Followers

Search Here...

Saturday, 10 September 2022

சிசுபாலன் வதம்... சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி திட்டுகிறான். கேட்பவர்கள் செவி சுடும் அளவிற்கு அநாகரீகமாக பேசி, இறுதியில் கிருஷ்ணர் கையால் மரணமடைகிறான். என்ன பேசினான்? என்ன நடந்தது? வியாசரின்... மஹாபாரதம் அறிவோம்.

शिशुपाल उवाच। (சிசுபாலன் பீஷமரை பார்த்து பேசினான்)

बिभीषिकाभिर्बह्वीभिर्भीषयन्भीष्म पार्थिवान्।

 व्यपत्रपसे कस्माद्वृद्धः सन्कुलपांसनः।।    

ஓய் பீஷ்மாகுலத்தை கெடுப்பவனேநீ இங்கு இருக்கும் அரசர்களை பயமுறுத்த நினைக்கிறாயா? உனக்கு வெட்கமாக இல்லை?

युक्तमेतत्तृतीयायां प्रकृतौ वर्तता त्वया।

वक्तुं धर्मादपेतार्थं त्वं हि सर्वकुरूत्तमः।।         

தர்மத்துக்கு எதிராக நீ இப்படி பேசுவது உன்னை பொறுத்தவரை சரி தான்நீ ஆணும் இல்லாதபெண்ணும் இல்லாத அலி தானேகௌரவ குலத்துக்கு நீ தலைவன் என்ற பெயர் வேறு.

नावि नौरिव सम्बद्धा यथान्धो वान्धमन्वियात्।

तथाभूता हि कौरव्या येषां भीष्म त्वमग्रणीः।।  

ஏய் பீஷ்மாஉன்னை தலைவனாக பெற்ற கௌரவர்கள்ஒரு படகோடு கட்டப்பட்ட மற்ற படகுகள் போலஓரு குருடன் பின்னால் செல்லும் குருடனை போல இருக்கின்றனரே!

पूतनाघातपूर्वाणि कर्माण्यस्य विशेषतः।

त्वया कीर्तयताऽस्माकं भूयः प्रव्यथितं मनः।।  

சிறு குழந்தையாக இருந்த போதுஇந்த கிருஷ்ணன் "பூதனையைகொன்றான் என்று ஸ்தோத்திரம் செய்து அவனை பற்றி பாட்டு பாடுகிறாயேஇதை கேட்க எனக்கு வெறுப்பாக இருக்கிறது.

अवलिप्तस्य मूर्शस्य केशवं स्तोतुमिच्छतः।

कथं भीष्म  ते जिह्वा शतधेयं विदीर्यते।।

ஏய் பீஷ்மாகர்வம்பிடித்தமுட்டாள் யாதவனான இந்த கிருஷ்ணனை நீ ஸ்தோத்திரம் செய்த போதேஉன் நாவானது ஏன் நூறாக வெடிக்காமல் போனது?

यत्र कुत्सा प्रयोक्तव्या भीष्म बालतरैर्नरैः।

तमिमं ज्ञानवृद्धः सन्गोपं संस्तोतुमिच्छसि।।     

பீஷ்மாஇவன் ஒரு பொடியன்மதிக்ககூட தகுதி இல்லாத இந்த இடையனைஉனக்கு அறிவு இருந்தும் துதிக்க நினைக்கிறாயே !

यद्यनेन हता बाल्ये शकुनिश्चित्रमत्र किम्।

तौ वाऽश्ववृषभौ भीष्ण यौ  युद्धविशारदौ।।    

குழந்தையாக இருந்த போதே ஒரு பறவையை (பகாசுரன்கொன்றான். 'பறவையை கொன்றான்..' என்று இவனை துதிக்கிறாயேஇதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறதுபீஷ்மாயுத்தம் செய்ய பயிற்சி இல்லாத குதிரையைகாளை மாட்டை இவன் குழந்தையாக இருந்த போது கொன்றான். அதையும் துதிக்கிறாயேஇதில் ஆச்சர்யபடும் அளவிற்கு ஒரு காரியமும் இல்லையே !

चेतनारहितं काष्ठं यद्यनेन निपातितम्।

पादेन शकटं भीष्ण तत्र किं कृतमद्भुतम्।।   

பிறந்த குழந்தையாக இருந்த போதேஉயிரில்லாத ஒரு மர தொட்டிலைகாலால் உதைத்தான்.  'அது உடைந்து விட்டது.. உடைந்து விட்டது.'. என்று பெரிதாக துதிக்கிறாயேஇதில் ஆச்சர்யபட என்ன இருக்கிறது?

अर्कप्रमाणौ तौ वृक्षौ यद्यनेन निपातितौ।

नागश्च दमितोऽनेन तत्र को विस्मयः कृतः।।     

ஏதோ உளுத்து போன இரு மரங்களுக்கு இடையே இவன் போன போதுஅது தானாக முறிந்து விட்டது. 'இரண்டு மருத மரத்தை முறித்தான்.. மரத்தையே முறித்தான்' என்று துதிக்கிறாயேபிறகுஒரு பாம்பை கொன்று இருக்கிறான்அதையும் பெரிதாக கொண்டாடுகிறாய்இதில் என்ன ஆச்சரியமான காரியம் இருக்கிறது

वल्मीकमात्रः सप्ताहं यद्यनेन धृतोऽचलः।

तदा गोवर्धनो भीष्म  तच्चित्रं मतं मम।।

ஏய் பீஷ்மா ! ஒரு புற்று போல இருக்கும் கோவர்தன மலையை இவன் 7 நாள் தூக்கினான் என்று கொண்டாடுகிறாயேஎனக்கு ஒரு ஆச்சர்யமும் இதில் தோன்றவில்லையே!

भुक्तमेतेन बह्वन्नं क्रीडता नगमूर्धनि।

इति ते भीष्ण शृण्वानाः परे विस्मयमागताः।।   

ஏய் பீஷ்மாமலைக்கு ஈடாக வைக்கப்பட்ட அன்னத்தைஇவன் ஒருவனே விழுங்கினான் என்று சொல்லி துதித்தாயே!  அதை கேட்டு மற்றவர்கள் வாய் பிளந்து கேட்கலாம்ஆனால் எனக்கு ஒரு ஆச்சர்யமும் தோன்றவில்லை!

यस्य चानेन धर्मज्ञ भुक्तमन्नं बलीयसः।

 चानेन हतः कंस इत्येतत्तु बलीयसः।             

தர்மம் தெரிந்த பீஷ்மாஇவன் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தவன்மகா பலசாலியான கம்ஸனுடைய  உணவையே தின்று விட்டுகம்சனையே கொன்றவன் இவன் என்பது தான் இவன் செய்த ஆச்சர்யமான வேலை

 ते श्रुतमिदं भीष्म नूनं कथयतां सताम्।         

यद्वक्ष्ये त्वामधर्मज्ञं वाक्यं कुरुकुलाधम।।

பீஷ்மாகுருவம்சத்தில் இழிவானவனேபெரியோர்கள் எது தர்மம்? என்று சொல்லி தரும் பொதுநீ அவர்கள் சொல்லை கேட்டதில்லை என்று தெரிகிறதுஆகையால் நான் உனக்கு தர்மத்தை சொல்லி தருகிறேன்.

स्त्रीषु गोषु  शस्त्राणि पातयेद्ब्राह्मणेषु च।        

इति सन्तोऽनुशासन्ति सञ्जना धर्मिणः सदा।

भीष्म लोके हि तत्सर्वं वितथं त्वयि दृश्यते।।    

'பெண்களையும்பசுக்களையும்ப்ராம்மணனையும்தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனையும் கொல்ல கூடாது' என்று தர்மம் அறிந்த அறிஞர்கள் எப்பொழுதும் உபதேசிக்கின்றனர்பீஷ்மாஉலகத்தில் உள்ள இந்த தர்மங்கள் எல்லாம் உன்னிடத்தில் இருப்பதாக கூட தெரியவில்லையே

ज्ञानवृद्धं  वृद्धं  भूयांसं केशवं मम।

अजानत इवाख्यासि संस्तुवन्कौरवाधम।।

அறிவு முதிர்ச்சி இல்லாமல்வயதும் முதிர்ந்து விட்ட நீ! கேசவனை எனக்கு எதிரில் பெருமை படுத்துகிறாய்இவனை பற்றி தெரியாதவன் என்று நினைத்துஎனக்கு சொல்கிறாய்.

गोघ्रः स्त्रीघ्नश्च सन्भीष्म त्वद्वाक्याद्यदि पूज्यते।

एवम्भूतश्च यो भीष्म कथं संस्तवमर्हति।।

பீஷ்மாவத்ஸாசுரன் என்று சொல்லி பசுவை கொன்ற இவனைபூதனை என்று சொல்லி பெண்ணை கொன்ற இவனை நீ உன் வாயால் எப்படி துதி செய்கிறாய்? 

 

असौ मतिमतां श्रेष्ठो  एष जगतः प्रभुः।

सम्भावयति चाप्येवं त्वद्वाक्याच्च जनार्दनः।

एवमेतत्सर्वमिति तत्सर्वं वितथं ध्रुवम्।।             

உன்னை போன்றோர்இவனை மஹா புத்திசாலி என்றும்உலகத்துதுக்கே ப்ரபு (ஜகந்நாதன்என்றும் சொல்லி புகழ்வதால்இவனும் நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான் என்று நினைத்துதன்னை ஜனார்தனன் என்று நினைக்கிறான்இவை அனைத்தும் பொய் என்பதே என் முடிவு.

 

आत्मानम् आत्मनाऽऽधातुं यदि शक्तो जनार्दनः।

अकामयन्तं तं भीष्म कथं साध्विव पश्यसि।।  

ஏய் பீஷ்மாஇவன் ஜனார்த்தனன்இவன் ஆத்மாவுக்கு ஆத்மாவாக இருக்கிறான்அனைத்தும் அறிய சக்தியுள்ளவன் என்று நீ சொல்கிறாயேதனக்கு முதல் மரியாதை கொடுப்பார்கள் என்று அவனுக்கே தெரியாத போதுநீ எதற்காக இவனுக்கு போய் முதல் மரியாதை செய்தாய்?

 गाथा गाथिनं शास्ति बहुचेदपि गायति।

प्रकृतिं यान्ति भूतानि कुलिङ्गशकुनिर्यथा।।     

எத்தனை முறை துதித்தாலும்அதற்கு சிலர் தகுதி இல்லாமல் தான் இருப்பார்கள்என்ன தான் பழக்கினாலும்குலிங்கசகுனி போன்ற  பறவைகள் அதனதன் மடத்தனமான குணத்தை விடாது

नूनं प्रकृतिरेषा ते जघन्या नात्र संशयटः।

नदीसुतत्वात्ते चित्तं चञ्चलं  स्थिरं स्मृतम् ।।    

அதுபோலஉன்னுடைய இயற்கையான குணமும் இழிவாக இருக்கிறதுஇதில் சந்தேகமே இல்லைநீ சஞ்சலமான கங்கை நதியின் பிள்ளை தானேஉன்னிடம் எப்படி ஸ்திரமான மனநிலையை எதிர்பார்க்க முடியும்?

अतः पापीयसी चैषां पाण्डवानामपीष्यते।

येषामर्च्यतमः कृष्णस्त्वं  येषां प्रदर्शकः।।      

இந்த கிருஷ்ணனை பூஜிப்பதும்அதற்காக நீ இவனை ஸ்தோத்திரம் செய்தும் இழிவானதுநீ சொன்னதை கேட்கும் இந்த பாண்டவர்கள் குணம் அதை விட இழிவானது என்று தெரிகிறது.

धर्मवांस्त्वमधर्मज्ञः सतां मार्गादवप्लुतः।

को हि धर्मिणमात्मानं जानञ्ज्ञानविदां वरः।।

உனக்கு தர்மமும் தெரியவில்லைபெரியவர்கள் சொன்ன வழியை பின்பற்றவும் தெரியவில்லை

நீயா தர்மிஷ்டன்பீஷ்மாஎந்த தர்மம் தெரிந்தவன்தெரிந்தே உன்னை போன்ற காரியத்தை செய்வான்?

कुर्याद्यथा त्वया भीषम कृतं धर्ममवेक्षता।

चेत्त्वं धर्मं विजानासि यदि प्राज्ञा मतिस्तव।।     

अन्यकामा हि धर्मज्ञा कन्यका प्राज्ञमानिना।

अम्बा नामेति भद्रं ते कथं साऽपहृता त्वया।।   

பெரிய தர்மம் தெரிந்தவன்பெரிய அறிவாளி என்று  சொல்லிக்கொள்கிறாயேபீஷ்மாவேறொருவனை காதலித்த அம்பாவை நீ தானே அபகரித்து கொண்டு சென்றாய்!

 

तां त्वयाऽपहृतां भीष्म कन्यां नैषितवान्नृपः।

भ्राता विचित्रवीर्यस्ते सतां मार्गमनुस्मरन्।।      

அப்படி அவளை கூட்டி சென்றும்பெரியோர்கள் காட்டிய தர்ம வழியை அறிந்த உன் சகோதரன் விசித்ரவீர்யன் உன்னுடைய இந்த அதர்மத்தை ஏற்கவில்லையேஅந்த கன்னிகையை ஏற்க மறுத்தானே!

 

भार्ययोर्यस्य चान्येन मिषतः प्राज्ञमानिनः।

तव जातान्यपत्यानि सज्जनाचरिते पथि।।         

அவன் மனைவிகளுக்கு (விசித்ரவீர்யன் இறந்த பிறகு), வேறொருவரால் சந்ததிகள் ஏற்பட்டதே தவிரநீ உயிரோடு இருந்தும் நீ ப்ரயோஜனப்படவில்லை.

 

को हि धर्मोऽस्ति ते भीषम ब्रह्मचर्यमिदं वृथा।

यद्धारयसि मोहाद्वा क्लीबत्वाद्वा  संशयः।।

பீஷ்மா ! உனக்கு என்ன தர்மம் இருக்கிறது?  உன் ப்ரம்மச்சர்யமே ஒரு பொய்பகட்டுக்காக தான் ப்ரம்மச்சர்யம் என்று சொல்லி கொள்கிறாய்நீ ஆண்மையில்லாதவன் என்பதே உண்மைஅதில் சந்தேகமே இல்லை.

 

 त्वं तव धर्मज्ञ पश्याम्युपचरं क्वचित्।

 हि ते सेविता वृद्धा  एवं धर्ममब्रवीः।।

நீ எந்த தர்மத்திலும் இருப்பதாக எனக்கு தெரியவே இல்லைநீ பெரியோர்களுக்கு சேவை செய்ததாகவும் தெரியவில்லைதர்மமே தெரியாத நீ தர்மம் பேசுகிறாய்.


इष्टं दत्तमधीतं  यज्ञाश्च बहुदक्षिणाः।

सर्वमेतदपत्यस्य कलां नार्हन्ति षोडशीम्।।

தானங்கள் அள்ளி கொடுப்பதும்யாகங்கள் செய்வதும்தக்ஷிணைகள் அதிகமாக கொடுப்பதும் தர்மமே என்றாலும்சந்ததி என்னும் தர்மத்தை உருவாக்கியவனுக்கு முன்னால் இந்த தர்மங்கள் எல்லாம்,  16ல் ஒரு பங்கு தான்.

 

व्रतोपवासैर्बहुभिः कृतं भवति भीष्म यत्।

सर्वं तदनपत्यस्य मोघं भवति निश्चयात्।।         

பீஷ்மா!  சந்ததி இல்லாதவன்பலவகை விரதங்கள்உபவாசங்கள்  செய்தாலும் பயனற்றது என்று சாஸ்திரம் சொல்கிறது.

 

सोऽनपत्यश्च वृद्धश्च मिथ्याधर्मानुशासनात्।

हंसवत्त्वमपीदानीं ज्ञातिभ्यः प्राप्नुया वधम्।।

சந்ததியும் இல்லாமல்வயதாகி போன நீபொய்யான தர்மத்தை உபதேசித்த ஹம்ச பக்ஷி (அன்ன பறவை), தன் சுற்றத்தாராலேயே இறந்து போனது போலஇறந்து போக போகிறாய்.

 

एवं हि कथयन्त्यन्ये नरा ज्ञानविदः पुरा।

भीष्म यत्तदहं सम्यग्वक्ष्यामि तव शृण्वतः।।

பீஷ்மாமுன்னொரு காலத்தில் சொல்லப்பட்ட இந்த ஹம்சபக்ஷியின் கதையை சொல்கிறேன்இதையாவது ஒழுங்காக கேள்.

