Followers

Search Here...

Tuesday, 9 April 2019

மரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன?. அதன் உண்மையான விளக்கம் என்ன?.. தெரிந்து கொள்வோமே

மரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
அந்த இரு மந்திரங்கள்:
1. 'க்ருத: ஸ்மர'
2. 'அக்னே நய சுபதா ராயே'


'இந்த இரு மந்திரத்தையும் அந்திம காலத்தில், சுவாசம் போகும் போது சொல்ல வேண்டும்' என்று ஈஷோ உபநிஷத் சொல்கிறது.

அர்த்தம் புரிந்து கொண்டு சொல்லும் போது, 'மோக்ஷமும்' கிடைக்கும்.

க்ருத: ஸ்மர' என்ற மந்திரத்தை, சாக கிடக்கும் 'ஜீவன்' சொல்ல வேண்டும் என்று சொல்வது ஆச்சரியமில்லை.
அதே சமயத்தில், வேத உபநிஷத், நமக்காக அதே மந்திரத்தை 'ஈஸ்வரனிடத்திலும்' சொல்கிறது என்பது தான் விசேஷம்.
வெளிப்படையாக அர்த்தம் என்ன? என்று பார்த்தால், 'க்ருத: ஸ்மர' என்ற மந்திரத்தின் உண்மையான அர்த்தம் நமக்கு புரியாது..
ஞான குருவின் உபதேசத்தை கேட்கும் போது, வேதத்தின் உண்மையான அர்த்தம் நமக்கு புரியும்.

'க்ருத: ஸ்மர' என்றால், 'இது நாள் வரை செய்த காரியங்களை நினைத்து பார்' என்று பொதுவான அர்த்தம் தோன்றும்.
இது வேதத்தின் உண்மையான அர்த்தம் கிடையாது...
'க்ருத: ஸ்மர' என்ற வேத சொல்லுக்கு இப்படி அர்த்தம் செய்து கொள்பவர்கள், தங்கள் மரண படுக்கையில், இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே, இப்படி நினைத்து கொள்வார்கள்...
"இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் பிரியப்போகிறது.
இத்தனை காலம் நீ வாழ்ந்த வாழ்க்கையில் செய்த காரியங்களை (க்ருத) நினைத்துப்பார் (ஸ்மர).

எது உருப்படியானது?
எது உபயோகமானது?
வாழும் காலத்தில் பெரிய பெரிய வீடுகள் கட்டிக்கொண்டாய்.
நிறைய பணம் சேர்த்தாய்.
அழகான துணையும் கிடைத்து மணம் செய்து கொண்டாய்.
அருமையான குழந்தைகளை பெற்றாய்.
நல்ல சம்பந்தமாக தன் குழந்தைக்கு மணமும் செய்து கொடுத்தாய்.
ஊர் காரர்களிடம் கண்ணியமாக நடந்து நல்லபேர் வாங்கினாய்.
இன்னும் சிறிது நேரத்தில் 'இறந்தான்' என்று இறந்த காலம் ஆகப்போகிறதே !!
இது வரை நடந்த இந்த அனைத்து விஷயங்களும் இனி உனக்கு ப்ரயோஜனமில்லாமல் போகப்போகிறதே !!"
என்று அறியாமையால் நினைத்து கொள்வார்கள்.

'பணம், குடும்பம், பெருமை' என்று உலக வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்து கொண்டே உயிரை விட்டு, எதை நினைத்து உயிர் விட்டார்களோ, அது சம்பந்தமாகவே மீண்டும் பிறந்து விடுகிறார்கள்.

இந்த உபநிஷத் மந்திரம் (க்ருத: ஸ்மர), இப்படிப்பட்ட உலக காரியங்களை, மரண காலத்தில் 'நினைத்து பார்' என்று சொல்லவில்லை.






வேதத்தை தானாக கற்று கொண்டு, அர்த்தம் புரிந்து கொண்டால், தவறான வழிக்கு இட்டு செல்லும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

வேதஞானத்தில் சிறந்த மகாத்மாக்கள் சொல்லி கேட்டால், வேதத்தின் உட்கருத்து நமக்கு புலப்படும்.

நாம் இறந்த பிறகு, இதுவரை ஏற்பட்ட குடும்பம், செல்வம், புகழ், பெருமையெல்லாம் இத்தோடு முடிந்தது.
'யாருக்கும் யாரும் சொந்தமில்லை' என்று ஆகப்போகிறது.
உயிர்பிரிந்த பின் எங்கேயோ போய் விட போகிறோம்.

அதற்கு பின், போன ஜென்ம உறவுகள் தெரிய போவதில்லை. 
போன ஜென்ம வீடு இது என்றும் தெரிய போவதில்லை. 
எங்கே போய் பிறப்போமோ!!, யார் யாரை சொந்தம் என்று கொண்டாடுவோமோ!! நமக்கு தெரியாது.

