Followers

Search Here...

Tuesday, 3 October 2017

கூரத்தாழ்வார் ஏன் மதுரை அழகர் கோவிலை தேர்ந்தெடுத்தார்?


சோழ அரசன், "சிவனே முதற்கடவுள்" என்று ராமானுஜரை சம்மதிக்க வைக்க முடிவு செய்தான்.
தன் சோழ படையை அழைத்து வர சொல்லி கட்டளையிட்டான்.



அரசன் மூலம் வரப்போகும் ஆபத்தை உணர்நது, சிறிது வயதில் மூத்தவரான "கூரத்தாழ்வார்", ராமானுஜர் போன்று காவி உடுத்தி, ராமானுஜரை சாதாரண வெள்ளை உடை உடுக்க சொல்லி, தப்பிக்க வைத்தார்.

ராமானுஜர் சில சிஷ்யர்களுடன் சோழ படைகள் வருவதற்கு முன் தப்பித்தார்.

சோழ படை, கூரத்தாழ்வாரை ஸ்ரீ ராமானுஜர் என்று நினைத்து, அரசவைக்கு கூட்டி சென்றனர்.

"சிவனே முதற்கடவுள்" என்று எழுதிக் கையெழுத்து போட சொல்ல, கூரத்தாழ்வார் மறுத்தார்.

அவரின் கண்களை பிடுங்கி எறிய ஆணை இட்டான்.
கூரத்தாழ்வார் தன் கண்களை தானே பிடுங்கி விட்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரீ ராமானுஜர் நிலை எவ்வாறு இருந்தது? அவருடைய சிஷ்யர் கூரத்தாழ்வார் நிலை எவ்வாறு இருந்தது?

ஸ்ரீ ராமானுஜர் அடுத்த 12 வருடங்கள் ஸ்ரீ ரங்கத்தை விட்டு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இனி நான் எங்கு போய் இனி இருப்பது? என்று தனக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.
ஸ்ரீ ரங்கநாதருக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.
தன் சிஷ்யர்களுக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.


இது பகவான் இஷ்டம் என்று கவலையை மனதில் கொண்டு வராமல், இனி தான் செய்ய வேண்டிய காரியங்களை நோக்கி மேலும் பயணித்தார்.
அவருக்கு சோழ அரசனிடம் கோபமும் இல்லை.
இதுவே வைஷ்ணவ லக்ஷணம்.

குரு தன் ஞான நிலையில் இருப்பது ஆச்சரியமில்லை. கஷ்ட காலத்தை பகவான் இஷ்டம் என்று அறிந்து, மேலும் தனக்கான கடமையை தொடர்ந்தார்.

ஸ்ரீ ரங்கத்தை விட்டு செல்ல வேண்டிய கஷ்ட நிலைமையில்,  கண்ணை இழந்து இருந்த கூரத்தாழ்வார், பிருந்தாவனம் சென்று விடலாம் என்ற ஆசை கொண்டார்.
ஆனால், கண் தெரியாமல் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து, பிருந்தாவனம் செல்வது முடியாத காரியமாக இருந்தது.

பிருந்தாவனத்திற்கு இணையாக அழகர் கோவிலை கருதினார். அங்கு இருக்கும் சுந்தரராஜ பெருமாளை கண்ணனாக பாவித்தார். அருகில் இருக்கும் மதுரையை, மதுராவாக பாவித்தார்.
அழகர் கோவிலையும் அதை சுற்றி இருக்கும் வனத்தையும் பிருந்தாவனம் என்று பாவித்து, தனக்கு வந்த துக்கத்தை மறந்து, தன் 12 வருட காலத்தை கண் தெரியாமல், பூ கைங்கர்யம் செய்து, சுந்தரராஜ பெருமாளுக்கு பூ மாலை கட்டி கொடுத்து சாத்வீகமாக கழித்தார்.

கூரத்தாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் போன்றே மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

"ஐயோ! இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டுமா?
குருவை இழந்தேனே !
ஸ்ரீ ரங்கநாதரை இழந்தேனே !
ஸ்ரீ ரங்க வாசத்தையும் இழந்தேனே!
கண்களையும் இழந்து குருடானேனே!
இனி நல்ல காலம் வருமா?" என்ற எந்த புலம்பலும் இல்லாமல், ஸ்ரீ ராமானுஜரை போன்ற மனப்பக்குவத்துடன் மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலுக்கு சென்று அங்கு நந்தவனம் அமைத்து பூ கைங்கர்யம் ஸ்ரீ ராமானுஜர் திரும்பி ஸ்ரீரங்கம் வரும்வரை 12 வருடங்கள் செய்து கொண்டு இருந்தார்.



ஒரு நாள் கூட, தன் கவலையை, குறையை, "சுந்தரராஜ" பெருமாளிடம் சொல்லி கொண்டது கூட இல்லை.
சோழ அரசன் மீது கோபமும் இல்லை.
கண் தெரியாமலேயே 12 வருட காலங்கள், பூ கைங்கர்யம் பெருமாளுக்கு செய்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு நிகராக, துக்க காலத்தில் வைராக்கியத்துடன், பகவான் இஷ்டம் என்று சமாதானமாக, சாத்வீகமாக பொறுமையுடன் இருந்தார் கூரத்தாழவார்.
அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

Monday, 2 October 2017

வர்ணம்... மனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்றனர்


மனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்றனர்.

1. English: priest, saint. Sanskrit: ப்ராம்மண.

இறை உணர்வு மேலோங்கியவர்கள் இவர்கள். உலக வாழ்க்கையை விட இறை உணர்வே இவர்கள் லட்சியம். ஏழையாக இருந்தாலும் கவலைப்படாதவர்கள்.  ப்ரம்மத்தை உபாஸிக்கும் ஆசை உடையவர்கள்.
இவர்கள் ப்ரம்மத்தை பற்றி சொல்லும் சமஸ்க்ரித வேதத்தை படித்து, இதிஹாசங்களை படித்து, அதன் அர்த்தத்தை அனைவருக்கும் சொல்ல ஆசை உடையவர்கள்.
இவர்கள் ப்ரம்மத்தை பற்றி வாயால் படிப்பதாலும், சொல்லுவதாலும், மற்ற அவயங்களை விட, இவர்களுக்கு வாயும், கண்ணும், காதுமே மிக முக்கியமானது.
தலை பகுதியில் வாய் இருப்பதால், பகவானின் தலை போன்றவர்கள் என்று உருவகம்.
அனைவருக்கும் தர்மம் எது, அதர்மம் எது என்று சாஸ்த்திரத்தின் வழியில் சொல்வதால், பகவானின் தலை போன்றவர்கள் என்று உருவகம்.

2. English: Army, police. Sanskrit: ஷத்திரிய.

இறை உணர்வு உடையவர்கள். அதை விட அனைவரையும் தர்ம வழியில் வாழ வைத்து, அவர்களை காப்பதே முக்கியம் என்று இருப்பவர்கள். நாட்டையும், மக்களையும் பகைவர்களிடமிருந்தும், தர்மம் வழியில் நடத்தி வாழ வைக்கவும் ஆசை உடையவர்கள். தான் நினைப்பது தர்மமா? அதர்மமா? என்று சந்தேகம் வரும் போது, வேதம் ஓதும் ப்ராம்மணனிடம்(priest, saint) கேட்டு தெரிந்து கொண்டவர்கள்.
இவர்கள் தேசத்தையும், மக்களையும் காப்பாற்றுவதிலேயே ஆசையாக இருப்பதால், மற்ற அவயங்களை விட, இவர்களின் பலத்தை குறிக்க கையும், தோளும், உறுதியான நெஞ்சும் மிக முக்கியமானது.
இதனால், இவர்கள் பகவானின் கை, தோள், நெஞ்சம் போன்றவர்கள் என்று உருவகம்.

