Followers

Search Here...

Monday, 30 March 2020

ஸ்கந்தம் 1: அத்யாயம் 8 - குந்தி ஸ்துதி - Kunti Stuti (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம்

குந்தி ஸ்துதி
ஸ்கந்தம் 1: அத்யாயம் 8

கலி யுகம் பிறக்கப்போவதை அறிந்த 'வியாசர்', வேதம் முழுவதையும் கற்கும் திறன் இல்லாமல் பிராம்மணர்கள் இருப்பார்கள் என்று அறிந்து, வேதத்தை நான்காக (ரிக்,யஜுர்,சாம,அதர்வண) பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்குப் போதித்தார் வியாசர்.
அனைவருக்கும் ரஞ்சகமான புராணங்களையும் இயற்றினார்.
இவற்றைப் பொது ஜனங்களுக்கெல்லாம் பிரசாரம் செய்கிற பணியை, ஸூதர் என்பவரிடம் ஒப்புவித்தார்.


புராணங்களைப் பிரசாரம் செய்து கொண்டேயிருந்ததால், அவர் "ஸூத பௌராணிகர்" என்றே பெயர் பெற்றார்.
இவர் பிராமணராக இல்லாமல்  இருந்தும், பெரிய பிரம்ம ரிஷிகளெல்லாம் இவரை உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்தி, நிரம்ப மரியாதை செய்து, இந்தப் புராணங்களைக் கேட்டார்கள்.



ஸூத உவாச (सूत उवाच)
(ஸூத பௌராணிகர் சொல்கிறார்)
அத தே ஸம்-பரேதானாம் |
ஸ்வானாம் உதகம் இச்சதாம் ||
தாதும் ஸக்ருஷ்ணா கங்காயாம் |
புரஸ்க்ருத்ய யயு: ஸ்த்ரிய: ||
अथ ते सम्-परेतानां स्वानाम् उदकम् इच्छताम् ।
दातुं सकृष्णा गङ्गायां पुरस्कृत्य ययु: स्त्रिय: ॥
இவ்வாறு (அத) போரில் வீர மரணமடைந்து பிரேத ரூபத்தில் (ஸம்-பரேதானாம்) இருக்கும் தன் உறவினர்கள் (ஸ்வானாம்) விரும்பும் (இச்சதாம்), ஜலத்தை (உதகம்) கொடுத்து (தாதும்) திருப்தி/தர்ப்பணம்  செய்ய, திரௌபதி, குந்தி முதலிய ஸ்திரீகள் (ஸ்த்ரிய) முன் செல்ல (புரஸ்க்ருத்ய), பாண்டவர்கள் (தே) கிருஷ்ண பரமாத்மாவுடன் (ஸக்ருஷ்ணா) கங்கையை (கங்காயாம்) நோக்கி சென்றனர்(யயு:).

தே நினீய உதகம் ஸர்வே |
விலப்ய ச ப்ருசம் புன: ||
ஆப்லுதா ஹரி-பாதாப்ஜ |
ரஜ: பூத-ஸரிஜ்-ஜலே ||
ते निनीय उदकं सर्वे विलप्य च भृशं पुन: ।
आप्लुता हरि-पादाब्ज रज:पूत सरिज्जले ॥
போரில் உயிர் விட்ட சொந்தங்கள் (தே) அனைவரையும் (ஸர்வே) இழந்து பெரும் துக்கத்துடன்  (விலப்ய ச) இருந்த பாண்டவர்கள், 
கங்கை நீரால் (உதகம்) போதுமான அளவுக்கு (ப்ருசம்) மீண்டும் மீண்டும் (புன:) தர்ப்பணம் செய்து (நினீய) திருப்தி செய்து விட்டு, ஸ்ரீ கிருஷ்ணரின் பாத (ஹரி-பாதாப்ஜ) துளி (ரஜ:) பட்ட புனிதமான (பூத) கங்கை ஜலத்தில் (ஸரிஜ்-ஜலே) ஸ்நானம் (ஆப்லுதா) செய்தனர்.

தத்ர ஆஸீனம் குரு-பதிம் |
த்ருதராஷ்ட்ரம் ஸஹானுஜம் ||
காந்தாரீம் புத்ர-சோகார்தாம் |
ப்ருதாம் கிருஷ்ணாம் ச மாதவ: ||
तत्र आसीनं कुरुपतिं धृतराष्ट्रं सह अनुजम् ।
गान्धारीं पुत्र शोक अर्तां पृथां कृष्णां च माधव: ॥
அங்கு (தத்ர) குரு வம்சத்தின் அரசரான யுதிஷ்டிர மகாராஜன் (குரு-பதிம்), தமது இளைய சகோதரர்களுடனும் (ஸஹானுஜம்), திருதராஷ்டிரனுடன் (த்ருதராஷ்ட்ரம்), புத்ர சோகத்தில் (புத்ர-சோகார்தாம்) உள்ள காந்தாரியுடன் (காந்தாரீம்), குந்தி (ப்ருதாம்) மற்றும் திரௌபதி (கிருஷ்ணாம்) ஆகியோருடனும் துக்கத்தில் ஆழ்ந்தவராய் அமர்ந்திருந்தார் (ஆஸீனம்). இவர்களுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் (ச மாதவ:) இருந்தார்.

ஸாந்த்வயாம் ஆஸ முனிபி: |
ஹத-பந்தூன் சுசார்பிதான் ||
பூதேஷு காலஸ்ய கதிம் |
தர்சயன்  ப்ரதி க்ரியாம் ||
सान्‍त्वयाम् आस मुनिभि: हत-बन्धू: शुचार्पितान् ।
भूतेषु कालस्य गतिं दर्शयन् न प्रतिक्रियाम् ॥
ஜீவாத்மாக்களின் (பூதேஷு) கால ஓட்டத்தின் (காலஸ்ய கதிம்) உண்மையை உபதேசித்து (தர்சயன்) அவரவர்கள் செய்யும் கர்மாக்களுக்கு கிடைக்கும் பிரதிபலன்களை (அப்ரதி க்ரியாம்)  எடுத்துக்கூறி, உறவினர்களை இழந்து (ஹத-பந்தூன்) அதிர்ச்சி (சுசார்பிதான்) அடைந்திருந்தவர்களை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், முனிவர்களும் (முனிபி:) சமாதானப்படுத்த ஆரம்பித்தனர் (ஸாந்த்வயாம் ஆஸ).


ஸாதயித்வா அஜாத-சத்ரோ: |
ஸ்வம் ராஜ்யம் கிதவைர் ஹ்ருதம் ||
காதயித்வா அஸதோர் ராஜ்ன: |
கச-ஸ்பர்ச-க்ஷத ஆயுஷ: ||
साधयित्वा अजात-शत्रो: स्वं राज्यं कितवैर् हृतम् ।
घातयित्वा असतो राज्ञ: कच स्पर्श क्षत आयुष: ॥
ராஜசுய யாகம் செய்து, பெரும் வெற்றியை சாதித்து (ஸாதயித்வா), எதிரியற்றவராய் (அஜாத-சத்ரோ) யுதிஷ்டிரர் உருவாக்கிய இந்திரப்ரஸ்த இராஜ்ஜியத்தை (ஸ்வம் ராஜ்யம்) வஞ்சகர்களான துரியோதனனும், அவனுடன் இருந்தவர்களும் (கிதவைர்), தந்திரமாக அபகரித்துக் கொண்டனர் (ஹ்ருதம்). மஹாராணி (ராஜ்ன) திரௌபதியின் கூந்தலை தொட்ட (கச-ஸ்பர்ச) அயோக்கியர்கள் (அஸதோர்) ஆயுள் குறைக்கப்பட்டு (க்ஷத ஆயுஷ) போர்க்களத்தில் கால கதி அடைந்தார்கள் (காதயித்வா)


யாஜயித்வா அஸ்வமேதை: தம் | 
த்ரிபி: உத்தம கல்பகை: ||
தத் யச: பாவனம் திக்ஷு |
சத-மன்யோ: இவ அதனோத் ||
याजयित्वा अश्वमेधै: तम्  त्रिभि: उत्तम कल्पकै: ।
तद् यश: पावनं दिक्षु शत-मन्यो: इव अतनोत् ॥
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சுத்தமான பொருட்களை கொண்டு (உத்தம கல்பகை:), மூன்று (த்ரிபி:)  அஸ்வமேத யாகங்களை (அஸ்வமேதைஸ்) நடத்தும்படி (யாஜயித்வா) யுதிஷ்டிர மகாராஜனைத் (தம்) கேட்டுக்கொண்டார். இவ்வாறாக (த்), இத்தகைய நூறு யாகங்களைச் (சத-மன்யோர்) செய்த இந்திரனின் (இவ) புகழைப் போல், யுதிஷ்டிர மகாராஜனின் நேர்மையான (பாவனம்) புகழும் (யச:) எல்லா திசைகளிலும் (திக்ஷு) பரவியது  (அதனோத்)




ஆமந்த்ரிய பாண்டு-புத்ராம்ஸ்ச |
சைனேய த்தவ-ஸம்யுத: ||
த்வைபாயன திபி: விப்ரை: |
பூஜிதை: ப்ரதிபூஜித: ||
आमन्‍त्र्य पाण्डु पुत्रांश्च शैनेय उद्धव संयुत: ।
द्वैपायन आदिभि विप्रै: पूजितै: प्रतिपूजित: ॥
சேனாதிபதி (சாத்யகி) (சைனேய), உத்தவன் சூழ (உத்தவ-ஸம்யுத:) நின்று கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டு புத்திரர்களை கூட (பாண்டு-புத்ராம்ஸ்ச) அழைத்து (ஆமந்த்ரிய) கொண்டு, வேதவியாசர் மற்றும் பிற ப்ராம்மணர்களை (த்வைபாயனாதிபிர் விப்ரை:) பூஜிக்க (பூஜிதை:), பதிலுக்கு அவர்களும் கிருஷ்ணரை பூஜித்தார்கள் (ப்ரதிபூஜித:).


கந்தும் க்ருதமதி: ப்ரஹ்மன் |
த்வாரகாம் ரதம் ஆஸ்தித: ||
உபலேபே அபிதாவந்தீம் |
உத்தராம் பய-விஹ்வலாம் ||
गन्तुं कृतमति:  ब्रह्मन् द्वारकां रथम् आस्थित: ।
उपलेभे अभिधावन्तीम् उत्तरां भय विह्वलाम् ॥
துவாரகையை (த்வாரகாம்) நோக்கிப் புறப்பட (கந்தும்) முடிவு செய்து (க்ருதமதிர்) கிருஷ்ணா பரமாத்மா (ப்ரஹ்மன்) இரதத்தில் அமர்ந்து இருக்க (ரதம் ஆஸ்தித), அபிமன்யுவின் தர்மபத்னி உத்தரா பயத்துடன் (உத்தராம் பய-விஹ்வலாம்) தன்னை நோக்கி அவசரமாக வருவதை (அபிதாவந்தீம்) கண்டார்.(உபலேபே)

உத்தரோவாச (उत्तरोवाच)
(உத்தரா பேசுகிறாள்)
பாஹி பாஹி மஹா-யோகின் |
தேவ-தேவ ஜகத்-பதே ||
ந அன்யம் த்வத் அபயம் பஸ்யே |
யத்ர ம்ருத்யு: பரஸ்பரம் ||
पाहि पाहि महा-योगिन् देवदेव जगत्पते ।
न अन्यं त्वद् अभयं पश्ये यत्र मृत्यु: परस्परम् ॥
யோகிகளுக்கெல்லாம் யோகியே (மஹா-யோகின்)! தேவர்களுக்கெல்லாம் தேவனே (தேவ-தேவ)! உலகங்களையெல்லாம் ரக்ஷிக்கும் தலைவனே (ஜகத்-பதே)!  எங்கும் மரணமே (யத்ர ம்ருத்யு:) சாதாரணமாக (பரஸ்பரம்) இருப்பதால், என்னைக் காப்பாற்ற உங்கள் அபயத்தை (த்வத் அபயம்) தவிர வேறு எவரும் இல்லை (ந அன்யம்) என்று அறிகிறேன் (பஸ்யே). என்னை காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் (பாஹி பாஹி)!

அபித்ரவதி மாம் ஈச |
சரஸ் தப்த யஸ: விபோ ||
காமம் தஹது மாம் நாத |
மா மே கர்போ நிபாத்யதாம் ||
अभिद्रवति माम् ईश शरस् तप्त अयस: विभो ।
कामं दहतु मां नाथ मा मे गर्भो निपात्यताम् ॥
ஈஸ்வரா (ஈச)! தாங்கள் சர்வசக்தி படைத்தவர் (விபோ)!  இரும்பினால் (அயஸோ) ஆன அம்பு (சரஸ்) ஒன்று , தீப்பிழம்பை கக்கிக்கொண்டு (தப்த) என்னை (மாம்) நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது (அபித்ரவதி). என் நாதனே (நாத)! அது விரும்பினால் (காமம்) என்னை (மாம்) எரித்து (தஹது) கொள்ளட்டும். ஆனால், என் (மே) வயிற்றில் வளரும் கருவை (கர்போ), குருவம்சத்தை சிதைத்து (நிபாத்யதாம்) விடாமல் (மா) காப்பாற்றுங்கள்.

ஸூத உவாச (सूत उवाच)
(ஸூத பௌராணிகர் சொல்கிறார்)
உபதார்ய வச: தஸ்யா |
பகவான் பக்த-வத்ஸல: ||
அபாண்டவம் இதம் கர்தும் |
த்ரௌணே: அஸ்த்ரம் அபுத்யத ||
उपधार्य वच: तस्या भगवान् भक्त-वत्सल: ।
अपाण्डवम् इदं कर्तुं द्रौणे: अस्त्रम् अबुध्यत ॥
தன் பக்தர்களிடம் பெரும் அன்பு கொண்ட (பக்த வத்சல) பகவான்! உத்தரா (தஸ்யா) பேசியதை (வசஸ்) கவனத்துடன் கேட்டார் (உபதார்ய). பாண்டவ வம்சமே இல்லாமல் (அபாண்டவம்) செய்து விடுவதற்காக, துரோணாச்சாரியரின் மகனான அஸ்வத்தாமன் தான் பிரம்மாஸ்திரத்தைப் (த்ரௌணேர் அஸ்த்ரம்), உத்தராவின் கர்பத்தை கலைக்கும் (கர்தும்) நோக்கத்துடன் இப்படி(இதம்) பிரயோகித்திருக்கிறான் என்பதை, புரிந்து கொண்டார் (அபுத்யத)

தர்ஹி ஏவ த முனி-ஸ்ரேஷ்ட |
பாண்டவா: பஞ்ச ஸாயகான் ||
ஆத்மனோ அபிமுகான் தீப்தான் |
ஆலக்ஷ்ய ஸ்த்ராண் உபாதது: ||
तर्ही  एव अथ मुनि श्रेष्ठ पाण्डवा: पञ्च सायकान् ।
आत्मनो अभिमुखान् दीप्तान् आलक्ष्य अस्त्राण् उपाददु: ॥
மிகச்சிறந்த முனிவர்களுள் முதன்மையானவரே ! சௌனகரே ! (தர்ஹி ஏவாத முனி-ஸ்ரேஷ்ட), தீ ஜுவாலையுடன் (தீப்தான்) பிரம்மாஸ்திரம் (அஸ்த்ராண்) தங்களை நோக்கி (அபிமுகான்) வருவதைக் கண்ட (ஆலக்ஷ்ய) பாண்டவர்கள் (பாண்டவா), தங்களுடைய (ஆத்மனோ) ஐந்து ஆயுதங்களைக் (பஞ்ச ஸாயகான்) கையிலெடுத்தனர் (உபாதது:).

வ்யஸனம் வீக்ஷ்ய தத் தேஷாம் |
அனன்ய-விஷயாத்மனாம் ||
ஸுதர்சனேன ஸ்வ ஸ்த்ரேண |
ஸ்வானாம் ரக்ஷாம் வ்யதாத் விபு: ||
व्यसनं वीक्ष्य तत् तेषाम् अनन्य विषयात्मनाम् ।
सुदर्शनेन स्व अस्त्रेण स्वानां रक्षां व्यधाद् विभु: ॥
சர்வ வல்லமையுள்ள (விபு:) பரம புருஷனாகிய ஸ்ரீ கிருஷ்ணர், தன்னை பற்றியே பேசிக்கொண்டிருக்கும் (அனன்ய-விஷயாத்மனாம்) தன் பக்தர்களுக்கு வந்த (தேஷாம்)  இந்த (தத்) பேராபத்தை (வ்யஸனம்) கண்டு (வீக்ஷ்ய), தன் ஸ்வஜனங்களை (ஸ்வனாம்) காப்பாற்றுவதற்காக (ரக்ஷாம்) உடனே தனது ஆயுதமான (ஸ்வ அஸ்த்ரேண) சுதர்சன சக்கரத்தைக் (ஸுதர்சனேன) கையிலெடுத்தார் (வ்யதாத்).


அந்த:ஸ்த: ஸர்வ பூதானாம் | 
ஆத்மா யோகேஸ்வரோ ஹரி: ||
ஸ்வ-மாயயா வ்ருணோத் கர்பம் |
வைராட்யா: குரு-தந்த வே ||
अन्त:स्थ: सर्व भूतानाम् आत्मा योगेश्वरो हरि: ।
स्व मायया आवृणोद् गर्भं वैराट्या: कुरु तन्तवे ॥
அனைத்து உயிர்களிடத்திலும் (ஸர்வ-பூதானாம்) அந்தர்யாமியாக (அந்த:ஸ்த:) உள்ளேயே இருக்கும், யோகேஸ்வரரான கிருஷ்ண (யோகேஸ்வரோ ஹரி:) பரமாத்மா (ஆத்மா), குருவம்சம் தழைக்க (குரு-தந்த வே), தன்  மாய சக்தியால் (ஸ்வ-மாயயா), கர்ப்பவதியாகி இருக்கும் உத்தராவின் (ஆவ்ருணோத்) கர்ப்பத்தை ( கர்பம்) மறைத்தார்.




யத்யபி அஸ்த்ரம் ப்ரஹ்ம சிரஸ்து |
அமோகம் ச அப்ரதிக்ரியம் ||
வைஷ்ணவம் தேஜ ஆஸாத்ய |
ஸமசாம்யத் ப்ருகு உத்வஹ ||
यद्यपि अस्त्रं ब्रह्म शिरस्तु अमोघं च अप्रतिक्रियम् ।
वैष्णवं तेज आसाद्य सम शाम्यद् भृगु उद्वह ॥
ப்ருகு குடும்பத்தின் பெருமைக்குரிய சௌனகரே ! (ப்ருகூத் வஹ) அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட ப்ரம்மாஸ்திரம் (அஸ்த்ரம் ப்ரஹ்ம) சஸ்திரங்களில் தலைசிறந்தது  (சிரஸ்து). யாராலும் எதிர்க்க முடியாதது ( அமோகம்). மேலும் யாராலும் தோற்கடிக்க முடியாதது ( ச அப்ரதிக்ரியம்). இருந்தாலும் கூட (யத்யபி), மஹாவிஷ்ணுவின் பலத்தால் எதிர்க்கப்பட்டு (வைஷ்ணவம் தேஜ ஆஸாத்ய), ப்ரம்மாஸ்திரம் தண்ணீர் பட்ட புஷ்வாணம் போல நனைந்து விட்டது (ஸமசாம்யத்).


மா மம்ஸ்தா ஹி ஏதத் ஆஸ்சர்யம் |
ஸர்வ ஸ்சர்யமயே ச்யுதே ||
ய இதம் மாயயா தேவ்யா |
ஸ்ருஜத் அவதி ஹந்த் யஜ: ||
मा मंस्था हि एतद् आश्चर्यं सर्व आश्चर्यमये अच्युते ।
य इदं मायया देव्या सृजत् अवति हन्त्यज: ॥
எவர் () தன் மாய சக்தியால் (இதம் மாயயா), உலகங்களை படைத்து (ஸ்ருஜத்), காத்து (அவதி), அழிக்கும் (ஹந்த்) சக்தி கொண்டு இருக்கிறாரோ, அப்படிப்பட்ட அதி அற்புதமானவரும், நிலையானவருமான (ஸர்வ ஆஸ்சர்யமயே அச்யுதே), பிறப்பற்றவருமான (யஜ:), தேவாதி தேவனான (தேவ்யா)  கிருஷ்ண பரமாத்மா, தன் சுதர்ஷன சக்கரத்தால் பிரம்மாஸ்த்திரத்தை தடுத்தது (ஹி ஏதத்)  ஆச்சர்யமாக  (ஆஸ்சர்யம்) நினைக்க அவசியமில்லை. (மா மம்ஸ்தா). பகவானால் ஆகாத காரியம் ஏதுமில்லையே !

ப்ரஹ்ம-தேஜோ-வினி: முக்தை: |
ஆத்மஜை: ஸஹ க்ருஷ்ணயா ||
ப்ரயாண பிமுகம் க்ருஷ்ணம் |
இதம் ஆஹ ப்ருதா ஸதீ ||
ब्रह्म तेजो विनि: मुक्तै: आत्मजै: सह कृष्णया ।
प्रयाण अभिमुखं कृष्णम् इदम् आह पृथा सती ॥
பிரம்மாஸ்திரத்தின் வெப்பக் கதிர்களிலிருந்து (ப்ரஹ்ம-தேஜோ) கர்ப்பிணியான உத்தரா காப்பாற்றப்பட்டதும் (வினிர்முக்தை), ஐந்து மகன்களோடு (ஆத்மஜை:) மற்றும் திரௌபதியோடும் (ஸஹ க்ருஷ்ணயா), நின்றுகொண்டிருந்த பக்தையான அத்தையான குந்தி தேவி (ப்ருதா ஸதீ), துவாரகை திரும்பத் பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் (ப்ரயாணாபி முகம் க்ருஷ்ணம்) பார்த்து இவ்வாறு பேசினாள் (இதம் ஆஹ).

Listen to Sri Hariji – Kunthi Sthuthi


குந்தி உவாச (कुन्त्युवाच)
(குந்தி தேவி பேசுகிறாள்)
நமஸ்யே புருஷம் த்வாத்யம் |
ஈஸ்வரம் ப்ரக்ருதே: பரம் ||
அலக்ஷ்யம் ஸர்வ-பூதானாம் |
அந்தர் பஹி: அவஸ்திதம் ||
नमस्ये पुरुषं त्वाद्यम् ईश्वरं प्रकृते: परम् ।
अलक्ष्यं सर्व भूतानाम् अन्तर् बहि: अवस्थितम् ॥
அத்தையான குந்தி தேவி, கிருஷ்ணரை "பரமாத்மா" என்று அறிந்தவளாக இருப்பதால்,கண்ணீர் விட்டு கொண்டே நன்றியுடன் கைகுவித்து சொல்கிறாள்.
கிருஷ்ணா !  நீ ஆதி (த்வா ஆத்யம்) புருஷன் (புருஷம்) அல்லவா! இயற்கைக்கு (ப்ரக்ருதே:அப்பாற்பட்ட (பரம்) வேண்டியவன் வேண்டாதவன் என்று பாகுபாடு அற்ற ஈஸ்வரன் (ஈஸ்வரம்) அல்லவா நீ ! பரமபுருஷனான  உனக்கு என் நமஸ்காரங்கள் (நமஸ்யே). அனைத்து பூதங்களிலும் (ஸர்வ-பூதானாம்) உள்ளேயும், வெளியேயும் (அந்தர் பஹிர்) நீயே இருந்தாலும்  (அவஸ்திதம்), யாருக்கும் புலப்படாதவராகவே (அலக்ஷ்யம்) இருக்கிறாய்.
மாயா-ஜவனிகா ஆச்சன்னம் |
அக்ஞா அதோக்ஷஜம் அவ்யயம் ||
ந லக்ஷ்யஸே மூட-த்ருசா |
நடோ நாட்யதரோ யதா ||
माया जवनिका आच्छन्नम् अज्ञा अधोक्षजम् अव्ययम् ।
न लक्ष्यसे मूढ द‍ृशा नटो नाट्यधरो यथा ॥
நீ மாயை  என்ற  திரையால் (மாயா ஜவனிகா) உன்னை மறைத்துக்கொண்டு  (ஆச்சன்னம்), அறியாமைக்கு (அக்ஞா) அப்பாற்பட்டு (அதோக்ஷஜம்). குறையற்று (அவ்யயம்) இருக்கிறாய். வேடம் அணிந்து நடிக்கும் ஒரு நடிகனை அடையாளம் காண முடியாததைப் (நடோ நாட்யதரோ) போல (யதா), லட்சியமே இல்லாத ( லக்ஷ்யஸே) முட்டாள்களின் கண்களுக்கு (மூட-த்ருசா) நீ புலப்படுவதில்லை.


ததா பரமஹம்ஸானாம் |
முனீனாம் அமல ஆத்மனாம் ||
பக்தி-யோக-விதானார்தம் |
கதம் பஸ்யேம ஹி ஸ்த்ரிய: ||
तथा परम हंसानां मुनीनाम् अमल आत्मनाम् ।
भक्ति योग विधानार्थं कथं पश्येम हि स्त्रिय: 
தவிர (ததா), கிருஷ்ணா! மனிதனை மறந்தும் 'பகவான்' என்று சொல்லிவிடாத, பரப்பிரம்ம தியானத்திலேயே இருக்கும், வியாசர், பீஷ்மர் போன்ற பரமஹம்சர்கள் (பரமஹம்ஸானாம்) தூய மனத்துடன் (அமல ஆத்மனாம்) பக்தி யோகத்தின் மூலம் (பக்தி-யோக-விதானார்தம்) உன்னையே பகவான் என்று தியானித்து (முனீனாம்சொல்கிறார்கள். 
உலக விஷயங்களே பேசும் எங்களை போன்ற பெண்களால்  (ஹி ஸ்த்ரிய) எப்படி (கதம்)  உன்னை புரிந்து கொள்ள முடியும் (பஸ்யேம)?


க்ருஷ்ணாய வாஸுதேவாய |
தேவ கீ-நந்தனாய ச ||
நந்த-கோப-குமாராய |
கோவிந்தாய நமோ நம: ||
कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च ।
नन्द गोप कुमाराय गोविन्दाय नमो नम: ॥
கிருஷ்ணா! 'நீ பகவான்' என்று பரமஹம்சர்கள் சொன்னாலும், என் மனதுக்கு நீ தேவகி மைந்தனாகவே இருக்கிறாய்.
அனைவரையும் நீ கவர்ந்துவிடுவதாலேயே கிருஷ்ணனாக (க்ருஷ்ணாய) உள்ளாய்.
வசுதேவருக்கும், தேவகிக்கும் மகனாக பிறந்த இன்பமே! (வாஸுதேவாய தேவ கீ-நந்தனாய ச) நந்தகோபனின் குமாரனாக வளர்ந்தவனே (நந்த-கோப-குமாராய), விருந்தாவனத்தில் கோவர்த்தன மலையை தூக்கி, அங்கிருந்த நந்தகோபன், யசோதை, கோபால கோபியர்களோடு பசுக்களுக்கும் அடைக்கலம் கொடுத்த கோவிந்தா (கோவிந்தாய), உனக்கு என் நமஸ்காரங்கள் (நமோ நம:).

நம: பங்கஜ-நாபாய |
நம: பங்கஜ-மாலினே ||
நம: பங்கஜ-நேத்ராய |
நமஸ்தே பங்கஜாங் க்ரயே ||
नम: पङ्कज नाभाय नम: पङ्कज मालिने ।
नम: पङ्कज नेत्राय नमस्ते पङ्कजाङ्‍ घ्रये ॥
தாமரையைப் போன்ற நாபியை உடைய (பங்கஜ-நாபாய) உனக்கு என் நமஸ்காரங்கள் (நம:),  தாமரைப் மாலை அணிந்து இருக்கும் (பங்கஜ-மாலினே) உனக்கு என் நமஸ்காரங்கள்  (நம:), தாமரையைப் போல் குளிர்ந்த பார்வையை உடைய (பங்கஜ-நேத்ராய) உனக்கு என் நமஸ்காரங்கள்  (நம:),
தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடைய (பங்கஜாங் க்ரயே) உக்கு என் நமஸ்காரங்கள் (நமஸ்தே).


யதா ஹ்ருஷீகேச
கலேன தேவகீ |
கம்ஸேன ருத்தா அதி சிரம் சுசார்பிதா ||
விமோசிதா அஹம் ச 
ஸஹ ஆத்மஜா விபோ |
த்வயைவ நாதேன 
முஹுர் விபத்-கணாத் ||
यथा हृषीकेश खलेन देवकी
कंसेन रुद्धा अतिचिरं शुचार्पिता ।
विमोचिता अहं च सह आत्मजा विभो
त्वयैव नाथेन मुहुर् विपद् गणात् ॥
தேவகியை, கொடியவன் (கலேன) கம்சன்,   சிறை பிடித்து (கம்ஸேன ருத்தா ) வெகு காலம் (அதி சிரம்) துன்புறுத்தினான் (சுசார்பிதா). அது போல (யதா) நானும் (அஹம் ), என் பிள்ளைகளும் (ஸஹ ஆத்மஜா) தொடர்ச்சியாக ஆபத்துகளை சந்தித்த போது (முஹுர் விபத்-கணாத்) இந்திரியங்களை ஜெயித்த ஹ்ருஷீகேசா!  பெருமையுடையவனே ! (விபோ),  நீ தானே காவலனாக (த்வயைவ நாதேன) எங்களை ஒவ்வொரு முறையும் காப்பாற்றினாய் (விமோசிதா)!


விஷாத் மஹா க்னே: 
புருஷாத தர்சனாத் |
அஸத்-ஸபாயா 
வன வாஸ-க்ருச்ரத: ||
ம்ருதே ம்ருதே நேக 
மஹாரத: ஸ்த்ரத: |
த்ரௌணி ஸ்த்ரத: ச ஸ்ம 
ஹரே அபிரக்ஷிதா: ||
विषात् महा ग्ने: पुरुषाद दर्शनाद्
असत् सभाया वनवास कृच्छ्रत: ।
मृधे मृधे अनेक महारथ: अस्त्रत:
द्रौणि अस्त्रत: च आस्म हरे अभिरक्षिता: ॥
என் அருமை கிருஷ்ணா (ஹரே) ! பீமனுக்கு விஷம் கொடுத்து (விஷான்), கொலை செய்ய முயன்ற போதும், குடும்பத்தோடு எங்களை அரக்கு மாளிகையில் பெரும் தீ வைத்து (மஹாக்னே:) கொளுத்த முயன்ற போதும், நரமாமிசம் சாப்பிடும் அசுரர்களுடன் சண்டையிட நேர்ந்த (புருஷாத தர்சனாத்) போதும், தர்மத்தை, ஒழுக்கத்தை விட்ட அஸத்துக்கள் நிறைந்த ஹஸ்தினாபுர சபையில் (அஸத்-ஸபாயா) என் மருமகள் திரௌபதியை அவமானப்படுத்த முயன்ற போதும், வன வாச சமயத்தில் (வன வாஸ) துர்வாசர் போன்ற ரிஷியால் எங்களுக்கு ஆபத்து (க்ருச்ரத:) ஏற்பட நேர்ந்த போதும், ஆயுதங்கள் ஏந்திய ஆயிரக்கணக்கான மஹாரதர்கள் (அநேக மஹாரத அஸ்த்ரதோ) குருக்ஷேத்திர போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட முயன்ற போதும், எங்களை கைவிட்டு விடாமல், ஒவ்வொரு முறையும் திரும்ப திரும்ப (ம்ருதே ம்ருதே) எங்களை காப்பாற்றினாயே! அது மட்டுமா! இப்பொழுது, உத்தராவின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை கொலை செய்ய, துரோணரின் புத்ரன் அஸ்வத்தாமா (த்ரௌண்) பிரம்மாஸ்திரத்தை விட்ட போதும் (யஸ்த்ர தஸ்சாஸ்ம) காக்கிறாயே (அபரக்ஷிதா:)!




விபத: ஸந்து தா: சஸ்வத் |
தத்ர தத்ர ஜகத்-குரோ ||
பவதோ தர்சனம் யத் ஸ்யாத் |
அபுன: பவ-தர்சனம் ||
विपद: सन्तु ता: शश्वत् तत्र तत्र जगद्गुरो ।
भवतो दर्शनं यत् स्याद् अपुन: भव-दर्शनम् ॥
கிருஷ்ணா (ஜகத்குரோ)! சந்தோஷமான காலங்களில் தெய்வத்தை மனிதர்கள் நினைப்பதில்லை. அதனால் உன் தரிசனமும் கிடைப்பதில்லை. துக்க சமயங்களில் உன்னை நினைக்கும் பாக்கியம் கிடைக்கிறது. எனக்கு அடிக்கடி (தா: சஸ்வத்) அவ்வப்போது (தத்ர தத்ர) ஆபத்துக்கள் வந்து கொண்டே இருக்கட்டும் (விபத: ஸந்து). ஆபத்து சமயங்களில் (யத் ஸ்யாத்) உன்னை நினைப்பதால், உன்னுடைய தரிசனம் (பவதோ தர்சனம்) எங்களுக்கு கிடைக்கிறது. உன் தரிசனமே (பவ-தர்சனம்) எங்களுக்கு பிறவா (அபுனர் ) நிலையை கொடுத்து விடுமே !
ஜன்ம ஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீபி: |
ஏதமான-மத: புமான் ||
நைவ அர்ஹதி அபிதாதும் வை |
த்வாம் அகிஞ்சன-கோசரம் ||
जन्म ऐश्वर्य श्रुत श्रीभि: येधमान मद: पुमान् ।
नैव अर्हति अभिधातुं वै त्वाम् अकिञ्चन गोचरम् ॥ 
கிருஷ்ணா! உலக விஷயங்களில் பற்றற்று இருப்பவர்களுக்கு (அகிஞ்சன) புலப்படுகிறாய் (கோசரம்). 
தன் பிறப்பை கண்டும், தன் செல்வத்தை கண்டும், தன் அறிவை கண்டும், தன் அழகை கண்டும் (ஜன்ம ஐஸ்வர்ய ஸ்ருத ஸ்ரீபி:) கர்வம் (மத:) அதிகரித்து போன (ஏதமான) மனிதர்கள் (புமான்), உன்னை (த்வாம்) புரிந்துகொள்ளும் (அபிதாதும்) தகுதியை (அர்ஹதி) நிச்சயமாக (வை) அடைவது இல்லை (நைவ).



நம கிஞ்சன-வித்தாய |
நிவ்ருத்த-குண-வ்ருத்தயே ||
ஆத்மா ராமாய சாந்தாய |
கைவல்ய-பதயே நம: ||
नम अकिञ्चन वित्ताय निवृत्त गुण वृत्तये ।
आत्मा रामाय शान्ताय कैवल्य पतये नम: ॥
குசேலன் போன்ற ஏழை பக்தனுக்கு சொத்தாக (அகிஞ்சன வித்தாய) இருக்கும் உனக்கு என் நமஸ்காரங்கள். லாபம் நஷ்டம், சுகம் துக்கம் போன்ற குண விருத்திகள் (குண-வ்ருத்தயே) அற்றவனே (நிவ்ருத்த), எப்பொழுதும் ஆத்ம திருப்தியுடன் இருப்பவனே (ஆத்மா ராமாய)!சாந்தமாக இருப்பவனே (சாந்தாய)! கைவல்யம் என்ற மோக்ஷத்திற்கு தலைவனே (பதயே), உனக்கு என் நமஸ்காரங்கள்.


மன்யே த்வாம் காலம் ஈசானம் |
அனாதி-நிதனம் விபும் ||
ஸமம் சரந்தம் ஸர்வத்ர |
பூதானாம் யன் மித: கலி: ||
मन्ये त्वां कालम् ईशानम् अनादि निधनं विभुम् ।
समं चरन्तं सर्वत्र भूतानां यन्मिथ: कलि: ॥
நீ காலத்துக்கு ஈஸ்வரன் (த்வாம் காலம் ஈசானம்) என்று மனம் (மன்யே) சொல்கிறது. அநாதி காலமாக (அனாதி) இந்த உலகங்களை (விபும்) நீயே தாங்குகிறாய் (நிதனம் ) என்று அறிகிறேன். நீ எல்லோரிடத்திலும் (ஸர்வத்ர) சமமாகவே பழகுகிறாய் (ஸமம் சரந்தம்).
ஜீவராசிகளுக்கு (பூதானாம்) இடையிலுள்ள வேறுபாடுகளுக்கு (கலி) சமூக தொடர்புகளே காரணம் (யன் மித:).

ந வேத கஸ்சித் |
பகவம்ஸ் சிகீர்ஷிதம் ||
தவேஹ மானஸ்ய |
ந்ருணாம் விடம்பனம் ||
न वेद कश्चिद् भगवंस् चिकीर्षितं
तवेह मानस्य नृणां विडम्बनम् ।
பகவானே (பகவம்ஸ்) ! உன் லீலையை (சிகீர்ஷிதம்) யாரும் துளியும் (கஸ்சித்) அறிந்து கொள்ள முடியாது (ந வேத). நீ மனித ரூபத்தில் (தவேஹ மானஸ்ய) இருப்பது ஒரு காட்சியே (ந்ருணாம் விடம்பனம்) என்று அறிகிறேன்.

ந யஸ்ய கஸ்சித் |
தயிதோஸ்தி கர்ஹிசித் ||
த்வேஷ்யஸ் ச யஸ்மின் |
விஷமா மதிர் ந்ருணாம் ||
न यस्य कश्चिद् तयितोऽस्ति कर्हिचिद्
द्वेष्यश्च यस्मिन् विषमा मतिर्नृणाम् ॥
நீ யாருக்கும் (யஸ்ய) எப்பொழுதும் (கர்ஹிசித்) துளியும்(கஸ்சித்) நண்பனும் (தயிதோஸ்தி) இல்லை (). நீ யாருக்கும் விரோதியாகவும் (த்வேஷ்யஸ் ) இருப்பது (யஸ்மின்) இல்லை. தன் புத்தி (மதிர்) கெட்டு இருப்பதால், விஷமிகள் (ந்ருணாம்) உன்னை பாகுபாடு (விஷமா) உடையவன்  என்று சொல்கின்றனர்.


ஜன்ம கர்ம ச விஸ்வாத்மன் |
அஜஸ்ய: கர்து: ஆத்மன: ||
திர்யக்-ந்ரு ருஷிஷு யாதஹ்ஸு |
தத் அத்யந்த விடம்பனம் ||
जन्म कर्म च विश्वात्मन् अजस्य अकर्तु: आत्मन: ।
तिर्यङ्‍ नृ रुषिषु याद:सु तद् अत्यन्त विडम्बनम् ॥
உலகத்துக்கு ஆத்மாவாக இருப்பவனே (விஸ்வாத்மன்)! நீ செய்ய வேண்டியது ஒன்றுமில்லை (அகர்துர்) என்ற போதிலும், செயல்படுகிறாய் (கர்ம ச), நீ பிறப்பற்றவனாகவும் (அஜஸ்ய), ஆத்மாவாகவும் (ஆத்மன) இருப்பினும், பிறப்பை (ஜன்ம) ஏற்கிறாய். 
மிருகமாகவும் (திர்யன்), மனிதனாகவும் (ந்ரு), முனியாகவும் (ருஷிஷு) நீரினமாகவும் (யாதஹ்ஸு) நீ செய்த  அந்த (தத்) ஆச்சர்யமான (அத்யந்த) அவதாரங்கள் அனைத்துமே ஒரு வேஷம் (விடம்பனம்) என்று அறிகிறேன்.

கோபி ஆததே த்வயி க்ருதாகஸி தாம தாவத் |
யா தே தச ஸ்ரு-கலில
ஞ்சன-ஸம்ப்ரம க்ஷம் ||
வக்த்ரம் நினீய பய 
பாவனயா ஸ்திதஸ்ய | 
ஸா மாம் விமோஹயதி 
பீ: அபி யத் பிபேதி ||
गोपि आददे त्वयि कृतागसि दाम तावद्
या ते दश अश्रु कलिल अञ्जन सम्भ्रम अक्षम् ।
वक्त्रं निनीय भय भावनया स्थितस्य
सा मां विमोहयति भी: अपि यद् बिभेति ॥
குழந்தை கண்ணனாக நீ, துறுதுறுவென்று சேட்டை செய்ய (க்ருதாகஸி),  தாயான யசோதா (கோபி), அந்த சமயத்தில் (தாவத்) உன்னை (த்வயி) உரலில் கட்டிபோட்டுவிடலாம் என்று  ஒரு கயிறை (தாம) எடுத்து வந்தாள் (ஆததே). அந்த (யா) சூழ்நிலையில் (தச), 'அம்மா தன்னை கட்டிப்போட்டு விடுவாளே' என்று, பயத்தை முகத்தில் வரவழைத்துக்கொண்டு  (பய பாவனயா) கண்ணீர் பெருகி வழிய (அஸ்ரு-கலில). உன்னுடைய (தே) மை (அஞ்சன) தடவியிருந்த கண்களிலிருந்து (அக்ஷம்) கண் மையை நனைத்துக்கொண்டு (ஸம்ப்ரம) முகத்தில் வழிந்தது (வக்த்ரம் நினீய). பயமே உன்னை கண்டு அஞ்சும். நீ யசோதையிடம் செய்த அந்த (ஸா) லீலை (ஸ்திதஸ்ய) என்னை (மாம்) மோஹிக்க செய்கிறது (விமோஹயதி). பயமே இல்லாதவன் (பீ: அபி) யாருக்கு (யத்) பயப்படுவான் (பிபேதி).


கேசித் ஆஹு: அஜம் ஜாதம் |
புண்ய-ஸ்லோகஸ்ய கீர்தயே ||
யதோ: ப்ரியஸ்ய அன்வவாயே |
மலயஸ்யேவ சந்தனம் ||
केचिद् आहु: अजं जातं पुण्य श्लोकस्य कीर्तये ।
यदो: प्रियस्य अन्ववाये मलयस्येव चन्दनम् ॥
பிறப்பற்ற பரமாத்மாகிய (அஜம்) நீ, புண்ணிய ஆத்மாக்களின் பெருமையை உலகுக்கு காட்ட (புண்ய-ஸ்லோகஸ்ய கீர்தயே), பிறக்கிறாய் (ஜாதம்) என்று சிலர் சொல்கிறார்கள் (கேசித் ஆஹுர்). உங்களுடைய பிரியமான பக்தர்களில் ஒருவரான யது மகாராஜனின்  (யதோ) குலத்தில் (அன்வவாயே) அவதரித்து, "நான் யது குலம்" என்று ஆசையோடு (ப்ரியஸ்ய) சொல்லிக்கொள்கிறாய். மலைகளில் சந்தன மரங்கள் (மலயஸ்யேவ சந்தனம்) தோன்றுவதைப் போலவே, யது குலத்தையே (யாதவ) மணக்கச்செய்கிறாய் 




அபரே வஸுதேவஸ்ய |
தேவக்யாம் யாசிதோ ப்யகாத் ||
அஜஸ் த்வம் அஸ்ய க்ஷேமாய |
வதாய ச ஸுர-த்விஷாம் ||
अपरे वसुदेवस्य देवक्यां याचितो अभ्यगात् ।
अजस्त्वम् अस्य क्षेमाय वधाय च सुरद्विषाम् ॥
தேவகியும் (தேவக்யாம்) வசுதேவரும் (வஸுதேவஸ்ய) பிரார்த்தித்தால் (யாசிதோ) பரவாசுதேவனான நீ அவர்களுக்கு பிறந்தாய் (அப்யகாத்) என்று சொல்கிறார்கள் (அபரே). பிறப்பற்ற நீ (அஜஸ் த்வம்) அசுர குணம் கொண்டவர்களை  அழித்து (வதாய ச ஸுர-த்விஷாம்), நல்லவர்களை வாழ வைக்க (அஸ்ய க்ஷேமாய) அவதரித்து உள்ளாய் என்று அறிகிறேன்.


பார அவதாரணாய அன்யே |
புவோ நாவ இவ உததௌ ||
ஸீதந்த்யா பூரி-பாரேண |
ஜாதோ ஹி ஆத்ம புவ-ர்தித: ||
भार अवतारणाया अन्ये भुवो नाव इव उदधौ ।
सीदन्त्या भूरि भारेण जातो हि आत्म भुव-अर्थित: ॥
கடலில் (உததௌ) அதிக சுமையை (பார) தாங்கும் படகை போல (நாவ இவ), அசுர குணம் கொண்டவர்களால் (அன்யே) இந்த உலகம் (புவோ) நிரம்பி கிடக்க, அசுரர்களின் சுமையால் (பாரேண) பூமாதேவி மிகவும் (பூரி) கலங்கினாள் (ஸீதந்த்யா). பூமாதேவியின் கஷ்டத்தை போக்க, பிரம்மாவை முன்னிட்டு பூமாதேவி உங்களிடம் பிரார்த்திக்க (ஆத்ம-புவா அர்தித:), பூமி பாரத்தை குறைக்க (பார அவதாரணாய), அசுர குணம் கொண்டவர்களை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டவே (ஹி), நீ அவதரித்து இருக்கிறாய் (ஜாதோ) என்று அறிகிறேன்.


பவே ஸ்மின் க்லிஸ்யமானானாம் |
அவித்யா-காம-கர்மபி: ||
ஸ்ரவண-ஸ்மரண ர்ஹாணி |
கரிஷ்யன் இதி கேசன ||
भवे अस्मिन् क्लिश्य मानानाम् अविद्या काम कर्मभि: ।
श्रवण स्मरण अर्हाणि करिष्यन् इति केचन ॥
இந்த உலகத்தில் பிறந்தவர்கள் (பவே அஸ்மின்), உடம்பே நான் என்று நினைத்தும், காமத்தாலும், கர்மத்தாலும் (அவித்யா காம கர்மபி) பலவித துக்கங்களை (க்லிஸ்யமானானாம்) எதிர்கொள்கின்றனர்.
உலகத்தில் ஏற்படும் துன்பங்களை கண்டு வெறுத்து, உன்னை நாடும் இப்படி சில (இதி கேசன) புண்ணிய ஆதம்மாக்களுக்கு  விஷேசமாக பேரானந்தம் கொடுக்க, நீ அவதாரம் எடுக்கிறாய் (கரிஷ்யன்) என்று அறிகிறேன். 
அவர்கள் உன்னை பற்றி கேட்க (ஸ்ரவண), சரித்திரம் அமைத்துக்கொள்கிறாய்.
அவர்கள் உன்னை சரித்திரம் கேட்டு, உன்னையே நினைத்து கொண்டு (ஸ்மரணா) இருக்க, அவதாரம் தரிக்கிறாய். 
அவர்கள் உன்னை பூஜிக்க (அர்ஹாணி), அழகான ரூபம் தரித்துக்கொள்கிறாய் என்று அறிகிறேன்.


ஸ்ருண்வந்தி காயந்தி 
க்ருணந்தி அபிக்ஷ்ணச: |
ஸ்மரந்தி நந்தந்தி 
தவேஹிதம் ஜனா: ||
श‍ृण्वन्ति गायन्ति गृणन्ति अभीक्ष्णश:
स्मरन्ति नन्दन्ति तवेहितं जना: ।
எவர்களுக்கு உன் சம்மந்தமாக பேசினால் கேட்கவும் (ஸ்ருண்வந்தி),
எவர்கள் தனக்கு தானே உன் நாமத்தை பாடிக்கொண்டும் (காயந்தி),
எவர்கள் எப்பொழுதும் உன்னை ஏற்றுக்கொண்டும் (க்ருணந்தி), உன்னையே நினைத்துக்கொண்டும், களித்துக்கொண்டும் (ஸ்மரந்தி நந்தந்தி) எப்பொழுதும் (அபிக்ஷ்ணச) இருப்பார்களோ! அந்த ஜனங்கள் பேரானந்தம் பெறுகிறார்கள் (தவேஹிதம் ஜனா).

த ஏவ பஸ்யந்தி 
அசிரேண தாவகம் |
பவ-ப்ரவாஹ
உபரமம் பதாம்புஜம் ||
त एव पश्यन्ति अचिरेण तावकं
भव प्रवाह उपरमं पदाम्बुजम् ॥
உன்னையே லட்சியமாக பார்த்துக்கொண்டு (ஏவ பஸ்யந்தி) வாழும் இந்த பாகவத உத்தமர்கள் (), வெகு சீக்கிரத்திலேயே (அசிரேண)
இந்த சம்சார சூழலில் (பவ-ப்ரவாஹ) இருந்து விடுபட்டு (உபரமம்) உன் (தாவகம்) பாத கமலத்தை (பதாம்புஜம்) அடைந்து விடுகின்றனர்.

அபி அத்ய ந: த்வம் 
ஸ்வ-க்ருதேஹித ப்ரபோ |
ஜிஹாஸஸி ஸ்வித் 
ஸுஹ்ருத: அநுஜீவின: ||
अपि अद्य न: त्वं स्व-कृतेहित प्रभो
जिहाससि स्वित् सुहृद: अनुजीविन: ।
நீ (த்வம்) இப்பொழுது (அபி) பாண்டவர்களுக்கு தான் (நஸ்) செய்யவேண்டிய கடமைகள் (ஸ்வ-க்ருதேஹித) இன்றோடு (அத்ய) முடிந்து விட்டது என்று நினைத்து, உன் இதயம் கோணாமல் (ஸுஹ்ருத) உன் கருணையை எதிர்பார்த்தே வாழும் (அநுஜீவின) எங்களை விட்டு கிளம்பி (ஜிஹாஸஸி) செல்ல முடிவெடுத்து விட்டாயே (ஸ்வித்)!
யேஷாம் ந ச அன்யத் 
பவத: பதாம்புஜாத் |
பராயணம் ராஜஸு 
யோஜித அம்ஹஸாம் ||
येषां न च अन्यद् भवत: पदाम्बुजात्
परायणं राजसु योजित अम्हसाम् ॥
எந்த ஆதரவும் இல்லாமல் இருந்த எங்களுக்கு  (யேஷாம் ந ச அன்யத்). பல அரசர்கள் (ராஜஸு) எங்களை எதிரியாக (அம்ஹஸாம்) நினைத்து இருக்கும் (யோஜித) சமயத்தில். உன் திருவடி (பதாம்புஜாத்) நிழல் கிடைத்தது. (பவத: ). உன்னை சரணடைந்தோம். (பராயணம்) 

கே வயம் நாம-ரூபாப்யாம் |
யதுபி: ஸஹ பாண்டவா: ||
பவதோ தர்சனம் யர்ஹி |
ஹ்ருஷீகாணாம் இவ சிது: ||
के वयं नाम रूपाभ्यां यदुभि: सह पाण्डवा: ।
भवतो अदर्शनं यर्हि हृषीकाणाम् इव ईशितु: ॥
கிருஷ்ணா! எப்படி (இவ) இந்திரியங்களை (ஹ்ருஷீகாணாம்) உள்ளே இருந்து ஈஸ்வரன் இயக்குகிறாரோ (ஈசிது:), அது போல (யர்ஹி), நீ இருப்பதால், நாம, ரூபங்களோடு (நாம-ரூபாப்யாம்) யாதவர்கள் என்றும், பாண்டவர்கள் (யதுபி: ஸஹ பாண்டவா) என்றும் சொல்லிக்கொள்கிறோம். நீ இல்லாமல் போனால்? (பவதோ அதர்சனம்) நாங்கள் யார்? (கே வயம்). பாண்டவர்கள் பெருமையாக இருப்பதே நீ ஒருவன் இருப்பதால் தானே!  ஆதலால் நீ எங்களை விட்டு செல்லக்கூடாது.!

