Followers

Search Here...

Wednesday, 27 December 2017

மகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka

மகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka




"கர்நாடக தேசம்", "கிஷ்கிந்த தேசம்" (Hampi) , "மகிஷ தேசம்" (Mysuru) ஆகிய தேசங்கள், இன்று "கர்நாடகா" என்று அழைக்கப்படுகிறது.
ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமர் கால் பட்ட இடம் இந்த கர்நாடகா தேசம். சபரியையும், பின் கிஷ்கிந்தை என்ற ஹம்பி நகரில், ஹனுமனையும், சுக்ரீவனையும் இங்கு தான் கண்டார்.
நாகரீகம் அறியாத, காட்டுவாசி போல வாழும் "சபரி" என்பவள், ஒரு நாள் மதங்க முனிவரை "பம்பா நதி என்ற துங்கபத்ரா நதி" அருகே கண்டாள்.

அவரையே தன் குருவாக ஏற்று, பார்த்த நாளில் இருந்து அவருக்கு சேவை செய்ய ஆரம்பித்தாள். 
அவர் ஆசிரமத்தை கூட்டி பெருக்குவது முதல் பூ, பழம் கொண்டு வந்து பூஜைக்கு கொடுப்பது வரை விடாது செய்து வந்தாள்.

ஒரு நாள், மதங்க முனிவர், தான் இந்த உலகத்தை விட்டு செல்லப்போவதாக சொல்லி, தன் சிஷ்யர்களை கூப்பிட்டு, 
யார் யாருக்கு என்ன வரம் வேண்டுமோ அதை தன் தவ வலிமையால் அனுக்கிரகம் செய்து கொண்டிருந்தார்.





சபரியை பார்த்து, 'உனக்கு என்ன வேண்டும்?' என்றார்.
எதை கேட்பது? என்று அறியாதவள், தன்னை விட்டு குரு செல்ல போகிறாரே என்ற கவலையில் அழுதாள்.

இவளின் உண்மையான குரு பக்தியை கண்டு மனம் குளிர்ந்த மதங்கர், "உன்னை பார்க்க அந்த பரமாத்மா ஸ்ரீ ராமராக வருவார். அவரை தரிசித்த பின், நீயும் பரலோகம் வந்து, என்னை அங்கு தரிசிக்கலாம்" என்று அனுக்கிரகம் செய்தார்.

அன்று முதல், காலை எழுந்து ஆசிரமத்தை கூட்டி பெருக்கி, கோலம் போட்டு, காய் கனிகளை பறித்து ஸ்ரீ ராமருக்காக காத்து இருப்பாள்.

இப்படியே பல வருடங்கள் ஆகி, கிழவி ஆகி விட்டாள் சபரி. 
இருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை. 
குரு வாக்கியத்தை சத்தியம் என்று திடமாக நம்பினால். உண்மையான சிஷ்யன் இப்படி தானே இருப்பான். 
பூ பழம் பறிப்பதை ஒரு நாளும் நம்பிக்கை இழந்து நிறுத்தவில்லை.





ஒரு நாள், ஸ்ரீ ராமரும், லக்ஷ்மணரும் சேர்ந்து சபரியை பார்க்க, அவள் ஆசிரமம் தேடி வந்தனர்.
சபரி வரவேற்று, ஸ்ரீ ராமருக்கு கால் பிடித்து விட்டு, அன்று பறித்து வைத்திருந்த பழங்கள் சாப்பிட கொடுத்தாள். லக்ஷ்மணருக்கும் கொடுத்தாள்.
யாரிடமும் கை நீட்டி வாங்கி பழக்கமில்லாத ஸ்ரீ ராமர், சபரியின் அன்பில் தன்னை மறந்தார். 
அவள் கொடுக்கும் பழங்களை கை நீட்டி வாங்கி சுவைத்தார். 
ஸ்ரீ ராமர் கண் முன்னே, தன் தேகத்தை யோகத்தினால் பஸ்பமாக்கி, ஜ்யோதி ரூபமாக, தன் குருவை அடைந்தாள் சபரி
கர்நாடக தேசத்தில் நடந்த சரித்திரம்.

மஹாபாரத சமயத்தில், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, "சகாதேவன்" திக்விஜயம் செய்தார்.

கர்நாடக தேச அரசர்கள், சகாதேவன் பெயர் சொல்லி வந்த அவர் படைத்தலைவனுக்கே பயந்து, தோல்வியை ஒப்புக்கொண்டனர். 



ராஜசுய யாகத்திற்கு பல சன்மானங்கள் வழங்கினர்.
சகாதேவன் கிஷ்கிந்தை தேசத்தில் 7 நாள் கடும் போர் புரிந்தார். 
இறுதியில், கிஷ்கிந்தை தேச அரசர்கள் (Hampi) சகாதேவனின் போர் திறனை கண்டு ஆச்சர்யப்பட்டனர். 
இறுதியில், மகிழ்ச்சியுடன் முத்தும், பொன்னும் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு அளித்தனர்.
மகிஷ தேசம் (Mysuru) ப்ராம்மணர்கள் இல்லாத தேசமாக இருந்தது.

கர்ணன், இந்த தேசத்தில் உள்ளவர்களை "கலாச்சாரம் இல்லாதவர்கள், வாலிகர்கள்" என்றான்.

க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள் சூத்ரனை போல வேலை செய்ய ஆரம்பித்ததால், கலாச்சாரத்தை இழந்தவர்கள் என்று இகழ்ந்தான்.

மகிஷ தேசம் என்பது, இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது.

மஹாபாரத சமயத்தில், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, அர்ஜுனனும் திக்விஜயம் செய்தார்.





மகிஷ தேச அரசர்களை அர்ஜுனன் போரில் தோற்கடித்தான். 
இதை தொடர்ந்து, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிர தேசம் நோக்கி திக்விஜயம் செய்தார்.

மஹாபாரத போர் முடிந்த பின்னர், யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்து பாரத தேச சக்கரவர்த்தி ஆவதற்கு, மீண்டும் அர்ஜுனன் இந்த கர்நாடக தேசம் திக்விஜயம் செய்து அனைத்தையும் கைப்பற்றினார்.

பாண்டவர்களின் சொத்தாக ஆனது இந்த தேசம்

மஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu, Kerala.


மஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu, Kerala.

பாண்டிய தேசம், திராவிட தேசம், சோழ தேசம், காஞ்சி தேசம் ஆகிய தேசங்கள், இன்று ஒருசேர தமிழ்நாடு என்று கூறப்படுகிறது.

கேரள (சேர) தேசம், மூஷிக தேசம் ஆகிய தேசங்கள், இன்று ஒருசேர கேரளா என்று கூறப்படுகிறது.

மஹாபாரத போர் நடந்த காலம் ஏறத்தாழ 3127BC.
இதற்கும் 1000 வருடங்களுக்கு முன்பு திருகோவிலூரில் உள்ள த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் முதல் 3 ஆழ்வார்கள் திருவந்தாதி பாசுரங்கள் அருளினர். மேலும் திருமழிசை ஆழ்வாரும் மஹாபாரத காலத்துக்கு முன்பே அவதரித்தவர்கள்.


சுமார் 4000BCல் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்தில் அவதரித்தார்.
பூதத்தாழ்வார் மஹாபாலிபுரத்தில் அவதரித்தார்.
பேயாழ்வார் மயிலையில் அவதரித்தார்.

மூன்று ஆழ்வார்களும், திருகோவிலூரில் உள்ள த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர். 3 திருவந்தாதி இயற்றினார்கள்.

மஹாபாரத சமயத்தில், திரௌபதியின் சுயம்வரம் நடந்த போது, பாண்டிய தேச அரசர்கள் கலந்து கொண்டனர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு, தம்பி 'சகாதேவன்' தெற்கு தேசம் நோக்கி திக்விஜயம் சென்றார். கேரள அரசர்கள், திராவிடர்கள், பாண்டிய அரசர்கள் சகாதேவனிடம் போரிட்டு தோற்றனர்.
தோற்ற அரசர்கள் யாகத்திற்கு சன்மானங்கள் கொடுத்தனர்.

பாண்டிய தேச அரசர்கள், சேர தேச அரசர்கள் தங்கத்தால் ஆன எண்ணிலடங்கா கோப்பைகளில் சந்தனம் மற்றும் நறுமணமிக்க பல திரவியங்கள் சேர்த்து ராஜசுய யாகத்திற்கு பரிசளித்தனர்.

காஞ்சி, சோழ தேச அரசர்கள் தங்கத்தால் நெய்த பல வித வண்ண ஆச்சர்யமான பட்டு துணிகள், புடவைகள் ராஜசுய யாகத்திற்கு பரிசளித்தனர்.


அனைவரும், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திலும் கலந்து கொண்டனர்.

ஒரு பகுதி திராவிடர்கள், கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.
ஒரு பகுதி திராவிடர்கள், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

பெரும் பலம் கொண்ட சோழ அரசர்கள் மஹா பாரத போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

பாண்டிய தேசம், திராவிட தேசம், சோழ தேசம் ஆகிய தேசங்கள், பெரும்பாலும் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

திரௌபதிக்கு கௌரவர்களால், நடந்த அவமானம், அவள் செய்த சபதம், இன்று வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. திரௌபதிக்கு கோவில் கட்டி வழிபடும் முறை தமிழ்நாட்டில் மட்டுமே.

த்ருஷ்டத்தியும்னன், சிகண்டி, சேகிதானன், திரௌபதியின் 5 புதல்வர்களை பின் தொடர்ந்து சேர தேச படை மற்றும் சோழ தேச படை வீரர்கள் போரிட்டனர்.

