Followers

Search Here...

Saturday, 10 November 2018

பாரத நாட்டில் அரசர்களுக்கு புறமுதுகு காட்டி ஓடினாலோ, மன்னிப்பு கேட்டாலோ, மன்னிப்பது அரச தர்மமாக இருந்தது. விளைவு?

ஹிந்துக்கள் மட்டும் இருந்த காலத்தில், சனாதன தர்மத்தின் அடிப்படையில் அரசாட்சி நடந்து கொண்டு இருந்தது.

பிராமண (spiritual), வைசிய (business), சூத்ர (employee, farmer) போன்றவர்கள் நாட்டில் வாழ, இவர்களை காக்கும் பொறுப்பை க்ஷத்ரியர்கள்(protection force) ஏற்றனர்.
பாரத நாடு கலாச்சாரத்தில், செலவத்தில், இறையாண்மையில், உலகத்திற்கு முன்னோடியாக இருந்து வந்தது.
த்ரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் அவதார சமயத்தில் அஸ்வமேத யாகம் செய்து உலகையே ஒரு குடையில் ஆண்டார்.



துவாபர யுகத்தில், யுதிஷ்டிரர் தான் சக்கரவர்த்தி என்று நிலை நாட்ட, ராஜசுய யாகம் செய்தார்.
பல அரசர்கள் யுதிஷ்டிரர் சக்கரவர்த்தியாக ஒப்புக்கொண்டனர்.
சக்கரவர்த்தி என்று ஒப்புக்கொள்ளாத அரசர்கள் பாண்டவர்களிடம் போர் புரிந்தனர். அர்ஜுனன் பெரும்பாலான போரை செய்து, எதிர்த்த அரசர்களை தோற்கடித்தார்.
ஒப்பு கொண்டவர்கள், தோல்வி அடைந்த அரசர்கள் என்று அனைவரும் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

கலியுகம் ஆரம்ப சமயத்தில், அர்ஜுனனின் பேரன் பரிக்ஷித் மகாராஜன் உலகை ஒரு குடையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் வேட்டைக்கு சென்றிருந்த சமயம், மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட ஒரு காளை மாடு நிற்பதையும், அது கீழே விழுந்து விடாமல் இருக்க, அதை தாங்கி கொண்டு ஒரு பசு மாடு கண்ணீருடன் நிற்பதை கவனித்தார்.
மேலும், அரசனை போன்ற வேடம் அணிந்து ஒருவன் (கலிபுருஷன்), கையில் வாளுடன், காளையின் இருந்த ஒரு காலையும் வெட்ட கையை ஓங்கினான்.
இந்த சகிக்க முடியாத காட்சியை கண்ட பரிக்ஷித் மகாராஜா, தன் வாளை உருவி, அந்த போலி அரசனை தண்டிக்க வந்தார்.
பரிக்ஷித் மகாராஜனை கண்ட அந்த போலி அரசன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

மன்னிப்பு கேட்டவனை மன்னிக்க வேண்டும் என்பது அரச தர்மம். பரிக்ஷித் மகாராஜா மன்னித்தார்.

இதுபோல, பாரத நாட்டில் அரசர்களுக்கு இடையில் பல போர் நடந்துள்ளது.
தோற்கும் அரசன் புறமுதுகு காட்டி ஓடினாலோ, மன்னிப்பு கேட்டாலோ மன்னிக்கும் தர்மம் அரச குலத்தில் இருந்தது.

இப்படி ஜெயிக்கும் அரசர்கள், நாட்டை கைப்பற்றி, தன் அரசாட்சி செய்தனர்.
ஆனால் பொது மக்களை துன்புறுத்துவதோ, அவர்கள் வழிபாட்டை தடுப்பதோ, கோவிலை இடிப்பதோ கிடையாது.
சோழ அரசனை பல்லவன் வென்றால், அங்கு தன் பங்குக்கு கோவில்கள் கட்டுவதும், இன்னும் செழிப்பாக வாழ வழி செய்வதையும் கடமையாக கருதினர்.

இப்படி வாழ்ந்து கொண்டிருந்த நம் கலாச்சாரத்தை சீரழிக்க, வேறு நம்பிக்கை, வேறு கலாச்சார நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்கள் பாரத நாட்டிற்குள் நுழைந்தனர்.

இஸ்லாமியன் என்றால் என்ன? என்ன கொள்கை உடையவர்கள் இவர்கள்? ஏன் பாரத தேசத்தை தாக்குகின்றனர், கோவிலை இடிக்கின்றனர்? கோவிலில் வழிபடும் பொது மக்களை கொலை செய்கின்றனர்? பெண்களை ஏன் பிடித்து சென்று விடுகின்றனர்? என்று இவர்கள் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியாமல் பாரத மக்கள் தவித்து கொண்டிருந்த இக்கட்டான காலம் அது.

1024ADல் கஜினி முகம்மது என்ற ஆப்கானில் பிறந்த இஸ்லாமியன் குஜராத் தேசத்தில் உள்ள சோம்நாத் கோவிலை தாக்கினான்.
படு தோல்வி அடைந்தான் கஜினி முகம்மது. காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, சாளுக்கிய ஹிந்து அரசர் "பீமா" மன்னித்து விட்டார்.
ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, 17 முறை மீண்டும் மீண்டும் தாக்கி, தோல்வி அடைந்து, மன்னிப்பு கேட்டு, விடுவிக்கப்பட்டான்.

தோல்வியுற்ற அரசர்கள் மன்னிப்பு கேட்டால்,  மன்னிக்கப்படுவது சாதாரண விஷயமாக இருந்த கால கட்டத்தில்,
17 முறையும் மன்னிக்கப்பட்ட கஜினி முகம்மது 18வது முறை திடீர் தாக்குதல் செய்து, போரில் வென்றான்.
அங்கு இருந்த தங்கத்தால் ஆன சோம்நாத் கோவிலை இடித்து சேதப்படுத்தி, கொள்ளை அடித்தான்.
ஹிந்து அரசரை கொன்றான்.
அந்த சமயத்தில் சிதறிய சௌராஷ்டிர சமுதாய மக்களே இன்று வரை பல மாநிலங்களில் உள்ளனர்.

நம் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், படையெடுத்த இஸ்லாமியர்கள் கோவிலை இடிப்பதும், பெண்களை கற்பழிப்பதும், பொது மக்களை ஹிந்துவாக இருப்பதால் தலை சீவுவதும், கொள்ளை அடிப்பதும் நடக்க ஆரம்பிக்க, ஹிந்து அரசர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டனர்.

ஹிந்து தர்மத்தின் அடிப்படையில் பல முறை தன் மீது படையெடுத்த இஸ்லாமியர்களை மன்னித்து, அதுவே பின்னர் வினையாக அமைந்தது.


கஜினியை 17 முறை மன்னித்து விட்ட ஹிந்து அரசன் வீழ்ந்தது போல, 1191ADல் கோரி முகம்மது பஞ்சாப் வழியாக பாரத தேசம் நுழைய முயற்சி செய்த போது, அஜ்மீர், ராஜஸ்தானை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்து வந்த 24 வயது அரசர் "பிருத்விராஜ் சவுஹான்", கோரியின் படையை தோற்கடித்தார்.
படுகாயமுற்று பயந்தோடிய முகம்மது கோரியை துரத்தி சென்று பிடித்து கொல்லாமல் விட்டார்.
விளைவு,
ஒரு வருடம் கழித்து மீண்டும் படை திரட்டி வந்தான் கோரி. மீண்டும் பெரும் போர் மூண்டு, தோல்வியின் விளிம்பில் இருந்த கோரி,
எதிர்பாரா விதமாக உத்திர பிரதேச "கண்ணௌஜ்" என்ற நாட்டை ஆண்ட ஜெயச்சந்திரன் என்ற அரசன் மூலம் உதவி பெற்றான். 700 யானை படைகள், லட்சக்கணக்கான போர் வீரர்களை உதவிக்கு பெற்றான்.




