"ஆவணி அவிட்டம்" என்று, சொல்லப்படும் நாளில் பிராம்மணர்கள் கூடி பூணல் அணிந்து கொள்கிறார்கள்.
"ஸ்ராவணம்" என்றும், "உபாகர்மா" என்றும் கூட சொல்கிறார்கள்.
சிலர் ஆணி அவிட்டம், ஆடி அவிட்டம் போன்ற நாட்களிலும் செய்து கொள்கிறார்கள்.
"ஆவணி அவிட்டம்" என்றதும்
"ஒரு வருடமாக போட்டு கொண்டிருக்கும் அழுக்கு பூணலை கழட்டி, புது பூநூல் போட்டு கொள்ளும் நாள்"
என்று லௌகீக பிராமணர்கள் நினைக்கலாம்.
இப்படி நினைப்பதாலோ என்னவோ!!
சில லௌகீக ப்ராம்மணர்கள், வேறு ஒரு புது நூலை தாங்களே வாங்கி மாட்டிக்கொண்டு விடுகின்றனர்.
நம்முடைய ஹிந்து தர்மத்தில், நாம் செய்யும் எந்த செயலிலும் ஒரு அர்த்தம் உண்டு. காரணமும் உண்டு.
இன்று நமக்கு, 'அர்த்தம் தெரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்',
ஹிந்து தர்மம் சொல்லும் எந்த செயலிலும், காரணம் இருக்கும் என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை' வேண்டும்.
இன்றைய நவீன காலத்தில், உலக விஷயங்கள் நம் கையில் கிடைக்கும் நிலையில், காரணங்கள், அர்த்தங்கள் புரிந்து கொள்வது எளிது.
இன்று புரியாமல் போனாலும், ஹிந்து தர்மம் சொல்லும் காரியங்களை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும்.
விட்டு விட கூடாது.
அலட்சியம் செய்ய கூடாது.
செய்பவர்களை கேலி செய்ய கூடாது.
"சந்தியா வந்தனம்" என்பது ப்ராம்மணன்" கட்டாயம் செய்ய வேண்டிய கடமை என்று விதிக்கப்பட்டு உள்ளது.
எப்பொழுது 'விதிக்கப்பட்டதோ', அதை ப்ராம்மணன் மீறுவது சரியாக இருக்க முடியாது...
இன்று நமக்கு, சந்தியா வந்தனத்திற்கு அர்த்தம் புரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்,
"காரணம் இல்லாமல், அர்த்தம் இல்லாமல் 'வேத வியாசர்' நமக்கு சொல்லி இருக்க மாட்டார்"
என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை, நம் ஹிந்து தர்மத்தில்' இருக்க வேண்டும்.
எந்த காரியத்தை செய்தாலும், அதில் உள்ள காரணம், அர்த்தங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
"சந்தியா வந்தனம் ஏன் செய்ய வேண்டும்? அதன் அர்த்தங்கள் என்ன?"
என்று வேத ப்ராம்மணர்கள், உண்மையான மகான்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் உண்மையான 'ஸ்ரத்தை' (ஈடுபாடு) நமக்கு தானாக ஏற்படும்.
தவறான அர்த்தங்களும் பிறரால் சொல்லப்படலாம்.
அதனால் பல வேத ப்ராம்மணர்கள், மகான்களை அணுகி, சந்தேகம் தீரும் வரை விசாரங்கள் செய்து, அர்த்தங்களை, காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே, நாம் ஒன்றை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, "ஹிந்து தர்மத்தில் அர்த்தமில்லாத காரியங்கள் எதுவுமே கிடையாது. காரணம் இல்லாமல் எந்த செயலும் நமக்கு சொல்லப்படுவதில்லை"
என்று புரிந்து கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் இந்த அளவிலாவது நம் நம்பிக்கையை ஹிந்து தர்மத்தில் வைத்து இருக்க வேண்டும்.
'தெரிந்து கொள்ள வேண்டும்' என்கிற ஆர்வம் மட்டும் நமக்கு எப்பொழுதும் இருந்தால்,
தகுந்த நேரம் நமக்கு வரும்போது, பெரியோர்கள், மகான்கள் அதன் அர்த்தங்கள், காரணங்களை நமக்கு விளக்குவதை நம் வாழ்க்கையில் அனுபவிக்கலாம்.
