ஒரு ஹிந்து மதம் மாறிய பிறகு, அவன் காலம் வரை கூட நல்லவனாக கூட இருக்கலாம்.
அவன் சந்ததியால் ஹிந்துக்களுக்கு ஏற்படுத்தும் அபாயங்கள் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?
1000 வருட நம் சரித்திரமே இதற்கு சான்று..
கவனமுடன் படியுங்கள்..
268BCE சமயத்தில், ஆப்கான் முதல், பெரும்பாலான பாரத தேசத்தை ஆண்டு வந்தான் ஹிந்து மன்னன் "அசோக சக்கரவர்த்தி".
பகவத் கீதை படிக்காத இவன், திடீரென்று மூளை கெட்டு, பௌத்த மதத்தை ஏற்றான்.குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணர், அரசனுக்கு குறிப்பாக சொன்ன, க்ஷத்ரிய தர்மத்தை விட்டான்.
போர் வீரர்களை பயிற்சியில் ஈடுபடுத்தாமல், வீரத்தை வளர்க்காமல், பௌத்த மடம் கட்டவும், காவல் காக்கவும் பயன்படுத்தினார்கள் பௌத்த மதம் மாறிய அரசர்கள்.
பலம் வாய்ந்த எதிரிகள் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருக்க,
பாரத நாட்டை காக்கும் அரசர்கள் பௌத்த மதத்தை ஏற்று, போர் வீரர்களை போதுமான போர் பயிற்சி இல்லாமல் வைத்து இருந்தனர்.
அசோக சக்கரவர்த்தியே பௌத்த தர்மத்தை கடைபிடிப்பதால், சிற்றரசர்கள் அனைவரும் மெதுவாக பௌத்த தர்மத்தை ஏற்க ஆரம்பித்தனர்.
சுமார் 1100 வருடங்கள் பாரத நாடு பௌத்த தர்மத்தில் மூழ்கியது.
பகவத் கீதையை மறந்து, மொட்டை அடித்து சமாதானம் பேசிக்கொண்டு சாது தேசமாக ஆகி இருந்தது பாரத நாடு.
சிங்கம் போன்ற க்ஷத்ரிய அரசர்கள் உலவிய நாட்டில், மொட்டை தலைகள் அலைந்தது.
அரசன் வீரத்தை விட்டு விட்டு, சந்நியாசி போன்று பேசிக்கொண்டிருந்த அபாய காலம் அது
சரயு என்ற நதியின் ஒரு பிரிவாக அழைக்கப்பட்ட, "ஹரி நதி", ஆப்கான் தேசத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இன்று, அதை "ஹீரத்" என்று மாற்றி விட்டனர்
(https://en.m.wikipedia.org/wiki/Hari_(Afghanistan))
மதம் மாறிய வரலாற்றை பாருங்கள்...
1. அமீர் பாஞ்சி (Amir Bhanji) (ஆப்கான் ஹிந்து அரசன் ஆண்டு வந்தான். 9th Century)
2. His son அமீர் சூரி (பௌத்த மதத்துக்கு மாறினான். 10th Century.
பௌத்த மடம் கட்டிக்கொண்டு இருந்த போர் வீரர்கள், போருக்கு தயாராக இல்லாமல் இருந்ததால், அரேபிய Saffarid இஸ்லாமிய படையெடுப்பில் பெரும் தோல்வியை சந்தித்தான்.
பௌத்த தர்மத்தை விட இஸ்லாம் வீரம் மிக்கது என்று மதம் மாறாவிட்டாலும், ஆப்கான் தேசத்தில் குர்ரான் படிப்பதை அனுமதித்தான்.). கோர் (Ghor) என்ற ஆப்கான் நகரை தலைநகராக ஆண்டு வந்தான்.
இவன் மூலமாக கோரி பரம்பரை உருவானது.
