Followers

Search Here...

Friday, 16 March 2018

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து. எத்தனை முட்டாள் தனம்?

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து.

நமக்கும் மேல் உள்ள கடவுளை,
நம்மால் உணர முடியாத கடவுளை,
நம்மையும் படைத்த கடவுளை,
ஒரு வடிவமாக அமைத்து வழிபடுவது என்பது, எத்தனை முட்டாள் தனம்?



அதை விட முட்டாள் தனம், கல்லையே "கடவுள்" என்று நம்புவது.
அதை விட முட்டாள் தனம், அந்த கல்லிடம் போய் பேசுவது, பாடுவது, வரம் கேட்பது.


இப்படி ஒரு கேள்வி, ஹிந்துக்கள் முன் வைக்கப்படுகிறது.

உண்மையில்,
ஒரு சிறு குழந்தையை, கோவிலுக்கு கூட்டிச்சென்று "இது உம்மாச்சி" என்று சிவலிங்கத்தை பார்த்து கும்பிட சொன்னால், சில குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வியும் இது தான் "இது கல்லு தானே'" என்று.

மிக சாதாரண கேள்வி.
பெரும்பாலும் பாரத குழந்தைகள் கூட இது போன்ற கேள்வியை கேட்பதில்லை.
காரணம் பாரத குழந்தைகள் கூட அறியும், "இது ஒரு சாதாரண கேள்விஎன்று.

வளர்ந்த பின்னும், இந்த கேள்வி சிலருக்கு மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
பதில் சொன்னாலும் புரியாது.

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து என்று வளர்ந்து, முடி நரைத்த பின்னும், சிர் இன்று கூட இந்த கேள்வியை, கேட்பதை உலகத்தில் நாம் பார்க்கலாம்.

கல்லை "கடவுள்" என்று ஏன் ஹிந்து வழிபடுகிறான்?  
இதற்கு பதில் இல்லாமலா கோடிக்கணக்கான வருடங்களாக ஹிந்துக்கள் சிலை வழிபாடு செய்கின்றனர்?  சற்று யோசிப்போம்.

பாரத மக்கள் பெரும்பாலும் அறிவாளிகள், பண்பு உடையவர்கள்.
இதை உலகமே ஒத்துக்கொள்கிறது.



பெரும்பாலும் ஹிந்துக்கள் சிலை வழிபாடு செய்கின்றனர்.

பாரத மக்கள் பெரும்பாலும் அறிவாளிகள் என்றால், பெரும்பாலான ஹிந்துக்கள் வழிபடும் சிலை வழிபாடும் சரியாக தான் இருக்க வேண்டும்.

அறிவாளிகள் என்பதால் தான், இன்று வரை சிலை வழிபாடு செய்கின்றனர்.

"கல்லை 'கடவுள்' என்று கும்பிடுகிறான்" என்று கேள்வி கேட்பவர்கள், இதோடு, இன்னொரு கேள்வியும் கேட்கலாமே?
ஏன், அதே கல்லில் செய்யப்பட்ட, அதே கடவுள் சிலையை, தூண்களிலோ கோபுரத்திலோ, கடைகளிலோ, மியூசியத்திலோ காணும் போது, மிஞ்சி போனால், மரியாதையாக பார்க்கிறானே தவிர, பூஜையோ, வேண்டுதலோ, செய்யவில்லை?

"மியூசியத்தில் இருக்கும் இந்த சிலை "தெய்வமா?" என்று ஹிந்துவிடம் கேட்டால், "இது சிலை" என்கிறான்.

காலில் விழுந்து, சூடம் ஏற்றி வரம் கேட்காமல், "இது சிலை" என்கிறான்.
செருப்பு அணிந்து கொண்டு அருகில் நிற்கிறான்.

"மியூசியத்தில் இருக்கும் இந்த சிலை 'தெய்வ சிலை' தானே?" 
என்று கேட்டால்,
"ஆம், தெய்வ சிலை தான், ஆனால் இதுவே தெய்வம் இல்லை. தெய்வ சிலையாக இருப்பதால்மரியாதை செய்கிறேன்.
ஆனால் வழிபட வேண்டும் என்று தோன்றவில்லை" என்கிறான்.

அப்படியென்றால், பார்க்கும் கல்லை எல்லாம் "கடவுள்என்று நினைக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இது யோசிக்கவும் வைக்கிறது.

அழகான கடவுள் சிலை, கோவில் தூணில் இருந்தால், பார்த்து "அழகாக இருக்கிறது" என்று ரசிக்கிறானே தவிர கும்பிடுவதில்லை.
தூணில் இருக்கும் சிலையை, "தெய்வத்தின் பிம்பம்" என்று தான் பார்க்கிறான். அதுவே "தெய்வம்" என்று பார்க்கவில்லை.

நமக்கு பிடித்த ஒருவரின் போட்டோவை, சிலையை வைத்து இருப்பது போல தான், தூணில் இருக்கும் தெய்வத்தை பார்க்கிறான்.
அதிக பட்சம் தெய்வ சிலையை பார்த்தால், மரியாதை செய்கிறான்.
இதுவே "தெய்வம்" என்று நினைப்பதில்லை

ஒரு தூணில் இருக்கும் தெய்வ சிலையை, "தெய்வம்" என்று நினைக்காவிட்டாலும், தெய்வ சிலையாக உள்ளதால்மரியாதையாக பார்க்கிறான்.




ஆனால்,
தூணில் இருக்கும் தெய்வ சிலையையும், கோவிலில் கர்ப்க்ரஹத்தில் உள்ள சிலையையும் ஹிந்து ஒன்றாக பார்க்கிறானா ?
பதில்: இல்லை.
இதில் தான் ரகசியம் அடங்கி இருக்கிறது.

தூணில் இருக்கும் சிவனின் சிலை, பிரம்மாண்டமாக மிக அழகாக கூட இருக்கும்.
அந்த சிலையை, "கல் சிலை" என்று பார்க்கிறான் ஹிந்து.

கோவிலில் எங்கு பார்த்தாலும் கடவுள் சிலைகள்.
அனைத்தையும் "கல் சிலை" என்றே பார்க்கிறான்.

ஆச்சர்யம் எங்கே என்று கவனித்தால்?
அந்த கோவிலில் கர்ப்க்ரஹத்தில் இருக்கும்,
அழகான உருவம் கூட இல்லாத,
பார்ப்பதற்கு, நிமிர்த்தி வைத்த அம்மி கல் போன்ற கல்லை,
"சிவன்" என்று சொல்கிறான்.

