Followers

Search Here...

Friday, 17 December 2021

ஜாதிகள் எப்படி உருவானது? "ஜாதி", "மதம்", 'வர்ணம்' - இரண்டையும் அழிக்க வழி என்ன? ஒரு அலசல்

"ஜாதி", "மதம்" - இரண்டையும் அழிக்க வழி.
'நாகரீகமுள்ள, கட்டுப்பாடான, அமைதியான சமுதாயத்தை மனிதர்கள் உருவாக்க ஆசைப்பட்டால், நான்கு வர்ணங்களில் மனிதர்கள் இருக்க வேண்டும்' என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
"பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டது" என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவானாக சொல்கிறார்.
சாதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம்
(அத்யாயம் 4 - ஸ்லோகம் 13) - பகவத் கீதை

"சாதுர் ஜாதி மயா ஸ்ருஷ்டம்" - நான்கு ஜாதி என்னால் படைக்கப்பட்டது என்று சொல்லவில்லை.

'ஜாதி' வேறு. 'வர்ணம்' வேறு.

நான்கு வர்ணத்தில் வாழாதவர்களை பெயர் கொடுக்காமல், 'பஞ்சமன்' ("ஐந்தாவது" வர்ணத்தில் இருப்பவன்) என்று பொதுவாக சொல்கிறது.

வர்ணம் என்றால் நிறம்.. 4 shades of people.
ஜாதி என்றால் caste.

ஹிந்து தர்மம் சொல்லும் இந்த 4 வர்ணத்தை எந்த சமுதாயம் அழிக்க நினைக்கிறதோ, அவர்களால் நிம்மதியாக வாழ முடியாது.

உலகம் முழுவதும் இந்த நான்கு வர்ணத்தில் தான் இருக்கிறது.

எந்த சமுதாயத்தில் ஒரு வர்ணத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமையை தவறுதலாக பயன்படுத்துகிறார்களோ, அவர்களால் அந்த சமுதாயம் நிலை குலையும்.
க்ஷத்ரியர்கள் என்ற "ராணுவத்தினர், போலீஸ்காரர்கள்" இன்றும் உள்ளனர்.

ஆயுதம் வைத்திருக்கும் இவர்கள் நினைத்தால், பெரும் நாசத்தை உண்டாக்கி விடமுடியும்.
க்ஷத்ரியர்கள் தன் எல்லை மீறி, நாட்டு மக்களை துன்புறுத்திய போது, பரசுராமராக விஷ்ணுவே அவதரித்து, 21 தலைமுறை க்ஷத்ரியர்களை அடக்கினார் என்று பார்க்கிறோம்.

பாகிஸ்தான் போன்ற நாடுகளில், ராணுவத்தின் அதிகாரமே அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். அந்த நாட்டின் பொருளாதார நிலை, அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பார்க்கிறோம்.

ராணுவம், போலீஸ் போன்ற க்ஷத்ரியர்கள் என்ன செய்ய வேண்டும்? எது நியாயம்?" என்று சொல்லி வழிநடத்த , ப்ராம்மணர்கள் என்ற வர்ணத்தில் இன்று, சட்டசபையில் அமைச்சர்கள் பலர் கூடி, முடிவெடுத்து க்ஷத்ரியர்களை, வைசியர்களை, சூத்திரர்களை வழி நடத்துகின்றனர்.

ப்ராம்மணர்கள் சொல்படி நடக்கும் க்ஷத்ரியர்கள், மக்களை துன்புறுத்தாமல் இருக்கின்றனர். தேவைப்பட்டால் உதவி கூட செய்கின்றனர். நாட்டை உயிரை கொடுத்து காக்கின்றனர்.

வைசியர்கள் என்ற வியாபாரிகள், முதலாளிகள் (employer) நாட்டிற்கு வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் கொடுக்கின்ற்னர்.