தன் மகள் "சம்யுக்தா" பிருத்விராஜ் சவுஹானை காதலித்து சுயம்வரத்தில் இவனோடு ஓடி விட்டாள் என்ற ஆத்திரத்தில், கோரிக்கு உதவி செய்து, "பிருத்விராஜ் சவுஹான்" போரில் தோற்க வழி செய்தது.
பிருத்விராஜ் சவுஹான் கண்களை பிடுங்கி எரிய உத்தரவிட்டான் கோரி.
கண் இழந்த பிருத்விராஜ் சவுஹான், ஒலியினால் கூட போர் புரியும் வல்லமை உடையவன் என்று கேள்விப்பட்டு, கண் இழந்த நிலையில் கைதியாக இருக்கும் சவுஹானை பார்த்து விளையாட்டாக அம்பும் வில்லும் கொடுத்து "எங்கே, உன் திறமையை காட்டு?" என்று ஏளனமாக சிரிக்க, அதே இடத்தில் இருந்து கொண்டே ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட அது கோரியின் கழுத்தில் பாய்ந்து இறந்தான். அங்கேயே பிருத்விராஜ் சவுஹான் கொல்லப்பட்டார்.

இப்படி க்ஷத்ரிய அரசர்கள், இஸ்லாமிய கொள்கை கொண்ட அந்நியர்கள் நுழைவை தடுக்க உயிர் பலி கொடுக்க, மறு புறம் இஸ்லாமியர்கள் கோவிலை இடிப்பதும், அதை வைத்தே அரசர்களை தன் வழிக்கு கொண்டு வருவதும், பெண்களை கற்பழித்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை இஸ்லாமியன் பெயரில் வளர்ப்பதும் ஆரம்பிக்க, பெரும் கலவரம் மக்கள் மத்தியில் உண்டானது.
ஹிந்துக்களின் நிலை சொல்ல முடியாத துக்கத்தில் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

400 ஆண்டுகளாக இஸ்லாமிய ஆக்ரமிப்பால் பாரத தேசம் தத்தளித்து கொண்டிருந்த சமயம் அது.
இன்றைய பாகிஸ்தான் ஏறத்தாழ இஸ்லாமிய சுல்தான்களால் சூழப்பட்டு இருந்தது.

கோவில்கள் ஆப்கான் ஆரம்பித்து, தமிழ்நாட்டின் ஸ்ரீ ரங்கம் வரை தாக்கப்பட்டு இருந்த காலம் அது.
இடிக்கப்பட்ட கோவில்கள் இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டன.
மதுரையை பாண்டிய அரசர்களுக்கு பின், சுல்தான்கள் ஆட்சி செய்த காலம் அது. 70 வருடங்கள் மதுரை மீனாட்சி கோவில் மூடி இருந்த காலம் அது.

இந்த சமயத்தில் துக்ளக் அரசாட்சி நடந்து கொண்டிருந்தது.
"நசிருத்தின் முகம்மது துக்ளக்" என்பவன் டெல்லியை தலைமையாக கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
ஆப்கான் நாட்டின் வடக்கில் உள்ள உஸ்பகிஸ்தான் என்ற நாட்டிலிருந்து தைமூர் (Taimur or Timur) என்பவன் 1398ADம் ஆண்டு, இந்தியாவை நோக்கி படையெடுத்தான்.
இந்த சமயத்தில் முல்தான் (Multan, Pakistan) என்ற நாட்டை கவனிக்க "கைசர் கான்" (ghizr khan) என்பவனை ஆளுநராக (governor) நியமித்து இருந்தனர் துக்ளக் வம்சத்தினர்.

தைமூர் (Taimur or Timur) டெல்லி நோக்கி படையெடுக்க வருவதை பார்த்து, இவனை எதிர்த்தால் தோல்வி நிச்சயம் என்று அறிந்து, இது தான் சமயம் என்று, துக்ளக் அரசனை எதிர்க்க துணை நின்றான் "கைசர் கான்" (ghizr khan).
17 DEC 1398ADல், தைமூர் தன் ஒட்டகங்கள் முன்னும் பின்னும் பெரிய பெரிய மர துண்டுகளை கட்டி, தீயிட்டு கொளுத்தி, எதிரில் வந்த யானை படையை நோக்கி ஓட வைத்தான். தன்னை நோக்கி தீ ஜ்வாலையுடன் வரும் ஒட்டகங்களை பார்த்து பீதி அடைந்து, யானைகள் துக்ளக் படையை நோக்கி திரும்பி ஓட பெரும் சேதம் உண்டானது. போரில் எளிதாக தைமூர் வெற்றி பெற்றான்.
டெல்லியை கைப்பற்றி விட்டான்.

இந்த சமயத்தில், டெல்லியில் இருந்த ஒரு லட்சம் ஹிந்துக்களை கொன்று குவித்தான்.
ஒரு லட்சம் பேர் டெல்லியில் கொலை செய்யப்பட்டு, துக்ளக் அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வந்தான்.
பாரத தேசத்தில் இருந்த ஹிந்துக்களுக்கு, துக்ளக் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது, பெரும் நிம்மதி தருவதாக இருந்தாலும், மீண்டும் இஸ்லாமிய ஆட்சியே தொடர்ந்தது.

டெல்லியில் இருந்த செல்வங்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு, தனக்கு உதவி செய்த "கைசர் கான்" (ghizr khan) என்பவனை தன் ஆட்சியின் பெயரால் டெல்லியை ஆட்சி செய்ய சொல்லி சுல்தான் ஆக்கினான்.

தன் நாட்டிற்கு கொள்ளை அடித்த செல்வங்களோடு சென்று மேலும் பல போர்களை தன் வாழ்நாள் முழுக்க செய்தான்.
தைமூர் காலத்தில், இவனால் உலக மக்கள் தொகையில் 5% சதவீத மக்கள் (17 மில்லியன்) கொல்லப்பட்டனர்.

"கைசர் கான்" (ghizr khan) தைமூர் மூலமாக கிடைத்த பெரும் அரசாட்சியை, "சையது வம்சம்" என்று புது இஸ்லாமிய ஆட்சியின் பெயரில் பாரத நாட்டில் தொடங்கினான்.


சையது வம்ச இஸ்லாமியர்கள் சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி  செய்தனர்.
இதற்கு பின், ஆப்கான் நாட்டை சேர்ந்த லோதி வம்ச இஸ்லாமியர்கள் டெல்லியை கைப்பற்றினர்.
லோதி வம்ச ஆட்சி சமயத்தில் (1451AD முதல் 1526AD வரை 70 வருடங்கள்), ஆப்கான் நாட்டை சேர்ந்த பஸ்துன் இனத்தை சேர்ந்த பழங்குடியினர் பாரத தேசத்துக்குள் நுழைந்தனர்.

பாபர் என்ற உஸ்பகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாபர் என்ற இஸ்லாமியன் டெல்லியை கைப்பற்றினான்.
லோதி ஆட்சி முடிந்து, முகலாய வம்ச இஸ்லாமிய ஆட்சி பாரத தேசத்தை சூழ்ந்தது.
பாபர் தன்னுடைய 4 வருட டெல்லி ஆட்சியில் அயோத்தியா போன்ற நகரங்களில் இருந்த ஹிந்துக்களை தலை சீவினான்.
இந்த சமயத்தில் தான் ஸ்ரீ ராமர் அவதரித்த அயோத்தியில் இருந்த கோவிலை இடித்து அதன் மீது மசூதி எழுப்பினான்.

பாபரை தொடர்ந்து இவன் வம்சத்தினர் ஹுமாயூன், அக்பர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று தொடர்ந்து ஹிந்துக்களின் மீது பல தாக்குதல் ஏற்பட்டது.
பாரத தேசத்துக்குள் தெற்கு பகுதியான கேரள தேசம் கோழிக்கோடு வழியாக 1498ADல் நுழைந்திருந்த கிறிஸ்தவ மத போர்ச்சுகல்காரன் (வாஸ்கோட காமா) பெரும் வியாபாரம் ஐரோப்ப கண்டத்தில் செய்து வந்தான்.

இவர்களை போன்று தானும் வியாபாரம் செய்ய, மற்றொரு கிறிஸ்தவ நாடான பிரிட்டிஷ்காரர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அனுமதியுடன் "ஜான் கம்பெனி" என்ற "பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி" குஜராத்தில் உள்ள சூரத் கடற்கரை நோக்கி 1612ADல் வந்தது.
அப்பொழுது டெல்லியை ஆண்டு கொண்டிருந்தான் ஜஹாங்கீர்.
இவன் அனார்கலி என்ற நாட்டியகாரியை காதலித்தான். முகலாய அரசி ஆக்க முடியாது என்பதால், இவள் உயிரோடு புதைக்கப்பட்டாள்.
ஜஹாங்கீர் நூர்ஜஹான் என்பவளை மணந்தான். பெயர் அளவில் சுல்தான் என்று இருந்தாலும், நூர்ஜஹான் தானே ஆட்சி செய்தாள்.

ஜஹாங்கீர் பெரும் குடிகாரனாக இருந்தான்.
இவனிடம் சாமர்த்தியமாக பேசி, தன்னிடம் கொண்டு வந்து மது பானங்களை கொடுத்து, சூரத் நகரில் இருந்து கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்.

அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் தான் ஹிந்து அரசர்களில் மராட்டிய அரசர் "வீர சிவாஜி" கோவிலை இடித்து, ஹிந்து பொது மக்களை கொன்று,  அதர்மம் செய்யும் இவர்களை மன்னிக்கும் தவறை செய்யாமல் எதிர்த்தார்.
தன்னுடைய வாழ்நாளில் ஒரு போரில் கூட தோல்வியை சந்திக்காத, பெரும் வீரனாக வாழ்ந்தார் வீரசிவாஜி.
கர்நாடக, தெலுங்கு, தமிழ்நாட்டு ஹிந்துக்கள் விஜயநகர பேரரசு காலத்தில் துக்ளக் இஸ்லாமியர்களால் அவதிப்பட்ட போது, காப்பாற்றபட்டது போல, முகலாய ஆட்சி காலத்தில் மராட்டிய சாம்ராஜ்யம் நிறுவி, இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர் மராட்டிய மன்னர்கள்.

இதற்கிடையில் பிரிட்டிஷ்காரனும், போர்ச்சுகல்காரனும் கை கோர்த்து கொண்டனர்.

இஸ்லாமிய சுல்தான் வீழ்ச்சி அடைந்த சமயத்தில், மராட்டிய மன்னர்கள் ஹிந்துக்களை காக்க, பாரத தேசம் மீண்டு வர ஆரம்பித்தது.

இந்த சமயத்தில், பிரிட்டிஷ் ராணுவம் மராட்டிய மன்னர்களுடன் சண்டைக்கு 1775ஆம் ஆண்டு தயாரானது.
Anglo-maratha war I என்று அழைக்கப்படும் இந்த போர் 7 வருடங்கள் நடந்தது.
இறுதியில் பிரிட்டிஷ் ராணுவம் மராட்டியர்களிடம் தோற்றது.
நானா பட்னவிஸ் என்ற மராட்டிய மந்திரியுடன் கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்கள் ஒப்பந்தம் செய்து சமாதானம் செய்து கொண்டனர்.

வேரோடு இவர்களை அழிக்காமல் விட்டதால், மீண்டும் கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்கள் 1803ஆம் ஆண்டு இரண்டாவது முறை Anglo-maratha war II தாக்குதலில் ஈடுபட்டனர்.
மராட்டியர்களால் இஸ்லாமிய ஆட்சி அழிவை நோக்கி செல்கிறது என்பதால், லோதி வம்ச அரசாட்சியில் உள்ளே புகுந்திருந்த ஆப்கான் நாட்டை சேர்ந்த பஸ்துன் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, மராட்டிய ஹிந்து மன்னர்களை எதிர்த்தனர்.

இது சமயத்தில் உதவி செய்ய, மராட்டியர்கள் முதல் முறையாக தோல்வியை சந்தித்தனர்.


ஹிந்துக்கள் எதிராக கிடைத்த இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த, ஆப்கான் பழங்குடியின தலைவன் "முகம்மது பய்ஸ் அலி கான்" என்பவனை கௌரவிக்கும் வகையில், ஹரியானவில் உள்ள பட்டோடி என்ற கிராமத்திற்கு நவாப் (தலைவன்) ஆக்கியது.

Nawab of pataudi என்று அழைக்கப்பட்ட இந்த ஆப்கான் தலைவன் 1804 முதல் 1829 வரை இருந்தான். அதன் பின்னர் அவன் பரம்பரை இந்த ஊரின் நவாப் என்று ஆண்டு கொண்டிருந்தது.

இதில் பிரிட்டிஷ்காரர்கள் வெற்றி பெற்று பல மராட்டிய இடங்களை தங்கள் ஆட்சிக்கு உட்படுத்தினர்.

இதை தொடர்ந்து மராத்திய சாமராஜ்யம் தன் பலத்தை காலப்போக்கில் இழந்தது.

மீண்டும் 1817ADல் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு மூன்றாவது முறை Anglo-maratha war III தாக்குதலில் ஈடுபட்டனர். மராட்டிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

ஏறத்தாழ பாரத தேசம் முழுவதும்  பிரிட்டிஷ்காரர்கள், போர்ச்சுகல்காரர்கள், பிரெஞ்ச்காரர்கள், ட்ச்காரர்கள், போன்ற கிறிஸ்தவ நாட்டினாரால் தெற்கு பாரத தேசம் முழுவதும் பிடிக்கப்பட்டது.
முகலாய இஸ்லாமிய அரசு 1857ல் முடிவுக்கு வந்து, பாரத தேசம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கையில் சிக்கியது.

1947ல் இந்தியா பிரிட்டிஷ்காரர்களை விரட்டி, சுதந்திரம் பெற்றது.
1000 வருட இஸ்லாமிய ஆக்ரமிப்பால், ஹிந்துக்களில் பல லட்சம் பேர் இஸ்லாமியர்கள் ஆக்கப்பட்டு இருந்தனர்.
இவர்கள் தங்களுக்கு தனியாக வாழ இடம் வேண்டும் என்று கேட்க, சிந்து தேசத்தை பாகிஸ்தான் என்று பெயரிட்டு, பங்களாதேஷ் என்ற மற்றோரு பகுதியையும் இஸ்லாமியர்களாகி இருந்தவர்கள் வாழ வழி செய்து நாட்டை பிரித்து சுதந்திரம் அடைந்தது.

இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தான் அனுப்பாமல், 'இருப்பவர்கள் இருக்கலாம்' என்று சொல்ல, பலர் இந்தியாவில் தங்கினர்.
இவர்கள் இன்று வரை அயோத்தி கோவிலை திருப்பி கட்டுவதற்கும், ஹிந்துக்கள் தங்கள் இழப்பை சரி செய்து கொள்வதற்கும் பெரும் தடையாக இருந்து விடுகின்றனர்.

தெற்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவ ஆட்சி நடந்ததால், கிறிஸ்தவ மத மாற்றம் பரவலாக நடந்து பல ஹிந்துக்கள் இந்த பகுதிகளில் கிறிஸ்தவர்கள் ஆகி, இவர்களும் ஹிந்துக்களுக்கு எதிராக பெரும் தடையாக இருக்கின்றனர்.

1971ஆம் ஆண்டு வரை ஆப்கான் நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் "nawab of pataudi"யாக ஆண்டு கொண்டிருந்தனர்.
இந்திய சட்டத்தின் படி, அன்று "nawab of pataudi"யாக இருந்த மன்சூர் அலி கான் பட்டோடி அரச பதவிகள் பறிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இவர்கள் 1971 வரை இருந்ததால், இவர்களுக்கும் இந்திய குடிமகனாக வாழ அனுமதித்தது.

மராட்டிய ஹிந்து அரசர்கள் எதிராக போரிட்டு, பிரிட்டிஷ் ராணுவத்துக்கு துணை இருந்த இவர்கள், காலப்போக்கில் பிரிட்டிஷ் நாட்டினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.
கிரிக்கெட் என்ற விளையாட்டில், மன்சூர் அலி கான் பட்டோடி இந்தியாவுக்கு தலைமை ஏற்று விளையாடினார்.

இவர் ஹிந்தி சினிமாவில் நடித்த ஹிந்து பெண்ணான சர்மிளா தாகூர் என்ற பெண்ணை மணந்து, ஒரு பெண், ஒரு பையன் பெற்றனர்.
இவர்கள் இஸ்லாமியர்களாகவே வளர்க்கப்பட்டனர்.
இவர் மகன் "saif ali khan" தன் அம்மாவை போன்று சினிமா உலகில் சென்று நடிக்க ஆரம்பித்தார்.
இவருக்கு இரண்டு மனைவிகள்.
இருவருமே ஹிந்து பெண்கள்.
முதல் மனைவியுடன் ஒரு பெண் பிள்ளையும், இரண்டாவது மனைவி "கரீனா கபூர்" மூலம் ஒரு ஆண் குழந்தையும் பெற்றார்.

இந்த ஆண் குழந்தைக்கு தன் ஆப்கான் வழி வம்சத்தில் வந்த தைமூர் என்பவனின் பெயரை தன் பையனுக்கு வைத்தார்.

டெல்லியில் நுழைந்து ஒரே நாளில் ஒரு லட்சம் ஹிந்துக்களை கொன்ற தைமூர் பெயரை வைத்தது, மராட்டிய ஹிந்துக்களுக்கு எதிராக இவர்கள் பரம்பரை ஈடுபட்டது போன்றவை, saif ali khan மேல் எதிர்ப்பு அலைகளை ஹிந்துக்களிடையே ஏற்படுத்தியது.



Saturday, 27 October 2018

திருமலையில் மட்டும் பெருமாள் தடையில்லாமல் எப்படி அணுகிரஹம் செய்கிறார்? அலர்மேல் மங்கையான மகாலட்சுமி (அலமேலு தாயார்) எப்படி நமக்கு அனுக்கிரஹம் கிடைக்க உதவுகிறாள்? தெரிந்து கொள்வோமே

அகல கில்லேன் இறையும்
என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
- நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா"

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், எம்பெருமான் சங்கல்பத்தை உணர்ந்து, ஏழு மலையாக ஆகி பூலோகத்திற்கு வந்து விட்டார்.
உன்னதமான இடத்தில் இருந்தால் தான், கருணையை அனைவருக்கும் வர்ஷிக்க முடியும் என்பதால், திருமலையின் உச்சியில் போய், எம்பெருமான் அர்ச்ச அவதாரம் செய்து நின்று விட்டார்.
கருணையே வடிவானவள் மகாலட்சுமி.
க்ஷீராப்தியில் இருந்து பெருமாள் பூலோகம் வந்து விட, தனக்கொரு இடம் தேடினாள்.

கருணையே வடிவான மகாலட்சுமி திருமலையை விட உயர்ந்த இடத்தை தேடினாள்.
திருமலையை விட உயரமான இடம், எம்பெருமானின் வக்ஷஸ்தலமே என்று, அங்கு போய் அமர்ந்து விட்டாள்.
திருமலையில் எம்பெருமான் வக்ஷஸ்தலத்தில் (பெருமாள் மார்பில்) எப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாள் மகாலட்சுமி.

மலர்ந்த (அலர்) தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிக்கு "அலர்மேல் மங்கை" (அலமேலு தாயார்) என்று பெயர்.

இப்படி எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து, இனி ஒரு நொடி பொழுது (இறை பொழுதும்) கூட உங்களை விட்டு பிரிய மாட்டேன் (அகல இல்லேன்) என்று அமர்ந்தாள் அலர்மேல் மங்கையான மகாலட்சுமி.

எம்பெருமானை தனியாக வழிபடுவதை விட, தாயாரையும் சேர்த்து வழிபடும் போது தான், பெருமாள் தடையில்லாமல் அணுகிரஹம் செய்கிறார்.

"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று நம்மாழ்வார் அழைக்கும் போது,
'தாயாரை முதலில் சொல்லி, அவளை முன்னிட்டு,  எம்பெருமானிடம் சரணாகதி' செய்கிறார்.

மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) எம்பெருமான் மார்பில் இருப்பதால் (நிவாசம்), வெங்கடேச பெருமாளுக்கு, "ஸ்ரீனிவாச பெருமாள்" என்றும் பெயர் வந்தது.

எப்படி பகவானை நாம் அணுக வேண்டும்?
எப்படி அணுகினால், பகவான் தடையில்லாமல் நமக்கு அணுகிரஹம் செய்வார்? என்பதை இந்த ஒரு பாசுரமே நமக்கு காட்டி விடுகிறது.

இப்படி திருமலையில், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளே மகாலட்சுமி!!
இப்படி அமர்ந்தது அவள் சுகத்திற்காகவா? இல்லை பெருமாள் சுகத்திற்காகவா? என்று கேட்டால், இரண்டுமே இல்லையாம்.
நாம் அனைவரும் சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளாம் மகாலட்சுமி.

அது எப்படி?
பொதுவாக ஆழ்வார்கள், மற்ற திவ்ய தேசம் சென்று அங்கு இருக்கும் பெருமாளை சேவிக்கும் போது பிரேம பக்தியுடன் கொஞ்சி மகிழ்வார்கள்.
ஆனால் திருமலை வந்து விட்டால் மட்டும், ஆழ்வார்கள் அனைவரும், கதறி அழுது சரணாகதி செய்து விடுகின்றனர்.