தூணில் மிக அழகாக வடித்து வைத்து இருந்த சிவனின் சிலையை, 'சிவன் சிலை" என்று பார்த்த இந்த ஹிந்து,
இந்த லிங்க கல்லை, "தெய்வம்" என்று பார்க்கிறான்.
"சிவன்" என்று தீர்மானமாக சொல்கிறான்.

அதை விட ஆச்சர்யம், அதை "தெய்வம்" என்று நினைப்பதால், அந்த கல்லை, "சிவன்" என்று பார்த்து, தன் பிரார்த்தனைகளை செய்து வழிபடுகிறான்.

பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணர் என்றாலே அழகு உடையவர்.
அவருடைய சிலையை, உருவத்தை பார்த்தாலே அழகாக இருக்கும்.

நாதீகனுக்கும், கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கு கூட, ஸ்ரீ கிருஷ்ணனின் குழந்தை உருவத்தை பார்த்தால் பிடித்து போகும்.
பூரி ஜகன்நாத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் பார்க்கும் போது, நம்மை ஒரு நிமிஷம் பதற வைக்கும்.
மர கட்டையில், பெரிய முழியுடன் கை கால் விழுந்தது போன்ற நிலையில் இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.



(இது என்ன காரணம் என்று அறிய ஆவல் இருந்தால், இங்கு படிக்கவும் ... http://proudhindudharma.blogspot.in/2017/12/odisha-orissa.html?m=1)

ஆச்சர்யம் என்னவென்றால், கர்ப்க்ரஹத்தில் இருக்கும் லிங்கத்தை பார்த்து கடவுள் என்று உணருவது போல, இந்த மர சிலையை பார்த்தாலும், ஏற்படுகிறது.

கர்ப்க்ரஹத்தை விட்டு, இந்த ஹிந்துக்கள் வெளியே வந்த பிறகு, அதே போன்ற சிலையை வெளியில் காண்பித்தால், "சிலை" என்கிறான்.

ஹிந்துக்கள் பார்க்கும் கல்லை எல்லாம் "கடவுள்" என்று வழிபாடு செய்வது போல தெரியவில்லையே?


  • கடவுள் நம்மை படைத்தார்.
  • கடவுள் நம் கற்பனைக்கு, புத்திக்கு எட்டாதவர்.

இப்படி நம் வேதத்தில் சொல்லி இருக்கிறது.

எங்கும் உள்ள இறைவனுக்கு, கோவில் தேவை இல்லை.
இறைவனுக்கு, கோவில் தேவை இல்லை.
ஆனால்,
நமக்கு, இறைவன் ஒரு இடத்தில், ஒரு உருவத்தில் தேவைப்படுகிறான்.

"எல்லாம் ப்ரம்மமயம்" என்று இருக்கும் அத்வைத "ஞானி"
கல்லை தெய்வம் என்று கும்பிடுவதில்லை.

எங்கும் அந்த கடவுள் இருக்கிறார் என்று இருந்த ஞானி யார்? என்று பார்க்கும் போது, நமக்கு தெரிபவர், "பிரகலாதன்".
பிரகலாதன், "நாராயணன் எங்கும் உள்ளார்" என்ற அத்வைத நிலையிலேயே இருந்தார்.

தன் தந்தை ஹிரண்யகசிபு பல வழிகளில் கொலை செய்ய முயற்சி செய்தும், பிரகலாதன் நாராயணனை உதவிக்கு கூப்பிடவில்லை.

ஏன்?

அனைத்துமே நாராயணன் என்று பார்த்து கொண்டிருந்த பிரகலாதன், தன் தந்தை, மலை, விஷம், தன்னை கொலை செய்ய வருபவன், தான் உட்பட அனைத்தையும் நாராயணனாகவே பார்த்தான்.
இவை எல்லாம் வேறு, நாராயணன் வேறு என்று தோன்றினால் தானே, "நாராயணா, காப்பாற்று" என்று ஒருவன் சொல்லுவான்?

இந்த நிலையில் எங்கும் கடவுளை பார்த்த பிரகலாதன், விஷம் குடிக்க சொன்னாலும், அதுவும் நாராயணனே என்று விஷத்தை குடித்தான்.  

ஒன்றும் ஆகவில்லை என்றதும் ஹிரண்யகசிபு குழம்பினான்.
ஆனால் பிரகலாதன், 'தான் பிழைத்தற்கு நன்றி' என்று கூட நாராயணனுக்கு சொல்லவில்லை.
தான் பிழைத்தது பற்றி ஆச்சர்யப்பட கூட இல்லை.

இப்படிப்பட்ட ஞானிக்கு, சிலை வழிபாடு தேவை இல்லை.

எப்படி சிலை வழிபாடு தோன்றியது?
ஏன் கர்ப்க்ரஹத்தில் இருக்கும் கல்லை "தெய்வம்" என்று சொல்கிறான்?  
 அதே கல்லை கோவிலில் கோபுரத்தில் பார்த்தால் "சிலை" என்கிறான். என்ன ரகசியம் இது?



இதற்கு பதிலையும், பிரகலாதன் வாழ்க்கையிலேயே கண்டு பிடித்து விடலாம்.

தூணில் உள்ள தெய்வ சிலை தெய்வமில்லை, ஆனால் கர்பக்ரஹத்தில் உள்ள சிலையை "தெய்வம்" என்று எப்படி ஆனது

ஹிரண்யகசிபு, தன் மகனை பார்த்து, "அந்த நாராயணன் எங்கடா இருக்கிறான்?" என்று ஆத்திரத்தோடு கேட்கிறான்.

எங்கும் நாராயணனை பார்க்கும் பிரகலாதனுக்கோ, இவன் கேட்கும் கேள்விக்கு, "இங்கு தான் உள்ளார்" என்று ஒரு இடத்தை பார்த்து சொல்ல முடியவில்லை.
அதனால், "நாராயணன் எங்கும் உள்ளார்." என்றார்.

தெய்வம் எங்கும் உள்ளார் என்று புரிந்து கொள்ள முடியாத ஹிரண்யகசிபு,
"ஏதாவது ஒரு இடத்தை காட்டி இங்கு உள்ளார் என்று சொல் அவனை கொன்று விடுகிறேன்" என்கிறான்.

எங்கும் நாரராயணனை பார்க்கும், பிரகலாதனால், எந்த இடத்தை காட்டி சொல்ல முடியும்?

இவன் இப்படி கேட்டால் சொல்ல மாட்டான் என்று ஹிரண்யகசிபு, தானே, கல் மண் கொண்டு கட்டிய தூணை பார்த்து, "இதில் இல்லையா உன் நாராயணன்?" என்றான்.

இந்த கேள்வி பதில் சொல்ல எளிதாக இருந்தது பிரகலாதனுக்கு.

"எங்கும் நாராயணனே இருக்கிறார் என்கிற பொழுது, இந்த தூணிலும் இருக்கிறாரே. உங்களுக்கு தெரியவில்லையா?" என்றான் பிரகலாதன்.

நான் கட்டிய கல் தூணில், என் மாளிகையில் உள்ள இந்த தூணில், நாராயணன் இருக்கிறானா? என்றான்.

பிரகலாதனுக்கு "நாராயணன் தூணுக்குள் தெரியவில்லை, தூணும் நாராயணனாக தான் தெரிந்தது".

அதனால், பிரகலாதன், "இதோ இருக்கிறாரே" என்றான்.

ஹிரண்யகசிபு, தூணுக்கு உள்ளே நாராயணன் இருக்கிறான் போல, அதை தான் தன் மகன் பார்க்கிறான் போல என்று நினைத்து,  
இந்த தூணை உடைத்து, உள்ளே இருக்கும் நாராயணனை பிடித்து கொன்று விடுவோம் என்று நினைத்தான்.

தன் கையாலேயே, தான் கட்டிய கல்தூணை ஓங்கி ஒரு குத்து விட்டான்.
இடி விழுந்தது போன்ற சத்தத்தில், தூண் இரண்டாக பிளக்க, கல் தூணில் இருந்து, படு பயங்கர உக்கிர மூர்த்தியாக, சிங்க முகத்தில், மனித உடம்பை கொண்டு, "நரசிங்கமாக" வெளி வந்தார் 'நாராயணன்'.

கல் எப்படி தெய்வம் ஆகிறது?
இப்பொழுது புரிந்து இருக்கும்.

பார்க்கும் கல்லை எல்லாம், ஹிந்துக்கள் தெய்வம் என்று கும்பிடுவதில்லை.  
அந்த தெய்வ பிம்பத்திற்கு மரியாதை தான் செய்கின்றனர்.

சில கல் மட்டும், தெய்வம் ஆகிறது.
 
கல் தெய்வம் ஆனது ஏன்?

பிரகலாதன் போன்ற ஞானியும், ரிஷிகளும், மகான்களும், யோகிகளும், பக்தர்களும், ஏதோ ஒரு சமயத்தில்
ஒரு கல்லையோ, மரத்தையோ, மலையையோ தெய்வம் என்று பூஜித்து, அதில் தெய்வம் வெளிப்பட்டு அவர்களுக்கு அணுகிரஹம் பெறுகிறார்கள்.



பாரத மண்ணில் மட்டும் தான் ஞானிகள் மீண்டும் மீண்டும் பிறக்க ஆசைப்படுகின்றனர்.

இவர்களால் பூஜிக்கப்பட்ட கல் சிலையில், தெய்வங்கள் காட்சி கொடுக்க, இரக்க குணம் கொண்ட நம் ரிஷிகள், ஞானிகள், யோகிகள், அந்த தெய்வத்திடம், தான் மறைந்தாலும், இந்த கல்லில், மரத்தில், மலையில் சாந்நித்யதோடு இருக்குமாறு வரம் வாங்கி விடுகின்றனர்.

இங்கு வந்து பிரார்த்திக்கும் சாதாரண ஜனங்களுக்கும், இது கல் என்று தோன்றாமல், தெய்வம் என்று மனதில் எண்ணம் உருவாக்கி, அவர்கள் குறைகள் யாவையும் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்து, வரமாக வாங்கி விடுகின்றனர்.

"சாதாரண ஜனங்கள், உன்னை போன்ற நம்பிக்கை இல்லாதவன் ஆயிற்றே. ஒழுக்கம் இல்லாதவன் கூட என்னிடம் வந்து நிற்பானே
என்று நாராயணன் கேட்டால்,
"தனக்காக இந்த சாதாரண ஜனங்கள் செய்யும் பிழை, பாவத்தை பொறுத்து கொண்டு, அணுகிரஹம் மட்டுமே செய்ய வேண்டும்"
என்று தங்கள் பக்தியால் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

இப்படி ஒவ்வொரு கோவிலுக்கு சென்று, அந்த மூல விக்ரஹ சிலை யாரால் அமைக்கப்பட்டது என்று அறிந்து கொண்டால், யாரோ ஒரு ரிஷியோஞானியோ, யோகியோ, மகானோ, பக்தனோ ஏதோ ஒரு அணுகிரஹத்தால் அமைத்து இருப்பார் 
அவரின் பிரார்த்தனை பொறுத்து, அந்த கோவில் தெய்வங்கள் அணுகிரஹம் செய்கிறது.

அதனால் தான்,

  • இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், குழந்தை பிறக்கும்.
  • இந்த சிவன் கோவிலுக்கு போனால், கணவன் மனைவி சண்டை தீர்ந்து, அன்பு வளரும்.
  • இந்த பெருமாள் கோவிலுக்கு போனால் மோக்ஷம் கிடைக்கும்.
  • இந்த பெருமாள் கோவிலுக்கு போனால் செல்வம் கிடைக்கும்.

என்று ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பலன் சொல்கின்றனர்.

ஒரே சிவன் தான்.
ஏன் இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், இந்த பலன்?
அந்த சிவன் கோவிலுக்கு சென்றால் உன்னொரு பலன்? என்று வித்யாசம் சொல்கின்றனர்?
சிவனுக்கு ஏன் ஒரே கோவிலில் அணைத்து பலனையும் கொடுக்க சக்தி இல்லையா?

இதற்கு காரணமும் இப்பொழுது புரிந்து இருக்கும்.
ஏன் திருப்பதியில் மட்டும் இத்தனை கூட்டம்

ஒரு கல்லில் தன்னை வெளிப்படுத்தி, ஏதோ ஒரு பக்தனுக்காக வருகிறார் பெருமாள்.
அந்த பக்தன் கேட்ட வரத்திற்கு ஏற்ப அந்தந்த கோவிலில் அணுகிரஹம் செய்கிறார்.