3. English: Business people, self employed. Sanskrit: வைஷ்ய.

இறை உணர்வு உடையவர்கள். அதை விட தர்ம வழியில் பணம் நிறைய சம்பாதித்து, சுய தொழில் செய்து, வேலை வாய்ப்பும் கொடுத்து, நாட்டை காக்கும் ஷத்திரியன் சொல் படி இருந்து, நாட்டுக்காக, தர்மப்படி நடக்கும் பொது காரியங்களுக்கு பொருளுதவி செய்து, தானும் சுகமாக இருந்து, பலரையும் வாழ வைக்கும் ஆசை உடையவர்கள் இவர்கள். இவர்கள் வயிற்று மற்றும் தொடை பகுதி போன்றவர்கள். இவர்கள் தேசம் தேசமாக சென்று சுய தொழிலால் சம்பாதிக்கின்றனர். பயணம் அதிகம் போவதற்கு தொடை பலம் தேவை. அனைவரது பசியை போக்க இவர்கள் மூல காரணமாக இருப்பதால், இவர்கள் பகவானின் வயிறு, தொடை போன்றவர்கள் என்று உருவகம்.

4. English: Working people/Employee. Sanskrit: சூத்திரன்

இறை உணர்வு உடையவர்கள். இவர்கள் தானாக சுய தொழில் செய்ய தெரியாதவர்கள், துணிவு இல்லாதவர்கள்.
இவர்கள் நாட்டை காக்கும் அளவிற்கு உயிர் பயம் இல்லாத வீர நெஞ்சம் கொண்டவர்களும் அல்ல.
இவர்கள் காலம் முழுக்க இறை உணர்வுடனேயே, பொருள் சம்பாதிக்கும் எண்ணமே இல்லாதவர்களும் இல்லை.

இவர்களுக்கு பொருளும் வேண்டும், தர்மத்துடன் முடிந்த வரையில் இருக்க ஆசை படுவார்கள்.
நாட்டின் மீது பற்று இருக்கும், ஆனால் நாட்டை காக்கும் அளவிற்கு திறன் இல்லாதவர்கள்.

இவர்கள், யாரிடமும் சென்று அவர்களுக்கு உதவியாய் இருந்து, உழைத்து, அவர்கள் தரும் பொருளை வாங்கி கொண்டு வாழ்வர்.
தானாக எதையும் செய்ய தெரியாத இவர்கள், மற்றவர்கள் சொல்லும்  வேலையை சொல்லிக்கொடுத்து போலவே செய்து முடிக்கும் வல்லவர்கள். யாருக்கு இவர்கள் உதவி தேவையோ, இவர்கள் சென்று உழைப்பதால், இவர்கள் சூத்திரர்கள்.
சூத்திரம் என்றால் 'formula'.



இவர்கள் இல்லை என்றால், வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள்.
அதனால் இவர்கள் சூத்திரன் என்றனர்.

Formula தப்பாக போனால், கணக்கு தப்பாகும்.
அதே போல, இவர்கள் இல்லை என்றால், மற்ற மூவருக்கும் உதவி செய்ய யாரும் இல்லாமல் போகும்.
இதை குறிக்கவே, 'சூத்திரன்' என்ற வர்ண பெயர்.

ஓடி ஓடி மற்றவர்களுக்கு உழைப்பதால், உழைத்ததற்கு கூலி வாங்குவதால், இவர்கள் கால் ஓடுவதை குறிப்பதற்காக, இவர்கள் பகவானின் கால் பகுதி போன்றவர்கள் என்று உருவகம்.



If employee protest, business class affect.

If businessmen protest, country revenue goes down. Army and defence will affect due to low fund.

If army and defence protest, all class will affect.

If priest protest,... it is a hypothetical question. They won't. Their focus is not in material world. So they never protest.
If happens, all 3 class will have lack of real knowledge on sastha, and will do anything as per their own wish

குரு பக்தி பெரிதா? குருவின் கருணை பெரிதா?....


