Followers

Search Here...

Friday, 26 June 2020

நாம் செய்யும் காரியங்களை (கர்மாவை), 'கர்ம யோகமாக' செய்வது எப்படி? எளிதான உதாரணம்... குருவே துணை.

கர்மாவை, கர்ம யோகமாக செய்வது எப்படி?





ஒரு முதலாளி தன் நிலத்தில் நெல் பயிர் செய்து இருந்தான்.
"பறவைகளோ, விலங்குகளோ, மற்றவர்களோ பயிரை சேதம் செய்ய கூடாது" என்று நினைத்தான்.

கர்மா:
முதலாளியே தன் நிலத்தை காவல் காத்தான்.

"யாராவது தன் நிலத்தை சேதம் செய்வார்களோ!!?" என்று மனம் பதைப்பதைத்தான்..

அவ்வப்போது உள்ளே நுழைய பார்க்கும், பறவைகள், விலங்குகளை, மனிதர்களை விரட்டினான்.

"தனது நிலம்" என்ற அபிமானத்தில் வேலை செய்தான்.
தான் செய்த கர்மாவினால் (வேலை) ஏற்படும் "பாவ புண்ணியங்களை" இவனே சுமக்கிறான்.

முதலாளி "தான் செய்த கர்மாவினால், தானும் கர்ம பலனில் அகப்படுகிறான்".

கர்ம யோகம்:
முதலாளி, தன் நிலத்தை காவல் காக்க ஒரு வேலைக்காரனை அமர்த்தினான்.


"யாராவது தன் எஜமானன் நிலத்தை சேதம் செய்வார்களோ!!?"
என்று மனம் பதைப்பதைத்தான் வேலைக்காரன்.

அவ்வப்போது உள்ளே நுழைய பார்க்கும் பறவைகள், விலங்குகளை, மனிதர்களை விரட்டினான்.

"தனது நிலமல்ல, தனது எஜமானன் நிலம்" என்ற அபிமானத்தில் வேலை செய்தான்.
தான் செய்த கர்மாவினால் (வேலை) ஏற்படும் "பாவ புண்ணியங்களை" இவனுக்கு பதில் இவன் எஜமானன் சுமக்கிறான்.

வேலைக்காரன் கர்மாவை செய்தும், "இது என் நிலம்" என்ற அகம்பாவம் இல்லாததாதால், "இது என் முதலாளியின் நிலம்" என்று அபிமானம் இருப்பதால் கர்ம பலனில் அகப்படாமல் இருக்கிறான்.

உண்மையில்,
இருவரும் ஒரே வேலை தான் செய்தனர்..

ஒருவன் தான் செய்த கர்மாவுக்கு தானே அகப்படுகிறான். 
அதன் மூலம் ஏற்படும் பாவ புண்ணியத்தை சுமக்கிறான்.

மற்றொருவன் தான் செய்த கர்மாவுக்கான பாவ புண்ணியத்துக்கு தான் அகப்படாமல், அவன் முதலாளிக்கு கொடுத்து விடுகிறான்.
அவனுக்காக அவன் முதலாளி சுமக்கிறான்.


அதுபோல, 
நாம் செய்யும் காரியத்தை செய்து கொண்டே, நம் வீட்டுக்கும், நம் மக்களுக்கும், நமக்கும் முதலாளி "ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா" என்று அறிந்து, 
முதலாளிக்கு விசுவாசமாக, அவர் கொடுத்த இந்த காரியத்தை, பொறுப்பை அவருக்காக திறம்பட செய்வோம்.



ஸ்ரீ கிருஷ்ணர் "நீ கர்ம யோகியாக இருந்து கொண்டு நீ செய்வதை செய்து கொண்டே இரு. உனக்கு முதலாளி நான் என்ற நினைவுடன் எப்பொழுதும் எந்த காரியத்தையும் எனக்காக செய். உன் கர்ம பலன் அனைத்தையும் நான் ஏற்கிறேன்"
என்கிறார்.

குருநாதர் துணை.

ஹிந்து தர்மத்தில் இல்லாத விஷயங்கள் இல்லை.

உலகில் உள்ள 700 கோடி மனித கூட்டத்தில், ஹிந்துக்கள் 100 கோடி மட்டுமே.

ஹிந்துவாக நாம் பிறந்ததே நாம் செய்த பாக்கியம்.

அதிலும், ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் கர்ம யோகத்தை அறிந்து கொள்வது அதை விட பாக்கியம்.

இது அனுபவத்தில் இருந்தால், அதை விட பாக்கியம்.

No comments: