Followers

Search Here...

Thursday, 11 February 2021

Who came as Rama, Sugriva, neela, nala etc?.. ராமபிரான் யார்? வாலி யார்? சுக்ரீவன் யார்? மைந்தன் யார்? ஹனுமான் யார்? த்விவிதன் யார்? நலன் யார்? நீலன் யார்? வால்மீகி ராமாயணம் .. தெரிந்து கொள்வோம்..

மஹாவிஷ்ணு "மனித ரூபத்தில் மனித குணங்களோடு அவதரிக்க வேண்டும்" என்று தேவர்கள் பிரார்த்தனை செய்த பொழுது...  

வால்மீகி ராமாயணம் சொல்வதை அறிந்து கொள்வோம்..


தா: சமேத்ய யதான்யாயம்

தஸ்மின் சதசி தேவதா: |

அப்ருவன் லோக கர்தாரம்

ப்ரஹ்மானம் வசனம் மஹத் ||

ता: समेत्य यथान्यायं तस्मिन् सदसि देवता:।

अब्रुवन् लोक कर्तारं ब्रह्माणं वचनं महत्।।

All devatas assembled there, addressed Lord Brahma the creator of the worlds

சத்ய லோகத்தில், அனைத்து தேவர்களும் கூடி, உலகை ஸ்ருஷ்டி செய்த ப்ரம்ம தேவனிடம் பேச ஆரம்பித்தார்கள்.





பகவன் த்வத் ப்ரஸாதேன

ராவணோ நாம ராக்ஷஸ: |

சர்வான்னோ பாததே வீரயாத்

ஸாசிதும் தம் ந சக்னும: ||

भगवन् त्वत्प्रसादेन रावणो नाम राक्षस:।

सर्वान्नो बाधते वीर्यात् शासितुम् तं न शक्नुम:।।

Bhagavan! A rakshasa named Ravana who had obtained valor through your grace is oppressing us. We are unable to punish him.

"ப்ரம்ம தேவா! ராவணன் என்ற ராக்ஷஸன் நீங்கள் கொடுத்த ஆசிர்வாதத்தால் எங்களை துன்புறுத்துகிறான். எங்களால் அவனை தண்டிக்கவே முடியவில்லை.

த்வயா தஸ்மை வரோ தத்த: 

ப்ரீதேன பகவன்புரா |

மானயந்தஸ் ச தம் நித்யம்

சர்வம் தஸ்ய க்ஷமாமஹே ||

त्वया तस्मै वरो दत्त: प्रीतेन भगवन्पुरा।

मानयन्तश्च तं नित्यं सर्वं तस्य क्षमामहे।।

Pleased with his penance, Bhagavan! you had granted him a boon. By honour that boon and daily we have to endure all his cruelty.

ராவணனின் தவத்தை கண்டு மகிழ்ந்த தாங்கள், அவனுக்கு வரங்களை அருளினீர்கள். அதன் பலத்தால், அவன் செய்யும் கொடூரங்களை நாங்கள் தினந்தோறும் தாங்க வேண்டி உள்ளது.

உத்வேஜயதி லோகான் த்ரீன்

உச்ச்ரித்தான் த்வேஷ்டி துர்மதி |

சக்ரம் த்ரி-தச ராஜானம்

ப்ரதர்ஷயிதும் இச்சதி ||

उद्वेजयति लोकान् त्रीन् उच्छ्रितान् द्वेष्टि दुर्मति:।

शक्रं त्रि-दश राजानं प्रधर्षयितुम् इच्छति।।

The evil minded Ravana is inflicting pains on the three worlds. He hates the guardians of the earth and intends to assault Indra, lord of the celestials.

க்ரூர புத்தியே கொண்ட ராவணன் மூன்று உலகத்தையும் பாதிக்கிறான். இந்த உலகை பாதுகாக்கும் எங்களை வெறுக்கிறான். மேலும் தேவேந்திரனின் அழிவை பெரிதும் விரும்புகிறான்.





ருஷீன் யக்ஷான் ச கந்தர்வான்

அசுரான் ப்ராஹ்மணம் ததா |

அதிக்ராமதி துர்தர்ஷோ

வரதாநேன மோஹித: ||

ऋषीन् यक्षान् स-गन्धर्वान् असुरान् ब्राह्मणान् तथा।

अतिक्रामति दुर्धर्षो वरदानेन मोहित:।।

Because of your boon, he has become unassailable by anyone like us, sages, yakshas, gandharvas, demons and brahman and filled with pride

உங்கள் வரத்தால், ரிஷிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், ப்ராம்மணர்கள் என்று யாராலும் அழிக்க முடியாதவனாகி விட்டான். 

நைனம் சூர்ய: ப்ரதபதி

பார்ஷ்வே வாதி ந மாருத: |

சலோ: மிமாலீ தம் த்ருஷ்ட்வா

சமுத்ரோபி ந கம்பதே ||

नैनं सूर्य: प्रतपति पार्श्वे वाति न मारुत:।

चलोर्मिमाली तं दृष्ट्वा समुद्रोऽपि न कम्पते।।

Sun does not scorch him and the wind does not blow by him. Even the ocean with its incessantly moving waves becomes still in his presence.

சூரிய தேவன் ராவணன் இருக்குமிடத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தை காட்டுவதில்லை. வாயு தேவன் இவன் இருக்குமிடத்தில் வேகமாக வீசுவதில்லை. அது மட்டுமல்ல, சமுத்திர தேவன் இவன் இருக்குமிடத்தில் அலைகள் கூட எழுப்பாமல் அமைதியாக இருக்கிறார். 


தன்மஹன்னோ பயம் தஸ்மாத்

ராக்ஷஸாத் கோர தர்சனம் |

வதார்தம் தஸ்ய பகவன்

உபாயம் கர்தும் அர்ஹசி ||

तन्महन्नो भयं तस्मात् राक्षसात् घोर दर्शनात्।

वधार्थं तस्य भगवन् उपायम् कर्तुम् अर्हसि।।

His dreamful appearance of that rakshasa strikes terror into us. Bhagavan! Do find some means to kill him.

அந்த ராக்ஷஸனின் கோரமான ரூபம் நினைவில் வந்தால் கூட, பயம் எங்களை தொற்றுகிறது. ப்ரம்ம தேவா! ராவணனை கொல்ல எங்களுக்கு ஒரு உபாயம் சொல்லுங்கள்."





ஏவமுக்த: சுரை: சர்வை:

சிந்தயித்வா தத: அப்ரவீத் |

ஹந்தாயம் விதித: தஸ்ய

வதோபாயோ துராத்மன: ||

एवमुक्त: सुरै: सर्वै: चिन्तयित्वा तत: अब्रवीत्।

हन्तायं विदित: तस्य वधोपायो दुरात्मन:।।

After listening to the words of the devatas and reflecting over the matter, Brahma said, "Oh, the means of destruction of that wicked (rakshasa) has struck my mind".

இப்படி தேவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பரிசீலனை செய்த ப்ரம்ம தேவன், அவர்களுக்கு பதில் சொல்ல தொடங்கினார்..."ஆம். எனக்கும் அந்த ராக்ஷஸனின் அழிவை பற்றிய நினைவு உண்டு"


தே ந கந்தர்வ யக்ஷானாம்

தேவ தானவ ரக்ஷஸாம் |

அவத்ய: அஸ்மி இதி வாக் உக்தா

ததா உக்தம் ச தன்மயா ||

तेन गन्धर्व यक्षाणां देव दानव रक्षसाम्।

अवध्य: अस्मि इति वाक् उक्ता तथा उक्तम् च तन्मया।।

When he asked gandharvas, yakshas, devas, demons or rakshasas should never be able to kill him, I said, "So be it".

"கடுமையான தவம் செய்த ராவணன், 'கந்தர்வர்களாலும், யக்ஷர்களாலும், தேவர்களாலும், அசுரர்களாலும், சக ராக்ஷஸர்களாலும் எனக்கு மரணம் கூடாது' என்று வரம் கேட்க, 'அப்படியே ஆகட்டும்' என்று அவன் தவத்துக்கான பலனை அளித்தேன்."

ந அகீர்தயத் அவஞாநாத்

தத் ரக்ஷ: மானுஷான் ப்ரதி |

தஸ்மாத்ஸ மானுஷாத் வத்யோ

ம்ருத்யு: ந அன்ய: அஸ்ய வித்யதே ||

न अकीर्तयत् अवज्ञानात् तत् रक्ष: मानुषान् प्रति।

तस्मात्स मानुषाद् वध्यो मृत्यु: न अन्य: अस्य विद्यते।।

That rakshasa, did not include man, monkey and bear because of his disrespect for human society. As such, he is fit to be destroyed by a man and not by any other means.