ந இயம் சோபிஷ்யதே தத்ர 
தா தானீம் கதாதர |
த்வத்-பதை: அங்கிதா பாதி 
ஸ்வ-லக்ஷண-விலக்ஷிதை: ||
न इयं शोभिष्यते तत्र यदा दानीं गदाधर ।
त्वत्पदै: अङ्किता भाति स्वलक्षण विलक्षितै: ॥
நீ சென்று விட்டால், அன்றே (தத்ர) இந்த தேசம் அதன் பொலிவை (இயம் சோபிஷ்யதே) இழந்து விடும் (). 
இப்பொழுது இந்த (யதேதானீம்) தேசத்தில் (இயம்) இருக்கும் பொலிவு  (சோபிஷ்யதே), கதாதரா! நீ இங்கு இருப்பதால் தானே! 
உன் திருவடி பதிந்த சுவடுகள் (த்வத்-பதைர் அங்கிதா) தானே இந்த தேசத்தை அழகாகவும் (ஸ்வ-லக்ஷண), மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி காட்டி (விலக்ஷிதை) பொலிவடைய (பாதி) செய்கிறது.

இமே ஜன-பதா: ஸ்வ்ருத்தா: |
ஸுபக்வ ஒளஷதி வீருத: ||
வன அத்ரி- நதி உதன்வன்தோ |
ஹி ஏதந்தே தவ வீக்ஷிதை: ||
इमे जन पदा: स्वृद्धा: सुपक्‍व औषधि वीरुध: ।
वन अद्रि नदि उदन्वन्तो हि  येधन्ते तव वीक्षितै: ॥
கிருஷ்ணா! இந்த நகரங்களில் (இமே) வாழும் ஜனங்கள் (ஜன-பதா:) செழித்து (ஸ்வ்ருத்தா) இருக்கிறார்கள். மூலிகைகளும் காய்கனிகளை (ஒளஷதி வீருத) கொட்டிக்கிடக்கிறது (ஸுபக்வ). அழகான வனங்களும், மலைகளும் (வன அத்ரி), நதிகளும், கடலும் (நதி உதன்வன்தோ) நிச்சயமாக (ஹி) எங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது (ஏதந்தே). இதற்கெல்லாம் காரணம் உன் கடாக்ஷமே (தவ விக்ஷிதை:) என்று அறிவேன்.

அத விஸ்வேச விஸ்வாத்மன்
விஸ்வ-மூர்தே ஸ்வகேஷு  மே 
|
ஸ்னேஹ-பாசம் இமம் சிந்தி
த்ருடம் பாண்டுஷு வ்ருஷ்ணிஷு ||
अथ विश्वेश विश्वात्मन् विश्वमूर्ते स्वकेषु मे ।
स्‍नेह पाशम् इमं छिन्धि द‍ृढं पाण्डुषु वृष्णिषु ॥
நீ இருப்பதால் தான் உலகம் பொலிவு போல இருக்கிறது என்பதால் (அத), உலகத்துக்கு ஈஸ்வரனே (விஸ்வேச), உலகத்துக்கு உயிராக இருப்பவனே! (விஸ்வாத்மன்), உலகமாகவே இருப்பவனே! (விஸ்வ-மூர்தே), எனக்கு (மே) பிரியப்பட்ட (ஸ்வகேஷு) பாண்டு மைந்தர்கள் (பாண்டுஷு), என் தந்தைவழியில் உள்ள சொந்தங்கள் (வ்ருஷ்ணிஷு) மேல் எனக்கு உள்ள இந்த (இமம்) திடமான (த்ருடம்) அன்பையும் பாசத்தையும் (ஸ்னேஹ-பாசம்) அறுத்து விடு (சிந்தி). பந்தத்தில் இருந்து எனக்கு மோக்ஷம் கிடைக்க அனுக்கிரஹம் செய், கிருஷ்ணா! 


த்வயி மே அநன்ய விஷயா
மதிர் மதுபதே அஸக்ருத் |
ரதிம் உத்வஹதாத் அத்தா
கங்கா இவ ஒளகம் உதன்வதி ||
त्वयि मे अनन्य विषया मतिर् मधुपते असकृत् ।
रतिम् उद्वहताद् अद्धा गङ्गा इव  औघम् उदन्वति ॥
கிருஷ்ணா! மதுபதே! கங்கை நதி (கங்கா) எப்படி (இவ) நேராக (அத்தா) கடலை நோக்கி (உதன்வதி) செல்கிறதோ (ஒளகம்), அது போல, நானும் (மே) உன்னையே (த்வயி) லட்சியமாக கொண்டு, வேறு சிந்தனை எதுவும் எழாத (அநன்ய விஷயா) புத்தியுடன் (மதிர்), எப்பொழுதும்(அஸக்ருத்) உன்னை பற்றிய சிந்தனையே, ஆனந்தமே  (ரதிம்) என் மனதில் பொங்கி (உத்வஹதாத்) ஓடட்டும்.

ஸ்ரீ-க்ருஷ்ண க்ருஷ்ண-ஸக 
வ்ருஷ்ணி-ருஷப 
அவனி-த்ருக் |
ராஜன்ய-வம்ச தஹன
அனபவர்க-வீர்ய ||
श्रीकृष्ण कृष्ण-सख वृष्णि रुषभ अवनि ध्रुग्
राजन्य वंश दहन अनपवर्ग वीर्य ।
ஹே கிருஷ்ணா! பாஞ்சாலியின் சகோதரனே! (க்ருஷ்ண-ஸக) வ்ருஷ்ணி குலத்தில் தோன்றிய காளையே! (வ்ருஷ்ணி-ருஷப
இந்த உலகத்தை அழிக்க (அவனி-த்ருக்) நினைக்கும் ராஜ வம்சங்களை (ராஜன்ய-வம்ச) அழிக்கிறாய் (தஹன). பேரழிவு நிகழ்த்தப்பட்டாலும், தர்மத்துக்காக செய்வதால், புகழ் (வீர்ய) குறையாமல் (அனபவர்க) இருக்கிறாய்.

கோவிந்த கோ த்விஜ ஸுர | 
அர்தி-ஹர அவதார |
யோகேஸ்வர அகில குரோ| 
பகவன் நமஸ்தே ||
गोविन्द गो द्विज सुर अर्ति हर अवतार
योगेश्वर अखिल गुरो भगवन् नमस्ते ॥
கோவர்தன மலையை தரித்த கோவிந்தா
பசுக்களுக்கும் (கோ), ப்ரம்மத்தையே தியானிக்கும் ப்ராம்மணர்களுக்கும் (த்விஜ), உன் பக்தர்களுக்கும் (ஸுர) ஏற்படும் துன்பத்தை போக்கவே (அர்தி-ஹர) நீ அவதாரம் (அவதார) செய்கிறாய் என்று அறிகிறேன்.
அஷ்ட ஸித்திகள் உடைய யோகேஸ்வரா! அகில உலகத்துக்கும் குருவாக உபதேசம் செய்பவனே (அகில குரோ) ! பகவானே! உனக்கு என் நமஸ்காரங்கள் (நமஸ்தே).

ஸூத உவாச (सूत उवाच)
(ஸூத பௌராணிகர் சொல்கிறார்)
ப்ருதயா இத்தம் கல-பதை:
பரிணூத அகில உதய: 
|
மந்தம் ஜஹாஸ வைகுண்டோ
மோஹயன் இவ மாயயா ||
पृथया इत्थं कलपदै: परिणूत अखिल उदय: ।
मन्दं जहास वैकुण्ठो मोहयन् इव मायया ॥
இப்படி பொறுக்கியெடுத்த அற்புதமான பதங்களை (இத்தம் கல-பதை:) கொண்டு ப்ரீதா என்ற குந்தி தேவி (ப்ருதயா) அகில உலகமும் புகழும் (அகில உதய:) ஸ்ரீகிருஷ்ணனை 'பகவான்' என்று துதித்து (பரிணூத) நிற்க, தன் அன்பான அத்தை குந்தி தேவியை பார்த்து புன்முறுவல் (மந்தம் ஜஹாஸ) செய்தான் வைகுண்டநாதன் (வைகுண்டோ). இத்தனை நேரம் பகவான் என்று துதி செய்தும், பகவானின் சிறு மந்தஹாசம் "நம் அன்பு கண்ணன் தானே இவன்" என்று மயக்கி விட்டதாம் (மோஹயன்) அங்கு இருப்பவர்களுக்கு.
அவனுடைய புன்முறுவல் பெரும் மாயம் செய்கிறது (இவ மாயயா).

தாம் பாடம் இதி உபாமந்த்ரிய 
ப்ரவிஸ்ய கஜஸாஹ்வயம் |
ஸ்த்ரிய: ச ஸ்வ-புரம் யாஸ்யன் 
ப்ரேம்ணா ராஜ்னா நிவாரித: ||
तां बाढम् इथी उपामन्‍त्र्य प्रविश्य गज साह्वयम् ।
स्त्रिय: च स्वपुरं यास्यन् प्रेम्णा राज्ञा निवारित: ॥
இப்படி (இதி) குந்தி தேவியின் பிரார்த்தனையை (தாம்) ஏற்றாலும் (பாடம்) துவாரகைக்கு புறப்பட தயாராகி இருந்த ஸ்ரீ கிருஷ்ணர். மற்றவர்களிடமும் சொல்லி (உபாமந்த்ரிய) கொண்டு கிளம்ப ஹஸ்தினாபுர (கஜஸாஹ்வயம்) அரண்மனைகளுக்கு சென்று (ப்ரவிஸ்ய) அங்கு இருந்த பிற ராஜ ஸ்த்ரீகளிடமும் (ஸ்த்ரியஸ் ச) தன் இருப்பிடம் செல்வதற்கு அனுமதி கேட்டார் (ஸ்வ-புரம் யாஸ்யன்).
'ஸ்ரீ கிருஷ்ணர் ஹஸ்தினாபுரம் விட்டு செல்லக்கூடாது' என்று யுதிஷ்டிர ராஜன் (ராஜ்னா) தன் அன்பால் (ப்ரேம்ணா) பிரார்த்திக்க, எதற்கும் கட்டுப்படாத பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அன்புக்கு கட்டுப்பட்டு விட்டார் (நிவாரித).


வ்யாச ஆத்யை: ஈஸ்வர இஹ ஞானைஹி
க்ருஷ்ணேன அத்புத கர்மணா 
|
ப்ரபோதித அபி இதிஹாஸை:
ந அபுத்யத சுசார்பித: ||
व्यास आद्यै: ईश्वर इह ज्ञानै: कृष्णेन अद्भुत कर्मणा ।
प्रबोधित अपि इतिहासै: न अबुध्यत शुचार्पित: ॥
வியாசர் தலைமையில் (வ்யாச ஆத்யைர்) அங்கு குழுமி இருந்த, ஈஸ்வரனுக்கு நிகரான ஞானிகள் இருந்தும் (ஈஸ்வர இஹ ஞானைஹி),
அத்புதமான கர்மயோகியாக (அத்புத கர்மணா) தானே வாழ்ந்து காட்டிய சாஷாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே (க்ருஷ்ணேன), இப்படி நடந்து முடிந்த (அபி இதிஹாஸை:) பாரத போரை பற்றி பேசி ஞானத்தை உபதேசித்து சமாதானம் (ப்ரபோதித) செய்ய முயற்சித்தும்,   
சமாதானம் அடையமுடியாத (ந அபுத்யத) பெரும் துக்கத்தை அடைந்து (சுசார்பித) இருந்தார் யுதிஷ்டிர மகாராஜன்.

ஆஹ ராஜா தர்ம ஸுத:
சிந்தயன் ஸுஹ்ருதாம் வதம் |
ப்ராக்ருதேன ஆத்மனா விப்ரா:
ஸ்நேஹ-மோஹ-வசம் கத: ||
आह राजा धर्म सुत: चिन्तयन् सुहृदां वधम् ।
प्राकृतेन आत्मना विप्रा: स्‍नेह मोह वशं गत: ॥
ஸ்வபாவத்தில் ஆத்மாவை (ப்ராக்ருதேன ஆத்மனா) பொறுத்தவரை பிராம்மண *ஸாது லட்சணம் (விப்ரா) கொண்ட தர்மபுத்திரனான (தர்ம ஸுத:) யுதிஷ்டிர மகாராஜன் (ராஜா),
பாரத போரில் வேண்டப்பட்டவர்கள் (ஸுஹ்ருதாம்) எல்லோரும் கொல்லப்பட்டு (வதம்) விட்டனரே! என்று சிந்தித்து சிந்தித்து (சிந்தயன்) பெரும் துக்கத்தினால் இப்படி கதறி புலம்ப ஆரம்பித்தார் (ஆஹ).
அஹோ மே பஸ்யத அக்ஞானம்
ஹ்ருதி ரூடம் துராத்மன: 
|
பாரக்யஸ்ய இவ தேஹஸ்ய
பஹ்வ்யோ மே அக்ஷௌஹிணி ஹதா: ||
अहो मे पश्यत अज्ञानं हृदि रूढं दुरात्मन: ।
पारक् यस्य इव देहस्य बह्‍व्यो मे अक्षौहिणी: हता: ॥
ஐயோ (அஹோ)! எப்படிப்பட்ட அறிவில்லாத காரியம் (அக்ஞானம்) செய்துவிட்டேன் என்று என்னை பாருங்கள் (மே பஸ்யத). என் இதயம் (ஹ்ருதி) முழுவதும் பாவ எண்ணமே (துராத்மன) நிறைந்துள்ளது (ரூடம்).
பிறருக்கு உதவியாக (பாரக்யஸ்ய) இருப்பதற்காகவே கொடுக்கப்பட்ட இந்த தேகத்தை (இவ தேஹஸ்ய) கொண்டு, எண்ணிலடங்கா போர் வீரர்கள் (பஹ்வ்யோ) கொண்ட அக்ஷௌஹிணி சேனைகளை நான் (மே) கொன்று விட்டேன் (ஹதா:)!


பால த்விஜ ஸுஹ்ருன் மித்ர
பித்ரு ப்ராத்ரு குரு த்ருஹ: |
ந மே ஸ்யான் நிரயான் மோக்ஷோ
ஹ்அபி வர்ஷா யுதாயுதை: ||
बाल द्विज सुहृन् मित्र पितृ भ्रातृ गुरु द्रुह: ।
न मे स्यान् निरयान् मोक्षो ह्यपि वर्षा युतायुतै: ॥
இந்த போரில், புத்ரர்களையும் (பால), ப்ராம்மணர்களையும் (த்விஜ), வேண்டப்பட்டவர்களையும் (ஸுஹ்ருன்), நண்பர்களையும் (மித்ர), தகப்பன் (பித்ரு) ஸ்தானத்தில் இருப்பவர்களையும், சகோதரர்களையும் (ப்ராத்ரு), கல்வி போதித்த குருவையும் (குரு) கொன்று (த்ருஹ) விட்ட எனக்கு (மே), நிச்சயமாக (ஹ்அபி) விடுதலையே (மோக்ஷோ) இல்லாத () வருடங்கள் குறையாத (வர்ஷா யுதாயுதை:) நரகமே (நிரயான்) கிடைக்கப்போகிறது (ஸ்யான்).




ந ஏன: ராஜ்ன: ப்ரஜா-பர்துர்
தர்ம-யுத்தே வதோ த்விஷாம் 
|
இதி மே ந து போதாய
கல்பதே சாஸனம் வச: ||
न येनो राज्ञ: प्रजा: भर्तु: धर्मयुद्धे वधो द्विषाम् ।
इति मे न तु बोधाय कल्पते शासनं वच: ॥
அரசாங்க சட்டப்படி (கல்பதே சாஸனம்) மக்களை (ப்ரஜா) பாதுக்காக்க (பர்துர்) அரசன் (ராப்ய:) தர்ம யுத்தம் (தர்ம-யுத்தே) செய்து எதிரிகளை (த்விஷாம்) கொன்றாலும் (வதோ), அவனுக்கு பாவம் (இன:) கிடையாது () என்று சொன்னாலும் (வச:), இந்த (இதி) சமாதானத்தை (போதாய) என் (மே) மனம் சிறிதும் (ந து) ஏற்க மறுக்கிறது.

ஸ்த்ரீணாம் மத் ஹத பந்தூனாம்
த்ரோஹோ யோ அஸௌ இஹ உத்தித: |
கர்மபிர் கிருஹமேதீயை:
நாஹம் கல்போ வ்யபோஹிதும் ||
स्त्रीणां मद् हथ बन्धूनां द्रोहो यो असौ इह उत्थित: ।
कर्मभि: गृहमेधीयै: नाहं कल्पो व्यपोहितुम् ॥
இந்த தர்ம யுத்தத்தில் உறவினர்களான (பந்தூனாம்) பல பெண்களின் (ஸ்த்ரீணாம்) கணவன்மார்களை கொன்ற (ஹத) பாபம் (த்ரோஹோ) அவை அனைத்தும் (யோ அஸௌ இஹ) என் (மத்) மீது சேர்ந்து (உத்தித) இருக்கிறது.
நிலத்தின் மீது ஆசை கொண்ட (கிருஹமேதீயை) நான், என்ன பரிகாரியங்கள் (யாகங்கள்) (கர்மபிர்), செய்தாலும், எந்த காலத்திலும் (கல்போ) இந்த பெண்களுக்கு பதில் (வ்யபோஹிதும்) சொல்ல முடியாது எனக்கு (நாஹம்).

யதா பங்கேன பங்க அம்ப:
ஸுரயா வா ஸுர அக்ருதம் |
பூத-ஹத்யாம் தத ஏவ ஏகாம்
ந யஜ்ஞைர் மார்ஷ்டும் அர்ஹதி ||
यथा पङ्केन पङ्क अम्भ: सुरया वा सुर अकृतम् ।
भूतहत्यां तथैव येकां न यज्ञै: मार्ष्टुम् अर्हति ॥
சேற்றில் உள்ள நீரை (பங்க அம்ப:), சேற்றை வைத்தே (பங்கேன) எப்பொழுதும் (யதா) சுத்தம் செய்ய முடியாது. 
சுரா பானத்தில் உள்ள பாபத்தை (ஸுர அக்ருதம்), சுராபானத்தை வைத்தே (ஸுரயா வா) போக்க முடியாது.
அது போல (தத
உயிர்களை கொன்ற (பூத-ஹத்யாம்) பாபத்தை போக்க, அஸ்வமேத யாகம் (யஜ்ஞைர்) செய்தாலும், நிச்சயமாக (ஏவ) ஒருவனால் (ஏகாம்) நியாயமான (அர்ஹதி) பதில் (மார்ஷ்டும்) செய்ய முடியாது ().

இவ்வாறு யுதிஷ்டிர மகாராஜன், ஸ்ரீகிருஷ்ணர் சமாதானம் செய்தும், தாளமுடியாத துக்கத்தில் ஆழ்ந்து இருந்தார். 

இவருக்கு 'ராஜ தர்மத்தை போதிக்க பீஷ்மரே தகுதியானவர்' என்று அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், போர் களத்தில், ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் பெற்று, பிறகு ப்ராணனை விடலாம் என்று காத்து இருக்கும் பீஷ்மர் இருக்கும் இடத்துக்கு யுதிஷ்டிர மஹாராஜனை கூட்டி சென்றார். 
பீஷ்மர் யுதிஷ்டிர மகாராஜனுக்கு ராஜ தர்மத்தை உபதேசித்தார்.












Saturday, 28 March 2020

ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 - நாராயண கவசம் (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம் (ஸ்ரீ சுக ப்ரம்மம் - பரீக்ஷித் மகாராஜனுக்கு சொன்ன நாராயண கவசம்)

நாராயண கவசம்
ஸ்கந்தம் 6: அத்யாயம் 8



ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு. 
ஒரு சமயம் இந்திரதேவனை பார்க்க சென்ற போது, இந்திரன் தன் சபையில் நடனம் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

தன் குரு வருகிறார் என்று தெரிந்தும், "இவர் எதற்காக இந்த சமயத்தில் வருகிறார்?" என்று நினைத்தான்.
இவன் எண்ணத்தை அறிந்து கொண்ட ப்ருஹஸ்பதி அமைதியாக திரும்பி விட்டார்.

நடனம் முடிந்து, சபை கலைந்த பின்,  தேவகுரு ப்ருஹஸ்பதியை பார்க்க அவர் ஆசிரமத்துக்கு சென்று பார்த்தான். ஆனால், ப்ருஹஸ்பதி தரிசனம் கொடுக்காமல் மறைந்து விட்டார்.

"ப்ருஹஸ்பதி தேவர்களிடம் கோபத்தில் உள்ளார்" என்று தெரிந்து கொண்ட அசுரர்கள், "இது தான் சமயம்" என்று தேவர்களை தாக்கி, சொர்க்க லோகத்தில் இருந்து அடித்து துரத்த, பூலோகத்தில் வந்து மனிதர்களை போல சஞ்சாரம் செய்து கொண்டு, பிச்சை எடுத்து கொண்டு இருந்தார்கள்.


"இதற்கு விமோச்சனம் கிடையாதா?" என்று வருத்தப்பட்டு ப்ரம்ம தேவனிடம் முறையிட, 
"குரு இல்லாமல் இருக்க கூடாது.  ப்ருஹஸ்பதி மனமிறங்கி வரும்வரை, த்வஷ்டா மகன் விஸ்வரூபனை குருவாக வைத்து கொள். அவர் சொல்படி கேள். அசுரர்களை சமாளிக்க வழி சொல்வார்" என்று சொன்னார்.

மூன்று தலைகள் உடைய பிராம்மணரான விஸ்வரூபன், தேவர்களுக்கு குருவாக இருக்க சம்மதித்தார். 

 தீராத நோய்கள் குணமாக, எதிரிகளை ஜெயிக்க, தேவர்களுக்கு "நாராயண கவசம்" சொன்னார். 

இதை சிரத்தையுடன் ஜபித்த இந்திரன் அசுரர்களை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றான். சொர்க்க லோகத்தை மீண்டும் கைப்பற்றினான். 

ராஜோவாச - श्रीराजोवाच
சுக ப்ரம்ம ரிஷியிடம், பரீக்ஷித் மன்னர் கேட்கிறார்

यया गुप्त: सहस्राक्ष: स-वाहान् रिपु-सैनिकान् ।
क्रीडन्न-इव विनिर्जित्य त्रि-लोक्या बुभुजे श्रियम् ॥
யயா குப்த: ஸஹஸ்ராக்ஷ:
ஸவாஹான் ரிபு ஸைநிகான் |
க்ரீடந்நிவ விநிர் ஜித்ய
த்ரிலோக்யா புபுஜே ஸ்ரியம் ||


ஆயிரம் கண்களுடைய (ஸஹஸ்ராக்ஷ) இந்திர தேவன், எந்த (யயா) வித்யையினால் பாதுகாக்கப்பட்டு (குப்த), எதிரிகளின் படைகளை (ரிபு ஸைநிகான்)  எல்லாம் (ஸவாஹான்) விளையாட்டாக (க்ரீடந்நிவ) வென்று (விநிர் ஜித்ய), மூன்று உலகங்களுக்கும் (த்ரிலோக்யா) தலைவனாகும் ஐஸ்வர்யத்தை (ஸ்ரியம்) அடைந்தாரோ !(புபுஜே)




भगवं तत्  मम आख्याहि वर्म नारायण-आत्मकम् ।
यथा आततायिन: शत्रून् एन गुप्त अजयन् मृधे ॥
பகவம் தன் மமாக்யாஹி
வர்ம நாராயணாத் மகம் |
யதா (ஆ)ததாயின: ஸத்ரூன்
யேன குப்தோ அஜயன் ம்ருதே ||

அப்படி பாதுகாக்கக்கூடிய (வர்ம)  நாராயண கவசம் (நாராயண ஆத்மகம்) என்னும் வித்யையை எனக்கு (மம) தாங்கள் (பகவம் தன்) உபதேசிக்க (ஆக்யாஹி) வேண்டும்.
எதிரிகள் (ஸத்ரூன்) எப்படியெல்லாம் (யதா) வீழ்த்த முயற்சித்தாலும் (ததாயின),
நாராயண கவச மந்திரத்தை ஜபித்ததன் மூலம் (யேன), இந்திர தேவன் போரில் (ம்ருதே) எதிரிகளால் ஜெயிக்கமுடியாதபடி (அஜயன்) காப்பாற்றப்பட்டாரே (குப்தோ).

ஸ்ரீ ஸுக உவாச 
ஸ்ரீசுகர் உபதேசிக்கிறார்

वृत: पुरोहित: त्वाष्ट्रो महेन्द्राय अनुपृच्छते ।
नारायण-आख्यं वर्म-आह तद् इह एक-मना: श‍ृणु ॥
வ்ருத: புரோஹிதஸ் த்வாஷ்ட்ரோ
மஹேந்த்ரா யாநு ப்ருச்சதே |
நாராயணாக்யம் வர்மாஹ
தத் இஹ ஏக மன: ஸ்ருணு ||

தேவர்களின் புரோஹிதனாய் வரிக்கப்பட்ட (வ்ருத: புரோஹிதஸ்) விஸ்வரூபனிடம் (த்வாஷ்ட்ராவின் பிள்ளை), சத்ருக்களை ஜெயிக்க உபாயம் என்ன? (யாநு ப்ருச்சதே) என்று கேட்ட இந்திர தேவனுக்கு (மஹேந்த்ரா) நாராயண கவசம் (நாராயணாக்யம் வர்மாஹ) என்ற மந்திரத்தை உபதேசித்தார்.
அதை இங்கு (தத் இஹ) உனக்கு உபதேசிக்கிறேன். பரீக்ஷித் மன்னா ! ஒரு மனத்துடன் கேள் (ஏக மன: ஸ்ருணு)

விஸ்வரூப உவாச - श्रीविश्‍वरूप उवाच
விஸ்வரூபன் இந்திர தேவனிடம் உபதேசிக்கிறார்

धौत अङ्‌घ्रि पाणि: आचम्य स-पवित्र उदङ्‍मुख: ।
कृत स्व अङ्ग कर न्यासो मन्त्राभ्यां वाग्यत: शुचि: ॥
தௌத அங்க்ரி பாணிர் ஆஸம்ய
ஸபவித்ர உதங்முக: |
க்ருத ஸ்வாங்க கர ந்யாஸோ மந்த்ராப்யாம் 
வாக்யத: ஸுசி: ||

கை (பாணிர்), கால்களை (அங்க்ரி), நன்றாக அலம்பிக்கொண்டு (தௌத),  தீர்த்தத்தை எடுத்து அச்சுதாய  நம:, அனந்தாய நம:, கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்று முறை தீர்த்தம் எடுத்து ஆசமனம் செய்து (ஆசம்ய),
மோதிர விரலில் தூய்மையான  தர்ப்பை புல்லால் மோதிரம் (ஸபவித்ரம்) அணிந்து கொண்டு, வடக்கு/உத்திர திசையை பார்த்து (உதங்முக)
பகவானின் நாமத்தால் (மந்த்ராப்யாம்), உடம்பில் உள்ள 8 அங்கங்களை தொட்டு, ஸுத்தி (சுத்தி) செய்து கொள்ளவேண்டும் (க்ருத ஸ்வாங்க கர ந்யாஸோ).
அங்க சுத்தி செய்யும் போது, மனத்தூய்மையோடு (ஸுசி:), மனதோடு / வாக்கு இல்லாமல் (வாக்யத:) சொல்லவேண்டும்.

नारायण-परं वर्म सन्नह्येद् भय आगते ।
पादयो: जानुनो: ऊर्वो उदरे हृदि अथ उरसि ॥
मुखे शिरसि आनुपूर्व्याद् ओङ्कार आदीनि विन्यसेत् ।
ॐ नमो नारायणाय इति विपर्ययम् अथ अपि वा ॥ 
நாராயணபரம் வர்ம 
ஸந்நஹ்யேத் பய ஆகதே |
பாதயோர் ஜாநுநோ ஊர்வோ 
உதரே ஹ்ருத்யத் உரஸி ||
முகே ஸிரஸி ஆநுபூர்வ்யாத்
ஓங்கார ஆதீநி வின்ய ஸேத் |
ஓம் நமோ நாராயணா யேதி
விபர்யய மதாபி வா ||

உடலாலும், மனதாலும் நமக்கு வரும் (ஆகதே) ஆத்யாத்மிக பயத்தை (பய) போக்கிக்கொள்ள, 
காற்று, மழை, வெயில், இடி, மின்னல் முதலிய தெய்வ சங்கல்பத்தால் நமக்கு வரும் (ஆகதே) ஆதிதைவிக பயத்தை (பய) போக்கிக்கொள்ள,
பஞ்சபூதங்களாலும், பிராணிகளாலும் நமக்கு வரும் (ஆகதே) ஆதிபௌதீக பயத்தை (பய) போக்கிக்கொள்ள,
எங்கும் நிறைந்த நாராயண கவசத்தை (நாராயணபரம் வர்ம) தன்னோடு பிணைத்து (ஸந்நஹ்யேத்) கொள்ள வேண்டும்.
பூஜிப்பவரின் சரீரம் சுத்தமாக இருந்தால்தான் அவர் செய்யும் பூஜையும் மிகவும் சுத்தமாக அமையும். அதன் பயனும் விரும்பும் முறையில் கிடைக்கும். அந்தச் சரீரத்துக்கு ந்யாஸம் (ஸுத்தி) அவசியம்.

சர்வ உலகங்களை (தான் உட்பட) படைத்ததும் நாராயணனே!
தான் படைத்ததை மீண்டும் தன்னிடம் ஒடுக்கி கொள்பவரும் நாராயணனே!
என்ற தியானத்துடன்,
எட்டு அங்கங்களாக இருக்கும் நம் உடலில், 
1. பாதங்கள் (பாதயோ), 2. முழங்கால் (ஜாநுநோ), 3. தொடை (ஊர்வோ), 
4. வயிறு (உதரே), 5. இதயம் (ஹ்ருத்ய), 6. மார்பு (உரஸி), 7. முகம் (முகே), 8. தலை (ஸிரஸ்) 
என்று முறையே ஒன்றன் பின் ஒன்றாக (ஆநுபூர்வ்யாத்) தொட்டு (வின்ய ஸேத்), ஓம் என்ற ஓங்காரத்தித்தில் ஆரம்பிக்கும் (ஓங்கார ஆதீநி), திருவஷ்டாக்ஷரம் என்ற எட்டு எழுத்து மந்திரத்தை (ஓம் ந மோ நா ரா ய ணா ய) முறையே சொல்லி, நாராயணன் ஒருவனே (யேதி) கதி! என்று தியானித்து கொண்டு அங்க ந்யாஸம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இதையே தலைகீழாக (விபர்யய) சொல்லி (மதாபி வா) தலை முதல் பாதம் வரை தொட்டு முறையே (ஓம் ந மோ நா ரா ய ணா ய) சொல்ல வேண்டும்.




कर-न्यासं तत: कुर्याद् द्वादश अक्षर विद्यया ।
प्रणव आदि य-कार अन्तम् अङ्गुलि अङ्गुष्ठ पर्वसु ॥
கர ந்யாஸம் தத: குர்யாத்
த்வாத ஸாக்ஷர வித்யயா |
ப்ரணவாதி 'ய'கார அந்தம்
அங்குலி அங்குஷ்ட பர்வஸு ||

அதற்கு பிறகு (தத:) (ஓம் ந மோ ப க வ தே வா சு தே வா ய) என்ற 12 எழுத்து த்வாத ஸாக்ஷர மந்திரத்தை (த்வாத ஸாக்ஷர வித்யயா) ஜபம் செய்து கொண்டே, கரங்களை (கர) சுத்தி (ந்யாஸம்) செய்து கொள்ள வேண்டும் (குர்யாத்)
வலது ஆள் காட்டி விரல் தொட்டு, ஓம் என்ற ப்ரணவத்தில் ஆரம்பித்து,(ப்ரணவாதி),
வலது சுண்டு விரல் வரை, கட்டை விரலால் தொட்டு கொண்டே, தொடர்ந்து,
இடது சுண்டு விரல் ஆரம்பித்து, இடது ஆள் காட்டி வரை, கட்டை விரலால் தொட்டு கொண்டே, முதல் 8 எழுத்துக்கள் சொல்லி, மீதமுள்ள 4 எழுத்தை, கட்டை விரலின் அடி பகுதியை (அங்குஷ்ட பர்வஸு) ஆள் காட்டி விரலால் இரு கைகளில் தொட்டு, 'ய'காரத்தோடு முடிப்பது ('ய'கார அந்தம்) கர ந்யாஸம்.
न्यसेद्‌ हृदय ओंङ्कारं वि-कारम् अनु मूर्धनि ।
ष-कारं तु भ्रुवो: मध्ये ण-कारं शिखया न्यसेत् ॥
ந்யஸேத் ஹ்ருதய ஓங்காரம்
'வி'காரம் அனு மூர்தனி |
'ஷ'காரம் து ப்ருவோர் மத்யே
'ண'காரம் ஸிகயா ந்யஸேத் ||

அங்க ந்யாஸம், கர ந்யாஸம் செய்த பிறகு, 6 எழுத்து மந்திரமான, "விஷ்ணு ஷடக்ஷரியை" (விஷ்ணவே நம:) 
இதயத்தில் (ஹ்ருதய) - "ஓம்" என்ற ஓங்காரத்தை (ஓங்காரம்) நிறுத்தி (ந்யஸேத்), 
தலையில் (அனு மூர்தனி) - 'வி' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
புருவ மத்தியில் (ப்ருவோர் மத்யே) - 'ஷ' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
சிகையில் (ஸிகயா ந்யஸேத்) - 'ண' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,

वे-कारं नेत्रयो: युञ्‍ज्याद् न-कारं सर्व-सन्धिषु ।
म-कारम् अस्त्रम् उद्दिश्य मन्त्र-मूर्ति: भवेद् बुध: ॥
'வே'காரம் நேத்ரயோர் யுஞ்ஜ்யாந்
'ந'காரம் ஸர்வ ஸந்திஷு |
'ம'கார மஸ்த்ர முத்திஸ்ய
மந்தரமூர்திர் பவேத் புத: ||

கண்களில் (நேத்ரயோர்) - 'வே' என்ற அக்ஷரத்தை நிறுத்தி (யுஞ்ஜ்யாந்),
அனைத்து சந்திகளிலும் (ஸர்வ ஸந்திஷு) - 'ந'  என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
'ம' என்ற அக்ஷரத்தை ஆயுதங்களில் (அஸ்த்ர) நிறுத்தியும்,
இப்படி தன்னையே மந்திர மூர்த்தியாக (மந்தரமூர்திர்) ஆக்கிக்கொள்பவன் (பவேத்) புத்திமான் (புத:) ||

स-विसर्गं फड् अन्तं 
तत् सर्व-दिक्षु विनिर्दिशेत् ।
ॐ विष्णवे नम इति ॥ 
ஸ விஸர்கம் பட் அந்தம்
தத் ஸர்வ திக்ஷ விநிர்திஸேத் |
ஓம் விஷ்ணவே நம இதி ||

"ஓம் விஷ்ணவே நம" என்று தியானித்து கொண்டே வரும் போது, 
"ம"காரம் சொல்லும் போதே, அதனோடு "பட்" என்ற அக்ஷரத்தையும் விஸர்கமாக சேர்த்து (ஸ விஸர்கம் பட்), கிழக்கு திசையில் ஆரம்பித்து, நான்கு திசைகளிலும் "ம: அஸ்த்ராய பட்" (தத் ஸர்வ திக்ஷ) என்று சொல்லி (விநிர்திஸேத்) முடிக்க வேண்டும் (அந்தம்). 
இப்படி (இதி) ஓங்காரத்திற்கு காரணமான விஷ்ணுவே (ஓம் விஷ்ணவே) நம்மை சூழ்ந்து இருக்க, அவரை மமதை இல்லாமல் நமஸ்கரிக்க வேண்டும் (நம:). 

आत्मानं परमं ध्यायेद् ध्येयं षट्‍‌-शक्तिभि: युतम् ।
विद्या तेज: तप: मूर्तिम् इमं मन्त्रम् उदाहरेत् ॥
ஆத்மானம் பரமம் த்யாயேத்
த்யேயம் ஷட் ஸக்திபிர் யுதம் |
வித்யா தேஜஸ் தபோ மூர்திம்
இமம் மந்த்ரம் உதாஹரேத் ||

ஆறு ஐஸ்வர்யங்கள் (ஷட் ஸக்திபிர்) (பூர்ணமான ஐச்வர்யம், பூர்ணமான தர்மம், பூர்ணமான புகழ், பூர்ணமான ஸ்ரீ,பூர்ணமான வைராக்யம்,பூர்ணமான மோக்ஷம்) நிறைந்தவரான (யுதம்)  சர்வ சாஸ்திரமும் அறிந்த, தேஜோ மயமான, தவ மூர்த்தியான (வித்யா தேஜஸ் தபோ மூர்திம்) பரமாத்மா நாராயணனே நான் (ஆத்மானம்) தியானிக்க (த்யேயம்) தகுதியானவர் என்ற மனத்தெளிவுடன், நாராயண-கவசம் என்ற இந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும் (இமம் மந்த்ரம் உதாஹரேத்)




ॐ हरि: विदध्याद् मम सर्व-रक्षां
न्यस्त अङ्‌घ्रि पद्म: पतगेन्द्र पृष्ठे ।
दर अरि चर्म असि गदा इषु चाप
पाशान् दधान: अष्ट गुण: अष्ट बाहु: ॥
ஓம் ஹரிர் விதத்யான்
மம ஸர்வ ரக்ஷாம்
ந்யஸ் அங்க்ரி பத்ம:
பதகேந்த்ர ப்ருஷ்டே | 
தராரி சர்மாஸி
கத  இஷு சாப
பாஸான் ததாந 
அஷ்ட குண அஷ்ட பாஹு: ||

ஓங்காரத்திற்கு காரணமான பகவான் விஷ்ணு (ஓம் ஹரிர்) கருடனின் மீது அமர்ந்து இருக்க, தனது  தாமரை (பத்ம:) போன்ற திருவடிகள் (அங்க்ரி) கருடனின் முதுகில் (பதகேந்த்ர ப்ருஷ்டே) தொட்டு (ந்யஸ்த) கொண்டு இருக்க, சங்கு (தர), சக்கரம் (அரி), கேடயம் (சர்ம), நந்தகம் என்ற வாள் (அஸி), கதை (கத), அம்பு (இஷு), வில் (சாப), மற்றும் அங்குசம் (பாஸான்) என்ற எட்டு ஆயுதங்களை, கஜேந்திரன் என்ற யானையை காப்பதற்காக எட்டு கைகளில் (அஷ்ட பாஹு) தரித்து (ததாந) கொண்டு வந்த, எட்டு குணங்களுடைய (அஷ்ட குண) பரமாத்மா நாராயணன், எல்லா நேரங்களிலும் அவருடைய எட்டு கரங்களால் என்னைப் அனைத்து விதத்திலும் (மம ஸர்வ ரக்ஷாம்) பாதுகாத்து அருள வேண்டும் (விதத்யான்).
जलेषु मां रक्षतु मत्स्य मूर्ति: 
याद:-गणेभ्यो वरुणस्य पाशात् ।
ஜலேஷு மாம் ரக்ஷது
மத்ஸ்ய மூர்தி:
யாதோ கணேப்யோ
வருணஸ்ய பாஸாத் |

மத்ஸ்ய மூர்த்தியாக அவதாரம் செய்த பரமாத்மா, நீரில் (ஜலேஷு) ஏற்படும் அபாயத்திலிருந்து என்னை காக்கட்டும் (மாம் ரக்ஷது). நீரில் வாழும் உயிர்களின் (யாதோ கணேப்யோ) வருண பாசத்திலிருந்து (வருணஸ்ய பாஸாத்) என்னை காக்கட்டும்.
स्थलेषु माया-वटु वामन: अव्यात्
त्रिविक्रम: खे अवतु विश्वरूप: ॥
ஸ்தலேஷு மாயா
வடு வாமன அவ்யாத் |
த்ரிவிக்ரம: கே(அ)வது
விஸ்வரூப: ||

7 வயது பிராம்மண சிறுவனாக (வடு) அவதரித்து, வஞ்சகனை வஞ்சனையால் அடிப்பது போல, கபடம் செய்து (மாயா) மூன்று அடி மண் கேட்டு, விஸ்வரூபம் (விஸ்வரூப:) எடுத்து மூவுலகங்களை அளந்த, 
வாமன பகவான், என்னை நிலத்தில் (ஸ்தலேஷு) காக்கட்டும் (அவ்யாத்).
உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரம) என்னை ஆகாயத்தில் (கே) காக்கட்டும் (அவது).
दुर्गेषु अटवि आजि-मुख-आदिषु प्रभु:
पायाद् नृसिंह: असुर यूथप अरि: ।
துர்கேஷு அடவி
ஆஜி முக ஆதிஷு ப்ரபு:
பாயாந் ந்ருஸிம்ஹ
அஸுர யூதப அரி: |

ஆபத்தான இடங்களாலும் (துர்கேஷு), அடர்ந்த வனங்களாலும் (அடவி), யுத்த களம் போன்றவற்றாலும்  (ஆஜி முக ஆதிஷு) மனதில் ஏற்படுகின்ற அச்சத்தை போக்க, அசுரர்களின் தலைவன் (அஸுர யூதப) ஹிரண்யகசிபுவை ஒழிக்க (அரி) நரசிம்மாக (ந்ருஸிம்ஹ) வந்தது போல வந்து, பரமாத்மா (ப்ரபு:) என்னை காக்கட்டும் (பாயாந்).

विमुञ्चतो यस्य महा-अट्टहासं
दिशो विनेदु: न्यपतं च गर्भा: ॥
விமுஞ்சதோ யஸ்ய
மஹா அட்டஹாஸம்
திஸோ விநேதுர்
ந்யபதம்ஸ் ச கர்பா: ||

அசுரர்கள் நடுங்கும் நரசிம்மஹ ரூபத்துடன் அவர் கொடுத்த (விமுஞ்சதோ யஸ்ய) மஹா அட்டகாசமான சிம்ம கர்ஜனை எல்லா திசைகளிலும் அதிர (திஸோ விநேதுர்) செய்தது. மேலும், அது கர்ப்பத்தில் வளரும் அசுர சிசுவையும் சிதைக்குமளவிற்கு (ந்யபதம்ஸ் ச கர்பா:) அசுரர்களிடம் ஒரு பயத்தை கொடுத்தது.
அசுரர்களை நடுங்க செய்யும் பகவான், ஆபத்தான இடங்களில், பகவான் நரசிம்மராக வந்து எனக்கு கருணை காட்டட்டும்.




रक्षतु असौ मा अध्वनि यज्ञ-कल्प:
स्व-दंष्ट्रया उन्नीत धरो वराह: ।
ரக்ஷது அஸௌ மா அத்வநி
யஜ்ஞ கல்ப: ஸ்வ தம்ஷ்ட்ரயா 
உந்நீத தரோ வராஹ: |

போகும் பாதைகள் (அத்வநி) அனைத்திலும் வரும் ஆபத்துகளில் இருந்து, உலகத்தை (தரோ) தன் கொம்பினால் (ஸ்வ தம்ஷ்ட்ரயா) பிரளய ஜலத்திலிருந்து மீட்டு உயர்த்தி (உந்நீத) காப்பாற்றிய அந்த (அஸௌ) யஞ்ய மூர்த்தியான (யஜ்ஞ கல்ப:) வராஹ பகவான் என்னை (மா) காக்கட்டும் (ரக்ஷது).


राम: अद्रि-कूटेषु अथ विप्रवासे
स-लक्ष्मण: अव्याद् भरत-अग्रज: अस्मान् ॥
ராம: அத்ரி கூடேஷ 
அத விப்ர வாஸே
ஸ-லக்ஷ்மண அவ்யாத்
பரத அக்ரஜ  அஸ்மான் ||

மலை சிகரங்களில் (அத்ரி கூடேஷ), மேலும் வெளி தேசங்களில் (அத விப்ர வாஸே) என்னை (அஸ்மான்) பரதனின் மூத்த சகோதரனான (பரத அக்ரஜ) ஸ்ரீ ராமர் (ராம), லக்ஷ்மணருடன் சேர்ந்து (ஸ-லக்ஷ்மண), காத்து ரக்ஷிக்கட்டும் (அவ்யாத்).
माम् उग्र-धर्माद् अखिलात् प्रमादात्
नारायण: पातु नरश्च हासात् ।
மாமுக்ர தர்மா
தகிலாத் ப்ரமாதாந்
நாராயண: பாது
நரஸ்ச ஹாஸாத்

ஒரு வேளை நான் (மாம்) வேத தர்மத்துக்கு விரோதமாக  திமிர் தனத்தால் முட்டாள் தனத்தால் (ப்ரமாதாந்), அனைத்து விதமான (அகிலாத்) போலி மத தர்மங்களை ஏற்று உக்கிரமான காரியங்கள் (உக்ர தர்மாத்) செய்ய துணிந்தால், நரர்களுக்கு (நரஸ்ச) ஈஸ்வரனான அந்த நாராயணன் (நாராயண:) என் கர்வத்தை அடக்கி (ஹாஸாத்) மீண்டும் சனாதன வேத தர்மத்தில் வாழும்படியாக  ரக்ஷிக்கட்டும் (பாது).
दत्तस्तु अयोगाद् अथ योग-नाथ:
पायाद् गुण-ईश: कपिल: कर्म-बन्धात् ॥
தத்தஸ் த்வ அ-'யோகா'த்
அத யோகநாத:
பாயாத் குணேஸ:
கபில: கர்ம பந்தாத் ||

யோகத்திற்கு தலைவனாக (யோகநாத:) இருக்கும் அந்த (அத) தத்ராத்ரேயர் (தத்தஸ்),  உண்மையான யோகத்திற்கு விரோதமாக (த்வ அ-'யோகா'த்) செயல்படுபவர்களிடமிருந்து என்னை காக்கட்டும் (பாயாத்). குணபூர்ணனான (குணேஸ:) கபிலர், என்னை கர்மா பந்தத்தில் (கர்ம பந்தாத்) இருந்து காக்கட்டும் (பாயாத்).
सनत्कुमार: अवतु कामदेवाद्
हय-शीर्षा मां पथि देव-हेलनात् ।
ஸநத் குமார:
அவத் காம தேவாத்
ஹய ஸீர்ஷா மாம்
பதி தேவ ஹேலநாத் |

ஞான மார்க்கத்தை விரும்பும் சனத் குமாரர்கள் (ஸநத் குமார:), என்னை காம தேவதையிடம் (காம தேவாத்) இருந்து காக்கட்டும் (அவத்).
பூதேவர்களான (தேவ) வேதப்ராம்மணர்களையும், பஞ்ச பூதங்களை இயக்கும் தேவர்களையும் (தேவ) கேலி செய்த (ஹேலநாத்) அபராதத்தில் இருந்து வேதத்திற்கு பதியாக (பதி) இருந்து ரக்ஷிக்கும் ஹயக்ரீவர் (ஹய ஸீர்ஷா) என்னை (மாம்) காக்க வேண்டும்.
देवर्षि-वर्य: पुरुष अर्चन अन्तरात्
कूर्मो हरिर्मां निरयाद् अशेषात् ॥
தேவர்ஷி வர்ய:
புருஷ அர்சன அந்தராத்
கூர்மோ ஹரிர் மாம்
நிரயாத் அஷேஷாத் ||

புருஷோத்தமனை (புருஷ) ஆராதனை (அர்சன) செய்யாத பாவங்களில் (அந்தராத்) இருந்து தேவ ரிஷிகளிலேயே சிறந்தவரான (தேவர்ஷி வர்ய) நாரதர் என்னை காக்கட்டும்.
கூர்ம அவதாரம் (கூர்மோ) செய்து மந்திர மலையை தாங்கி தேவர்களுக்கு அம்ருதம் கொடுத்த பகவான் (ஹரிர்), என்னை (மாம்) மீளமுடியாத (அஷேஷாத்) நரகங்களில் (நிரயாத்) விழுந்து விடாமல் காக்கட்டும்.




धन्वन्तरि: भगवान् पातु अपथ्याद्
द्वन्द्वाद् भयाद् ऋषभो निर्जित आत्मा ।
தந்வந்தரிர் பகவான்
பாது அபத்யாத்
த்வந்த் வாத் பயாத்
ருஷபோ நிர்ஜிதாத்மா |

உடலில் வரும் சர்வ நோய்களிலிருந்தும் (அபத்யாத்), வைத்திய நாராயணனாக இருக்கும் தன்வந்தரி பகவான் என்னை ரக்ஷிக்கட்டும் (பாது)
இந்திரியங்களை வென்ற (நிர்ஜிதாத்மா) ரிஷப ரிஷி,  வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம் போன்ற இரட்டைகளினால் (த்வந்த் வாத்) ஏற்படும் துக்கத்தில் இருந்து, பயத்திலிருந்து (பயாத்) என்னை காக்கட்டும்.
यज्ञ: च लोकाद् अवताद् जन-अन्ताद्
बलो गणात् क्रोध वशाद् अहीन्द्र: ॥
யஜ்ஞஸ்ச லோகாத்
அவதாஜ் ஜநா அந்தாத்
பலோ கணாத் க்ரோத
வஸாத் அஹீந்தர: ||

யஜ்ஞ (யஜ்ஞஸ்ச) ஸ்வரூபியான நாராயணன் உலக (லோகாத்) ஜனங்களால் (ஜநா) எனக்கு ஏற்படுத்து நினைக்கும் அபவாதங்களில் (அவதாஜ்) இருந்து என்னை காக்கட்டும் (அந்தாத்).
பாம்பு போன்ற கோப குணமுள்ள விஷ ஜந்துக்களிடமிருந்து (கணாத் க்ரோத வஸாத்), ஆதிசேஷ அவதாரமான (அஹீந்தர:) பலராமர் (பலோ) என்னை காக்கட்டும்.
द्वैपायनो भगवान् अप्रबोधाद्
बुद्ध: तु पाषण्ड गण प्रमादात् ।
த்வைபாயநோ பகவாந்
அப்ர போதாத்
புத்தஸ்து பாஷண்ட கணாத்
ப்ரமா தாத் |

வேத சாஸ்திரங்களை அறியாத அஞானத்திலிருந்து (அப்ர போதாத்), வேத மூர்த்தியான வ்யாஸ பகவான் (த்வைபாயநோ பகவாந்) ரக்ஷிக்கட்டும்.
புத்தி மழுங்கி (ப்ரமா தாத்) வேத மார்க்கத்தை விட்டு, பாஷாண்ட கூட்டங்களில் (போலி மதங்கள்) (பாஷண்ட கணாத்) சேர்ந்து விடாமல் இருக்க, புத்திமானான (புத்தஸ்து) பரமாத்மா நாராயணன் என்னை ரக்ஷிக்கட்டும்.

कल्कि: कले: काल-मलात् प्रपातु
धर्म अवनाय: उरु कृत-अवतार: ॥
கல்கி: கலே: கால
மலாத் ப்ரபாது
தர்ம அவநாய 
உரு க்ருத அவதார: ||

தர்மத்தை காக்கும் பொருட்டு (தர்ம அவநாய உரு) அவதரிக்க போகும் (க்ருத அவதார) கல்கி ரூபத்தை தரிக்கும் அந்த உயர்ந்த (உரு) பகவான், தர்மத்தை விட்டு விலகி, மலம் போல நாற்றமடிக்கும் (மலாத்) கலி கால துன்பத்திலிருந்து (கலே: கால) என்னை காக்கட்டும் (ப்ரபாது).

பகல் -  
ப்ராத (6 AM - 8 AM) கேசவன்
ஸங்கவ (8 AM - 10 AM) கோவிந்தன்
ப்ராஹ்வ (10 AM -12 Noon) நாராயணன்
மத்யந் (12 Noon - 2 PM) விஷ்ணு,
அபரான்ன (2 PM - 4 PM) மதுசூதனன்,
ஸாயம் (4 PM - 6 PM) மாதவன்,

இரவு - 
ப்ரதோஷ (6 PM - 8 PM) ஹ்ருஷீகேஸன்,
அர்த்தராத்திரி (8 PM - 10 PM) பத்மநாபன்,
நிஸீத (10 PM - 12 Mid Night) பத்மநாபன்,
அபரராத்திரி (12 Mid Night - 2 AM) ஸ்ரீதரன்,
ப்ரத்யூஷ (2 AM - 4 AM) ஜனார்த்தன,
ப்ரபாதே (4 AM - 6 AM) விஸ்வேஸ்வரன் .

ஸுர்ய அஸ்தமனத்திற்கும் (6PM), ஸுர்ய உதயத்துக்கும் இடையே 30 நாழிகைகள் உண்டு 
(720 Minutes or 12 hrs). (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்.)
ஸுர்ய உதயத்துக்கு முந்தைய 5 நாழிகைக்கு (4AM - 6AM) 
உஷத்காலம் (ப்ரம்ம முகூர்த்தம்) என்று பெயர்.





मां केशवो गदया प्रात: अव्याद्
गोविन्द आसङ्गवम् आत्त-वेणु: ।
மாம் கேஸவோ கதயா
ப்ராத: அவ்யாத்
கோவிந்த ஆஸங்கவம்
ஆத்தவேணு: |

கதை ஏந்தியிருக்கும் (கதயா) கேசவன் (கேஸவோ) என்னை (மாம்) காலையில் (ப்ராத:) (6AM-8AM) காக்கட்டும் (அவ்யாத்).
கைகளில் புல்லாங்குழல் (ஆத்தவேணு) வைத்து இருக்கும் கோவிந்தன், என்னை இரண்டாம் முற்பகலில் (ஸங்கவம்) (8AM - 10AM) காக்கட்டும்.
नारायण: प्राह्ण उदात्त शक्ति:
मध्यम् दिने विष्णु: अरीन्द्रपाणि: ॥
நாராயண: ப்ராஹ்வ
உதாத்த ஸக்தி:
மத்யந் தினே விஷ்ணு:
அரீந்தர பாணி: ||

கம்பீரமான சக்தி ஆயுதத்தை தரித்த (உதாத்த ஸக்தி:) நாராயணன், என்னை பூர்வாஹ்னவத்தில் (ப்ராஹ்வ) (10AM - 12 Noon) காக்கட்டும்.
கையில் கால சக்கரத்தை வைத்து இருக்கும் (அரீந்தர பாணி:) விஷ்ணு பகவான் என்னை மத்யான (12 Noon - 2 PM) (மத்யந்) வேளையில் காக்கட்டும்.

देवो अपराह्णे मधु-हा उग्र-धन्वा
सायं त्रि-धामा अवतु माधवो माम्
தேவா: அபராஹ்ணே
மது ஹோக்ர தன்வா
ஸாயம் த்ரிதாமா அவது
மாதவோ மாம் |

கொடிய (உக்ர) தனுஷை தரித்து தேஜோமயமான மதுசூதனன் (மதுஹா) அபரான்னத்தில் (அபராஹ்ணே) (2PM - 4PM) காக்கட்டும் (தன்வா). 
மூன்று இடங்களிலும் (த்ரிதாமா) (படைத்தல், காத்தல், அழித்தல்) வீற்று இருக்கின்ற மாதவன் என்னை ஸாயங்கால வேளையில் (ஸாயம்) (4PM - 6PM) காக்கட்டும் (அவது).
दोषे हृषीकेश उत अर्ध-रात्रे
निशीथ एक: अवतु पद्मनाभ:
தோஷே ஹ்ருஷீகேஸ |
உத அர்த-ராத்ரே 
நிஸீத ஏக: 
அவது பத்மநாப: ||

இந்திரியங்களை ஜெயித்த ஹ்ருஷீகேஸன் ப்ரதோஷ (தோஷே) (6PM - 8PM) காலத்தில் என்னை காக்கட்டும் (அவது).
மேலும் (உத), 
அசகாய சூரனான பத்மநாபன் ஒருவரே (ஏக:), அர்த்த ராத்திரி முதல் நிஸீத காலம் வரை (அர்த-ராத்ரே நிஸீத) (8PM - 12 Mid Night) காக்கட்டும் (அவது).
श्रीवत्स-धामा अपर-रात्र ईश:
प्रत्यूष ईश असि-धरो जनार्दन:
ஸ்ரீவத்ஸ தாம:
அபர ராத்ர ஈஸ:
ப்ரத்யூஷ ஈஸ:
அஸி தர: ஜநார்தன: |

ஸ்ரீவத்சம் உடைய (ஸ்ரீவத்ஸ தாமா) பகவான் (ஈஸோ) ஸ்ரீதரன்,  அபர ராத்திரியில் (அபர ராத்ர) (12 Mid Night - 2 AM) காக்கட்டும் (அவது).
இரவின் முடிவு சமயத்தில் (ப்ரத்யூஷ) (2 AM - 4 AM) வாள் ஏந்தி (அஸி தர:) நிற்கும் ஜனார்த்தன பகவான் (ஈஸ) காக்கட்டும். 
दामोदर: अव्याद् अनुसन्ध्यं प्रभाते
विश्व ईश्वरो भगवान् कालमूर्ति:
தாமோதர அவ்யாத் அநு ஸந்தயம் | 
ப்ரபாதே விஸ்வேஸ்வரோ பகவான் 
கால மூர்த்தி || 

ஒவ்வொரு சந்திகளிலும் (அநு ஸந்தயம்) (@6AM, @12 Noon, @6PM) தாமோதரன் என்னை காக்கட்டும் (அவ்யாத்).
காலமூர்த்தியும், உலகை நிர்வாகம் செய்பவனுமாகிய பகவான் (விஸ்வேஸ்வரோ பகவான்) விடிகாலை உஷத்காலத்தில் (ப்ரபாதே) (4 AM - 6 AM) என்னை காக்கட்டும் (அவ்யாத்).

चक्रं युग-अन्त अनल तिग्म-नेमि
भ्रमत् समन्ताद् भगवत्-प्रयुक्तम्
दन्दग्धि दन्दग्धि अरि-सैन्यम् आशु
कक्षं यथा वात-सखो हुताश:
சக்ரம் யுகாந்த அனல
திக்ம நேமி
ப்ரமத் ஸமந்தாத்
பகவத் ப்ர-யுக்தம்  |
தந்தக்தி தந்தக்தி 
அரி ஸைன்யம் ஆஸு 
கக்ஷம் யதா வாத
ஸக: ஹுதாஸ: || 


நாராயணன் கையில் இருக்கும் வஜ்ராயுதம் போல கூறிய நுனி உடைய (திக்ம நேமி) காலத்தை அழிக்கும் (யுகாந்த) காலசக்கரம் (சக்ரம்) நாற்புறங்களிலும் (ஸமந்தாத்) அக்னி பிழம்பாக (அனல) சுற்றிக்கொண்டே (ப்ரமத்) இருக்கிறது.
எப்படி (யதா) உலர்ந்த புற்களை (கக்ஷம்) காற்றை துணை கொண்டு (வாத ஸக:), ஒரு நொடியில் (ஆஸு) அக்னியால்  பஸ்பமாகிறதோ (ஹுதாஸ:)
அது போல, பகவான் (பகவத்) கையிலிருந்து புறப்பட்ட (ப்ர-யுக்தம்) சக்கரம், எதிரிகளை, அவர்கள் சேனைகளை (அரி ஸைன்யம்)  ஒரு நொடியில் (ஆஸு) அடியோடு தண்டிக்கப்படுவார்கள் (தந்தக்தி) தண்டிக்கப்படுவார்கள் (தந்தக்தி).



गदे अशनि स्पर्शन विस्फुलिङ्गे
निष्पिण्ढि निष्पिण्ढि अजित प्रिया असि ।
कुष्माण्ड वैनायक यक्ष रक्षो:
भूत ग्रहां चूर्णय चूर्णय अरीन् ।।
கதே அஸநி ஸ்பர்ஸன 
விஸ்புலிங்கே 
நிஷ்பிண்தி நிஷ்பிண்தி
அஜித ப்ரியாஸி |
குஸ்மாண்ட வைநாயக
யக்ஷ ராஷோ 
பூத க்ராஹன் 
ஸீர்ணய ஸீர்ணய அரீன் ||

ஏ கதயே (கதே)! நீ பெருமாளின் நெருங்கிய பிரியத்துக்கு பாத்திரமாக (அஜித ப்ரியாஸி) இருக்கிறாய். எதிரிகளை ஒடுக்குவதற்காக, பெருமாள் உன்னை தொடும்போது (ஸ்பர்ஸன), கோடி மின்னல்கள் (அஸநி) உருவாவது போல, நெருப்பு துணுக்கைகள் கிளம்பி கிளம்பி (நிஷ்பிண்தி நிஷ்பிண்தி) ஜொலிக்கின்றனறாய் (விஸ்புலிங்கே)
குஸ்மாண்டர்கள்,  வைநாயகர்கள், யக்ஷர்கள்,  ராஷஸர்கள்,  பூதங்கள், கிரஹங்கள் (க்ராஹன்), போன்ற எதிரிகளை (அரீன்) என்னை நெருங்க விடாமல், அவர்களை துளைத்து (Drill) (ஸீர்ணய ஸீர்ணய) விடுங்கள்.
त्वं यातुधान प्रमथ प्रेत मातृ:
पिशाच विप्र-ग्रह घोर-द‍ृष्टीन् ।
दरेन्द्र विद्रावय कृष्ण-पूरितो
भीम स्वन: अरे: हृदयानि कम्पयन् ॥
த்வம் யாதுதான ப்ரமத
ப்ரேத மாத்ரு பிஸாச
விப்ர க்ரஹ கோர த்ருஷ்டீன் |
தரேந்த்ர வித்ராவய
க்ருஷ்ண பூரிதோ
பீம ஸ்வநா அரேர்
ஹ்ருதயானி கம்பயன் ||

கிருஷ்ண பரமாத்மா வைத்திருக்கும் (தரித்து இருக்கும்) சங்கங்களில் உயர்ந்த பாஞ்சசன்யமே (தரேந்த்ர) ! கிருஷ்ண பரமாத்மா தன் திருவாயால் சங்கத்தை ஊதும்போது (க்ருஷ்ண பூரிதோ), நீ (த்வம்) கொடுக்கும் (வித்ராவய) பேரொலி (பீம ஸ்வநா), பயங்கரமான ரூபமுடைய (கோர த்ருஷ்டீன்) யாதுதானர், ப்ரமதர், ப்ரேதங்கள்,  மாத்ரு கணங்கள்,  பிஸாசர்கள்,  ப்ரம்ம ராக்ஷஸர்கள் (விப்ர க்ரஹ) போன்ற தீயவர்களின் (அரேர்) இதயங்களை (ஹ்ருதயானி) நடுங்கச்செய்து (கம்பயன்) செய்து விடுகிறது.

त्वं तिग्म-धार-असि-वर अरि-सैन्यम्
ईश-प्रयुक्तो मम छिन्धि छिन्धि ।
चक्षूंषि चर्मन् छत चन्द्र छादय
द्विषाम् अघोनां हर पाप चक्षुषाम् ॥
த்வம் திக்ம தார அஸி வர 
அரி ஸைன்யம்
ஈச ப்ரயுக்தோ மம சிந்தி சிந்தி |
சக்ஷம்ஷி சர்மன்
ஸத சந்த்ர சாதய 
த்விஷாம் அகோநாம் 
ஹர பாப சக்ஷுஷாம் ||

உயர்ந்த நந்தகம் என்ற மிக கூர்மையான வாளே (திக்ம தார அஸி வர)! நீங்கள் உலகை படைத்த பரமாத்மாவின் ஆளுமையில் (ஈச ப்ரயுக்தோ) உள்ளீர்கள்.
பரமாத்மாவால் பிரயோகிக்கப்படும் நீங்கள் (த்வம்), என்னுடைய (மம) சத்ருக்களின் கூட்டத்தை (அரி ஸைன்யம்) தூள் தூளாக்க வேண்டும் (சிந்தி சிந்தி).
நூற்றுக்கணக்கான சந்திரனை போல (ஸத சந்த்ர) பல கண்களை (சக்ஷம்ஷி) உடைய கேடயமே (சர்மன்)! என்னை கண்டு பொறாமைப்படுபவர்களின் (த்விஷாம்) கண்ணை மறைத்து விடுங்கள் (சாதய).
கொடிய (அகோநாம்) பாபங்களை (பாப) செய்யும் சத்ருக்களின் கண்ணை (சக்ஷுஷாம்) பறித்து (ஹர) விடுங்கள்.
यन्नो भयं ग्रहेभ्य अभूत् केतुभ्यो नृभ्य एव च ।
सरीसृपेभ्यो दंष्ट्रिभ्यो भूतेभ्यो अंहोभ्य एव च ॥
सर्वाणि एतानि भगवन्नाम रूप अनुकीर्तनात् ।
प्रयान्तु सङ्‌क्षयं सद्यो ये न: श्रेय:प्रतीपका: ॥
யந்நோ பயம் 
க்ரஹேப்யோ பூத் கேதுப்யோ 
ந்ருப்ய ஏவ ச |
ஸரீஸ்ருபேப்யோ தம்ஷ்ட்ரிப்யோ 
பூதேப்யோ அம்ஹோப்ய ஏவ ச ||
ஸர்வாண் யேதாநி 
பகவந் நாம ரூப அனு கீர்தநாத் |
ப்ரயாந்து ஸங்க்ஷயம் 
ஸத்யோ யே ந: 
ஸ்ரேய: ப்ரதீபகா: ||


கிரஹங்கள் (க்ரஹே ப்யோ பூத்), தூமகேது போன்ற வால்நக்ஷத்ரங்கள்  (பூத்கேது ப்யோ) பொறாமை கொண்ட மநுஷ்யர்கள் (ந்ருப்ய),
மேலும் (ஏவ ச)
விஷ ஜந்துக்களான தேள், சர்ப்பங்கள் (ஸரீஸ்ருபேப்யோ), கோரைப்பல் கொண்ட புலி, நாய் போன்ற மிருகங்கள் (தம்ஷ்ட்ரிப்யோ), பாபத்தால் அலையும் பூதங்கள் (பூதேப்யோ), பாப காரியங்கள் (அம்ஹோப்ய) போன்றவற்றால் (ஏவ ச) என்னென்ன பயங்கள் உண்டாகுமோ (யந்நோ பயம்), அவை அனைத்தும் (ஸர்வாண் யேதாநி), பகவானின் நாமத்தை கீர்த்தனை செய்வதாலும், பகவானின் ரூபத்தை கீர்த்தனை செய்வதாலும், பகவானின் அஸ்திரங்களை பற்றி கீர்த்தனை செய்வதாலும் (பகவந் நாம ரூப அனு கீர்தநாத்) விரட்டி ஒழிக்கப்பட்டு (ப்ரயாந்து ஸங்க்ஷயம்), விக்னங்கள் (ப்ரதீபகா) ஒழிந்து நல்லது (ஸ்ரேய:) மட்டுமே நடக்கும்.. இது சத்யமாயிற்றே (ஸத்யோ யே ந:)!
गरुडो भगवान् स्तोत्र स्तोभ: छन्दोमय: प्रभु: ।
रक्षतु अशेष कृच्छ्रेभ्यो विष्वक्सेन: स्व-नामभि: ॥
கருடோ பகவான் 
ஸ்தோத்ர ஸ்தோபஸ் சந்தோ 
மய: ப்ரபு: |
ரக்ஷது அஸேஷ-க்ருசரேப்யோ 
விஷ்வக் ஸேன: 
ஸ்வ-நாமபி: ||

வேதமே வழிபடுபவராகவும் (ஸ்தோத்ர ஸ்தோபஸ்) வேத ஸ்வரூபியாகாகவும் (சந்தோ மய:) போற்றப்படுகிறார் (ப்ரபு:) கருட பகவான்.
விஷ்வக்சேனர் என்றும் பெயர் கொண்ட (ஸ்வ-நாமபி) கருடபகவான், எனக்கு வரும் எல்லையற்ற துன்பங்களில் (அஸேஷ-க்ருசரேப்யோ) இருந்து காக்கட்டும் (ரக்ஷது).

सर्व-आपद्‌भ्यो हरे: नाम रूप यान आयुधानि न: ।
बुद्धि इन्द्रिय मन: प्राणान् पान्तु पार्षद भूषणा: ॥
ஸர்வ ஆபத்ப்யோ 
ஹரேர் நாம ரூப யாந ஆயுதாநி ந: | 
புத்தி இந்த்ரிய மன: ப்ராணான் 
பாந்து பார்ஷத பூஷணா: ||

ஹரியின் நாமும், ஹரியின் ரூபமும், ஹரியின் வாகனமும் (யாந), ஹரியின் ஆயுதங்களும் (ஆயுதாநி) என்னை (ந:) சர்வ ஆபத்துக்களில் (ஸர்வ ஆபத்ப்யோ) இருந்தும் காக்கட்டும்.
மோக்ஷம் அடைந்த பார்ஷதர்களில் பூஷணமாக (பார்ஷத பூஷணா:) இருக்கும் கருட பகவான், என் புத்தி, புலன்கள் (இந்த்ரிய), மனம், பிராணன் அனைத்தையும் காக்கட்டும் (பாந்து).




यथा हि भगवान् एव वस्तुत: सद् असद् च यत् ।
सत्येन अनेन न: सर्वे यान्तु नाशम् उपद्रवा: ॥
யதா ஹி பகவான்  
ஏவ வஸ்துத: 
ஸத் அஸச்ச யத் |
ஸத்யே நாநேந 
ந: ஸர்வே யாந்து 
நாசம் உபத்ரவா: ||

அழியாத ஆத்மாக்களாகவும் (ஸத்), அழியக்கூடிய இயற்கையாகவும்  (அஸச்ச) உலகில் காணப்படும் அனைத்தும் (யத்) உண்மையில் ஒரே பரமாத்மா ஸ்வரூபமே (யதா ஹி பகவான் ஏவ வஸ்துத:)!
இதுவே சத்யம் என்பதில் எனக்கு (ஸத்யே நாநேந) சந்தேகமில்லை.
இது சத்தியமாக இருப்பதாலேயே இயற்கையால் எங்கள் அனைவருக்கும் (ந: ஸர்வே) ஏற்படும் சங்கடங்கள் நாசமாகி (நாசம் உபத்ரவா:) விரட்டப்பட்டு (யாந்து) எங்களுக்கு நல்லதே நடக்கட்டும்.

यथा ऐकात्म्य अनुभावानां विकल्प रहित: स्वयम् ।
யதா ஐகாத்ம்ய அநுபாவாநாம்
விகல்ப ரஹித ஸ்வயம் |


ஆத்மா (Soul), இயற்கை (Nature) என்று தனியாக தெரிந்தாலும், பிரளய காலத்தில் இவை அனைத்தும் தன்னிடம் ஒடுங்கும் போது, இவை (யதா) அனைத்தும் உண்மையில் ஒன்றுதான் (ஐகாத்ம்ய) என்ற ஞான அனுபவம் (அநுபாவாநாம்) பகவானுக்கு சுயமாகவே (ஸ்வயம்) இருப்பதால், பேத பாவனை இல்லாமல் (விகல்ப ரஹித) இருக்கிறார்.
भूषण आयुध लिङ्ग-आख्या 
धत्ते शक्ती: स्वमायया ॥
பூஷண ஆயுத லிங்காக்யா
தத்தே ஸக்தீ: ஸ்வ மாயயா ||

தன் மாயையை கொண்டே (ஸ்வ மாயயா), தன் சக்தியை கொண்டே (தத்தே ஸக்தீ:), சங்கு சக்கரம் போன்ற பூஷணங்களாகவும், ஆயுதங்களாகவும், விபவ, அர்ச்சா அவதார ரூபங்களாகவும் (லிங்க), ராம கிருஷ்ண நரசிம்ம பரசுராம போன்ற நாமங்களாவும் (ஆக்யா), தன்னை காட்டி கொள்கிறார்.

तेन-एव सत्य मानेन सर्वज्ञो भगवान् हरि: ।
पातु सर्वै: स्वरूपैर्न: सदा सर्वत्र सर्वग: ॥
தேநைவ ஸத்ய மானேன
ஸர்வஜ்ஞோ பகவான் ஹரி: |
பாது ஸர்வை: ஸ்வரூபைர்
ந: ஸதா ஸர்வத்ர ஸர்வக: ||

இப்படி(தேநைவ) சத்திய ஸ்வரூபியான (ஸத்ய மானேன) அனைத்தையும் அறிந்துள்ள (ஸர்வஜ்ஞோ) பகவான் ஹரி,
அவருடைய அனைத்து ரூபங்களாலும் (ஸர்வை: ஸ்வரூபைர்) என்னை எங்கும் எப்பொழுதும் பரவி (ந ஸதா ஸர்வத்ர ஸர்வக:) இருந்து காக்கட்டும்.

विदिक्षु दिक्षु ऊर्ध्वम् अध: समन्ताद्
अन्त: बहि: भगवान् नारसिंह: ।
விதிக்ஷு திக்ஷுர் த்வமத: 
ஸமந்தாத் அந்தர்பஹிர் 
பகவான் நாரஸிம்ஹ: |

அனைத்து மூலைகளிலும் (விதிக்ஷு), அனைத்து திசைகளிலும், மேலும் கீழும் (ஊர்த்வமத), அனைத்து பக்கங்களிலும் (ஸமந்தாத்), உள்ளும் புறமும் (அந்தர்பஹிர்) நரசிம்ம பகவான் காக்கிறார்.
प्रहापयँ लोकभयं स्वनेन
स्वतेजसा ग्रस्त समस्त तेजा: ॥
ப்ரஹா-பயன் லோக-பயம் 
ஸ்வனேன ஸ்வ-தேஜஸா 
க்ரஸ்த ஸமஸ்த தேஜா: ||


திவ்யமான தேஜஸ் உடைய (ஸ்வ-தேஜஸா) நரசிம்ம பகவான் தனது அட்டகாசமான கர்ஜனையால் (ஸ்வனேன), நம்மை அழிக்க வரும் பயத்தையும், லோகத்தால் வரும் பயத்தையும் (ப்ரஹா-பயன் லோக-பயம்), போக்கி (க்ரஸ்த) அனைவருக்கும் ஆரோக்கியத்தை தருகிறார் (ஸமஸ்த தேஜா:).

मघवन् इदम् आख्यातं वर्म नारायण आत्मकम् ।
विजेष्यसे अञ्जसा येन दंशित असुर यूथपान् ॥
மகவந் இதம் ஆக்யாதம் 
வர்ம நாராயணாத் மகம் |
விஜேஷ்-யஸே அஞ்ஜஸா யேன 
தம்ஸிதோ அஸுர யூதபான் ||

இந்திர தேவா (மகவந்)! என்னால் (மகம்), இப்போது சொல்லப்பட்ட (இதம் ஆக்யாதம்) நாராயண கவசத்தை (வர்ம நாராயணாத்) கொண்டு (யேன) நீ பாதுகாக்கப்பட்டு (தம்ஸிதோ), அசுர படைகளை (அஸுர யூதபான்) எளிதாக வென்று (விஜேஷ்) புகழ் (யஸே) அடைவாய்.
एतद् धारयमाण: तु यं यं पश्यति चक्षुषा ।
पदा वा संस्पृशेत् सद्य: साध्वसात् स विमुच्यते ॥
ஏதத் தாரய மாணஸ்து 
யம் யம் பஸ்யதி சக்ஷுஷா | 
பதா வா ஸம் ஸ்ப்ருஸேத் ஸத்ய: 
ஸாத்வஸாத் ஸ விமுச்யதே ||

இந்த நாராயண கவசத்தை எப்பொழுதும் மனதில் தியானிக்கும் பாகவத உத்தமன் (ஏதத் தாரய மாணஸ்து), யார் யாரையெல்லாம் (யம் யம்) கண்ணால் பார்க்கிறானோ (பஸ்யதி சக்ஷுஷா), காலால் (பதா வா) தொடுகிறானோ (ஸம் ஸ்ப்ருஸேத்), அப்படி தொடப்பட்டவன், பார்க்கப்பட்டவன் கூட, அனைத்து பாவங்களில் (ஸாத்வஸாத்) இருந்தும், சத்தியமாக உடனே (ஸத்ய:) விடுபட்டு (ஸ விமுச்யதே) விடுகிறான்.

न कुतश्चिद् भयं तस्य विद्यां धारयतो भवेत् ।
राज दस्यु ग्रह-आदिभ्यो व्याधि-आदिभ्य: च कर्हिचित् ॥
ந கதஸ்சித் பயம் தஸ்ய 
வித்யாம் தாரயதோ பவேத் | 
ராஜதஸ்யு க்ரஹாதிப்யோ 
வ்யாதி ஆதிப்யஸ்ச கர்ஹிசித் ||

அரசர்கள் (ராஜ), திருடர்கள் (தஸ்யு), க்ரஹங்கள் (க்ரஹாதிப்யோ),  நோய்கள் (வ்யாதி ஆதிப்யஸ்ச) போன்றவற்றால் ஏற்படும் துன்பங்களால், துளியும் பயப்படாமல் (ந கதஸ்சித் பயம் தஸ்ய), நாராயண கவசம் என்ற இந்த வித்தையை (வித்யாம்) எப்பொழுதும் மனதில் தியானிப்பவன் (தாரயதோ பவேத்) அனைத்து சமயத்திலும் (கர்ஹிசித்) மஹாவிஷ்ணுவால் பாதுகாக்கப்பட்டு கொண்டே இருக்கிறான்.

इमां विद्यां पुरा कश्चित् कौशिको धारयन् द्विज: ।
இமாம் வித்யாம் புரா கஸ்சித் 
கௌஸிகோ தாரயன் த்விஜ: | 


முன்பு ஒரு காலத்தில் (புரா) கௌசீக (விஸ்வாமித்ர) கோத்திரத்தில் பிறந்த ஒரு பிரம்மச்சாரி பிராம்மணன் (த்விஜ), இந்த நாராயண கவசம் என்ற வித்யை (இமாம் வித்யாம்) உபதேசம் பெற்று (கஸ்சித்),  தினமும் அனுசந்தானம் (தாரயன்) செய்து கொண்டு இருந்தான்.




योग-धारणया स्व-अङ्गं जहौ स मरु-धन्वनि ॥
யோக தாரணயா ஸ்வ அங்கம் 
ஜஹௌ ஸ மருதன்வனி || 

தீரனான இந்த பிராம்மணன், தன் யோக பலத்தால் (யோக தாரணயா), தன் சரீரத்தை (ஸ்வ அங்கம்) ஒரு மரு பூமியில் (Thar Desert, Rajasthan) (ஸ மருதன்வனி) துறந்து (ஜஹௌ) புண்ணிய லோகங்களுக்கு சென்று விட்டான்.

तस्य उपरि विमानेन गन्धर्व पति: एकदा ।
தஸ்யோபரி விமானேன 
கந்தர்வ பதிரே கதா | 

தேவர்களில் கந்தர்வர்கள் என்று பிரிவு உண்டு. கந்தர்வர்களின் தலைவன் சித்ரரதன் (கந்தர்வ பதிரே). அவன் (தஸ்ய) ஒரு சமயம் (எகதா), ஆகாய விமானத்தில் உயரே பறந்து (உபரி) சென்று கொண்டிருந்தான்.

ययौ चित्ररथ: स्त्रीभि: वृतो यत्र द्विज-क्षय: ॥
யயௌ சித்ர ரத: ஸ்த்ரீபிர் 
வ்ருதோ யத்ர த்விஜ க்ஷய: || 

எந்த இடத்தில் (யத்ர) இந்த பிராம்மணனின் சரீரம் கிடந்ததோ (த்விஜ க்ஷய) இந்த மரு பூமி வழியாக தேவ ஸ்த்ரீகள் சூழ (ஸ்த்ரீபிர்
வ்ருதோ) ஆகாய விமானத்தில் சித்ரரதன் சென்று கொண்டிருந்தான் (யயௌ).

गगनाद् न्यपतत् सद्य: स-विमानो हि अवाक्-शिरा: ।
ககநாந் ந்யபதத் ஸத்ய: 
ஸவிமாநோ ஹ்யவாக் ஷிரா: |


உடனே (ஸத்ய) தலைகீழாக விமானத்தோடு (ஸவிமாநோஹ்) ஆகாயத்திலிருந்து தலைகுப்புற (யவாக் ஷிரா:) விழுந்தான் (ககநாந் ந்யபதத்).

स वालिखिल्य वचनाद् अस्थीनि आदाय विस्मित: ।
ஸ வாலிகில்ய  வசநாத்
அஸ்தீன்யாதாய விஸ்மித: | 

கந்தர்வன், வாலகில்ய ரிஷியின் மூலம் (ஸ வாலிகில்ய  வசநாத்) இந்த எலும்பு யாருடையது, என்ன ஜபம் செய்து கொண்டிருந்தான் என்று அறிந்து, அந்த கௌசீக ப்ராம்மணனுடைய எலும்பை எடுத்து (அஸ்தீன் ஆதாய) வியந்தான் (விஸ்மித:)


प्रास्य प्राची-सरस्वत्यां स्‍नात्वा धाम स्वम्-अन्वगात् ॥
ப்ராஸ்ய ப்ராசீ ஸரஸ்வத்யாம் 
ஸ்நாத்வா தாம ஸ்வம் அன்வகாத் || 

வாலகில்ய ரிஷி சொன்ன அறிவுரைப்படி, அந்த ப்ராம்மணனின் எலும்பை கிழக்கு நோக்கி பாயும் சரஸ்வதி நதியில் (ப்ராசீ ஸரஸ்வத்யாம்) போட்டு விட்டு (ப்ராஸ்ய), சரஸ்வதி நதியில் ஸ்நானம் (ஸ்நாத்வா) செய்து விட்டு, தன் இருப்பிடமான தேவலோகம் சென்றான் (தாம ஸ்வமன்வகாத்)

ஸ்ரீ ஸுக உவாச - श्रीशुक उवाच
ஸ்ரீசுகப்ரம்ம ரிஷி, பரீக்ஷித் மன்னரிடம் பேசுகிறார்

य इदं श‍ृणुयात् काले यो धारयति च आद‍ृत: ।
तं नमस्यन्ति भूतानि मुच्यते सर्वतो भयात् ॥
ய இதம்  ஸ்ருணுயாத் காலே 
யோ தாரயதி சாத்ருத: |
தம் நமஸ்யந்தி பூதாநி 
முச்யதே ஸர்வதோ பயாத் ||

பயம் ஏற்படும் காலங்களில் (காலே), யார் (யோ) இந்த நாராயண கவசத்தை கேட்டு (ய இதம்  ஸ்ருணுயாத்) நம்பிக்கையுடன் (ச அத்ருத) மனதில் அனுசந்தானம் செய்கிறார்களோ (தாரயதி), அந்த நமஸ்கரிக்க தக்க மகாத்மாக்கள் (தம் நமஸ்யந்தி பூதாநி)அனைத்து வித பயத்திலிருந்தும் (ஸர்வதோ பயாத்) விடுபடுவார்கள் (முச்யதே).


एतां विद्याम् अधिगतो विश्वरूपाद्  छतक्रतु: ।
ஏதாம் வித்யாம் அதிகத: 
விஸ்வரூபா சதக்ரது: |

இந்த (ஏதாம்) நாராயண கவசம் என்ற வித்யையை (வித்யாம்), ஆயிரம் கண்களுடைய (சதக்ரது:) இந்திரன்,
தேவர்களின் புரோஹிதனாய் இருக்கும் விஸ்வரூபனிடமிருந்து பெற்றார் (அதிகத:).

त्रैलोक्य-लक्ष्मीं बुभुजे विनिर्जित्य मृधे असुरान् ॥
த்ரைலோக்ய லக்ஷ்மீம் புபுஜே 
விநிர்ஜித்ய ம்ருதே அஸுரான் ||

இந்திர தேவன்!  அசுரர்களை போரில் (ம்ருதே) வென்று (விநிர்ஜித்ய),
மூன்று உலக ஐஸ்வர்யங்களையும் (த்ரைலோக்ய லக்ஷ்மீம்) அனுபவித்தான் (புபுஜே).