வேலை செய்ய, சூத்திரர்கள் (employee) கோடிக்கணக்கில் இருக்கின்றனர்.
வேலை செய்யாமல் சூத்திரர்கள் இருந்தால், வியாபாரம் நடக்கமுடியாது,
சட்டசபையில் இருக்கும் அமைச்சர்களுக்கு வேலை செய்ய ஆள் (employee) இருக்காது. அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும்.
ஆதலால், ஹிந்து மதம், சூத்திரம் (formula) போன்று வேலை செய்பவர்கள் இருப்பதால், இவர்களை "சூத்திரன்" என்று பெயர் கொடுத்தது.

சமஸ்கரித மொழியின் அர்த்தம் தெரியாத சில மடையர்கள், ஏதோ அவமான பெயர் போல, தமிழ்மொழி என்று நினைத்து, வேலைக்கு செல்பவர்களை கேவலப்படுத்துகின்றனர்.

வர்ணம் அழிந்தாலோ, வர்ணத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யாமல் இருந்தாலோ, சமுதாயம் அழிந்து விடும்

அனைத்து நாடுகளிலும் நான்கு வர்ணத்தால் தான் சமுதாயம் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
சிலர் ராணுவம், போலீஸ் என்ற க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கின்றனர்.
சிலர் எது நியாயம், எது நன்மை என்று சொல்லுமிடத்தில் அரசாங்கத்தில் உள்ளனர்.
பல வியாபாரிகள், வைசிய வர்ணத்தில் உள்ளனர்.
பல வேலைக்கு செல்பவர்கள் சூத்திர வர்ணத்தில் உள்ளனர்.

க்ஷத்ரிய அரசர்கள் இன்று இல்லாமல் போனதால், க்ஷத்ரிய வர்ணம் அழிந்து போனதாக நினைத்து கொள்ள கூடாது.

இன்று, க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள், தங்களை ராணுவத்தினர், போலீஸ் என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.

அன்று பிராம்மண வர்ணத்தில் இருந்து தர்மம், அதர்மம் பற்றி விளக்கி சொன்ன சமுதாய மக்கள், ஆசாரம், வேதத்தை இன்றும் காப்பாற்றி வருவதால், பிராம்மண குணத்தை இன்னும் இழக்கவில்லை. ஆனால் பலர் பிராம்மண வர்ணத்தை இழந்து விட்டனர்.

இப்பொழுது உள்ள இந்த பிராம்மண சமுதாயத்தை, 'பிராம்மண வர்ணம்' என்று சொல்ல கூடாது. 'பிராம்மண ஜாதியாக' உள்ளது.

ஜாதிகள் ஒரு உன்னதமான குருவையோ, அரசனையோ, தெய்வதையோ வைத்து உருவானது.

யாதவ ஜாதி, "யது" என்ற அரசனை பின்பற்றி வந்தது.
அது போல,
ராமானுஜர், ஆதி சங்கரர், மத்வர், ரிஷிகளை பின்பற்றி வாழ்ந்த, பிராம்மண சமுதாயம், பிராம்மண ஜாதியாக இன்றும் இருக்கிறார்கள்.

பிராம்மண ஜாதியில்,
இன்று சிலர் பிராம்மண வர்ணத்தில் இருக்கிறார்கள்,
இன்று சிலர் க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.
இன்று சிலர் வைசிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.
இன்று சிலர் சூத்திர வர்ணத்தில் இருக்கிறார்கள்.

யது என்ற அரசனை பின்பற்றி யாதவ ஜாதி வந்தது போல, "ஜாதிகள்" ஒவ்வொரு தலைவனை பின்பற்றி உருவானது.

வர்ணத்தை எப்படி எளிதில் ஒழிக்க முடியாதோ! அது போல,
ஜாதியை எளிதில் ஒழிக்கவே முடியாது.

