Followers

Search Here...

Wednesday, 27 December 2017

மஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia


மஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia

சீன தேசம், ஹன்ஸ் தேசம், ரிஷிக தேசம், துஷார தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய சீனா, ரஷ்யா போன்ற தேசங்கள்.

இந்த தேசங்கள் மிலேச்ச தேசங்கள் என்று அறியப்பட்டன.

வேத கலாச்சாரம் தெரியாத, வேத கலாச்சார பரம்பரையில் பிறக்காத இவர்கள் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர். இவர்கள் வாழ்க்கை வேத கலாச்சாரத்திற்கு மாறாக இருந்தது.

பாண்டவர்கள் பதரிநாத் (உத்திர பிரதேசம்) நகரில் இருந்து, கடினமான இமாலயத்தை கடந்தனர். அப்பொழுது அங்கு இருந்த சீன தேசத்தை கண்டனர். அங்கிருந்து மேலும் பயணம் கொண்ட பாண்டவர்கள், இறுதியில், புலிந்த தேசத்தை (இமாலய தேசம்) மீண்டும் வந்து அடைந்தனர். புலிந்த தேசத்தவர்கள், இமாலயம் முதல் அஸ்ஸாம் வரை படர்ந்து இருந்தனர்.



ஒரு சமயம், ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்று, த்ரிதராஷ்டிரன் இவ்வாறு கூறினார் "ஸ்ரீ கிருஷ்ணருக்கு சீன தேசத்தில் இருந்து வந்த 1000 மான்களின் தோல், நான் கொடுக்கும் மற்ற செல்வத்துடன், இவைகளையும் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்றார்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக பல தேச அரசர்களை வெற்றி கொள்ள, சகோதரர்கள் புறப்பட்டனர். அர்ஜுனன் ரிஷிக தேசம் சென்று, அங்கு பெரும் போர் மூண்டது. இறுதியில், அர்ஜுனன் வென்று, ராஜசுய யாகத்திற்கு தானமாக அவர்கள் கொடுத்த பல விதமான குதிரைகளை வெற்றியாக கொண்டு சென்றார்.

மஹா பாரத போர் நடக்கப்போவது நிச்சயம் என்று உணர்ந்த கௌரவர்கள் மற்றும் கர்ணன் பல தேச அரசர்களை தன் அணியில் சேர்க்க ஆரம்பித்தனர். கர்ணன், ரிஷிக தேசம் சென்று, படை எடுத்தான். போரில் வென்று, அதற்கு பதிலாக போருக்கு தயாராகும் பொருட்டு, ரிஷிக தேசத்த்தில் இருந்து வரி வசூலித்தான்.



ரிஷிக தேசத்து மிலேச்சர்கள்,
ஹன்ஸ் தேசத்து மிலேச்சர்கள், மஹா பாரத போரில், பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
யுதிஷ்டிரரை காப்பாற்றும் பொறுப்புடன் படைத்தளபதியாக இருந்தார் "த்ருஷ்டத்யும்னன்". த்ருஷ்டத்யும்னன் படை தலைவனாக ஏற்று, ஹன்ஸ் தேச படை வீரர்கள் போரிட்டனர்.

ரிஷிக தேசத்தவர்கள், 3140 BC சமயத்தில், நடந்த இந்த பாரத போரில் கலந்து கொண்டு, பின்னர் சுமார் 3000 வருடங்களுக்கு பின், சுமார் 200 BC சமயத்தில் பலர் ஆப்கான், பலோசிஸ்தான், சிந்து தேசம் (பாகிஸ்தான்) போன்ற தேசங்களில் குடி புகுந்தனர்.

துஷார தேசத்தவர்கள் துரியோதனனுக்கு துணையாக போர் புரிந்தனர். காம்போஜ தேச அரசன், துரியோதனனின் ஒரு சேனை தளபதியாக போரிட்டான். காம்போஜ அரசனுடன், துஷார தேச போர் வீரர்கள் போரிட்டனர்.

No comments:

Post a Comment