"ராவணனை பொருத்தியவரை மனிதர்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஆதலால், என்னிடம் வரம் கேட்ட ராவணன், மனிதர்களையும், குரங்குகளையும், கரடியையும் சேர்த்து கொள்ளவில்லை.




இந்த சூழ்நிலையில், அவனை அழிக்க மனிதனால் முடியும். வேறு விதத்தில் அந்த ராக்ஷஸனை அழிக்க இயலாது.' என்றார் ப்ரம்ம தேவன்.


ஏதத் ஸ்ருத்வா ப்ரியம் வாக்யம்

ப்ரஹ்மணா சமுதாஹ்ருதம் |

சர்வே மஹர்ஷயோ தேவா:

ப்ரஹ்ருஷ்டா: தே அபவன் ததா ||

एतत् श्रुत्वा प्रियं वाक्यं ब्रह्मणा समुदाहृतम्।

सर्वे महर्षयो देवाः प्रहृष्टा: ते अभवन् तदा।।

Having heard these pleasing words uttered by Brahma, all the devatas and maharshis were overwhelmed with joy.

'ராவணனை அழிக்கவும் உபாயம் உண்டு' என்று ப்ரம்ம தேவன் சொன்னதும், அங்கு இருந்த தேவர்களும் மஹரிஷிகளும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.


ஏதஸ்மின் அந்தரே விஷ்ணு:

உபயாத் மஹாத்யுதி: |

சங்க சக்ர கதாபாணி:

பீதிவாச ஜகத்பதி: ||

एतस्मिन् अन्तरे विष्णु: उपयात महाद्युति:।

शङ्ख चक्र गदा-पाणि: पीतवासा जगत्पति:।।

At this juncture, Vishnu the supreme of the world, highly effulgent and bearing conch, discus and mace in his hands and in yellow apparel appeared.

அந்த சமயத்தில், ப்ரம்ம தேவன், தேவர்கள், மகரிஷிகள் மத்தியில் லோகத்திற்கே நாதனான மஹாவிஷ்ணு பீதாம்பரம் அணிந்து, கையில் சங்கம், சக்ரம், கதையுடன் திவ்ய ரூபத்துடன் ப்ரத்யக்ஷமானார்.





ப்ரஹ்மணா ச சமாகம்ய

தத்ர தஸ்தொள சமாஹித: |

தம் அப்ருவன் சுரா: சர்வே

சமபிஷ்டூய சந்நதா: ||

ब्रह्मणा च समागम्य तत्र तस्थौ समाहित:।

तम् अब्रुवन् सुरास्सर्वे समभिष्टूय सन्नता:।।

Vishnu stayed there with a composed mind after meeting Brahma. Then thus spoke the devatas prostrated before Vishnu and paying him homage with hymns.

ப்ரம்ம தேவன் மற்றும் பலர் கூடி இருக்கும் இடத்தில் ப்ரத்யக்ஷமான பகவானை கண்டு, வேத கோஷங்களால் மரியாதை செய்து, தேவர்கள் பேச தொடங்கினர்.


த்வாம் நியோக்ஷ்யாமஹே விஷ்ணோ

லோகானாம் ஹித காம்யயா |

ராஞோ தசரதஸ்ய த்வம்

அயோத்யாதிபதே: ப்ரபோ: ||

தர்மஞஸ்ய வதான்யஸ்ய

மஹர்ஷி சம தேஜஸ: |

தஸ்ய பார்யாசு திஸ்ருஷு

ஹ்ரீ ஸ்ரீ கீர்த்யுபமாசு ச ||

விஷ்ணோ புத்ரத்வம் ஆகச்ச

க்ருத்வா ஆத்மானம் சதுர்விதம் |

त्वाम् नियोक्ष्यामहे विष्णो लोकानां हितकाम्यया।

राज्ञो दशरथस्य त्वम् अयोध्याधिपते: प्रभो:।।

धर्मज्ञस्य वदान्यस्य महर्षि सम तेजस: ।

तस्य भार्यासु तिसृषु ह्री श्री कीर्त्युपमासु च।।

विष्णो पुत्रत्वम् आगच्छ कृत्वा आत्मानं चतुर्विधम्।

Bhagavan! we pray for the welfare of all the worlds. The sovereign of Ayodhya, king Dasaratha is a righteous, virtuous and generous king equal with rishis in lusture. We Pray form you, to incarnate as four sons of his three wives, resembling hri (modesty), shree (auspiciousness), kirti (fame).

ப்ரபோ! நாங்கள் உலக நன்மைக்காக உங்களை வேண்டுகிறோம். தர்மம் தெரிந்த, சத்தியம் மீறாத, தானத்தில் சிறந்த, மகரிஷிக்கு நிகரான தேஜஸை கொண்ட அயோத்தி மன்னர் தசரதர் இருக்கிறார். தாங்கள் அவருக்கு புத்திரனாக அவதரிக்க வேண்டும். நீங்கள் நான்கு அம்சத்துடன் தசரதரின் 3 மனைவிகளுக்கும் அவதரிக்க வேண்டும்.


தத்ர த்வம் மானுஷோ பூத்வா

ப்ரவ்ருத்தம் லோக கண்டகம் |

அவத்யம் தைவதை: விஷ்ணோ

சமரே ஜஹி ராவணம் ||

तत्र त्वं मानुषो भूत्वा प्रवृद्धं लोक कण्टकम्।

अवध्यं दैवतै: विष्णो समरे जहि रावणम्।।

Vishnu Bhagavan! By Assuring human form, please kill Ravana in the battle. He has become a source of torment to the worlds and is invincible by gods.

ப்ரபோ! நீங்கள் மனிதனை போல அவதரித்து, ராவணனை போரிட்டு வதம் செய்ய வேண்டும். உலகத்தில் ஏற்படும் பல துன்பங்களுக்கு காரணமாக, ராவணன் இருக்கிறான். அவனை எவராலும் எதிர்க்க முடியவில்லை. ஜெயிக்க முடியாதவனாக இருக்கிறான்.





ச ஹி தேவாம் ச கந்தர்வான்

சித்தாம் ச முனி சத்தமான் |

ராக்ஷஸோ ராவணோ மூர்கோ

வீர்யோத்ச ஏகேன பாததே ||

स हि देवांश्च गन्धर्वान् सिद्धांश्च मुनिसत्तमान्।

राक्षसो रावणो मूर्खो वीर्योत्सेकेन बाधते।।

That stupid rakshasa, Ravana, with his valor, is terrorising the devas, gandharvas, siddhas and great rishis.

அந்த மூர்க்க புத்தி கொண்ட ராவணன் தனக்கு கிடைத்த வரங்களை கொண்டு, தேவர்களையும், கந்தர்வர்களையும், சித்தர்களையும், ரிஷிகளையும் பயமுறுத்தி கொண்டு இருக்கிறான்.


ருஷய: ச ததஸ்தேன

கந்தர்வ: அப்சரஸ: ததா |

க்ரீடன்தோ நந்தன வனே

க்ரூரேன கில ஹிம்சிதா: ||

ऋषयश्च ततस्तेन गन्धर्वाप्सरस: तथा।

क्रीडन्तो नन्दन-वने क्रूरेण किल हिंसिता:।।

It is reported that a cruel rakshasa with his valor has tortured rishis, captured women of gandharvas and apsaras sporting in Nandana groves.

அது மட்டுமில்லாது, அந்த ராக்ஷஸன், தனக்கு உள்ள பலத்தால் ரிஷிகளை கொன்று, கந்தர்வ, அப்சர பெண்களையும் நந்தன வனத்திலிருந்து அபகரித்து தன் இஷ்டப்படி ஹிம்சித்து விட்டான். 


வதார்தம் வயம் ஆயாதா:

தஸ்ய வை முனிபி: சஹ |

சித்த கந்தர்வ யக்ஷா ச

தத: த்வாம் சரணம் கதா: ||

वधार्थं वयम् आयाता: तस्य वै मुनिभि: सह।

सिद्ध गन्धर्व यक्षाश्च ततस्त्वां शरणं गता:।।

We siddhas, gandharvas and yakshas along with ascetics, have hence come here to devise ways of his death. We take refuge in you.

நாங்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ரிஷிகள் என்று அனைவரும், அவனுடைய அழிவுக்கு வழி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அதற்காக நாங்கள் அனைவரும் உங்களை சரண் அடைகிறோம்.


த்வம் கதி: பரமா தேவ

சர்வேஷாம் ந: பரந்தப: |

வதாய தேவ சத்ரூணாம்

ந்ருனாம் லோகே மன: குரு ||

त्वं गति: परमा देव सर्वेषां न: परन्तप:।

वधाय देव शत्रूणां नृणां लोके मन: कुरु।।

Tormentor of enemies, O Vishnu ! you are the supreme, refuge for all of us. Resolve to be born in the world of men for the destruction of enemies of the gods (rakshasas)".

எதிரிகளை ஒழிப்பவரே! ப்ரபோ! நீங்களே பரமாத்மா! நாங்கள் உங்களை சரண் அடைகிறோம். தேவர்களுக்கு சத்ருவாக இருக்கும் இந்த ராக்ஷஸனை ஒழிக்க, நீங்கள் தயை கூர்ந்து மனிதனாக இந்த பூலோகத்தில் அவதரிக்க வேண்டும்." என்று பிரார்தித்தனர் 


ஏவமுக்தஸ்து தேவேசோ

விஷ்ணு: த்ரி-தச புங்கவ: |

பிதாமஹ புரோகான் தான்

சர்வலோக நமஸ்க்ருத: ||

அப்ரவீத் த்ரி-தசான் சர்வான்

சமேதான் தர்ம சம்ஹிதான் |

एवमुक्तस्तु देवेशो विष्णु: त्रिदशपुङ्गव:।

पितामह पुरोगान् तान् सर्वलोक नमस्कृत:।।

अब्रवीत् त्रिदशान् सर्वान् समेतान् धर्म संहितान् ।।

Vishnu, the lord of the celestials, foremost among the gods and bowed by all in the worlds, addressed the assembled devatas who were guided by the law of righteousness and were led by the grand sire, Brahma.

தேவர்களுக்கெல்லாம் தேவனான, தெய்வங்களுக்கெல்லாம் முதன்மையான, அனைத்து உலகமும் தலை வணங்கும், விஷ்ணு பகவான்,  அனைவருக்கும் பிதாமஹனான ப்ரம்ம தேவனை முன்னிட்டு அங்கு குழுமியிருந்த தேவர்களை பார்த்து பேசலானார்.

பயம் த்யஜத பத்ரம் வோ

ஹிதார்தம் யுதி ராவணம் |

சபுத்ர பௌத்ரம் சமாத்யம்

சமித்ரஞாதி பாந்தவம் ||

ஹத்வா க்ரூரம் துராத்மானம்

தேவர்ஷீனாம் பயாவஹம் |

தசவர்ஷ சஹஸ்ராணி

தசவர்ஷ சதானி ச |

வத்ஸ்யாமி மானுஷே லோகே

பாலயன் ப்ருத்வீம் இமாம் ||

भयं त्यजत भद्रं वो हितार्थम् युधि रावणम्।

सपुत्र-पौत्रं सामात्यं समित्रज्ञाति बान्धवम्।।

हत्वा क्रूरं दुरात्मानं देवर्षीणां भयावहम्।

दशवर्ष-सहस्राणि दशवर्ष-शतानि च।

वत्स्यामि मानुषे लोके पालयन् पृथिवीमिमाम्।।

"பயத்தை விடுங்கள். உங்களுடைய நலனுக்காக ராவணனை நானே போரில் சந்திக்க போகிறேன். தேவர்களையும், ரிஷிகளையும்  அச்சுறுத்தும் கொடியவனான ராவணனையும், அவனுக்கு துணை நிற்கும் அவன் பிள்ளைகள், பேரன்கள், மந்திரிகள், நண்பர்கள், உறவுகள் என்று அனைவரும் ஒரு சேர அழிக்கப்படுவார்கள். இந்த உலகத்தில் நானே மனித குலத்தில், மனிதனை போன்று அவதரிப்பேன். 11,100 வருடங்கள் (த்ரேதா யுகம்) இந்த பூலோகத்தில் நீண்ட காலம் மனிதனாக அவதரித்து வாழ்ந்து காட்ட போகிறேன்." என்று பகவான் அணுகிரஹம் செய்தார்.





ஏவம் தத்வா வரம் தேவோ

தேவானாம் விஷ்ணு: ஆத்மவான் |

மானுஷே சிந்தயாமாச

ஜன்ம பூமிம் அத ஆத்மன: ||

एवं दत्वा वरं देवो देवानां विष्णु: आत्मवान्।

मानुषे चिन्तयामास जन्मभूमिम् अथ आत्मन:।।

Vishnu, the supreme soul having given boon to devatas in this manner, reflected as to the place where he should take birth as a man in this world of men.

இப்படி பெரும் வரத்தை தேவர்களுக்கு அருளி விட்டு, பரமாத்மாவான விஷ்ணு பகவான், தேவர்கள் தான் மனிதனாக அவதரிக்க சொன்ன,  அயோத்தி நகரத்தை கடாக்ஷம் செய்தார்.


தத: பத்ம-பலாசாக்ஷ: க்ருத்வா

ஆத்மானம் சதுர்விதம் |

பிதரம் ரோசயாமாச

ததா தசரதம் ந்ருபம் ||

तत: पद्म-पलाशाक्ष: कृत्वा आत्मानं चतुर्विधम्।

पितरं रोचयामास तथा दशरथम् नृपम्।।

Thereafter, the Lord with eyes like the lotus petal was pleased to transform himself into four forms and to choose king Dasaratha as his father.

அயோத்தி நகரை கண்ட அந்த தாமரை கண்ணன், சத்தியத்தை தன் உயிராக கொண்ட தசரத மஹாராஜனுக்கு 4 மகன்களாக தானே அவதாரம் செய்ய பெரு மகிழ்ச்சியுடன் சங்கல்பித்தார்.


ததா தேவர்ஷி கந்தர்வா:

ச-ருத்ரா ச: அப்சரோ கனா: |

ஸ்துதிபி: திவ்ய ரூபாபி:

துஷ்டுவு: மது சூதனம் ||

तदा देवर्षि गन्धर्वा: स-रुद्रा: स: अप्सरो गणा:।

स्तुतिभि: दिव्य रूपाभि: तुष्टुवु: मधुसूदनम्।।

Then along with gandharvas, groups of apsaras, rishis, rudras and devatas sang in praise of the 'Lord Slayer of Madhu', with hymns of celestial beauty.

இப்படி பகவான் பேசிய பின், வேத மந்திரங்களால் அங்கு கூடி இருந்த கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ரிஷிகள், ருத்ரர்கள், மற்றும் அனைத்து தேவர்கள் ஸ்துதி செய்தனர்.


தம் உத்ததம் ராவணம்

உக்ர தேஜஸம்

ப்ரவ்ருத்த தர்பம்

த்ரி தசேஸ் வரத விஷம் |

வி-ராவணம் சாது

தபஸ்வி கண்டகம்

தபஸ்வினாம் உத்தர 

தம் பயாவஹம் ||

तम् उद्धतम् रावणम् उग्र-तेजसं

प्रवृद्ध दर्पं त्रि-दशेश्वरद् विषम्।

विरावणं साधु तपस्वि कण्टकं

तपस्विनाम् उद्धर तं भयावहम्।।

"Therefore, uproot that mighty Ravana possessing frightful prowess, inflamed pride, limitless insolence causing agony to the three worlds, a source of vexation to ascetics and a dreadful enemy of Indra.

மேலும் பகவானை பார்த்து, 'ப்ரபோ! வலிமைமிக்க இராவணன் பயமுறுத்தும் வலிமையுடன், திமிர் கொண்ட கர்வத்துடன், மூன்று உலகங்களுக்கு வேதனையை ஏற்படுத்தும் அவனுடைய வரம்பற்ற கொடுமையையும், சாதுக்களுக்கு தரும் வேதனையையும், இந்திரனின் எதிரியுமான வலிமைமிக்க ராவணனை நீங்கள் வேரறுக்க வேண்டும்."





தமேவ ஹத்வா சபலம் சபாந்தவம்

வி-ராவணம் வி-ராவணம் அஃர பௌருஷம் |

ஸ்வர் லோகம் ஆகச்ச கதஜ்வர: சிரம்

சுரேந்த்ர குப்தம் கததோஷ கல்மஷம் ||

तमेव हत्वा सबलं सबान्धवं

विरावणं विरावणम् अग्य्रपौरुषम्।

स्वर्लोकम् आगच्छ गतज्वर: चिरं

सुरेन्द्र गुप्तं गतदोष कल्मषम्।।

Kill Ravana, the cause of distress in the worlds. Kill his forces and relatives. Then return to heaven protected by Indra after freeing us from distress, faults and sins".