வேதத்தை மனப்பாடம் செய்வதற்கே 12 வருடங்கள் ஆகிறது என்கிறார்கள்.
"வேதத்தின் அர்த்தம் முழுமையாக புரிந்தால் தான் வேதத்தை மனப்பாடம் செய்வேன்" என்று ஒருவன் சொன்னால், அவன் ஆயுள் முழுக்க செலவு செய்தாலும் வேதத்தை முழுக்க புரிந்து கொள்ள முடியாது.
ஹிந்து தர்மத்தில் சொல்லப்படும் 'எந்த காரியமும் அர்த்தம் உடையது தான் ' என்ற நம்பிக்கை இருப்பதால் தானே,
உலக ஆசைகளை விட்டு,
"12 வருடங்கள் கடுமையாக வேதத்தை மனப்பாடம் செய்கின்றனர்" வேதம் படிக்கும் பிராம்மண சிறுவர்கள்.
வேதம் உறுதியாக அவர்கள் மனதில் பதிந்த பின்,
வாழ்நாள் முழுவதும் அதன் அர்த்தங்களை, காரணங்களை அறிந்து, மேலும் மேலும் ஸ்ரத்தையை வளர்த்து வேதத்திற்காகவே வாழ்கின்றனர் 'வேதியர்கள்' என்று பார்க்கிறோம்.
புரிந்து கொண்டு சந்தியா வந்தனம் செய்தால், ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படுகிறது.
அதே போல,
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில் என்ன செய்கிறோம்? என்று தெரிந்து கொள்வதால், ஆவணி அவிட்டத்தில் செய்யும் காரியங்களிலும் நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
ஹிந்து தர்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட எந்த கடமையையும், புரியாமல் போனாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
காலம் கனியும் போது, அர்த்தங்கள் புரியும் போது நமக்கு மேலும் ஸ்ரத்தை (ஈடுபாடு) கூடலாம்.
காய்ச்சல் வந்தவனுக்கு, டாக்டர் ஒரு மாத்திரை தருகிறார்.
'அது என்ன மாத்திரை?
உடம்பு முழுக்க சூடாக கொதிக்கிறது. இந்த சின்ன மாத்திரை வாயில் போட்டால், உடல் முழுவதும் செல்லுமா?
இந்த மாத்திரை எப்படி உருவானது?
அது எப்படி என் காய்ச்சலை குணம்படுத்தும்?
என்று கேள்வி கேட்டு கொண்டே இருக்கலாம்.
டாக்டர் பதில் சொல்லி,
அந்த மருந்தை தயாரித்தவன் வந்து விளக்கி சொல்லி,
நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் கூட, உயிரோடு இருந்தால், அந்த மருந்தை எடுத்து கொள்ளலாம்.
மாறாக,
டாக்டர் மீது நம்பிக்கை கொண்டு,
அவர் கொடுக்கும் இந்த "மாத்திரைக்கு காய்ச்சலை சரி செய்யும் திறன் இருக்கும்" என்று நம்பிக்கையிலும் எடுத்து கொள்ளலாம்.
மருந்தை பற்றிய அறிவு 'நமக்கு இல்லாது' போனாலும்,
டாக்டர் மீது இருந்த நம்பிக்கையினால், அதை நாம் வாயில் போட்டு கொள்கிறோம்.
மருந்தின் மீது நம்பிக்கை நமக்கு இல்லாமல் போனாலும், மருந்து நம்மை காப்பாற்றி விடுகிறது.
"மாத்திரை" போன்றது "வேத மந்திரங்கள்".
இங்கு நமக்கு இருக்கும் டாக்டரோ "வேத வியாசர்".
4 வேதங்கள், சந்தியா வந்தனம் போன்ற மாத்திரைகளை,
வேத வியாசர் என்ற மருத்துவர், நமக்கு தந்து விட்டார்.
மாத்திரைகளின் (வேத மந்திரங்கள்) அர்த்தங்களையோ, காரணங்களையோ புரிந்து கொள்ள முடியாமல் போனாலும்,
வேத வ்யாஸரை என்ற மருத்துவரை நம்பி,
மாத்திரைகளை நாம் விழுங்கினாலேயே, அது அதன் பெருமைகளை காட்டும் என்கிறார்கள் மகான்கள்.
வயிறு குளிர்ந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் ஆசிர்வாதம் செய்தால், இன்று கூட பலிக்கும்.
