பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்வதால்,
தனக்காகவும், மற்ற அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறான்.
வருடத்தில் ஒரு முறை மாலை போட்டு, ஐயப்ப மலை செல்பவர்கள் உணவு, ஒழுக்கம், இறை வழிபாடு, ஆடை என்று அனைத்திலும் இறை சம்பந்தமாகவே இருப்பதால், ஜாதி பேதம் இல்லாமல், அந்த மாலை போட்ட சமயத்தில், அனைவரையும் "சாமி" என்றும் "ஸ்வாமி" என்றும் மரியாதையுடன் அழைக்கிறோம்.
மற்ற ஜாதியில் பிறந்து இறை வாழ்க்கை வாழ்பவர்கள், மகான் என்றும் சொல்லி அனைவரும் வணங்குகிறோம்.
ப்ராம்மணர்கள் வாழ்நாள் முழுவதுமே இப்படி உணவு கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆடை, வழிபாடு அனைத்திலும் இறை சம்பந்தமாகவே இருந்ததால், பொதுவாகவே ப்ராம்மணனை எப்பொழுதுமே, "சாமி" என்றனர்.
இன்றைய பிராம்மணன் இந்த மதிப்பை இழக்க காரணம் அவர்களே காரணம் ஆகின்றனர். ஒழுக்கம் இல்லாத, உணவு கட்டுப்பாடு இல்லாத, வழிபாடு இல்லாத வாழ்க்கை வாழும் பிராம்மணன் மதிப்பை இழக்கிறான்.
மற்றவர்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய முடியாமல் போனாலும், பிராம்மணனை மற்றவருக்காகவும் சேர்த்து தினமும் பிரார்த்திக்க வேண்டும் என்று விதிக்கப்படுகிறான்.
இதற்கு சந்தியா வந்தனம் பிராம்மணனின் கடமையாக விதிக்கப்படுகிறது. விதிக்கப்பட்டது என்பதாலேயே, இதை செய்தே ஆக வேண்டும் என்றும் தெரிகிறது.
இன்றைய பிராம்மணன் குடும்பத்தில், பஞ்சாத்ரம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பிராம்மணன் என்ற போர்வையில் வாழ்கிறான்.
சந்தியா வந்தனம் செய்வது பிராம்மணர்களிடையே குறைந்து வருகிறது. அவன் தனக்காகவும், பிறருக்காகவும், குழந்தைகள், பிராம்மண பெண்கள் உள்பட, அனைவருக்காகவும் செய்ய வேண்டிய இந்த கடமையை முடிந்தவரை செய்ய வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வருத்தப்படவாவது வேண்டும்.
இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்தால், அதன் அர்த்தம், அதன் நோக்கம், சந்தியா வந்தனம் செய்ய ஆசை தூண்ட வாய்ப்புள்ளது.
சந்தியா வந்தனத்தில், முடிக்கும் போது கூட, பகவானிடம் பிராம்மணன் தனக்காகவும், பிறருக்காகவும் பிரார்த்தனை செய்வது போல வருகிறது.
கடைசியாக சொல்லும் ரக்ஷை என்ற பிரார்த்தனையில்,
"இப்பொழுது எங்களுக்கு சந்ததியுடன் கூடிய சௌபாக்யத்தை அருள வேண்டும்.
கெட்ட கனவின் நிமித்தத்தையும், பலனையும் விலக்கி அருள வேண்டும்.
சூரிய நாராயணா பகவானே! எல்லாப் பாவங்களையும் விலக்கி அருள வேண்டும்.
எது உயர்ந்த நன்மையோ அதை எங்களுக்கு கூட்டிவைத்து அருள வேண்டும்."
அத்யா நோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீ: சௌபகம் !
பரா துஷ்வப்னியஹும் ஸூவ !
விச்வானி தேவ ஸவிதுர் துரிதானி பரா ஸூவ !
யத் பத்ரம் தன்ம ஆஸூவ !!
இப்படி தினமும் மற்றவர்களும், தானும் நலமாக இருக்க பிரார்த்திக்க சொல்கிறது.
சுயநலம், அலட்சியம், அர்த்தம் புரிந்து கொள்ள ஆசையின்மை இவையெல்லாம் சேர்ந்து, பிராம்மணன் தனக்கு விதித்த கடமையை செய்யாமல் காலம் கழிக்கிறான்.
முடிந்த வரை பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆசை பட வேண்டும். பிறருக்காகவும் பிரார்த்ததனை செய்ய கொடுத்த வாய்ப்பை பிராம்மணன் தன் வாழ்க்கையில் தவற விட கூடாது. செய்யாவிட்டால், பிராம்மணனாக பிறவி கிடைத்ததை வீணாக்குகிறான்.
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka
No comments:
Post a Comment