Followers

Search Here...

Tuesday, 28 June 2022

ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம். அந்நியர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ராஜ தர்மம். அது என்ன...அறிவோம். ஒரு எதிரியை சமாளிப்பது எப்படி? ஒரே சமயத்தில், இரண்டு எதிரிகளை சமாளிப்பது எப்படி? அறிவோம் ராஜ தர்மம்.

பிரித்து ஆளும் கொள்கை (பேத நீதி) 

  • ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம்.
  • ஹிந்துக்கள் மீது அந்நியர்கள் பயன்படுத்தி இன்று வரை வெற்றி காணும், ராஜ தர்மம்.

ராஜ தர்மத்தில் "சமாதானம், தானம், பேதம், தண்டனை" என்ற 4 நீதிகள் உண்டு. 

'இந்த வரிசையில் தான் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும்' என்பது விதி.


'தண்டனை நீதி, மற்ற மூன்று நீதியும் பயனற்று போகும் போது தான் செயல் படுத்தப்பட வேண்டும்' என்பது விதி.


ராஜ தர்மமான இந்த பேத நீதி கொள்கையை ஹிந்துக்கள் பயன்படுத்திய வரை, பாரத தேசம் அந்நியர்களுக்கு அடிபணியவில்லை

அதை சரியாக பயன்படுத்தாமல் போனதும், ஹிந்து தேசமான பாரத தேசம் பல துன்பங்களை எதிர்கொண்டது.

அந்நியர்கள் ஹிந்துக்கள் மீதே பேத நீதியை பயன்படுத்தி சக ஹிந்துக்களிடம் குழப்பத்தை, பொறாமையை ஏற்படுத்தி பிரித்தார்கள். 

'எட்டப்பன்' போன்ற ஹிந்துவை பேத நீதியை கொண்டு பிரித்து, வீரபாண்டிய கட்டபொம்மனை கொன்றார்கள். 

வெற்றி கண்டார்கள். இன்று வரை பேத நிதியை பயன்படுத்தி ஹிந்துக்களை பிரிக்கிறார்கள்.

எதிரிகளிடமிருந்து காத்து கொள்ள, பிரித்து ஆளும் கொள்கையை ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். 

ஹிந்துக்கள் ராஜ தர்மமான பேத நீதியை புரிந்து, பயன்படுத்த வேண்டும்.


இது சம்பந்தமாக, பீஷ்மரிடம் யுதிஷ்டிர மஹாராஜன் கேட்ட போது, இவ்வாறு பீஷ்மர் சொன்னார்.

क्षेत्रस्थेषु च सस्येषु शत्रॊर उपजपेन नरान

विनाशयेद वा सर्वस्वं बलेनाथ सवकेन वै

- மஹாபாரதம் (வியாசர்)

பல வழிகளை பயன்படுத்தி, எதிரியின் பக்கமுள்ள ஜனங்களை பிரிக்க (பேதம்) வேண்டும். இப்படி பிரிக்கப்பட்ட எதிரியின் மக்கள் கூட்டத்தை கொண்டே,  எதிரிகளை அழிக்க வேண்டும். தேவைப்பட்டால், சேனையையும் சேர்த்து கொண்டு அழிக்க வேண்டும்.

नदीषु मार्गेषु सदा संक्रमान् अवसादयेत्

जलं निस्रावयेत् सर्वम् अनिस्राव्यं च दूषयेत्

- மஹாபாரதம் (வியாசர்)

எதிரிகள் தேசத்துக்குள் நுழைய நதியில் போட்ட பாலங்களை உடைத்து விட வேண்டும். தாக்க வரும் எதிரிகளுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத படி, குளங்களை உடைத்து, அதில் உள்ள நீரை  ஓட செய்ய வேண்டும்.

तदात्वेनायतीभि: च विवदन् भूम्यनन्तरम्

प्रतीघातः परस्याजौ मित्र काले अपि उपस्थिते

- மஹாபாரதம் (வியாசர்)

நமது எதிரியிடம் பகை உள்ளவன் யார்? என்று தெரிந்து கொண்டு, நமது எதிரியை வெல்லத்தக்கவன் யார்? என்று தெரிந்து கொண்டு, அவர்களிடம் நாம் நட்பு செய்து கொண்டு வசிக்க வேண்டும்.


வியாசரின் மஹாபாரதம் படிக்கும் போது நமக்கு ராஜதர்மத்தின் வழிகள் தெரிந்து விடும். 

1.

நமக்கு ஒரே ஒரு எதிரி இருந்தால், எப்படி சமாளிக்க வேண்டும்? 

தண்ட நீதி முடிந்தவரை எடுக்க கூடாது. அது இரு பக்கமும் அழிவை தரும்.

முதலில் சமாதானம் பேசியும், தானம் செய்தும், பார்க்க வேண்டும். 

எதிரி அப்பொழுதும் அடங்கவில்லையென்றால், பிரித்து ஆளும் கொள்கையை ஹிந்துக்கள் கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும். 

பேத நீதியை பயன்படுத்தாமல், தண்ட நீதியில் இறங்கவே கூடாது. 

இது ராஜதர்மம்.


எதிரியின் பக்கம் இருக்கும் மக்களை, பொறாமை, வெறுப்பு, ஏற்றத்தாழ்வு என்று பல வழிகள் மூலம் எதிரியின் மக்களை பிரித்து விட வேண்டும். 


இந்த நீதியை ஹிந்துக்கள் பயன்படுத்தாத காரணத்தால், இன்று தன்னை எதிர்ப்பவர்களை சமாளிக்க வழி புரியாமலும், ஹிந்துக்களிடையே ஒற்றுமையை பிறர் சீர்குலைப்பதை பார்த்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. 


இந்த ராஜ தர்மத்தை, நம் மீது அந்நியர்கள் பயன்படுத்துகிறார்கள். நாம் நம்முடைய ராஜ தர்மமான பேத நீதியை பயன்படுத்துவதில்லை. 

இதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.


ஜாதி வித்யாசம் சொல்லி, தீண்டாமை சொல்லி, கல்வி மறுப்பு என்ற புரளியை கிளப்பி, பிராம்மண வெறுப்பை உண்டாக்கி, ஹிந்து தெய்வத்தை கேலி செய்து - மேலும் பல வழிகளை பயன்படுத்தி ஹிந்து மக்களை பிரித்து ஆளும் கொள்கையை இன்று வரை செய்கின்றனர். 

பீஷ்மர் காட்டிய அற்புதமான பேத நீதியை ஹிந்துக்கள் கடைபிடிப்பதில்லை. அந்நியர்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை கவனிக்க வேண்டும். 

இதை ஹிந்துக்கள் சரிவர திரும்ப பயன்படுத்தும் போது, எதிரியின் பலம் தானாக குறையும்.

2.

ஒரே சமயத்தில் இரண்டு எதிரிகள் நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? எப்படி பிரித்து ஆளும் கொள்கையை (பேத நீதி) பயன்படுத்த வேண்டும்?

இரண்டு எதிரிகள் சேர்ந்து நம்மை தாக்கும் போது, இருவரையும் நாம் தண்ட நீதி கொண்டு தாக்குவது என்பது சரியான வழி அல்ல.

முதலில் எதிரிகள் இருவரையும் பிரிக்க வேண்டும்.

அவர்கள் நட்பாக விடாமல், பிரித்து ஆளும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஒரு எதிரியிடம் மற்றொரு எதிரியின் எதிர்மறையான கொள்கையை காட்டி, அவர்களிடம் இருக்கும் பொறாமை, வெறுப்பை காட்டி உணர்ச்சியை தூண்ட வேண்டும். எதிரிகளுக்குள்ளே வெறுப்பை உண்டாக்க வேண்டும். 


இப்படியே இருவருக்கும் உள்ள பகையை வளர்த்து, அவர்களுக்குள் சண்டை ஏற்பட செய்ய வேண்டும்.


இப்படி சரியாக பேத நீதியை கையாளும் போது, நாம் சண்டையிட அவசியமில்லாமல், இவர்களே அடித்து கொண்டு மடிவார்கள்.


மஹாபாரத போர் முடிவான போது,

ஸ்ரீ கிருஷ்ணர்,

- சமாதானம் பேசி சண்டையை தடுக்க தூது சென்றார். பலிக்கவில்லை.