வயிறு எரிந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் சபித்தால், இன்று கூட பலிக்கும்.
(வேதம் கற்ற பிராம்மணர்கள் என்று சொல்லும் போது, வேதம் கற்காத லௌகீக பிராம்மணன் என்று எடுத்துக்கொள்ள கூடாது.)
ஜூன் மாதம் வரை, தாங்க முடியாத வெயிலில் தவித்தது தமிழகம்.
ஆதி வரதர் ஜூலை மாதம் 2019ல் வெளி வர, வருண ஜபங்கள் வேத ப்ராம்மணர்கள் ஜபிக்க, வானம் மழை மேகத்துடன் திரண்டது..
வருண ஜபம் செய்து மழையா? என்று கேலி செய்தவர்கள் தலை குனிய, ஜூலை மாதத்தில் மழை கொட்டியதே..
ஜூன் மாதம் வரை தாங்க முடியாத வெயில், ஜூலை மாதத்தில் மழை. சென்னை மாகாணம் இது போன்ற மழையை கண்டதுண்டா?
வருண ஜபம் செய்தால் மழை பெய்யும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
உண்மையான வேதம் கற்ற ப்ராம்மணர்கள் சொன்னால், மழை வருகிறதே..
ப்ராம்மணர்கள் பிராம்மண குலத்தில் பிறந்ததால் மதிக்கப்படுவதில்லை.
ப்ராம்மணர்கள் வேதத்தை கற்றால், மதிக்கப்படுகிறார்கள்.
வேத மந்திரங்கள் மருந்து போன்றது.
அறிவியலால் இன்று வரை கொண்டு வர முடியாத மழையை, வருண ஜபம் செய்து வரவழைக்கும் வேதியர்களை நாம் மதிக்க வேண்டும்.
ஹிந்து தர்மத்தில் நமக்கு சொல்லப்பட்ட எந்த விஷயமும், கடுமையான ஆராய்ச்சி செய்து "ரிஷிகள் என்ற அந்தஸ்தை" பெற்ற மகான்கள் சொன்னது என்பதை நாம் மறக்க கூடாது..
"ரிஷி" என்ற பெயரை பெறுவதற்கு, விஸ்வாமித்திரர் எத்தனை பாடுபட்டார், எத்தனை வருடங்கள் தியானம் செய்தார் என்று பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.
ஹிந்து தர்மத்தில் சொன்ன விஷயங்களை, மகத்தான பெருமைகள் கொண்ட ரிஷிகள் நமக்கு சொன்னார்கள்.
நமக்கு கிடைத்த அற்புதமான டாக்டர்கள் ரிஷிகள், என்பது ஒரு புறம் இருந்தாலும்,
இன்றைய காலத்தில், போலி மதங்கள் நுழைந்து விட்டதால்,
"போலி டாக்டர்களும் உண்டு" என்பதை மறந்து விட கூடாது.
போலி மதங்களில் உள்ள இவர்கள் கொடுக்கும் எந்த உபதேசமும், நமக்கு நன்மை தராது. மோக்ஷமும் கிடைக்க செய்யாது.
நாம் போலி டாக்டரிடம் சிக்கி விட கூடாது.
உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை தேடி சென்று, தெரிந்து கொள்ள ஆர்வம் நமக்கு வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில், அர்த்தம் தெரிந்தவர்கள் எதேச்சையாக நமக்கு சொல்லும் வரை காத்து இருக்க வேண்டும்.
இன்றைய தேதியில் புரியாத காரணத்தால், எக்காரணம் கொண்டும், ஹிந்து தர்மங்களை நாம் விட்டு விட கூடாது..
கேலி செய்ய கூடாது.
"சந்தியா வந்தனம் செய்வது" ப்ராம்மணனுக்கு உள்ள கடமை.
ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும் போது தான், நாம் செய்யும் செயலை ஆர்வத்தோடு செய்ய முடியும்.
சந்தியா வந்தன அர்த்தமும், காரணமும் புரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் கூட நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
ஸ்ரத்தை (ஈடுபாடு) ஆர்வத்தை தூண்டும்.
நாம் செய்யும் காரியத்தில் உள்ள காரணமும் அதன் விளக்கமும் புரிந்து கொண்டாலேயே, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்பட்டு விடும்.
ஆவணி அவிட்டம் ஏன்?
