Followers

Search Here...

Tuesday, 14 April 2020

வ்யாக்ர பாதர் ரிஷி, தொளமிய ரிஷி பற்றி தெரிந்து கொள்வோமே... தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை..

வ்யாக்ர பாதர் முக்தி ஸ்தலம் "சிறுபுலியூர்".  
வ்யாக்ர பாதர், ஒரு சமயம் கைலாசத்தில் சிவபெருமானிடம் "ஆனந்த தாண்டவம் பார்க்க வேண்டும்"
என்று தன் ஆசையை சொன்னார்.




"புண்டலீகபுரம் என்ற தேசம் தக்ஷிண பாரதத்தில் உள்ளது.
அங்கு கோவிந்தராஜ பெருமாளாக மஹாவிஷ்ணு இருக்கிறார். 
அங்கு உங்களுக்கு தரிசனம் தந்து ஆனந்த தாண்டவம் செய்வேன்" என்கிறார்.
"கோவிந்தராஜ பெருமாள்" இருக்கும் இந்த தேசம், திரு சித்ரகூடம் என்று அழைக்கப்பட்ட காலம் அது.

வ்யாக்ர பாதர், தன்னுடன் பதஞ்சலி முனிவரை அழைத்துக்கொண்டு, இந்த தேசத்துக்கு வந்தார்.
சாயங்கால வேளையில், கோவிந்தராஜனுக்கு முன், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆட, நந்தி தேவர் தாளம் போட, வ்யாக்ர பாதர் இந்த காட்சியை பார்த்து ஆனந்தம் அடைந்தார்.  
நடனம் ஆடியதால், சிவபெருமானுக்கு இங்கு "நடராஜர்" என்று பெயர் ஏற்பட்டது.

பிறகு, "தனக்கு மோக்ஷம் வேண்டும்" என்று சிவபெருமானிடம் கேட்டார்.

சிவபெருமான் "ஞானம் நான் தருவேன்.. மோக்ஷம் பெருமாள் தருவார்"
என்று சொல்லி, நாராயணனை திரு அஷ்டாக்ஷர மந்திரம் சொல்லி தியானிக்க சொல்லி மறைந்தார்.

இன்று இந்த திவ்ய தேசத்தை, சிதம்பரம் என்றும் சிற்றம்பலம் என்றும் சொல்கிறோம்.

வ்யாக்ர பாதர் (புலி போன்ற கால் உடையவர்) "சிறுபுலியூர்" என்று சொல்லப்படும் திவ்ய தேசத்துக்கு வந்தார்.
அங்கு திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து கொண்டே, நாராயணனை தரிசிக்க காத்து கொண்டிருந்தார்.
பெருமாள் கோகுலத்தில் பிறந்த "குழந்தை போல, தூளியில் ஆடிக்கொண்டே திவ்ய காட்சி கொடுத்தார்.

சிறு குழந்தையாக பெருமாளை, புலி போன்ற கால் உடைய வ்யாக்ர பாதர் இங்கு தரிசித்து, இங்கேயே இருந்து முக்தி பெற்றார்.

இதன் காரணத்தாலேயே இந்த ஊருக்கு "சிறு புலியூர்" என்று பெயர் ஏற்பட்டது.

"உபமன்யு" வ்யாக்ர பாதரின் புத்திரர்.
இந்த தமிழ்நாட்டில் தான், தொளமிய ரிஷியின் ஆஸ்ரமத்தில், உபமன்யு படித்தார்.

தன்  தகப்பனார் போலவே சிவபெருமானை  தரிசித்தார். 
இவருக்கு கண் தெரியாமல் போன போது, தொளமிய ரிஷி "காஞ்சி வரதராஜனை (அத்திவரதரை)" வழிபட சொல்ல,
பேரருளாளன் அருளால், கண் பார்வை இவருக்கு மீண்டும் கிடைத்தது.
பெரும் ரிஷி இவர்.

"ஆருணி, வைதன், உத்தங்கர்" போன்றார் உபமன்யுவுடன் படித்தார்கள்.

உத்தங்கர் தன் குருநாதரிடம் வேதம் முழுவதும் படித்து முடித்து விட்டு,
"குரு தக்ஷிணை தர வேண்டுமே" என்று குருவிடம் கேட்டார்.
"தனக்கு எதுவும் வேண்டாம், குருமாதாவிடம் கேள்" என்று சொல்லிவிட்டார்.

"பௌஷ்ய ராஜன் மனைவி வைத்து இருக்கிறாள். அதை வாங்கி கொண்டு வா" என்று  குருமாதா கேட்டாள்.
குருநாதர் "அதையே தனக்கு குரு தக்ஷிணையாக கொண்டு வா" என்று சொல்லிவிட்டார்.

பௌஷ்ய அரசனிடம் சென்று "தனக்கு நாக ரத்தினம் வேண்டும். குருநாதனுக்கு குரு தக்ஷிணையாக கொடுக்க வேண்டும்" என்று கேட்டு விட்டார் உத்தங்கர்.