3. His son முகம்மது இபின் சூரி (பௌத்த மதம், ஆனால் குரான் மூலம் வளர்க்கப்பட்டான். கஜினி படையெடுத்து, இவனை கைது செய்து, சிறையிலேயே கொன்றான். நாடு முழுவதும் இஸ்லாமிய ஆளுமைக்கு உட்பட ஆரம்பித்தது. 10th century)
4. His son அபு அலி இபின் முஹம்மது (இஸ்லாமிய வளர்ப்பு. ஆப்கான் மக்களை முழுவதுமாக இஸ்லாமியர்கள் ஆக்கினான். 20 வருடங்களில் கோவில்கள், மடங்கள் தரைமட்டம் ஆனது. 1011 AD)
5. His Nephew அப்பாஸ் இபின் ஷித் (மாமா அபு அலியை கொன்று தான் அரசன் ஆனான். 1035 AD)
6. His son முகம்மது இபின் அப்பாஸ் (1060 AD)
7. His son குதுப் அல்தின் ஹசன் (1080 AD)
இவன் காலத்தில் தான் கர்நாடக தேசத்தில் மேல்கோட்டையில் உள்ள செல்லபிள்ளை என்ற பெயர் கொண்ட கோவிலை சூறையாடினான்.
அங்கு இருந்த நாராயணன் உற்சவ மூர்த்தியை தூக்கி சென்று விட்டான்.
இந்த கோவில் மதில் சுவர்களில் உள்ள உடைக்கப்பட்ட சிலைகள் நமக்கு கதை சொல்கிறது.
80 வயது நெருங்கி இருந்த ராமானுஜர் (1017ல் அவதரித்தார்) அந்த சமயத்தில் குலோத்துங்க சோழனின் (கிருமி கண்ட சோழன்) வைணவ வெறுப்பால், ஸ்ரீ ரங்கத்தை விட்டு வெளியேறி, நடந்து நடந்து, கர்நாடக தேசம் வந்து, மேல்கோட்டை அடைந்தார்.
அங்கு பெருமாள் இல்லை என்றதும், தானே டெல்லிக்கு சென்று சுல்தானிடம் கேட்டு, "வாராய் செல்ல பிள்ளாய்" என்று பெருமாளை கூப்பிட, அரசன் கண் எதிரே, சிலையாக இருந்த நாராயண விக்கிரகம் அவன் பெண் கையிலிருந்து குதித்து, ஓடி சென்று ராமானுஜர் அருகில் சென்றது.
பயந்து போன சுல்தான், "உடனே எடுத்து சொல்லுங்கள்" என்றான்.பெருமாளின் இந்த லீலையை நேரில் காண வாய்ப்பு கிடைத்தும், சுல்தான் ராமானுஜர் பெரிய மாயக்காரர் போல என்று தான் நினைத்தான்.
"அவரை அனுப்பி விடுவதற்கு, இந்த சிலையை கொடுப்பதே வழி" என்று நினைத்தான்.
சுல்தானின் பெண், பெருமாளின் பிரிவு தாங்காமல், மேல்கோட்டை ஓடி வந்து, விரகத்தால் உயிரையே விட்டு விட்டாள்.
அந்த முஸ்லீம் பெண், இன்றும் அந்த உற்சவ பெருமாளின் கால் அருகே சிறு மூர்த்தியாக இருக்கிறாள்.
பெருமாளை அடைந்த அந்த முஸ்லீம் பெண்ணும், இன்று வரை பூஜிக்கப்படுகிறாள்.
8. His son இஸ் அல்தின் ஹுசைன் (1100 AD)
9. His son சயப் அல்தின் சூரி (1146 AD. இவன் ஆப்கான் தேசத்தை, தன் 6 சகோதரர்களுக்கு பிரித்து கொடுத்தான்)
10. His brother பஹா அல்தின் சம்
முஹம்மது கோரி(1149AD. ஆனால் அதே வருடம் இறந்து விட்டான். இவனுடைய 2 பிள்ளைகளே முகம்மது கோரி, முகம்மது கியாசுத்தின்)
11. His another brother அலாவுதீன் ஹுசைன் (1149AD)
12. His son சயப் அல்தின் முகம்மது (1161AD)
13. முகம்மது கியாசுத்தின் (பஹா அல்தின் சம் முஹம்மது கோரியின் மூத்த மகன். 1163AD.
இவனால் பாரத தேசத்தின் வங்காள தேசம் வரை சூறையாட பட்டது..
பலர் கத்தி முனையில் மதம் மாற்றப்பட்டனர்.
இந்திய மண்ணின் இருண்ட காலம் ஆரம்பமான நேரம்...)
15. முகம்மது கோரி (பஹா அல்தின் சம்
முஹம்மது கோரியின் இளைய மகன். 1173AD).
இவன் காலத்தில் தான் மஹாராஷ்ட்ர தேசம் வரை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பெருமளவில் நடந்தது.
பண்டரிபுரம் கோவிலை இடிக்க கூட வந்து விட்டான் இவன்.
ப்ரித்விராஜ் சவுஹான் என்ற ஹிந்து அரசன் இவனை பாரத மண்ணில் கால் பதிக்க விடாமல் தடுத்தான்.
முதல் படையெடுப்பில் கோரி படு காயம் அடைந்தான். ப்ரித்விராஜ் சவுஹான் மன்னித்து அனுப்பினான்.
விளைவு: இரண்டாவது முறை திடீர் தாக்குதல் செய்து, ப்ரித்விராஜ் சவுஹானை சிறை பிடித்து, கண்ணை பிடுங்கினான்.
ஆப்கான் கொண்டு சென்று சிறை வைத்தான்.
இவனை கேலி செய்து விளையாடிய கோரியை, கண் இல்லாமலேயே ப்ரித்விராஜ் சவுஹான் அம்பு எய்து கொன்றான்.
கோரியின் மரணம் ஆப்கானில் முடிந்தது.
1000ADல் அமீர் சூரி என்ற ஒரு ஹிந்து மதம் மாறினான்.
அவன் நல்லவனாக கூட இருந்து இருக்கலாம்.
ஆனால்,
150 வருடங்கள் கழித்து 12வது தலைமுறையாக வந்த 'முகம்மது கோரி' ஹிந்துக்களை கொல்வதும், கோவிலை இடிப்பதும், கொள்ளை அடைப்பதையும் தன் கொள்கையாக கொண்டு இருந்தான்.
முகம்மது கோரி, ஆப்கான் தேசத்தை முழுவதுமாக ஒரு ஹிந்து, ஒரு பௌத்தன் கூட இல்லாத நகரமாக ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்கியதை காட்ட, வெற்றி சின்னமாக , "ஜாம் மினார்" (minaret of jam) என்ற கோபுரத்தை அங்கு கட்டினான்.மதம் மாறுபவன் நல்லவனாக கூட இருக்கலாம்.
ஆனால் அவன் பரம்பரை உருவாக்கும் விஷங்கள் எப்படிப்பட்டது? என்பதற்கு நம் 1000 வருட துன்ப காலங்களே சான்று.
கோரி பரம்பரை 1000AD முதல் சுமார் 1206AD வரை ஆப்கான் முதல் வங்காள தேசம் வரை, மராட்டிய தேசம் வரை ஆக்ரமித்து ஆண்டு வந்தது..
பிறகு, மாம்லுக் என்ற அடிமை பரம்பரை என்ற பெயரில் குதுப்தின் ஐபக், முஸ்உத்தின் ஐபக் 1296AD வரை ஆண்டனர்.
குதுப்தின் ஐபக், தன் எஜமானன் ஆப்கான் தேசத்தை இஸ்லாமிய நாடாக ஆக்கி, "ஜாம் மினார்" கட்டியது போலவே, டெல்லி நகரமும் இஸ்லாமிய தேசம் என்று காட்ட, "குதுப் மினார்" என்ற அதே போன்ற வடிவமைப்பில் ஹிந்து அடிமைகளை கொண்டே கட்டினான்.
பாரத தேசத்தை இஸ்லாமிய நாடாக ஆக்கி விட்டேன் என்று காட்ட "குதுப் மினார்" கட்டப்பட்டது.