இன்று சிலர் நாங்கள் "அண்ணா வழி" என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
இதுவே பலரால் பின்பற்ற படும்போது, ஒரு நாள் ஜாதியாக மாறும்.
ஒரு நாள் அம்பேத்கார் ஜாதி, அண்ணா ஜாதி என்ற ஜாதிகள் உருவாகி, ஜாதி மறுப்பு திருமணம் அவர்களுக்கிடையே நடக்கும் போது சண்டையிட்டு கொள்ளும்.

"யது" அரசனின் வழியில் வந்தவர்கள், 5000 வருடத்துக்கும் மேலாக இன்றும் இருக்கிறார்கள்.
யது வழியில் வந்தவர்கள், காலப்போக்கில் 'யது குலம்' என்றும், யாதவ ஜாதி என்று அடையாளப்படுத்தபட்டார்கள்.
"புத்தர் வழி" என்று சொல்லி ஒரு கூட்டம் வந்தது.
காலபோக்கில் "புத்த ஜாதி" என்பதை விட இன்னும் போய் "புத்த மதம்" என்று ஆகி விட்டது.

அது போல,
சில பொய் மதங்கள் உருவாகின.

ஜாதி பெரிதாகும் போது, மதம் என்று அந்த சமுதாய மக்கள் அடையாளப்படுத்தி, அந்த தலைவனை கொண்டாட ஆரம்பித்தனர்.

'தன் தலைவன் தான் உயர்ந்தவர்' என்று மதங்கள் ஆரம்பித்து, ஒரே ஒரு ரிஷி, தலைவன் என்று இல்லாத சனாதன தர்மத்தில் வாழும் சமுதாயத்தை பார்த்து, "ஹிந்து மதம்" என்று சொல்லி பாரத மக்களை அடையாளப்படுத்தினர்.

'தன் மத தலைவன் சொன்னது தான் சரி' என்று பாரத மக்களை 1000 வருடங்கள் கொள்ளை அடித்தனர்.

புத்த மதத்தில் உள்ள ஒருவளை, புத்தரை மதிக்காத ஒருவன் மணக்க நினைத்தால், எப்படி அந்த மக்கள் ஒத்து கொள்ளமாட்டார்களோ, அது போல,
ஹிந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினரும், அவர்கள் நம்பிக்கையை குலைக்கும் மற்றவர்களை மணக்க சம்மதிப்பதில்லை.

தேவர் ஜாதியில் உள்ள நம்பிக்கையை அவமதிக்கும் புத்தி உள்ளவன், அவர்கள் ஜாதியில் உள்ள பெண்ணை மணக்க நினைக்கும் போது, மானமுள்ள தேவர் ஜாதியில் உள்ளவர்களுக்கு வேதனை உண்டாகிறது.

ஜாதிகள், 'ரிஷிகள், தெய்வங்கள் வழியே வந்தது' என்று மட்டும் நினைக்க கூடாது.
'அரசர்கள், தலைவர்கள்' வழியாகவும் வருகிறது.

நாங்கள் "அண்ணா வழி", நாங்கள் "மகாத்மா வழி" என்று சொல்லி கொள்வதை இன்று பார்க்கிறோம்.
"ஜாதியை ஒழிக்க வந்தேன்" என்று சொல்லி, மக்கள் சேர சேர கடைசியில் இவர்களே ஒரு நாள் ஒரு 'மூத்திர ஜாதி'யாக ஆகி விடுவார்கள்.

இப்படி நாங்கள் "யது வழி", நாங்கள் "ராமானுஜர் வழி", நாங்கள் "ஸ்ரீவத்ஸ ரிஷி வழி", என்று சொன்னதை, ஜாதியாக இன்று மாற்றி விட்டார்கள்.

நாங்கள் 'கிறிஸ்து வழி' என்று ஒரு சமுதாயம் வெளிநாட்டில் ஆரம்பித்து, அது ஜாதியை தாண்டி, மதமாகி விட்டது.

அதை தொடர்ந்து, 'நபிகள் வழி' என்று ஒரு சமுதாயம் ஆரம்பித்து, அதுவும் ஜாதியை தாண்டி, மதமாகி விட்டது.