இந்த மகாபாரத போரில், அனைத்து வீரர்களுக்கும், உணவு தயாரித்து பெரும் சேவை செய்தனர், சேர தேசத்தவர்கள்.

பாண்டிய அரசர்களுக்கும், பாண்டவர்களுக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ப்ரத்யேகமாக கர்நாடக தேச உடுப்பி அரசன், உணவு தயாரித்து சேவை செய்யும் பாக்கியம் பெற்றான்.

பீமன் தன் படையை கௌரவர்கள் பக்கம் நோக்கி செலுத்தினான். பீமனின் சேனையை தொடர்ந்து திராவிடர்கள், பாண்டிய தேச வீரர்கள், சோழர்கள், கேரள அரசர்கள், கருஷ தேச படை வீரர்கள், காஞ்சி தேச வீரர்கள், மகத தேச வீரர்கள், பாஞ்சால தேச வீரர்கள் கௌரவ படை நோக்கி போரிட சென்றனர்.

பாண்டிய தேச அரசர்கள் தேர் படை செலுத்துவதில் வல்லவர்கள். இதை பீஷ்மர் கண்டு, பாண்டிய தேச அரசர்கள் 'மஹாரதர்கள்" என்று பாராட்டினார்.

பாண்டிய தேச அரசர், துரோணரின் மகன் "அஸ்வத்தாமா"வை எதிர்த்து போரிட்டார். போரில், பாண்டிய தேச அரசன், 'அஸ்வத்தாமா'வினால் கொல்லப்பட்டான்.

மகாபாரத போர் முடிந்து, யுதிஷ்டிரர் அரசாட்சி அமைத்த பின், பாரத நாட்டை ஒரு தேசமாக ஆக்கி, அரசர்கள் யாவரும் சக்கரவர்த்தி யுதிஷ்டிரரின் கீழ் கொண்டு வர, அர்ஜுனன் திராவிட தேசங்களில் படை எடுத்தான். பல அரசர்கள் நட்பு கொண்டனர். எதிர்த்த சில அரசர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்திற்கு பிறகு, பிற் காலத்தில் தமிழ்நாட்டில் வந்த ஆழ்வார்கள், ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரங்களை பாசுரங்கள் செய்துள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் செய்த பின், பாரதம் முழுவதும் தெய்வ பக்தி மேலும் பிரகாசம் அடைந்து, பக்தி மார்க்கம் தழைத்தது.

மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது?

மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது?




"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்" என்று அறியப்பட்ட பாரத தேசங்கள், இன்று முஸ்லீம் தேசமாக பாகிஸ்தான் என்ற பெயரில் பிரிக்கப்பட்டது.
ராமாயண காலத்தில், கைகேயி பிறந்த ஊர் "கேகேய" தேசம்.
இந்த தேசம் இன்று பாகிஸ்தானில் உள்ளது.

ராமர் காட்டுக்கு சென்ற துக்கத்தில், கோசல மன்னன் (உத்திரபிரதேசம்) "தசரதன்" உயிர் பிரிந்தது.
அந்த சமயம், 'பரதனும், சத்ருகனனும்' கேகேய தேசத்தில் இருந்தனர். அங்கிருந்து புறப்பட்டு கோசல தேசம் (UP, INDIA) வந்தார் பரதன்.

ராமரின் தம்பி பரதன், "தக்ஷஷிலா" மற்றும் "புருஷபுரா" என்ற இரண்டு முக்கியமான நகரங்களை கேகேய தேசத்திற்கு அருகில் உருவாக்கினார்.
இந்த இரண்டு நகரங்களும் (Taxila, Peshawar) கூட, இன்று பாகிஸ்தான் பகுதியில் தான் உள்ளது.
பரதன் அமைத்த "தக்ஷஷிலா" என்ற நகரம் தக்ஷிலா (Taxila) என்றும், 
பரதன் அமைத்த "புருஷபுரா" என்ற நகரம் பெஷாவர் (Peshawar) என்றும்,
இன்று பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்களால் ஆக்ரமிக்கப்பட்டு விட்டது.
முஸ்லீம் நகரம் போல பெயர் மாற்றப்பட்டு, இன்று அழைக்கப்படுகிறது.




மதம் மாறுபவர்கள் செய்யும் முதல் வேலையும் இதுவே.
சனாதன தர்மம் இருந்த தேசம், இன்று முஸ்லீம் தேசமாக ஆனது துரத்ரிஷ்டமே !!

வியாசர் எழுதிய மஹாபாரத்தை, "வைசம்பாயனர்" என்ற அவரது சிஷ்யர் கேட்டார்.
அதனை, இப்போதுள்ள இந்த தக்ஷிலா (Taxila) என்ற நகரில் தான், அர்ஜுனனின் குடும்ப வாரிசான "ஜனமேஐயன்" கேட்டார். 
முஸ்லீம் நாடாகி போன இந்த பாகிஸ்தானில், பல சரித்திரங்கள் ஹிந்துக்கள் இழந்து விட்டோம்.
ஸ்ரீ ராமரின் புதல்வர்களில், லவன் உருவாக்கிய நகரம் "லவபுறம்", இன்று லாகூர் (lahore) என்று பெயர் மாற்றப்பட்டு, முஸ்லீம் நாடாக பிரித்து கொடுத்து விட்டோம்.

ராமரின் தம்பி 'பரதன்' கட்டிய நகரமும், அவர் பிள்ளை 'லவன்' கட்டிய நகரமும் முஸ்லீம் தேசமாக காரணம் ஆனோம்.

ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்தியிலும் அவருக்கான மரியாதை செய்ய ஹிந்துக்கள் தவறுகிறோம்.




ஹிந்துக்கள் கொஞ்சம் சரித்திரத்தை உணர்ந்து, இழந்ததை அறிந்து, இனியாவது இருப்பதை இழக்காமல் இருக்க வேண்டும்.

ஹிந்துக்களாக இருந்து பின் மதம் மாறிய கூட்டங்களே, பெரும்பாலும் ஹிந்துக்களுக்கு தடையாக இருந்துள்ளனர்.

அமைதியாக இருத்தல், சம தர்மம் பேசுதல், இவை தான் ஹிந்துக்கள் லட்சணம் என்று பிற போலி மதங்களில் உள்ளவர்கள் எண்ணம். 
இதுவே, மத மாற்றம் செய்ய ஹிந்துக்களே கொடுக்கும் வாய்ப்பு.

இப்படி மதம் மாறிய கூட்டமே, இன்றைய பாகிஸ்தான்.

இந்த மதம் மாறிய மனிதர்களே, ஹிந்துக்களின் கலாச்சாரத்தை அழிப்பவர்கள் என்பது கவனிக்க வேண்டிய உண்மை.





'பரதன்' உருவாக்கிய "காந்தாரம், தக்ஷிலா, புருஷபுரா",
ஸ்ரீ ராமரின் புதல்வன் 'லவன்' உருவாக்கிய "லவனபுரி",
'லக்ஷ்மணன்'  உருவாக்கிய "லக்ஷ்மனபுரா", ஆகிய நகரங்களை, 
இந்த மதம் மாறிய கூட்டத்திற்காக, சம தர்மம் பேசும் ஹிந்துக்கள் தானம் கொடுத்து விட்டனர்.

சரித்திர அறிவு இல்லாததே இதற்கு காரணம்.

உண்மையான ஊர் பெயரும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.

காந்தாரம் 'Gandahar, Afghanistan' ஆனது.

தக்ஷிலா 'Taxila, Pakistan' ஆனது.

லவனபுரி 'Lahore, Pakistan'' ஆனது.

லக்ஷ்மனபுரா 'Lucknow, India' ஆனது,

புருஷபுரா 'Peshawar, Pakistan' ஆனது.
மகா கொடிய பாம்புகள் இருந்த இடமாக இருந்தது "தக்ஷஷிலா". தேவலோக நாகங்கள் கூட இங்கு வாசம் செய்தன. 
தன் தந்தை பரீக்ஷித் பாம்பு கடித்து மறைந்தார் என்ற கோபத்தில், இந்த தக்ஷஷிலா என்ற இடத்தில் தான் சர்ப்ப யாகம் செய்து கொடும் விஷம் கொண்ட கோடிக்கணக்கான பாம்புகளை கொன்றான்.




தனிப்பட்ட விரோதத்திற்காக பாம்பு வர்க்கமே இருக்க கூடாது என்று நினைப்பது தவறு என்று உணர்ந்து, பின் கோபம் தணிந்து, யாகத்தை பாதியில் நிறுத்திக்கொண்டான் 'ஜனமேஐயன்'.

இனி, மகாபாரத சமயத்தில் பாகிஸ்தான் எப்படி இருந்தது? என்று பார்ப்போம்.

மஹா பாரத சமயத்தில்,
மாத்ர தேசத்தை (Punjab Region in Pakistan), சல்யன் என்ற அரசன் ஆண்டு வந்தார். இவர் பாண்டவர்களின் உறவினர். இவரின் மகள் "மாத்ரி" குரு தேச அரசன் 'பாண்டு'வை மணந்தாள்.

நகுலன் மற்றும் சகாதேவனுக்கு, சல்யன் தாத்தா முறை.

மஹா பாரத போர் நடக்க போவது நிச்சயம் என்ற நிலையில், பாண்டவர்கள் பக்கம் தன் தேசம் துணை நிற்கும் என்று சொல்வதற்காக "குரு" தேசம் (UP, India) நோக்கி வந்து கொண்டிருந்தார் சல்யன்.

இதனை கேள்விப்பட்ட துரியோதனன், படையோடு வந்து கொண்டிருக்கும் சல்ய அரசனுக்கும் அவர் படைகளுக்கும் வழியில் உபசரித்து பெரிய விருந்து கொடுத்தான்.
பாண்டவர்கள் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று நினைத்து, உபசரிப்பை ஏற்றுக்கொண்டார்.