என்ன காரணத்துக்காக செய்கிறோம்? என்று தெரிந்து கொள்ளும் போது, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில்,
பூணல் மாற்றி கொள்ளும் பழக்கம் அந்த காலங்களில் பொற்கொல்லனுக்கும் (goldsmith), சிற்பங்கள் செய்யும் ஸ்தபதிக்கும்(engineer) கூட இருந்தது.
இன்று கூட இவர்களில் பலர் பூணல் அணிந்து கொள்கின்றனர்.
"பிராமணன் மட்டும் பூணல் அணிகிறான்" என்று நினைக்க கூடாது.
பூணலை அறுத்தால், "ஹிந்துக்களின் தர்மத்தை ஒட்டு மொத்தமாக தாக்குகிறார்கள்" என்று தான் அர்த்தம்.
சுயமாக தொழில் செய்யும் அனைவரும் (வைசியன் business),
நாட்டை காக்கும் அனைவரும் (க்ஷத்ரிய)
பூணல் அணிந்து இருந்தனர்.
க்ஷத்ரியனாக அவதரித்த ராமர், கிருஷ்ணர் கூட பூணல் அணிந்து இருந்தார்.
பூணூல் என்றால் என்ன? மூன்று நூல்கள், ப்ரம்ம முடிச்சு எதற்கு? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.
பிராம்மண ஜாதியை தவிர பிறர் ஜாதியில் பெரும்பாலானவர்கள் பூணல் அணிவதை இன்று விட்டு விட்டதால்,
ஆவணி அவிட்டம் என்றாலே "பழைய பூணலை கழட்டி, புது பூணல் அணிவது" என்று பிராம்மணர்களே நினைக்கும் அளவிற்கு ஆகி விட்டது.
இன்று கூட,
ஆவணி அவிட்டத்தில், ஸ்தபதி, பொற்கொல்லர் போன்ற ஒரு சிலர் புது பூணல் அணிந்து கொள்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டனர்.
தங்கள் பழக்கத்தை விட்டு விட்டனர்.
வேத மந்திரங்கள் இல்லாமல் இருந்தாலும், பூணல் அணிந்து இருந்த இவர்கள், இன்று அணிவதில்லை.
இதனால், "பிராம்மணன் மட்டும் தான் பூணல் அணிகிறான்" என்று நினைப்பு பரவி விட்டது.
வேத மந்திரங்கள் இல்லாவிட்டாலும், ஆவணி அவிட்டம் நாளில், பொதுவாக இவர்கள் அனைவரும் புது பூணலை வேதம் அறிந்த ப்ராம்மணர்களிடம் வாங்கி கொண்டு மாற்றி கொள்வார்கள்.
இது ஒரு வழக்கமாக இருந்தது.
அன்றைய காலத்தில் "குரு சிஷ்யன்" என்று சொல்லும் வழக்கம் இருந்தது..
குருவிலும் "போலி குரு" ஏற்பட்டதால், இன்று நல்ல குரு என்று பிரித்து காட்ட "ஸத் குரு" என்று சொல்லி உத்தம குருவை அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது..
போலி மதங்களில் "மைக் எடுத்தவன் எல்லாம் ஸாது" என்று "போலி சாதுக்கள்" அதிகம் உருவான காரணத்தால்,
ஹிந்து மதத்தில் மெய் (உண்மையான) ஞானத்தை உபதேசிக்கும் குருவை "ஸத் குரு" என்று அடையாளப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.
அதே போல,
அன்றைய காலங்களில், ப்ரம்மத்தை (பரமாத்மா வாசுதேவன்) வேதங்களால் உபாசனை செய்பவர்களை "ப்ராம்மணர்கள்" என்று மட்டும் தான் அறியப்பட்டார்கள்.
இன்று பல ப்ராம்மணர்கள் வேதத்தை கொண்டு பிரம்மத்தை உபாசிப்பதை விட்டு விட்டனர்.
இன்று, பல ப்ராம்மணரகள்
- சூத்திர தொழில் செய்வதால் (employee),
- ராணுவம், அரசியல், காவல் துறையிலும் வேலை செய்வதால்,
- சுய தொழில், மருத்துவம் செய்வதால்,
அன்றைய காலத்தில் பயன்படுத்திய ப்ராம்மணன் என்ற சொல்லுக்கு மரியாதை தேய்கிறது.