ஜாதியும், மதமும் ஒரு தலைவனை கொண்டு உருவானது என்பதால், கிறிஸ்தவ நாடுகளுக்கு, கிறிஸ்து என்ற தன் தலைவனை ஏற்காத இஸ்லாமியனை கண்டால் வெறுப்பு.
அதே போல, இஸ்லாத்தை வெறுக்கும் கிறிஸ்தவ நாடுகளை அழிக்க இஸ்லாமியர்கள் நினைக்கின்றனர்.

வர்ணம் அழியும் போது, அந்த சமுதாயம் அழிந்து விடும்.
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் க்ஷத்ரிய வர்ணம் மற்ற வர்ணத்தில் உள்ளவர்களை அடக்குகிறார்கள். இதனால், தானாகவே இந்த சமுதாயம் அழிந்து போகும்.

அந்தந்த ஜாதியை படைத்த தலைவர்கள், ரிஷிகள், அரசர்கள், ஞானிகள், மகாத்மாக்கள் மீது நம்பிக்கையை அந்த சமுதாய மக்கள் அடியோடு வெறுக்கும் போது, அந்த ஜாதி மட்டும் அழியும்.

பிராம்மண ஜாதி அழியவேண்டுமென்றால், 12 ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேதம், பெருமாள், சிவன், முருகன், விநாயகர், சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், துளசி தாசர் என்று அனைவரும் பொய் என்று ஆக்க வேண்டும்.
ஆக்கினால், ப்ராம்மண ஜாதி அழியும்.
இது நடக்கவே நடக்காத காரியம்.

பொதுவாக ஹிந்துக்களை அழிப்பது என்பது நடக்கவே நடக்காத காரியம்.. ஹிந்துக்களை அழிக்க வேண்டுமென்றால், ஜாதிகள் அழிய வேண்டும்..
உதாரணத்திற்கு, யாதவ ஜாதி அழிய வேண்டுமென்றால், அவர்களுக்கு கிருஷ்ணர் மீது அவநம்பிக்கை ஏற்பட வேண்டும்.
யது என்ற அரசனின் மீது அவநம்பிக்கை ஏற்பட வேண்டும்.
இது நடக்கவே நடக்காத காரியம்.

உருவான மற்ற மதத்தை அசைக்க, அவர்கள் நம்பும் விஷயத்தை கேள்விக்குறியாக்கினால் போதுமானது. மக்களின் மனதில் கேள்விகளை விதைத்தால் தானாக விலகி விடுவார்கள்.

அந்தந்த மதத்தை படைத்த தலைவர்கள் மீது நம்பிக்கையை அந்த சமுதாய மக்கள் அடியோடு வெறுக்கும் போது, அந்த மதமும் அழியும்.

இந்தியாவில் ஹிந்து தர்மத்தை விட்டு விட்டு, அசோக சக்கரவர்த்தியின் முட்டாள்த்தனத்தால் சில நூறு வருடங்கள் பௌத்த மதத்தை தழுவி இருந்தார்கள் சில கோடி ஹிந்துக்கள்.

'அன்பு சமாதானம்' என்று அனைவரையும் முட்டாளாக்கிய புத்தமத கொள்கையால், அரசர்கள் தூங்கி விட, 1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பை பாரத மக்கள் அனுபவிக்க நேரிட்டது.

'புத்தனும் வேண்டாம், பௌத்த மதமும் வேண்டாம்' என்று தூக்கி எறிந்த பாரத மக்கள், மீண்டும் சனாதன தர்மத்திற்கு வந்தனர்.

இன்று சிலர் மறுபடியும் சில போலி மதங்களில் விழுந்துள்ளனர்..
வழக்கம் போல, அடி வாங்கும் போது, மறுபடியும் ஹிந்து தர்மத்தில் வந்து விடுவார்கள் என்பது நிச்சயம்.