'பகவானை அடைய, எனக்கு குரு தேவையில்லை, அவர் துணையும் தேவையில்லை, குரு நம்பிக்கையும் இல்லை.
நானே முயற்சி செய்வேன்' 
என்று சொல்பவர்களுக்கு, சாஸ்திரம் பல வழிகளை சொல்கிறது.

கீதையில் இதையே சுருக்கமாக, கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம் என்று பல வழிகளாக சொல்லி கொடுக்கிறார்.

"நானே முயற்சி செய்வேன்" என்று சொல்பவர்களுக்காக பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு பல வழிகளை தன் திருவாயால் சொல்கிறார்.






செய்யும் காரியங்களை (கர்மத்தை) யோகமாக செய்ய தெரியவில்லையென்றால்,
அது வெறும் கர்மம் (செயல்) என்றாகி விடும்.
கர்மத்துக்கு பாவ, புண்ணியம் உண்டு, அதற்கு பலன் உண்டு.
அதனால், துக்கம், சுகம் உண்டு. மீண்டும் பிறவி உண்டு.
'எதையும் யோகமாக செய்ய தெரியாது' என்றால், தானே முயற்சி செய்வது வீண்.

ராவணன், கர்ணன், போன்றவர்கள் கூட கடும் தவம் செய்து பலம் பெற்றாலும், ஒரு ஆன்மீக குருவை நாடாததால், கர்வம் கொண்டிருந்தனர், அழிந்தனர்.
தானே எந்த செயலையும் யோகமாக செய்யும் திறமை இருந்தால் செய்யுங்கள் என்று யோக தர்மங்களை நமக்கு காட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

"யோகம் செய்து கடவுளை இந்த கலியில் அடைய எனக்கு திறமை இல்லை. 
பகவான் தான் என்னை காப்பாற்ற வேண்டும், அடுத்த பிறவி இல்லாமல் முக்தி கொடுக்க வேண்டும்
என்று உணர்ந்தவர்கள், ஒரு ஆன்மீக குருவை கட்டாயம் நாட வேண்டும்.

அவர் ஆன்மீக முன்னேற்றத்துக்கு என்ன சொல்கிறாரோ, அதன் படி நடக்க வேண்டும்.

இதுவே கலியில் சுலபமான வழியும் கூட.

குருவின் துணையில் யோக ஸித்தி ஏற்பட்டாலும், கர்வம் உண்டாகாது.  
அப்படியே கர்வம் உண்டானாலும், குருவே திருத்தி விடுவார்.

குரு பக்திக்கும், குரு கருணைக்கும் வித்தியாசம் உள்ளது:

ஒரு பெரிய குளத்தில், சுவையான நீர் இருந்தது.
குளத்தில் இறங்க முடியாத படி, கல்லும் முள்ளும் சூழ்ந்து இருந்தது.
குளத்தில் இறங்க நான்கு திசையிலும் அழகாக படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.



தெற்கு திசையில் உள்ள ஊர்காரர்கள் தெற்கு படித்துறை மூலம் இறங்கி, வேண்டிய அளவு தண்ணீீரை எடுத்துக்கொண்டனர்.
அதே போல, 
ஒவ்வொரு திசையிலும் உள்ள ஊர் மக்கள், அந்தந்த படித்துறைகளை பயன்படுத்தினர்.

இதே போன்று,
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் ஜீவன்களுக்கு, பகவான் "கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம்.." என்று பல படித்துறைகள் அமைத்து கொடுத்தார்.

கர்ம யோகம் செய்ய சக்தி உள்ளவர்கள் கர்ம யோகம் செய்து அந்த படித்துறை வழியாக மோக்ஷம் என்ற நீரை பருகி வைகுண்டம் சென்றனர். பிறவி கடலை கடந்தனர்.

ஞான யோகம், சந்யாஸ யோகம் செய்ய சக்தி உள்ளவர்கள் அந்தந்த படித்துறை வழியாக மோக்ஷம் என்ற நீரை பருகி வைகுண்டம் சென்றனர். பிறவி கடலை கடந்தனர்.

