்கு காஞ்சி வரதர் கோவில் மட்டும் தான் வருமானம் தரும் என்று ஆக்கி விட்டனர்.
மற்ற கோவில்களை சென்று பார்த்தால், கோபுரத்தை கட்டிய அரசனுக்கு பிறகு இன்று வரை யாரும் அதை சரி செய்ய முயன்றதாக தெரியவில்லை.
இது போன்ற பல கோவில்களை காப்பது ஒரு கிழ அர்ச்சகர்.
அவர் பிள்ளையும் அர்ச்சகர் ஆக வேண்டாம் என்று படித்து அமெரிக்காவில் செட்டில்.
கோவிலை அழிக்க அருமையாக காய் நகர்த்தி, 13000 வருமானம் தராத கோவில்களில், வேதம் அறிந்த சந்ததிகள் இல்லாமல் செய்து விட்டனர்...
மறு பக்கம்,
ப்ராம்மணனும் வேலைக்கு வருகிறான் என்று பொறாமை வேறு...
* அரசாங்க அதிகாரிகள் கோவிலில் பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் தினமும் பட்சணம், காபி சாப்பிட்டு வாழ்கிறார்கள். நிம்மதியான வாழ்க்கை...
* தேவைப்பட்டால், 13000 கோவில்களில் ஒரு கோவிலை இடித்து வேறு ஏதாவது அரசாங்க கட்டிடம் கட்டவும் இவர்களுக்கு வழி உண்டு, காரணமும் உருவாக்குவார்கள்..
* நிர்வாகம் தான் முக்கியம் என்பதால், கோவிலை நிர்வகிக்க கமலஹாசன் போன்ற குணம் கொண்ட இந்துவாக உள்ள நாதீகனும் பதவிக்கு வரலாம், கிறிஸ்தவனும் பதவிக்கு வரலாம்.
இவர்கள் என்ன நாசமும் செய்யலாம்.. இல்லை ஒன்றுமே செய்யாமல் கோவிலை தானாக அழியவும் செய்யலாம்...
கோவிலையே வியாபார ஸ்தலமாக்கி, கோயிலிலேயே கடைகள் அமைக்க இடம் கொடுத்து,
கோவிலில் நாயன்மார் பாடிய பதிகங்கள் பாடிய ஓதுவார்களை அழித்து விட்டனர்..
அவர்கள் சந்ததியும் இன்று வேலைக்கு சென்று விட்டனர்..
திருவாசகம் என்ற தமிழை வளர்க்க ஆள் இல்லை. இந்த தமிழை புரிந்து கொள்ளாத தமிழர்கள் ஆக்கி விட்டனர்.
எப்படி பார்த்தாலும், கோவிலில் வருமானம் பார்க்கலாம் என்று தான் பார்க்கிறார்கள்..
மாற்றம் என்ன?
'சிலர் அரசு கோவில் நிர்வாகத்தை விட்டு செல்ல வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார்கள்..
இது சரி போல இருந்தாலும், பிரச்சனை உருவாக்கவும் இது செய்யும்..
ஆதீனங்கள், தீட்சிதர்கள் கட்டுக்குள் இருக்கும் சில கோவில்களை பார்த்தால், கோவிலுக்கு வரும் உண்மையான பக்தனுக்கு வருத்தம் தான் வரும்..
அத்தனை பெருமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் எப்படி உள்ளது?
உள்ளே இருக்கும் சிவபெருமான், அம்பாள் தவிர, பார்க்கும் இடமெல்லாம் எண்ணெய் படிந்த அழுக்கு, கும்பாபிஷேகம் செய்ய சோம்பேறித்தனம்.. கோவில் கோபுரங்களில் செடிகள்...
அது போல, சிதம்பரம் கோவிலுக்கு சென்றால், அர்ச்சனை செய்கிறோம் என்று பிடிவாதமாகவாவது கேட்டு காசு வாங்கி கொள்கிறார்கள் தீட்சிதர்கள்..
அவர்கள் இதை நம்பி தான் வாழ்க்கை என்பதாலோ என்னவோ, வரும் பக்தர்களில் காசு கொடுப்பவர்களுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள்..
இப்படி பார்க்கும் போது, ஒட்டு மொத்தமாக அரசு விலகுவது கூடவே கூடாது…
ஒரு மேற்பார்வை அவசியம்..
இதோ என்னுடைய பிளான்:
1. கோவிலை விட, கோவிலில் எந்த தெய்வம்? என்பது மிக முக்கியம்...
நிர்வாகம் செய்பவர் கமலஹாசன் போன்ற பல வித்தைகள் செய்ய தெரிந்தவர் என்றாலும், அந்த கோவில் தெய்வத்திடம் பக்தி உள்ளவனா? என்பது மிக மிக முக்கியம்..
ராமானுஜர் அடியார்கள் இருக்கிறார்கள். பக்தி உள்ளவர்கள் தான்.
திறன் அடிப்படையில் ஒரு நாமம் போட்டு கொள்ளும் விஷ்ணு பக்தனை, 'திருவண்ணாமலை கோவிலை நிர்வாகம் செய்' என்று செய்தால், அதை விட வேறு முட்டாள் தனம் இருக்கவே முடியாது...
ஆக,
சில நடைமுறை சிக்கலை உணர்ந்து இப்படி செய்யலாம்..
* 13000 கோவில்கள் தமிழகத்தில் இருக்கிறது என்றால், மூலவராக இருக்கும் ஸ்வாமியை பொறுத்து காஞ்சி மடம், ஜீயர் மடம், ஆதீனம், என்று தெய்வமே கதி என்று இருக்கும் இவர்களிடம் நிர்வாக பொறுப்பை கொடுக்கலாம்.
முழுவதும் கொடுக்காமல், சுழற்சி முறையில், உடுப்பி கோவிலில் உள்ளது போல, 4 வருடத்திற்கு கோவில் பொறுப்புகளை மாற்ற வேண்டும்...
உதாரணத்திற்கு, காஞ்சியில் உள்ள 18 திவ்ய தேச கோவில்களை ஒரு ஜீயர் (வடகலை ஜீயரா? தென்கலை ஜீயரா? என்பது அந்த கோவில் அர்ச்சகரை கேட்டாலேயே தெரிந்து கொள்ளலாம்) மடம் நிர்வாகம் செய்ய வேண்டும். உதாரணமாக, வடகலை ஜீயர், தேசிகர் வழி வந்த ஜீயர் மடம் நிர்வகிக்க வேண்டும்.
அதுபோல,
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 15 வடகலை சம்பிரதாய கோவிலை இன்னொரு வடகலை ஜீயர் நிர்வகிக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுக்கு பிறகு, கோவில் நிர்வாகம் சுழற்சி செய்யப்பட்டு, ஒரு புத்துணர்ச்சி உண்டாக்க வேண்டும்..
இவர்கள் கோவில் நிர்வாகம், உத்ஸவம், வருமானம், பணி அமர்த்தல் பார்த்து கொள்ள வேண்டும்.
பாகுபாடு, பொறாமை காட்ட விடாமல் இருக்க, அரசு மேற்பார்வை வேண்டும்.
அதற்கு ஒரு சிலர் மேற்பார்வைக்கு அரசு பணி அமர்த்தலாம்..
இப்படி சிவன் கோவிலுக்கு சைவ மடங்கள் என்று கொடுத்தால், அவர்கள் நிர்வாகம் செய்வார்கள்..
வரதர் கோவிலுக்கு வரும் வருமானத்தை கொண்டு, தன்னிடம் இருக்கும் மற்ற 15 கோவில்களை பக்தி இருப்பதால், உண்மையாக செலவு செய்ய ஆரம்பிப்பார்கள்.
அனைத்து கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடக்க ஆரம்பிக்கும்..
கோவில் உத்சவங்கள் நடக்க ஆரம்பிக்கும்..
"கோவில் நடத்த அர்ச்சர் தேவை" என்ற நிலையில்,
"மற்றவர் வேலையை பிடுங்குகிறான் பிராம்மணன்" என்ற நிலை மாறி, பிராமணர்கள் வேதம் படித்து கோவில் அர்ச்சகன் ஆக முயல ஆரம்பிப்பார்கள்..
அரசுக்கு மற்ற ஜாதிகார்களுக்கு அதிகம் வேலை கொடுக்க முடியும்..
கோவில் உத்சவங்கள் நடக்க ஆரம்பிக்க, கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் உள்ள கடைகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்..
சுய தொழில் பெருகும்..
10 கோவில் வருமானமே இவ்வளவு பேருக்கு சோறு போடும் நிலையில், இந்த மாற்றத்தால் 13000 கோவிலும் பழனி, திருப்பதி போல பிரகாசம் அடையும்..
13000 கோவில்களும் பெரும் வருவாய் தரும்..
காஞ்சியில் உள்ள பாண்டவ தூதன் பெருமாளுக்கு பெரிய ரதத்தில் தேர் விட்டு கொண்டாடினால்,
காஞ்சி மடம் காமாக்ஷி கோவிலில் அதை விட பெரிய தேர் அமைத்து சிவ பக்தர்களை மகிழ்விப்பார்கள்..
இது ஆரோக்கியமான போட்டியாகவும் இருக்கும்.
'பொறாமை ஏற்படாமல் பார்த்து கொள்வது' நிர்வாகத்தை மேற்பார்வை பார்க்கும் அரசு அதிகாரிகளின் பொறுப்பு.
இப்படி சரியாக கோவில் நிர்வாகத்தை கட்டு அமைக்கும் போது,
பக்தி வளரும்..
சிவ பக்தன் லட்சம் லட்சமாக சிதிலமடைந்த தன் இஷ்டப்பட்ட கோவிலுக்கு கொடுக்க முன் வருவான்..
கோவில்கள் மீண்டும் பிரகாசிக்க, சுய தொழில் பெறுக ஆரம்பிக்கும்.
108 திவ்ய தேசத்தில் ஒரே ஒரு கோவில் திருப்பதி..
அந்த கோவில் இருப்பதோ மலை உச்சியில்..
மலை உச்சுக்கு சென்று கோடி கோடியாக பணம் கொட்டுவதற்கு காரணம் கோவிலை பக்தர்கள் நிர்வாகம் செய்கிறார்கள்..
மேற்பார்வை அரசு செய்கிறது...
அது போல நாமும் இந்த கட்டமைப்பை செய்து விட்டால்,
15 கோவிலை நிர்வாகம் செய்யும் ஒரு மடத்திடம், வருடா வருடம் 15% வருமானத்தை அரசு தாராளமாக கேட்டு கொள்ளலாம்.
மீதி பணத்தை இவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள்?
என்ற மேற்பார்வை ஆலோசனை மட்டும் வழங்கலாம்..
85% வருமானத்தை கொண்டு இவர்கள் கையாள முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்..
பணி அமர்த்துவது, மற்ற கோவிலுக்கு செலவு செய்வது, ஊதியம் அதிகமாக கொடுப்பது என்ற எதிலும் இவர்கள் தலையிட கூடாது..
இந்த மாற்றம், தமிழ்நாட்டை ஆன்மீக பூமியாக ஆக்கி விடும்.
ஒரு பக்கம் திருவாசகம் ஓதும் ஒலி கேட்கும்.
ஒரு பக்கம் பாசுரங்கள் ஓதும் ஒலி கேட்கும்.
கோவிலை சுற்றி சுய தொழில் பெருகும்.
இந்திய மக்கள்,
கோவில் தேசமான தமிழகத்தை பார்க்க 4 கோவிலை அல்ல, 13000 கோவிலையும் பார்க்க வருவார்கள்...
பெரும் வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும் போது, வேலை கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கு குறையும்..
அவரவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பிப்பார்கள்..
இதை விட்டு விட்டு, "கோவில் நிர்வாகம் அரசு எடுக்கவே கூடாது." என்று சொன்னால் வைணவ கோவிலுக்கு மற்றவர்கள் நுழைய முடியாமல் கூட போகலாம்.
சைவ வைணவ சண்டை கூட வரலாம்.
மேற்பார்வை செய்ய அரசு நிர்வாகம் தேவை.
Election commission போல, அரசு அதிகாரியாக இருக்கும் சிலரை ஆண்டு வருமானம் என்ன? என்று கவனித்து,
அதில் 15% வருமானத்தை அரசு கஜானாவில் போட தற்காலிக அமைப்பும் செய்யலாம்..
இதனால், நிரந்தர மேற்பார்வை கூட தேவை இல்லை அரசுக்கு..
இது நடைமுறைக்கு கொண்டு வந்தால்,
கோவில் நிறைந்த தமிழகம் பெரும் கோடிகளை தானே சம்பாதிக்கும்..
"டாஸ்மாக் வருமானம் தேவையே இல்லை" அரசுக்கு என்று தோன்றி விடும்.
பக்தி உள்ளவர்கள் கோவிலை பார்க்கும் போது, தானாக இடிந்து போன கோவில்கள் நிமிரும்.
சிவன் கோவில் இடிந்து கிடப்பதை பார்க்கும் மடாதிபதிகள், அதை சரி செய்ய சிவ பக்தர்களை கொண்டே திருப்பணி செய்து விடுவார்கள்..
பூஜைகள் நடக்க, திருவிழாக்களை நடக்க ஆரம்பிக்க, தொழில் பெருகி, வருமானம் கொட்ட ஆரம்பிக்கும்..
அரசுக்கு உட்கார்ந்தபடி கோடி கோடியாக வருமானம் கிடைக்கும்..
பக்தியும் வளரும்..
உங்கள் கருத்து என்ன?...
No comments:
Post a Comment