Followers

Search Here...

Wednesday, 27 December 2017

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.




கிராட தேசம் என்று பூடான் அழைக்கப்பட்டது.

இமாலய தேசத்தின் மலை தொடரில் இந்த தேசம் இருந்தது.

ப்ரக்ஜ்யோதிச தேசம் என்று அசாம் அழைக்கப்பட்டது.

பௌண்ட்ரக தேசத்தை ஆண்ட பௌண்ட்ரக வாசுதேவன், வங்க தேசத்தின் கிழக்கு பகுதியையும், இந்த கிராட தேசத்தின் சில பகுதியையும் கைப்பற்றி ஆண்டு வந்தான்.

தேவர்கள் மனித குலத்தில் அர்ஜுனன், யுதிஷ்டிரர் என்று பிறந்தது போல, அசுரர்களும் மனித குலத்தில் பிறந்தனர்.
பாணாசுரன் என்ற அசுரனுடன், நரகாசுரன் நட்பு கொண்டிருந்தான்.

நரகாசுரன் ப்ரக்ஜ்யோதிச தேசத்தை கடகாசுரன் என்பவனிடம் இருந்து கைப்பற்றினான். அந்த தேச பெண்கள் மிகவும் அவதியுற்றனர். 


16000 இளவரசிகளை பிடித்து வைத்திருந்தான். இதனை கண்ட சத்யபாமா, ஸ்ரீ கிருஷ்ணரிடம் நரகாசுரனை வதம் செய்ய சொன்னாள்.

சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ப்ரக்ஜ்யோதிச தேசத்தை அடைந்தார்.
நரகாசுரனின் 11 அக்சௌனி சேனையை அழித்தார். முரா என்ற அரக்கனை கொன்றார். பின் நரகாசுரனின் தலையை தன் சுதர்சன சக்கரத்தால் சீவினார்.

ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிசம் சென்ற இந்த சமயத்தில், சேடி நாட்டு அரசன் சிசுபாலன் துவாரகை சென்று, நகரில் தீ வைத்து ஓடினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலன் செய்த இந்த கீழ்தரமான செயலையும் மன்னித்தார்.

நரகாசுரன் ஸ்ரீ கிருஷ்ணரிடம், தன் இறந்த நாளை, அதர்மம் அழிந்து தர்மம் காப்பாற்றப்பட்டதன் நினைவாக, அனைவரும் கொண்டாட வேண்டும் என்று பிரார்த்தித்தான். நரகாசுரன் கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியா மட்டுமில்லாமல், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இந்த தீபாவளி திருநாள் இன்று வரை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

பின்னர் பாணாசுரன் என்ற அசுரனும், ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப்பட்டார்.

நரகாசுரனின் மகன் "பகதத்தன்" அரசனானான்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாத்திற்கு, அர்ஜுனன் பல தேசங்களுக்கு திக்விஜயம் செய்தான். இந்த தேசத்திற்கு வந்து, பகதத்தனை தோற்கடித்தான்.
பகதத்தன், மற்ற அனைத்து இமாலய தேச அரசடகளுடன் சேர்ந்து, யுதிஷ்டிரரின் ராஜசுய யாத்தில் கலந்து கொண்டான்.

மஹாபாரத போரில், பகதத்தன் துரியோதனின் பக்கம் நின்று போரிட்டான்.

கிராட தேசத்தவர்கள் துரியோதனின் பக்கம் நின்று படு பயங்கர போர் புரிந்தனர். 
இவர்கள் பிரக்ஜ்யோதிச (அசாம்) அரசன் 'பகதத்தா'வின் ஒரு அக்ஷௌனி சேனையின் பகுதியாக அணி திரண்டு இருந்தனர்.




பகதத்தனை போரில் அர்ஜுனன் கொன்றார்.

No comments: