Followers

Search Here...

Monday, 11 June 2018

உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?

பகவான் உலகை ஏன் படைக்கிறான்?




அனாதி காலமாய் மாயையில் மோஹித்து கிடக்கும் ஜீவக்கோடிகளை உத்தாரானம் செய்யவே பகவான் உலகை படைக்கிறான்.

பகவானின் விருப்பம் எது? 
உலகில் தோன்றிய ஜீவன்கள் தனது கர்த்தாவான நாராயணனையே காரணமான பரம் பொருள் என்றும், அவனை அடைவதே நமது லக்ஷ்யம் என்றும் தெரிந்து கொண்டு பகவத் பக்தி செய்து, முக்தி பெறுவார்கள் என்று பகவானின் விருப்பம்.

உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?
* ஜீவனுக்கு கண்ணனை பார்ப்பதை விட காமினிகளைப் பார்ப்பதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண குணங்களை சிந்திப்பதை விட காமினி, காஞ்சனம் (பணம்), கீர்த்தி (புகழ்) இவைகளை சிந்திப்பதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண கதைகளை கேட்பதை விட காதல் கதைகளில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண நாமத்தை சொல்வதை விட வம்பு பேசுவதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடுவதை விட மது, மாமிசம், காபி, டீ இவைகளில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண சரண துளசியை முகருவதை விட சென்ட், முக பவுடர் இவைகளின் நறுமனத்தில் விருப்பம்.

* ஜீவனுக்கு ஸத் சங்கத்திற்கு போவதை விட சினிமாவிற்கு போவதில் விருப்பம்.

* ஜீவனுக்கு பகவானுக்கும், பாகவதர்களுக்கும் தொண்டு செய்வதை விட சீட்டாடுவதிலும், திருடுவதிலும் விருப்பம்.





இவ்வாறு புலன்களை கொடுத்தவனிடம் கூட நன்றி இல்லாமல், விரயமாக்கும் ஜீவனுக்கு பாபமே ஏற்படுவதால், பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

பல துன்பங்களை அனுபவித்தும், விரக்தி ஏற்படுவதில்லை.


எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே

எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே:




* பிறர் மனைவியை காமத்துடன், பார்த்தவன் குருடனாகிறான்.
* பிறர் பொருளை திருடினவன், முடவனாகிறான்.
* பொய் சாட்சி சொல்பவன், ஊமை ஆகிறான்.
* அவதூறுகளை கேட்டவன், செவிடனாகிறான்.
* பிறர் ஜீவனத்தை கெடுத்தவன், தரித்ரனாகிறான்.
* பாப காரியத்துக்கு, துணை போனவன் நொண்டியாகிறான்.
* தம்பதிகளை பிரித்தவன்,, பால்ய விதவையாகிறான்.
* கர்ப்பத்தை கரைத்தவன், நபும்ஸனாகிறான்.
* சிசுவை கொன்றவன், பிள்ளை இல்லாதவனாகிறான்.
* அதிதிக்கு அன்னமிடாதவன், வயிற்று வலியடைகிறான்.

இவ்வாறு உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே ஆகும்.

கர்ம பலனைத் தருவதின்றி, கருணா ஸாகரமான பகவான், யாரையும் சுதந்திரமாக துன்பப்படுத்த மாட்டான்.






14 மனு அரசர்கள் யார்? பிரம்மாவின் வயது என்ன?

ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகம் ஆகும்.
ஒரு ஸம்தி காலம் என்பது 17,28,000 வருடங்கள் ஆகும்.




இந்த ஸம்தி காலத்தில் (அதாவது ஒரு சத்ய யுக காலம் வரை) உலகம் நீரில் மூழ்கிவிடும்.

14 மன்வந்த்ரம், மேலும் 15 ஸம்தி காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு பகல்.

அதற்கு சமமான காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு இரவு.
ப்ரம்மாவின் இந்த இரவில், பிரபஞ்சம் அனைத்தும் இல்லாமல் அடங்கிவிடும்.

ப்ரம்மாவின் ஒரு நாள், கல்பம் என்று அறியலாம்.




ஒவ்வொரு மன்வந்த்ரமும், ஒரு மனுவால் ஆளப்படுகிறது.

இப்பொழுது நடப்பது - 7வது மன்வந்தரமான "வைவஸ்வத" மன்வந்தரம். சூரியனுடைய மைந்தனான வைவஸ்வதர் இப்பொழுதுள்ள மனு.