"உலகில் துயரத்திற்கு காரணமான ராவணனைக் கொன்று, அவனது படைகளையும் உறவினர்களையும் வதம் செய்யுங்கள். துன்பம், தவறுகள் மற்றும் பாவங்களிலிருந்து விடுபட்டு தேவர்கள் அனைவரும் இந்திரனால் பாதுகாக்கப்பட்ட சொர்க்கத்திற்கு திரும்பி வர அணுகிரஹம் செய்யுங்கள்"


ததோ நாராயணோ தேவோ

நியுக்த: சுர சத்தமை: |

ஜானன் அபி சுரான் ஏவம்

ஸ்லக்ஷ்ணம் வசனம் அப்ரவீத் ||

ततो नारायणो देवो नियुक्त: सुरसत्तमै:।

जानन्नपि सुरान् एवं श्लक्ष्णं वचनम् अब्रवीत्।|

Although Omniscient lord Narayana knew the means to be employed, when he was requested by the best of devatas he spoke to them softly:

அனைத்தும் தெரிந்தவராக இருந்தும், பகவான் நாராயணன், தேவர்களின் கருத்தை அறிவதற்காக மிருதுவாக பேச தொடங்கினார்...


உபாய: கோ வதே தஸ்ய

ராவணஸ்ய துராத்மன: |

யம் அஹம் தம் சம ஆஸ்தாய

நிஹன்யாம் ரிஷி கண்டகம் ||

उपाय: को वधे तस्य रावणस्य दुरात्मन:।

यम् अहं तं सम आस्थाय निहन्याम् ऋषिकण्टकम्।।

What strategies should be adopted in the matter of destruction of that evil minded Ravana who is a thorn to the sages?".

"சாதுக்களை ஹிம்சை செய்யும் அந்த ராவணனை ஒழிக்க எந்த வழியை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

என்று ஸ்ரீமந் நாராயணன் கேட்டார்..


ஏவமுக்தா: சுரா: சர்வே

ப்ரத்யூசு: விஷ்ணும் அவ்யயம் |

மானுஷீம் தனும் ஆஸ்தாய

ராவணம் ஜஹி சம்யுகே ||

एवमुक्ता: सुरा: सर्वे प्रत्यूचु: विष्णुमव्ययम्।

मानुषीं तनुम् आस्थाय रावणं जहि संयुगे।।

When the devatas were thus addressed by the imperishable Vishnu, they replied him saying, "You may assume the form of a human being and slay Ravana in the battle".

இப்படி தங்களிடம் உபாயம் என்ன? என்று அழிக்க முடியாத விஷ்ணு பகவானே கேட்க, உடனே பதில் சொல்ல தொடங்கினார்கள்...




'ப்ரபோ! நீங்கள் மனித அவதாரம் எடுத்து கொள்ளுங்கள். பிறகு, போர் களத்தில் ராவணனை சந்தித்து, அவனை ஒழித்து கட்டுங்கள்"


ச ஹி தேபே தப: தீவ்ரம்

தீர்க காலம் அரிந்தம் |

ஏனே துஷ்ட: அபவத்

ப்ரஹ்ம லோகக்ருத் லோக பூர்வஜ: ||

स हि तेपे तप: तीव्रम् दीर्घकालम् अरिन्दम ।

येन तुष्ट:अभवत् ब्रह्मा लोककृत् लोकपूर्वज:।।

Lord Brahma was very pleased with Ravana's intense penance over a long time

ராவணன் பல காலம் செய்த கடும் தவத்தை கண்டு, பெருமகிழ்ச்சி அடைந்தார் ப்ரம்ம தேவன்.  


சந்துஷ்ட: ப்ரததோ தஸ்மை

ராக்ஷஸாய வரம் ப்ரபு: |

நாநா விதேப்யோ பூதேப்யோ

பயம் நான்யத்ர மானுஷாத் ||

அவஞாதா: புரா தேன

வரதானே ஹி மானவா: |

सन्तुष्ट: प्रददौ तस्मै राक्षसाय वरं प्रभु:।

नानाविधेभ्यो भूतेभ्यो भयं नान्यत्र मानुषात्।।

अवज्ञाता: पुरा तेन वरदाने हि मानवा:।

Pleased, with the rakshasa, Brahma granted a boon to the effect that except from men, there was, for him, no fear of death from any other living beings. Ravana ignored men while seeking the boon.

தவத்தை கண்டு பெரிதும் மகிழ்ந்த ப்ரம்ம தேவன், 'மனிதர்களை தவிர எவராலும் ராவணனை அழிக்க முடியாது' என்ற வரத்தை கொடுத்து விட்டார்.


ஏவம் பிதாமஹாத் தஸ்மாத்

வரம் ப்ராப்ய ச தர்பித: |

உத்ஸாதயதி லோகான்

த்ரீன் ஸ்திரிய: ச அபகர்சதி: |

தஸ்மாத் தஸ்ய வதோ த்ருஷ்டோ

மானுஷேப்ய: பரந்தப ||

एवं पितामहात् तस्माद् वरं प्राप्य स दर्पित:।

उत्सादयति लोकान् त्रीन् स्त्रिय: च अपि अपकर्षति ।

तस्मात् तस्य वधो दृष्टो मानुषेभ्य: परन्तप।।

Having obtained the boon from Brahma, ravana's greed and arrogant went on and on, and  brought destruction to the three worlds. He carried away women by violence. O destroyer of foes! his death is possible by men only."

ப்ரம்ம தேவனிடம் வரம் வாங்கிய பின், ராவணனின் பேராசையும், கர்வமும் தலை தூக்கியது. அதன் விளைவாக மூன்று உலகங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பலாத்காரம் செய்து பெண்களை தூக்கி சென்று விட்டான். அவன் மரணத்தை மனிதனே நிச்சயிக்க முடியும்" என்றனர் தேவர்கள்.


இதி ஏதத் வசனம் ஸ்ருத்வா

சுரானாம் விஷ்ணு: ஆத்மவான் |

பிதரம் ரோசயாமாச

ததா தசரதம் ந்ருபம் ||

इति एतत् वचनं श्रुत्वा सुराणां विष्णु: आत्मवान्।

पितरं रोचयामास तदा दशरथं नृपम्।।

Having heard the words of devatas, self possessed Vishnu, chose king Dasaratha as his father.

இப்படி தேவர்கள் பெருமாளிடம் பிரார்த்தனை செய்ததும், தனக்கு ஏற்ற தந்தையாக தசரத மஹாராஜனை தேர்ந்தெடுத்தார் மஹாவிஷ்ணு.


ச சாப்யபுத்ரோ ந்ருபதி:

தஸ்மின் காலே மஹாத்யுதி: |

அஜயத் புத்ரியாம் இஷ்டம்

புத்ரேப்சு அரிசூதன: ||

स चाप्यपुत्रो नृपति: तस्मिन् काले महाद्युति:।

अयजत् पुत्रियाम् इष्टिम् पुत्रेप्सु अरिसूदन:।।

At that time, the brilliant king (Dasaratha), destroyer of enemies, who had no sons was performing a sacrifice for sons.

அந்த சமயத்தில், பிள்ளை இல்லாத சத்யசந்தனான தசரதர் "தனக்கு மகன் வேண்டும்" என்று புத்ர காமேஷ்டி யாகம் செய்து கொண்டிருந்தார்...


ச க்ருத்வா நிஸ்சயம் விஷ்ணு:

ஆமன்த்ர்ய ச பிதாமஹம் |

அந்தர்தானம் கதோ தேவை:

பூஜ்யமானோ மஹர்ஷிபி: ||

स कृत्वा निश्चयं विष्णु: आमन्त्र्य च पितामहम्।

अन्तर्धानं गतो देवै: पूज्यमानो महर्षिभि:।।

After Vishnu had decided (to incarnate) and he was worshipped by devatas and maharshis. Finally he disappeared bidding farewell to Brahma.

இப்படி விஷ்ணு அவதரிக்க சங்கல்பம் செய்த பிறகு, தேவர்களும், மஹரிஷிகளும் பெருமாளை மங்களாசாசனம் செய்து நமஸ்கரித்தனர். பிறகு, மஹாவிஷ்ணு ப்ரம்ம தேவனிடம் விடைபெற்று மறைந்தார்.


புத்ரம் து கதே விஷ்ணோ

ராஞ: தஸ்ய சு-மஹாத்மன: |

உவாச தேவதா: சர்வா:

ஸ்வயம்பு பகவான் இதம் ||

पुत्रत्वं तु गते विष्णौ राज्ञस्तस्य सुमहात्मन:।

उवाच देवता: सर्वा: स्वयम्भू भगवान् इदम् ।।

When Vishnu had decided to be born as the son of that great king (Dasaratha), the selfborn Lord (Brahma), addressed all devatas.