ஹிந்துக்களை அழிக்கும் இவன் கனவு கனவாகவே போனாலும், இவன் கட்டிய இந்த ஸ்தூபம் இன்றும் பாரத மண்ணில் இருக்கிறது.
இதற்கு பிறகு கில்ஜி பரம்பரை இவர்களை துரத்தி ஆட்சியை பிடித்தனர்.
இதில் இரண்டாவது ஆட்சியாளனாக வந்த அலாவுதீன் கில்ஜி, ராஜஸ்தான், குஜராத் போன்ற ராஜ்யங்களை முழுவதும் இஸ்லாமிய மண்ணாக ஆக்க, பெரும் படைகளை திரட்டி கொண்டு போனான்.
இந்த சமயத்தில் தான் ராணி பத்மாவதி ராஜஸ்தான் கோட்டை தகர்க்கப்பட்ட செய்தி கேட்டதும், மானத்தை காத்து கொள்ள, அக்னி குண்டத்தில் பல ராஜ ஸ்த்ரீகளுடன் குதித்து உயிர் விட்டாள்.
குஜராத் தேசத்தில் போர் செய்த போது, ஹிந்து மக்கள் பலரை அடிமைகளாக ஆக்கினான் அலாவுதீன்.
அதில் மாணிக் என்ற ஹிந்து வீரனாகவும் இருந்ததை பார்த்து, அலாவுதீன் கில்ஜிக்கு ஒரு நட்பும் பரிவும் உண்டானது.இந்த நன்றிக்கு, ஹிந்துவாக இருந்த மாணிக், தன்னை முஸ்லீமாக மாற்றிக் கொண்டான்.
ஹிந்து மதத்தை விட்டு விலகிய இவன் தான் "மாலிக் காபுர்".
மதம் மாறிய இவனையே படை தளபதியாக ஆக்கி, முதல் முறையாக ஆந்திர தேசமும், தமிழகமும் கில்ஜி காலத்தில் தாக்கப்பட்டது.
இஸ்லாமியனாக போன இந்த மாலிக் காபுர், ககாத்திய தேசத்து அரசனை நேரடியாக எதிர்க்க முடியாமல், கோவில்களுக்குள் நுழைந்து கொள்ளை அடித்து, பொது மக்களை கொன்று பெரும் கலவரத்தை உருவாக்கினான்.
ககாத்திய தேசத்தில் பல கோவில்களில் பெரும் கொள்ளை நடந்தது. அதில் ஒரு காளி கோவிலில் மஹாகாளி அணிந்து இருந்த வைர மாலைகளில் இருந்த ஒரு வைரம் தான் "கோஹினூர்" என்று அழைக்கப்படும் வைரம்.
இன்று இது பிரிட்டன் நாட்டில் உள்ளது.
தெலுங்கு தேசத்தின் சொத்து இது.
இது மட்டுமா மாலிக் காபுர் செய்தான்..
பிறகு காஞ்சிபுரம் வந்து, பிறகு பாண்டிய தேசத்துக்குள் நுழைந்து மதுரை மீனாட்சி கோவிலில் புகுந்தே விட்டான்.
அங்கிருந்த பட்டர்கள், மூல மூர்த்தியான சுந்தரேஸ்வரர் இருக்கும் இடத்துக்கு முன் கல் சுவரை எழுப்பி, வேறொரு பெரிய சிவலிங்கத்தை வைத்து விட்டனர்.
செருப்பு காலில் லட்சம் இஸ்லாமிய படையுடன் நுழைந்த மாலிக் காபுர் சிவலிங்கத்தை குத்தி தள்ளி விட்டான்.
(இன்றும் அந்த சிவலிங்கம் உள்ளது.. மதம் மாறியவன் என்னவெல்லாம் செய்வான் என்று கதை சொல்கிறது)
பாண்டிய மன்னன் பொது மக்களை காக்க, கோவிலை காக்க, அடி பணிந்தான்.
பாண்டிய தேசத்து மொத்த கஜானாவையும், 1000 யானை படைகளையும் கொடுத்தான்.
மாலிக் காபுர், பாண்டிய தேசத்து எல்லையான ஸ்ரீ ரங்கம் வரை சென்றான்.