விலைமதிப்பில்லாத நாகரத்தினத்தை உத்தங்கர் போன்ற வேத பிராம்மணன் தன்  குருநாதருக்காக தானம் கேட்கிறாரே, என்று தாராளமாக கொடுத்துவிட்டாள் அரசனின் மனைவி.

"தக்ஷகன்" என்ற நாகராஜன் பிறந்த இடம் "திருநாங்கூர்".
சிதம்பரம் ஆரம்பித்து திருநாங்கூர் (நாகூர்) தொடர்ந்து நூகூர், நாகப்பட்டினம் வரை "நாகர்கள் ஆண்ட" தேசமாக இருந்தது.

தமிழகத்தில் தான் ரத்தினங்கள் அதிகமாக அந்த காலங்களில் இருந்தது.
பிற்காலத்தில்,
திருநாங்கூரை தலைமையாக கொண்டு, திருமங்கை ஆழ்வார்  ஆட்சி செய்த பிரதேசம் இது.
அதை எடுத்துக்கொண்டு வரும் போது, தக்ஷகன் என்ற நாகராஜன், மனித வடிவெடுத்துக்கொண்டு, ப்ராம்மணனை போல வந்து, பேசிக்கொண்டே திடீரன்று கையில் இருந்த இரத்தின மாலையை எடுத்துக்கொண்டு ஓடி பாம்பு பொந்துக்குள் நுழைந்து விட்டான்.

மனிதன் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்ததை கண்டு!! 'வந்தது நாகதேவன்' என்று புரிந்து கொண்டார் உத்தங்கர்.
பிறகு, இந்திரா தேவன், அக்னி தேவனின் உதவியால், தக்ஷகனை நாங்கூர் பிரதேசத்தில் இருந்து விரட்டி, ரத்தினத்தை கைப்பற்றினார்.

தன் குருவிடம் நாக ரத்தினத்தை குரு தக்ஷிணையாக கொடுத்து விட்டார்.

தக்ஷகன் பிறகு காண்டவ வனத்தில் இருந்து வந்தான். 
இந்த புதர் வளர்ந்த காட்டை தான், யுதிஷ்டிரருக்கு திருத்ராஷ்ட்ரன் கொடுத்தான். 
அர்ஜுனன் இந்த காண்டவ வானத்தை அழித்து, இந்திரப்பிரஸ்தம் (Delhi) என்ற நகரம் உருவாக்கினார்.
அங்கிருந்து தக்ஷகன் தப்பித்து சென்றான். 
இந்த தக்ஷன் தான், சாபம் காரணமாக பிறகு அபிமன்யுவின் மகன் "பரீக்ஷித்"தை விஷம் தீண்டி கொன்றான்.

பரீக்ஷித் மகன் ஜனமேஜயன் அரியணை ஏறினார்.
அப்போது, இந்த உத்தங்கர் தான், இவரிடம் சென்று
"தக்ஷகன் தான் உன் தகப்பனை கொன்றார்" என்று சொன்னார்..

இதற்கு பழி தீர்க்க, பெரிய சர்ப்ப யாகம் ஏற்பாடு செய்தான்.
தக்ஷசீலா என்ற இடத்தில் யாகம் ஆரம்பித்தான்.
உலகில் உள்ள நாகம் எல்லாம் தானாக அக்னி குண்டத்தில் வந்து விழ ஆரம்பித்தது.
அஸ்தீகர் என்ற ரிஷி, ஜனமேஜயனை சமாதானம் செய்து, யாகத்தை நிறுத்தினார். தக்ஷன் தப்பித்தான்.

ஜனமேஜயன் யாகம் செய்த இடம் இன்று, "தஷீலா (Taxila)" என்ற பெயருடன் இன்றும் இருக்கிறது.  இன்று பாகிஸ்தான் பகுதியாக போய் விட்டது.

பீஷ்மர் "வ்யாக்ரபாத கோத்திரம்". 
யுதிஷ்டிரிடம் "கோத்திரம் என்ன?" என்று விராட அரசன் கேட்ட போது, "தான் வ்யாக்ர பாத ரிஷி கோத்திரம்" என்று சொல்கிறார்.

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் சிவபெருமானை நமக்கு கொடுத்த, சிறுபுலியூரில் பெருமாளை நமக்கு கொடுத்து,
தமிழ்நாட்டில் மோக்ஷம் அடைந்த வ்யாக்ர பாதர்,
மஹாபாரத குரு வம்சத்துக்கு ரிஷி
என்பது வட பாரதமும், தெற்கு பாரதமும் எத்தனை உறவை கொண்டு இருந்தது என்பது தெரிகிறது.

அர்ஜுனன் இந்த பிரதேசங்களில் ஸ்ரீரங்கம் வரை தீர்த்த யாத்திரை வந்த காரணமும் நமக்கு புரிகிறது.

No comments:

Post a Comment