- 'தானமாக 5 கிராமம் மட்டும் கொடு, சண்டை வேண்டாம்' என்கிறார். அதுவும் பலிக்கவில்லை.

- துரியோதனனின் பக்கம் இருந்த கர்ணனிடம், 'அவன் தாய் யார்?' என்று சொல்லி பேதம் செய்ய முயற்சித்தார். துரியோதனன் பலத்தை குறைக்க பார்த்தார். அதுவும் பலிக்கவில்லை.

- இறுதியாக தண்ட நீதி எடுத்து பாண்டவர்கள் போர் செய்தனர். சாம, தான, பேத தர்மம் முயற்சி செய்த பிறகு போருக்கு வந்ததால், தெய்வமே பாண்டவர்கள் பக்கம் இருந்து, காப்பாற்றி, யுதிஷ்டிரனை அரசனாக்கினார்.

பேத நீதியை அதற்கு பிறகு ஹிந்துக்கள் கவனிக்காமல் விட்டனர்.

அந்நியர்கள் அனைவரும் இன்று வரை ஹிந்துக்கள் பேத நீதி பயன்படுத்தி, பிரித்து ஆளுகின்றனர்.


ஹிந்துக்கள் பேத நீதியை கையில் எடுக்கும் போது, எதிரிகள் தானாக குறைவார்கள்.  

Monday, 13 June 2022

திவ்ய தேச யாத்திரை எப்படி செல்ல வேண்டும்? முதன் முதலில் திவ்ய தேச யாத்திரை செய்தவர் யார்? பெருமாள் ஒருவர் தானே! ஒவ்வொரு கோவிலிலும் பெருமாள் எப்படி வித்தியாசப்படுகிறார்? தெரிந்து கொள்வோம்

பக்தன் எப்படி இருக்க வேண்டும்

திவ்ய தேச யாத்திரை எப்படி செய்ய வேண்டும்? யாரை போல செய்ய வேண்டும்? 

ஒரே பெருமாள் தான். 

ஒரே தாயார் தான். 

திவ்ய தேசம், திவ்ய தேசமாக ஒவ்வொரு பெயருடன் பெருமாளும் தாயாரும் ஏன் இருக்கிறார்கள்?


'திவ்ய தேசம் திவ்ய தேசமாக பெருமாள் தாயாரோடு எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் ஓடி ஓடி சென்று மண்டி கிடப்பான்', பக்தன்.


உறவினரை பார்க்க கிளம்பினாலும், அந்த வழியில் பெருமாள் கோவில் இருந்தால், "சற்று பார்த்து விட்டு போகலாமே" என்று நினைப்பான் பக்தன்.

சரீர பந்துவை பார்க்க ஊருக்கு சென்றாலும், நமது ஆத்ம பந்துவான் பெருமாள் போகும் வழியில் இருந்தால், பக்தனால் பார்க்காமல் எப்படி செல்லமுடியும்?


இப்படி 'பெருமாளையே மண்டி கிடப்பதில் ஏற்படும் சுகம் எதிலும் கிடையாது' என்று பக்தன் நினைப்பான். 

திவ்ய தேச பெருமாளை பார்த்தால் தானே, இந்த அனுபவம் புரியும்.


ஆசையோடு வரும் பக்தன், 'பெருமாள் தம்மிடம் பேசும் அழகையும், தம்மை உபசரிக்கும் அழகையும், தம்மை கொண்டாடுவதையும்' அனுபவிக்கிறான்.


வேறு என்ன வேண்டும் நமக்கு?

பெருமாள், "மோக்ஷம் வேண்டுமென்றால், அஷ்டாங்க யோகம் செய்தாயா?" என்றா கேட்கிறார்.

திருக்கண்டியூர், திருவரங்கம், திருவெள்ளியங்குடி என்று திவ்ய தேசம் திவ்ய தேசமாக அலைந்து கொண்டிருந்தால், பெருமாள் நமக்கு மோக்ஷம் கொடுக்காமல் போய் விடுவாரா என்ன?

கிருஷ்ண அவதார சமயத்தில் திவ்ய தேசங்கள் எல்லாம் துவாரகையிலேயே இருந்ததாம்.


16108 தேவிகள் கிருஷ்ணருக்கு.

