குடும்ப சுமை, வேலை பலு, எதிர்ப்பார்ப்பு, எதிர்கால பயம், பண தேவை, போட்டி, பொறாமை,
ஆகியவை இன்றைய மக்களை பாகுபாடு பார்க்காமல் துரத்துகிறது.
கிடைத்ததை வைத்து நிம்மதியாக வாழ முடியாது,
படிக்க வைக்க முடியாது,
கல்யாணம் ஆகாது
என்ற சூழ்நிலையில் இன்றைய மக்கள் இருக்கிறோம்.
பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையே போர்க்களமாகிவிட்டது.
'நிம்மதி' என்பது ஒருவர் மனதிலும் காணப்படவில்லை.
தெய்வத்துக்கு சம்மதமாக, இன்று ஒருவரும் வாழ முடிவதில்லை.
தெய்வம் நம்மை கண்டு திருப்தி அடையும் படியாகவும் வாழ முடியவில்லை.
தெய்வத்துக்கு நேரம் ஒதுக்க கூட முடிவதில்லை.
கோவிலில் கைங்கர்யம் செய்ய யாருக்கும் நேரமில்லை.
பல கோவில்களில் உண்மையான பக்தர்கள் காணப்படவில்லை.
கோவிலை திருடர்களும், பக்தி இல்லாதவர்களும், நாதீகர்களும் நடத்துகிறார்கள்.
கோவில் பட்டர்கள் இவர்களிடம் சிக்கிக்கொண்டு, பெருமாளுக்கு முடிந்தவரை பூஜைகளை செய்து கொண்டு, நம்மை போன்று லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்று கோவிலை விடாமல், தட்டு காசை வைத்து கொண்டு, முடிந்தவரை காப்பாற்றி வருகின்றனர்.
நம் தெருவில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்ற கூட நமக்கு நேரமில்லை.
கோவிலுக்கு செல்லவும் நேரமில்லை.
கோவில் நகரத்தில் வாழவும் முடியாத சூழ்நிலை.
இதையும் தாண்டி,
பாரத நாட்டை விட்டே பணத்துக்காக சென்று, பரதேசி போல வெளிநாட்டு கலாச்சாரத்தோடு வாழும் நிலை.
இப்படி உடல் பலம் இருக்கும் வரை,
பணத்துக்காகவும், பெருமைக்காகவும்,
பதவிக்காவும் அலையும் ஜனங்கள் கோடிக்கணக்கில் இன்று உள்ளனர்.
மோக்ஷம் அடைய தெய்வத்தின் கருணை வேண்டும்.
அது இல்லாததால், மீண்டும் மீண்டும் அவர்கள் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பிறக்கதான் வேண்டும்.
ஒவ்வொரு ஜென்மத்தில், மீண்டும் பணத்துக்காகவும், பெருமைக்காகவும்,
பதவிக்காவும் அலையும் போராட்டம் நமக்கு தொடரத்தான் போகிறது.
இப்படி 'வழி தவறி போனவர்களும் தெய்வத்தின் கருணையை பெற வேண்டும், மோக்ஷம் அடைய வேண்டும்' என்று ஸ்ரீ ராமானுஜர் ஆடைப்பட்டார்.
அதற்கு வழியும் நமக்கு சொன்னார். தெரிந்து கொள்வோம்...
'தெய்வத்தின் கருணையை சம்பாதிக்க குறைந்த பட்சம், அபிமான பாத்திரமாகவாவது ஆக வேண்டும்'
என்று சொல்கிறார் ராமானுஜர்.
அதாவது, நாம் எதற்கும் லாயக்கு இல்லாமல் போய் விட்டாலும், அந்நிய கலாச்சாரத்தோடு இருந்தாலும், பாரத நாட்டை விட்டு வேறு எங்கோ வாழ்ந்தாலும், ஸ்ரீ ரங்கம், திருப்பதி போன்ற திவ்ய தேசத்தில், 'பெருமாளையே நினைத்து கொண்டு இருக்கும் ஒரு அடியார் (மகாத்மா) மனதில், ஒரு ஓரத்திலாவது இடம் பெற்று விட வேண்டும்'
என்கிறார் ராமானுஜர்.
'அடியார்கள் மனதில் ஒரு ஓரத்திலாவது, நம்மை பற்றியும் ஒரு நல்ல அபிமானம் பெற்று விட வேண்டும்'
என்று சொல்கிறார் ராமானுஜர்.
அப்படி நாம் அடியார்களின் அபிமானத்துக்கு பாத்திரமாகிவிட்டால்
அந்த மகாத்மா
'ஐயோ! இவன் நல்ல பிள்ளையாயிற்றே! இவன் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல், யாருக்கோ, எங்கோ வாழ்கிறானே!
குடும்ப சுமையில் தவிக்கிறானே! இவனுக்கு ஒரு நல்ல வழி அமையட்டுமே !"
என்று நம்மை பற்றியும் ஒரு வேளை நினைத்து விட்டால், அந்த அடியாரின் மனக்குறையை தீர்க்க, பெருமாள் நமக்கும் கருணை செய்து விடுவார்.
அந்த அடியார்/பக்தன்/மகாத்மா (குரு) ஆசைபட்டதற்காக, வழி தவறி போன நம் வாழ்க்கையை மாற்றி காட்டுவார்.
தன் பக்தன் ஆசைபட்டதற்காக,
- நாம் இருக்கும் இடத்தையே வைகுண்டம் ஆக்குவார்.
- நம் மனதிலும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்வார்.
- தன்னை பற்றி நினைக்க செய்வார்.
- வரும் ஆபத்துக்கள் தானாக விலகுவதை உணர செய்வார்.
- தான் இருப்பதை உணர செய்வார்.
- கடைசியில் தன் அடியார் குழுவில் சேர்த்து கொண்டு,
வைகுண்டம் வரை அழைத்து சென்று விடுவார்.
இப்படி, 'வழி தவறி போனவர்கள் அடியார்களின் அபிமானத்துக்காவது பாத்திரமாகி விட வேண்டும்'
என்று சுலபமான வழியை காட்டுகிறார் ஸ்ரீ ராமானுஜர்.
குருநாதர் துணை...
No comments:
Post a Comment