மஹாவிஷ்ணு தசரத மஹாராஜனுக்கு மகனாக பிறக்க போகிறார் என்றதும், ப்ரம்ம தேவன், 33 கோடி தேவர்களையும் பார்த்து பேசலானார்.. 

சத்ய சந்தஸ்ய வீரஸ்ய

சர்வேஷாம் ந: ஹிதைஷிந: |

விஷ்ணோ: சஹாயான் பலின:

ஸ்ருத்வம் காம ரூபிண: ||

सत्य-सन्धस्य वीरस्य सर्वेषाम् नः हितैषिण:।

विष्णो: सहायान् बलिन: सृजध्वं कामरूपिण:।।

Create strong and powerful beings, capable of assuming forms at free will, to extend support to vishnu, who is true to his word, heroic and benevolent. 

"இந்திராதி தேவர்களே! கொடுத்த வாக்கை மீறாத கதாநாயகன், அணுகிரஹம் செய்யும்  மஹாவிஷ்ணுவுக்கு, சேவை செய்யும் பாக்கியம் உங்களுக்கு வந்து இருக்கிறது. நீங்கள் அனைவரும் உங்கள் அபரிமிதமான சக்திகளுடனேயே மஹாபலத்துடன், எந்த ரூபமும் ஏற்று கொள்ளும் சக்தியுடனும் பூலோகத்தில் அவதரியுங்கள்."


மாயாவித: ச சுராம் ச

வாயு வேக சமான் ஜவே |

நயஞான் புத்தி சம்பண்ணான்

விஷ்ணு துல்ய பராக்ரமான் ||

அசம்ஹார்யான் உபாயஞான்

திவ்ய சம்ஹன நான்விதான் |

சர்வாஸ்த்ர குண சம்பண்ணான்

அம்ருத ப்ராஸனான் இவ ||

அப்சரஸ்சு ச முக்யாசு

கந்தர்வானாம் தனூஷு ச |

ஸ்ருஜத்வம் ஹரி ரூபேன

புத்ராம் துல்ய பராக்ரமான் ||

मायाविदश्च शूरांश्च वायुवेगसमान् जवे।

नयज्ञान् बुद्धि सम्पन्नान् विष्णु-तुल्य पराक्रमान्।।

असंहार्यान् उपायज्ञान् दिव्य संहन नान्वितान्।

सर्वास्त्र गुणसम्पन्नान् अमृतप्राशनानिव।।

अप्सरस्सु च मुख्यासु गन्धर्वाणां तनूषु च ।

सृजध्वं हरिरूपेण पुत्रांस्तुल्य पराक्रमान्।।

Incarnate as monkeys in the womb of chiefs of apsarasas and gandharvas. Create sons who have the knowledge of deceitful tricks, who are brave, who match wind in speed, who are endowed with intellect and statecraft, who are determined, who are knowledgeable in various means of achieving victory, who are supernatural bodies, who possess capability of employing and resisting weapons, who resemble those who subsist on amrita (immortals) and are equal (to Visnu) in prowess.

அப்சரஸ், கந்தர்வ ஸ்த்ரீகளின் கர்ப்பத்தில் வானரர்களாக அவதரியுங்கள். உங்கள் அம்சமாகவே வானரர்களை மகா புத்திசாலிதனத்துடன், மஹா பலத்துடன், காற்றை போன்ற வேகத்தில் செல்பவர்களாகவும், தந்திரம் அறிந்தவர்களாகவும், செய்யும் காரியத்தில் உறுதி உள்ளவர்களாகவும், வெற்றியை அடைய பல யுக்திகளை அறிந்தவர்களாகவும், வைரம் போன்ற உறுதியான தேகம் உள்ளவர்களாகவும், பல வித ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்தவர்களாகவும், அதை எதிரிகள் பயன்படுத்தினால் தடுக்கும் வல்லமை உள்ளவர்களாகவும், பார்ப்பதற்கு அழிக்க முடியாதவர்கள் போலவும், விஷ்ணுவுக்கு சமமான பலம் கொண்டவர்கள் போலவும் வானரர்களை ஸ்ருஷ்டி செய்யுங்கள்.


பூர்வமேவ மயா ஸ்ருஷ்டோ

ஜாம்பவான் ருக்ஷ புங்கவ: |

ஜ்ரும்ப மானஸ்ய சஹஸா

மம வக்த்ராத் அஜாயத ||

पूर्वमेव मया सृष्टो जाम्बवान् ऋक्षपुङ्गव:।

जृम्भमाणस्य सहसा मम वक्त्रात् अजायत।।

Earlier Jambavan, the foremost among bears suddenly emerged out of my face while I was yawning. Let him also participate.

ஒரு சமயம், சத்ய லோகத்தில் நான் வாயை திறந்த போது, ஸ்வயம்புவாக கரடி ரூபத்தில் ஜாம்பவான் வெளிப்பட்டார். அனைவரும் இந்த கைங்கர்யத்தில் ஈடுபடுங்கள்." என்று ப்ரம்ம தேவன் உற்சாகப்படுத்தினார்.


தே ததா உக்தா பகவதா

தத் ப்ரதிஸ்ருத்ய சாஸனம் |

ஜனயாமாசு: ஏவம் தே

புத்ரான் வானர ரூபிண: ||

ते तदा उक्ता भगवता तत् प्रतिश्रुत्य शासनम्।

जनयामासु: एवं ते पुत्रान् वानर रूपिण:।।

Instructed by Brahma in that manner, all of them gave birth to sons in the form of monkeys.

ப்ரம்ம தேவன் இப்படி சொன்ன அறிவுரையை கேட்டு, அனைவரும் வானரர்களாக அவதரித்து விட்டனர்.


ருஷய: ச மஹாத்மான:

சித்த வித்யாதர உரகா: |

சாரனா: ச சுதான் வீரான்

சஸ்ருஜு: வனசாரிந: ||

ऋषयश्च महात्मान: सिद्ध विद्या धरोरगा:।

चारणाश्च सुतान् वीरान् ससृजु: वनचारिण:।।

Distinguished rishis, siddhaas, vidhyadharaas, uragaas, charanaas procreated (in the form of monkeys) heroic sons who became forest dwellers.

ரிஷிகள், சித்தர்கள், வித்யாதரர்கள், உரகர்கள், சாரனர்கள் என்று அனைவருமே கைங்கர்யம் செய்யும் உற்சாகத்தில் வனத்தில் சஞ்சரிக்கும் வணரர்களாக அவதரித்து விட்டனர்.


வானரேந்த்ரம் மஹேந்த்ராபம்

இந்த்ரோ வாலினம் ஊர்ஜிதம் |

சுக்ரீவம் ஜனயாமாச

தபன: தபதாம் வர: ||

वानरेन्द्रं महेन्द्राभम् इन्द्रो वालिनम् ऊर्जितम्।

सुग्रीवं जनयामास तपन: तपतां वर:।।

Indra gave birth to Vali, chief of monkeys resembling Mahendra mountain and having a mighty body. Sun, great among those producing heat, begot Sugriva.

மஹேந்திர மலை போன்ற ரூபத்துடன் வாலி என்ற பெயரில், வானர தலைவனாக சாக்ஷாத் இந்திர தேவனே அவதரித்தார். சுட்டெரிக்கும் சூரிய தேவனே சுக்ரீவனாக அவதரித்து விட்டார்.


ப்ருஹஸ்பதி: ச அஜனயத்

தாரம் நாம மஹாஹரிம் |

சர்வ வானர முக்யானம்

புத்திமந்தம் அனுத்தமம் ||

बृहस्पतिस्तु अजनयत् तारं नाम महाहरिम्।

सर्व वानर मुख्यानां बुद्धिमन्तम् अनुत्तमम्।।

Brihaspati begot the intelligent monkey Tara who had none to surpass him among the monkey chiefs.

தேவர்களின் குரு ப்ருஹஸ்பதி, மஹா புத்திசாலியான தாரனாக, வானர்களில் முக்கிய மந்திரியாக அவதரித்து விட்டார்.


தனதஸ்ய சுத: ஸ்ரீமான்

வானரோ கந்தமாதன: |

விஸ்வ கர்மா அஜனயத்

நலம் நாம மஹாஹரிம் ||

धनदस्य सुत: श्रीमान् वानरो गन्धमादन:।

विश्वकर्मा अजनयत् नलं नाम महाहरिम्।।

Kubera begot glorious Gandhamadana and Viswakarma begot a great monkey Nala.

யக்ஷர்களின் தலைவன் குபேரனே கந்தமாதனாக அவதரித்தார்.

தேவ தச்சன் விஸ்வகர்மாவே நலனாக அவதரித்தார்.