ஆனால், திருப்பதி பெருமாள் மட்டும், எந்த பக்தனுக்காகவும் வந்தவர் இல்லை.
தானே இஷ்டப்பட்டு, சிலையாக வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்தவர்.
இந்த காரணத்தால், திருப்பதி பெருமாளுக்கு மட்டும், வரும் பக்தனுக்கு கருணை செய்ய தடையே இல்லை.
அனைத்து பலனையும் தானே தருகிறார்.
வேண்டுவதெல்லாம் பலிக்கிறது.

இதனால் தான் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் கூட்டம் அலை மோதுகிறது.

கல் கடவுள் இல்லை. ஆனால், கடவுள் ஒரு பக்தனுக்காக வருகிறான்.
அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறான்.

நம் வீட்டில் உள்ள, சிறு கிருஷ்ண விக்ரஹத்தையும், சிறு சிவ லிங்கத்தையும் கூட, அந்த பிரகலாதன் போன்று பக்தி செய்தால், நம் வீட்டில் உள்ள குட்டி சிலையிலும் பகவான் தன் சாந்நித்யத்தை வெளி காட்டுவார்.



நம்மிடம் பேசும் அளவிற்கு பக்தி செய்ய முடிந்தால், ஞானிகள் போன்று, உலகத்திற்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம்,
நம் குடும்பத்தில் பிறக்கும் தலைமுறைகள் நோய் இல்லாமல், சிறப்போடு, பக்தியுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து, பகவானிடம் நம் பக்தியால் வரம் வாங்கி கொடுத்து விடலாம்.

கோவிலில் கர்ப்கிரஹ சிலையில் தெய்வம் இருக்க செய்த ஞானிக்கு, ரிஷிக்கு, மகானுக்கு, பக்தனுக்கு நாம் என்ன பதில் செய்ய முடியும்?

இவர்கள் நமக்காக கடவுளை பக்தியால் ஒரு கல்லில் கட்டுப்படுத்தாமல் இருந்து இருந்தால்,
வானத்தை பார்த்து, "கடவுளே, கடவுளே எங்கு இருக்கிறாய்?" என்று ஹிரண்யகசிபு போல கத்தி கொண்டு இருந்து இருப்போம்.

தெய்வ அணுகிரஹம், ஒரு ஞானியின் சிபாரிசு மூலம் நமக்கு கோவிலில் கிடைத்து விடுகிறது.

தெய்வ அனுக்கிரகம் நாமே சம்பாதிக்க, நமக்கோ தெய்வ பக்தி இல்லை.  

தெய்வ அணுகிரஹம் இல்லாமல் போனால், செய்யும் பாவங்கள் எறிக்கொண்டே போகும்.
செய்த புண்ணியத்துக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.
தெய்வ அணுகிரஹத்தால் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகும்.

கோவிலுக்கு சென்று வழிபடுவது எத்தனை முக்கியம் என்று இப்பொழுது புரிந்து இருக்கும்.
யாரோ ஒரு ஞானி, நமக்காக தெய்வத்தை தன் பக்தியால் கட்டி போட்டு இருக்கிறார்.

நாம் போய், பிரார்த்தனை செய்வது ஒன்றே போதுமானது. தெய்வம் வேறு வழி இல்லாமல் அணுகிரஹிக்கும்.

பலன் அடைந்தால், "நன்றி" அந்த தெய்வத்துக்கு சொல்கிறோமோ இல்லையோ,  
அந்த தெய்வத்தை நிறுத்திய அந்த ஞானிக்கோ, மகானுக்கோ நாம் செய்ய வேண்டும்.

"நன்றி உள்ள மனிதன்", ஞானிகளையோ, மகான்களையோ, யோகிகளையோ, பக்தனையோ மறக்க மாட்டான்.
தெய்வத்தை நமக்கும் அணுகிரஹம் செய்ய வைத்த, அந்த மகானே நமக்கு குரு.

வாழ்க ஹிந்து

Hare Rama Hare Krishna - Bhajan
Sandhyavandanam - Morning Prayer (With meaning)

Sandhyavandanam - Afternoon Prayer (With meaning)




Sandhyavandanam - Evening Prayer (with meaning)



Sunday, 11 March 2018

பாரத நாடு - பெயர் காரணம். இந்தியா, ஹிந்து, பாரத என்ற சொல்லுக்கு பொருள் என்ன? தெரிந்து கொள்வோமே...

பாரத நாடு - பெயர் காரணம்.

பாரத வர்ஷத்தில் "பரத கண்டத்தில்" நாம் வாழ்கிறோம்.




பாரத வர்ஷம் எது?
இன்றைய இந்தியா (India), பிரிந்து போன பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தான் (Afghanistan), பங்களாதேஷ் (Bangladesh), திபெத் (Tibet), நேபால் (Nepal).
இவை எல்லாம் "பாரத வர்ஷம்" என்று அழைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் (Afghanistan) நகரை  உருவாக்கியவர் ஸ்ரீ ராமரின் தம்பி பரதன். "காந்தகார்" (Gandahar) என்ற தேசத்தை உருவாக்கினார்.
பாகிஸ்தானில் உள்ள தக்ஷஷீலா என்ற தக்ஸிலா (Taxila) என்ற தக்ஷஷீலா என்ற நகரும், "புருஷபுரா" என்ற பெஷாவர் (Peshawar) என்ற நகரமும் இவரால் உருவானது.
கைகேயி பிறந்த ஊரான கேகேய தேசம் இன்றைய பாகிஸ்தான்.

மேலும், "லவபுறம்" என்ற லாகூர் (lahore) என்று நகரம் ஸ்ரீ ராமரின் மகன் லவனால் உருவானது.
"பாரத" என்ற சொல், "இங்கு இருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்பதை குறிப்பதாக இருக்கிறது.

சமஸ்க்ருதத்தில்,
பாரத என்ற சொல்லுக்கு "பா ரூபே ப்ரஹ்மணி  ரதா இதி பாரத:" என்று பொருள் சொல்லப்படுகிறது.

அதாவது, "பாரத" என்றால், "தனது ஆத்ம ஸ்வரூபத்திலேயே திளைக்கக்கூடிய ஞானிகள்" என்று பொருள்.

இந்த பாரதத்தில் மட்டுமே ஞானிகள் சர்வ சாதாரணமாக பிறக்கின்றனர்.

பிற்காலத்தில், கிரேக்க அரசன் "அலெக்சாண்டர்" முதலில் பாரத தேசத்திற்கு படையெடுத்த போது, சிந்து நதி பக்கம் வந்து,
பாரத மக்களை பார்த்து, "இந்து" என்று தவறாக உச்சரித்தான்.

இவனுக்கு பின்னர் வந்த இஸ்லாமியர்கள், "சிந்து" நதி பக்கம் வந்து,
பாரத மக்களை பார்த்து, "ஹிந்து" என்று தவறாக உச்சரித்தனர்.

பின்னர் வந்த கிறிஸ்தவன், "இந்து" என்ற சொல்லை நம் தேசத்தின் பெயர் ஆக்கி "இந்தியா" (India) என்று பெயர் கொடுத்து, இதில் பிரித்து கொடுத்த மிச்ச (பாகி) நிலத்தை "பாகிஸ்தான்" (Pakistan) என்று பெயர் வைத்து மாற்றிவிட்டான்.




தன் கிறிஸ்தவ மதத்தாலும், ஏற்கனவே புகுந்து இருந்த இஸ்லாமிய மதத்தாலும்,
பல பாரத மக்கள், விடுதலை சமயத்தில், இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டு இருந்தனர்.

1200 வருட வேற்று மத ஆக்கிரமிப்பு ஏற்பட்ட போதிலும்,
கோடிக்கணக்கான பாரத மக்கள், பணத்திற்காகவோ, பயத்தாலோ மதம் மாறாமல் தீரத்துடன் இருந்தனர். சிலர் மதம் மாற்றப்பட்டு இருந்தனர்.

1200 வருட வேற்று மத ஆக்கிரமிப்பு ஏற்பட்ட போதிலும், மதம் மாறாமல் இருந்த இவர்களை அடையாளம் காண, இஸ்லாமிய ஆட்சியில், பாரத மக்களை "ஹிந்து" என்று அழைக்கும் பழக்கம், உள்ளே புகுந்து இருந்த இஸ்லாமியர்களுக்கு இருந்தது.
விடுதலைக்கு பின், வேறு மதங்களுக்கு மாறியவர்களுக்கு மதப்பெயர் இருந்ததால்,
மாறாது இருந்த மானமுள்ள பாரத மக்களை "ஹிந்து" என்ற அடையாளத்தையே மத பெயராக கொடுத்து இந்திய சட்டம்.
அடையாளமாக அழைத்ததையே மதமாக்கி கொடுத்தது இந்திய சட்டம்.

தங்கள் மதத்திற்கு பெயர் இருப்பது போல, பாரத மக்களுக்கும் "ஹிந்து" என்ற மதத்தை சேர்ந்தவர்கள் என்று உருவாக்கினர்.

சுதந்திரம் அடைந்த பின், கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாமியத்துக்கும் மாற்றப்பட்டு இருந்த சில லட்சம் பாரத மக்கள், அரசாங்கம் சம்பந்தமான பத்திரம் போன்றவற்றில் தாங்கள் இந்த மதம் என்று போட்டுக்கொண்டனர்.

பணத்திற்காகவோ, பயத்தாலோ மாறாமல் இருந்த வீர பாரத மக்கள், தங்களை "ஹிந்து" மதம் என்று போட்டுக்கொண்டனர்.

மதம் மாறிப்போன பாரத மக்களும் நம் மக்களே.

இருந்தாலும், பிற மதத்தை தழுவிய காரணத்தால், இவர்களுக்கு ஹிந்து மத வெறுப்பு அதிகமாக போதிக்கப்படுகிறது.
விளைவு,
இன்று வரை தன் குடும்பத்தை எவனோ ஒருவன் பணத்தாலோ, பயமுறுத்தியோ மாற்றி இருக்கிறான் என்று அறிவு இல்லாமல், இன்று வரை பாரத மக்களாகவே வாழும் ஹிந்துக்களை கண்டால் வெறுப்பு அடைகிறான் மதம் மாறியவன்.




"தான் மீண்டும் ஹிந்துவாக ஆவோம்" என்று நியாயமான சிந்தனை இல்லாமல்,
இன்றும் ஹிந்துவாக இருக்கும் பாரத மக்களை பணத்தை காட்டியோ, பலத்தாலோ எப்படி மாற்றலாம்? என்று பார்க்கின்றனர்.

இந்த கீழ் புத்திக்கு காரணம், இவர்கள் இல்லை.
இவர்களும் பாரதமக்களே.
இவர்கள் மதம் சொல்லி தரும் கொள்கை இது.

ஞானிகள் நிறைந்த தேசம் என்பதால், இதற்கு பாரதம் என்று பெயர்.

ஜடபரதர் என்ற ஞானி முற்பிறவியில், மானாக பிறந்தார்.
அதற்கும் முற் பிறவியில், "பரத" மகாராஜனாக இருந்தார்.
மகாராஜனாக இருந்தும் ஞானியாக இருந்தார்.
பரதன் என்ற அரசன், மகான் ரிஷபரின் மகன்.
பரத கண்டம் என்னும் இன்றைய இந்தியா இவராலேயே அழைக்கப்பட்டது.





சில மண்ணில், நெல் நன்றாக விளையும்,
சில மண்ணில், கோதுமை நன்றாக விளையும்.
அது போல,
இந்த பாரத தேசத்து மண்ணில் மட்டும், ஞானிகள் பிறந்து கொண்டே இருப்பார்கள்.

இந்த பாரத நாட்டில் ஓடும் "நதிகள்",
இந்த பாரத மக்கள்

  • கட்டிய கோவில்கள், கட்டிடங்கள், 
  • வேதம், 
  • இதிகாசம், 
  • புராணம், 
  • கவிதைகள், 
  • காவியங்கள், 
  • நாடகங்கள், 
  • தாய் மொழி சமஸ்க்ரிதத்தை கொண்டு உருவான 100 மேற்பட்ட தேச மொழிகள், 
  • பலவித கலாச்சாரங்கள், 
  • பலவித தத்துவங்கள், 
  • பலவித வழிபாட்டு முறைகள், 
  • பலவித உணவுகள், 
  • பலவித உடைகள், 
  • பலவித சிற்பங்கள், 
  • வானியல் சாஸ்திரம்,
  • ஓவியம், 
  • சங்கீதம், 
  • நாட்டியம், 
  • வாத்திய கலைகள் 
  • இவை எல்லாம் சேர்ந்து, 
  • மிகுந்த செல்வமும், 
  • வீரமும், 
  • அதே சமயம் 
  • பண்பும், 
  • இரக்கமும், 
  • மோக்ஷத்தை விரும்பும் நோக்கமும் உடையவர்களாக 

பாரத மக்கள் இருந்தனர்.




1200 வருடங்கள் பிறமத வெறியர்கள் பாரசீக (Iran, Saudi), ஆப்கான் (Afghan), dutch, portuguese, பிரெஞ்ச் (French), பிரிட்டிஷ் (British) போன்ற நாட்டில் இருந்து வந்து அராஜகம் செய்து,
அழித்த கோவில்கள், சிற்பங்கள், செல்வங்கள், எண்ணிலடங்கா.

1200 வருடத்திற்கு பிறகும், நமக்கு மிஞ்சிய உள்ள, சில கோவில்களையும், சிற்பங்களையும், ஹிந்துக்களையும் பார்க்கிறோம் என்றால்,
1200 வருடம் முன் சென்று பார்த்தால், நாம் எத்தனை பெருமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்? என்று புரியும்.
எத்தனை இழந்து இருப்போம்? என்று புரியும்.

பாரத நாட்டில் மட்டுமே,
"ஆன்மாவை" பற்றிய சிந்தனை உடைய ஞானிகள் பிறக்கின்றனர்.

நான் யார்? என்று உயிரை பற்றிய அறிவு கொண்டிருப்பவர்களே பாரத மக்கள்.

மற்ற தேசங்களில் அதிக பட்சம் "தத்துவ ஞானிகள்" மட்டுமே பிறக்கின்றனர்.
வெளி விஷயத்தை பற்றிய அறிவுடன் இருப்பதே இவர்களுக்கு நோக்கம்.
இதனால் தான், விவேகானந்தர் பேசும் போது
"உலகத்திற்கு பாரத தேசத்தின் பங்களிப்பே, பல மகான்களை பெற்று கொடுத்தது தான்" என்றார்.
கிரேக்க, இஸ்லாமிய, கிறிஸ்தவ அந்நியர்களின் தவறான உச்சரிப்பால் கிடைத்த பெயர்களே "இந்தியா, ஹிந்து, ஹிந்துஸ்தான்" போன்றவை.
இதற்கு அர்த்தம் இல்லை.  இவை காரண பெயர்கள் மட்டுமே.

பாரத நாடு என்பதே சரியான பெயர்.
நம் அடையாளமும் கூட.
"ஞானிகளை உருவாக்கும் நிலம்" என்ற அர்த்தம் கொண்ட "பாரதம்" என்பதே நம் உண்மை அடையாளம்.

வாழ்க பாரத நாடு. வாழ்க பாரத மக்கள்.




sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  


Sunday, 25 February 2018

'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான். பகவத் கீதை முதல் ஸ்லோகம், நமக்கு சொல்லும் அறிவுரை.. தெரிந்து கொள்வோமே...

பகவத் கீதை முதல் ஸ்லோகம்



மனிதர்களாகிய நாம், பல நேரம்,
'நாம் செய்யும் ஒழுக்க கேடான செயல்கள், தனக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு உண்டாக்கும் என்று தெரிந்தும்' செய்கிறோம்.

'இது கெட்ட பழக்கம் என்று தெரிந்தும்' செய்கிறோம்.

'பலர் இது தவறு என்று சொன்னாலும் கேட்டு விட்டு, மீண்டும் மீண்டும்' செய்கிறோம்.

'நம் உள்ளே இருக்கும் பரமாத்மா, உள்ளிருந்து நாம் செய்வது தவறு என்று சொன்னாலும் தெரிந்தே' செய்கிறோம்.

'நாம் செய்யும் இந்த தவறான செயலுக்கு சரியான அடி கிடைக்கும் என்று தெரிந்தாலும், ஒன்றும் ஆகாது என்ற குருட்டு நம்பிக்கையில்' செய்கிறோம்.

'செய்யும் தவறுக்கு, அடி வாங்கி கொண்டு இருக்கும் போது, இனியாவது விட்டு விடு என்று யாராவது சொன்னாலும், கேட்டு விட்டு, தொடர்ந்து' செய்கிறோம்.

'செய்த தீய செயலுக்கு பலர் எச்சரிக்கை செய்தும், தெய்வமே மனசாட்சியாக சொல்லியும் கூட, சிறிது அடி வாங்கும் பொழுதாவது செய்யும் தவறை திருத்தி கொள்ளாமல், மேலும் மேலும் செய்து,' தண்டனை பெறுகிறோம்.

இப்படிப்பட்ட ஒருவன் செய்த தவறு தான், 
மஹாபாரத போருக்கு வித்திட்டது. 40 லட்ச க்ஷத்ரிய வீரர்கள், 18 நாட்களில் அழிய காரணமானது.
த்ருதராஷ்டிரன் இத்தனை பேர் எச்சரித்தும், தனக்கே தவறு செய்கிறோம் என்று தெரிந்தும், தன் தவறை தொடர்ந்து செய்தான். 
தன் அழிவுக்கும், தன் குலம் அழியவும் வித்திட்டான்.

நாமும் த்ருதராஷ்டிரன் போல வாழாமல்,
'தவறு' என்று தெரிந்தவுடன் விபீஷணன் போல, எது தர்மமோ அந்த வழியில் சென்று நிற்க வேண்டும். 



'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான்.
இதுவே இந்த முதல் ஸ்லோகம் நமக்கு சொல்லும் அறிவுரை. மனதில் பதிய வைக்க வேண்டிய அறிவுரை.

மஹாபாரத போர் சுமார் 3150BC சமயத்தில், துவாபர யுக முடிவில் நடந்தது.

பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்ட வீரர்கள் மொத்தம் - 15 லட்சத்து, 30 ஆயிரத்து 900.

இதில் உயிர் பிழைத்தவர்கள்
பாண்டவர்கள் ஐவர்,
ஸ்ரீ கிருஷ்ணர்,
ஸ்ரீ கிருஷ்ணரின் படை தளபதி சாத்யகி,
த்ருதராஷ்டிரனுக்கு பிறந்த தாசி புத்ரன் 'யுயுத்சு' மட்டுமே.

கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்ட வீரர்கள் மொத்தம் - 24 லட்சத்து, 5 ஆயிரத்து 700.

இதில் உயிர் பிழைத்தவர்கள்,
அஸ்வத்தாமா, க்ருபர், க்ருதவர்மன்.

'அஸ்வத்தாமா' போர் முடிந்த பின்,
தூங்கி கொண்டிருந்த பாஞ்சாலியின் 5 புதல்வர்கள், த்ருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரை இரவோடு இரவாக  கொன்று விட்டான்.
பாரத போரால் அனைத்து வீரர்களும் மடிந்தனர்.
18 நாட்களில் 40 லட்சம் மஹாவீரர்கள் மடிந்தனர்.

ஒவ்வொரு ஆணுக்கும் தாய், மனைவி, பெண்கள் என்று உறவு இருக்கும் என்று பார்க்கும் பொழுது, 40 லட்சம் ஆண்கள் இறந்ததால், குறைந்தது 1 கோடி பெண்கள், தங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசுகளை, ஆண் பாதுகாப்பை இழந்தனர்.

கிரேக்க நாட்டில் இருந்து ரஷ்யா வரை இருந்த, க்ஷத்ரிய அரசர்கள் அழிந்தனர். 

உலகத்தை ஒரு குடையின் கீழ் தர்மபுத்ரர் ஆண்டார். 
பின்னர் பரிக்ஷித், எதிரிகள் இல்லாத இந்த பெரும் அரசாட்சியை பெற்றான்.

போர் ஏற்பட்டால், பெண்கள் தனித்து விடப்பட்டு, ஆண் ஆதரவு இன்றி, தங்களையும், குழந்தைகளையும் பார்த்து கொள்ள முடியாமல் தற்கொலையோ, தவறான வழியையோ தேர்ந்தெடுக்க நேரிடுமே!! 
என்று அர்ஜுனன் போர் ஆரம்பத்தில் புலம்பினான்.
பகவத் கீதை உபதேசம் செய்து, ஞானத்தை கொடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

போர் முடிந்து துவாரகை திரும்பும் பொழுது, மகரிஷி உத்தங்கரை வழியில் சந்தித்தார் ஸ்ரீ கிருஷ்ணன்.

மகரிஷி உத்தங்கர், கோபமாக ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"நீங்கள் நினைத்து இருந்தால், இப்படி ஒரு பேரழிவு நடந்து இருக்காது. லட்சகணக்கான க்ஷத்ரியர்களின் உயிர் காப்பாற்ற பட்டு இருக்கும்.
ஒரு குடும்ப சண்டைக்காக, உலக க்ஷத்ரியர்கள் இப்படி சேர்ந்து கொண்டு உயிர் விட்டு விட்டார்களே!! "
என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணர், இவருக்கு ஞான உபதேசம் செய்து, தர்மத்தை விளக்கினார்.
வியாசர், விதுரர், சஞ்சயன் உபதேசம் செய்தும், 
இதற்கு மேல் தானே எச்சரிக்கை விடுத்தும், 
த்ருதராஷ்டிரன் போரை தன் மகன் துரியோதனனுக்காக நடக்க செய்தான். 
பேரழிவு நடக்க காரணமாக இருந்தான், என்பதையும் விளக்கினார்.



உதங்கர் உண்மை அறிந்து, ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கினார்.

போர் நடக்காமல் இருக்க, சமாதான தூதுவனாக சென்றும், ஸ்ரீ கிருஷ்ணரை சிறை பிடிக்க முயன்றான் துரியோதனன். 
போர் வேண்டாம் என்ற எண்ணம் துளியும் இல்லை கௌரவர்களுக்கு.

கௌரவர்கள் தந்தை 'த்ருதராஷ்டிரன்' தடுக்கவும் இல்லை.

போர் நடக்கும் முன்பே, த்ருதராஷ்டிரனுக்கு போர் வேண்டாம் என்று வியாசர் உபதேசம் செய்தார்.
பின்னர் விதுரர் த்ருதராஷ்டிரனுக்கு உபதேசம் செய்தார்.

பீஷ்மர் த்ருதராஷ்டிரனுக்கு உபதேசம் செய்தார்.

தூது வந்த ஸ்ரீ கிருஷ்ணர், த்ருதராஷ்டிரனுக்கு தானே உபதேசம் செய்தார்.
'தான் பகவான்' என்று விஸ்வரூபம் காட்டி, 'போர் வேண்டாம்' என்று முடிவு செய்வானா என்று பார்த்தார்.
'மாயாஜாலம்' என்றான் துரியோதனன்.

மேலும்,
"த்ருதராஷ்டிரா! 
ஒரு குடும்பம் தர்மத்தில் இருக்க, தர்மத்தை கெடுக்கும் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவனை, அந்த  குடும்பத்தை விட்டு விலக்க வேண்டும்.
ஒரு ஊர், ஒரு குடும்பத்தால் அதர்மத்தில் வீழும் என்றால், அந்த குடும்பத்தை அந்த ஊரை விட்டு விலக்கலாம்.
ஒரு நாட்டுக்கு நன்மை அமைய, ஒரு ஊரை அழிக்க வேண்டும் என்றாலும், நாட்டின் நன்மைக்காக செய்ய வேண்டும்.
இப்படி பலர் நன்மை அடைய, ஒரு சில தியாகம் செய்யலாம்.

உன் குடும்ப சண்டையால் ஏற்பட போகும் இந்த போரில், பல லட்சம் க்ஷத்ரியர்கள் அழிந்து விடுவார்கள்.
போரினால் அழிவு நிச்சயம். 
இந்த பேரழிவுக்கு நீ காரணமாகி விடாதே !.

இந்த போர் நடக்காமல் இருக்க ஒரு வழி சொல்கிறேன் கேள்.
உனக்கு ஒன்று இரண்டு புதல்வர்கள் இல்லை. 100 புதல்வர்கள்.
இந்த போரால், உன்னுடைய 100 புதல்வர்களையும் இழக்க நேரிடலாம். உன்னால் பல க்ஷத்ரிய அரசர்களும் உயிர் துறக்க நேரும்.

