எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு கூட கேன்சர் வருகிறதே! ஏன்?
சிலர் 80 வயதிலும் புகைத்து கொண்டு, குடித்து கொண்டு உயிரோடு இருக்கிறார்கள். எப்படி?
மனித ரத்தத்தை வெளியோட்டமாக பார்த்தால் கூட சிவப்பாக தான் தெரியும். ரத்தத்தை வெளியோட்டமாக பார்த்து விட்டு 'மனிதன் அனைவரும் ஒன்று தான்' என்று கூட சொல்ல தோன்றும்.
ஆனால்,
ரத்தத்தில் 'பல வகை உண்டு' என்பதே உண்மை.
ஒரு ரத்தம் அடுத்த ரத்தத்தோடு சேராது. மீறி செலுத்தினால் 'உயிருக்கே ஆபத்தாகி கூட முடிந்து விடும்' என்பதும் உண்மை.
ரத்தத்திலும் யாவருக்கும் பொதுவான ரத்த வகையும் இருக்கிறது.
அது போல,
மனிதர்களில் யாவருக்கும் பொதுவான மகான்கள் இருக்கிறார்கள்.
மனிதர்கள் உடல் ரீதியாக பல விதத்தில் வேறுபடுகிறார்கள்.
ஒவ்வொருவரின் 'எதிர்ப்பு சக்தியும்' வேறுபாடு கொண்டது.
ஒவ்வொருவர் 'எண்ணமும், லட்சியமும்' வேறுபட்டு இருக்கிறது.
ஒவ்வொருவர் 'உணவு பழக்கமும்' வேறுபட்டு இருக்கிறது.
ஒரு சில வருடங்கள் சிகரெட்டை புகைத்தாலே, சிலருக்கு கேன்சர் வருகிறது.
அதே சமயம், 80 வயது வரை ஊதி தள்ளினாலும், சாகாமல் சிலர் இருக்கிறார்கள்.
அவரவர் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே நோய்கள் தாக்குகிறது.
ஆனால், எதிர்ப்பு சக்தி நமக்கு எத்தனை உள்ளது? என்பது விடை தெரியாத கேள்வி...
அதனாலேயே நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தினமும் மூன்று வேளையும் நாம் வாயில் போட்டு கொள்ளும் உணவையெல்லாம், இந்த வயிறு அரைத்து செமிக்க வேண்டியிருக்கிறது.
இந்த வேலையை ஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல..100 வயது வரை இந்த வயிறு செய்ய வேண்டும்..
அப்படியென்றால்,
நாம் எத்தனை கவனமாக இருக்க வேண்டும்? என்று எண்ணி பார்க்க வேண்டும்.
நம் ஹிந்து சாஸ்திரம், 'இரண்டு வேளை சாப்பிட்டாலே அதிகம்' என்று சொல்கிறது...
ஒரு வேளை சாப்பிடுபவன் - யோகி.
இரண்டு வேளை சாப்பிடுபவன் - போகி.
மூன்று வேளை சாப்பிடுபவன் - ரோகி (நோயாளி)
என்று சொல்கிறது..
ஹிந்து தர்மத்தில், 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ, 'மாதத்தில் 2 நாள் (ஏகாதசி அன்று) இந்த வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்' என்று விதிக்கப்படுகிறது.
நம் பாட்டனார்கள் வரை, மாதத்தில் 2 நாளாவது விரதம் இருந்தனர் என்று பார்க்கிறோம்.
'அதிகபட்சம் மூன்று வேளை தான் சாப்பிட வேண்டும்' என்ற முறையை சொல்லியும், இன்று நொறுக்கு தீனியும் சேர்ந்து கொண்டு வயிற்றுக்கு ஓய்வே கிடையாது என்ற நிலையாகிவிட்டது.
இப்படி வாழ்பவர்களுக்கு, 60 வயதிலேயே 100 வயதுக்கான வேலையை செய்து வயிறு ஓய்ந்து விடுகிறது.. வயிற்று உபாதைகள் வந்து விடுகிறது.