பாவகஸ்ய சுத: ஸ்ரீமான

நீல: அக்னி சத்ருஸ ப்ரப: |

தேஜஸா யக்ஷஸா வீரயாத்

அத்ய: இச்யத வானரான் ||

पावकस्य सुत: श्रीमान् नील: अग्नि सदृशप्रभ:।

तेजसा यशसा वीर्यात् अत्यरिच्यत वानरान्।।

Neela, the prosperous son of Agni the firegod who equalled him in glow surpassed other monkeys in energy, renown and prowess.

அக்னி தேவனே நீலனாக மஹா ஒளியுடன் அவதரித்து விட்டார். மற்ற வானரர்களை காட்டிலும் பொலிவும், புகழும், வீரமும் மிக்க காணப்பட்டார்.


ரூப த்ரவின சம்பண்ணௌ

அஸ்வினி ரூப சம்பண்ணௌ |

மைந்தம் ச த்விவிதம் சைவ

ஜனயாமாச து: ஸ்வயம் ||

रूप द्रविण सम्पन्नौ अश्विनौ रूपसम्मतौ।

मैन्दं च द्विविदं चैव जनयामासतु: स्वयम्।।

Aswini devatas, endowed with wealth and beauty, procreated Mainda and Dwivida who were highly esteemed for their beauty.

தேவ மருத்துவர்களான அஸ்வினி  தேவர்களே மைந்தன், த்விவிதன் என்ற பேரழகு கொண்ட வானரர்களாக அவதரித்தனர். 


வருணோ ஜனயாமாச

சுஷேனாம் வானரர்ஷபம் |

சரபம் ஜனயாமாச

பர்ஜன்ய: து மஹாபலம் ||

वरुणो जनयामास सुषेणं वानरर्षभम्।

शरभं जनयामास पर्जन्यस्तु महाबलम्।।

Varuna begot the monkey warrior Sushena and Parjanya, Sarabha of great strength.

சுஷேனன் என்ற பலம் பொருந்திய போர் வீரனாக, வானர ரூபத்துடன் வருண தேவனே அவதரித்தார். மஹா சக்தியுடன் கூடிய பர்ஜன்யன் என்ற வானரானாக சரப தேவனே அவதரித்தார்.


மாருதஸ்ய ஆத்மஜ: ஸ்ரீமான்

ஹனுமான் நாம வீர்யாவான் |

வ்ரஜ சம்ஹன னோபேதோ

வைநதேய சமோ ஜவே ||

मारुतस्य आत्मज: श्रीमान् हनुमान् नाम वीर्यवान् ।

वज्रसंहननोपेतो वैनतेय समो जवे।।

Vayu, the windgod, begot a son named Hanuman, mighty and graceful, having a body as hard as a diamond and speed equal to Garuda's.

வாயு தேவனே பலத்திலும், வைரம் போன்ற உறுதியான உடலுடன், கருடனின் வேகத்தில் பறக்கும் திறனுடன் ஹனுமானாக அவதரித்தார்.

தே ஸ்ருஷ்டா பஹு சாஹசா

தசக்ரீவ வதே ரதா: |

அப்ரமேய பலா வீரா

விக்ராந்தா: காம ரூபிண: ||

ते सृष्टा बहुसाहस्रा दशग्रीववधे रता:।

अप्रमेय बला वीरा विक्रान्ता: कामरूपिण:।।

Thousands of warriors possessing immeasurable strength and courage and capable of assuming any form at will were created to kill Ravana.

இப்படி ஆயிரக்கணக்கான போர் குணம் கொண்ட, எல்லையில்லா பலம் கொண்ட, எல்லையில்லா தைரியம் கொண்ட, எந்த ரூபத்திலும் வருவதற்கு சக்தி படைத்த வானரர்களாக, ராவணனை கொல்லும் நோக்கத்துடன் பூலோகத்தில் அவதரித்து விட்டனர்.


மேரு மந்தர சங்காசா

வபு: மந்தோ மஹாபலா: |

ருக்ஷ வானர கோபுச்சா:

க்ஷிப்ரமேவ அபிஜஞிரே ||

मेरु मन्दर सङ्काशा वपुष्मन्तो महाबला:।

ऋक्ष वानर गोपुच्छा: क्षिप्रमेव अभिजज्ञिरे।।

Endowed with bodies similar to the Meru and Mandara mountains and having great strength, bears, monkeys, monkeys with cowtails quickly came into being.

இப்படி மேரு மலை போலவும், மந்தர மலை போலவும் உருவத்தை எடுத்து கொண்டு, மஹா பலத்துடன், வானரர்களாகவும், கரடிகளாகவும், வானர ரூபத்தில் பசுவின் வால் உள்ள வானரர்களாகவும் வேகவேகமாக பூலோகத்தில் அவதரித்து விட்டனர்.


யஸ்ய தேவஸ்ய யத் ரூபம்

விஷோ ய: ச பராக்ரம: |

அஜாயத சம: தேன

தஸ்ய தஸ்ய சுத: ப்ருதக் ||

यस्य देवस्य यद् रूपं वेषो यश्च पराक्रम:।

अजायत समस्तेन तस्य तस्य सुत: पृथक्।।

The sons of devatas retained characteristics like beauty, form and prowess of their procreator (gods).

இப்படி வானரர்களாக அவதரித்தாலும், அந்தந்த தேவதையின் அழகும், புகழ், பராக்ரமத்துடனேயே பூலோகத்தில் அவதரித்தனர்.


கோலாங்க கூலேஷு உத்பண்ணா:

கேசித் சம்மத விக்ரமா: |

ருக்ஷீஷு ச ததா ஜாதா

வானரா: கிண்ணரீஷு ச ||

गोलाङ् गूलीषु च उत्पन्ना: केचित् सम्मत विक्रमा:।

ऋक्षीषु च तथा जाता वानरा: किन्नरीषु च।।

Some monkeys with acknowledged, valour were born to female monkeys with tails Similarly some other monkeys were born to female bears and female kinnaras.

ஒவ்வொருவர் சம்மதத்துடன், சிலர் வானரர்களாக அவதரித்து இருக்கும் பெண் வானரர்களுக்கு பிள்ளையாக அவதரித்தனர்.

சிலர் கரடிகளாக அவதரித்து இருக்கும் பெண்களுக்கு பிள்ளையாக அவதரித்தனர்.

சிலர் கிண்ணரர்களாக அவதரித்து இருக்கும் பெண் கிண்ணரர்களுக்கு பிள்ளையாக அவதரித்தனர்.


தேவா மஹர்ஷி கந்தர்வா:

தார்க்ஷ்யா யக்ஷா யக்ஷஸ்வின: |

நாகா: கிம்புருஷா: ச ஏவ

சித்த வித்யாதர: உரகா: ||

பஹவோ ஜனயாமாசு

ஹ்ருஷ்டா த்தர சஹஸ்ரச: |

வானரான் சுமஹா காயான்

சர்வான்வை வன சாரின: |

அப்சரஸ்சு ச முக்யாசு

ததா வித்யாதரீஷு ச |

நாக கன்யாசு ச ததா

கந்தர்வீனாம் தனூஷு ச ||

देवा महर्षि गन्धर्वा: तार्क्ष्या यक्षा यशस्विन:।

नागा: किम्-पुरुषाश्चैव सिद्ध विद्याधर: उरगा:।।

बहवो जनयामासु हृष्टा तत्र सहस्रश:।

वानरान् सुमहाकायान् सर्वान्वै वनचारिण:।।

अप्सरस्सु च मुख्यासु तथा विद्याधरीषु च।

नागकन्यासु च तथा गन्धर्वीणां तनूषु च ||

The devatas, rishis, gandharvas, garudas, yakshas, kimpurushas, siddhas, vidyadharas, uragas and many others were immensely pleased. Thousands of gigantic monkeys wandering in forests were procreated from principal apsarasas vidhyadaris, nagas, and gandharvas.

தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், கருடர்கள், யக்ஷர்கள், கிம்புருஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், உரகர்கள் மேலும் பலர் பெரும் உற்சாகத்துடன் சேவை செய்ய தயாராக இருந்தனர். அப்சர, வித்யாதர, நாக, கந்தர்வ பெண்களின் வயிற்றில் அவதரித்த இவர்கள் பூலோகத்தில் உள்ள வனம் முழுவதும் வானரர்களாக அவதரித்து அலைந்து கொண்டு இருந்தனர்.


காம ரூப பலோபேதா

யதா காமம் விசாரிண: |

சிம்ஹ சார்தூல சத்ருஷா

தர்பேந ச பலேன ச ||

कामरूप बलोपेता यथाकामं विचारिण:।

सिंह शार्दूल सदृशा दर्पेण च बलेन च।।

They were endowed with the powers to assume any form at will. They possessed enormous strength and power to freely wander in forests. They were like lions and tigers in pride and prowess.