பின்னர், துரியோதனன் தான், சூழ்ச்சி செய்து இதை செய்துள்ளான் என்று அறிந்தார். 
அடுத்தவன் சமைத்த உணவை உண்டால், அவனுக்கு பதில் செய்ய வேண்டும் என்பது தர்மம். 
இதற்கு கட்டுப்பட்டு, தன்னிடம் என்ன உதவி எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார் சல்யன்.

மாத்ர தேச படைகள், துரியோதனன் பக்கம் நின்று போர் புரிய வேண்டும், மேலும் கர்ணன் போர் புரியும் சமயத்தில், சல்ய அரசரே தேர் ஓட்ட வேண்டும் என்று கேட்டனர்.
தர்மத்தை மீறாத அரசர், சம்மதித்து, துரியோதனன் பக்கம் நின்று போர் செய்தார்.

மஹா பாரத போரில், 13ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் வகுத்த சக்ரவ்யூஹத்தை உடைத்து, அபிமன்யு சென்றான்.
தனி ஒருவனாக அங்கிருந்த மஹா ரதர்களை எதிர்த்து போரிட்டான்.

எதிர்த்த கோசல அரசன் (உத்திரபிரதேசம்) "ப்ருஹத்பாலனை" அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொன்றான்.
பின்னர், மாத்ர அரசன் சல்யனின் மகன் "ருக்மரதன்" மேலும் சல்யனின் சகோதரன் இருவரையும் அபிமன்யு போரில் கொன்றான்.

மேலும் அபிமன்யு, துரியோதனின் மகன் லக்ஷ்மணனையும் கொன்றான்.



படு தோல்வி நிகழப்போவதை உணர்ந்த துரோணர், 6 மஹா வீரர்களை (கிருபர், கர்ணன், யாதவ தலைவன் க்ரிதவர்மன், துரியோதனன், சகுனி, துச்சாதனன்) தன்னுடன் சேர்ந்து கொண்டு அபிமன்யுவை கொல்ல சொன்னார்.

தளராத அபிமன்யு, அனைவரையும் எதிர்த்து போரிட்டு, சகுனியின் சகோதரனையும் பல ஆயிரம் சேனைகளை வீழ்த்தினான்.

கடைசியாக களைத்த நிலையில் ஆயுதம் இல்லாத நிலையில், துச்சாதனன் கதையால் தாக்கி அபிமன்யுவை கீழே விழ செய்தான். 
குருக்ஷேத்ர போரின் விதியை மீறி, அனைவரும் சேர்ந்து அபிமன்யுவை கொன்றனர்.

மஹா பாரத சமயத்தில்,
சிந்து தேசத்தை (பாகிஸ்தான் பகுதி) ஆண்டு வந்தான் 'ஜயத்ரதன்'. 
இவன் துரியோதனின் தங்கை "துஷலா"வை மணந்தான்.

இவன் தந்தை 'வ்ரிதக்ஸ்த்ரா' நாட்டை ஜயத்ரதன் கையில் ஒப்படைத்து, தவம் செய்ய சென்றார்.

மஹாபாரத சமயத்தில், பாண்டவர்கள் 13 வருடம் வனவாசம் மேற்கொண்ட போது, 
ஜயத்ரதன், தன்னுடன் சில கேகேய படைகளுடன் (பாகிஸ்தான் பகுதி) வந்து திரௌபதியிடம் தவறாக நடக்க முயன்றான்.



அர்ஜுனன் ஓடி வந்து, அனைவரையும் துரத்தி, ஜயத்ரதனை பிடித்து இழுத்து வந்து, யுதிஷ்டிரரிடம் நிறுத்தினான்.
துரியோதனனின் தங்கையின் கணவன் 'ஜயத்ரதன்' என்பதால், உயிரோடு விட்டு, ஆனால் செய்த தவறுக்கு இவன் எந்த நாட்டுக்கும் சில மாதங்கள் செல்லாமல் இருக்க, இவன் தலையை மழுக்கி 4 குடுமிகள் முன்னும் பின்னும் இருக்குமாறு செய்து பீமன் அவமானப்படுத்தி அனுப்பினான்.

மஹாபாரத போரில், சில கேகேய அரசர்கள், பாண்டவர் பக்கமும், 
சில கேகேய அரசர்கள், துரியோதனன் பக்கமும் நின்று போர் செய்தனர்.

"வ்ரிஹத்ஷாத்ரா" என்ற கேகேய அரசன் பாண்டவர் பக்கம் போர் புரிந்தான். இவனை துரோணர் 14ஆம் நாள் யுத்தத்தில் கொன்றார்.

வ்ரிஹத்ஷாத்ராவின் மகன் 'விசோகன்' என்பவனும் போரிட்டான். இவனை கர்ணன் மாய்த்தான்.
'விசோகன்' இறந்ததை கண்ட இவன் படைத்தளபதி 'உக்ரகர்மன்', படு வேகத்துடன் கர்ணனின் மகன் 'ப்ரசேனனை' நோக்கி பாய்ந்து, கொன்றான்.