துவாரகையில் 16108 தேவிக்கும் தனித்தனி அரண்மனை. ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணரே 16108 கிருஷ்ணனாக இருந்து ஆச்சர்யமாக குடும்பம் நடத்தினார்.

முதன்முதலில் திவ்ய தேச யாத்திரையை தொடங்கியவர் நாரதர்.


நாரதருக்கு ஒவ்வொரு வீடாக சென்று ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி இருக்கிறார்? என்று பார்க்க ஆசை ஏற்பட்டது.


ருக்மிணி தேவியின் அரண்மனையில் நாரதர் நுழைந்தபோது, கிருஷ்ணர் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அந்த தேவி வெற்றிலை மடித்து கொடுத்து கொண்டிருந்தாள்.

அங்கு நாரதர் வருவதை பார்த்ததும், ஓடி வந்து இருவரும் உபசாரம் செய்தார்கள்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று அங்கு சென்றார். 

அந்த அரண்மனையில், கிருஷ்ணர் தன் தேவிக்கு வீட்டு காரியங்களில் உதவி செய்து கொண்டிருந்தார்.

அங்கு நாரதர் வருவதை பார்த்ததும், ஓடி வந்து இருவரும் உபசாரம் செய்தார்கள்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று அங்கு சென்றார். 

அந்த அரண்மனையில், கிருஷ்ணர் தன் குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தார்.

நாரதர் வந்ததை பார்த்ததும், ஓடி வந்து ஆசையோடு கிருஷ்ணர் குடும்பதோடு உபசாரம் செய்தார்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்?" என்று பார்க்க சென்றார்.

அந்த அரண்மனையில், நாரதரை பார்த்ததும், "இன்று அதிதியாக நாரதர் வந்திருக்கிறாரே. அஹோ பாக்கியம்" என்று முகமலர்ச்சியோடு    கிருஷ்ணர் சொல்ல, உடனே அவருடைய தேவி தீர்த்தம் எடுத்து வர, பாத்யம் சமர்ப்பிக்க ஓடோடி வந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

அனைத்து உபசாரத்தையும் பெற்றுக்கொண்ட நாரதர், அந்த அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.

"சரி, அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று மேலும் சென்றார். 

அந்த அரண்மனையில் தேவியே ஓடிவந்து "ஸ்ரீகிருஷ்ணர் இப்போது தான் எண்ணெய் தேய்த்து குளிக்க சென்றிருக்கிறார். இப்போது வந்துவிடுவார்" என்று சொல்லி வரவேற்று, நாரதருக்கு ஆசனம் கொடுத்து அமர செய்தாள். வேகவேகமாக குளித்து விட்டு, நாரதரை வரவேற்க ஓடிவந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


நாரதரின் தந்தையான பிரம்மாவை முன்பு மோஹிக்க செய்ததாக கேள்விப்பட்டு இருக்கிறார் நாரதர்.


இப்படி 16108 தேவியின் வீட்டுக்கும் நாரதரே சென்று பார்க்க, ஸ்ரீ கிருஷ்ணரும், அவருடைய தேவியும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக பழகி ஆனந்தப்படுத்தியதை பார்த்து பிரமித்து போய், "பிரம்மாவுக்கும் கிடைக்காத பாக்கியத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு கொடுத்தாரே!" என்று மோஹித்து விட்டார் 


"திவ்ய தேசங்களுக்கு நாம் எத்தனை ஆவலோடு செல்ல வேண்டும்" என்று காண்பித்தார் நாரதர்.

ஸ்வரூபத்தில் ஒரே பெருமாள் தான், ஒரே தாயார் தான். 

"திவ்ய தேசம், திவ்ய தேசமாக ஒவ்வொரு பெயருடன் பெருமாளும் தாயாரும் ஏன் இருக்கிறார்கள்?" என்ற ரகசியத்திற்கு காரணத்தை கிருஷ்ண அவதாரத்தில் காட்டினார்.


திவ்ய தேசங்கள் செல்லும் போது, "இங்கு தாயார் எப்படி இருக்கிறாள்? இங்கு பெருமாள் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?" என்று நாரதர் ஆவலோடு சென்றது போல நாமும் செல்ல வேண்டும்.


இந்த ஆவலோடு, 

"பெருந்தேவி தாயாரோடு காஞ்சியில் பெருமாள் எப்படி இருக்கிறார்?

திருவரங்கத்தில் பெரிய பிராட்டியோடு எப்படி இருக்கிறார்? 

இப்படியே திருக்கண்டியூர் சென்று பார்ப்போமா?" என்று திவ்ய தேசம், திவ்ய தேசமாக அலைந்து கொண்டே இருந்தால், வைகுண்டமும் வேண்டுமோ?

நமக்கு அஷ்டாங்க யோகமும் வேண்டாம்,

யம நியம ஆசனங்களும் வேண்டாம்.

வேதாந்தம் நமக்கு வரட்டும், வராமல் கூட போகட்டும்.

பக்தியே கூட நமக்கு வரட்டும், வராமல் கூட போகட்டும்.

சுத்தமான அஞானியாகவே இருந்து விட்டு போவோம்.

கோவில் கோவிலாக சென்று, பிரசாதம் வாங்கி சாப்பிடும் கோஷ்டியாக கூட ஆகலாமே!

திவ்ய தேசம் எங்கே? திவ்ய தேசம் எங்கே?  என்று தேடி தேடி, அங்கேயே மண்டிக்கிடக்கும் பாகவதர்களின் திருவடிகளில் போய் விழுவோமே. அவர்கள் பாததுளி நம்மீது விழட்டுமே.


உலகத்தில் நடக்கும் நல்லதும் தெரியாது, கெட்டதும் தெரியாது. இவர்களிடம் வம்பு பேச்சும் கிடையாது.

'திவ்ய தேசம் திவ்ய தேசமாக சென்று பெருமாளையும், தாயாரையும் பார்ப்பதே லட்சியம்' என்று இருக்கும் இவர்களுக்கு கிடைக்காத மோக்ஷத்தையா, ஏதோ பெரிதாக படித்தவனுக்கு கொடுத்து விட போகிறார் பெருமாள்?

மோக்ஷம் கொடுப்பதற்காகவே திவ்ய தேசம் திவ்ய தேசமாக உட்கார்ந்து இருக்கும் பெருமாளை பார்ப்பதை விட்டுவிட்டு,  இவ்வளவு படித்தால், 'இவ்வளவு யோகம் செய்தால், மோக்ஷத்தை பிடித்து விடலாம்' என்று கணக்கு போடுபவன் போட்டு கொள்ளட்டும். அது அவரவர் தலையெழுத்து.


மோக்ஷத்திற்கு நாம் விலை போட முடியுமா?

மோக்ஷம் அவர் சொந்த சொத்து.

நீ என்ன வேண்டுமானாலும் படி, யோகம் செய். மோக்ஷம் கொடுப்பது அவர் இஷ்டம்.


ஞானம் அடையவில்லை, யோகமும் செய்யவில்லை ஜடாயு. ஒன்றுமே செய்யாத கழுகுக்கு மோக்ஷத்தை கொடுத்து  விட்டு சென்று விட்டார் பெருமாள்.

யார் கேட்க முடியும்?


"எதை எதையோ படித்து, மோக்ஷம் அடையலாம் என்று நினைக்காதே..  திவ்ய தேசம் திவ்ய தேசமாக ஓடு. மோக்ஷம் சுலபமாக கிடைத்து விடும்", என்கிறார் ஆழ்வார்.

கோவிலுக்கு போகும் போது, எதையாவது எதிர்பார்த்து செல்லாதே..

உன் ஆத்மாவுக்கு உறவுக்காரர் என்ற ஆசையோடு சென்று, பெருமாளை பார்.


உன்னுடைய சரீர பந்துவை பார்க்க செல்லும் போது எப்படி ஆசையோடு போகிறாய்?

அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் உன் பேரன் இருக்கிறான், உன் பிள்ளை இருக்கிறான் என்றால் கூட, எப்படி ஆசையோடு ஒடுகிறாய்...

அது போல, உன் பெருமாளை பார்க்க ஓடு.


நீ போகும் வழியில் ஒரு திவ்ய தேசம் இருந்தால், "அடடா.. நம் பெருமாள் உள்ளே இருப்பாரே! அவரை பார்க்க முடியாமல் போகிறோமே! இறங்கி ஒரு க்ஷணம் பார்த்து விட்டு வந்து விடலாமா?" என்று நினை.


எப்பொழுது உனக்கு பெருமாளிடம் இப்படி ஒரு பாசம் உண்டாகி, சேவிக்க ஆரம்பிப்பாயோ, அப்பொழுதே உனக்கு அங்கு (வைகுண்டத்தில்) அழைப்பு கிடைத்து விடும். இதே ஜென்மத்தோடு மோக்ஷம் கிடைத்து விடும்.


"திவ்ய தேசம் திவ்ய தேசமாக சென்று பெருமாளை பார்ப்பதே, மோக்ஷத்திற்கு வழி" என்று காண்பித்து கொடுத்தார் திருமங்கையாழ்வார்.

Saturday, 11 June 2022

அரசாட்சி செய்பவன் செய்யக்கூடாத 18 செயல்கள் என்னென்ன? ராஜ தர்மம் அறிவோம். மஹாபாரதம் சொல்கிறது.

ராஜ தர்மம்:


ஆட்சி செய்பவன் எதை விட்டு விலகி இருக்க வேண்டும்? என்று பீஷ்மர் சொல்கிறார்.


व्यसनानि च सर्वाणि 

त्यजेथा भूरिदक्षिण |

न चैव न प्रयुञ्जीत् 

सङ्गं तु परिवर्जयेत ||

- வியாசர் மஹாபாரதம்

நிரம்ப தானம் அளிப்பவனே! யுதிஷ்டிரா !

அரசாட்சி செய்பவன், வ்யஸனங்களை (தீய விஷயங்கள்) விட்டு விலகி இருக்க வேண்டும்.

எந்த சமயத்திலும், வ்யசனங்களில் ஆசை கொண்டு, செயல் செய்ய கூடாது 


नित्यं हि व्यसनी लॊके 

परिभूतॊ भवत्य उत |

उद्वेजयति लॊकं चाप्य 

अति द्वेषी महीपतिः ||

- வியாசர் மஹாபாரதம்

வ்யஸனமுள்ள (தீய செயல்களை செய்யும்) அரசன் உலகத்தில் அவமதிக்கப்படுவான்.

பிறரை கண்டு வெறுக்கும் குணமுள்ள அரசனாக இருந்தால், அவனை கண்டு உலகம் நடுங்கும்.


வ்யஸனங்கள் (தீய செயல்) மொத்தம் 18 என்று சொல்லப்படுகிறது:

  1. பொழுதுபோக்காக வேட்டை ஆடுவது
  2. பணயம் வைத்து பகடை ஆடுவது (gambling)
  3. பகலில் தூங்குவது
  4. மற்றவரை திட்டுவது
  5. பெண்களிடம் மோகம் கொள்வது
  6. மதம் கொள்வது (கர்வம்)
  7. பொழுதுபோக்க பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது
  8. கூத்து பார்ப்பது
  9. பொழுதுபோக்க வாத்தியங்கள் இசைக்க சொல்லி கேட்பது
  10. மது குடிப்பது

இந்த 10 வ்யஸனங்கள் காமத்தால் (உலக ஆசை) உண்டாகின்றன.


  1. தெரியாத குற்றத்தை வெளியிடுவது
  2. குற்றமில்லாதவனை தண்டிப்பது
  3. கபடமாக கொல்வது
  4. பிறர் பெருமையை கண்டு பொறாமை அடைவது
  5. பிறர் நற்குணங்களை, தோஷமாக சொல்வது
  6. பிறர் சொத்தை பிடுங்க முயற்சிப்பது
  7. கீழ்த்தரமாக பேசுவது
  8. நியாயமில்லாத தண்டனை கொடுப்பது

இந்த 8 வ்யஸனங்கள் கோபத்தால் உண்டாகின்றன.


கோபமும், காமமும் உள்ள அரசன், இந்த தீய செயல்களை செய்கிறான்.

காமத்தையும், கோபத்தையும் அடக்கி இருக்கும் அரசன், இந்த செயல்களில் ஈடுபடாமல் இருப்பான்.

Friday, 10 June 2022

தம்பதிகளுக்கு ஏன் மஞ்சள் குங்குமம், தேங்காய் ஹிந்துக்கள் கொடுக்கிறார்கள்?

தம்பதிகளுக்கு ஏன் மஞ்சள் குங்குமம், தேங்காய் ஹிந்துக்கள் கொடுக்கிறார்கள்? 

Gift கொடுப்பதை விட, இதற்கு ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுத்தார்கள் ஹிந்துக்கள்?

தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், "அம்பாள் அணுகிரஹம்" வேண்டும்.

ஜாதகத்தில் "சுக்கிரன் இருவருக்கும் பலமாக" இருக்க வேண்டும். 

அப்பொழுது தான், தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள்.


"அம்பாளின் அணுகிரஹம் தம்பதிகளுக்கு கிடைக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு, நம் ஹிந்துக்கள், கல்யாணமான பெண்ணுக்கு வெத்தலை பாக்கு, கூடவே மஞ்சள் குங்குமம் புடவை வைத்து கொடுக்கிறார்கள்.

அம்பாளை பூஜிப்பதாக நினைத்து கொடுப்பார்கள் 

சுக்கிரன் பலமாக வேண்டுமானால், 

கோ (கறவை பசு) தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

பசுவை, அனைவராலும் தானம் செய்ய முடியாது. 

பசுவை யார் தானம் கொடுக்கிறானோ, அவனை கண்டு, பசுபதியான சிவபெருமான் திருப்தி கொள்கிறார்.

சிவபெருமானுக்கு மூன்று கண்கள். தேங்காயிலும் மூன்று கண்கள் உண்டு. 


கோ தானம், சிவபெருமானையும், சுக்கரனையும் சம்பந்தப்படுத்துகிறது.

சிவபெருமானாக தேங்காயை நினைத்து கொண்டு, கொடுக்கும் போது, கோ தானம் கொடுத்த பலன் கிடைக்கிறது. 

இதனால் சுக்கிரனும் திருப்தி அடைகிறார்.


இப்படி அம்பாளை பூஜித்தும், சுக்கிரனை திருப்தி செய்தும், வந்த தம்பதிகள் ஒற்றுமையாகவும், அன்யோன்யமாகவும் வாழ ப்ரார்த்திப்பது ஹிந்துக்களிடம் வழக்கமாக இருந்தது. இருக்கிறது.


Gift கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும், தம்பதிகள் கடைசி வரை சேர்ந்து வாழ பிரார்த்தனை செய்து, பெண்களுக்கு மஞ்சள் குங்குமமும், ஆண்களுக்கு தேங்காயையும் கொடுப்பது ஹிந்து தர்மமாக உள்ளது.


காரணமில்லாமல் ஹிந்துக்கள் எந்த காரியமும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது 


Listen to the speech..

https://www.youtube.com/watch?v=vRuJuzfeMuo&t=4138s

Thursday, 9 June 2022

சிவபெருமானை காலையில் பள்ளியெழுச்சி செய்கிறார் மாணிக்கவாசகர். திருவெம்பாவை

சிவபெருமானை காலையில் பள்ளியெழுச்சி செய்கிறார் மாணிக்கவாசகர்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

- திருவெம்பாவை (மாணிக்கவாசக பெருமான்)


ஒரு பக்கம் பக்தர்கள், வீணை கொண்டும், யாழ் கொண்டும் இனிய இசை இசைகிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், ருக் வேதம் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், நிறைய மலர்களை பறித்து, மாலை தொடுத்து கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  மேலும் சிலர் அன்பின் மிகுதியால் உங்களை தரிசிக்க போகும் ஆனந்தத்தில் அழுகிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், தலை மேல் கை கூப்பி நமஸ்கரித்து கொண்டே காத்து இருக்கிறார்கள்.

திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே ! 

(இவர்களோடு) ஒன்றுமே செய்யாது இருக்கும்,  மாணிக்கவாசகனான  என்னையும் சேர்த்து (ஆண்டு) கொண்டு, இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்வாய்  !

என்று பக்தி சொட்ட பாடுகிறார், மாணிக்கவாசகர்.


Listen to - the explanation:  

https://www.youtube.com/watch?v=vRuJuzfeMuo&t=786s