இதை சமாளிக்க,
வேதத்தை விட்ட இவர்களை "லௌகீக ப்ராம்மணன்" என்றும்,
வேதத்தை இன்றும் உபாசிக்கும் ப்ராம்மணர்களை "வேத பிராமணன்" என்றும் அடையாள படுத்த வேண்டி இருக்கிறது.
வேத ப்ராம்மணர்கள் இன்று வரை மடிசார் (பெண்கள்), பஞ்சகஜம், குடுமி (ஆண்கள்) என்று வெளி வேஷத்தில் ஆரம்பித்து, தான் செய்யும் தொழிலும் வேதம் சம்பந்தப்பட்டதாகவே அமைத்து கொண்டு, அரசாங்க உதவிகள் இல்லாத நிலையிலும், வேதம் ஓதுவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்கள் குடும்பத்தை முடிந்தவரை தர்மத்தில் வைத்து கொண்டு இன்று வரை வாழ்கின்றனர்.
வேதத்தை விட்டு விட்டு வைசியன், சூத்திரன், க்ஷத்ரியன் என்று ஆன லௌகீக ப்ராம்மணர்கள் வேதத்தை விட்டாலும், சந்தியா வந்தனம் செய்ய உரிமை உள்ளவர்கள். கடமையும் கூட.
அன்றைய காலத்தில் வைசியன், க்ஷத்ரியர்கள் கூட சந்தியா வந்தனம் (prayer) என்ற கடமையை செய்தனர்.
சந்தியா வந்தனத்திலும் வேத மந்திரங்கள் உண்டு.
"உபாகர்மா" என்று அழைக்கப்படும் இந்த ஆவணி அவிட்ட நாளில்,
வேத ப்ராம்மணர்கள், "தாங்கள் ஒரு வருடங்களாக தினமும் ஓதி வந்த வேத மந்திரத்துக்கு மீண்டும் ஒரு சக்தியை ஊட்டுகிறார்கள்".
வேத ப்ராம்மணர்கள், மற்ற ஜாதியினருக்கும், லௌகீக ப்ராம்மணர்களுக்கும் தங்கள் கையால் பூணல் கொடுத்து ஆசிர்வதிக்கின்றனர்.
இதனால், நாம் செய்யும் சந்தியா வந்தனம் போன்ற கடமைகளில் உள்ள மந்திரங்கள் மீண்டும் சக்தி பெற்று விடுகிறது"
"உப" என்றால் அருகில், கூடுதலாக என்ற அர்த்தம் கொள்ளலாம்.
"கர்மா" என்றால் செயல்.
ஒரு வருட காலத்தில் மந்திரங்கள் அதன் சக்தியை இழந்து இருப்பதால், அந்த மந்திரங்களின் வீரியத்தை மீண்டும் தூண்டி விட, இந்த "உபாகர்மா" மூலம் மீண்டும் மந்திரங்கள் பிரகாசம் அடைகின்றன என்று சொல்லப்படுகிறது.
வேத மந்திரங்கள் உண்மையில் சக்தியை இழப்பதில்லை.
வேத மந்திரங்கள் சுயமே ப்ரகாசமானது. சக்தி கொண்டது.
அந்த மந்திரங்களை வேத ப்ராம்மணனும் உச்சரிக்கிறான்.
அந்த வேத மந்திரங்களை லௌகீக ப்ராம்மணனும், சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாவை செய்வதன் மூலம் உச்சரிக்கிறான்.
சுயம் பிரகாசமான வேத மந்திரங்கள், தெய்வங்களை ஆகர்ஷிக்கும் வேத மந்திரங்களை, நம் 'எச்சில் வாயால்' சொல்ல வேண்டி இருப்பதால்,
அந்த அசுத்தத்தை நீக்கி மீண்டும் வேத மந்திரத்தின் வீரியம் நமக்கு ஏற்படுவதற்காக செய்யப்படுவதே "உபாகர்மா".
வீட்டுக்கு நல்ல பெயிண்ட் அடித்தும், ஒரு வருடம் ஆனதால், தூசி படிந்து விட்டது.
அந்த தூசியை தட்டி கொஞ்சம், அலங்காரம் செய்து விட்டால், மீண்டும் ப்ளீச் என்று ஆகி விடுவது போல, இந்த "உபாகர்மாவை" ப்ராம்மணர்கள் வேதத்துக்கு ஒரு அலங்காரமாக செய்து கொள்கிறோம்.
