மஹாபாரத சமயத்தில் பஞ்சாப் : Punjab
பாஞ்சால தேசம், த்ரிகர்த தேசம் ஆகிய தேசங்கள் இன்று இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலம்.
த்ரிகர்த தேசம் என்பது சட்லஜ், இரவி, பீஸ் என்ற 3 நதிகள் சுற்றி அமைக்கப்பட்ட தேசம்.
த்ரிகர்த தேச அரசர் "சுசர்மன்" துரியோதனன் பக்கம் நின்று போரிட்டார். விராட (நேபாளம்) தேசத்தையும், பாண்டவர்களையும் எதிரிகளாக நினைத்தார்.
பல முறை விராட தேசத்துடன் போர் புரிந்து, தோல்வி அடைந்த காரணத்தால், இவர்களிடம் ஒரு பகையை கொண்டிருந்தான். விராட தேச படை தலைவன் கீசகன், சுசர்மனை பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.
விராட தேசம் இன்று நேபால் என்று அழைக்கப்படுகிறது.
பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில் கடைசி 1 வருடம் அஞான வாசம் விராட தேசத்தில் இருந்தனர். யுதிஷ்டிரர் விராட ராஜாவுக்கு உதவியாளனாக, பீமன் சமையல்காரனாக, அர்ஜுனன் நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, திரௌபதி விராட ராணிக்கு வேலைக்காரியாகவும், நகுலன் மற்றும் சகாதேவன் குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.
விராட அரசனின் மகன் "கீசகன்" திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். இதனை பீமனிடம் சொல்ல, கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் வயிற்றுக்குள் தள்ளி, ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.
கீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்". இப்படி ஒரு பலம் பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.
குரு தேச இளவரசன் துரியோதனன், கர்ணன், த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.
விராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.
மஹா பாரத போரில், 12ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் யுதிஷ்டிரரை கொல்ல வியூகம் வகுத்தார். இதற்கு பெரும் தடையாக இருந்தார் அர்ஜுனன். அர்ஜுனனின் கவனத்தை திருப்ப, த்ரிகர்த தேச அரசன் சுசர்மனை அவர் படைகளுடன் தடுக்க சொன்னார். காலை ஆரம்பித்த போரில், மதியத்திற்குள், படைகள் அனைத்தையும் வீழ்த்தி, சுசர்மனை தோற்கடித்து, முன்னேறினான்.
13ஆம் நாள் போரில், துரோணர் சக்ரவ்யூஹம் அமைத்தார். அர்ஜுனன் மீண்டும் த்ரிகர்த தேச அரசன் சுசர்மனிடம் போர் செய்து பல ஆயிரம் வீரர்கள் தனி ஒருவனாக போரிட்டு கொன்றான்.
மஹா பாரத சமயத்தில், 'த்ருபதன்' பாஞ்சால தேச அரசனாக இருந்தார்.
த்ருபதனும், துரோணரும் இள வயதில் ஒன்றாக "பரத்வாஜ" மகரிஷியிடம் படித்தனர்.
"பரத்வாஜ" மகரிஷியின் மகன் "துரோணர்".
படித்து முடித்த பின், ஒரு சமயம் ஏழை "துரோணர்", தன் நண்பன் த்ருபதனை காண பாஞ்சால தேசம் சென்றார். அரசனாக இருந்த த்ருபதன் சரியாக மதிக்கவில்லை. இதனால் அவமானம் அடைந்த துரோணர், இதற்கு பதில் கொடுக்க, தன் சிஷ்யனான அர்ஜுனனை அனுப்பி த்ருபதனை போரிட்டு தோற்கடித்தார்.
அர்ஜுனன் போன்ற வீரனுக்கு ஒரு மகளும், தன்னை அவமானப்படுத்த நினைத்த துரோணரை கொல்ல ஒரு மகனும் வேண்டும் என்று வேள்வி நடத்தி, அக்னியில் இருந்து த்ருஷ்டத்யும்னன் மற்றும் துரௌபதி இளமையுடன் தோன்றினர்.
இதனால் இருவருக்கும் பகை உணர்வு எழுந்தது.
த்ருபதனுக்கு 11 குழந்தைகள். இதில் முக்கியமானவர்கள் த்ருஷ்டத்யும்னன், சிகண்டி, துரௌபதி, உத்தமௌஜ, யூதாமன்யு ஆகியோர்.
துரௌபதியை சுயம்வரத்தில் போட்டியில் ஜெயித்து, அர்ஜுனன் மணமுடித்தான்.
மஹாபாரத போரில், துரோணர் 15ஆம் நாள் போரில் த்ருபதனை கொன்றார்.
பின்னர் தொடர்ந்து நடந்த போரில், த்ருஷ்டத்யும்னன் துரோணர் தலையை சீவினான்.
கடைசி நாள் யுத்தத்தில், துரோணர் மகன் 'அஸ்வத்தாமா", த்ருஷ்டத்யும்னன், சிகண்டி, உத்தமௌஜ, யூதாமன்ய ஆகிய அனைவரையும் போரில் கொன்றான்.
கடைசி நாள் போரில் துரியோதனனும் வீழ்த்தப்பட்ட, ஆத்திரம் கொண்ட அஸ்வத்தாமா, போர் முடிந்த அந்த ராத்திரியில், படுத்துக்கொண்டிருந்த துரௌபதியின் 5 மகன்களை, பாண்டவர்களை என்று நினைத்து, தூங்கிக்கொண்டிருக்கும் போது கொன்று விட்டான். இதை போர் களத்தில் வீழ்ந்து மரணத்திற்காக காத்திருந்த துரியோதனனிடம் போய் சொல்ல, துரியோதனன் 'போர் முடிந்த பின், எஞ்சி இருந்த வாரிசையும் இப்படி அழித்து விட்டாயே!!' என்று கோபப்பட்டான்.
No comments:
Post a Comment