இப்படி வானர ரூபத்துடன் அலைந்து கொண்டிருந்த இவர்கள் தங்கள் சக்தியால் எந்த ரூபத்திலும் வர கூடியவர்களாக இருந்தனர். மஹாபலத்துடன் இருக்கும் இவர்கள் சுதந்திரமாக வனத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தனர். வனத்தில் சிங்கத்தை போன்றும், புலியை போன்றும் பலத்திலும், சாமர்த்தியத்திலும் இருந்தனர் இவர்கள்.


சிலா ப்ரஹரணா: சர்வே

சர்வே பாதபயோ தின: |

நக தம்ஷ்ட்ர ஆயதா: சர்வே

சர்வே அஸ்த்ர கோவிதா: || 

शिला प्रहरणा: सर्वे सर्वे पादपयोधिन:।

नख दंष्ट्र आयुधा: सर्वे सर्वे सर्व अस्त्र कोविदा:।|

They all could strike with rocks, use nails and teeth and trees as weapons. They were skilled in the use of all kinds of weapons.

இவர்கள் அனைவரும் பெரிய பெரிய பாறைகளை தூக்கி எறியும் மஹாபலத்துடன்,  தங்கள் நகத்தையும், பற்களையும் ஆயுதமாக கொண்டு தாக்கும் பலத்துடன், மரங்களை வேரோடு பிடுங்கி ஆயுதமாக சண்டை செய்யும் பலத்துடன், அனைத்து வித ஆயுதங்களையும் பயன்படுத்தும் திறனுடன் இருந்தனர்.

விசாலயேயு சைலேந்த்ரான்

பேதயேயு: ஸ்திரான் த்ருமான் |

க்ஷோபயேயு: ச வேகேன

சமுத்ரம் சரிதாம் பதிம் ||

विचालयेयु शैलेन्द्रान् भेदयेयु: स्थिरान् द्रुमान्।

क्षोभयेयुश्च वेगेन समुद्रं सरितां पतिम्।।

They could shake mountains and uproot deeprooted trees. With their speed they could cause disturbance to Samudra, the lord of the rivers.

பெரிய பெரிய மலைகளை அசைக்கும் சக்தியும், மரங்களை வேரோடு பிடுங்கி எரியும் பலமும் கொண்டிருந்தனர். சமுத்திரமே நிலைகொள்ளாமல் அலை பாயும் படி அவர்கள் வேகம் இருந்தது.


தாரயேயு: க்ஷிதிம் பத்ப்யாம்

ஆப்லவேயு: மஹார்நவம் |

நப: ஸ்தலம் விசேயு: ச

க்ருஹ்னீயு: அபி தோயதான் ||

दारयेयु: क्षितिं पद्भ्याम् आप्लवेयु: महार्णवम्।

नभ:स्थलम् विशेयुश्च गृह्णीयु: अपि तोयदान्।।

They could cause cleavage to this earth with their feet, cross the mighty ocean with one leap and enter the sky and even seize the clouds.

தங்கள் கால் தடத்தாலேயே பூமியில் பெரும் பள்ளங்களை உருவாக்கும் பலம் கொண்டிருந்தனர். கடலை ஒரு குதியில் கடந்து விடும் சக்தி கொண்டிருந்தனர். வானத்தை நோக்கி தாவி, மேகத்தை தொட்டு விடும் பலம் கொண்டிருந்தனர்.


க்ருஹ்னீயு: அபி மாதங்கான்

மத்தான் ப்ரவ்ரஜதோ வனே |

நர்தமானா: ச நாதேன

பாதயேயு: விஹங்கமான் ||

गृह्णीयु: अपि मातङ्गान् मत्तान् प्रव्रजतो वने।

नर्दमानाश्च नादेन पातयेयु: विहङ्गमान्।।

They could capture wild elephants residing in the forest and make the flying birds drop down screaming.

காட்டில் அலையும் காட்டு யானைகளை அடக்கும் சக்தியும், பறந்து செல்லும் பறவைகளை தாவி பிடித்து, கீழே விழ செய்து அலறச் செய்யும் பராக்கிரமும் கொண்டிருந்தனர். 

ஈத்ருசானாம் ப்ரசூதானி

ஹரீநாம் காம ரூபினாம் |

சதம் சத சஹஸ்ரானி

யூதபானாம் மஹாத்மனாம் ||

ईदृशानां प्रसूतानि हरीणां कामरूपिणाम्।

शतं शत सहस्राणि यूथपानां महात्मनाम्।।

A crore of monkeys capable of assuming any form at will, great monkeys and commanders of monkey forces were created.

இப்படி எந்த ரூபத்தையும் எடுத்து கொள்ளும் திறனுடன், போர் குணம் கொண்ட கோடிக்கணக்கான வானரர்கள் உருவாகி பூலோகம் முழுவதும் வனங்களில் சஞ்சரித்து கொண்டு இருந்தனர்.


தே ப்ரதானேஷு யூதேஷு

ஹரீனாம் ஹரி யூதபா: |

பபூவு: யூதப ஸ்ரேஷ்டா

வீரான் ச அஜநயன் ஹரீன் ||

ते प्रधानेषु यूथेषु हरीणां हरियूथपा:।

बभूवु: यूथपश्रेष्ठा वीरान् च अजनयन् हरीन्।।

Those monkey commanders created heroic monkeys among the chief monkey clans who later proved the best among clanleaders.

இப்படி உருவான வானரர்கள் பல பிரிவுகளாக தங்கள் தங்கள் படைகளை தயார் செய்து கொண்டு, ஒவ்வொரு படைக்கும் ஒரு படைத்தளபதியை வைத்து இருந்தனர்.


அன்யே ருக்ஷவத: ப்ரஸ்தான்

அவதஸ்து: சஹஸ்ரச: |

அன்யே நானாவிதான் சைலான்

பேஜிரே கானநானி ச ||

अन्ये ऋक्षवत: प्रस्थान् अवतस्थु: सहस्रश:।

अन्ये नानाविधान् शैलान् भेजिरे काननानि च।।

Thousands of monkeys dwelt on the plateaus on the top of mountains abounding in bears. Some others inhabited various hills and forests.

ஆயிரக்கணக்கான வானரர்கள் கரடிகள் வாழும் மலை உச்சியில் சேர்ந்து வாழ்ந்தனர். சிலர் மலையிலும், காட்டிலும் வாழ்ந்து வந்தனர்.


சூர்ய புத்ரம் ச சுக்ரீவம்

சக்ர புத்ரம் ச வாலினம் |

ப்ராதரௌ உபதஸ்து: தே

சர்வ ஏவ ஹரீஸ்வரா: ||

நலம் நீலம் ஹனுமந்தம்

அன்யா: ச ஹரியூதபான் ||

सूर्यपुत्रं च सुग्रीवं शक्रपुत्रं च वालिनम्।

भ्रातरौ उपतस्थुस्ते सर्व एव हरीश्वरा:।।

नलं नीलं हनूमन्तम् अन्यांश्च हरियूथपान्।

All those leaders, Nala, Neela, Hanuman and others dwelt near those two brothers Sugriva, the offspring of Surya and Vali, the son of Indra.

நலன், நீலன், ஹனுமான் மற்றும் பல வானர தலைவர்கள், சகோதரர்களாக அவதரித்த வாலி, மற்றும் சுக்ரீவனோடு வசித்து வந்தனர் 


தே தார்க்ஷ்ய பல சம்பண்ணா:

சர்வே யுத்த விசாரதா: |

விசரந்தோ அர்தயன் தர்பாத்

சிம்ஹ வ்யாக்ர மஹோரகான் ||

ते तार्क्ष्य बल सम्पन्ना: सर्वे युद्ध विशारदा:।

विचरन्तो अर्दयन् दर्पात् सिंह व्याघ्र महोरगान्।।

Endowed with the might of Garuda and well versed in warfare, all of them moving around tormented ferouious lions, tigers and mighty serpents.

கருடனை போன்று பறந்து கொண்டும், போரில் வல்லமை உடையவர்களாகவும் அலைந்து கொண்டிருந்த இவர்களை கண்டு, சிங்கமும், புலியும், பாம்புகளும் நடு நடுங்கின.


தாம் ச சர்வான் மஹாபாஹு:

வாலி விபுல விக்ரம: |

ஜூகோப புஜ வீர்யேந

ருக்ஷ கோபுச்ச்ச வானரான் ||

तांश्च सर्वान् महाबाहु: वाली विपुल विक्रम:।

जुगोप भुजवीर्येण ऋक्ष गोपुच्छ वानरान्।।

Mighty armed leader Vali endowed with immense prowess protected, with his strong arms all those bears, gopuchhas(cowtailed) and monkeys.