பெரும்பாலான நோய்கள் வயிற்றிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.
உடல் உழைப்பும் இன்று பெரும்பாலானவர்களுக்கு கிடையாது.
ப்ராணாயாமம் செய்து இதயத்தை, நுரையீரலை வலுப்படுத்தும் முறையும் கிடையாது.
நம் எதிர்ப்பு சக்தி என்ன? என்பது நமக்கு தெரியாது.
மாதத்தில் 2 நாள் வயிற்றுக்கு ஓய்வும் கொடுப்பதும் கிடையாது.
மூன்று வேளைக்கும் மேலே சாப்பிட்டு கொண்டு, மாதத்தில் 2 நாள் ஓய்வும் கொடுக்காமல் இருப்பதால்,
எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு கூட கேன்சர் வந்து விடுகிறது.
அகால மரணம் ஏற்பட்டு விடுகிறது.
இதில் நாம் அனைவருமே ஏறத்தாழ சிக்கி விட்டோம் என்பதே உண்மை.
நம் எதிர்ப்பு சக்தி என்ன? என்பது நமக்கு தெரியாத போது,
முடிந்தவரை மூன்று வேளையோடு வாயை கட்டி போட வேண்டும்.
மாதத்தில் 2 நாள் விரதம் இருந்து,
மேலும் உடலை கெடுக்கும் சிகரெட், குடியை தவிர்த்து,
கொஞ்சம் பிராணாயாமம் செய்து, குனிஞ்சு நிமிர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து,
கொடுக்கப்பட்ட ஆயுளை 90%வது ஆரோக்கியமாக வைத்து, வாழ முயற்சிக்கலாம்.
ப்ராம்மணர்கள் ஒழுங்காக சந்தியா வந்தனம் செய்தால், அதிலேயே பல பயிற்சிகள் இருப்பதை அறியலாம்...
அபிவாதயே சொல்லி குனியும் போதும்,
நான்கு திசைகளில் தேவதைகளை சுற்றி சுற்றி நமஸ்கரிக்கும் போதும்,
சூரியனை உச்சி வேளையில் தலை தூக்கி முதுகு தண்டை நேராக வைத்து, சூரியனை பார்த்து நமஸ்கரிக்கும் போதும், மந்திரத்தோடு, உடற்பயிற்சியும் இருப்பதை அறியலாம்...
மதியம் சூரியனை பார்த்து சந்தியாவந்தனம் செய்யும் போது, vitamin D குறை வருவதே இல்லை என்ற உண்மையை அறியலாம்.
மதியம் "ஆப: புனந்து ப்ருத்வீம்.." என்று சொல்கிறோம்.
உணவை பற்றி சொல்லும் இந்த மந்திரம் காலையிலும், மாலையிலும் கிடையாது...
இந்த மந்திரத்தின் அர்த்தம் தெரிந்தால், 'ஒரு நாளுக்கு ஒரு வேளை சாப்பிட்டால் போதும்' என்று சொல்லும் ரகசியம் புரியும்.
மதியம் சூரியனை பார்த்து சொல்லும் மந்திரத்தின் அர்த்தம் புரிந்தால், நாமும், நம்மை சூழ்ந்துள்ள அனைவரும் 100 வயது ஆரோக்கியமாக, உற்றார் உறவினரோடு, பேசிக்கொண்டு, கேட்டுக்கொண்டு, மரியாதையோடு, புகழோடு வாழ ப்ரார்த்திக்கிறோம் என்ற உண்மை புரியும்.
சரியான உணவு பழக்கமும்,
ஏகாதசி விரதமும்,
ப்ராணாயாமமும்,
உடற்பயிற்சியும் இருந்தால்,
நோய் அண்டாமல் வாழும் நாட்கள் வரை வாழலாம்.
இதை முடிந்தவரை முயற்சிப்போம்.
குருநாதர் துணை.
No comments:
Post a Comment