அப்போது இரண்டு காலும் இல்லாத ஒரு நொண்டி, இந்த குளத்தில் தண்ணீர் இருப்பதை அறிந்து, எப்படியோ கஷ்டப்பட்டு குளம் அருகில் வந்து விட்டான்.

ஆனால்,
படித்துறையில் இறங்கி தண்ணீர் எடுக்க அவனால் முடியவில்லை.




'தண்ணீர் வேண்டும்" என்ற தாகம் இருந்தது.
மேலும், 
படித்துறை வழியாக சென்று தண்ணீர் எடுப்பவர்களையும் பார்த்தான்.

இவர்களிடம் காலில் விழுந்தாவது தண்ணீர் கேட்டு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அப்போது அங்கு  குளத்தில் இறங்க சென்ற ஒரு முதியவரை வணங்கி, 'தனக்கும் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' என்றான்.

இவன் பார்த்தவுடனேயே நிலைமையை உணர்நத அந்த முதியவர், 'நீயே முயற்சி செய்ய வேண்டியது தானே' என்று கிண்டல் செய்யாமல், இவனுக்காக இரக்கப்பட்டு, தானே இவனுக்காக தானே குளத்தில் இறங்கி, தண்ணீர் எடுத்து, இவன் அமர்ந்து இருக்கும் இடம் வந்து, தண்ணீர் கொடுத்து, தாகத்தை தீர்த்தார்.

இதே போன்று, 
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் ஜீவன், 'தன் முயற்சியினால் மோக்ஷம் அடைய முடியாது' என்று உணர்ந்து,
பகவான் சொன்ன கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம் என்ற பல படித்துறைகள் வழியாக செல்லும் திறன் படைத்த ஒருவரை தன் ஆன்மீக குருவாக ஏற்று, 
அவரிடம் முக்திக்கு வழி கேட்கும் போது, நம்முடையை நிலையை உணர்ந்து, கேலி செய்யாமல், கருணை கொண்டு, நமக்காக அவர் சிபாரிசு செய்து, மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுப்பார்.

மோக்ஷத்தில் ஆசை இருந்தும், சக்தி இல்லாதவர்கள் தான் உலகெங்கும் அதிகம் உள்ளோம்.

யோக மார்க்கத்தில் செல்ல துப்பு இருந்தால், இன்று மோக்ஷம் அடைந்து இருப்போமே..

யோக, கர்ம, ஞான என்று எந்த மார்க்கமும் செல்ல சக்தி இல்லாத நமக்கு, மோக்ஷம் அடைய ஆசை ஏற்படும் போது தான், குருவை தேட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். 

குரு பக்தியே இங்கு மிகவும் முக்கியம்
குருவிடம் பக்தி செய்ய வேண்டியது நமக்கு இங்கு தேவைப்படுகிறது. 



அந்த ஊரில் ஒரு வழிப்போக்கன் வந்தான்.
வெயிலின் கொடுமையால், தாகம் எடுத்தது.
தண்ணீர் எங்கு கிடைக்கும்? என்று தெரியாததால், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

படித்துறையில் இறங்கி தண்ணீர் எடுத்து செல்பவர்களில் ஒரு முதியவர்,
"தண்ணீர் இல்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது!!" என்று நினைத்து, "யாராவது தண்ணீர் கிடைக்குமா என்று அலைகிறார்களா?"
என்று தானே தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஊர் முழுக்க அலைந்தார்.

இப்படி தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் இந்த வழிப்போக்கனை பார்த்து விட்டார் முதியவர்.

இவன் கேட்காமலேயே, இவன் அருகில் வந்து, முக மலர்ச்சியுடன் தன் கையில் உள்ள தண்ணீரை கொடுத்து, தாகம் தீர்த்தார்.
'இவன் தனக்கு நன்றி சொல்வானா?' என்று கூட எதிர்பார்க்காமல், இவன் தாகத்தை தீர்த்த சந்தோஷத்திலேயே சென்று விட்டார்.

