'சனி பகவான்' தண்டனையில் இருந்து தப்பிக்க...
'ராகு கேது' தண்டனையில் இருந்து தப்பிக்க...
வழி என்ன?
கோவிலுக்கு போய் விளக்கு ஏற்றுவது இருக்கட்டும்..
ஜாதகம் பார்ப்பது ஒரு புறம் இருக்கட்டும்....
3 வேளை இவர்களுக்கு 'உங்கள் கைகளால் கொஞ்சம் சொட்டு தீர்த்தமாவது' கொடுங்க்ள்.அவர்கள் உங்கள் கையால் வாங்கியதாலேயே திருப்தி (தர்ப்பணம்) அடைந்து விடுவார்கள்.
உணர்ந்து கொடுங்கள்.. அப்புறம் செவ்வாய் தோஷமாவது.. சனியாவது... நவ கிரகமும் உங்களை கண்டு திருப்தி கொண்டு இருக்கும்..
(இதை யார் வேண்டும் கொடுக்கலாமே... )
சரி.. எப்படி தீர்த்தம் கொடுப்பது?...
என்ன சொல்லி கொடுக்க வேண்டும்?
எப்படி நவ கிரகமும் நமக்கு பாதகம் செய்யாமல் திருப்தி கொள்ளும்?..
இதோ..
கீழே உள்ள மந்திரத்தை சொல்லி, 9 கிரஹத்துக்கும் உங்கள் கையால் காலை, மதியம், மாலை கொஞ்சம் தீர்த்தம் கொடுங்கள்..அது போதும்..
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?
அட.. சந்தியா வந்தனத்தில் இது இருக்கா. ?
இது தெரியாமலா.. ஜோஷியனை பார்த்து செவ்வாய் தோஷம் பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன்.
அவமானம்...
நவ க்ரஹங்களுக்கு, மூன்று வேளையும் கொஞ்சம் தீர்த்தமாவது கொடுத்து திருப்தி செய்:
1. ஆதித்யம் தர்ப்பயாமி ! (சூரிய தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
2. ஸோமம் தர்ப்பயாமி ! (சந்திர தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
3. அங்காரகம் தர்ப்பயாமி ! (செவ்வாய் தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
4. புதம் தர்ப்பயாமி ! (புதன் தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
5. ப்ருஹஸ்பதிம் தர்ப்பயாமி ! (குரு தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
6. சுக்ரம் தர்ப்பயாமி ! (சுக்கிர தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
7. சனைச்சரம் தர்ப்பயாமி ! (சனி தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
8. ராஹூம் தர்ப்பயாமி ! (ராகு தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
9. கேதும் தர்ப்பயாமி ! (கேது தேவனை திருப்தி செய்விக்கிறேன்)
பிறகு, உன்னை படைத்த ஈஸ்வரனுக்கு மூன்று வேளையும் கொஞ்சம் தீர்த்தமாவது கொடுத்து திருப்தி செய்:
1. கேசவம் தர்ப்பயாமி !
2. நாராயணம் தர்ப்பயாமி !
3. மாதவம் தர்ப்பயாமி !
4. கோவிந்தம் தர்ப்பயாமி !
5. விஷ்ணும் தர்ப்பயாமி !
6. மதுஸூதனம் தர்ப்பயாமி !
7. த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி !
8. வாமனம் தர்ப்பயாமி !
9. ஸ்ரீதரம் தர்ப்பயாமி !
10. ஹ்ருஷீகேஷம் தர்ப்பயாமி !
11. பத்மநாபம் தர்ப்பயாமி !
12. தாமோதரம் தர்ப்பயாமி !
தர்ப்பயாமி என்றால் "திருப்தி செய்கிறேன்" என்று அர்த்தம்..
உணர்ந்து கொடுங்கள்..
அப்புறம் செவ்வாய் தோஷமாவது.. சனியாவது...
நவ கிரகமும் உங்களை கண்டு திருப்தி கொண்டு இருக்கும்..
English Meaning: Sandhya Vandanam
Afternoon (to live 100yrs)
Evening (to avoid accidental death)
Morning
தமிழ் அர்த்தம் : சந்தியா வந்தனம்:
மதியம் (100 வயது வாழ)
மாலை (அகால மரணம் தவிர்க்க)
காலை
No comments:
Post a Comment