वृद्धः किल समुद्रान्ते कश्चिद्धंसोऽभवत्पुरा।

धर्मवागन्यथावृत्तः पक्षिणः सोऽनुशास्ति च।।   

धर्म चरत माऽधर्ममिति तस्य वचः किल।

पक्षिणः शुश्रुवुर्भीष्म सततं धर्मवादिनः।।          

முன்னொரு காலத்தில்மற்றவர்களுக்கு தர்மத்தை சொல்லிக்கொண்டும்தான் அதன் வழியில் வாழாமலும்ஒரு கிழ ஹம்ச பறவை ஒன்று இருந்ததுஅது மற்ற பறவைகளுக்கு தர்மத்தை உபதேசிப்பது வழக்கம்"தர்மத்தையே செய்யுங்கள். அதர்மம் செய்யாதீர்கள்" என்று அழகாக உபதேசம் செய்யும் அந்த பறவை. பீஷ்மா! இதை கேட்டு மற்ற பறவைகளும் நடந்தன.

 

हंसस्य तु वचः श्रुत्वा मुदिताः सर्वपक्षिणः।

ऊचुश्चैव स्वगा हंसं परिवार्य  सर्वशः।।

कथयस्व भवान्सर्वं पक्षिणां तु समासतः।

को हि नाम द्विजश्रेष्ठ ब्रूहि नो धर्म उत्तमः।।

எப்பொழுதும் தர்மத்தையே பேசும் இந்த அன்ன பறவையை கண்டு மற்ற பறவைகள் மகிழ்ந்தனஒருநாள்அந்த பறவைகள் எல்லாம் சேர்ந்து கொண்டு, "நீங்கள் எங்களுக்கு தர்மங்களை எல்லாம் தொகுத்து சொல்ல வேண்டும்எங்களுக்கு எது  சிறந்த தர்மம் என்று சொல்ல வேண்டும்?" என்று கேட்டு கொண்டன...

 

हंस उवाच।। (அந்த அன்னப்பறவை பேசியது)

प्रजास्वहिंसा धर्मो वै हिंसाऽधर्मः खगव्रजाः।

एतदेवानुबोद्धव्यं धर्माधर्मः समासतः।।

மற்ற பறவைகளை பார்த்து, "நம் மக்களுக்கு துன்பம் தராமல் இருப்பதே தர்மம்அவர்களுக்கு கஷ்டங்கள் கொடுப்பதே பாபம். பாவ புண்ணியங்களை சுருக்கமாக இவ்வாறே நீங்கள் அறிந்து கொள்ளலாம்என்று சொன்னது.

 

शिशुपाल उवाच।।  (சிசுபாலன் சொன்னான்)

वृद्धहंसवचः श्रुत्वा पक्षिणस्ते सुसंहिताः।

ऊचुश्च धर्मलुब्धास्ते स्मयमाना इवाण्डजाः।।

இந்த கிழ பறவை இப்படி தர்ம உபதேசம் செய்ததை கேட்ட மற்ற பறவைகள் பெரிதும் மகிழ்ந்தன.

 

धर्मं यः कुरुते नित्यं लोके धीरतरोऽण्डजः।

 यत्र गच्छेद्धर्मात्मा तन्मे ब्रूहीह तत्त्वतः।।

அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து அந்த கிழப்பறவையிடம்  "தர்மாத்மாவாக இருந்து இந்த உலகில் தர்மத்தில் உறுதியாக இருந்து வாழ்க்கை நடத்துபவர்கள் எந்த கதியை அடைவார்கள் என்று தாங்கள் சொல்ல வேண்டும்என்று கேட்டன,

 

हंस उवाच।। (அன்னப்பறவை பேச ஆரம்பித்தது)

बाला यूयं  जानीध्वं धर्मसूक्ष्मं विहङ्गमाः।

धर्मं यः कुरुते लोके सततं शुभबुद्धिना।

 चायुषोऽन्ते स्वं देहं त्यक्त्वा स्वर्गं  गच्छति।।             

तथाऽहमपि  त्यक्त्वा काले देहमिमं द्विजाः।

स्वर्गलोकं गमिष्यामि इयं धर्मस्य वै गतिः।।      

एवं धर्मकथां चक्रे  हंसः पक्षिणां भृशम्।

पक्षिणः शुश्रुवुर्भीष्म सततं धर्ममेव ते।।             

"குழந்தைகளேதர்மம் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்எவன் இந்த உலகில் நல்ல எண்ணத்தோடுதர்ம சிந்தனையோடு வாழ்கிறானோஅவன் தன் வாழ்நாள் முடிவில் இந்த உடம்பை விடும் போதுஸ்வர்க லோகம் சென்று விடுவான்இதுவே தர்மத்தின் முடிவு." என்று மற்ற பறவைகளிடம் பலமுறை உபதேசம் செய்து கொண்டிருந்ததுபீஷ்மாஇது போன்று 100 முறை தர்ம உபதேசம் இந்த கிழ பறவையிடம் கேட்டு கொண்டு இருந்தது மற்ற பறவைகள்.

 

अथास्य भक्ष्यमाजह्रुः समुद्रजलचारिणः।

अण्डजा भीष्म तस्यान्ये धर्मार्थमिति शुश्रुम।।  

பீஷ்மா!  அந்த பறவைகள் பறந்து சென்று சமுத்திரத்தில் கிடைக்கும் உணவுகளை எடுத்து வந்துதர்ம உபதேசம் செய்யும் இந்த கிழ பறவைக்கு கொடுப்பது வழக்கம்.

 

ते  तस्य समभ्याशे निक्षिप्याण्डानि सर्वशः।

समुद्राम्भस्यमोदन्त चरन्तो भीष्म पक्षिणः।।

பீஷ்மாஅந்த பறவைகள் எல்லாம்தாங்கள் இட்ட முட்டைகளை அந்த கிழ அன்னத்துக்கு அருகில் வைத்து விட்டுகடல் நீரில் மகிழ்ச்சியோடு உலாவிக்கொண்டு இருந்தன.

 

तेषामण्डानि सर्वेषां भक्षयामास पापकृत्।

 हंसः सम्प्रमत्तानामप्रमत्तः स्वकर्मणि।।

தன் காரியத்தை நடத்தி கொள்வதில் கை தேர்ந்த அந்த கிழ பறவைஎச்சரிக்கை இல்லாத மற்ற பறவைகளின் முட்டைகளை தின்றது.

 

ततः प्रक्षीयमाणेषु तेषु तेष्वण्डजोऽपरः।

अशङ्कत महाप्राज्ञः  कदाचिद्ददर्श ह।।          

ஒரு நாள்எதேச்சையாக ஒரு புத்திசாலி பறவை மட்டும்முட்டைகள் குறைவதை உணர்ந்து சந்தேகம் அடைந்தது.

ततः सङ्कथयामास दृष्ट्वा हंसस्य किल्बिषम्।

तेषां परमदुःखार्तः  पक्षी सर्वपक्षिणाम्।। 

இப்படி இந்த கிழ பறவை முட்டைகளை தின்பதை கண்ட ஒரு நாள் பார்த்து விட்ட அந்த பறவைமற்ற பறவைகளிடம் நடக்கும் பாவ செயலை தெரிவித்து விட்டது.

 

ततः प्रत्यक्षतो दृष्ट्वा पक्षिणस्ते समीपगाः।

निजघ्नस्तं तदा हंसं मिथ्यावृत्तं कुरूद्वह।।

கௌரவனேஇப்படி அந்த பறவை சொன்னதும்மற்ற பறவைகளும் தன் கண்களால் நடப்பதை பார்த்ததுதாங்களே அந்த கிழ பறவையை கொன்று போட்டன.

 

एवं त्वां हंसधर्माणमपीमे वसुधाधिपाः।

निहन्युर्भीष्म सङ्क्रुद्धाः पक्षिणस्तं यथाण्डजम्।।          

ஏய் பீஷ்மாஅந்த கிழ பறவையின் ஒழுக்கத்தை போன்றே நீயும் இருப்பதால்ஒரு நாள் உன்னையும் இந்த அரசர்களே கொல்வார்கள்.

 

गाथामप्यत्र गायन्ति ये पुराणविदो जनाः।

भीष्म यां तां  ते सम्यक्वथयिष्यामि भारत।।  

अन्तरात्मन्यभिहते रौषि पत्ररथाशुचि।

अण्डभक्षणकर्मैतत्तव वाचमतीयते।।

பீஷ்மாஇப்படி இந்த அன்னப்பறவையின் கதையை புராண கதையாக பாடி அந்த பறவையை பார்த்து கடைசியாக பாடுகிறார்கள்அதன் அர்த்தத்தை சொல்கிறேன் கேள். " பறவையேமனம் கெட்டு மன தூய்மை இல்லாத பேச்சை பேசியே வாழ்ந்தாய்உன் மக்களின் முட்டைகளையே தின்றுசொல்வது ஒன்றுசெய்வது ஒன்று வாழ்ந்து கடைசியில் மரணித்தாய்"

 

शिशुपाल उवाच। (சிசுபாலன் மேலும் சொல்கிறான்)

 मे बहुमतो राजा जरासन्धो महाबलः।

योऽनेन युद्धं नेयेष दाक्षोऽयमिति संयुगे।।   

இந்த கிருஷ்ணன் ஒரு வேலைக்கார பயல் என்பதால் தானேமஹாபலசாலியான ஜராஸந்தன் இவனோடு மல்யுத்தம் செய்ய விரும்பவில்லைநான் ஜராஸந்தனை வெகுமானிக்கிறேன்

 

केशवेन कृतं कर्म जरासन्धवधे तदा।

भीमसेनार्जुनाभ्यां  कस्तत्साध्विति मन्यते।।

ஜராஸந்தனை கொல்வதற்காக இந்த கேசவன் செய்த காரியத்தையும் , பீம அர்ஜுனன் செய்த காரியத்தையும் அறிந்த எவன் இவர்களை மதிப்பான்?

 

उद्वारेण प्रविष्टेन छद्मना ब्रह्मवादिना।

दृष्टः प्रभावः कृष्णेन जरासन्धस्य भूपतेः।।

ஜராஸந்தனின்  பராக்ரமம் தெரிந்ததால் தானேபின் வாசல் வழியாக நுழைந்துதன்னை பிராம்மணன் என்று கூறிக்கொண்டான்  இந்த கிருஷ்ணன்.

 

येन धर्मात्मनाऽऽत्मानं ब्रह्मण्यमभिजानता।

प्रेषितं पाद्यमस्मै तद्दातुमग्रे दूरात्मने।।

மஹாத்மாவான ஜராஸந்தன்ப்ராம்மணர்களுக்கு தானம் கொடுக்க பாத்யம் கொடுக்கும் போதுபிராம்மண வேஷத்தில் இவன் முதலில் வந்து இந்த துராத்மா பாத்யம் பெற்றுக்கொண்டான்.

 

भुज्यतामिति तेनोक्ताः कृष्णबीमधनञ्जयाटः।

जरासन्धेन कौरव्य कृष्णेन विकृतं कृतम्।।     

பிராம்மணர்கள் போல வந்த இந்த கிருஷ்ணனைபீமனை ஜராசந்தன் பூஜித்துதானம் செய்ய முற்பட்டான்தானத்திற்கு பதிலாக இந்த கிருஷ்ணன் காரியங்கள் செய்தான்.

 

यद्ययं जगतः कर्ता यथैनं मूर्ख मन्यसे।

कस्मान्न ब्राह्मणं सम्यगात्मानमवगच्छति।।

மூர்க்கனேஇவனை நீ எப்படி உலகத்தை படைத்தவன் என்று சொல்லி திரிகிறாய்இவன் முதலில் தான் பிராம்மணன் இல்லை என்று கூட அறியவில்லையே!

इदं त्वाश्चर्यभूतं मे यदिभे पाण्डवास्त्वया।

अपकृष्टाः सतां मार्गान्मन्यन्ते तच्च साध्विति।। 

अथवा नैतदाश्चर्यं येषां त्वमसि भारत।

स्त्रीसधर्मा  वृद्धश्च सर्वार्थानां प्रदर्शकः।।

இந்த பாண்டவர்களும்நல்லவர்கள் சொல்லும் வழியை பின்பற்றாமல்நீ சொல்வதை சரி என்று நினைத்து இழுக்கப்பட்டு இருக்கிறார்கள்பாரதனேஇது எனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருந்தாலும்பெண் தன்மை கொண்ட கிழவனான உன்னிடம்  உபதேசம் பெற்ற இவர்கள்செய்யும் இந்த செயலை கண்டு எனக்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை.

 

वैशम्पायन उवाच।।             (வைசம்பாயனர் ஜனமேஜெயனிடம் சொல்கிறார்)

तस्य तद्वचनं श्रुत्वा रूक्षं रूक्षाक्षरं बहु।

चकोप बलिनां श्रेष्ठो भीमसेनः प्रतापवान्।।      

இப்படி சிசுபாலன் சபையில் மிக்க கோபத்தோடும்கடுமையான சொற்களாலும் பேசியதும்பலவான்களில் சிறந்தவனும்பராக்ரமசாலியுமான பீமசேனன் கோபித்தான்.

 

तथा पद्मप्रतीकाशे स्वभावायतविस्तृते।

भूयः क्रोधाभिताम्राक्षे रक्ते नेत्रे बभूवतुः।। 

இயற்கையாகவே தாமரை போன்று நீண்ட கண்களும்சிவந்தும் காணப்படும் பீமனின் கண்கள் மேலும் சிவந்து காணப்பட்டது

 

त्रिशिखां भ्रकुटीं चास्य ददृशुः सर्वपार्थिवाः।

ललाटस्थां त्रिकूटस्थां गङ्गां त्रिपथगामिव।।

அவன் கோபத்தில் புருவத்தை உயர்த்தி கோபத்தோடு பார்த்த போதுஅவன் நெற்றியில் ஏற்பட்ட மூன்று கோடுகள்த்ரிகூட மலையில் மூன்று பிரிவாக ஓடும் கங்கை போல அங்கு இருந்த மற்ற அரசர்கள் கண்டனர்.

 

दन्तान्सन्दशतस्तस्य कोपाद्ददृशुराननम्।

युगान्ते सर्वभूतानि कालस्येव जिघत्सतः।।

கோபத்தால் பீமசேனன் பற்களை கடிப்பதை பார்த்துபிரளய காலத்தில் அனைத்து உயிர்களையும் விழுங்க வந்த காலன் போல தெரிந்தது அங்கு இருந்தவர்களுக்கு.

 

उत्पतन्तं तु वेगेन जग्राहैनं मनस्विन्।

भीष्म एव महाबाहुर्महासेनमिवेश्वरः।।             

கோபம் தாங்காமல் குபீரென்று வேகமாக கிளம்பிய பீமனைமஹா சேனனான குமரனை (முருகனைசிவபெருமான் தடுத்தது போல தடுத்தார்.

 

तस्व भीमस्य भीष्मेण वार्यमाणस्य भारत।

गुरुणा विविधैर्वाक्यैः क्रोधः प्रशममागतः।।

அந்த பீமனுக்கு பல வார்த்தைகள் சொல்லி பீஷ்மர் சமாதானம் செய்த பிறகுபீமனின் கோபம் அடங்கியது.

 

नातिचक्राम भीष्मस्य  हि वाक्यमरिन्दमः।

समुद्वृत्तो घनापाये वेलामिव महोदधिः।।

எப்படி சமுத்திர ஜலம் கரையை கடக்காமல் கட்டுப்பட்டு இருக்குமோஅது போலபீஷ்மரின் வார்த்தையை மீற முடியாமல் பீமன் கட்டுப்பட்டு இருந்தான்.

शिशुपालस्तु सङ्क्रुद्धे भीमसेने जनाधिप।

नाकम्पत तदा वीरः पौरुषे व्यवस्थितः।। 

தன் பராக்ரமத்தில் அதீத நம்பிக்கை கொண்ட சிசுபாலனோபீமசேனன் கோபித்த போதும் துளியும் கலங்கவில்லை.

 

उत्पतन्तं तु वेगेन पुनः पुनररिन्दमः।

  तं चिन्तयामास सिंहः क्रुद्धो मृगं यथा।।    

பீமசேனன் கோபப்பட்டு சிசுபாலனை நோக்கி வேகமாக வர முயன்ற போதெல்லாம்கோபமுள்ள சிங்கம் எப்படி மற்ற மிருகத்தை மதிக்காதோஅது போலபீமஸேனனின் கோபத்தை பொருட்படுத்தாமலேயே இருந்தான்.

 

प्रहसंश्चाब्रवीद्वाक्यं चेदिराजः प्रतापवान्।

भीमसेनमभिक्रुद्धं दृष्ट्वा भीमपराक्रमम्।।

मुञ्चैनं भीष्म पश्यन्तु यावदेनं नराधिपः।

मत्प्रभावविनिर्दग्धं पतङ्गमिव वह्निना।।

அது மட்டுமில்லாமல்கோபத்தோடு காணப்பட்ட பீமனை பார்த்துசிரித்து கொண்டே, "ஏய் பீஷ்மாஇவனை ஏன் தடுக்கிறாய்இவனை விடுவிளக்கில் தானாக வந்து விழும் விட்டிற்பூச்சி போலஎன் பராக்ரமம் என்ற அக்னியில் விழுந்து இவன் எரியப்போவதை இங்கு இருக்கும் அரசர்கள் பார்க்கட்டும்என்று கர்ஜித்தான்.

 

ततश्चेदिपतेर्वाक्यं श्रुत्वा तत्कुरुसत्तमः।

भीमसेनमुवाचेदं भीष्मे मतिमतां वरः।।

இப்படி சேதி நாட்டு அரசன் சிசுபாலன் சொன்னதும்கௌரவர்களில் உத்தமரான பீஷ்மர்பீமனை பார்த்து இவ்வாறு பேசலானார்.

 

नैषा चेदिपतेर्बुद्धिर्यत्त्वामाह्वयतेऽच्युतम्।

भीमसेन महाबाहो कृष्णस्यैव विनिश्चयः।।

"பீமஸேனாயுத்தத்தில் தோல்வியே அடையாத உன்னைஇவன் யுத்தத்திற்கு அழைக்கிறான் பார் ! இப்பொழுது இவன் சுய புத்தியோடு பேசவில்லை என்று அறிந்து கொள்இவன் இப்படி பேச வேண்டும் என்று கிருஷ்ணன் சங்கள்பித்து விட்டான்என்று சொன்னார்.

 

भीष्म उवाच।।      (பீஷ்மர் மேலும் சொல்கிறார்)

चेदिराजकुले जातख्यक्ष एष चतुर्भुजः।

रासभारावसदृशं ररास  ननाद च।।

பீமாஇந்த சிசுபாலன் சேதி ராஜனுக்கு பிறக்கும் போதுமூன்று கண்களோடு, நான்கு கைகளோடு பிறந்தான்பிறக்கும் போது கழுதை போல இரைந்து ஊளையிட்டான்.

 

तेनास्य मातापितरौ त्रेसतुस्तौ सबान्धवौ।

वैकृतं तस्यत तौ दृष्ट्वा त्यागायाकुरुतां मतिम्।। 

ततः सभार्यं नृपतिं सामात्यं सपुरोहितम्।

चिन्तासंमूढहृदयं वागुवाचाशरीरेणी।।

இப்படி இவன் பிறந்ததை பார்த்த இவன் தாய் தந்தை இருவரும்இவனை தியாகம் செய்ய முடிவு செய்தனர்அந்த அரசர், தன் மனைவியோடும், மந்திரிகளோடும், புரோஹிதர்களோடும் கலந்து இதை பற்றி ஆலோசித்து கொண்டு இருந்த போது, அசரீரி வாக்கு கேட்டது.

 

एष ते नृपते पुत्रः श्रीमाञ्जातो बलाधिकः।

तस्मादस्मान्न भेतव्यमव्यग्रः पाहि वै शिशुम्।।

  वै तस्य मृत्युस्त्वं  कालः प्रत्युपस्थितः।

यश्च शस्त्रेण हन्ताऽस्य  चोत्पन्नो नराधिप।।

संश्रुत्योदाहृतं वाक्यं भूतमन्तर्हितं ततः।

पुत्रस्नेहाभिसन्तप्ता जननी वाक्यमब्रवीत्।।

"ராஜன்உன்னுடைய புத்ரன் பலம் மிகுந்தவனாக பிறந்து இருக்கிறான்ஆதலால்இவனை கண்டு பயப்பட வேண்டாம்கலக்கமில்லாமல் இவனை காப்பாற்றுஇவனுக்கு உன்னால் மரணமில்லைமரணகாலம் இவனுக்கு இப்போது இல்லை.

ராஜன்இவனை ஆயுதத்தால் கொல்ல போகிறவன் எவனோஅவனும் பிறந்து இருக்கிறான்என்று அசரீரி வாக்கு கேட்டது.

 

येनेदमीरितं वाक्यं ममैतं तनयं प्रति।

प्राञ्जलिस्तं नमस्यामि ब्रवीतु  पुनर्वचः।।

याथातथ्येन भगवान्देवो वा यदि वेतरः।

श्रोतुमिच्छामि पुत्रस्य कोऽस्य मृत्युर्भविष्यति।।

இப்படி தன் மகனை பற்றி அசரீரி வாக்கு கேட்டதும்புத்ர பாசம் உள்ளதாயானவள், "என் புத்ரனை பற்றி இவ்வாறு பேசியவர் யாரோஅவரை நான் கை கூப்பி வணங்கி கேட்கிறேன்மஹிமையுள்ள தேவ புருஷராகிய நீங்கள் யாராக இருந்தாலும்எனக்காக மறுபடியும்  விரிவாக சொல்ல வேண்டுகிறேன்என் பிள்ளைக்கு காலனாக போகிறவன் யார் என்று அறிய விருபுகிறேன்என்று பிரார்த்தனை செய்தாள்.

 

अन्तर्भूतं ततो भूतमुवाचेदं पुनर्वचः।

यस्योत्सङ्गे गृहीतस्य भुजावभ्यधिकावुभौ।।     

पतिष्यतः क्षितितले पञ्चशीर्षाविवोरगौ।

तृतीयमेतद्बालस्य ललाटस्थं तु लोचनम्।।        

தன்னை மறைத்து கொண்டு பேசிய அந்த தேவன்மேலும் இவ்வாறு பேசலானான்

"எவன் தன் மடியில் இந்த குழந்தையை எடுத்து கொள்ளும் போதுஇயற்கைக்கு மாறான  அதிகப்படியான இரண்டு கைகளும், 5 தலை நாகம் போல தரையில் விழுமோஎவனை இந்த குழந்தை பார்த்தவுடனேயே மூன்றாவது கண்ணும் மறைந்து போகுமோ!  அவனே இவனுக்கு காலனாக அமைவான்என்று சொல்லி மறைந்தது.

 

निमज्जिष्यति यं दृष्ट्वा सोऽस्य मृत्युर्भविष्यति।

त्र्यक्षं चतुर्भुजं श्रुत्वा तथा  समुदाहृतम्।।

पृथिव्यां पार्थिवाः सर्वे अभ्यागच्छन्दिदृक्षवः।

तान्पूजयित्वा सम्प्राप्तान्यथार्हं  महीपतिः।।

இப்படி அசரீரி சொன்ன பிறகுநான்கு கைகளோடும்மூன்று கண்களோடும் இருந்த இவனை பூமியில் இருக்கும் அனைத்து அரசர்களும் வந்து வந்து பார்த்தனர்

 

एकैकस्य नृपस्याङ्के पुत्रमारोपयत्तदा।

एवं राजसहस्राणा पृथक्त्वेन यथाक्रमम्।।

சேதி அரசன்வந்த அரசர்கள் ஒவ்வொருவரையும் தகுந்த மரியாதையோடு பூஜித்துஒவ்வொரு அரசனின் மடியிலும் தன் பிள்ளையை கொடுத்து பார்த்தான்இது போல, அநேக ஆயிரம் அரசர்கள் மடியில் குழந்தையை கொடுத்து பார்த்தான்.

शिशुरङ्के समारूढो  तत्प्राय निदर्शनम्।

एतदेव तु संश्रुत्य द्वारवत्यां महाबलौ।।

இத்தனை முயற்சி செய்தும்குழந்தையின் அதிகப்படியான அங்கங்கள் மறையவில்லைமஹாபலசாலிகளானயாதவர்களான ராமனும் கிருஷ்ணனும் துவாரகா நகரத்தில் இதை பற்றி கேள்விப்பட்டனர்.

 

ततश्चेदिपुरं प्राप्तौ सङ्कर्षणजनार्दनौ।

यादवौ यादवीं द्रुष्टुं स्वसारं तौ पितुस्तदा।।

अभिवाद्य यथान्यायं यथाश्रेष्ठं नृपं  ताम्।

कुशलानामयं पृष्ट्वा निषण्णौ रामकेशवौ।।

யாதவ குல பெண்ணானதன் தகப்பனார் "வசுதேவரின்தங்கையான சேதி நாட்டு அரசியை பார்க்க பலராமரும்கிருஷ்ணனும் வந்தனர்ராமரும்கிருஷ்ணனும் தன் தந்தைக்கு சமமான அந்த அரசரை வந்தனம் செய்து க்ஷேமத்தை விஜாரித்தார்.

 

साऽभ्यर्च्य तौ तदा वीरौ प्रीत्या चाभ्यधिकं ततः।

पुत्रं दामोदरोत्सङ्गे देवी संन्यदधात्स्वयम्।। 

வந்திருந்த ராமகிருஷ்ணன் இருவரையும் ஆசையோடு வரவேற்றுதன் பிள்ளையை தானே கிருஷ்ணன் மடியில் வைத்தாள்

 

न्यस्तमात्रस्य तस्याङ्के भुजावभ्यधिकावुभौ।

पेततुस्तच्च नयनं न्यमज्जत ललाटजम्।।

கிருஷ்ணன் மடியில் வைத்த மாத்திரத்தில்அந்த குழந்தையின் அதிகப்படியான இரண்டு கைகளும் விழுந்தனஅதன் நெற்றியில் (லலாடம்இருந்த கண்ணும் உடனே மறைந்தன.

 

तद्दृष्ट्वा व्यथिता त्रस्ता वरं कृष्णमयाचत।

ददस्व मे वरं कृष्ण भयार्ताया महाभुज।।

त्वं हि आर्तानां सम आश्वासो भीतानाम् अभयप्रदः।

एवम् उक्तस्ततः कृष्णः अब्रवीद् मदुनन्दनः।।  

இதை கண்ட அந்த அரசிபெரும் துக்கமும்பயமும் அடைந்தாள்கிருஷ்ணனை பார்த்து, "கிருஷ்ணாஉறுதியான புஜங்கள் கொண்டவனேபயத்தினால் தவிக்கும் எனக்கு நீ ஒரு வரம் தருவாயோநீ துயரப்படுபவர்களுக்கு ஆறுதலும்பயத்தில் உள்ளவர்களுக்கு அபயமும் அளிப்பவன் ஆயிற்றே! " என்றாள் 

 

मा भैस्त्वं देवि धर्मज्ञे  मत्तोऽस्ति भयं तव।

ददामि कं वरं किं  करवाणि पितृष्वसः।।     

शक्यं वा यदि वाऽशक्यं करिष्याणि वचस्तव।

एवमुक्ता ततः कृष्णमब्रवीद्यदुनन्दनम्।।         

இவ்வாறு இவள் சொன்னதை கேட்ட கிருஷ்ணன் "அரசியேதர்மம் தெரிந்தவளேநீங்கள் பயப்பட வேண்டாம்என்னால் உங்களுக்கு  பயம் வேண்டாம்என் தகப்பனாரின் சகோதரியேஉங்களுக்கு என்ன வரம் நான் கொடுக்க வேண்டும்அல்லது நான் என்ன செய்ய வேண்டும்செய்ய முடிந்ததாக இருந்தாலும்செய்ய முடியாததாக இருந்தாலும் நீங்கள் சொன்னால் செய்வேன்என்று வாக்கு கொடுத்தார்.

 

शिशुपालस्यापराधान्क्षमेथास्त्वं महाबल।

मत्कृते यदुशार्दूल विद्ध्येनं मे वरं प्रभो।।

இப்படி சொன்ன கிருஷ்ணனை பார்த்து, "மஹா பலசாலியேயது குலத்தில் உயர்ந்தவனேப்ரபோசிசுபாலன் செய்யும் பிழைகளை எனக்காக பொறுப்பாயாகஇதுவே நான் கேட்கும் வரம்என்றாள்.

 

कृष्ण उवाच। (கிருஷ்ணர் சொல்கிறார்)

अपराधशतं क्षाम्यं मया ह्यस्य पितृष्वसः।

पुत्रस्य ते वधार्हस्य मा त्वं शोके मनः कृथाः।।

"அத்தைஉன்னுடைய பிள்ளை என்னை பார்த்து 100 முறை ஏசும் வரைஅவன் அபராதத்தை பொறுத்து கொண்டு இருப்பேன்.நீ துக்கத்தில் மனதை செலுத்தாதே!" என்று சமாதானம் செய்து வாக்குறுதி கொடுத்தார்.

 

भीष्म उवाच।  (பீஷ்மர் பீமனிடம் சொன்னார்)

 जानन्नात्मनो मृत्युं कृष्णं यदुसुखावहम्।

एवमेष नृपः पापः शिशुपाः सुमन्दधीः।

त्वां समाह्वयते वीर गोविन्दवरदर्पितः।।

வீரனான பீமஸேனாயாதவ மக்களை காப்பாற்றி சுகப்படுத்தும் ஸ்ரீகிருஷ்ணன் தான் 'தனக்கு ம்ருத்யுவை தர போகிறான்என்று தெரிந்த இந்த பாவியான சிசுபாலன்கிருஷ்ணன் கொடுத்த வரத்தினால் பாதுகாக்க படுவதால்கர்வப்பட்டுமதி இழந்து உன்னை வேண்டுமென்றே யுத்தத்திற்கு அழைக்கிறான்.

 

भीष्म उवाच।।      (மேலும் பீஷ்மர் சொன்னார்)

नैषा चेदिपतेर्बुद्धिर्यया त्वाह्वयतेऽच्युतम्।

नूनमेव जगद्भर्तुः कृष्णस्यैव विनिश्चयः।            

பீமஸேனாநீ எந்த யுத்தத்திலும் தோல்வி அடையாதவன் என்று தெரிந்தும்இந்த சேதி நாட்டு அரசன் உன்னை யுத்தம் செய்ய அழைக்கிறான் என்றால்இவன் இவனுடைய புத்தியால பேசவில்லை என்று புரிந்து கொள்லோகநாதனாகிய கிருஷ்ணனின் எண்ணத்தின் படி தான் இவன் இப்போது பேசி கொண்டு இருக்கிறான்.

 

को हि मां भीमसेनाद्य क्षितावर्हति पार्थिवः।

क्षेप्तुं कालपरीतात्मा यथैष कुलपांसनः।।

இவன் குலத்தை நாசம் செய்து கொள்ளகெட்ட காலத்தின் பிடியினால் மதி கேட்டு பேசும் இந்த சிசுபாலன்யாருமே தூஷிக்க துணியாத என்னை பார்த்து தூஷிக்கிறான்

 

एष ह्यस्य महाबाहुस्तेर्जोशश्च हरेर्ध्रुवम्।

तमेव पुनरादातुं कुरुतेऽत्र मतिं हरिः।।

உறுதியான புஜங்களை கொண்ட இந்த சிசுபாலனும்ஸ்ரீ கிருஷ்ணனின் சக்தியில் ஒரு பாகம் தான் என்பது மறுக்கமுடியாத நிஜமேஸ்ரீ கிருஷ்ணன் இப்போது அந்த சக்தியை தன்னோடு சேர்த்து கொள்ள முடிவு செய்து விட்டார் என்று தெரிகிறது.           

येनैष कुरुशार्दूल शार्दूल इव चेदिराट्।

गर्जत्यतीव दुर्बुद्धिः सर्वानस्मानचिन्तयन्।।

குரு வம்சத்தில் உதித்த உத்தமனேஅதனால் தான் இன்று இந்த மதி கெட்ட சிசுபாலன்நாம் எல்லோரையும் மதிக்காமல் புலி போல கர்ஜித்து கொண்டு இருக்கிறான்இவ்வாறு பீஷ்மர் சொன்னார்

 

वैशम्पायन उवाच।। (வைசம்பாயனர் சொல்கிறார்)

ततो  ममृषे चैद्यस्तद्भीष्मवचनं तदा।

उवाच चैन सङ्क्रुद्धः पुनर्भीष्ममथोत्तरम्।।

இப்படி பீஷ்மர் சொல்வதை கேட்ட சேதி நாட்டு அரசன் சிசுபாலன்பொறுக்க முடியாமல்மறுபடியும் பீஷ்மரை பார்த்து கோபமாக பேசலானான்.

 

शिशुपाल उवाच।।   (சிசுபாலன் பேசுகிறான்)

द्विषतां नोऽस्तु भीष्मैष प्रभावः केशवस्य यः।

यस्य संस्तववक्ता त्वं बन्दिवत्सततोत्थितः।।

ஏய் பீஷ்மாநீ இந்த கேசவனை துதி பாடியதை எல்லாம் என் மீது பாட கற்றுக்கொள்நீ ராஜாக்களுக்கு துதி பாடும் பந்திக்கள் போலஓயாமல் இவனையே ஸ்துதி செய்கிறாயே !

 

संस्तवे चमनो भीष्म परेषां रमते यदि।

तदा संस्तुहि राज्ञस्त्वमिमं हित्वा जनार्दनम्।।

ஏய் பீஷ்மா ! உனக்கு அப்படி தான் வெளியாளான ஜனார்தனனை துதிக்க பழக்கம் இருந்தால்அதை மாற்றி கொண்டுமற்ற வெளி அரசர்களை துதி செய்து கொண்டு இருக்கலாமே!

 

दरदं स्तुहि बाह्लीकमिमं पार्थिवसत्तमम्।

जायमानेन येनेयभवद्दारिता मही।। 

உனக்கு யாரையாவது துதி பாடி கொண்டே இருப்பது பழக்கம் என்றால்இதோ பாஹ்லீக தேச அரசர் இருக்கிறார்அவரை துதி செய்இவர் பிறக்கும் போதே இந்த பூமியை பிளந்தவர்.

 

वङ्गाङ्गविषयाध्यक्षं सहस्राक्षसमं बले।

स्तुहि कर्णमिमं भीष्म महाचापविकर्षणम्।।

ஏய் பீஷ்மா!  உனக்கு மேலும் துதி பாட வேண்டுமென்றால்இதோ வங்க தேசத்தையும்அங்க தேசத்தையும் ஆண்டு கொண்டுபலத்தில் இந்திரனுக்கு நிகராக இருக்கும் சிறந்த வில்லாளியான கர்ணனை துதி பாடு.

 

यस्येमे कुण्डले दिव्ये सहजे देवनिर्मिते।

कवचं  महाबाहो बालार्कसदृशप्रभम्।।

वासवप्रतिमो येन जरासन्धोऽतिदुर्जयः।

विजितो बाहुयुद्धेन देहभेदं  लम्भितः।।

பெரிய கைகள் உடைய பீஷ்மா!  இந்த கர்ணன் பிறக்கும் போதே திவ்யமான குண்டலங்களுடன்இளஞ் சூரியனை போல ஜொலிக்கும் கவசத்தையும் தெய்வ அனுகிரஹத்தால் பெற்றவன்.

இந்திரனுக்கு நிகராக பராக்ரமம் கொண்ட ஜராஸந்தனுடன் மல்யுத்தம் செய்துஅவன் உடலை கிழித்து போட்ட மஹா வீரன் கர்ணன்.

 

द्रोणं द्रौणिं  साधु त्वं पितापुत्रौ महारथौ।

स्तुहि स्तुत्यावुभौ भीष्म सततं द्विजसत्तमौ।।

ஏய் பீஷ்மாபோர் செய்வதில் மஹாரதர்களாகவும்ப்ராம்மணர்களில் உத்தமராகவும் இருக்கும் துரோணரும்அவர் பிள்ளை அஸ்வத்தாமனும் இருக்கிறார்களேநீ அவர்களை இடைவிடாமல் துதி செய்து கொண்டு இருக்கலாமேஅப்படி செய்தால் உனக்கு நன்றாக இருக்குமே!

 

ययोरन्यतरो भीष्म सङ्क्रुद्धः सचराचराम्।

इमां वसुमतीं कुर्यान्निः शेषामिति मे मतिः।।     

இந்த இருவரில் ஒருவர் கோபப்பட்டாலும்இந்த உலகில் எந்த பிராணியும் உயிரோடு இருக்க முடியாத படிஅஸ்திரங்கள் மூலம்உலகத்தையே சர்வநாசம் செய்ய சக்தி படைத்தவர்கள் என்பது என் கருத்து.

 

द्रोणस्य हि समं युद्धे  पश्यामि नराधिपम्।

नाश्वत्थाम्नः समं भीष्म   तौ स्तोतुमिच्छसि।

पृथिव्यां सागरान्तायां यो वैप्रतिसमो भवेत्।।

ஏய் பீஷ்மாநான் இன்று வரைதுரோணரையும் அஸ்வத்தாமனையும் எதிர்க்க, இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் எந்த ஒரு அரசனும் துணிந்து பார்த்ததே இல்லை. அப்படிப்பட்ட இவர்களை, நீ துதிக்க நினைக்கவில்லை.

दुर्योधनं त्वं राजेन्द्रमतिक्रम्य महाभुजम्।

जयद्रथं  राजानं कृतास्त्रं दृढविक्रमम्।

द्रुमं किम्पुरुषाचार्यं लोके प्रथितविक्रमम्।

अतिक्रम्य महावीर्यं किं प्रशंससि केशवम्।।   

அரசர்களுக்கு அரசனாக திகழும் துரியோதனன் இருக்கிறார்சாஸ்திரங்களில் கை தேர்ந்த பராக்ரமசாலியான ஜயத்ரதன் இருக்கிறார்கிம்புருஷர்கள் என்ற தேவலோக வாசிகளுக்கு குருவும்பராக்ரமசாலியான த்ருமன் இருக்கிறார்இவர்கள் அனைவரையும் விட்டு விட்டுகேசவனை போய் மஹாவீரன் என்று ஏன் பெருமையாக பேசுகிறாய்

 

वृद्धं  भरताचार्यं तथा शारद्वतं कृपम्।

अतिक्रम्य महावीर्यं किं प्रशंससि केशवम्।।

வயதில் பெரியவர்பரத குலத்துக்கு ஆசார்யர்சாரத்வர் என்று சொல்லப்படும் க்ருபர் இருக்கிறார்அவரையும் விட்டு விட்டுஇந்த கேசவனை ஏன் மஹாவீரன் என்று புகழ்கிறாய்?


धनुर्धराणां प्रवरं रुक्मिणं पुरुषोत्तमम्।

अतिक्रम्य महावीर्यं किं प्रशंससि केशवम्।।   

வில்லாளிகளில் சிறந்தவர்புருஷர்களில் உத்தமரான ருக்மி இருக்கிறார்அவரையும் விட்டு விட்டுஇந்த கேசவனை ஏன் மஹாவீரன் என்று புகழ்கிறாய்?

 

भीष्मकं  महावीर्यं दन्तवक्त्रं  भूमिपम्।

भगदत्तं यूपकेथु जयत्सेनं  मागधम्।।            

பீஷ்மக ராஜன் இருக்கிறார்மஹாவீரரான தந்தவக்த்ரன் இருக்கிறார்பகதத்தன் இருக்கிறார்யூபகேது இருக்கிறார்மகத தேசத்து (ஒடிசாஅரசர் ஜயத்சேனன் இருக்கிறார்.

विराटद्रुपदौ चोभौ शकुनिं  बृहद्बलम्।

विन्दानुविन्दावावन्त्यौ पाण्ड्यं श्वेतमथोत्तमम्।।

விராட தேசத்து த்ருபதன் இருக்கிறார்சகுனி இருக்கிறார்ப்ருஹத்பலன் இருக்கிறார்அவந்தி தேசத்து விந்தன்-அனுவிந்தன் இருவரும் இருக்கிறார்கள்பாண்டிய அரசர் இருக்கிறார்உத்தமரான ஸ்வேதன் இருக்கிறார்.

 

शङ्खं  सुमहाभागं वृषसेनं  मानिनम्।

एकलव्यं  विक्रान्तं कालिङ्गं  महारथम्।

अतिक्रम्य महावीर्यं किं प्रशंसति केशवम्।।

சங்கன் இருக்கிறார்கர்வமுள்ள வ்ருஷசேனன் இருக்கிறார்ஏகலவ்யன் இருக்கிறார்கலிங்க தேச அரசரும் இருக்கிறார்.

இப்படி ஏராளமான மஹாவீரர்கள் இங்கு இருக்கும் போதுஇந்த கேசவனை எப்படி மஹாவீரன் என்று புகழ்கிறாய்?

 

शल्यादीनपि कस्मात्त्वं  स्तौषि वसुधाधिपान्।

स्तवाय यदि ते बुद्धिर्वर्तते भीष्म वसुधाधिपान्।

ஏய் பீஷ்மாஉனக்கு ஸ்தோத்திரம் செய்வது தான் பிடிக்கும் என்றால்இதோ சல்ய மகாராஜன் இருக்கிறார்அவரை துதி செய்யேன்!

 

किं हि शक्यं मया कर्तुं यद्वृद्धानां त्वया नृप।

पुरा कथयतां नूनं  श्रुतं धर्मवादिनाम्।।          

தர்மங்கள் தெரிந்த பெரியோர்கள் உனக்கு நீதிகள் நிறைந்த புராண கதைகள் சொல்லும் போது நீ கேட்டதில்லை என்று நன்றாக தெரிகிறதுஅதற்கு நான் என்ன செய்ய முடியும்?

आत्म-निन्द आत्म-पूजा  पर-निन्दा परस्तवः।

अनाचरितम् आर्याणामिति ते भीष्म  श्रुतम्।।

ஏய் பீஷ்மா!  தன்னை தானே புகழ்ந்து கொள்வதும்இகழ்ந்து கொள்வதும்பிறரை இகழ்வதும் புகழ்வதும் பண்பு உள்ளவன் செய்ய மாட்டான் என்று உனக்கு பெரியோர்கள் சொல்லி கேட்டதே இல்லையா?

 

यदस्तव्यमिमं शश्वन्मोहात्संस्तौषि भक्तितः।

केशवं तच्च ते भीष्म  कश्चिदनुमन्यते।।

ஏய் பீஷ்மா!  புகழ்ச்சிக்கு தகுதியே இல்லாத இந்த கேசவனைஉனக்கு இருக்கும் தனிப்பட்ட ப்ரியத்தால் புகழ்ந்தாய்ஆனால் இந்த முட்டாள்தனத்தை யாருமே இங்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

 

कथं भोजस्य पुरुषे वत्सपाले दुरात्मनि।

समावेशयसे सर्वं जगत्केवलकाम्यया।।

எங்கோ மாடு மேய்த்து கொண்டு இருந்த இந்த மாட்டு பயலைதுராத்மாவை உன்னுடைய வீண் அபிமானத்தால் கொண்டாடிஉலகத்துக்கே ஏன் இப்படி அவமானத்தை தேடி தருகிறாய்?

 

अथ चैषा  ते बुद्धिः प्रकृतिं याति भारत।

मयैव कथितं पूर्वं कुलिङ्गशकुनिर्यथा।।           

இயற்கைக்கு மாறாக மாறி போன உன் புத்தி திரும்பவே திரும்பாது என்று தான் தெரிகிறதுகுலிங்கசகுனி போன்ற குணத்தை கொண்டவன் நீ என்று முன்னமே சொன்னேன்.

 

कुलिङ्गशकुनिर्नाम पार्श्वे हिमवतः परे।

भी तस्याः सदा वाचः श्रूयन्तेऽर्थविगर्हिताः।।

இந்த குலிங்கசகுனி பறவைகள் ஹிமாலய பர்வதத்துக்கு பின்புறத்தில் உள்ள பிரதேசத்தில் உள்ளதுஅதனிடத்தில் செயற்கைக்கு மாறான ஒலிகளே கேட்கும்.

 

मा साहसमितीदं सा सततं वाशते किल।

साहसं चात्मनातीव चरन्ती नावबुध्यते।।

அந்த பறவை "தானே அதிகப்படியாக சாஹசம் செய்து கொண்டுபிறருக்கு "சாஹசம் செய்யாதேஎன்று புத்தி சொல்லிக்கொண்டு இருக்கும்.

 

सा हि मांसार्गलं भीष्म मुखात्सिंहस्य खादतः।

दन्तान्तरविलग्नं यत्तदादत्तेऽल्पचेतना।।

அந்த பறவை சிங்கத்தின் வாயில் அதன் கோர பற்களுக்கு இடையில் ஒட்டி இருக்கும் மாமிசத்தை இழுக்க முயற்சி செய்யும்.

 

इच्छतः सा हि सिंहस्य भीष्म जीवत्यसंशयम्।

तद्वत्त्वमप्यधर्मिष्ठ सदा वाचः प्रभाषसे।।           

ஏய் பீஷ்மாஇப்படி சாஹசம் செய்யும் இந்த பறவைஉயிரோடு இருக்கட்டும் என்று அந்த சிங்கம் நினைக்கும் வரை உயிரோடு இருக்கும்ஏய் அதர்மீ ! நீ பேசிய பேச்சுக்களை நாங்கள் பொறுத்து கொண்டு இருப்பதும் அது போல தான்.

 

इच्छतां भूमिपालानां भीष्म जीवस्यसंशयम्।

लोकविद्विष्टकर्मा हि नान्योऽस्ति भवता समः।।

ஏய் பீஷ்மா!  இங்கு உள்ள அரசர்கள் சரி போ என்று விட்டு வைத்து இருப்பதால் தான்நீ இன்று உயிரோடு இருக்கிறாய்உலகமே வெறுக்கும் செயல்களை உன்னை போல செய்பவன் உலகத்தில் வேறு யாருமே இல்லை.

 

वैशम्पायन उवाच।।   (வைசம்பாயனர் சொன்னார்)

ततश्चेदिपतेः श्रुत्वा भीष्मः  कटुकं वचः।

उवाचेदं वचो राजंश्चेदिराजस्य शृण्वतः।।

इच्छतां किल नामाहं जीवाम्येषां महीक्षिताम्।

सोऽहं  गणयाम्येतांस्तृणेनापि नराधिपान्।।

ஜனமேஜயா ! சேதி நாட்டு அரசன் இப்படி கடுமையான சொற்களால் பேசியதை கேட்ட பீஷ்மர்உடனே "இந்த அரசர்கள் இஷ்டப்பட்டு அனுமதித்ததால் தான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்று சொல்கிறாயாஅடேய்நான் இங்கு நீ சொன்ன அரசர்களை ஒரு துரும்புக்கு கூட நிகராக நினைக்கவில்லைஎன்று கர்ஜித்தார்.

 

एवमुक्ते तु भीष्मेण ततः सञ्चुक्रुशुर्नृपाः।

केचिज्जहृषिरे तत्र केचिद्भीष्मं जगर्हिरे।।

இவ்வாறு பீஷ்மர் பேசியது கேட்ட மற்ற அரசர்கள் பெரும் கூச்சலிட்டார்கள்சிலர் அவர் பேசியதை கேட்டு சந்தோஷம் அடைந்தார்கள்சிலர் பீஷ்மரை இகழ்ந்து திட்ட ஆரம்பித்தனர்.

 

केचिदूचुर्महेष्वासाः श्रुत्वा भीष्मस्य यद्वचः।

पापोऽवलिप्तो वृद्धश्च नायं भीष्मोऽर्हति क्षमाम्।।           

हन्यतां दुर्मतिर्भीष्मः पशुवत्साध्वयं नृपाः।

सर्वैः समेत्य संरब्धैर्दह्यतां वा कटाग्निना।।         

மகா வீரர்களான சில வில்லாளிகள் எழுந்துபீஷ்மர் சொன்னதை கேட்டு, "பாபியும்திமிர்பிடித்த இந்த கிழ பீஷ்மனை நாம் மன்னிக்கவே முடியாதுஹே அரசர்களேஇந்த கெட்ட புத்தியுள்ள பீஷ்மன் யாகப்பசு போல பலி செய்வது நலம்நாம் எல்லோரும் சேர்ந்து இவனை கொள்ளிக்கட்டையால் எரிக்கவும் செய்யலாம்என்று கர்ஜித்தனர்.

 

इति तेषां वचः श्रुत्वा ततः कुरुपितामहः।

उवाच मतिमान्भीष्मस्तानेव वसुधाधिपान्।।   

उक्तस्योक्तस्य नेहान्तमहं समुपलक्षये।

यत्तु वक्ष्यामि तत्सर्वं शृणुध्वं वसुधाधिपाः।।       

पशुवद्घातनं वा मे दहनं वा कटाग्निना।

क्रियतां मूर्ध्नि वो न्यस्तं मयेदं सकलं पदम्।।    

एष तिष्ठति गोविन्दः पूजितोऽस्माभिरच्युतः।

यस्य वस्त्वरते बुद्धिर्मरणाय  माधवम्।।

कृष्णमाह्वयतामद्य युद्धे चक्रगदाधरम्।

यादवस्यैव देवस्य देहं विशतु पातितः।।

இவ்வாறு இவர்கள் பேசியதை கேட்ட பீஷ்மர்வந்திருந்த அரசர்களை பார்த்து, " ஒவ்வொரு பேச்சுக்கும்மறு  பேச்சு பேசுவதால் ஒரு பயனும் தெரியவில்லைநான் சொல்லப்போவதை கேளுங்கள்என்னை முடிந்தால் யாகப்பசுவை போல வதம் செய்யுங்கள்என்னை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு கொள்ளிக்கட்டையால் கொளுத்துங்கள்இதோ என் காலை உங்கள் தலையில் வைக்கிறேன்இதோகோவிந்தன் எங்களால் பூஜிக்கப்பட்டு பின்  வாங்காமல் இருக்கிறார்உங்களில் யாருக்கு மரணத்தை தழுவ ஆசை ஏற்பட்டு இருக்கிறதோஅவர்கள் இப்போதே சங்கும் சக்கரமும் ஏந்தி இருக்கும் கிருஷ்ணனை யுத்தத்திற்கு அழைத்துயது குல திலகனான இந்த தேவனுடைய தேகத்தோடு மறைந்து விடலாம்என்று கர்ஜித்தார்.

 

वैशम्पायन उवाच।।   (வைசம்பாயனர் சொல்கிறார்)

वचः श्रुत्वैव भीष्मस्य चेदिराडुरुविक्रमः।

युयुत्सुर्वासुदेवेन वासुदेवमुवाच ह।। 

பீஷ்மர் பேசியதை கேட்ட வீரனான சேதி நாட்டு அரசன் சிசுபாலன்வாசுதேவனை பார்த்து போருக்கு அழைத்து பேசலானான்.

 

आह्वये त्वां रणं गच्छ मया सार्धं जनार्दन।

यावदद्य निहन्मि त्वां सहितं सर्वपाण्डवैः।।

ஜனார்தனாவாஎன்னுடன் சண்டை செய்நான் உன்னை அழைக்கிறேன்உன்னோடு இந்த பாண்டவர்களையும் சேர்த்து கொல்கிறேன்

 

सह त्वया हि मे वध्याः सर्वथा कृष्ण पाण्डवाः।

नृपतीन्समतिक्रम्य यैरराजा त्वमर्चितः।।          

இங்கு இத்தனை அரசர்கள் இருக்கும் போது உன்னை போய் தேர்ந்தெடுத்தார்களே ! அதற்காகவே உன்னோடு சேர்த்து இந்த பாண்டவர்களும் என்னால் கொல்லப்பட வேண்டியவர்களே!

ये त्वां दासमराजानं बाल्यादर्चन्ति दुर्मतिम्।

अनर्हमर्हवत्कृष्ण वध्यास्त इति मे मतिः।।

நீ அரசர்களுக்கு அடிமை வேலை செய்யும் வேலைக்காரன்கெட்ட புத்தி உள்ளவன்பூஜிக்க தகுதியே இல்லாதவன்தகுதியே இல்லாத உன்னை போய் சிறுபிள்ளை தனமாக பூஜித்த இந்த பாண்டவர்களும் வதம் செய்யப்பட தக்கவர்கள் என்பதே என்று முடிவு.

 

इत्युक्त्वा राजशार्दूल `शार्दूल इव नादयन्।

पश्यतां सर्वभूतानां शिशुपालः प्रतापवान्।।

 रणायैव सङ्क्रुद्धः सन्नद्धः सर्वराजभिः।

सुनीथः प्रययौ क्षिप्रं पार्थयज्ञजिघांसया।। 

ராஜ ஸ்ரேஷ்டனேஜனமேஜயா ! இப்படி பேசிக்கொண்டே பராக்ரமசாலியான சிசுபாலன்புலி போல கர்ஜித்துக்கொண்டேஅரசர்கள் சூழ்ந்த அந்த சபையில்ராஜசூய யாகத்தை கெடுக்கும் எண்ணத்துடன் விரைந்து வந்தான்.

 

ततश्चक्रगदापाणिः केशवः केशिहा हरिः।

सध्वजं रथमास्थाय दारुकेण सुसत्कृतम्।

भीष्मेण दत्तहस्तोऽसावारुहोह रथोत्तमम्।। 

அப்பொழுதுசக்கரத்தை ஏந்தியுள்ள கேசவன்கேசியை கொன்றவன்தாருகன் என்னும் தனது சாரதியினால் கருடக்கொடி பறக்கும் தன் திவ்யமான தேரில்பீஷ்மர் கை கொடுக்கஅதன்மேல் ஜில்லென்று ஏறினார்.

 

तेन पापस्वभावेन कोपितान्सर्वपार्थिवान्।

आससाद रणे कृष्णः सज्जितैकरथः स्थितः।।  

கெட்ட குணமே கொண்ட சிசுபாலன் கோபத்தில் இப்படி பேசியதால் ஈர்க்கப்பட்டு எதிர்த்து நின்ற  சில அரசர்களை தான் ஒருவனாகவே யுத்தம் செய்ய எதிர்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணர்.

 

ततः पुष्करपत्राक्षं तार्क्ष्यध्वजरथे स्थितम्।

दिवाकरमिवोद्यन्तं ददृशुः सर्वपार्थिवाः।।

आरोपयन्तं ज्यां कृष्णं प्रतपन्तमिवौजसा।

स्थितं पुष्परथे दिव्ये पुष्पकेतुमिवापरम्।।

தாமரை மலர் போன்ற கண்களோடுகருட கொடி பறக்கும் ரதத்தில் ஏறிஉதய சூரியன் போல தன் ஒளியால் பார்ப்பவர்களை தாபத்தில் ஆழ்த்தும்வில்லில் நாண் ஏற்றி நிற்கும் கண்ணனைஅரசர்கள் அனைவரும் கண்டனர்.

 

दृष्ट्वा कृष्णं तथा यान्तं प्रतपन्तमिवौजसा।

यथार्हं केशवे वृत्तिमवशाः प्रतिपेदिरे।।

இப்படி கிருஷ்ணரை பார்த்ததிலேயே ஏதோ புரியாத பரவசம் அடைந்து அரசர்கள் அனைவரும் கேசவனுக்கு மரியாதை செய்ய ஆரம்பித்தனர்.

 

तानुवाच महाबाहुर्महाऽसुरनिबर्हणः।

वृष्णिवीरस्तदा राजन्सान्त्वयन्परवीरहा।।

ராஜன் ஜனமேஜயாதிரண்ட புஜமும்மஹாசூரனும்வ்ருஷ்னீ வீரனுமாகிய அவர்குழுமியிருந்த அந்த அரசர்களை பார்த்து பேசலானார்.

 

श्रीभगवानुवाच।।  (பகவான் சொல்கிறார்)

अपेत सबलाः सर्व आस्वस्ता मम शासनात्।

मा दृष्टो दूषयेत्पाप एष वः सर्वपार्थिपाः।।         

அரசர்களேஅச்சமில்லாமல் நீங்கள் அனைவரும் என் வார்த்தைக்கு இணங்கி இந்த இடத்தை விட்டு  செல்லுங்கள்தன்னையே கெடுத்து கொண்ட இந்த பாபிஉங்களையும் கெடுக்கக்கூடாது.

 

एष नः शत्रुरत्यन्तमेष वृष्णिविमर्दनः।

सात्वतां सात्वतीपुत्रो वैरं चरति शाश्वतम्'।।

இவன் எங்களுக்கு பகைவன்வ்ருஷ்ணீகளை (யாதவர்களைஹிம்சிப்பவன் இவன்யாதவ குல பெண்ணுக்கு இவன் மகனாக பிறந்தும்யாதவர்களிடத்தில் பகை கொண்டு இருப்பவன்.

 

प्राग्ज्योतिषपुरं यातानस्माञ्ज्ञात्वा नृशंसकृत्।

अदहद्द्वारकामेष स्वस्त्रीयः सन्नराधिपाः।।

நான் ப்ராக்-ஜ்யோதிஷ (அஸ்ஸாம்நகரத்திற்கு சென்ற சமயம் பார்த்துகொடிய காரியங்கள் செய்யக்கூடிய இவன்துவாரகைக்குள் புகுந்துநகரில் தீ வைத்தான்.

 

क्रीडतो भोजराजस्य एव रैवतके गिरौ।

हत्वा बध्वा  तान्सार्वानुपायात्स्वपुरं पुरा।।

போஜராஜன் உக்ரசேனர் அங்கு இருந்த போதுஇவன் அங்கு இருந்த யாதவர்கள் அனைவரையும் அடித்து சிறைபிடித்து தன் ஊருக்கு சென்றான்

 

अश्वमेधे हयं मेध्यमुत्सृष्टं रक्षिभिर्वृतम्।

पितुर्मे यज्ञविघ्नार्थमहरत्पापनिश्चयः।।

என்னுடைய தந்தை வசுதேவர்அஸ்வமேத யாகம் செய்ய இருந்தார்யாகத்தை இடையூறு செய்வதற்காக இவன் காக்கப்பட்டு வைத்து இருந்த யாக குதிரையை கடத்தி சென்றான்.

 

सौवीरान्प्रतियातां  बभ्रोरेष तपस्विनः।

भार्यामभ्यहरन्मोहादकामां तामितो गताम्।। 

சௌவீர தேசத்துக்கு சென்று கொண்டிருந்த யாதவர்களில் ஒருவனான குற்றமற்ற பப்ருவின் மனைவியைதனது காம மயக்கத்தால் கடத்தி கொண்டு போனான்.

 

एष मायाप्रतिच्छन्नः कारूशार्थे तपस्विनीम्।

जहार भद्रां वैशालीं मातुलस्य नृशंसकृत्।।

वृष्णिदारान्विलाप्यैव हत्वा  कुकुरान्धकान्।

पापाबुद्धिरुपातिष्ठत्स प्रविश्य ससम्भ्रमम्।।

विशालराज्ञो दुहितां मम पित्रा वृतां सतीम्।

अनेन कृत्वा सन्धानं करूशेन जिगीषया।।

जरासन्धं समाश्रित्य कृतवान्विप्रियाणि मे।

तानि सर्वाणि सङ्ख्यातुं  शक्नोमि नराधिपाः।।

एवमेतदपर्यन्तमेष वृष्णिषु किल्बिषी।

अस्माकमयमारम्भांश्चकार परभानृजुः।।

இவனது மாதுலனாகிய (தாயின் சகோதரன்விசாலன் என்பவருடைய பெண்ணான பத்ரா என்பவளை பிடிப்பதர்காக குகுரர்கள் மேலும் அந்தக வீரர்களை கொன்றுஅவர்களின் மனைவிகளை அழ வைத்துபத்ராவை விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக கடத்திகரூச தேச அரசனுக்கு கடத்தி சென்றான்.

என்னை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகஇவன் கரூச அரசனுடன் ஸ்நேஹம் செய்து கொண்டுஜராசந்தனை போல மறுப்பக்கம் எதிர்த்து கொண்டு இருக்கிறான்.  இது போல இவன் எண்ண முடியாத அளவுக்கு பாப காரியங்களை செய்து இருக்கிறான்.

இவன் வ்ருஷ்ணீகளுக்கு (யாதவர்களுக்குஎல்லையில்லா தீங்கு செய்து இருக்கிறான்திருட்டு தனமாக தான் இவன் அனைத்து காரியத்தையுமே செய்து இருக்கிறான்.


शतं क्षन्तव्यमस्माभिर्वधार्हाणां किलागसाम्।

बद्धोऽस्मि समयैर्घोरैर्मातुरस्यैव सङ्गरे।।

"இவன் தொடர்ந்து செய்யும் 100 குற்றங்களை பொறுப்போம்என்று இவன் தாயாருக்கு நான் செய்து கொடுத்த சபதத்தினால் இப்பொழுது வரை கட்டு பட்டு இருந்தேன்.

 

तत्तथा शतमस्माकं क्षान्तं क्षयकरं मया।

द्वौ तु मे वधकालेऽस्मिन्न क्षन्तव्यौ कथञ्चन।।

அதன் காரணத்தாலேயே இவன் இது வரை செய்த 100 வசவுகளையும் பொறுத்து கொண்டேன்இனிஇவன் கொல்லப்பட வேண்டிய இந்த தருணத்தில்நான் எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாத 2 குற்றங்களை குறிப்பாக இவன் இப்பொழுது செய்து இருக்கிறான்.

यज्ञविघ्नकरं हन्यां पाण्डवानां  दुर्हृदम्।

इति मे वर्तते भावस्तमतीयां कथं न्वहम्।।

யாகத்துக்கு இடையூறு செய்த ஒரு குற்றத்துக்காகவும்பாண்டவர்களை கொல்வேன் என்று சொன்ன மற்றொரு குற்றத்துக்காகவும் இந்த விரோதியை நான் கொல்வேன்இதை நான் எப்படி மாற்ற முடியும்?

 

पितृष्वसुः कृते दुःखं सुमहन्मर्षयाम्यहम्।

दिष्ट्या हीदं सर्वराज्ञां सन्निधावद्य वर्तते।।

என் தந்தையின் சகோதரிக்காக இவன் இது நாள் செய்த குற்றங்களை பொறுத்து கொண்டு மன்னித்து கொண்டிருந்தேன்.

 

पश्यन्ति हि भवन्तोऽद्य मय्यतीव व्यतिक्रमम्।

कृतानि तु परोक्षं मे यानि तानि निबोधत।।

इमं त्वस्य  शक्ष्यामि क्षन्तुमद्य व्यतिक्रमम्।

अवलेपाद्वधार्हस्य समग्रे राजमण्डले।।

உங்கள் முன்னிலையிலேயே எத்தனை குற்றங்களை செய்தான் என்று இன்று நீங்களே பார்த்தீர்கள்என் விஷயமாக இவன் அளவுக்கு மீறி செய்த குற்றங்களை நீங்கள் பார்த்தீர்கள் தானேநீங்கள் பாக்காதபோது எத்தனை பெரிய குற்றங்களை செய்து இருப்பான் என்று நினைத்து பாருங்கள்அரசர்கள் குழுமி இருக்கும் இந்த ராஜ சபையில் இவன் கர்வத்தோடு பேசிய அக்ரம பேச்சுக்களை நான் பொறுக்க போவதில்லை.

रुक्मिण्यामस्य मूढस्य प्रार्थनाऽऽसीन्मुमूर्षतः।

  तां प्राप्तवान्मूढः शूद्रो वेदश्रुतीमिव।।

மரணத்தின் மீது ஆசை கொண்ட இவன்ருக்மிணி மீது ஆசை கொண்டிருந்தான்எப்படி சூத்ரனுக்கு (மற்றவருக்கு வேலை செய்து சம்பளம் பெறுபவன்வேதம் ப்ராப்தம் இல்லையோஅது போலஇவனுக்கு ருக்மிணி கிடைக்கவில்லை.

 

वैशम्पायन उवाच।।  (வைசம்பாயனர் சொன்னார்)

एवमादि ततः सर्वे सहितास्ते नराधिपाः।

गर्हणं शिशुपालस्य वासुदेवेन विश्रुतः।।

இவ்வாறு வாசுதேவ கிருஷ்ணன் சிசுபாலனின் அக்ரமங்களை சொல்லஅதை அங்கு இருந்த அனைத்து அரசர்களும் கேட்டனர்.

 

वासुदेववचः श्रुत्वा चेदिराजं व्यगर्हयन्।

रथोपस्थे धनुष्मन्तं शरान्सन्दधतं रुषा।।

श्रुत्वाऽपि  विलोक्याशु दुद्रुवुः सर्वपार्थिवाः।

विहाय परमोद्विग्नाश्चेदिराजं चमूमुखे।।

வாசுதேவ கிருஷ்ணர் இப்படி பேசியதை கேட்ட சேதி நாட்டு அரசன் சிசுபாலன்கோபத்தோடு வில்லெடுத்து அம்புகளை தொடுக்க ஆரம்பித்தான்இதை கண்ட அரசர்கள் அனைவரும் கலக்கமுற்றுஅங்கிருந்த சேனை தளபதிகளிடமே தன் சேனையை கொடுத்து விட்டுவிரைந்து ஓடினர்.

 

तस्य तद्वचनं श्रुत्वा शिशुपालः प्रतापवान्।

जहास स्वनवद्धासं वाक्यं चेदमुवाच ह।। 

இப்படி கேட்ட சிசுபாலன்பெரிய இரைச்சலுடன்அட்டகாசமாக கத்தி கொண்டுஸ்ரீகிருஷ்ணரை பார்த்து பேசலானான்.

मत्पूर्वां रुक्मिणीं कृष्ण संसत्सु परिकीर्तयन्।

विशेषतः पार्थिवेषु व्रीडां  कुरुषे कथम्।।

मन्यमानो हि कः सत्सु पुरुषः परिकीर्तयेत्।

अन्यपूर्वा स्त्रियं जातु त्वदन्यो मधूसूदन।।        

क्षमा वा यदि ते श्रद्धा मा वा कृष्ण मम क्षम।

क्रुद्धाद्वापि प्रसन्नाद्वा किं मे त्वत्तो भविष्यते।।

"கிருஷ்ணாருக்மிணியை நான் அடைய நினைத்தேன் என்று அரசர்கள் நிறைந்த சபையில் சொல்லிக்கொள்கிறாயேஉனக்கு வெட்கமாக இல்லை?

மதுசூதனாதன் மனைவியை வேறொருவன் வரிக்க நினைத்தான் என்று சான்றோர்கள் நிறைந்த சபையில்உன்னை தவிர எந்த சத்-புருஷன் வெட்கத்தை விட்டு சொல்வான்?  

என்னை நீ மன்னிக்கிறாய் என்று சொல்லிக்கொண்டு பொறுத்து கொள்மன்னிக்க முடியாவிட்டால் நான் சொல்வதை பொறுத்து கொள்ளாதேநீ கோபமுற்றால் எனக்கு என்ன ஆக போகிறதுநீ அனுக்கிரஹம் செய்தாலும் எனக்கு என்ன ஆக போகிறது?"

 

वैशम्पायन उवाच।।  (வைசம்பாயனர் சொல்கிறார்)

 तांस्तु विद्रुतान्सर्वान्साश्वपत्तिरथद्विपान्।

कृष्णतेजोहतान्सर्वान्समीक्ष्य वसुधाधिपान्।।

ஸ்ரீ கிருஷ்ணரின் தேஜஸை கண்டதிலேயேவலிமை குறைந்தது போல ஆகிபீதி அடைந்திருந்த மற்ற அரசர்கள் அனைவரும்குதிரைகளோடும்தங்களுடைய காலாட்படைகளோடும்தேர்களோடும் யானை படைகளோடும் ஓடுவதை கண்டான் சிசுபாலன்.

 

शिशुपालो रथेनैकः प्रत्युपायात्स केशवम्।

रुषा ताम्रेक्षणो राजञ्छलभः पावकं यथा।।

இதை கண்டு மேலும் ஆத்திரம் அடைந்த சிசுபாலன்வீட்டிற்பூச்சி தீயை எதிர்க்க பாய்வது போலகோபத்தினால் சிவந்த கண்களுடன்தனது ஒற்றை தேரை முன்னே செலுத்தி கொண்டுகிருஷ்ணரை நோக்கி எதிர்த்து வந்தான்.

 

वैशम्पायन उवाच।।   (வைசம்பாயனர் சொன்னார்)

ततो युद्धाय संनद्धं चेदिराजं युधिष्ठिरः।

दृष्ट्वा मतिमतां श्रेष्ठो नारदं समुवाच ह।।

சிசுபாலன் யுத்தம் செய்வதற்காக ஸன்னாஹம் செய்து கொண்டு இருப்பதை கண்ட யுதிஷ்டிரர்நாரதரிடம் பேச தொடங்கினார்.

 

युधिष्ठिर उवाच।। (யுதிஷ்டிரர் கேட்கிறார்)

अन्तरिक्षे  भूमौ  तेऽस्त्यविदितं क्वचित्।

यानि राजविनाशाय भौमानि  खगानि च।।    

निमित्तानीह जायन्ते उत्पाताश्च पृथग्विधाः।

एतदित्छामि कार्त्स्न्येन श्रोतुं त्वत्तो महामुने।।

மகரிஷிமேல் லோகங்களிலும்பூலோகத்திலும் எந்த இடத்திலும் உங்களுக்கு தெரியாதது  ஒன்றுமில்லைஇப்போது "அரசர்களின் நாசத்திற்குசம்பந்தமாக ஏதாவது அப-சகுனங்கள் இந்த உலகத்தில் உண்டாகி இருக்கிறதா என்று விரிவாக அறிய விரும்புகிறேன்.

वैशम्पायन उवाच।  (வைசம்பாயனர் சொன்னார்)

इत्येवं मितमान्विप्रः कुरुराजस्य धीमतः।

पृच्छतः सर्वमव्यग्रमाचचक्षे महायशाः।।

குரு ராஜ்யத்துக்கு நலத்தை விரும்பும் யுதிஷ்டிரர் இவ்வாறு கேட்டதும்உலகமே புகழும்சிறந்த அறிவாளியான நாரதர் எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து உரைக்கலானார்.

 

 

नारद उवाच।।      (நாரதர் சொல்கிறார்)

पराक्रमं  मार्गं  संनिपातं समुच्छ्रयम्।

आरोहणं कुरुश्रेष्ठ अन्योन्यं प्रतिसर्पणम्।।

पश्मीनां व्यतिसंसर्गं व्यायामं वृत्तिपीडनम्।

दर्शनादर्शनं चैव अदृश्यानां  दर्शनम्।।

हानिं वृद्धिं  ह्रासं  वर्णस्थानं बलाबलम्।

सर्वमेतत्परीक्षेत ग्रहाणां ग्रहकोविदः।।

குரு ஸ்ரேஷ்டனே !  ஜ்யோதிஷ சாஸ்திரம் கற்று உணர்ந்தவன்ஒவ்வொரு கிரஹங்களின் பராக்ரமத்தை பற்றியும்கிரஹங்களின் வழி பற்றியும்கிரஹங்கள் சேர்வது பற்றியும்கிரஹங்களின் உச்சத்தை  பற்றியும்கிரஹங்களின் அபிவிருத்தி பற்றியும்கிரஹங்களின் சேர்க்கை பற்றியும்கிரஹங்களின் நிலைகுலைதல் பற்றியும்காணக்கூடிய க்ருஹங்கள் பற்றியும்காணமுடியாத க்ருஹங்கள் பற்றியும்காண கூடாத க்ருஹங்கள் பற்றியும்க்ருஹங்கள் நீசம் அடைவது பற்றியும்க்ருஹங்களின் ஏற்றத்தை பற்றியும்க்ருஹங்களின் குறைகளை பற்றியும்க்ருஹங்களின் நிறத்தை பற்றியும்க்ருஹங்களின் இடத்தை பற்றியும்க்ருஹங்களின் பலாபலன்கள் பற்றியும் முழுவதுமாக பரீக்ஷித்து பார்க்க வேண்டும்.

 

भौमाः पूर्वं प्रवर्तन्ते खेचराश्च ततः परम्।

उत्पद्यन्ते  लोकेऽस्मिन्नुत्पाता देवनिर्मिताः।।

இந்த உலகில்பூமியை சார்ந்த தெய்வீக வஸ்துக்கள் முதலிலும்ஆகாயத்தை சார்ந்த தெய்வீக வஸ்துக்கள் பிறகும் உண்டாயின.

 

यदा तु सर्वभूतानां छाया  परिवर्तते।

अपरेण गते सूर्ये तत्पराभवलक्षणम्।।

சூரியன் மேற்கு திசையில் இருக்கும் போதுஅனைத்து பொருட்களின் நிழலும் கிழக்கே திரும்பாமல் இருந்தால்தோல்விக்கு அது ஒரு அடையாளம்.

 

अच्छाये विमलच्छाया प्रतिच्छायेव दृश्यते।

यत्र चैत्यकवृक्षाणां तत्र विद्यान्महद्भयम्।।

எப்பொழுதுஊரில் உள்ள பெரிய முக்கியமான மரத்தில்வெயில்படாமல் இருக்கும் போதேஅதன் நிழல் பிரதிபிம்பம் போல தெளிவாக தெரிகிறதோஅப்போது பெரிய அச்சம் ஏற்பட  அறிந்து கொள்ளலாம்.

 

शीर्णपर्णप्रवालाश्च शुष्कपर्णाश्च चैत्यकाः।

अपभ्रष्टप्रवालाश्च तत्राभावं विनिर्दिशेत्।।

முக்கியமான தலைமை மரங்கள் அகாலத்தில்இலைகள் உதிர்ந்துதுளிர்கள் கொட்டியும் போனால்அது நாசத்தின் அடையாளம்.

 

स्निग्धपर्णप्रवालाश्च दृश्यन्ते यत्र चैत्यकाः।

ईहमानाश्च वृक्षाश्च भावस्तत्र  संशयटः।।

மரங்கள் செழித்து இலைகள்தளிர்களோடு வளர்ச்சியோடு காணப்பட்டால்அது க்ஷேமத்திற்கு அடையாளம் என்பதில் சந்தேகமில்லை.

 

पुष्पे पुष्पं प्रजायेत फले वा फलमाश्रितम्।

राजा वा राजमात्रो वा मरणायोपपद्यते।।          

பூவின் மேல் பூவோகாய் மேல் காயோ மரத்தில் உண்டானால்அரசனோஅரசனுக்கு நிகரானவனோ மரணம் அடைய போகிறான் என்று அடையாளம்.

 

प्रावृट्छरदि हेमन्ते वसन्ते वापि सर्वशः।

आकालिकं पुष्पफलं राष्ट्रक्षोभं विनिर्दिशेत्।।  

கார்காலம்சரத் காலம்பனிக்காலம்வசந்த காலம் ஆகிய எல்லா காலங்களிலும்அந்த காலத்துக்கு உரிய மலர்களோபழங்களோ உண்டாகாமல் மற்றவை அதிகம் உண்டானால்தேசத்தில் கலகம் ஏற்பட போவதை அது குறிக்கும்.

 

नदीनां स्त्रोतसोऽकाले द्योतयन्ति महाभयम्।

वनस्पतिः पूज्यमानः पूजितोऽपूजितोऽपि वा।।

यदा भज्येत वातेन भिद्यते नमितोऽपि वा।।

அகாலத்தில் நதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டால்பெரிய பயம் ஏற்பட போகிறது என்று அடையாளம்சிறந்த மனிதன் யாரோ மரணிக்க போகிறான் என்று அடையாளம்.

 

अग्निवायुभयं विद्याच्छ्रेष्ठो वापि विनश्यति।

दिशः सर्वाश्च दीप्यन्ते जायन्ते राजविभ्रमाः।।

திசைகள் எல்லாம் எரியுமாயின்அரசாட்சி மாற போகிறது என்று அர்த்தம்.

 

भिद्यमानो यदा वृक्षो निनदेच्चापि पातितः।

सह राष्ट्रं  पतितं नतं वृक्षं प्रपातयेत्।।             

अथैनं छेदयेत्कश्चित्प्रतिक्रुद्धो वनस्पतिः।

छेत्ता भेत्ता पतिश्चैव क्षिप्रमेव नशिष्यति।।         

வெட்டி தள்ளப்பட்ட மரம் சப்தத்துடன் கீழே விழுமாயின்அந்த ராஜ்யமே விழ போகிறது என்று அர்த்தம்ஆதலால்மரத்தை வெட்டவே கூடாதுவெட்டுபவனை கண்டு மரங்கள் கோபிக்கும்மரத்தை வெட்டினவனும்பெயர்த்தவனும்அம்மரத்துடைய எஜமானனும் அழிந்து போவார்கள்.

 

देवतानां  पतनं मष्टपानां  पातनम्।

अचलानां प्रकम्पश्च तत्पराभवलक्षणम्।।

தேவதா விக்ரஹங்கள் விழுவதும்மண்டபங்கள் இடிந்து விழுவதும்மலைகள்  அசைவதும் தோல்விகளை அடையாமல் காட்டும்.

 

निशि चेन्द्रधनुर्दृष्टं ततोपि  महद्भयम्।

तद्द्रष्टरेव भीतिः स्यान्नान्येषां भरतर्षभ।

रात्राविन्द्रधनुर्दृष्ट्वा तद्राष्ट्रं परिवर्जयेत्।।

இரவில் வானவில் தெரிந்தால்பெரும் பயம் ஏற்பட போவதை காட்டும்இதில்வானவில்லை கண்டவனுக்கு குறிப்பாக பயம் ஏற்படுமே தவிரமற்றவர்களுக்கு ஏற்படாதுஅப்படி இரவில் வானவில்லை பார்த்தவன்அந்த ஊரை விட்டு செல்வது நல்லது.

 

अर्चा यत्र प्रनृत्यन्त नदन्ति  हसन्ति च।

उन्मीलन्ति निमीलन्ति राष्ट्रक्षोभं विनिर्दिशेत्।।

எங்கே தேவதா விக்ரஹங்கள் ஆடவும்அட்டகாசமாக சிரித்தும்கண்  திறந்தும் கண் மூடவும் செய்கிறதோஅந்த தேசத்தில் கலகம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

 

शिला यदि प्रसिञ्चन्ति स्नेहांश्चोदकसम्भवान्।

अन्यद्वा विकृतं किञ्चित्तद्भयस्य निदर्शनम्।।

म्रियन्ते वा महामात्रा राजा सपरिवारकः।

पुरस्य या भवेद्व्याधी राष्ट्रे देशे  विभ्रमाः।।       

கற்களில் நீர் கசிவது போன்ற முரண்பாடான மாறுதல்கள்  உண்டாகுமாகில்அது பயத்திற்கு அடையாளங்களாகும்பெரிய மனிதனோபல உறவுகளோடு வாழும் அரசனாக இருந்தாலும் இறந்து போவார்கள்நகரத்தில் வியாதிகள் உண்டாகும்தேசத்தில் கலக்கம் உண்டாகும்.

देवतानां यदाऽऽवासे राज्ञां वा यत्र वेश्मनि।

भाण्डागारायुधागारे निविशेत यदा मधु।।

सर्वं तदा भवेत्स्थानं हन्यमानं बलीयसा।

आगन्तुकं भयं तत्र भवेदित्येव निर्दिशेत्।।

தேவதா ஆலயங்களிலும்அரசனின் அரண்மனையிலும்ஆபரணங்கள் செய்யும் இடங்களிலும்ஆயுதசாலையிலும் தேன் கூடு கட்டுமாயின்அந்த தேசத்தை பலமான மற்றொரு தேசம் அழித்து விடும் என்பதற்கு அடையாளம்இந்த தேசங்களில் திடீரென்று பயம் அனைவரையும் தொற்றி கொள்ளும்.

 

पादपश्चैव यो यत्र रक्तं स्रवति शोणितम्।

दन्ताग्रात्कुञ्जरो वापि शृङ्गाद्वा वृषभस्तथा।।

पादपाद्राष्ट्रिविभ्रंशः कुञ्जराद्राजविभ्रमः।

गोब्राह्मणविनाशः स्याद्वृवभस्येति निर्दिशेत्।।

யானையின் தந்தத்தின் நுனியிலிருந்து சிவந்த ரத்தம் பெருகுமாயின்அந்த தேசத்தில் அரசு மாற்றம் ஏற்படுவதையும்காளை மாட்டின் கொம்பிலிருந்தும் சிவந்த ரத்தம் பெருகுமாயின்தேசம் மற்றவர் கையில் போவதையும்.

மரத்திலிருந்து சிவந்த ரத்தம் பெருகுமாயின்அந்த தேசத்தில் உள்ள பிராம்மணர்கள்பசுக்கள் நாசம் அடைய போவதையும் குறிக்கும்.

 

छत्रं नरपतेर्यत्र निपतेत्पृथिवीतले।

सराष्ट्रो नृपती राजन्क्षिप्रमेव विनश्यति।।

அரசனின் குடை கீழே விழுமாயின்அந்த அரசனும்அந்த ராஜ்யமும் உடனே அழிந்து விடும்.

 

देवागारेषु वा यत्र राज्ञो वा यत्र वेश्मनि।

विकृतं यदि दृश्येत नागावासेषु वा पुनः।।

तस्य देशस्य पीडा स्याद्राज्ञो जनपदस्य वा।

अनावृष्टिभयं घोरमतिदुर्भिक्षमादिशेत्।।         

கோவில்களிலும்அரச மாளிகையிலும்யானைகள் வசிக்கும் இடங்களிலும்வேறுபாடு காணப்படுமாயின்அந்த தேசத்திற்கும்அரசனுக்கும் பீடை உண்டாகும்கொடிய மழையின்மையும் (அனாவ்ருஷ்டி), பெரும் பஞ்சத்தையும் உண்டாகும்

 

अर्चाया बाहुभङ्गेन गृहस्थानां भयं भवेत्।

भग्ने प्रहरणे विद्यात्सेनापतिविनाशनम्।।

தேவதா விக்ரஹங்களின் கைகள் உடைந்தால்க்ருஹஸ்தர்களுக்கு பயம் உண்டாகும்ஆயுதங்கள் ஒடிந்தால்சேனாதிபதி இறப்பதற்கு அறிகுறியாகும்.

 

आगन्तुका तु प्रतिमा स्थानं यत्र  विन्दति।

जभ्यन्तरेण षण्मासाद्राजा त्यजति तत्पुरम्।।

புதிதாக வந்த தேவதா விக்ரஹங்கள் 6 மாதத்துக்குள்ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படாமல் போகுமானால்அந்த நகரத்தை விட்டு அந்த அரசன் விலகுவது நல்லது.

 

प्रदीर्यते मही यत्र विनदत्यपि पात्यते।

म्रियते तत्र राजा  तत्र राष्ट्रं विनश्यति।। 

பதிலுக்கு சபதம் செய்தாலும்கட்டிடங்கள் இடிந்து விழுந்தாலும்அந்த தேசத்து அரசன் அழிய நேரும்.

 

एणीपदान्वा सर्पान्वा डुण्डुभानथ दीप्यकान्।

मण्डूको ग्रसते यत्र तत्र राजा विनश्यति।।        

ஏணிபதம்சர்பம்டுண்டபம்தீபயகம் என்னும்  பாம்பு ஜாதிகளை தவளை விழுங்குமாயின் அங்கே ராஜகுடும்பங்கள் அழியும்.

 

अभिन्नं वाप्यपक्वं वा यत्रान्नमुपचीयते।

जीर्यन्ते वा म्रियन्ते वा तदन्नं नोपभुञ्जते।।

உணவுகள் சேராமல்சமைக்கப்படாமல் அதிகப்படியாக இருக்குமாயின் அந்த தேசத்தார் நோயில் மடிவார்கள்.

 

उदपाने  यत्रापो विवर्धन्ते युधिष्ठिर।

स्थावरेषु प्रवर्तन्ते निर्गच्छेन्न पुनस्ततः।।

अपादं वा त्रिपादं वा द्विशीर्षं वा चतुर्भुजम्।

स्त्रियो यत्र प्रसूयन्ते ब्रूयात्तत्र पराभवम्।।

யுதிஷ்டிராதடாகத்தில் நீர் பொங்கினாலும்மரங்களில் தண்ணீர் உண்டானாலும்கால்கள் இல்லாமலோமூன்று கால்களோஇரண்டு தலைகளோநான்கு கைகளோ இருக்கும் குழந்தையை பெற்றால்அந்த தேச அரசன் தோல்வியை சந்திக்க நேரும்.

 

अजैडकाः स्त्रियो गावो ये चान्ये  वियोनयः।

विकृतानि प्रजायन्ते तत्र तत्र पराभवः।।

வெள்ளாடுகள்பெண்கள்பசுக்கள் மற்றும் பிற ஜாதிகள் இயற்க்கைக்கு மாறான சந்ததிகளை பிறப்பித்தால்அந்த தேசம் தோல்வியை அடையப்போவது நிச்சயம்.

 

नदी यत्र प्रतिस्रोता आवहेत्कलुषोदकम्।

दिशश्च  प्रकाशन्ते तत्पराभवलक्षणम्।।        

நதி கலங்கி போய் எதிர் திசையாக சென்றாலும்திசைகள் ஒளி இழந்து காணப்பட்டாலும்அவை தோல்விக்கான அறிகுறிகளே!

 

एतानि  निमित्तानि यानि चान्यानि भारत।

केशवादेव जायन्ते भौमानि  खगानि च।। 

चन्द्रादित्यौ ग्रहाश्चैव नक्षत्राणि  भारत।

वायुरग्निस्तथा चापः पृथिवी  जनार्दनात्।।

பாரதனேஉலகத்தில் காணும் சந்திரனும்சூரியனும்க்ருஹங்களும்நக்ஷத்திரங்களும்காற்றுநீர்நிலம் யாவும் கிருஷ்ணனால் உண்டாகின.

 

यस्य देशस्य हानिं वा वृद्धिं वा कर्तुमिच्छति।

तस्मिन्देशे निमित्तानि तानि तानि करोत्ययम्।।

எந்த தேசத்தில் குறைவையோவிருத்தியையோ செய்ய ஆசைப்படுகிறாரோஅந்த தேசத்தில் அததற்கான சகுனங்களை இவரே உண்டு செய்கிறார்.

 

सोसौ चेदिपतेस्तात विनाशं समुपस्थितम्।

निवेदयति गोविन्दः स्वैरुपायैर्न संशयः।। 

தன்னுடைய சங்கல்பத்தினால்சேதி நாட்டு அரசனின் அழிவை நமக்கு இங்கு தெரிவிக்கிறார்இதில் சந்தேகம் இல்லை.

 

इयं प्रचलिता भूमिरशिवा वान्ति मारुताः।

राहुश्चाप्यपतत्सोममपर्वणि विशाम्पते।।           

सनिर्घाताः पतन्त्युल्कास्तमः सञ्जायते भृशम्।

चेदिराजविनाशाय हरिरेष विजृम्भते।।

இதோபூமி அசைகிறதுகெட்ட காற்று வீசுகிறதுபருவமில்லாத காலத்தில்ராகு சந்திரனை பிடிக்கிறான்விண்ணிலிருந்து இடியோடு  எரிகற்கள் விழுகின்றனஇருள் மிகுதியாகிறதுசேதி ராஜன் அழிவிற்கு ஹரி சங்கல்பித்து இருக்கிறார் என்று தெரிகிறது.

वैशम्पायन उवाच।।   (வைசம்பாயனர் சொல்கிறார்)

एवमुक्त्वा तु देवर्षिर्नारदो विरराम ह।

ताभ्यां पुरुषसिंहाभ्यां तस्मिन्युद्ध उपस्थिते।

ददृशुर्भूमिपालास्ते घोरानौत्पातिकान्बहून्।

तत्र वै दृश्यमानानां दिक्षु सर्वासु भारत।

தேவரிஷி நாரதர் இவ்வாறு சொல்லி முடித்தார்இரண்டு ஆண் சிங்கங்கள் போல சிசுபாலனும்கிருஷ்ணரும் யுத்தம் செய்யஅங்கு இருந்த அரசர்கள் பயங்கரமான பல துர்-நிமித்தங்களை கண்டனர்.

எல்லா திசைகளிலும்நரிகளின் அமங்களமான ஊளையிடும் சத்தம் கேட்டன.

 

अश्रूयन्त तदा राजञ्छिवानामशिवा रवाः।

ररास  मही कृत्स्ना सवृक्षवनपर्वता।

மரங்களும்காடுகளும்மலைகளும் நிறைந்ததான இந்த பூமியானதுஸ்தம்பித்து இருந்தது.

 

अपर्वणि  मध्याह्ने मूर्यं स्वर्भानुरग्रसत्।

ध्वजाग्रे चेदिराजस्य सर्वरत्नपरिष्कृते।

அமாவாசை இல்லாத தினத்தில்மத்யானத்தில் சூரியனை ராகு விழுங்கினான்.

 

अपतत्खाच्च्युतो गृध्रस्तीक्ष्णतुण्डः परन्तप।

आरण्यैः सहसा हृष्टा ग्राम्याश्च मृगपक्षिणः।

பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டசிசுபாலன் தேர் கொடியில் கூர்மையான மூக்குடைய கழுகு இறங்கி வந்து அமர்ந்தது.

 

चुक्रुशुर्भैरवं तत्र तस्मिन्युद्ध उपस्थिते।

एवमादिनि घोराणि भौमानि  स्वगानि च।

औत्पातिकान्यदृश्यन्त सङ्क्रुद्धे शार्ङ्गधन्वनि।।

இருவருக்கும் நடக்கும் யுத்தத்தை பார்த்துகாடுகளிலும்நகரத்திலும் இருந்த மிருகங்களும்பறவைகளும்உற்சாகத்தோடு சேர்ந்து கொண்டுபயங்கரமாக கூவினகிருஷ்ணன் கோபித்தபோதுபூமியிலும் ஆகாயத்திலும் இவ்வகையான கொடிய துர்நிமித்தங்கள் காணப்பட்டன.

 

वैशम्पायन उवाच।।  (வைசம்பாயனர் சொல்கிறார்)

ततो विष्फारयन्राजा महच्चैदिपतिर्धनुः।

अभियास्यन्हृषीकेशमुवाच मधुसूदनम्।।

एकस्त्वमसि मे शत्रुस्तत्त्वां हत्वाऽद्य माधव।

ततः सागरपर्यन्तां पालयिष्यामि मेदिनीम्।।

பிறகு சேதி ராஜன் சிசுபாலன்பெரிய வில்லை நாண் ஏற்றி கொண்டுஹ்ருஷீகேசரான மதுசூதனரை பார்த்து, "ஏய் மாதவா ! எனக்கு நீ ஒருவனே சத்ருவாக இருக்கிறாய்ஆகையால்இப்போது உன்னை கொன்றுவிட்டுநானே இந்த உலகத்தை ஆள்வேன்."

 

द्वैरथं काङ्क्षितं यद्वै तदिदं पर्युपस्थितम्।

चिरस्य वत मे दिष्ट्या वासुदेव सह त्वया।

अद्य त्वां निहनिष्यामि भीष्मं  सह पाण्डवैः।।

"வாசுதேவாநான் உன்னோடு நேருக்கு நேர்தேர் சண்டையிட வெகுகாலம் காத்திருந்தேன்எனது பாக்கியத்தினால் இப்போது எனக்கு நேர்ந்து இருக்கிறது இப்போது உன்னையும்பீஷ்மனையும்பாண்டவர்களையும் சேர்த்து கொல்ல போகிறேன்." என்று கர்ஜித்தான்

 

 

वैशम्पायन उवाच।  (வைசம்பாயனர் சொல்கிறார்)

एवमुक्त्वा  तं बाणैर्निशितैरत्ततेजनैः।

विव्याध युधि तीक्ष्णाग्रैश्चेदिराड्यपुङ्गवम् 

कङ्कपत्रच्छदा बाणाश्चेदिराजधनुश्च्युताः।

विविशुस्ते तदा कृष्णं भुजङ्गा इव पर्वतम् 

இப்படி பேசிக்கொண்டேகூர்மையான அம்புகளால்யுத்தத்தில் கிருஷ்ணரை தாக்கினான்சேதிராஜன் செலுத்திய கழுகு இறகுகள் கொண்ட அம்புகள்அரவங்கள் மலைக்குள் நுழைவது போலஸ்ரீ கிருஷ்ணரின் தேகத்தில் பாய்ந்தன.

 

नाददानस्य चैद्यस्य शरानत्यस्यतोपि वा।

दधृशुर्विवरं केचिद्गतिं वायोरिवाम्बरे 

அந்த சிசுபாலன் அம்புகளை எடுப்பதற்கும்விடுப்பதற்கும் இடையில் உள்ள காலம்ஆகாயத்தில் அசையும் காற்றை போல யாருக்கும் புலப்படாமல் இருந்தது.

 

चेदिराजमहामेधः शरजालाम्बुमांस्तदा।

अभ्यवर्षद्धृषीकेशं पयोद इव पर्वतम् 

மஹாமேகமானது மழை பொழிவது போல,  சேதிராஜன் எய்த அம்புகள் கிருஷ்ணரின் மேல் விழுந்தது.

 

ततः शार्ङ्गममित्रघ्नः कृत्वा सशरमच्युतः।

आबभाषे महबाहुः सुनीथं परवीरहा।।

अयं त्वं भामकस्तीक्ष्णश्चेदिराज महाशरः।

भेत्तुमर्हति वेगेन महाशनिरिवाचलम्।।

சத்ருக்களை அழிக்கும்உறுதியான புஜங்கள் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர்தன்னுடைய சார்ங்கம் என்னும் வில்லை எடுத்து சுநீதியின் மகனை பார்த்து, " சேதிராஜனேஎனது உக்ரமான இந்த பெரிய பாணங்கள்வஜ்ராயுதம் மலையை பிளப்பது போலஉன்னை விரைவாக பிளக்கத்தக்கது." என்று சொன்னார்.  


वैशम्पायन उवाच।   (வைசம்பாயனர் சொல்கிறார்)

एवं ब्रुवति गोविन्दे ततश्चेदिपतिः पुनः।

मुमोच निशितानन्यान्कृष्णं प्रति शरान्बहून्।।  

கோவிந்தன் இவ்வாறு சொல்லசேதிராஜன் கிருஷ்ணனை நோக்கி மேலும் கூர்மையான அம்புகளை குறிவைத்து எய்தான்.

 

अथ बाणार्दितः कृष्णः शार्ङ्गमायम्य दीप्तिमान्।

मोच निशितान्बाणाञ्छतशोथ सहस्रशः।।

இப்படி மீண்டும் இவன் தாக்கியதும்சார்ங்கம் என்ற வில்லை கொண்டுநூற்றுக்கணக்காகவும்ஆயிரக்கணக்காகவும் அம்புகளை எய்தார்.

 

ताञ्छरांस्तु  चिच्छेद शरवर्षैस्तु चेदिराट्।

षड्भिश्चान्यैर्जघानाशु केशवं चेदिपुङ्गवः।।

அந்த பாணங்களை சேதிராஜன் எதிர்கொண்டு தடுத்துஉடனே வேறு 6 பாணங்களை கொண்டு கிருஷ்ணரை தாக்கினான்.

 

ततोऽस्रं सहसा कृष्णः प्रमुमोच जगद्गुरुः।

अस्त्रेण तन्महाबाहुर्वारयामास चेदिराट्।।

ततः शतसहस्रेण शराणां नतपर्वणाम्।

सर्वतः समवाकीर्य शौरिं दामोदरं तदा।।

ननाद बलवान्क्रुद्धः शिशुपालः प्रतापवान्।

इदं चोवाच संरब्धः केशवं परवीरहा।।

ஜகத்குருவான கிருஷ்ணர்அதற்கு பதிலாக ஒரு பாணம் விடஅதை சிசுபாலன் தடுத்தான்கோபத்தோடுதாழ்ந்த கணுக்காலுடைய லக்ஷ்ம பாணத்தை வசுதேவ புத்ரன் மீது சுற்றிலும் இறைத்து கர்ஜித்தான்பகைவீரர்களை கொல்பவனான சிசுபாலன்கிருஷ்ணரை நோக்கி கோபத்துடன் பேச ஆரம்பித்தான்.

 

 

शिशुपाल उवाच।।  (சிசுபாலன் சொன்னான்)

अद्याङ्गं मामका बाणा भेत्स्यन्ति तव संयुगे।

हत्वा त्वां समुतामात्यं पाण्डवांश्च तरस्विनः।।   

अनृण्यमद्यय यास्यामि जरासन्धस्य धीमतः।

कंसस्य केशिनश्चैव नरकस्य तथैव ह।।

"என்னுடைய பாணங்கள் இப்போது யுத்தத்தில் உன் தேகத்தை பிளக்கப்போகிறதுஉன்னோடு உன்னை சேர்ந்தவர்களையும்இந்த பாண்டவர்களையும் கொன்றுசிறந்த புத்தியுள்ள ஜராஸந்தன்கம்ஸன்கேசிநரகன் இவர்களுக்கு செலுத்த வேண்டிய கடனையும் அப்படியே தீர்த்து கொள்ள போகிறேன்என்று கர்ஜித்தான்

वैशम्पायन उवाच।।  

(வைசம்பாயனர் சொல்கிறார்)

इत्युक्त्वा क्रोधताम्राक्षः शिशुपालो जनार्दनम्।

अदृश्यं शरवर्षेण सर्वतः  चकार ह।।

இவ்வாறு கோப ஆவேசத்தில் இருந்த சிசுபாலன்ஜனார்தனனை காணமுடியாதபடிபாணங்களை பொழிந்து மூடினான்.


ततोऽस्त्रेणैव चान्योन्यं निकृत्य  शरान्बहून्।

शरवर्षैस्तदा चैद्यमन्तर्धातुं प्रचक्रमे।।

தன்னை எதிர் நோக்கி வந்த பாணங்கள் அனைத்தையும் அறுத்துசிசுபாலனை தன் பாணங்களால் மறைக்க தொடங்கினார்.

 

अन्तर्धानगतौ वीरौ शुशुभाते महारथौ।

तौ दृष्ट्वा सर्वभूतानि साधुसाध्वित्यपूजयन्।

 दृष्टपूर्वमस्माभिर्युद्धमीदृशकं पुरा।।

இப்படி இரண்டு மஹாரதர்களும் போர் செய்து பாணங்களால் மறைக்கப்படுவதை பார்த்துஅங்கு இருந்த அனைவரும், "ஆஹாஆஹாஇப்படிப்பட்ட யுத்தம் நாங்கள் இதற்கு முன் கண்டதில்லைஎன்று வியந்து புகழ்ந்தனர்.

 

ततः कृष्णं जघानाशु शुशुपालस्त्रिभिः शरैः।    

कृष्णोऽपि बाणैर्विव्याध सुनीथं पञ्चभिर्युधि।

ततः सुनीथं सप्तत्या नाराचैर्दयद्बली।

அப்போதுசிசுபாலன் மூன்று பாணங்களால்கிருஷ்ணரை தாக்கினான்பதிலுக்கு கிருஷ்ணர் 5 பாணங்களால் பதிலுக்கு தாக்கினார்பலசாலியான கிருஷ்ணர் மேலும் 70 பாணங்களால் சிசுபாலனை தாக்கினார்.

 

ततोऽतिविद्धः कृष्णेन सुनीथः क्रोधमूर्छितः।

विव्याध निशितैर्बाणैर्वासुदेवं स्तनान्तरे।।

पुनः कृष्णं त्रिभिर्विद्ध्वा ननादावसरे नृपः।

तोऽतिदारुणं युद्धं सहसा चक्रतुस्तदा।।

இதனால் பெரும் கோபம் கொண்ட சிசுபாலன்கூர்மையான பாணங்களால் கிருஷ்ணரின் மார்பில் தாக்கினான்பிறகுசமயம் பார்த்துகிருஷ்ணர் மீது மேலும் 3 பாணங்களால் தாக்கி கர்ஜித்தான்கோரமான யுத்தத்தை இருவரும் வேகமாக செய்து கொண்டிருந்தனர்.

नौ नखैरिव शार्दूलौ दन्तैरिव महागजौ।

दंष्ट्राभिरिव पञ्चास्यौ चरणैरिव कुक्कुटौ।।

दारयेतां शरैस्तीक्ष्णैरन्योन्यं युधि तावुभौ।

ततो मुमुचतुः क्रुद्धौ शरवर्षमनुत्तमम्।।

இரண்டு புலிகள் தங்கள் நகங்களால் கிழிப்பது போலயானைகள் தங்கள் தந்தத்தினால் குத்துவது போல , சிங்கங்கள் தங்கள் கோர பற்களினால் கிழிப்பது போலகோழிகள் தங்கள் கால்களினால் தாக்கி கொள்வது போலஇருவரும் கூர்மையான அம்புகளை மழை போல பொழிந்துஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

 

शरैरेव शराञ्छित्वा तावुभौ पुरुषर्षभौ।

चक्रातेऽस्त्रमयं युद्धं घोरं तदतिमानुषम्।।

ஒருவருக்கொருவர் எதிர்த்து வரும் பாணங்களை தன் பாணத்தால் உடைத்துமனிதர்களுக்கு மீறிய அப்பாற்ற்ப்பட்ட யுத்தத்தை செய்தனர்.

 

आग्नेयमस्त्रं मुमुचे शिशुपालः प्रतापवान्।

वारुणास्त्रेण तच्छ्रीघ्रं नाशयामास केशवः।।

பராக்ரமசாலியான சிசுபாலன்கிருஷ்ணர் மீது அக்னி அஸ்திரம் எய்தான்கிருஷ்ணர் உடனே வருண அஸ்திரத்தை எய்து அழித்தார்.

कौबेरमस्त्रं सहसा चेदिराट् प्रमुमोच ह।

रणैव सहसाऽनाशयत्तं जगत्प्रभुः।।

சிசுபாலன் உடனே குபேர அஸ்திரத்தை எய்தான்ஜகத்பரபுவான கிருஷ்ணர் மற்றொரு குபேர  அஸ்திரத்தை கொண்டே அடக்கினார்

 

याम्यमस्त्रं ततः क्रुद्धो मुमुचे कालमोहितः।

याम्येनैवास्त्रयोगेन याम्यमस्त्रं व्यनाशयत्।।

மதி இழந்து போன சிசுபாலன்கிருஷ்ணரை நோக்கி யம அஸ்திரத்தை எய்தான்கிருஷ்ணர்யம அஸ்திரத்தாலேயே யமாஸ்திரத்தை தடுத்தார்.

 

गान्धर्वेण  गान्धर्वं मानवं मानवेन च।

वायव्येन  वायव्यं रौद्रं रौद्रेण चाभिभूः।।

ऐन्द्रमैन्द्रेण भगवान्वैष्णवेन  वैष्णवम्।

एवमस्त्राणि कुर्वाणौ युयुधाते महाबलौ।।

இது போலகந்தர்வ அஸ்திரத்தை கந்தர்வ அஸ்திரத்தாலும்மானவ  அஸ்திரத்தை மானவ அஸ்திரத்தாலும்வாயு அஸ்திரத்தை வாயு அஸ்திரத்தாலும்ரௌத்திர அஸ்திரத்தை ரௌத்திர அஸ்திரத்தாலும்ஐந்த்ர அஸ்திரத்தை ஐந்த்ர அஸ்திரத்தாலும்வைஷ்ணவ அஸ்திரத்தை வைஷ்ணவ அஸ்திரத்தாலும் அடக்கினார்மஹாபலசாலியான இவர்கள் அஸ்திரங்களால் பயங்கரமான யுத்தம் செய்தனர்.

 

ततो मायां विकुर्वाणो दमगोषसुतो बली।

गदामुसलसंयुक्ताञ्छक्तितोमरसायकान्।।   

परश्वथमुसण्डीश्च ववर्ष युधि केशवम्।

अमोघास्त्रेण भगवान्नाशयामास केशिहा।।     

शिलावर्षं महाघोरं ववर्ष युधि चेदिराट्।

वज्रास्त्रेणाभिसङ्क्रुद्धश्चूर्णं तदकरोत्प्रभुः।।    

அதன் பிறகு சிசுபாலன் மாயையால் கதாயுதங்கள்முஸலங்கள்சக்தியாயுதங்கள்தோமரங்கள்அம்புகள்கோடாலிகள்முசுண்டிகள் உண்டாக்கி கேசவன் மீது பொழிந்தான்கேசியை அழித்த பகவான்அமோகமான அஸ்திரங்களை கொண்டு அனைத்தையும் அழித்தார்சிசுபாலன் உடனேயுத்தத்தில் மிக கொடிய கல் மழை பொழிந்தான்பகவான் அதை வஜ்ராஸ்திரம் மூலம் போடி பொடியாக்கினார்.

जलवर्षं ततो घोरं व्यस़जच्चेदिपुङ्गवः।

वायव्यास्त्रेण भगवान्व्याक्षिपच्छतशो हि तत्।।

சிசுபாலன் உடனேவர்ணாஸ்திரத்தின் மூலம் மழை பொழிந்தான்பகவான் அதை வாயு அஸ்திரம் மூலம் விலக்கினார்.

 

निहत्य सर्वमायां वै सुनीतस्य जनार्दनः।

 मुहूर्तं चकाराशु द्वन्द्वयुद्धं महारथः।।

மஹாரதன் கிருஷ்ணன்சுநீதியின் மகனிடம் இவ்வாறு சில முஹூர்த்தங்கள் அவனுடன் சமமாக போர் செய்தார்.

 

 बाणयुद्धं कुर्वाणो भर्त्सयामास चेदिराट्।

दमघोषसुतो धृष्टमुवाच यदुपुङ्गवम्।।

अद्य कृष्णमकृष्णं तु कुर्वन्तु मम सायकाः।

इत्येवमुक्त्वा दुष्टात्मा शरवर्षं जनार्दने।।

தமகோஷன் மகனான சிசுபாலன்இப்படி அஸ்திரங்கள் எய்து கொண்டேகிருஷ்ணனை பார்த்து, "இப்போது கிருஷ்ணனை என் பாணங்கள் இல்லாமல் செய்ய போகிறதுஎன்று பயமுறுத்திக்கொண்டு கர்ஜித்தான்.

 

मुमोच पुरुषव्याघ्रो घोरं वै चेदिपुङ्गवः।

शरसंङ्कृत्तगात्रस्तु क्षणेन यदुनन्दनः।।           

रुधिरं परिसुस्राव मदं मत्त इव द्विपः।

 यन्ता  रथो वापि  चाश्वाः पर्वतोपमाः।।     

दृश्यन्ते शरसञ्छन्नाः केशवस्य महात्मनः।

केशवं तदवस्थं तु दृष्ट्वा भूतानि चक्रुशुः।।

இப்படி சொல்லி கொண்டேபுலியை போல கோபத்தோடு இருந்த சேதி ராஜன்சரமாரி பாணங்கள் பொழிந்தான்இந்த பாணங்கள் கிருஷ்ணரின் தேகத்தை கிழித்து போதுமதயானையின் மதஜலத்தை  பெருக்குவது போலரத்தம் பெருகியது.கிருஷ்ணனுடைய சாரதியும்ரதமும்மலை போன்ற குதிரைகளும் பாணங்களால் மறைக்கப்பட்டு காணாமல் போயினஸ்ரீகிருஷ்ணரின் அந்த நிலையை கண்டுபார்த்தவர்கள் கதறி அழுதனர்.

दारुकस्तु तदा प्राह कृष्णं यादवनन्दनम्।

नेदृशो दृष्टपूर्वो हि सङ्ग्रामो वै पुरा मया।।

स्थातव्यमिति तिष्ठामि त्वत्प्रभावेण माधव।

अन्यथा   मे प्राणा धरायेयुर्जनार्दन।।

अतः सञ्चिन्त्य गोविन्द क्षिप्रमस्य वधं कुरु।

एवमुक्तस्तु सूतेन केशवो वाक्यमब्रवीत्।।

சாரதியான தாருகன்யாதவ நந்தனான கிருஷ்ணரை பார்த்து, "மாதவாஇது வரை நான் இது போன்ற யுத்தத்தை பார்த்ததில்லை.  உங்களது ப்ரபாவத்தால் தான் உயிரோடு இருக்கிறேன் என்று அறிகிறேன்ஜனார்தனாஇல்லையென்றால் என் உயிர் இதில் போயிருக்கும்கோவிந்தாநன்றாக ஆராய்ந்துஉடனே இவனை வதம் செய்யுங்கள்என்றான்இப்படி சொன்னதும்கேசவன் தன் சாரதியிடம் பேசலானார்.

 

एष ह्यतिबलो दैत्यो हिरण्यकशिपुः पुरा।

रिपुः सुराणामभवद्वरदानेन गर्वितः।।

तथाऽऽसीद्रावणो नाम राक्षसो ह्यतिवीर्यवान्।

तेनैव बलवीर्येण बलं नागणयन्मम।।

"இவன் முன்புதேவர்களுக்கு சத்ருவாகவும்வரங்கள் பெற்றதால் கர்வத்தோடும் அதிக பலசாலியான ஹிரண்யகசிபுவாக இருந்தான்பிறகுஇவனே அதிக பராக்ரமசாலியான ராவணனாகவும் பிறந்தான்இந்த பலத்தின் வன்மையினால் தான்இவன் என் பலத்தை மதிக்கவில்லை.

 

अहं मृत्युश्च भविता काले काले दुरात्मनः।

 भेतव्यं तथा सूत नैष कश्चिन्मयि स्थिते।।

இந்த துராத்மாவுக்கு ஒவ்வொரு சமயத்திலும் நானே காலனாக இருக்கிறேன்சாரதிஆதலால் நீ அச்சப்படவேண்டாம்நான் இருக்கும்போது இவனொருமில்லைஎன்று சொன்னனர்.

 इत्येवमुक्त्वा भगवान्ननर्द गरुडध्वजः।

पाञ्चजन्यं महाशङ्खं पूरयामास केशवः।।     

संमोहयित्वा भगवांश्चक्रं दिव्यं समाददे।

चिच्छेद  सुनीथस्य शिरश्चक्रेण संयुगे'।।         

 पपात महाबाहुर्वज्राहत इवाचलः।

ततश्चेदिपतेर्देहात्तेजोऽग्र्यं ददृशुर्नृपाः।।             

கருட கொடி பறக்கும் தேரில் இருந்த பகவான்இவ்வாறு கர்ஜித்து விட்டுதனது திவ்யமான சக்கரத்தை எடுத்தார்.

உடனே சுநீதியுடைய பிள்ளையின் தலையை சீவி எறிந்தார்.

உறுதியான புஜங்களை கொண்ட சிசுபாலன்வஜ்ராயுதத்தால் உருவாக்கப்பட்ட மலை போலவிழுந்தான்.

 

उत्पतन्तं महाराज गगनादिव भास्करम्।

ततः कमलपत्राक्षं कृष्णं लोकनमस्कृतम्।

ववन्दे तत्तदा तेजो विवेश  नराधिप।।

तदद्भुतममन्यन्त दृष्ट्वा सर्वे महीक्षितः।

यद्विवेश महाबाहुं तत्तेजः पुरुषोत्तमम्।।

ராஜன் ஜனமேஜயாஉடனே ஆகாயத்தில் சூரியன் உதயமாவது போலசிசுபாபலனின் தேகத்திலிருந்து ஒரு ஒளி எழும்புவதை அங்கிருந்த அரசர்கள் அனைவரும் கண்டனர்அந்த தேஜோமயமான ஒளிதாமரை மலர் போன்ற அகன்ற கண்களையுடையஉலகமே நமஸ்கரிக்கும் கிருஷ்ணனை வந்தனம் செய்துஅவருக்குள் பிரவேசித்ததுஅந்த ஒளி சிறந்த புஜங்கள் கொண்ட புருஷோத்தமனிடம் பிரவேசித்ததை கண்டு அரசர்கள் அனைவரும் ஆச்சர்யம் என்று நினைத்தனர்

 

अनभ्रे प्रववर्ष द्यौः पपात ज्वलिताशनिः।

कृष्णेन निहते चैद्ये चचाल  वसुन्धरा।।

ஸ்ரீ கிருஷ்ணரால்சிசுபாலன் கொல்லப்பட்ட போதுமேகமில்லாமலேயே ஆகாயம் மழையை வர்ஷித்ததுஜ்வலித்துக்கொண்டு இடி இடித்ததுபூமி நடுங்கியது.

 

ततः केचिन्महीपाला नाब्रुवंस्तत्र किञ्चन।

अतीतवाक्पथे काले प्रेक्षमाणा जनार्दनम्।।

हस्तैर्हस्ताग्रमपरे प्रत्यपिंषन्नमर्षिताः।

अपरे दशनैरोष्ठानदशन्क्रोधमूर्छिताः।।

रहश्च केचिद्वार्ष्णेयं प्रशशंसुर्नराधिपाः।

केचिदेव सुसंरब्धा मध्यस्थास्त्वपरेऽभवन्।।   

சொல்லுக்குள் அடங்காத இந்த நிகழ்வை கண்ட அரசர்களில் சிலர் ஜனார்தனனை பார்த்து கொண்டே பேசாமல் இருந்தனர்சில அரசர்கள்கோபத்தில் கைகளை பிசைந்தனர்வேறு சிலர்கோபத்தினால் தங்கள் பற்களையும்உதட்டையும் கடித்தனர்சில அரசர்கள் ரகசியமாக கிருஷ்ணரை புகழ்ந்தனர்சிலர் கோபத்தோடும்சிலர் நடுநிலையாகவும் இருந்தனர்.

 

प्रहृष्टाः केशवं जग्मुः संस्तुवन्तो महर्षयः।

ब्राह्मणाश्च महात्मानः पार्थिवाश्च महाबलाः।

शशंसुर्निर्वृताः सर्वे दृष्ट्वा कृष्णस्य विक्रमम्।।  

மஹரிஷிகள் கேசவனை புகழ்ந்து கொண்டே கிருஷ்ணரிடம் சென்றனர்மஹாத்மாக்களான ப்ராம்மணர்களும்மஹாபலசாலியான அரசர்கள் பலரும் கிருஷ்ணருடைய பராக்ரமத்தை கண்டு சந்தோஷம் அடைந்து அதை பற்றி பெருமையாக பேசி கொண்டனர்.

सदेवगन्धर्वगणा राजानो भुवि विश्रुताः।

प्रणामं हि हृषीकेशे प्राकुर्वत महात्मनि।।

அனைத்து தேவர்களும் கந்தர்வர்களும்பூமியில் புகழ்பெயர் பெற்ற அரசர்களும்ஹ்ருஷீகேசனுக்கு நமஸ்காரம் செய்தனர்.

 

ये त्वासुरगणाः पक्षाः सम्भूताः क्षत्रिया इह।

ते निन्दन्ति हृषीकेशं दुरात्मानो गतायुषः।।

அதே சமயம்அசுர குணம் கொண்ட க்ஷத்ரிய அரசர்கள்  சிலர்தங்களுடைய துர்புத்தியால்ஆயுளை குறைத்து கொள்ளஹ்ருஷீகேசனை நிந்தனை செய்தனர்.

 

प्रजापतिगणा ये तु मध्यस्थाश्च महात्मनि।

ब्रह्मर्षयश्च सिद्धाश्च गन्धर्वोरगचारणाः।

ते वै स्तुवन्ति गोविन्दं दिव्यैर्मङ्गलसंयुतैः।

நடுநிலையாக இருக்கும் பிரம்மதேவனின் கணங்களாக இருக்கும் ப்ரம்ம ரிஷிகளும்ஸித்தர்களும்கந்தர்வர்களும்நாகர்களும்சாரணர்களும்மங்களமான தேவ காணங்களால் கிருஷ்ணனை துதித்தனர்.

 

परस्परं  नृत्यन्ति गीतेन विविधेन च।

उपतिष्ठन्ति गोविन्दं प्रीतियुक्ता महात्मनि।।    

प्रहृष्टाः केशवं जग्मुः संस्तुवन्तो महर्षयः।

ब्राह्मणाश्चापि सुप्रीताः पाण्डवाश्च महाबलाः।। 

பல வகையாக ஆடினர் மஹாத்மாவான கிருஷ்ணரிடம் அன்போடு அருகில் வந்து வந்து சேவித்தனர்மகரிஷிகளும்ப்ராம்மணர்களும் மஹாபலசாலியான பாண்டவர்களும்மிகவும் மகிழ்ந்து அன்போடு துதி செய்து கொண்டே கிருஷ்ணர் அருகில் வந்தனர்.

 

पाण्डवस्त्वब्रवीद्भातॄन्सत्कारेण महीपतिम्।

दमघोषात्मजं शूरं संस्कारयत मा चिरम्।।

தர்மராஜன் தன் சகோதரர்களை பார்த்து, "தமகோஷன் மகனும் சூரனுமான சிசுபாலனுக்கு தகுந்த முறைப்படி ஸம்ஸ்காரம் செய்யுங்கள்காலதாமதம் வேண்டாம்என்றார்.

 

कुरुराजवचः श्रुत्वा भ्रातरस्ते त्वरान्विताः।

तथा  कृतवन्तस्ते भ्रातुर्वै शासनं तदा।।

குருராஜன் சொன்னதை கேட்ட சகோதரர்கள்அவரது கட்டளையை பரபரப்புடன் தாமதமின்று அப்போதே நிறைவேற்றினர்.

 

चेदीनामाधिपत्ये  पुत्रं तस्याज्ञया हरेः।

अभ्यषिञ्चत तं पार्थः सहितैर्वसुधाधिपैः।। 

தர்மராஜர்கிருஷ்ணருடைய கட்டளையை ஏற்றுஅரசர்களை அனைவரோடும் சேர்ந்து சிசுபாலன் புத்ரனை சேதிநாட்டு ராஜனாக அபிஷேகம் செய்தார்.