தெய்வத்துக்கு சமமாக பூஜிக்க தகுந்த மாகாத்மாக்களை கண்டால், "தேவரீர்" என்று அவரை சொல்கிறோம்.
நர்குணங்கள் நிரம்பிய இவர்களை காணும் போது,
நம்மை "தாசன்" என்றும், "இவன்" என்றும், "இது" என்றும் கூட சொல்லிக்கொள்கிறோம்.
"தாசன், இவன், இது" என்று நம்மை சொல்லிக்கொள்வது, நம்மை தாழ்த்திக்கொள்வதற்காக அல்ல.
நம்மை தாழ்த்தி, அவரை உயர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையால், குருநாதரின் உயரிய குணத்தால், இப்படி சொல்கிறோம்.
ஹனுமான் ராமபிரானை விட வயதில் மூத்தவர். நன்கு படித்தவர், ஞானம் உடையவர்.
இருந்தாலும், ராமபிரானின் எல்லையில்லா நற்குணங்கள் இவரை "தாசன்" என்று சொல்லிக்கொள்ள செய்தது.
பூஜிக்க தக்கவர்களிடம், கர்வத்தை காட்டும் படியாக "நான்" என்று கூட சொல்லிக்கொள்வதில்லை.
வைஷ்ணவர்கள், தன்னை
"அடியான்" என்றும்,
"தாசன்" என்றும்
பெருமாளை பார்த்தும்,
ஆச்சாரியனை பார்த்தும், மற்ற வைஷ்ணவர்களை பார்த்தும், இப்படி தன்னை சொல்லிக்கொள்வார்கள் என்று பார்க்கிறோம்.
அடுத்த நிலையில், மரியாதைக்கு உரியவர்களை, "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.
இவர்களிடம் "நீங்கள்" என்ற சொல் கூட மரியாதை குறைவான சொல் என்று தோன்றும். ஆதலால், "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.
இவர்களிடம் பேசும் போது, "தாங்கள் நம் வீட்டுக்கு வர வேண்டும்" என்று விண்ணப்பம் செய்வோமே தவிர,
"நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும்" என்று சொல்வது கூட, அதிக பிரசங்கி தனமோ என்று கூட நமக்கு தோன்றும்.
அதற்கும் கொஞ்சம் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீங்கள்" என்று சொல்கிறோம்.
நம்மைவிட வயதில் மூத்தவர்களை "நீங்கள்" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.
அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீர்" என்று சொல்கிறோம்.
அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீ" என்று சொல்கிறோம்.
நண்பர்களை "நீ" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.
பொதுவாக இவை அனைத்துமே குணத்தை வைத்து ஏற்பட்ட மரியாதை சொற்கள்.
அவரவர் யோக்யதைக்கு தக்கபடி, இப்படி பல வித மரியாதை சொற்களை பயன்படுத்துகிறோம்.

No comments:
Post a Comment