கரடிகளாகவும், மாட்டின் வால் கொண்ட வானரர்களாகவும், வானரர்களாகவும் இருந்த இவர்கள் அனைவரையும், மஹாபலம் கொண்ட, தேவேந்திரனின் அம்சமான வாலி காத்து வந்தான்.


தைரியம் ப்ருத்வீ சூரை:

சபர்வத வனார்நவா |

கீர்ணா விவித சம்ஸ்தானை:

நாநா வ்யஜ்ஜன லக்ஷனை: ||

तैरियं पृथिवी शूरै: सपर्वत वनार्णवा।

कीर्णा विविध संस्थानै: नाना व्यञ्जन लक्षणै:।।

Born in many forms wih various characteristics (relating to the body and tribe), they pervaded this earth with its mountains, forests and seas.

இப்படி பல வித குணத்துடன், பல வித ரூபத்துடன், பல வித உருவங்களில் உலகத்தில் உள்ள அனைத்து மலைகள், காடுகள், கடற்கரைகளில் அவதரித்து விட்டனர் தேவர்கள்.


தை: மேக ப்ருந்தாசல கூடகல்பை:

மஹாபலை: வானர யூதபாலை: |

பபூவ பூ: பீம சரீர ரூபை: 

சமாவ்ருதா ராம சஹாய ஹேதோ: ||

तै: मेघ बृन्दाचल कूटकल्पै:

महाबलै: वानर यूथपालै:।

बभूव भू: भीम शरीर रूपै:

समावृता राम सहाय हेतो:।।

In order to assist Rama, this earth was filled with commanders of those who led the monkey forces resembling masses of clouds and mountains. They loan endowed with immense strength and fearful forms and countenances.

ராமபிரானுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் அவதரித்து இருந்த கோடிக்கணக்கான வானரர்கள் பூமியில் மேக கூட்டம் போல,மலைகள் போல, பெரும் பலத்துடன், பயங்கர ரூபத்துடன் காத்து கொண்டு இருந்தனர்.


ஜெய் ஸ்ரீ ராம்

குருநாதர் துணை. 

Wednesday, 10 February 2021

'அச்சமில்லை அச்சமில்லை' என்று பாரதி எந்த மனோநிலையில் பாடினார்? அநீச: (Aneesh) என்றால் பொருள் என்ன? விஷ்ணு சஹஸ்ரநாமம்.. தெரிந்து கொள்வோமே

 उदीर्णः सर्वत: चक्षु: अनीशः शाश्वत स्थिरः ।

भूशयो भूषणो भूतिर् विशोकः शोक नाशनः

உதீர்ண: ஸர்வத: சக்ஷு:

அனீஸ: சாஸ்வத ஸ்திர: |

பூசயோ பூஷணோ பூதிர்‌

விஸோக: சோக நாஸன: ||

- விஷ்ணு சஹஸ்ரநாமம்





அர்த்தம்

மிகவும் உயர்ந்தவர். இவருக்கு மேல் உயர்ந்ததோ, உயர்ந்தவரோ கிடையாது என்று இருப்பவர் (உதீர்ண),

இவருக்கு தெரியாமல் யாரும் ஒரு காரியம் செய்து விட முடியாது. அனைத்தையும் பார்த்து கொண்டே இருப்பவர் (ஸர்வத: சக்ஷு:). 

இவருக்கு ஆணை இட, யாரும் இல்லை என்று இருப்பவர். இவருக்கு மேல் ஒரு ஈசன் கிடையாது என்று இருப்பவர் (அனீஸ), 

அன்று இருந்தார், இன்று இல்லை என்று இல்லாமல், த்ரேதா யுகத்தில் தோன்றிய அதே ராமபிரான், சமீபத்தில் தோன்றிய தியாகராஜ ஸ்வாமிக்கும் தரிசனம் கொடுத்தார். சாஸ்வதமாக என்றுமே இருப்பவர் (சாஸ்வத ஸ்திர:),

பூமியையே படுக்கையாக போட்டு சயனித்து இருப்பவர். 14 வருடங்கள் ராமபிரானாக அவதரித்து பூமியிலேயே படுத்தவர், ஸ்தல சயன பெருமாளாக மஹாபாலிபுரத்தில் இருப்பவர் (பூசய:), 

அலங்காரம் (பூஷணம்) செய்து கொள்ள விரும்புபவர், இந்த பூமியில் பல அவதாரம் தானே செய்து செய்து, இந்த பூலோகத்துக்கே பூஷணமாக இருப்பவர் (பூஷண:), 

சோகமே இல்லாதவர் (விசோக:), 

இவர் சரித்திரத்தை கேட்பவனுக்கு கூட சோகம் மறைந்து போகும் படி செய்பவர். சோகத்தை நாசம் செய்பவர் (சோக நாசன:)


"சோக நாசன:" என்ற சொல்லை நிரூபணம் செய்தவர் வேத பிராம்மணன் மஹாகவி பாரதி.

"காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா...

என்று கண்ணனே எங்கும் தனக்கு தெரிவதாக பாடும் பாரதிக்கு, 

'கண்ணன் தன் நெஞ்சில் இருக்கிறார்' என்றதும், பாரதியின் ஏழ்மை, சோகம் மறைந்து விட்டது. 




அது மட்டுமில்லாமல், 

இவர் அந்த அனுபவத்தில் பாடிய பாடலை நாம் இன்று கேட்டால் கூட நமக்கு உள்ள சோகமும் அகன்று விடும் போல இருக்கிறது. 


'சோக நாசன:' என்ற சொல்லுக்கு நிரூபணம் காட்டுகிறார் மஹாகவி.

துக்கத்தை நாசம் செய்யும் (சோக நாசன:) கண்ணனை நினைத்து பல பாடல்கள் பாடிய பாரதியாருக்கு, கண்ணனை நினைத்த மாத்திரம், தன் வறுமை, சோகம் கூட மறந்தது மட்டுமில்லாமல், கண்ணன் தன்னிடம் இருக்கிறான் என்ற கர்வத்தில் பாடிய பாடல் இதோ.


அச்சமில்லை! அச்சமில்லை!

அச்சமென்பதில்லையே!

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


இச்சகத்து உள்ளோரெல்லாம்

எதிர்த்து நின்ற போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if every human in this world stands up against me,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!

துச்சமாக எண்ணி நம்மை 

தூறு செய்த போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if I was denigrated and slandered,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!





பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை

பெற்று விட்ட போதிலும் !

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if I obtained a life where I have to beg to even eat,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!

இச்சைகொண்டே பொருளெலாம் 

இழந்துவிட்ட போதிலும் !

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if I loose all the objects that I had desired,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


கச்சணிந்த கொங்கை மாதர் 

கண்கள் வீசு போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even when sensual and attractive women cast their eye over me to distract,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


நச்சை வாயிலே கொணர்ந்து 

நண்ப ரூட்டு போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if I am fed with poison by my own friends,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


பச்சை ஊன் இயைந்த 

வேற் படைகள் வந்த போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if the flesh desiring armies come with their spears to fight me,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


உச்சிமீது வானிடிந்து

வீழுகின்ற போதினும்! 

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if the sky above crumbles and falls down on me,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


சோகத்தை நாசம் செய்யும் (சோக நாசன:) கண்ணனை நினைத்த மாத்திரத்தில், வேத பிராம்மணனான, ஏழையான, ஞானியான, மஹா கவிஞனான பாரதியின், சோகம் நாசமானது.


கண்ணனை நினைத்து கொண்டு அவர் பாடிய இந்த பாடலை கேட்டால் கூட, நமக்கும் சோகம் அகன்று விடும்.  

'கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்' (ந மே பக்த ப்ரணஸ்யதி) என்று ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்.


பாரதியின் வாழ்க்கை எத்தனை துன்பங்கள் தந்தாலும், சோகமே இல்லாமல் கடைசி வரை வாழ்ந்தார். இன்றும் அழியாமல் இருக்கிறார்.


இன்று வரை, 'சோகத்தை அழிக்கும்' பாரதியின் இந்த பாடல் கூட நாசமாகவில்லை. ப்ராம்மணரான பாரதியும் மறக்கப்படவில்லை.


சோக நாசனனாக இருக்கும் கிருஷ்ணரை, நாம் பக்தி செய்தால், நம்மை சோகம் தாக்காது என்று அறிவோம்.


ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! 

வாழ்க ஹிந்து தர்மம்..