மஹா பாரத சமயத்தில்,
ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)
மஹா பாரத சமயத்தில், ஈரான் வரை பாரத தேசமாக இருந்தது.
ஈரான் நாட்டை தாண்டி இருக்கும் தேசங்களில் கிரேக்கர்களை "யவனர்கள்" என்று அழைத்தனர். இவர்களை மிலேச்சர்கள் என்று அறியப்படுகின்றனர்.
இன்றைய ஈரான் நாடு, மஹாபாரத சமயத்தில், காம்போஜ தேசம், பஹ்லவ தேசம், சாக தேசம் என்று 3 தேசங்களாக அழைக்கப்பட்டது.
பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் போனற தேசங்கள், ரமத தேசம் என்று அழைக்கப்பட்டது.
பஹ்லவ தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.
வேத மார்க்கத்தை விட்டு, மது, மாமிசம் என்று வாழ்க்கை முறை இந்த அனைத்து தேசங்களிலும் பரவி இருந்தது. பொதுவாக இந்த தேசத்தவர்கள் யாவரையும் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர்.
சிறந்த க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள், இந்த காலத்தில் மலேச்சர்களாகி இருந்தனர்.
வேதங்கள் ஓதும் வேதியர்கள் இங்கு வாழ மறுத்தனர்.
இந்த காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டான்.
சாக தேசம், காம்போஜ தேசம், பஹ்லவ தேச படைகள், க்ருபாச்சாரியார் தலைமையில் போர் புரிந்தனர்.
சிவபெருமான் வழிபாடு அதிகம் இருந்த தேசமாக இருந்தது சாக தேசம். பின்னர் மிலேச்சர்கள் ஆகினர்.
யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு திக்விஜயமாக வந்த பீமன், சாக தேச அரசர்களை பீமன் போர் செய்து அடக்கினான்.
சாகர்கள் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொள்ள வந்தனர். கொண்டு வந்த பரிசுகளை கொடுக்க மாளிகையின் வாசல் வரை சென்று வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. இவர்களுக்கு முன்னால் சீன தேசத்தவர்கள், வ்ருஷ்ணி என்ற யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் மேலும் பலர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
சாக படைகள், காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" தலைமையில் போரிட்டனர்.
மஹா பாரத போரில், துரியோதனன் பக்கம் நின்று கடும் போர் புரிந்தனர் ரமத தேச, காம்போஜ தேச, பஹ்லவ தேச, சாக தேச, யவன தேச படைகள். அனைவரையும் அர்ஜுனன் ஒருவனே கொன்று குவித்தான்.
பாரத மண்ணில், காம்போஜ தேசத்தை தான் முதன் முதலில் பிற்காலத்தில் 3000 வருடத்திற்கு பிறகு வந்த கிரேக்க அரசன் அலெக்சாண்டர் கைப்பற்றினான். இதே ஊரில் பாபிலோன் என்ற இடத்தில், உயிர் விட்டான்.
No comments:
Post a Comment