ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்?
பூ: புவ: ஸுவ: மஹ: ஜன: தப: சத்ய:
பூ: என்ற நமது பூலோகத்திற்கு மேல் புவர் (நக்ஷத்ரம்) லோகங்களுக்கு மேல், தேவர்கள் ஸுவ என்ற சொர்க்க லோகத்தில் வசிக்கின்றனர்.
அதற்கும் மேல் மஹ, ஜன, தப லோகங்களுக்கு மேல் ப்ரம்ம தேவன் சத்ய லோகத்தில் வசிக்கிறார்.
இப்பொழுது சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்ம தேவன் 50 வயது முடிந்து, 51வது வயதின் முதல் நாள் பகலை கழித்து கொண்டு இருக்கிறார்.
ப்ரம்மா, தன் ஒவ்வொரு நாளும் 71 சதுர் யுகங்களை ஆளும் 14 மனுக்களை பார்க்கிறார் .
அவருடைய இன்றைய பொழுதில், 27 சதுர் யுகங்கள் முடிந்து விட்டது.
இப்பொழுது இவர் 28வது சதுர் யுகத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்.
இந்த சதுர் யுகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது.
4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது மனிதர்களுக்கு 5000 பூலோக வருடங்கள் கலியுகத்தில் முடிந்து விட்டது.
पित्र्ये रात्र्यहनी मासः प्रविभागस्तु पक्षयोः ।
कर्मचेष्टास्वहः कृष्णः शुक्लः स्वप्नाय शर्वरी ॥
- மனு ஸ்மிருதி (manu smriti)
பித்ருக்கள் வாழும் உலகத்தில் ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு மாத காலமாகும்.
இந்த 1 மாதத்தில்,
15 நாட்கள் கொண்ட தேய்பிறை கால சமயத்தில் (அமாவாசை வரை), பித்ருக்கள் கர்மானுஷ்டங்கள் செய்கின்றனர். இது அவர்களுக்கு பகல் பொழுது.
அடுத்த 15 நாட்கள் கொண்ட வளர்பிறை கால சமயத்தில் (பௌர்ணமி வரை), இரவு பொழுதாக இருப்பதால், உறங்குகின்றனர்.
ஒவ்வொரு மனிதனும், தன் பெற்றோரை நினைத்து கொண்டு, பித்ருக்கள் உறங்க போகும் முன், தன் கையால் எள், ஜலம் கொடுத்து தன் பெற்றோரை நினைத்து கொண்டு தர்ப்பணம் (திருப்தி) செய்கிறான்.
दैवे रात्र्यहनी वर्षं प्रविभाग: तयोः पुनः ।
अह: तत्रोदगयनं रात्रिः स्याद् दक्षिणायनम् ॥
- மனு ஸ்ம்ருதி (Manu Smriti)
(மனிதர்கள் வாழும்) பூலோகத்தில் ஒரு வருடம் என்பது, (சொர்க்க லோகத்தில் உள்ள) தேவர்களுக்கு பகலும், இரவும் சேர்ந்த ஒரு நாள் மட்டுமே.
தேவ லோகத்தில்:
- தை (6-8AM), மாசி (8-10AM), பங்குனி (10AM-12Noon),
- சித்திரை (12Noon -2PM), வைகாசி (2PM -4PM), ஆனி (4PM -6PM)
- ஆடி (6PM -8PM), ஆவணி (8PM -10PM), புரட்டாசி (10PM -12AM),
- ஐப்பசி (12AM -2AM), கார்த்திகை (2AM -4AM), மார்கழி (4AM -6AM)
- 3600 தேவ வருடங்கள் ஒரு த்ரேதா-யுகம் காலம் = பூமியில் 3*4,32,000 வருடம்
- 2400 தேவ வருடங்கள் ஒரு துவாபர-யுகம் காலம் = பூமியில் 2*4,32,000 வருடம்
- 1200 தேவ வருடங்கள் ஒரு கலி-யுகம் காலம் = பூமியில் 4,32,000 வருடம்
- பூமியில் 360 நாட்கள் = பூமியில் 1 வருடம் = தேவலோகத்தில் 1 தேவ நாள்
- பூமியில் 360 வருடம் = தேவலோகத்தில் 360 தேவநாள் = தேவலோகத்தில் 1 தேவ வருடம்
- பூமியில் 36,000 வருடம் = தேவலோகத்தில் 36,000 தேவ நாள் = தேவலோகத்தில் 100 தேவ வருடம் (ஒரு இந்திரனின் ஆயுள்)
- பூலோகத்தில் ஒரு கலி யுகம் = பூமியில் 4,32,000 வருடம் = தேவலோகத்தில் 4,32,000 தேவ நாள் = தேவலோகத்தில் 1200 தேவ வருடம் = 12 இந்திரர்கள் ஆயுட் காலம்
- பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = பூமியில் 43,20,000 வருடம் = தேவலோகத்தில் 43,20,000 தேவ நாள் = தேவலோகத்தில் 12,000 தேவ வருடம் = தேவ லோகத்தில் 1 தேவ யுகம் = 120 இந்திரர்கள் ஆயுட் காலம்
- 71 * பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்)