1 மன்வந்த்ரம் - ஸ்வாயம்பு மனுவால் ஆளப்படுகிறது. இந்த மனு ப்ரம்மாவின் மானசீக புத்ரன். ஸ்வாயம்பு மனு வழிபடுவதற்காக, தான் ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட "யோக நித்திரையில் உள்ள நாராயணரை" இவருக்கு தந்தார். இந்த பெருமாளே பின்பு, ஸ்ரீ ராமர் அயோத்தியில் தன குல தெய்வமாக வழிபட்டார். பின்பு, ஸ்ரீ ராமர் விபீஷணனுக்கு கொடுத்தார். விபீஷணர் அயோத்தியிலிருந்து இலங்கை நோக்கி எடுத்து செல்லும் போது, சந்தியா வந்தனம் செய்ய காலம் வந்தவுடன் இறக்கி விட, அன்று முதல், இன்று வரை ரங்கநாதராக - ஸ்ரீ ரங்கம் என்ற ஊரில் காட்சி கொடுக்கிறார்.
2 மன்வந்த்ரம் - ஸ்வரோசிச மனுவால் ஆளப்படுகிறது.
3 மன்வந்த்ரம் - உத்தம மனுவால் ஆளப்படுகிறது.
4 மன்வந்த்ரம் - தாமஸ மனுவால் ஆளப்படுகிறது.
5 மன்வந்த்ரம் - ரைவத மனுவால் ஆளப்படுகிறது.
6 மன்வந்த்ரம் - சாக்ஷுச மனுவால் ஆளப்படுகிறது.
7 மன்வந்த்ரம் - வைவஸ்வத மனுவால் ஆளப்படுகிறது.

தற்போதைய "வைவஸ்வத" மன்வந்தரம் முடிந்தபின், வரப்போகும் ஏழு மனுக்களின் பெயர்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 27 மகாயுகங்கள் முடிந்து விட்டன.

இப்பொழுது நடப்பது, 28-வது மகாயுகம். அதில் கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது.

கலியுக ஏறத்தாழ 3102 BC ஆண்டில் ஆரம்பிக்கிறது.

கலியுகம் முடிய இன்னும் பல லட்சம் ஆண்டுகள் உள்ளன.
பூமியில் 4,32,000 வருடங்கள் என்பது 1 கலி யுக காலம்.


8 மன்வந்த்ரம் - ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
9 மன்வந்த்ரம் - தக்ஷ ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
10 மன்வந்த்ரம் - ப்ரம்ம ஸாவர்னி  மனுவால் ஆளப்படுகிறது.
11 மன்வந்த்ரம் - தர்ம ஸாவர்னி  மனுவால் ஆளப்படுகிறது.
12 மன்வந்த்ரம் - ருத்ர ஸாவர்னி   மனுவால் ஆளப்படுகிறது.
13 மன்வந்த்ரம் - ரௌச்ய தேவ ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
14 மன்வந்த்ரம் - இந்திர ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.

பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள்.




அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு 'பரார்த்தங்கள்' என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன

இன்றைய பொழுதில், ப்ரம்மாவிற்கு 50 வயது ஆகியுள்ளது.

இன்று ப்ரம்மா தன் 51வது வயதில், முதல் நாளை கொண்டாடுகிறார்.

50 வயதை கடந்துவிட்டதால், ப்ரம்மா இப்பொழுது தன் இரண்டாவது பரார்த்தத்தில் உள்ளார்.



பக்தி யோகம் என்றால் என்ன?




  • கர்ம யோகம், 
  • ஞான யோகம், 
  • பக்தி யோகம்
இவற்றில் பக்தி யோகம் அனைவராலும் கடை பிடிக்க கூடிய யோகம்.

கர்ம யோகம், ஞான யோகம் போன்றவை, தன் முயற்சியால் முன்னேற வேண்டியுள்ளது.
இந்த யோகங்கள் ஸாதனை வடிவமானது.
ஸாதனைக்கு மட்டும், பகவான் அவ்வளவு சுலபமாய் கிடைப்பதில்லை.

பக்தி யோகத்திலோ, 
பக்தன் பகவானிடம் பக்தி செய்கிறான்.
பகவான் பக்திக்கு வசமாகிறான்.
பகவான் பக்தனை கரையேற்றுகிறான்.
அதனாலேயே பக்தன் எதிலும் கவலை படமாட்டான்.




"என் பக்தன் நாசமாக மாட்டான்" (நமே பக்த: ப்ரணஸ்யதி) என்று பகவான் ப்ரதிக்ஞை செய்கிறான்.

