சத்தியம் (வாக்கு கொடுத்தால் அதில் உண்மையாக இருப்பது)
"சத்தியம்" என்ற தர்மம், இன்றைய இந்தியாவில் உள்ள மக்களிடம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
"நாளை 10 மணிக்கு உங்களை பார்க்க வருகிறேன்" என்று ஒரு
இன்றைய இந்தியன் சொன்னால், இவன் சத்தியத்தை நம்ப முடிவதில்லை.
இன்று,
அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த சத்தியத்தை உயிராக மதிக்கின்றனர்.
இந்தியாவில் இதற்கு மதிப்பு குறைகிறது.
சத்தியத்தை மதிக்கும் நாடு எப்பொழுதுமே பிரகாசம் அடையும் என்பது இந்த
நாடுகள் எப்படி வலிமையாக இருக்கிறது என்று பார்க்கும் போதே தெரிகிறது.
சத்தியத்துக்காக வாழ்ந்த ராமர் பிறந்த நாட்டில், இந்த தர்மம் வீழ்ந்ததற்கு
காரணம் என்ன ?
ராமர் போன்ற சத்தியத்தில் நின்றவர்கள்
சரித்திரத்தை நாம்
மறந்ததே இதற்கு காரணம்.
சத்தியத்தில் நிற்கும் மக்களே, நாட்டை உயர்த்த முடியும்.
இனி இந்தியா முன்னேற ஒவ்வொரு இந்தியனும் முதலில் கடைப்பிடிக்க வேண்டியது சத்தியமே !
சரி,
எப்படி இந்தியாவில் பொய் பேசும் பழக்கம் அதிகமாய் போனது?
பொய் பேச தேவை
இல்லை என்ற இடத்தில் கூட, வெகு சாதாரணமாக இப்பொழுது பொய் பேசுகின்றனர்.
இது ஏன்?
எப்படி இந்த சத்தியம் என்ற தர்மம் இந்தியர்களிடம் இப்போது மலிந்து காணப்படுகிறது ?
Root cause Analysis :
இஸ்லாமியர்களின் 1000 வருட ஆதிக்கத்தில் இருந்தும் கூட, ஹிந்துக்களிடம் சத்தியம் அழியாமல் தான் இருந்துள்ளது.
ஆனால், சத்தியமாக இருக்க வேண்டும் என்ற பண்பு படிப்படியாக
கிறிஸ்தவர்களின்
ஆட்சியில் இருந்து குறைய தொடங்கி, இப்பொழுது விடுதலை அடைந்த பின்பும்,
ஹிந்துக்கள் தன் குணமாக வைத்திருந்த இந்த சத்யம் (உண்மையாக இருத்தல்) இன்று
குன்றி போய் உள்ளது என்பதே உண்மை.
"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone
Triumphs") என்று இன்றும் இந்தியா சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில்
யாவருமே பொய் சொல்ல மனம் அஞ்சாததால், அரசன் முதல் பொது மக்கள் வரை பொய் பேச
இன்று தயங்குவதில்லை.
நீதிமன்றத்தில் உள்ள ஏராளமான வழக்குகள் இதற்கு
சாட்சி.
இந்த சத்தியத்தை உயிராக கொண்டவர் ஸ்ரீ ராமர்.
ராமரிடம் அன்பு உள்ளவன் பொய் பேச அஞ்சுவான்.
சத்தியத்தில் இருப்பான்.
இஸ்லாமியர்கள் காலம் வரை, ஹிந்துக்கள் பெரும்பாலும் அவரவர்கள் உயிராக
மதிக்கும் தெய்வத்தை வைத்தோ, தாய் தந்தை மீதோ ஒரு சபதம் செய்து வாணிகமோ,
உடன்படிக்கையோ செய்து கொண்டனர்.
இப்படி செய்த சபதம், வாய் மொழியாக இருந்தாலும், பெரும்பாலும் ஜெயித்துள்ளது.
அரசன் வரை, செல்லும் வழக்குகள் மிக குறைவு அந்த காலங்களில்.
அப்படி வரும் வழக்கும், சில நாட்களில் தீர்வு காணப்பட்டு விடும்.
இது எப்படி சாத்தியமானது?
இந்த சபதமே யார் குற்றவாளி என்பதை காட்டி விடும் சக்தி கொண்டதாக இருந்தது.
பெரும்பாலும் குற்றம் செய்தவன், தன் தாய் மீதோ, தன் ப்ரியப்பட்ட
தெய்வத்தின் மீதோ சபதம் செய்த பின், பொய் சொன்னதில்லை. பொய் சொல்ல
தயங்குவான்.
இந்த சபதம் உள்ளுக்குள் சென்று மனதை தொடுவதால்,
ஹிந்துக்கள் முதலில் "சபதம் செய்", பின் பத்திரம், பட்டா போன்றவை எழுதிக்
கொள்ளலாம் என்றனர்.
கிறிஸ்தவர்களின் ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து,
பத்திரம், பட்டா போன்றவை மிக முக்கியம் என்று கொண்டு வரப்பட்டு, "சபதம்
செய்" என்பது காணாமல் போனது.
நம் ஹிந்து தெய்வங்களின் மீது இருந்த த்வேஷ
புத்தியே, இதற்கு காரணம்.
செய்யும் சபதம் ஹிந்துக்களின் தெய்வமாக
இருந்தால், எப்படி இவர்கள் நம்பிக்கையை கெடுக்க முடியும்?
தங்கள் மதத்தை
பரப்புவது மட்டுமே நோக்கம் கொண்ட இவர்கள், இது போன்று தெய்வத்தின் பெயரால்
என்று சபதம் செய்ய அனுமதித்தால், 1000 வருடம் இஸ்லாமியர்கள் ஆட்சியில்
மழுங்கி போன ஹிந்துக்கள் விழித்து கொள்ள வழி வகுக்கும்.
தன் மதத்தை பரப்ப
இயலாமல் போகும் என்று கணித்து, அதனால் லீகல் சிஸ்டம் என்பதை மட்டுமே
முக்கியப்படுத்தி, இவர்களின் தெய்வ நம்பிக்கை பயன் அளிக்கும் என்று
தெரிந்தாலும், இதனை தந்திரமாக நம் வழக்கத்தில் இருந்து அகற்றினர்.
சபதம் செய்பவனுக்கு, மனதால் ஒரு வித சஞ்சலம் / நெருடல் ஏற்படும். இந்த
சபதம் செய்யும் பழக்கம், காணாமல் போனதும், பத்திரத்தில் கை ரேகை
பதித்தாலும், கை எழுத்தே போட்டாலும், "இது என் கை எழுத்து இல்லை" என்று
தைரியமாக பொய் சொல்ல ஆரம்பித்தனர்.
பொய் சொல்ல பயந்த நீதி
மன்றத்தில், இன்று சகஜமாக பொய் சொல்கின்றனர்.
நீதிபதிகள் ஒரு வழக்கை
முடிக்க பல வருடங்கள் ஆகிறது.
இதனால். யார் உண்மை சொல்கின்றனர், யார் பொய்
சொல்கின்றனர் என்பது கண்டு பிடிக்க முடியாது போய், ஒரு வழக்கு முடிய பல
வருடங்கள் எடுக்கிறது.
உண்மையை நிலைநாட்ட எங்கும் பயன் படுத்தப்பட்ட சபதம் செய்யும் முறை, இன்று நீதி மன்றத்தில் மட்டும் இன்றும் உள்ளது.
இன்றும் ஹிந்துக்கள் கீதையை கொண்டோ,
பிற மதத்தில் மாறிய/மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அவர்களின் நூலையோ கை வைத்து சபதம் செய்கின்றனர்.
இந்த சபதம் செய்யும் பழக்கம், சகஜமாக ஒவ்வொரு வீட்டிலும், வீட்டில் சண்டை
என்றால் ஊர் பஞ்சாயத்தில் என்று இந்த சபதம் என்ற மனோவியல் கொண்டே பல
தீர்க்க படாத வழக்குகள் அரசன் வரை சொல்லாமலேயே அந்த காலத்தில் எளிதாக
தீர்த்துள்ளனர்.
இன்றோ, அரச பதவியில் இருக்கும் அதிகாரி முதல் வீட்டில் உள்ள குழந்தை வரை பொய் பேச பயப்படுவதில்லை.
பத்திரத்தில் கையெழுத்தோ, சாட்சியை கண்டோ, கொலை செய்யவோ, திருடவோ
இவர்களுக்கு (நமக்கு) பயமில்லை.
பணம் இருந்தால் தப்பிக்க வழி தேடுவோம்
என்று தான் நினைக்கின்றனர்.
இந்த அதர்ம புத்தி ஒழிய வேண்டும்
என்றால், அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும்.
தந்தை செய்த சத்தியத்துக்கு தான் 14 வருடம் காடு செல்ல கூட தயார் என்று
சென்ற
ஸ்ரீ ராமர் இந்த நாட்டில் இருந்தவர் என்பதை நாம் மறக்க கூடாது.
14 வருடங்கள் வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் வரை இவர் கால் தடம் உள்ளது என்பதை மறக்க கூடாது.
ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வால்மீகி என்ற ஒரு வேடுவ குலத்தில்
பிறந்த ரிஷி, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதையும் மறக்க கூடாது.
ராமர் ராவணனை தேடி வரும் பொழுது, நம் தமிழ் நாட்டில் இருந்த அகத்திய
தமிழ்முனிவர் தன்னிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் தந்தார் என்பதையும் மறக்க
கூடாது.
சத்தியத்தால் மட்டுமே நாட்டுக்கு மதிப்பு.
இந்த தர்மமே அமெரிக்கா, ஜப்பான் மக்களிடம் காணப்படுகிறது.
"நாளை பார்க்க வருகிறேன்" என்று ஒரு ஜப்பான்காரன் சொன்னால், கட்டாயம் வருவான் என்று சொல்லலாம்.
இது அடிப்படை குணமாக இருந்த சமயத்தில், இந்தியன் மதிப்பு மிக்கவனாக
இருந்தான்.
சரித்திரத்தில், வாஸ்கோடகாமா இந்தியாவை நோக்கி வந்தான்.
இந்தியர்கள் அந்த காலங்களில் கை நீட்டி கேட்பவர்களாக இல்லை.
இப்பொழுது எதற்கு எடுத்தாலும் இந்தியன் அமெரிக்காவையும், ஜப்பானையும்
எதிர்பார்க்கும் நிலை வந்ததற்கு காரணம், இந்த சத்தியத்தை நாம் விட்டதே
மூலகாரணம்.
ஸ்ரீ ராமர் வழியில் செல்ல செல்ல சத்தியம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளரும்.
நாடு சத்தியத்தில் நிற்கும். மதிப்பு தானாக பெருகும்.
"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று சொல்லும் வாக்கு உண்மையாகும்.