தன் மகன் கொல்லப்பட்டதை கண்ட கர்ணன், 'உக்ரகர்மன்' கையையும், தலையையும் தன் அம்புகளால் கொய்து எறிந்தான்.

ஜயத்ரதன் மஹா பாரத போருக்கு தயாரான போது, அவன் தந்தை இவனுக்காக ஒரு வரம் தந்தார். 
'போரில் ஒரு வேளை உன் தலை போனால், உன் தலை கீழே விழ காரணமானவன் தலையும் வெடித்து சிதறும்' என்றார்.




ஜயத்ரதன், அபிமன்யு மரணத்திற்கு முக்கிய காரணமானான். 
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன், 'அடுத்த நாள் சூரியன் மறைவதற்கு முன், ஜயத்ரதனை கொல்வேன், ஜயத்ரதனை கொல்ல முடியாவிட்டால், அங்கேயே தீ மூட்டி அதில் இறங்கிவிடுவேன்' என்று சபதம் செய்தான்.

மறுநாள் 14ஆம் நாள் யுத்தத்தில், கௌரவர்கள் சக்ரவ்யூகம் அமைத்து ஜயத்ரதனை ஒளித்து விட்டனர்.
அபிமன்யுவின் இறப்பினால், அர்ஜுனன் படு பயங்கர கோபத்துடன் போரிட்டான்.

இந்த ஒரு நாளில் மட்டும் 21,870 தேர் படை, 21,870 யானை படை, 65,610 குதிரை படை, 1,09,350 காலாட்படைகளை வதம் செய்தான். 
சூரியன் இன்னும் சில நாளிகையில் மறைந்து விடும் நிலையில், ஜயத்ரதனை கண்டுபிடிக்க முடியவில்லை. 
ஸ்ரீ கிருஷ்ணர் தன் மாயை கொண்டு, சுதர்சன சக்கரத்தை எடுத்து சில நாளிகை சூரியனை மறைத்து விட்டார். 
சூரியன் மறைந்து விட்டது, இனி கவலை இல்லை என்று, ஜயத்ரதன் வெளிய வர, ஸ்ரீ கிருஷ்ணர் இருளை விலக்கினார்.
சூரியன் பிரகாசிக்க, ஜயத்ரதன் எதிரில் நிற்க, அர்ஜுனன் அம்பு அவன் தலையை கொய்து, அது கீழே விழும் முன், இன்னொரு அம்பு மூலம் அடித்து தூக்கி, இப்படியே அவன் தலையை, அவன் தந்தை இருக்குமிடம் வரை தூக்கி சென்று, அவர் கையில் போட்டது.
பதறிய அவர், அறுந்த தன் மகனின் தலையை பார்த்து கீழே போட, அவர் தலையும் வெடித்து சிதறியது.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் 'கர்ணன்' தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - 'சல்லியன்' (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார். இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, "நீ அந்த மாத்ர தேச அரசன் தானே" என்றான். வாலிகன் என்றால் யார் என்று தெரிந்து கொள்ள வாலிகன் படிக்கவும்

வேத மார்க்க வழியில் நடப்பவனை, 'நீ ஒரு வாலிகன்' என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.



சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.

இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை குழியிலிருந்து நகர்த்த மறுத்தார். வேறு வழியில்லாமல், கர்ணன் இறங்கி தேரை நகற்ற முயன்றான். 
'சபையில் கர்ணன் திரௌபதியின் ஆடையை கழற்றி அனைவரும் பார்க்க செய்ய வேண்டும்' என்று சொன்னதை ஸ்ரீ கிருஷ்ணர் நினைவு படுத்த, ஆத்திரம் கொண்ட அர்ஜுனன் வில்லில் இருந்து அம்புகள் பறந்து, கர்ணன் தலையை கொய்து எரிந்தது.

18ஆம் நாள் போரில், யுதிஷ்டிரருடன் போரில் ஈடுபட்டு, சல்லியன் கொல்லப்பட்டார்.

மஹாபாரத போர் முடிந்த பின், அர்ஜுனனின் பேரன் பரிக்ஷித் மட்டும் மிஞ்சினான்.

பாரத தேசத்தை ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வர, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் தீர்மானித்தார்.

திக்விஜயமாக, அர்ஜுனன் அனைத்து நாடுகளுக்கும் படையுடன் சென்றார்.
அப்போது சிந்து தேசத்தை ஜயத்ரதனின் மகன் "சுரதா" ஆண்டு வந்தான்.
'அர்ஜுனன் படையுடன் வந்து கொண்டு இருக்கிறான்' என்று கேள்விப்பட்டதற்கே, நடுங்கினான்.

