ராமபிரானே பரவாசுதேவன் என்று நிரூபிக்கும் ஸ்லோகம்.. வால்மீகி ராமாயணம்.
இந்த சிறிய ஸ்லோகத்தை நாம் தினமும் சொன்னால், தமிழர் வால்மீகியை ஆனந்தப்படுத்தும், ராமாயணம் படித்த திருப்தியும் உண்டாகும்..
ப்ரியதே சததம் ராம: ச ஹி விஷ்ணு சனாதன: !
ஆதி தேவோ மஹாபாகு ஹரி நாராயண ப்ரபு: !
சாக்ஷாத் ராமோ ரகு ச்ரேஷ்ட:
சேஷோ லக்ஷ்மண உச்யதே !
- வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டம் - பட்டாபிஷேகம்)
அர்த்தம்:
அன்பே வடிவான ராமபிரானே காலத்துக்கும் அப்பாற்பட்ட விஷ்ணு.
நீண்ட கைகள் கொண்ட, ரகு குலத்தில் உதித்த ராமரே, ஆதி தேவனான ஹரி நாராயணன்.
நாராயணன் சயனித்து இருக்கும் ஆதிஷேஷனே லக்ஷ்மணன்.
அன்பிலில் அவதரித்து, திருநீர்மலையில் முக்தி பெற்ற "தமிழர் வால்மீகி" உலகுக்கே ராமாயணம் கொடுத்தார்.
தமிழர் வால்மீகி த்ரேதா யுகத்தில் பொது மொழியான சமஸ்கரிதத்தில் எழுதினார்.
"தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை எழுதுவோம்" என்று கலி யுகத்தில் இன்னொரு தமிழ் புலவன் நினைத்தார்.
கம்ப ராமாயணமும் கிடைத்தது.
ராமாயணத்தை கொடுத்த தமிழர் வால்மீகியால்,
உலக மக்களுக்கும், உண்மை தமிழர்களுக்கும் பெருமை.
No comments:
Post a Comment