தன் பக்தன் வழி தவறிப் போனால் கூட, பகவான் அவனை தடுத்து ஆட்கொண்டு, நேர் வழியில் திருப்பி விடுகிறான்.

இங்கு பக்தன் என்பவன் யார்?
பகவானிடம் பக்தி செய்பவன் பக்தன்.

கடினமான தவம் செய்து ராவணன், இரணியன் போன்றோர்கள், தேவர்களை, பிரம்மாவை, சிவனையும் வசம் செய்து வரம் பெற்றனர்.
ஆனால் அவர்களால் இந்த கடின தவத்தின் மூலம், பகவான் - நாராயணனை வசம் செய்ய முடியவில்லை.
ஹரிபக்தி இல்லாத கர்ம யோகம் (தவம், தானம், யாகம், வேதாத்யயனம்) ஞான யோகம் எதற்கும் பகவான் வசமாவதில்லை.

பக்தி என்றால் என்ன?
பகவானிடம் வைக்கும் ப்ரியம் தான் பக்தி.



Sunday, 10 June 2018

திராவிட என்பது சமஸ்கரித மொழி. சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?

திராவிட என்பது சமஸ்கரித மொழி.  இதில் என்ன பெருமை?
சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?




1900 வரை பொதுவாக வேறு மாநிலத்தில் உள்ளவர்களிடம் இன்று english  போல சமஸ்கரிதம் பேசினார்கள்.
அனைவருக்கும் இந்த மொழி தெரிந்தற்கு காரணம், அனைவருமே வேதத்தை அடிப்படையாக கொண்டவர்கள்.  

வேதத்தில் சொன்ன முருகன் தான், சிவன் தான், பெருமாள் தான் கன்யாகுமரியில் இருந்து ஹிமாலயா வரை எங்கும் கோவிலாக அமைந்துள்ளது. 
ஸ்ரீ ரங்கமாக இருந்தாலும் சரி, சிதம்பரம் நடராஜர் ஆக இருந்தாலும் சரி.

ராமானுஜர் 12 வருடம் மேல்கோட்டையில் இருந்தார். பாரத தேசம் முழுவதும் யாத்திரை சென்றார். பொது மொழியான சமஸ்க்ரித மொழி தானே பேசினார்? 
இவர் பேசினார் என்றால், ஊர் மக்கள் அனைவரும் பொது மொழியான சமஸ்க்ரித மொழி பேசினார்கள் என்று தெரிகிறதே.

மதுரையில் பிறந்து ஸ்ரீ ராகவேந்திரர், பாரத தேசம் முழுவதும் கொடி கட்டினாரே..  

இப்படி பொது பாஷையாக சமஸ்கிருதம் இருந்ததால் தான், 
ஆதி சங்கரர் காஷ்மீர் சென்று மந்தனமிஸ்ரரிடம் வாதத்தில் ஈடுபடும் போது, "நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள்?" என்று சமஸ்கிருத மொழியில் கேட்க...
"நான் திராவிட தேசத்தில் இருந்து வருகிறேன்" என்று சமஸ்கிருத மொழியில் பேசிக்கொண்டனர். 
மலையாளத்திலா பேசினார்?

திராவிடன் என்றால் தமிழ் மொழி அல்ல..




நான் திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்த ஆசைப்படுபவன், சமஸ்கிருத மொழி பேசுபவன் என்பதை தவிர ஒன்றும் விசேஷமில்லை.
இது சமஸ்கரித வார்த்தை.

"திராவிடன்" என்ற சொல்லை தமிழில் சொல்ல ஆசைப்பட்டால்
"மூன்று கடல் சூழ்ந்த நிலப்பரப்பு" என்று பொருள். அவ்வளவு தான்.
இதில் கர்வபட என்ன இருக்கிறது?

இதனால் தான், சமஸ்கிருத மொழி தெரிந்த கேரளகாரன், "நான் திராவிடன்" என்று சொல்லிக்கொள்வதில் இந்த போலி தமிழனுக்கு ஏன் இப்படி கர்வம்? என்று புரியாமல் இருக்கிறான்.

நான் மூன்று கடல் சூழ்ந்த இடத்தை சேரந்தவன் (அதாவது திராவிடன்) என்பதை "திராவிடன்" என்று சமஸ்கரிதத்தில் சொன்னதால் சமஸ்கரித பற்று தெரிகிறதே ஒழிய, இதில் வேறு என்ன சாதித்ததாக பெருமை கொள்ள முடியும்?

இன்று English உள்ளது போல அனைவராலும் பேசப்பட்ட சம்ஸ்க்ரிதம் வாழ்க.