தன் படைகளுக்கு அர்ஜுனனை தடுக்க ஆணையிட்டான். 
அர்ஜுனன் வருகிறார் என்று உணர்ந்த துரியோதனின் தங்கை "துஷலா" அர்ஜுனனை பார்க்க ஓடி வந்தாள்.
'தன் மகனுடன் போர் புரிய வேண்டாம்' என்று அர்ஜுனனிடம் வேண்டினாள்.
அர்ஜுனன் தன் தங்கை உறவு என்பதாலும், 'பாரத வர்ஷத்திற்கு யுதிஷ்டிரர் சக்கரவர்த்தி என்பதில் சம்மதம் என்றால், போர் செய்யும் எண்ணம் இல்லை' என்றார்.




யுதிஷ்டிரர் சக்கரவர்த்தி என்பதில் ஆட்சேபனை யாருக்குமே இல்லை என்றாள் "துஷலா".
அர்ஜுனன் சிந்து தேசத்தவர்களை அஸ்வமேத யாகத்திற்கு அழைத்து, மற்ற தேசங்களுக்கு திக்விஜயம் செய்ய புறப்பட்டார்.

ஜயத்ரதனின் மகன் "சுரதா" அர்ஜுனன் சிந்து தேசத்தை நோக்கி படை எடுக்க வந்து இருக்கிறான், தன் தந்தையை போரில் கொன்றது போல தன்னையும் கொன்று விடுவார் என்ற பயத்திலேயே, படுத்த படுக்கையாகி விட்டான். 
அர்ஜுனன் திரும்பி சென்றுவிட்ட போதிலும், பயத்தில் இருந்து மீள முடியாமல், உயிர் விட்டான்.

அஸ்வமேத யாகம் செய்து, உலகையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த யுதிஷ்டிரர், தன் இறுதி பயணத்தை இமாலயம் நோக்கி செல்ல திட்டமிட்டார். உலகின் சக்கரவர்த்தியாக பரிக்ஷித் நியமிக்கப்பட்டார்.

சாபத்தினால், தக்ஷகன் என்ற பாம்பு கடித்து பரிக்ஷித் உயிர் நீத்தார்.

பரிக்ஷித் மகன் 'ஜனமேஜெயன்", தன் தந்தை இப்படி கொடிய பாம்பு கடித்து இறந்ததை அறிந்து, ஆத்திரம் கொண்டு, இந்த "தக்ஷஷிலா" (Taxila, Pakistan) என்ற நகரில் சர்ப்ப சாத்ர யாகம் நடத்தினான்.




இந்த யாகத்தில் அங்கு இருந்த பாம்புகள் யாவும் காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல, தானாக வந்து யாக தீயில் வந்து விழுந்தன.
இப்படி ஒரு இனத்தையே அழிப்பது பாவம் என்று, அஸ்தீக மகரிஷி வந்து, ஜனமேஜெயன் கோபத்தை தணித்து, யாகத்தை மேலும் தொடர விடாமல் தடுத்தார்.

Hare Rama Hare Krishna - Bhajan 

Sandhya Vandanam -  Morning (With Meaning) 

Sandhya Vandanam -  Afternoon (With Meaning) 




Sandhya Vandanam -  Evening  (With Meaning) 


மஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia


மஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia

சீன தேசம், ஹன்ஸ் தேசம், ரிஷிக தேசம், துஷார தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய சீனா, ரஷ்யா போன்ற தேசங்கள்.

இந்த தேசங்கள் மிலேச்ச தேசங்கள் என்று அறியப்பட்டன.

வேத கலாச்சாரம் தெரியாத, வேத கலாச்சார பரம்பரையில் பிறக்காத இவர்கள் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர். இவர்கள் வாழ்க்கை வேத கலாச்சாரத்திற்கு மாறாக இருந்தது.

பாண்டவர்கள் பதரிநாத் (உத்திர பிரதேசம்) நகரில் இருந்து, கடினமான இமாலயத்தை கடந்தனர். அப்பொழுது அங்கு இருந்த சீன தேசத்தை கண்டனர். அங்கிருந்து மேலும் பயணம் கொண்ட பாண்டவர்கள், இறுதியில், புலிந்த தேசத்தை (இமாலய தேசம்) மீண்டும் வந்து அடைந்தனர். புலிந்த தேசத்தவர்கள், இமாலயம் முதல் அஸ்ஸாம் வரை படர்ந்து இருந்தனர்.



ஒரு சமயம், ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்று, த்ரிதராஷ்டிரன் இவ்வாறு கூறினார் "ஸ்ரீ கிருஷ்ணருக்கு சீன தேசத்தில் இருந்து வந்த 1000 மான்களின் தோல், நான் கொடுக்கும் மற்ற செல்வத்துடன், இவைகளையும் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்றார்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக பல தேச அரசர்களை வெற்றி கொள்ள, சகோதரர்கள் புறப்பட்டனர். அர்ஜுனன் ரிஷிக தேசம் சென்று, அங்கு பெரும் போர் மூண்டது. இறுதியில், அர்ஜுனன் வென்று, ராஜசுய யாகத்திற்கு தானமாக அவர்கள் கொடுத்த பல விதமான குதிரைகளை வெற்றியாக கொண்டு சென்றார்.

