Followers

Search Here...

Monday, 18 June 2018

உயர்ந்த குணமான பொறுமையால், கோபத்தை வெல்லுபவனே புத்திசாலி

பொறுமை என்பது மிக உயர்ந்த குணமாகும்.

உயர்ந்த குணமான பொறுமையால், கோபத்தை வெல்லுபவனே புத்திசாலி.

கோபம் வந்தவனுக்கு,
இது பேசக்கூடாதது
இது பேசக்கூடியது
இது செய்யத்தக்கது
இது செய்யத்தகாதது என்று விவேகம் இருப்பதில்லை.



கோபம் வந்தவன் தகாத வார்த்தைகளால் குரு, மாதா, பிதா, தெய்வம் இவர்களைக் கூட திட்டி விடுகிறான்.

கோபம் வந்தவன் தன் மனைவியை கூட விபச்சாரி என்று திட்டி விடுகிறான். இப்படி திட்டினால், யாருக்கு அவமானம்?

கோபம் வந்தவன் தன் மகனைப் பார்த்து அல்பாயஸே என்கிறான். மகன் செத்து விட்டால் நிம்மதியாய் இருப்பானா?

கோபம் வந்தவன் தன் மனைவியை பார்த்து விதவையே என்கிறான். தன்னையே திட்டிக்கொண்டதாகும். தான் சாகாமல் மனைவி எப்படி விதவை ஆக முடியும்?

கோபம் வந்தவன் தான் சம்பாதித்த பொருட்களையே தூக்கி எறிந்து உடைத்து பாழாக்குகிறான். யாருக்கு நஷ்டம்?



கோபம் வந்தவன் வீட்டில் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறான். யாருக்கு சிரமம்?

கோபம் வந்தவன் கார்யாலயத்தில் வேலையை விட்டு விடுகிறான். அப்புறம் திண்டாடுகிறான்.

கோபம் வந்தவன் விரோதியை மட்டுமின்றி மனைவி மக்களைக் கூட கொலை செய்து விடுவான்.

முன் கோபிகளுக்கு புத்தி கிடையாது. 
முன் கோபிகளுக்கு இஹமும் இல்லை. பரமும் இல்லை.
கோபக்காரனை யாரும் வெறுப்பார்கள்.
அதிகக் கோபக்காரனிடமும், அனாவசிய கோபக்காரனிடமும் யாரும் பயப்பட மாட்டார்கள். அலக்ஷ்யம் செய்வார்கள். பரிகாசமும் செய்வார்கள். கோபத்தை கிளப்பி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.

உலகத்திலும், குடும்பத்திலும் தன் மதிப்பை இழப்பது தவிர "கோபக்காரனுக்கு" வேறு பயன் கிடையாது.
கோபத்தினால் இவ்வாறு பல தொல்லை உண்டு.


No comments:

Post a Comment