நம்மாழ்வார், திருமலையப்பனிடம் வந்து,
"திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று கதறி அழுது சரணாகதி செய்கிறார்.

திருமலையப்பனிடம் வந்தால் மட்டும் ஏன் இப்படி ஆழ்வார்களின் மனோபாவத்தில் கூட வித்தியாசம் தெரிகிறது?
மற்ற திவ்ய தேச பெருமாளும் இவர் தானே?
இருந்தும்,
திருமலையப்பனுக்கு மட்டும் என்ன விஷேசத்தை ஆழ்வார்கள் பார்த்தார்கள்?

பொதுவாக, திருமலையை தவிர்த்து, மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியில் இருப்பார். தாயார் தனி சன்னதியில் இருப்பாள்.
மற்றும் சில திவ்ய தேசங்களில் பெருமாளும் தாயாரும் ஒரே சந்நிதியில் அருகருகே கூட இருப்பார்கள்.

பொதுவாக தாய்க்கு தான், தன் பிள்ளை தவறே செய்தாலும் கூட, அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், கருணையே செய்ய தோன்றும்.
தாயுள்ளம் மகத்தானது.

பொதுவாக பெருமாள், தகப்பன் ஸ்தானத்தில், ஒரு நீதிபதி ஸ்தானத்திலும் நம்மை பார்ப்பாராம்.
பக்தனே சில சமயம் தவறு செய்தாலும்  பாரப்பட்சம் காட்ட கூடாது என்று நினைப்பாராம்.

பத்ராசல ராமதாஸர், ராமருக்கு கோவில் கட்ட இஸ்லாமிய அரசன் தானிஷாவின் வரி பணத்தை எடுத்து கட்டி விட்டார்.
இதற்கு 12 வருடம் சிறையில் தள்ளி, தினமும் சவுக்கடி கொடுக்க உத்தரவு இட்டான் தானிஷா.
உடம்பெல்லாம் ரத்தம் ஏற்பட்டு, தினமும் சிறையில் அழுது, ராமரிடம் கீர்த்தனைகள் இயற்றினார்.
ராமரோ தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்று ஒரு நீதிபதி போல பேசாமல் இருந்தார்.
கடைசியில் இனி தாளாது என்ற நிலையில், ராமதாசருக்கு சீதையின் நினைவு வர,
"சீதம்மா...  இந்த ராமதாசனை காப்பாற்ற வருமாறு, நீயாவது அருகில் இருக்கும் ஸ்ரீ ராமரிடம் சொல்லம்மா..."
என்று கதற, சீதை ஸ்ரீ ராமரிடம் "இனி ஒரு க்ஷணம் தாமதிக்காமல் காப்பாற்றுங்கள்" என்று சொல்ல,
தானே ஒரு மனிதனாக வந்து, தானிஷாவை பார்த்து, தங்க கட்டிகளாக வரி பணத்தை வட்டியுடன் கட்டி, விடுதலை செய்யுமாறு செய்து மறைந்து விட்டார்.

பெருமாளை மட்டும் நாம் தனியாக பிரார்த்தனை செய்தால், நம் குற்றம் குறை அவருக்கு தெரிவதால், கட்டுப்பாடு இல்லாமல் அணுகிரஹம் செய்ய கொஞ்சம் தயங்குவாராம்.

ஸ்ரீ ரங்கம் உட்பட மற்ற திவ்ய தேச பெருமாள் கூட, தாயார் அருகில் இல்லாமல் இருப்பதால், ஆழ்வார்களுக்கு கூட தடையில்லாமல் அணுகிரஹம் செய்யாமல் இருந்தார்களாம்.

'அணுகிரஹம் குறைவில்லாமல் செய்யலாமே' என்று மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காரணம் கேட்டால், "இன்னும் இதயம் கணியட்டும்" என்று மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும்  சொல்வார்களாம்.

ஒரே பெருமாள் தான் என்றாலும், அந்தந்த திவ்ய தேச மகத்துவம் பொருத்து தான் பழகுவார்களாம்.

இப்படி ஏன் அணுகிரஹம் செய்ய மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும் தயங்குகிறார்கள்? என்று கேட்டால், நமக்காக சிபாரிசு செய்ய தாயார் கூட இல்லை என்பதால் தான்.

எம்பெருமானை நாம் தனியாக சேவிக்கும் போது, நம் தகுதி, நேர்மையை பார்ப்பாராம். இதனாலேயே அணுகிரஹம் செய்ய தயங்குவாராம்.

ஸ்ரீ ராம அவதார சமயத்தில், 'தானும் வனவாசம் வருவேன்' என்று லக்ஷ்மணன் வந்து விட்டார்.
அன்றைய இரவு பொழுதில், லக்ஷ்மணன் பார்த்து, "பொழுது விடிந்ததும் நீ வேண்டுமானால் அயோத்தி திரும்பி செல்கிறாயா?" என்று ஸ்ரீ ராமர் கேட்டு விட்டார்.
ஸ்ரீ ராமரை விட்டு நொடி பொழுது பிரிந்தாலும், உயிர் போய் விடும் என்ற நிலையில் இருந்த லக்ஷ்மணன், செய்வதறியாது ஸ்ரீ ராமரின் பாதங்களில் விழுந்து விட்டார்.
ஸ்ரீ ராமரின் சம்மதத்தை பெற, ஸ்ரீ ராமரிடம் கேட்டால் நடக்காது என்று அறிந்து, தலையை தூக்கி, அருகில் நின்று இருந்த சீதையை பரிதவிப்புடன் பார்த்து, தனக்கு சிபாரிசு செய்ய பிரார்த்தித்தார்.

லக்ஷ்மணனின் நிலையை புரிந்து கொண்ட சீதை, ஸ்ரீ ராமரை பார்த்து, " எப்படி குளத்தில் இருக்கும் மீனை வெளியே எடுத்தால் அதற்கு உயிர் தங்காதோ, அது போல லக்ஷ்மஷ்ணன் உங்கள் பிரிவை தாள மாட்டான்."
என்று சொல்ல, ராமர் மறு பேச்சின்றி அழைத்து கொண்டார்.
அதற்குப்பின், கடைசி வரை லக்ஷ்மணனை பிரிந்து ஒரு க்ஷணம் இருந்ததில்லை ஸ்ரீ ராமர்.


தாயாருக்கு அத்தனை மதிப்பு கொடுப்பாராம் பெருமாள்.

தாயாரை முன்னிட்டு, பெருமாளை சேவித்தால், நம் தகுதி பார்க்காமல் அணுகிரஹம் உடனே செய்து விடுவார்.

தனியாக தான் சந்நிதியில் இருந்தால், நமக்கு பெருமாள் அணுகிரஹம் செய்வாரோ என்னவோ என்று நினைத்த தாயார், திருமலையில் எம்பெருமான் நெஞ்சில் போய் அமர்ந்து விட்டாளாம்.

பெருமாள், தாயாரை பார்த்து, 'இப்படி என் நெஞ்சோடு அமர்ந்து விட்டாயே, உனக்கு வேண்டுமானால் தனி சன்னதி இருக்க செய்யட்டுமா?" என்று கேட்க,
"வேண்டவே வேண்டாம்" என்றாளாம்.
"சரி, அப்படியென்றால் ஒரே சந்நிதியில் அருகேயே இருக்கிறாயா?" என்று கேட்க,
"அதுவும் வேண்டாம்"
என்றாளாம் தாயார்.
மேலும்,
'எனக்கு தனி சந்நிதி கொடுத்து, ராவணன் தூக்கி போனான் என்ற அனுபவமே போதும்.
தனி சந்நிதி கொடுத்தால், மற்றவர்களை நம்ப இயலவில்லை.
உங்கள் அருகிலேயே இருந்தாலும், உங்களையும் நம்ப முடியாது.
ஒரு சமயம், கஜேந்திரன் என்ற ஒரு யானை உங்களை கூப்பிட்டான் என்றதும், அருகில் இருந்த நான் கூட முக்கியமில்லை என்று, கிளம்பி விட்டீர்களே.
இதனால் எனக்கு தனியாக இடமும் வேண்டாம், உங்கள் பக்கத்திலும் இடம் வேண்டாம்.
நான் இனி இறை பொழுது கூட அகல கில்லேன், அகல கில்லேன்,  நான் உங்கள் நெஞ்சோடு தான் இருப்பேன்.
நீங்கள் எந்த பக்தன் அழைத்தாலும், என்னையும் தூக்கி கொண்டு செல்லுங்கள்"
என்று பிடிவாதம் செய்து அமர்ந்து விட்டாளாம் தாயார்.

இப்படி, நமக்கு தடையே இல்லாமல் அணுகிரஹம் செய்ய, அலர்மேல் மங்கை தாயார் வக்ஷஸ்தலத்தில் இறை பொழுது கூட அகல கில்லேன் என்று அமர்ந்து விட்ட ஸ்ரீனிவாச பெருமாளே என்பதை தான், நம்மாழ்வார்,
"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று சொல்கிறார்.

திருமலையில், பெருமாளுக்கு உள்ள விசேஷம் இதுவே.

திருமலையப்பனை காண நாம் மலை ஏறி செல்லும் போது, பெருமாள் பார்ப்பதற்கு முன்,  ஸ்ரீனிவாசனின் மார்பில் இருக்கும் தாயார், நம்மை முதலில் பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நம் பாவ புண்ணியத்தை பார்க்கும் முன், தாயார் முந்திக்கொண்டு, "நம் குழந்தை, அணுகிரஹம் செய்யுங்கள்" என்று நமக்காக சிபாரிசு செய்து விடுகிறாள்.

தாயார் பார்த்ததினாலேயே, பெருமாள், நம் தகுதி பாராமல், உடனே அணுகிரஹம் செய்து விடுகிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.

திருமலையப்பனுக்கு உள்ள இந்த தனித்துவம், மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காண இயலாது.

திருமலையில், தாயாரை தன் மார்போடு வைத்து இருப்பதால், தடையின்றி நம்மிடம் கருணையை வர்ஷிக்கிறார் பெருமாள்.

நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

சொர்க்கத்தில் உள்ள தேவர்கள், தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள், பிரம்மா உட்பட ஒரு நாள் அழிந்து விடுவார்கள். ஆனால் வைகுண்டத்தில் உள்ள தேவர்களான நித்ய பார்ஷதர்கள் வைகுண்ட நாதனை போல அமரர்கள்.
வைகுண்ட நாதனை போல அவர்களும் என்றுமே இருப்பவர்கள்.
பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்ட நாதனுக்கு கூட, உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற பொறுப்பு உண்டு.
நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு அந்த பொறுப்பு கிடையாது என்பதால், இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே. தேவைப்பட்டால், இவர்களே ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை வந்து போகவும் முடியும். சுதந்திரமானவர்கள், அமரர்கள்.

அப்படிப்பட்ட அமரர்களான நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), பூலோகத்தில் உள்ள திருமலை வந்து சேவை செய்ய விரும்பும் பெருமை உடைய திருவேங்கடத்தானே என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை நமக்கு காட்டுகிறார்.

வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே திருமலை வந்து சேவிப்பார்கள் என்றால், இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடி அடையாமல் வேறு என்ன செய்வேன்?

நித்ய பார்ஷதர்களுக்கு திருமலை இல்லையென்றால், வைகுண்டம் இருக்கிறது. அங்கு போய் உமக்கு சேவை செய்து கொள்வார்கள்.
அவர்களே வைகுண்டம் வேண்டாம், திருமலை தான் வேண்டும் என்று வரும்போது,
பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்கிறார் நம்மாழ்வார்.

வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி. புகலிடம் இல்லாத அடியேன், உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே என்கிறார்.

இங்கு "உன் திருவடியில் புகுந்தேனே" என்று கூறாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"என்கிறார்.

இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார், மோக்ஷம் வேண்டினாலும், உடனே தந்து விட வேண்டாம், கொஞ்சம் திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து விட்டு, பின்னர் மோக்ஷம் கொடுங்கள் என்கிறார்.

மோக்ஷம் யாருக்கு கொடுக்கிறார் பெருமாள்?
இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.
1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தாளாது என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல்" சரணாகதி செய்து விட்டானானால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ஞானியும் ப்ராரப்த கர்மாவை அனுபவிக்கிறார்கள்.


நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தாலும்,
பிராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவெங்கட நாதனுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம் ஆழ்வார்.

இதை குறிப்பதாக, "உன் திருவடியில் அமர்ந்து" என்று சொல்லி, எப்பொழுது பிராரப்த காலம் முடியுமோ, அப்பொழுது திருவெங்கட நாதனுக்கு திருமலையில் செய்த சேவையை, வைகுண்டம் சென்று செய்வோம் என்று பிரார்த்தித்தார்.


Thursday, 25 October 2018

திருமலையாக இருக்கும் ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்துள்ளார். ஆதிசேஷன் மேல் வெங்கடேச பெருமாள் எங்கு இருக்கிறார்?

ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே சிம்மாசனம் ஆகி விடுகிறார்.



பாற்கடலில் எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே பஞ்சுபடுக்கை ஆகி விடுகிறார்.
எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு குடையாகி விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)
எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு பாதுகை ஆகி விடுகிறார்.
(திருமலையப்பன் நிற்க  சேஷாத்திரி (திருமலை) ஆனார்)

இப்படி
சர்வ தேச (எந்த இடத்திலும்),
சர்வ கால (எந்த சமயத்திலும்),
சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)
எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவராக இருக்கிறார் ஆதிசேஷன்.

எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.

ஏழுமலைகளாக எந்த யுகத்திலோ தோன்றிவிட்ட ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு காத்து கொண்டிருந்தார்.

ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார். காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது.
1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)
2. நாராயணாத்ரி
3. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)
4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)
5. கருடாத்ரி
6. வெங்கடாத்ரி (வெங்கடேச பெருமாள் இருக்கும் இடம். பாவங்கள் பொசுங்கும் மலை)
7. சிம்மாத்ரி


"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.

ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? என்று பார்க்கும் போது,
காளஹஸ்தி என்ற இடத்தில் ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பித்து,
அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் அவர் தரித்து இருந்த நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் ஆனந்த விமானத்தில் தன்னை வெளிக்காட்டி, அந்த சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார்.
ஆதிசேஷனின் இதய பகுதியில் உருவான க்ஷேத்ரமே "அஹோபிலம்".
ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது.

காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.

வைகுண்டத்தை பூலோகத்தில் கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன், பகவான் கருணையின் காரணமாக.




இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.
இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, "ஆகாச கங்கை"யாக பொழிய ஆரம்பித்தாள்.

கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.

மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது திருமலை, எம்பெருமானை வரவேற்க.

மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான் என்பது புரியும்.

காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.

ஏழு மலையையும்,  வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல் ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார் என்று அறிந்து, இனி வைகுண்டத்தில் என்ன வேலை என்று திருமலைக்கு வந்து விட்டதோ என்று தோன்றுமாம் பக்தனுக்கு.

வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார் என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை விட்டு விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது. பெருமாளின் வருகைக்கு
காள என்றால் "சிலந்தி",
ஹஸ்தி என்றால் "யானை".
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது. இன்று வரை சிவ ஸ்தலமாகவும் உள்ளது.
பெருமாளும், சிவனும் பிரித்து பார்த்து வழிபடும் பழக்கம் இருந்ததில்லை என்பது இதிலேயே தெரிகிறது.

ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார்.  பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.

இயற்கையில் தோன்றியது இந்த மலை அல்ல, இங்கு வசிக்கும் எந்த மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ நமக்கு தெரியாது.


மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் ராமானுஜரின் உகப்புக்கு செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்க புறப்பட்டார்.

பயணத்திற்கு திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.

கிளம்பி வெகுதூரம் சென்ற பின், சரி சாப்பிடலாம் என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார் அனந்தாழ்வார்.
அவர் சிஷ்யர்கள், "எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று யோசிக்க,
அனந்தாழ்வார், "இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே.
திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது. இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.
திருமலை வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்" என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே,  திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.
நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர், அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர் என்று புரிகிறதே.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும். 
அந்த பக்தி நமக்கு வர வேண்டாமா?

ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது, பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது, இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா ஒரு பக்தனுக்கு?.
ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டுமே.

எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது, இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே. இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட எந்த மகானோ என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.

ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.


ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017ல் அவதாரம் செய்தார்.
ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலைநம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி, திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்? என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி இருக்க கட்டி, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.
ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.
அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.

தன் மருமகன் தான் 'ராமானுஜர்' பூர்வ ஆஸ்ரமித்தில் என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.

"யதி ராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை மேல் கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால், யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!

நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன் சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல, திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது. கால் வைத்து வாருங்கள் என்று இதை சொல்ல தான் ஓடிவந்தேன்"
என்றார் திருமலை நம்பி.

"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ. நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?" என்று ராமானுஜர் கேட்க,

"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை. யாரை பார்த்தாலும் இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ' என்ற ஆழ்வார் பாடிய பிறகு, இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."
என்றார்.

ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.

திருமலை ஏறி சென்று, ஆதிசேஷனின் தலை உச்சியில் இருக்கும் ரத்தினத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாளை தரிசிப்போம்.


Saturday, 20 October 2018

"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லாமல் "அறம், பொருள், இன்பம், வீடு" என்று ஏன் சொன்னார்கள்? காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு "விடுதலை" என்றும் பொருள் உண்டு, "வீடு" என்ற பொருளும் உண்டு.
தமிழில் "மோக்ஷத்தை" சொல்லும் போது "வீடு" என்ற சொல்கிறார்கள்.

"தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்" என்று வேதம் கூறும் நான்கு விஷயங்களை.
"அறம், பொருள், இன்பம், வீடு" என்று தமிழிலில் சொல்கிறார்கள்.
நன்றாக கவனித்தோமென்றால்,
"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லவில்லை.
மோக்ஷத்தை, "வீடு" என்ற அர்த்தத்தை கொண்டு ஏன் சொன்னார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழர்கள்?

1. தர்மம், (धर्म) (rules)
2. அர்த்தம், (अर्थ) (wealth)
3. காமம், (काम) (desire)
4. மோக்ஷம் (मोक्ष) (freedom from rebirth)
என்ற நான்கு விஷயங்களை நோக்கி தான் மனிதர்கள் எப்பொழுதும் பயணிக்கின்றனர் என்கிறது சப்த ப்ரம்மமாகிய வேதம்.

இதை பொதுவாக 4 புருஷார்த்தங்கள் (Purushartha - லட்சியம்) என்று சொல்கிறது.



இதில் "மோக்ஷம்" என்ற விஷயத்தை நோக்கி செல்லும் மனிதர்கள் மட்டும், மீண்டும் பிறவி எடுக்காமல், சம்சார கடலில் இருந்து பகவானால்  விடுவிக்கப்படுகின்றனர்.
பிறவியில் இருந்து விடுதலை பெறுகின்றனர்.
ஆகவே, "மோக்ஷத்தை" தன் லட்சியமாக கொள்ளும் மனிதர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கில், அனைவரும் கட்டாயம் தன் வாழ்க்கையின் லட்சியமாக கொள்ள வேண்டியது "தர்மம்" (Human Rules) என்று சொல்லப்படுகிறது.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற இந்த நான்கு சமஸ்கரித சொல்லுக்கு ஈடாக, தமிழிலில்
1. அறம் (சமஸ்கரித சொல் தர்மம்)
2. பொருள் (சமஸ்கரித சொல் அர்த்தம்)
3. இன்பம் (சமஸ்கரித சொல் காமம்)
4. வீடு (சமஸ்கரித சொல் மோக்ஷம்)
என்று சொல்கிறோம்.

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு, "விடுதலை" என்பது தான் நிகரான தமிழ் சொல்.

பின்பு ஏன்?
"அறம், பொருள், இன்பம், விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று தமிழிலில் சொன்னார்கள்?

காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

'மோக்ஷம்' என்ற சொல் இரண்டு மோக்ஷத்தை குறிக்கிறது.
1. 'கைவல்யம்' என்பதும் ஒரு மோக்ஷம்.
2. 'வைகுண்டம்' என்பதும் ஒரு மோக்ஷம்.

கைவல்யம் என்றால் என்ன?
வைகுண்டம் என்றால் என்ன?
என்று புரிந்து கொள்ளும் போது, ஏன் 'மோக்ஷம்' என்ற சொல்லுக்கு 'வீடு' என்று தமிழில் சொன்னார்கள்? என்று புலப்படும்.

செய்த பாவத்திற்கு, இறந்த பின், ஜீவ ஆத்மா நரகம் சென்று தண்டனை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

செய்த புண்ணியத்திற்கு, இறந்த பின், ஆத்மா சொர்க்கம் முதல் பிரம்ம லோகம் வரை, சென்று போகங்களை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

ஆக, பாவம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு.

பிற மதங்களும், புண்ணியங்கள் செய்தால் சொர்க்கம் என்கிறது.

அந்த சொர்க்கமும் நிரந்தரமல்ல என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.




சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் தேவர்கள்.
இவர்கள் நம் புண்ணியம் தீர்ந்த பின், கீழ் லோகமாக இருக்கும் பூமிக்கு மீண்டும் பிறக்க அனுப்பி விடுகின்றனர்.

பிற மதங்கள் சொர்க்கத்துக்கு மேல் ஒன்று இருப்பதாக கூட நினைக்கவில்லை. அதுவே நிரந்தரம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.

நாமோ, சொர்க்க லோகத்துக்கும் மேல், இன்னும் 4 லோகங்கள் உள்ளது என்று சொல்கிறோம். அதுவும் நிரந்தரமில்லை என்றும் சொல்கிறோம்.
சொர்க்க லோகத்துக்கும் மேல்,
மகர லோகம் (stars), ஜன லோகம், தப லோகம், கடைசியாக ப்ரம்ம லோகம் என்று சொல்கிறோம்.

ப்ரம்ம லோகத்தையும் படைத்த நாராயணன் இருக்கும் இடம் வைகுண்டம் என்கிறோம். அங்கு செல்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை என்கிறது நம் சனாதன தர்மம்.

சொர்க்க லோகத்தில் நின்று விட்ட மற்ற மத அறிவு எங்கே?, நம் அறிவு எங்கே என்று இதிலேயே புரிந்து கொள்ளலாம்.



மோக்ஷம் என்ற கைவல்யம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உடல் வேறு, ஆத்மா வேறு என்று உணர்ந்து, உலகத்தோடு ஒட்டாமல், பாவம் புண்ணியம் செய்யாமல், யோகியாய் இருந்து, இறந்த பின், அந்த ஆத்மா, கைவல்யம் (விடுதலை) என்ற முக்தியை அடைகிறது.

மோக்ஷம் என்ற வைகுண்டம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உலகத்தோடு இருந்து கொண்டே, பாவம் புண்ணியம் அனைத்தையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, நாராயணனே கதி என்று வாழ்ந்து, இறந்த பின், அந்த ஜீவ ஆத்மாவை, பரதெய்வமான நாராயணன், தன் இடமான வைகுண்டம் (வீடு) என்ற முக்தியை, மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

கைவல்யம் (விடுதலை) அடைந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.
வைகுண்டம் (வீடு) போய் சேர்ந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.

இரண்டுமே மோக்ஷம் தான் என்றாலும், இதில் நாம் அடைய வேண்டியது விடுதலை மட்டுமல்ல, வீடு போய் சேர வேண்டும் என்று வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை தெரிந்த தமிழர்கள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று சொன்னார்கள்.

ஒரு கைதி, பல ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தான்.
அவனுக்கு திடீரென்று விரக்தி வந்து விட்டது. இந்த சிறைச்சாலை என்னுடையது அல்ல, எப்படியாவது இதை விட்டு தப்பிக்க வேண்டும் என்று முடிவு செயதான்.
தப்பிக்க பல தடவை முயற்சி செய்தும், காவலாளிகள் பிடித்து விட்டனர்.
இனி முரண்டு செய்யாமல், ஒழுக்கமாக இருந்து, நல்ல பெயர் வாங்கி, விடுதலை அடைவோம் என்று எண்ணினான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகு பலனும் கிடைத்தது. நன்னடத்தை காரணமாக, ஒரு நாள் விடுதலை ஆகி விட்டான்.
இனி சிறை இல்லை, இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற விடுதலை காற்றை அனுபவித்த அவன் பேரானந்தம் அடைந்தான். இது தான் கைவல்யம் என்ற மோக்ஷ நிலை.

கைவல்யம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆவது போல. பிறப்பு இறப்பு என்ற சிறைச்சாலையில் இருந்து "விடுதலை" ஆவதே இவன் நோக்கம்.

அதே சிறைச்சாலையில் இன்னொருவன் இருந்தான். அவனும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தான். இவன் தப்பிக்க நினைப்பதற்கு விடுதலை மட்டும் காரணமல்ல, அவன் வரவை எதிர்பார்த்து, அவன் தகப்பன், அவன் வீடு எல்லாம் உள்ளது என்று அறிகிறான்.
ஒரு நாள் இவனும் நன்னடத்தை காரணமாக, விடுதலை ஆகி விட்டான்.
இதற்கு முன்னால் விடுதலை ஆனவன், கூப்பிட ஆள் இல்லாததால், நேராக அங்கு இருக்கும் பார்க்கில் சுகமாக படுத்துக்கொண்டு வருவோர் போவோர்களை பார்த்து கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

இவனோ, விடுதலை ஆனவுடன், தன் வீட்டுக்கு சென்று தகப்பன் வரவேற்க, அவன் வீட்டுக்கு போய் நிம்மதியாக தகப்பன் நிழலில் நிம்மதியாக இருந்தான்.
வைகுண்டம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆன பின், தன் சொந்த தகப்பன் வீட்டுக்கு வந்து, தந்தையான நாராயணன் அரவணைப்பில் வீட்டில் இருப்பதே.

இந்த வேற்றுமையை உணர்ந்த தமிழ் ரிஷிகள், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை நம் லட்சியமாக கொள்ளாமல், வைகுண்டம் (வீடு) என்ற மோக்ஷத்தையே நம் லட்சியமாக கொள்ள வேண்டும் என்று, அறம், பொருள், இன்பம், வீடு என்றனர்.



"வீட்டுக்கு" போய் சேர்வதே நம் நோக்கம்.

வைகுண்டம் என்பது கைவல்யத்தை விட உத்தமானது.

வீடு என்பது விடுதலையை விட உத்தமானது.

இதனால் தான் அறம், பொருள், இன்பம், விடுதலை என்று சொல்லாமல், அறம், பொருள், இன்பம், வீடு என்ற சொல்லில் முடிக்கின்றனர்.

திருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார்.
மோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’ என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில் மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார்.
(http://www.kamakoti.org/tamil/3dk257.htm)

திருவள்ளுவர், சமஸ்கிருதம் அறிந்த, தமிழ் புலவர் என்பதும் வெளிச்சம் ஆகிறது.

வாழ்க தமிழ். வாழ்க தெய்வ பாஷை.



Saturday, 13 October 2018

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?


மனிதனால் மட்டும் தான், கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்க முடிகிறது.
பலமாக கொடுக்கப்பட்ட இந்த வரத்தை, வீண் செய்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.

மிருகங்கள் எதற்கும் கடந்த காலத்தை நினைத்தோ, எதிர்காலத்தை நினைத்தோ வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவை நிம்மதியாகவே உள்ளன.

மூளை கலங்கிய கடந்த காலத்தை மறந்து, எதிர்கால சிந்தனையும் இல்லாமல், சில பைத்தியம் பிடித்தவர்கள் கூட,  வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவர்களும், நிம்மதியாகவே உள்ளனர்.

கடந்த கால வாழ்வில் நடந்த சோகங்கள், இனி நடக்காமல் இருக்க, வழி செய்வதை விட்டுவிட்டு, கடந்த கால வாழ்வில் நடந்த சோகத்தை நினைவில்  மட்டும் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

எதிர் கால வாழ்வில் என்ன விபரீதங்கள் நடக்குமோ? என்று பயந்து, நல்லவைகள் நடக்க இன்று செயலில் இறங்குவதை விட்டுவிட்டு, எதிர் கால வாழ்வில் என்ன நடக்குமோ என்று பயத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர், "கடமையை செய்" என்று, "இன்று நீ செய்ய வேண்டிய கடமையை செய்ய செயலில் இறங்கு" என்று வழி காட்டுகிறார்.


ஸ்ரீ கிருஷ்ணரின் கர்ம யோக வழியில், கடந்த கால வாழ்க்கையை உணர்ந்து, அதில் கற்ற பாடம் என்ன? என்று அறிந்து, எதிர்காலத்தில் நல்ல படியாக வாழ இன்று என்ன செய்ய வேண்டும்? என்று உணர்ந்து, நம் கடமையை தர்மத்துடன் செய்து வந்தால், பகவான் நம்மை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான் என்று, பக்தனும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழ்கிறான்.

கிருஷ்ணர் சொன்ன கீதையை படித்து, கிருஷ்ண பக்தனாகி, நாமும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழுவோம்.