மஹா பாரத போர் நடக்கப்போவது நிச்சயம் என்று உணர்ந்த கௌரவர்கள் மற்றும் கர்ணன் பல தேச அரசர்களை தன் அணியில் சேர்க்க ஆரம்பித்தனர். கர்ணன், ரிஷிக தேசம் சென்று, படை எடுத்தான். போரில் வென்று, அதற்கு பதிலாக போருக்கு தயாராகும் பொருட்டு, ரிஷிக தேசத்த்தில் இருந்து வரி வசூலித்தான்.



ரிஷிக தேசத்து மிலேச்சர்கள்,
ஹன்ஸ் தேசத்து மிலேச்சர்கள், மஹா பாரத போரில், பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
யுதிஷ்டிரரை காப்பாற்றும் பொறுப்புடன் படைத்தளபதியாக இருந்தார் "த்ருஷ்டத்யும்னன்". த்ருஷ்டத்யும்னன் படை தலைவனாக ஏற்று, ஹன்ஸ் தேச படை வீரர்கள் போரிட்டனர்.

ரிஷிக தேசத்தவர்கள், 3140 BC சமயத்தில், நடந்த இந்த பாரத போரில் கலந்து கொண்டு, பின்னர் சுமார் 3000 வருடங்களுக்கு பின், சுமார் 200 BC சமயத்தில் பலர் ஆப்கான், பலோசிஸ்தான், சிந்து தேசம் (பாகிஸ்தான்) போன்ற தேசங்களில் குடி புகுந்தனர்.

துஷார தேசத்தவர்கள் துரியோதனனுக்கு துணையாக போர் புரிந்தனர். காம்போஜ தேச அரசன், துரியோதனனின் ஒரு சேனை தளபதியாக போரிட்டான். காம்போஜ அரசனுடன், துஷார தேச போர் வீரர்கள் போரிட்டனர்.

மஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)


மஹா பாரத சமயத்தில்,
ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)

மஹா பாரத சமயத்தில், ஈரான் வரை பாரத தேசமாக இருந்தது.

ஈரான் நாட்டை தாண்டி இருக்கும் தேசங்களில் கிரேக்கர்களை "யவனர்கள்" என்று அழைத்தனர். இவர்களை மிலேச்சர்கள் என்று அறியப்படுகின்றனர்.

இன்றைய ஈரான் நாடு, மஹாபாரத சமயத்தில், காம்போஜ தேசம், பஹ்லவ தேசம், சாக தேசம் என்று 3 தேசங்களாக அழைக்கப்பட்டது.

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் போனற தேசங்கள், ரமத தேசம் என்று அழைக்கப்பட்டது.

பஹ்லவ தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

வேத மார்க்கத்தை விட்டு, மது, மாமிசம் என்று வாழ்க்கை முறை இந்த அனைத்து தேசங்களிலும் பரவி இருந்தது. பொதுவாக இந்த தேசத்தவர்கள் யாவரையும் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர்.


சிறந்த க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள், இந்த காலத்தில் மலேச்சர்களாகி இருந்தனர்.
வேதங்கள் ஓதும் வேதியர்கள் இங்கு வாழ மறுத்தனர்.

இந்த காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டான்.

சாக தேசம், காம்போஜ தேசம், பஹ்லவ தேச படைகள், க்ருபாச்சாரியார் தலைமையில் போர் புரிந்தனர்.

சிவபெருமான் வழிபாடு அதிகம் இருந்த தேசமாக இருந்தது சாக தேசம். பின்னர் மிலேச்சர்கள் ஆகினர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு திக்விஜயமாக வந்த பீமன், சாக தேச அரசர்களை பீமன் போர் செய்து அடக்கினான்.

சாகர்கள் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொள்ள வந்தனர். கொண்டு வந்த பரிசுகளை கொடுக்க மாளிகையின் வாசல் வரை சென்று வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. இவர்களுக்கு முன்னால் சீன தேசத்தவர்கள், வ்ருஷ்ணி என்ற யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் மேலும் பலர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

சாக படைகள், காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" தலைமையில் போரிட்டனர்.

மஹா பாரத போரில், துரியோதனன் பக்கம் நின்று கடும் போர் புரிந்தனர் ரமத தேச, காம்போஜ தேச, பஹ்லவ தேச, சாக தேச, யவன தேச படைகள். அனைவரையும் அர்ஜுனன் ஒருவனே கொன்று குவித்தான்.

பாரத மண்ணில், காம்போஜ தேசத்தை தான் முதன் முதலில் பிற்காலத்தில் 3000 வருடத்திற்கு பிறகு வந்த கிரேக்க அரசன் அலெக்சாண்டர் கைப்பற்றினான். இதே ஊரில் பாபிலோன் என்ற இடத்தில், உயிர் விட்டான்.