நம் கதி (வழி) என்ன என்று ஈஸ்வரனுக்கு தெரியுமே தவிர, நமக்கு தெரியப்போவது இல்லை.
மரண படுக்கையில் கிடக்கும் ஜீவன் 'க்ருத: ஸ்மர' என்று தியானிக்க சொல்லும் போது,
'இத்தனை நாளாக நீ சேர்த்த சொத்துக்கள், உறவுகள் எதுவும் இனி உனக்கு உபயோகப்படாதப்பா...
உன் ஜென்மாவில் ஒரு முறையாவது ஒரு அடியாருக்கு அன்னமிட்டாயா?
உன் ஜென்மாவில் என்றாவது ஒரு நாள், ஸ்ரீ முஷ்ணம் சென்று வராஹ பகவானை சென்று தரிசித்தாயா? 
பாரத தேசம் முழுவதும் கோவிலில் பள்ளி கொண்டு, நீ வருவாயோ என்று உனக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் எம்பெருமானை சென்று, உன் கண் குளிர சேவித்தாயா?
உன் ஜென்மாவில் என்றாவது ஒரு நாள், 4000 பாசுரத்தில் ஒரு பாசுரமாவது உன் வாயால் சொல்லி எம்பெருமனை சேவித்தாயா?
உன் ஜென்மாவில் என்றாவது ஒரு நாள், உன் வாயால் 'ஸ்ரீ மந் நாராயணா' என்று சொன்னாயா?
உன் ஜென்மாவில், பெருமாளே கதி என்று வாழும் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்க்காவது அபிமான பாத்திரமாகவாவது வாழ்ந்தாயா?,
மரணம் நெருங்க போகும் இந்த சமயத்தில், நீ செய்த இப்படிப்பட்ட காரியங்களை நினைத்து பார்' (க்ருத ஸ்மர)
என்று சொல்கிறது வேத உபநிஷத்.

இப்படி உயிர் பிரிய போகும் ஜீவனிடத்தில் 'நீ செய்த காரியங்களை நினைத்து பார்' (க்ருத ஸ்மர)
என்று சொல்லும் உபநிஷத், ஆச்சர்யமாக, பகவான் நாராயணனிடத்திலும் அதே பிரார்த்தனையை செய்கிறது.


பகவான் நாராயணனை பார்த்து, 'க்ருத:  ஸ்மர' என்று நமக்காக கேட்கிறது.
மரண படுக்கையில் இருக்கும் நமக்காக, பரிந்து கொண்டு, வேதம் பகவான் நாராயணனை பார்த்து,
"எம்பெருமானே, இந்த ஜீவனிடத்தில் கர்ம யோகம் செய்தாயா? ஞான யோகம் செய்தாயா? பக்தி யோகம் செய்தாயா? என்று கேட்காதீர்கள்.

இவன் ஒரு நாள், ஏதோ ஒரு வீட்டு காரியமாக வெளியே கிளம்பினான், அப்போது இவன் எதிர்பார்க்காமல், நீங்களே கதி என்று வாழும் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை பார்த்து நமஸ்கரித்து விட்டு சென்றான்.
அவன் உன் அடியாரை அன்று ஒரு நாள் நமஸ்கரித்தான் என்பதை மட்டும் உங்கள் திருவுள்ளத்தில் வைத்து கொண்டு (க்ருத:  ஸ்மர), இந்த ஜீவனுக்கும் ஸத் கதி கிடைக்க செய்யுங்கள்'
என்று பகவானிடத்தில் நம் மோக்ஷத்திற்காக பரிந்து பேசுகிறது வேத உபநிஷத்.

1. 'க்ருத: ஸ்மர'
2. 'அக்னே நய சுபதா ராயே

'க்ருத: ஸ்மர' என்ற வேத மந்திரத்தை, மரண அவஸ்தையை அனுபவிக்கும் ஜீவன் 'ஞாபகத்தில் கொண்டு வருவானா'? என்பது சந்தேகம் என்று அறிந்து ஆழ்வார்கள், பகவானிடம் ஜீவனுக்காக க்ருத: ஸ்மர என்று பிரார்த்திக்கிறார்கள்.
'எம்பெருமானே, நீங்கள் இந்த ஜீவன் செய்த ஸத் காரியங்களை ஞாபகத்தில் (ஸ்மர) வைத்து கொண்டு, அணுகிரஹம் செய்யுங்கள்' என்று பிரார்த்தித்தார்கள்.


'அக்னே நய சுபதா ராயே' என்ற இரண்டாவது வேத மந்திரத்தை,
மரண படுக்கையில் இருக்கும் ஜீவன் சொல்லும் போது,
'பகவானே! என்னை மோக்ஷம் என்ற பெரும் செல்வத்தை அடைய நீங்களே அழைத்து (நய) கொண்டு செல்லுங்கள்'
என்று வேதம் நமக்காக பிரார்த்திக்கிறது.
எத்தனை அற்புதமான ஹிந்து தர்மம்.
எத்தனை கோவில்கள்.
ஹிந்துவாக பிறப்பது பெருமை என்பது ஒரு புறம் இருந்தாலும்,
ஹிந்துவாக இறப்பதும் கூட பெருமை என்று நமக்கு புரிகிறது...

பிறப்பால் வேறு மதத்தில் இருந்தாலும், இறக்கும் போது ஹிந்துவாக இறக்கலாம்.. மோக்ஷம் அடையலாம் என்று தெரிகிறது...

யாவரும் ஹிந்துவாக ஆகி, உலகமே ஒரு குடையில் ஆகட்டும்.
நாராயணனை சரண் புகுவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க சனாதன ஹிந்து தர்மம்

Hare Rama Hare Krishna
Sandhya Vandanam - Afternoon Prayer

Sandhya Vandanam - Morning Prayer




Sandhya Vandanam - Evening Prayer




No comments:

Post a Comment