ஆத்மா உள்ளே இல்லை என்றால், உடலுக்கு பிணம் என்று பெயர்.
இந்த ஆத்மா உள்ளே இருக்கும் வரை நாம் ஜீவிக்கிறோம்.
ஆத்மா யாருக்கும் அடிமைப்பட்டவன் இல்லை என்பதாலேயே, நாம் வாழ ஆசைப்பட்டாலும், ஆத்மா கிளம்ப முடிவெடுத்து விட்டால், மரணம் வந்து விடுகிறது.
பரவாசுதேவனின் 5 வித அவதாரங்களில், அந்தர்யாமி என்ற அவதாரமே இந்த ஆத்மா. ஆத்மா உள்ளே இருக்கும் வரை பெருமை, புகழ், பணம் கிடைக்கிறது.
ஆத்மா ஒன்று இருப்பதால் தான், புத்தி வேலை செய்கிறது,
ஆத்மா ஒன்று இருப்பதால் தான், உடல் உழைக்கிறது.
ஆத்மா ஒன்று இருப்பதால் தான், கண் பார்க்கிறது என்ற உண்மையை அறியாதவர்கள் (அஞானிகள்), ஆத்மா தான் செய்கிறான் என்பதை மறந்து, நான் செய்கிறேன், என் புத்தி கொண்டு செய்கிறேன் என்று சுய பெருமை பேசுகிறார்கள்.
நான் செய்கிறேன் என்ற அகம்பாவம் வந்ததினாலேயே, பாவம், புண்ணியம் சேர்ந்து விடுகிறது. மறு பிறவிக்கு வித்திடுகிறது.
ஆத்மா தான் புத்தியை எழுப்பிகிறார், கண்ணை பார்க்க செய்கிறார்.
அவர் கிளம்பி விட்டால், அனைத்தும் அடங்கி விடும் என்ற உண்மையை அறிந்தவனே ஞானி எனப்படுகிறான்.
வாசுதேவனே கர்த்தா (செய்கிறார்) என்ற உண்மையை உணர்ந்து, புகழோ, இகழ்வோ ஏதுவாக இருந்தாலும், ஆத்மாவாகிய அந்த நாராயணனே செய்கிறார் என்று கர்வப்படாமல் அமைதியாக இருக்கிறான் ஞானி.
கர்மாவை ஈஸ்வரன் செய்கிறார், என்ற ஞானம் உள்ள ஞானி, செய்யும் கர்மாக்களை அந்த ஈஸ்வரனே எடுத்துக்கொள்வதால், பாவம் புண்ணியம் இரண்டையும் சேர்க்காமல் வாழ்கிறான்.
அந்த பிறவி முடிந்தவுடன், பாவ புண்ணியம் இல்லாததால், மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார் பெருமாள்.
நாராயணனே செய்கிறார், ஆதலால், பலன்களும் அவருக்கே என்ற எண்ணத்துடன் எந்த கர்மாவையும் செய்தோமானால், அந்த கர்மா அவனை பந்தப்படுத்தாது.
அவன் செய்யும் அனைத்து கர்மாவும் (செயல்களும்) அவனுக்கு மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுக்கும்.

No comments:
Post a Comment