ஹிந்துக்களுடன் மத நல்லிணக்கம் - மிக முக்கியம்..
அரேபிய குதிரையில் உருது பேசி கொண்டு வந்த இஸ்லாமியர்கள், மொழி புரிந்து கொள்ள முடியாததால், 'தான் சொல்லும் மத கொள்கை ஹிந்துவிடம் இல்லை' என்று நினைத்துக்கொண்டு 947ல் ஆரம்பித்து 1857 வரை பெரும் சண்டையிட்டான்.
இன்று மொழி தடை இல்லை... இருவரும் என்ன சொல்லிக்கொள்கிறார்கள்?.. கொஞ்சம் கவனிப்போம்.
இஸ்லாமின் மிக முக்கிய நம்பிக்கையாக இருக்கும் சொற்கள்...
அல்லா கு (பரம்பொருளே) அக்பர் (மிக பெரியவர்)
லா இலாஹி இல் அல்லா (ஒரே பரம்பொருள் தான் இருக்கிறார்)
ஹிந்துக்களுக்கு உணரும் வேத வாக்கியங்கள்..
ஸ ஏக புருஷ (ஒரே பரம்பொருள் தான் இருக்கிறார்)
பர ப்ரம்மம் (ப்ரம்மம் 'பரம்பொருள்' அனைத்துக்கும் அப்பாற்பட்டவர் (பர))
பூர்வ மேவா இஹா சமிதி தத் புருஷஸ்ய புருஷத்வம் (எல்லா படைப்புக்கும் முன், யாராலும் படைக்கப்படாத அந்த புருஷன் இருந்து கொண்டே இருக்கிறார்)
ஹ்ரீஸ்சம் தே லக்ஷ்மீஸ்ச பத்ன்யௌ (அந்த புருஷன் லக்ஷ்மியை பத்னியாக (nature) கொண்டு இருக்கிறார் - புருஷ சூக்தம்)
இது வரை வேதம் சொல்வதையும், குர்ரான் சொல்வதையும் பார்க்கும் போது,
'இஸ்லாமும், ஹிந்துக்களின் அத்வைதமும் வித்யாசம் இல்லை' என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மத ரீதியில் ஹிந்துக்கள் இஸ்லாமை எதிர்க்காமல் இருப்பதற்கு காரணம் இதுவே...
மேலும், வேதம் பரம்பொருளை பற்றி சொல்லும் போது, தெய்வம் அவதாரம் செய்யும் சக்தி கொண்டது என்பதோடு நிற்காமல், நீயும், நானும் கூட உடலை நீக்கி ஆத்மா என்று பார்த்தால், அதுவும் அந்த பரம்பொருள் தான் என்கிறது.
இது பரம்பொருளை பற்றிய மேற்படிப்பு.
உன்னிலும் தெய்வம் இருக்கிறார்.. என்னிலும் தெய்வம் இருக்கிறார்
என்று சொல்லும் வேதம், ஹிம்சை செய்யாதே என்று நமக்கு சொல்வதை அறியும் போது தான்… ஹிந்து தர்மத்தின் பெருமை நமக்கு தெரியும்...
புருஷயம் புருஷ மீக்ஷதே (அந்த புருஷன் அனைவரது நெஞ்சிலும் இருக்கிறார்)
- இந்த வேத வாக்கியத்தை சத்தியம் செய்யவே, அந்த பரம்பொருள் (நாராயணன்), சிவனாகவும், விஷ்ணுவாகவும், உலகில் ராமனாகவும், கிருஷ்ணனாகவும், நரசிம்மராகவும், வாமனனாகவும் அவதரித்தார்.
அவர் தன் சக்தியால் கல்லிலும் பிரவேசிக்கிறார். தண்ணீரே நாராயண தீர்த்தம் என்று கூட நீரில் பிரவேசிக்கிறார்.
ஏகம் சத்; விப்ரா: பஹுதா வதந்தி (அந்த ஒரே புருஷனே/பரம்பொருளே பல வித ரூபத்திலும் பெயரிலும் இருக்கிறார்)
- இந்த வேத வாக்கியத்தை படிக்கும் போதே, ஜீவஹிம்சை செய்யாதே என்ற ஞானம் நமக்கு போதிக்கப்படுகிறது.
உடல் என்று பார்த்தால், அவன் வேறு, நீ வேறு என்று தோன்றலாம்.
ஆத்மா (உயிர்) என்று நீ பார்க்க ஆரம்பித்தால், இருவருமே பரம்பொருள் தான் என்று தெரிந்து கொள்!
என்கிறது ஹிந்து தர்மம்.
மத சண்டையை ஹிந்துக்கள் விரும்புவதில்லை..
ஆனால்,
அத்வைத தத்துவம் தாண்டி பேசும் ஹிந்து தர்மத்தை ஒப்புக்கொள்ள முடியாதவர்களுக்கு ஹிந்துக்கள் வழிபடும் முறை பிடிப்பதில்லை.
பிடிக்காத பட்சத்தில், ஆதி சங்கரர் போன்றார் சொல்லும் அத்வைதம் போல தான் ஒரே பரம்பொருள் தத்துவத்தை இஸ்லாமும் சொல்கிறது
என்று நினைத்து, நட்புடன் இருக்க வேண்டும்.
முருகனை கும்பிட்டாலும், ஹிந்துக்கள் "இறைவன் ஒருவனே! அவரை நான் முருகனாக பார்க்கிறேன்"! என்கிறான்.
இதில் என்ன தவறு இருக்க முடியும்?
ராமனை கும்பிட்டாலும், ஹிந்துக்கள் "இறைவன் ஒருவனே! அவரை நான் ராமனாக பார்க்கிறேன்"! என்கிறான்.
இதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஒரே மனிதன் தான்..
"இது என் அப்பா" என்கிறான், பிள்ளை.
"இது என் கணவர்" என்கிறாள் மனைவி.
நீ எப்படி மனிதனை அப்பா என்று உருவகம் செய்யலாம்? என்று கேட்டால்?
நீ எப்படி மனிதனை கணவர் என்று உருவகம் செய்யலாம்? என்று கேட்டால்?
ஹிந்து தர்மம் கொஞ்சம் கடவுள் விஷயத்தில் PhD செய்த தர்மம்.
புரிந்து கொள்ள முடியாவிட்டால், பரவாயில்லை.. இருக்கவே இருக்கிறது, அத்வைதம்..
ஸ ஏக புருஷ (ஒரே பரம்பொருள் தான் இருக்கிறார்) - அத்வைதம் சொல்வதை அனைவரும் ஏற்று தானே ஆக வேண்டும்..
இதை தானே மற்ற மதமும் சொல்கிறது.
சிந்திப்போம்.. மத ரீதியான ஹிந்து விரோதத்தை விலக்குவோம்.
No comments:
Post a Comment