இந்த பேரழிவை தடுக்க, நீ 99 பிள்ளைகளை வைத்துக்கொள், ஒரே ஒரு மகனை மட்டும் தியாகம் செய்து விடு. துரியோதனன் ஒருவனை நாடு கடத்து. போர் நேராது"
என்றார்.
த்ருதராஷ்டிரன், "கிருஷ்ணா ! நீ மற்ற எந்த பிள்ளையையும் தியாகம் செய்ய சொல், செய்கிறேன். ஆனால், துரியோதனனை மட்டும் என்னால் தியாகம் செய்ய முடியாது"
என்றான்.



இப்படி ஸ்ரீ கிருஷ்ணர், தானே சமாதான தூது சென்று,
'தானமாக 5 கிராமங்கள் கேட்டும்' முடியாது என்று சொல்லி,
'தான் பகவான்' என்று விஸ்வரூபம் காட்டியும் 'மாயாஜாலம்' என்று நினைத்து,
'துரியோதனனை விலக்கு' என்று சொல்லியும் மறுத்து,
தன்னையே சிறை பிடிக்க முயற்சி செய்தான் துரியோதனன்.
இப்படி பல முயற்சி செய்தும், பாரத போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
போர் நடக்க போகும் சமயத்தில்,
த்ருதராஷ்டிரன் வ்யாசரிடம் தான் 'இந்த போரை பார்க்க அணுகிரஹம் செய்ய வேண்டும்' என்றான்.

போர் அழிவை தரும், வேண்டாம் என்று சொல்லியும் திருந்தாத த்ருதராஷ்டிரன், போரை பார்க்க ஆசைபட்ட பொழுது, 'இவன் இதை பார்த்தாலாவது ஏதாவது ஒரு சமயத்தில் போரை நிறுத்துவானோ' என்று நினைத்து,
"நீ குருக்ஷேத்ர இடத்துக்கு செல். 
அங்கு ஒரு இடத்தில் அமர்ந்தபடியே, 
ஒவ்வொரு வீரனும் என்ன செய்கிறார்கள்? 
யாருடன் சண்டை செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? 
என்று அனைத்தும் என் அணுகிரஹத்தால், ஞான த்ருஷ்டியில் அப்படியே தெரியும்" என்றார்.

இதற்கு த்ருதராஷ்டிரன் சொல்லும் பதிலை கவனித்தால் நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்.
த்ருதராஷ்டிரன் சொல்கிறான்,
"எனக்கு ஞான திருஷ்டி வேண்டாம். 
இந்த போரில் என் 100 பிள்ளைகள் மடிவதை என்னால் பார்க்க முடியாது. நான் பார்க்க ஆசை படவில்லை. 
இருந்தாலும் என்ன நடக்கிறது? என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். வேறு உபாயம் சொல்லுங்கள்"
என்றான்.

அப்படியென்றால், தனக்கு சிஷ்யனாக உள்ள "சஞ்சயனுக்கு" இந்த ஞான திருஷ்டியை அளிக்கிறேன்.
"சஞ்சயன் தன் ஞான தருஷ்டியில் பார்த்து உனக்கு நடந்ததை சொல்வான்" என்றார் வியாசர்.
இதற்கு சம்மதித்தான் த்ருதராஷ்டிரன்.

போர் ஆரம்பம் ஆகியது.
சஞ்சயன் தானே குருக்ஷேத்ரம் சென்று பார்த்து வர சென்றான்.

அங்கு இருந்து கொண்டே, தன் ஞான தருஷ்டியில் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
10 நாட்கள் போரை குருக்ஷேத்ரத்தில் இருந்து கொண்டே பார்த்தான்.
பத்தாவது நாள் (10th Day), 
யாராலும் தோற்கடிக்க முடியாத பீஷ்மர் வீழ்ந்தார். 
இந்த 10 நாள் யுத்தத்தில் பாதி படைகள் அழிந்து விட்டன.



பீஷ்மர் வீழ்ந்த பின், 'கௌரவர்கள் இனி ஜெயிக்க முடியாது' என்பது நிச்சயமானது.

இனியாவது, த்ருதராஷ்டிரன் தன் தவறை உணர்வானோ!! என்று எண்ணி, குருக்ஷேத்ரம் விட்டு, 11வது நாள், சஞ்சயன் த்ருதராஷ்டிரனை பார்க்க சென்றான்.

'பீஷ்மர் வீழ்ந்து விட்டார். இனி பாண்டவர்கள் ஜெயிப்பது நிச்சயம். இனியாவது போரை நிறுத்த சொல்வானா?'
என்ற நப்பாசையில் சஞ்சயனும் முயன்றான்.

இப்படி வியாசர், விதுரர், ஸ்ரீ கிருஷ்ணர், சஞ்சயன் சொல்லியும், 
'போர் நடந்தே ஆக வேண்டும்' என்று முடிவு கட்டி விட்ட கௌரவர்கள் மீதும், த்ருதராஷ்டிரன் மீதும் குறை இருக்க, தன் மீது கோபப்படுவது வீண்"
என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உதங்கர் உண்மை அறிந்து சமாதானம் அடைந்தார்.
10 நாள் போருக்கு பின்னர் வந்திருக்கும் சஞ்சயன்,
என்ன சொல்ல போகிறானோ? 
நாம் ஜெயித்தோமா? இல்லை பாண்டவர்கள் ஜெயித்து விட்டார்களா? 
என்ற பதட்டத்தில்,
சஞ்சயனை பார்த்து த்ருதராஷ்டிரன் கேட்கும் முதல் கேள்வியே, "பகவத் கீதை"யின் முதல் ஸ்லோகமாக அமைத்தார் வியாசர்.

திருதராஷ்டிரன் கேட்கிறான்:
சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும், பாண்டவரும் என்ன செய்தனர்?

धृतराष्ट्र उवाच
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥१॥

த்⁴ருதராஷ்ட்ர உவாச
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:|
மாமகா​: பாண்ட³வாஸ்²சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||1-1||



த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = அற நிலமாகிய குரு நிலத்தில்,
ஸமவேதா: = ஒன்று கூடி;
யுயுத்ஸவ: = போர்செய்ய விரும்பித் திரண்ட;
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்தனர்?

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning with meaning

Sandhya Vandanam - Afternoon with meaning




Sandhya Vandanam - Evening with meaning