அங்கு கோவிலை சூறையாடி 13000 வைஷ்ணவர்களை கோவிலேயே கழுத்தை வெட்டி கொன்றான்.
உற்சவ மூர்த்தியான ரங்கநாதரை டெல்லிக்கே தூக்கி சென்று விட்டான்.
ரங்கநாதரை விளையாட்டு பொம்மையாக இவன் பெண்ணுக்கு கொடுத்து விட்டான்.
பேசும் தெய்வமான ரங்கநாதர், இவளிடம் பேசி கொண்டு இருக்க, 'பொம்மையை வைத்து கொண்டு இருக்கும் தன் மகள் பைத்தியம் ஆகி விட்டாள்' என்று பயந்தான்.
பிறகு வைஷ்ணவர்கள் சிலர் டெல்லிக்கே சென்று ரங்கநாதரை கேட்க, 'அபாயமான இந்த ரங்கநாத பொம்மை வேண்டவே வேண்டாம்' என்று கொடுத்து விட்டான்.
ஸ்ரீ ரங்கம் வந்து விட்டார் ரங்கநாதர்.
ஆனால், மீண்டும் கலவரம் ஏற்பட, அடுத்த 70 வருடங்கள் தமிழகம் முஸ்லிம்களால் இருண்டது.
கில்ஜியை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த துக்ளக் தமிழகம் வரை வந்து விட்டான்.
மேலும் அறிய.. இங்கே படிக்கவும்.
சுமார் 70 வருடங்கள்,
ஸ்ரீரங்கம் கோவில் மூடப்பட்டது.
மீனாட்சி கோவில் மூடப்பட்டது.
காஞ்சியில் இருந்த அத்தி வரதர் குளத்துக்குள் வைக்கப்பட்டு விட்டார்.
யார் ஹிந்துக்களை மீட்பார்கள்? என்ற கேள்வி பாரத தேசம் முழுவதும் பரவி, பெரும் கேள்விக்குரியானது.
தெலுங்கு தேசத்தை பூர்வீகமாக கொண்டு, கர்நாடக தேசத்தின் ஹம்பியை தலைநகராக கொண்டு, விஜயநகர அரசர்கள் தலையெடுத்தார்கள்.
தமிழகம் 80 வருடங்கள், துக்ளக் ஆட்சியின் கீழ் உள்ள முஸ்லிம்களால் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்தது.
ஹிந்துக்களை காக்க, வந்தார் கம்பண்ணா. வென்றார் தமிழகத்தை. மீண்டும் ஹிந்துக்கள் வாழ வழி செய்தார்.
அடைக்கப்பட்ட மூன்று கோவில்களும் மீண்டும் திறக்கப்பட்டன.
அழிக்க நினைத்தும், ஹிந்துக்கள் அழிந்து விடாமல், ஹிந்து தெய்வங்களே கம்பண்ணா ரூபத்தில் காத்தது.
ஒவ்வொருவரின் பரம்பரையை நன்றாக கவனித்தால், முகம்மது கோரியின் மூதாதையனும் ஒரு காலத்தில் ஹிந்துவாக இருந்தவன் என்று தெரிகிறது.
இன்று மதம் மாறுபவன் விதைக்கும் விஷம் எப்படிப்பட்டது என்று சரித்திரத்தை கொண்டே நாம் அறியலாம்.
மாலிக் காபுர் தானே மதம் மாறியவன்.
தான் பிறப்பில் ஒரு ஹிந்து என்று தெரிந்தும், அவனே பெரும் கோவிலை இடித்தான்.
ஹிந்து மதம் விட்டு, சென்றவர்கள் எந்த காலத்திலாவது நமக்கு தீங்கு செய்வார்கள் என்பதற்கு, நாம் 1000 வருடங்கள் அனுபவித்த இழப்புகளே சான்று.
நம் சரித்திரத்தை அறிந்து கொள்வது போல, அந்நியர்கள் என்று அறியப்பட்ட கோரி, கில்ஜி போன்றவர்கள் யார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment