Followers

Search Here...

Saturday, 23 April 2022

குணவான் என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? ராமரே 'குணவான்', ராமரே 'வீர்யவான்' என்று தமிழரான வால்மீகி 'ராமாயணம்' காட்டுகிறார். தெரிந்து கொள்வோம்.

'குணவான்' என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? '

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கலாம். அதற்காக நம்மை குணவான் என்று சொல்லிவிட முடியாது.

'சரணாகதி செய்த பிறகு, பிறருடைய குற்றத்தை அறிந்தும், மன்னிப்பது' என்பது உயர்ந்த குணம்.


'தன்னை நம்பியவர்கள் செய்யும்/செய்த குற்றங்களை மன்னிக்கும் குணம் யாரிடம் இருக்குமோ!' அவர்களை 'குணவான்' என்று சொல்கிறோம்.

எப்படிப்பட்ட எதிரியானாலும், எதிர்த்து வெற்றி கொள்ளும் மஹாவீரனை, "வீர்யவான்" என்று சொல்கிறோம்.

'எதிரியை தண்டிக்கும் மஹாவீரனாக இருந்தும், இப்படி ஒரு குணவான், என் சமகாலத்தில் வாழ்கிறாரா? எதிரி என்று தெரிந்தும், குற்றவாளி என்று தெரிந்தும், தண்டிக்கப்படவேண்டியவன் என்று தெரிந்தும், தன்னை சரணமடைந்தால் மன்னிக்கும் குணம் கொண்டவன் உலகில் இப்பொழுது இருக்கிறாரா?' என்று அன்பில் என்ற தேசத்தில் அவதரித்த வால்மீகி, நாரதரை கேட்கிறார்.

कोन्वस्मिन् सांप्रतम् लोके 

गुणवान् कः च वीर्यवान् |

- வால்மீகி ராமாயணம்

40000 ராக்ஷஸ படையோடு, கர-தூஷணன் ராமபிரானை கொல்ல வந்தான். தனி ஒருவனாக ராமபிரான் மட்டுமே நின்று, 40000 பேரையும் ஒழித்து காட்டினார்.

ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்து சீதையை மீட்க நின்றார்.


'சீதாதேவியை ராமபிரான் இல்லாத சமயத்தில் கடத்தி, இங்கே கொண்டு வந்தது மிகப்பெரிய தவறு' என்று சொன்ன விபீஷணனை, ராவணன் எட்டி உதைத்து வெளியேற்றிய பிறகு, ராமபிரானை சரணாகதி செய்ய வருகிறான். 

சுக்ரீவன், 'ராக்ஷஸனான விபீஷணன், போர் நடக்க போகும் சமயத்தில், எதிரி பக்கத்தில் இருந்து வந்து இருக்கிறான். மஹா ஆபத்து' என்றான்.

ராவணனை நேருக்கு நேர் போர் செய்து வீழ்த்தும் மஹாவீரனாக இருந்தும், 'என்னிடம் சரணம் என்று ஒருவன் வந்தால், அவனுக்கு அபயம் கொடுப்பது எனக்கு விரதம். விபீஷணனை மட்டுமல்ல, அவனோடு அந்த ராவணனே வந்து இருந்தால் (रावणः स्वयम्) அவனையும் மன்னித்து விடுவேன்" என்றார்.

आनयैनं हरिश्रेष्ठ

दत्तमस्याभयं मया ।

विभीषणो वा सुग्रीव

यदि वा रावणः स्वयम्

- வால்மீகி ராமாயணம்

தன்னை அண்டியவன் செய்த குற்றத்தை மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு மனிதனை பார்ப்பதே அரிது. ராமபிரானுக்கோ, கடல் போன்ற குணங்களில் இதுவும் ஒரு குணமாக இருந்தது.


இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், "ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, தண்டனை ஒன்றே வழி. மன்னிப்புக்கு இடமே இல்லை" என்று சொல்லி இருப்பான்.


சீதாதேவியை தொலைத்து, பஞ்சவடியில் (மஹாராஷ்டிரா) இருந்து நடந்து, ராமேஸ்வரம் வரை வந்து, 5 நாளில் வானரர்கள் பாலம் அமைக்க, கடும்கோபத்துடன் போருக்கு தயாராக இருந்த சமயத்தில், விபீஷணன் என்று ஒருவன் சரணாகதி செய்ய வருகிறான் என்றதும், "அவனோடு, ராவணன் வந்திருந்தாலும் அபயம் கொடுக்கிறேன்" என்று சொல்வதை பார்க்கும் போது, ராமபிரான் "குணவான்" என்று தெரிகிறது.  


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனை மன்னிக்க அப்பொழுதும் தயாராக இருந்தார் என்று பார்க்கும் போது தான், "பதித பாவன சீதாராம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது.


குணவானாக இருக்கும் ராமபிரான் சரித்திரத்தை, அன்பில் என்ற இடத்தில் அவதரித்த தமிழன் வால்மீகி, கவி நடையாக எழுதுகிறார்.


நல்ல மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்பை கொண்ட ராமபிரானை வணங்குவார்கள்.

What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.


Sunday, 17 April 2022

அஸூயை இல்லாதவர் ராமர். மாத்ஸர்யம் என்றால் பொறாமை. அஸூயை என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

 அஸூயை இல்லாத ராமபிரான்...

நமக்கு, சிலர் செய்யும் குற்றத்தை பார்த்து கோபம் வரும். 

அவர்கள் குற்றத்தை பார்த்த பிறகு, அவர்களிடம் உள்ள குணங்கள் கூட தோஷமாக தோன்றும்.

இதற்கு 'அஸூயை' என்று பெயர்.


ஒருவர் குற்றத்தை பார்த்த பிறகும், அவர்களிடம் உள்ள மற்ற குணங்கள் தோஷமாக பார்க்காமல் இருப்பதற்கு, 'அனஸூயை' என்று பெயர்.


'அஸூயை இல்லாதவர் ராமபிரான்' என்று தமிழ் முனிவரான வால்மீகி, 24 வயது ராமபிரானை பார்த்து  சொல்கிறார். 

स हि रूपोपपन्नश्च वीर्यवान् अनसूयकः |

भूमौ अनुपमः सूनुर्गुणै: दशरथोपमः || 

- வால்மீகி ராமாயணம்


ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து கிளம்பி, சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்கிறார்.


ராவணன் முதல் முறையாக ராமபிரானுடன் போர் செய்ய நேருக்கு நேர் வருகிறான்.

அன்று வரை, ராவணன் எந்த போரிலும் தோல்வியை பார்க்காதவன். மஹா வீரன்.

சீதாதேவியை கடத்தியது ராவணன் செய்த குற்றம். 

மற்றபடி, அவனும் மஹாவீரன் தான்.


இவன் செய்த ஒரு குற்றத்துக்காக, வீணாக இவன் வீரத்தை குற்றம் சொல்ல ஆசைப்படவில்லை ராமபிரான்.


முதல் முறை போர் புரிய வந்த ராவணனின் தேரை உடைத்து, கிரீடத்தை தட்டி, அவன் தேர் கொடியை உடைத்து தள்ள, யாரிடமும் இது வரை தோற்று அறியாத ராவணன், 38 வயது ராமபிரானிடம் தோற்றான். 


தன்னிடம் போர் புரிவதற்கு முன், ராவணன் சுக்ரீவனை, கவாக்ஷன், கவயன், ருஷபன், ஜ்யோதிமுகன், நபன், நீலன், ஹனுமான், லக்ஷ்மணன் அனைவரையும் கீழே விழ செய்து, கடைசியாக ராமபிரானிடம் போர் புரிய வந்தான்.


இவர்கள் அனைவரையும் தோற்கடித்த வீரன் என்பதால், ராமபிரான் தோற்று நிற்கும் ராவணனை பார்த்து,

"ராவணா! நீ பெரிய காரியத்தை செய்துள்ளாய். மஹாபலம் கொண்ட என் சேனையை எதிர்த்து வென்றுள்ளாய்.

பலருடன் போர் செய்ததால் நீ தோற்று இருக்கலாம். அதனால் உன்னை இன்று யமலோகம் அனுப்ப நான் நினைக்கவில்லை" என்று அஸூயையே இல்லாமல் சொல்கிறார்.

कृतं त्वया कर्म महत् सुभीमं

हतप्रवीरश्च कृतस्त्वयाऽहम् ।

तस्मात्परिश्रान्त इव व्यवस्य

न त्वां शरैर्मृत्युवशं नयामि ॥ 

- வால்மீகி ராமாயணம்

பெரும் அவமானத்தோடு திரும்பி நடந்து செல்கிறான் ராவணன்.

இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, அஸூயை கொண்டு, அவன் வீரத்தையும் கேலி செய்து, "பேடி ராவணா! நான் இல்லாத போது சீதாதேவியை கடத்தினாயே? நீயெல்லாம் ஒரு வீரனா?" என்று அவன் வீரத்தை குறையாக சொல்லி இருப்பான்.


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனிடம் உள்ள மற்ற நல்ல குணங்களையோ, திறமையையோ கேலியாகவோ, தோஷமாகவோ பேசவே இல்லை.


'ஒருவரிடம் உள்ள குற்றத்துக்காக, அவரிடம் உள்ள நல்ல குணத்தையும் தோஷமாக சொல்வது' - அஸூயை.


இந்த அஸூயையே இல்லாதவர் ராமபிரான் என்று வால்மீகி சொல்கிறார். 

மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்புகள் கொண்ட ராமபிரானை வணங்காமல் இருக்கமுடியாது.


What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.

Friday, 15 April 2022

கள்ளழகர்... வைகை ஆற்றங்கரை வர காரணம்.... என்ன?

தன் பக்தர்களை பார்க்க, அவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள, புது புது பக்தர்களை உருவாக்க, மோக்ஷம் கொடுக்க, பக்தனிடம் தனக்கு இருக்கும் அன்பை காட்ட வருகிறார் கள்ளழகபெருமாள்...

ராம அவதாரம் செய்த பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் அரண்மனையை விட்டு விட்டு, 

ஆடை அலங்காரத்தை மாற்றி கொண்டு,  

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக லக்ஷ்மணனையும் சேர்த்து கொண்டு, 

தனக்காக காத்து கிடக்கும் பல ரிஷிகள், சபரி ஆஸ்ரமத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பழங்கள், கிழங்குகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்தினார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களான ஹனுமான், சுக்ரீவன், விபீஷணன் போன்றவர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி

மேலும் கோடிக்கணக்கான வானரர்கள், ராக்ஷஸர்கள், அணில் உட்பட பலரை தன் பக்தனாக்கி, 

உறவுகளால் விரட்டப்பட்ட தர்மாத்மாவான விபீஷணனுக்கு இலங்கையையே கொடுத்து, சகோதரனால் விரட்டப்பட்ட சுக்ரீவனுக்கு அவன் மனைவியோடு ராஜ்யத்தையும் கொடுத்து, 

ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அயோத்திக்கு திரும்பினார்.


ராம அவதாரம் செய்த போது தான் பெருமாள் இப்படி செய்தார் என்று நினைக்க கூடாது.


பெருமாள், இன்றும் மதுரையில், ஒவ்வொரு வருடமும் இந்த ஆச்சர்யமான நிகழ்வை செய்து காட்டுகிறார்.


கள்ளழகராக வீற்று இருக்கும் பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் கோவிலை விட்டு விட்டு, 

கையில் சாட்டை, கோடாலியோடு அலங்காரம் செய்து கொண்டு, 

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக பல போலீஸை சேர்த்து கொண்டு, 

தனக்காக மண்டகபடியில் காத்து கிடக்கும் பல பக்தர்களின் மண்டபத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பொங்கல் பழங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்துகிறார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி, 

மேலும் கோடிக்கணக்கான வெளியூர், வெளிநாட்டவர்களை தன் பக்தனாக்கி

உறவுகளால் விரட்டப்பட்டவர்கள், சகோதரனால் விரட்டப்பட்டவர்கள், ஏழைகள் என்று அனைவருக்கும் சுகமான வாழ்வு கிடைக்க அணுகிரஹம் செய்து

மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அழகர்மலைக்கு திரும்புகிறார்.


கள்ளழகருக்கு காவல் புரிபவர்கள் தன்னை லக்ஷ்மணன் போலவும்,

அவருக்காக மண்டகப்படியில் காத்து இருந்து வரவேற்பவர்கள், தங்களை ரிஷிகள் போலவும்,

அவருக்கு போகும் வழியில் சேவை செய்பவர்கள், தங்களை பலம்வாய்ந்த வானர சேனை போலவும்,

ஏதோ முடிந்தவரை சேவை செய்பவர்கள், தங்களை ராமபிரானுக்கு சேவை செய்த அணில் போலவும்,

துக்கத்தில் இருந்து பெருமாளை பார்ப்பவர்கள், தங்களை சுக்ரீவன் போலவும், விபீஷணன் போலவும், நினைக்கும் போது, கள்ளழகரை ராமராக தரிசிப்போம். 

Saturday, 2 April 2022

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார். வைஷ்ணவர்கள் தினமும் உச்சரிக்கும் நாமங்கள் - சிவ, மஹேஸ்வர, மஹாதேவ, தேவேஸ (தேவ ஈஸ்வர)

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார்...

"மங்களம், பத்ரம், கல்யாணம், சுபம், பிரசன்னம், நிர்மலம்" என்ற அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் "சிவ". சமஸ்கரித நிகண்டு (dictionary) இந்த அர்த்தத்தை விளக்குகிறது.

"தன்மே மன: சிவ ஸங்கல்பமஸ்து"
என்னுடைய மனது கண்ட கண்ட சிந்தனைகள் கொள்ளாமல், நிர்மலமாக மங்களமாக ஆகட்டும்! என்று யஜுர் வேதத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் அடுத்த தெருவில், காஞ்சி மடாதிபதியாக போதேந்திராள் இருந்தார். ராம நாமத்தை பிரச்சாரம் செய்தார்.

பகவந் நாம போதேந்திராள் "ராம" நாமத்தை உலகம் முழுக்க சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், அருகிலேயே இருக்கும் ஸ்ரீதர ஐயாவாள் "சிவ சிவ சிவ சிவ..' என்று சொல்வார்.

இருவரும் மகாத்மாக்கள். ஸ்ரீதர ஐயாவாள் சாக்ஷாத் சிவபெருமான் அம்சம் என்றே சொல்வார்கள்.

ராம நாமத்தின் மகிமை தெரியாதவரில்லை ஸ்ரீதர ஐயாவாள்.
அவரிடம் கேட்டால், வாயை திறந்தால் "சிவ சிவ" என்று தான் வருகிறது என்றாராம்.

'பகவானுடைய நாம உபதேசம்' பெறுவதாக தான் சாதாரண ஜனங்கள் நினைப்பார்கள்.
பகவன் நாமம் தான் உண்மையில் நம்மை பிடிக்கிறது.

சிலரை, "ராம" நாமம் பிடிக்கிறது.
சிலரை "சிவ" நாமம் பிடிக்கிறது.
சிலரை "திருவஷ்டாக்ஷரம்" பிடிக்கிறது.

மங்களாமான அந்த பரமாத்மாவை தியானத்து கொண்டே ஸ்ரீதர ஐயாவாள் ஒரு சமயம் "சிவ சிவ..' என்று சொல்ல, சிவபெருமானுக்கு பதிலாக "ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக புல்லாங்குழல் வைத்து கொண்டு" தரிசனம் கொடுத்து விட்டார்.

சொன்னதோ சிவ நாமம், தரிசனமோ கிருஷ்ண தரிசனம்..

சிவ சிவ என்று சொன்னதற்கு விஷ்ணு வந்தாரே! எப்படி?

மங்களமானவர், பிரசன்னமானவர் விஷ்ணு என்பதால், விஷ்ணுவுக்கும் "சிவ" என்று பெயர் உண்டு.

ஆயிரம் விஷ்ணு நாமத்தில், விஷ்ணுவுக்கு "சிவ" என்று பெயரும் உண்டு.

விஷ்ணு பக்தனும், மங்களமான விஷ்ணுவை "சிவ சிவ" என்றே ஜபிக்கிறான்..

அநிவர்தீ நிவ்ருத்தாத்மா
ஸம்-க்ஷேப்தா க்ஷேம-க்ருத் சிவ: |
ஸ்ரீவத்ஸ-வஷா: ஸ்ரீவாஸ:
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்-வர: ||

விஷ்ணு சஹஸ்ரநாமமும் அர்த்தமும்

Friday, 1 April 2022

அன்று ப்ராம்மணர்கள் வேதம் படித்தீர்கள்? சூத்திரனுக்கு (employee) என்ன படிக்க கொடுத்தீர்கள்? படிக்க விட்டீர்களா? பெரியார் வந்ததால் தானே இன்று படிக்கிறோம்

அன்று ப்ராம்மணர்கள் வேதம் படித்தீர்கள்? சூத்திரனுக்கு (employee) என்ன படிக்க கொடுத்தீர்கள்? படிக்க விட்டீர்களா?  பெரியார் வந்ததால் தானே இன்று படிக்கிறோம்.

அன்று, பிராம்மணர்கள் 

4 வேதங்கள், அதனுடைய உபநிஷத்துக்கள், 

4 உப வேதங்கள், 6 சாஸ்திரங்கள்,

ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள்,  புராணங்கள், 

8 வேதாந்த சித்தாத்தங்கள், 

64 கலைகள் படித்தார்கள், 

படித்தார்களே தவிர, அதில் கிடைக்கும் பயனை மற்றவர்களுக்கு தான் கொடுத்தார்கள்..

64 கலைகளில் கோவில் சிற்பம் வடிப்பது ஒரு கலை. அதை செய்தது சூத்திரன் (empoyee) தானே?

அரசர்கள் தானே அஸ்திரங்கள், சஸ்திரங்கள் பயன்படுத்தினர்? 

அன்று வைத்தியம் செய்தவர்கள் பிராம்மணர்கள் இல்லையே? 

பெரிய பெரிய மாளிகைகள் அமைத்தது பிராம்மணன் இல்லையே? 

க்ஷத்திரியர்கள், உபநிஷத்தில் சொல்லப்படும் தனுர் வேதத்தை (Army/weaponry) ப்ராம்மணர்களிடம் கற்று கொண்டனர்.


சூத்திரனும், வைஸ்யர்களும் உபநிஷத்தில் சொல்லப்படும் ஆயுர்வேதம் (medicine), ஸ்தாபத்யம் (engineering), காந்தர்வ வேதத்தை (music) ப்ராம்மணர்களிடம் கற்று கொண்டனர்.

அது மட்டுமா, 

கீழே சொல்லப்பட்ட அனைத்தும் ப்ராம்மணர்களிடம் கற்றுக்கொண்டனர்.  


பணம் சம்பாதிக்கும் வழி அனைத்தையும், தொழில்களையும் மற்ற அனைவருக்கும் சொல்லிக்கொடுத்த பிராம்மணர்கள் தனக்கென்று புருஷ சூக்தம், ஸ்ரீ ருத்ரம் என்று தெய்வத்தை பற்றி பாடும் வேத மந்திரங்களை மட்டும் வைத்து கொண்டனர். 

அன்று சுயநலம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்த ப்ராம்மணர்களை, நன்றி உணர்ச்சியுடன் மற்றவர்கள் பொருள் உதவி செய்து  காப்பாற்றினார்கள்.

பிராம்மணன் தொழில் திறன் இருந்தும், அஸ்திர சஸ்திர அறிவு இருந்தும் பிறர் தொழில் செய்ய வழி விட்டு,  தினமும் யாசகம் செய்து வாழ்ந்தான்.

இதனால், பிராம்மணர்கள் மற்றவர்களால் காப்பாற்றப்பட்டனர். 


1000 வருட இஸ்லாமிய, மற்றும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், செல்வம் கொழித்த பாரத மண்ணில் கோவிலை தாக்கிய  இவர்கள்,கோவிலில் இருந்த ப்ராம்மணர்களை முதலில் கொன்று  குவித்தனர். 

கோவில்களை இடித்தனர். தங்கள் ஸ்தூபங்களை கட்டினர். பொது மக்களை கொன்று குவித்தனர். ஊரில் உள்ள பெண்களின் மானத்தை அழித்தனர். எதிர்த்த பொது மக்களை தலை சீவினர். பயந்த பொது மக்களை மதம் மாற்றினர். பெண்களை கர்ப்பமாக்கி தன் மதத்துக்கு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை உருவாக்கி, பாரத மக்களாக வாழ்ந்த நமக்குள்ளே மத வேறுபாட்டை விதைத்து சண்டையிட வைத்தனர். 

பாரத மண்ணில் இருந்த க்ஷத்ரிய அரசர்களை நேரில் எதிர்த்தால் தோற்க வேண்டி இருக்கிறது என்றதும், சமயம் பார்த்து, இரவு நேரத்தில் திடீரென்று ஊரில் புகுந்து பொது மக்களை, கோவிலை பிடித்து அரசர்களை கீழ் படிய வைத்து, பிறகு தலை சீவி நாட்டை மெது மெதுவாக பிடித்தனர். 

க்ஷத்ரிய அரசர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்ட போது, வைஸ்யர்களும், சூத்திரர்களும் அனாதை  ஆகினர்.

தங்களை காத்து கொள்ள முடியாத  நிலையில், பிராம்மணர்கள் கைவிட பட்டனர். 


முகம்மது பின் துக்ளக் - கடுமையான வரியை ஹிந்துக்களுக்கு விதித்து, மதம் மாற சம்மதித்த பாரத மக்களுக்கு வரி சலுகை செய்து ஆட்சி செய்தான்.

அப்பொழுது, தங்கத்தில் நாணயம் வைப்பதை காட்டிலும், செம்பு நாணயம் செய்தால் எளிதாக இருக்கும் நினைத்து நாணயத்தை மாற்றினான்.

அப்பொழுது பாரத நாட்டில் இருந்த அனைத்து ஹிந்துக்களும் தாங்களே செம்பு நாணயம் செய்து விட்டனர். இதனால், பெரும் குழப்பம் ஏற்பட, துக்ளக் மீண்டும் தங்கத்துக்கே நாணயத்தை மாற்றினான் என்று பார்க்கிறோம்.


64 கலைகளும் சர்வ சாதாரணமாக ஹிந்துக்கள் தெரிந்து வைத்து இருந்தனர் என்பது இந்த ஒரு நிகழ்விலேயே  தெரிகிறது.


இத்தனை கலைகளும் கற்ற சூத்திரர்கள், வைசியர்கள், தாங்கள் கற்ற கலைகளை முடிந்த அளவு 1800 வரை  காத்தனர்.  கிறிஸ்தவ ஆட்சி பாரதம் முழுவதும் ஏற்பட்டதும், இதுவும் நசுக்கப்பட்டு, பாரத மக்கள் அனைவரும் ஏழையாக்கப்பட்டனர். 

இந்த உண்மையை உணரும் போது, தான் சூத்திரர்களும், வைஸ்யர்களும் எத்தனை படித்து இருந்தார்கள் என்பது நமக்கு புரியும்.


இதோ சூத்திரனும், வைஸ்யர்களும் கற்று கொண்டவைகள்:

இசை, வாத்யம், ந்ருத்தம், நாட்டியம், ஆலேக்யம், விசேஷ கச்சேத்யம், தண்டுல குஸுமபலி விகாரா, புஷ்பா ஸ்தரணம், தசன வஸனாங்கராகா, மணி பூமிகாகர்ம, சயன ரசனம், உதக வாத்யம் உதககாத, சித்ர யோகா, மால்யக் ரதன விகல்பா, சேகரா பீட யோஜனம், நேபத்ய யோகா, கர்ணபத்ர பங்க, ஸுகந்த யுக்தி, பூஷண யோஜனம், இந்த்ர ஜாலம், கௌதுமார யோகா, ஹஸ்தலா கவம், விசித்ர சாகா பூப பக்ஷ்ய க்ரியா, பானக ரஸ ராகா ஸவ யோஜனம், ஸூசீவாயக கர்ம, ஸூத்ர க்ரீடா, வாத்ய க்ரியா, ப்ரஹேலிகா, ப்ரதிமாலா, துர்வசன யோகா, புஸ்தக வாசனம், நாடகாக் யாயிகா தர்சனம், காவ்ய ஸமஸ்யா பூரணம், பட்டிகா வேத்ர பாணி விகல்பா, தர்க்க கர்மாணி, தக்ஷணம், வாஸ்து வித்யா, ரத்ன பரீஷா, தாது வாத, மணி ராக ஞானம், ஆகார ஞானம், வ்ருஷ ஆயுர்வேத யோகா, மேஷ குக்குடலாவ யுத்த விதி, சுக ஸாரிகா பிரலாபனம், உத் ஸாதனம், கேச மார்ஜன கோசலம், அக்ஷர முஷ்டி காகதனம், தாரண-மாத்ருகா, தேச பாஷா ஞானம், நிர்மிதி ஞானா, யந்த்ர மாத்ருகா, மிலேச்ச பாஷை / மிலேச்ச குதர்க்கம், ஸம் வாச்யம், மானஸ காவ்ய க்ரியா, க்ரியா விகல்பர், ச்சலித யோகா, அபிதான கோச சந்தோ ஞானம், வஸ்த்ர கோபனம், த்யூத விசேஷா, ஆகர்ஷ க்ரீடா, பால க்ரீடா, நௌகா நிர்மாண கலா, புஷ்பச கடிகா நிர்மாணம், விமான நிர்மாண கலா

சாந்தீபிணி என்ற ப்ராம்மணர், குசேலன் என்ற ப்ராம்மணனுக்கும், இடையனான ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அனைத்தையும் சொல்லி கொடுத்தார்.


குசேலன் ஏழையாக வாழ்ந்தாலும், தொழில் செய்ய திறன் இருந்தும், தெய்வத்தை பற்றி சொல்லும் வேதத்தை மட்டுமே ஓதி வந்தார். 


'சூத்திரன் அடிமுட்டாளாக இருந்தார்கள்' என்று உளறி, 1000 வருடத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில் கற்ற கல்வியை இழந்தனர் என்பதை மறைப்பதற்காக, அனைத்தையும் கற்று கொடுத்த ப்ராம்மண சமுதாயத்தை பழிப்பது, முட்டாள்தனம்.


அன்று, அனைத்து கலைகளும் தெரிந்தவர்களாக அனைவருமே இருந்தார்கள்


 

மேலும் இந்த கலைகளை பற்றி அறிய ..   இங்கே படிக்கவும் 

x