"ஆவணி அவிட்டம்" அன்று வேத ப்ராம்மணர்கள் கையால் பூணல் வாங்கி கொண்டு, சங்கல்பம் செய்து கொண்டு,
வேத மந்திரத்துடன் பழைய பூணலை கழட்டி, புது பூணலை மாட்டி கொண்டு, வேத ஆரம்ப மந்திரங்களை சொல்லி உபாகர்மாவை செய்கிறோம்.
அடுத்த நாள் ஏனோதானோவென்று, விளையாட்டாக சந்தியா வந்தனம் செய்தாலும் மந்திரங்கள் உடனே அதன் பலன்களை தரும்.
புதிதாக பூணல் போட்டு கொண்டு வேதங்கள் கற்க ஆரம்பிக்கும் நாளாகவும் ஆவணி அவிட்டம் உள்ளது.
வெயிலில் காய வைத்த தீப்பெட்டியை, 'லேசாக' உரசினால் கூட தீ பற்றி கொள்ளும்.
உபாகர்மா வருடா வருடம் செய்து கொள்வதால், மந்திரங்கள் அதன் சக்தியை பிரகாசமாக காட்டுகின்றன.
சந்தியா வந்தனத்தில் உள்ள ஒவ்வொரு மந்திரமும் பொலிவை பெறுவதால், அரைகுறையாக சொன்னாலும், அதன் பலன்களை காட்டும்.
உபாகர்மா செய்யாமல், தானாக நூல் தானே என்று மாட்டி கொண்டால், மழையில் நனைந்த தீப்பெட்டியை, எத்தனை முறை உரசினாலும் ப்ரயோஜனப்படாதது போல, நாம் ஜபிக்கும் மந்திரங்கள் சக்தி அற்று நிற்கும்.
"ஓம் நமோ நாராயணா", "ஓம் நம சிவாய" போன்ற மந்திரங்கள் யாவருக்கும் பொதுவானது. மகா சக்தி வாய்ந்தது.
நம் எச்சில் வாயால் இறைவன் திருநாமங்களை நாம் உச்சரிக்கிறோம்.
அனைவருக்கும் 'மந்திரங்கள் தீப்பொறி போல பலன் கொடுக்கும்' என்பதாலேயே, ஹிந்துக்கள் அனைவரும் பூணல் அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். ஆவணி அவிட்டம் அன்று அவர்களும் பூணல் மாற்றிக்கொண்டனர்.
தெய்வங்களை மறந்தோம்.
நம் பழக்கங்களை விட்டோம்.
நம சிவாய என்று மந்திரங்கள் சொல்வதை விட்டோம்.
மந்திரங்கள் வீரியம் நம் எச்சில் வாயால் மந்தமாக கூடாதே என்று வேத ப்ராம்மணர்கள் கையால் ஒரு சிறு பூணல் வாங்கி போட்டு கொள்ள மறந்தோம்.
இன்று வேத ப்ராம்மணர்களை மதிக்க மறந்து, தெய்வங்கள் நாம் கூப்பிட்டால் உதவி செய்ய காத்து இருந்தும், அனாதைகளாக திரிகிறோம்.
மீண்டும் மந்திரங்கள் சக்தி பெற, நாம் சொன்னாலும் பலிக்க, ஆவணி அவிட்டம் என்ற நாளில் உபாகர்மாவை செய்து, புது பூணல் அணிந்து கொள்வோம்.
ஹிந்துக்கள் அனைவரும் பூணல் ஏன் அணிந்து இருந்தார்கள்? என்ற ரகசியத்தை உணர்ந்து, வேத மந்திரங்கள் மூலம் அற்புதங்கள் நிகழ்வதை நம்வாழ்வில் காண்போம்.
"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் அனைவரும் ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று சொல்லலாம்.
இதன் அற்புத விளக்கம் இதோ...
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க் நம் குரு.
வாழ்க நம் ரிஷிகள்.
வாழ்க வேதியர்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.
ஆவணி அவிட்டம் அன்று பூணல் மாற்றி கொள்கிறார்கள் ப்ராம்மணர்கள். என்ன காரணம்?
ReplyDeleteபூணுல் அனைவரும் அணிந்தார்கள். இன்று விட்டு விட்டார்கள்..
தெரிந்து கொள்வோமே...
https://www.proudhindudharma.com/2019/08/why-avani-avittam.html