இதே போன்று,
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் சில ஜீவன், 
சாஸ்திர அறிவும் இல்லாமல், 
யோக மார்க்கம் என்றால் என்ன? 
கர்ம மார்க்கம் என்றால் என்ன? 
என்று எந்த வழியும் தெரியாமல்,
குருவும் கிடைக்காமல், 
குருவை தானே கண்டு பிடிக்கும் திறனும் இல்லாமல், 
குரு பக்தி என்றால் என்ன? 
என்று தெரிய கூட வாய்ப்பு இல்லாமல்,
மோக்ஷம் அடைய வேண்டும் என்ற தாகம் மட்டும் கொண்டு அலைபவனை, 
ஞானியான ஆன்மீக குரு ஒருவர், தானே கருணையின் காரணமாக, இவனை தேடி  வந்து, அவன் மோக்ஷத்திற்கும் வழி செய்து விடுவார்.

குரு பக்தி கூட தேவையில்லை என்று பெருங்கருணை கொண்டு குரு மோக்ஷ பாதையை சிலருக்கு காட்டி விடுகிறார். 
இதுவே "குருவின் கருணை". 

குரு பக்தி இல்லாதவர்களுக்கும், சில சமயம் ஞான பூரணமான சத்குரு கிடைத்து விடுவதற்கு காரணம் இது தான். 

அபாரமான கருணையின் காரணமாக எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கும் குரு கிடைத்து விடுவது, குருவின் கருணையால் மட்டுமே.

குருவின் கருணைக்கு பாத்திரமானவன் மஹா பாக்கியவான்.

யோகம் செய்வது கடினம்.
குரு பக்தி செய்வதும் கடினம்.
ஆனால்,
குருவின் கருணைக்கு பாத்திரமாக, 'மோக்ஷம் அடைய வேண்டும்' என்ற தாகமே முக்கியம்.
இந்த தாகம் இருந்தால் கூட போதும். குரு தானே கிடைப்பார். 

குருவின் கருணையால், மோக்ஷமும், வாழும் காலத்தில் சுகமும் உண்டாகும்.

தாகம் இல்லாதவனுக்கு, உண்மையான ஆன்மீக குரு கிடைக்க மாட்டார்.
ஆன்மீக குரு கிடைத்தவர்கள் யாவரும், தாகம் உள்ளவர்களே.

குருவின் கருணை, குரு பக்தியை விட உயர்ந்தது.

தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? மனித முயற்சியால் பெற முடியாத 5 விஷயங்களை தெய்வத்திடம் கேள் என்று சொல்லி தருகிறார் ஆதி சங்கரர்... தெரிந்து கொள்வோமே...

"தெய்வத்திடம் நாம் 
என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? 
எதை கேட்க வேண்டும்?"
ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.


பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

வரம் கொடுப்பவர், எதையும் கொடுக்க முடிந்தவர் என்று தெரிந்தும், அல்ப விஷயங்களை கேட்பவன், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது, 
பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது, 
என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.
அல்ப தெய்வங்கள் இதை மட்டுமே கொடுக்கும்.

"பரவாசுதேவன்" எதையும் தரவல்லவர்.

உன்னதமான சனாதன தர்மத்தை புரிந்து கொள்ளாமல், பொய் மதமான பௌத்த மதம் போன ஒரு சில க்ஷத்ரிய அரசர்களால்,
நம் பாரத நாடு 1000 வருடங்கள் இஸ்லாமியருக்கும், 200 வருடங்கள் கிறிஸ்தவருக்கும் அடிமைப்பட்டு,
க்ஷத்ரிய அரசர்களையும் இழந்து, 
செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

"வளர்ந்த நாடாக" இருந்த நம் தேசம், விடுதலையின் போது ஏழை நாடாக ஆனது. 1947ADல் ஏழைகளாக விடப்பட்டனர் நம் முன்னோர்கள். 

ஏழை நாடாக விடப்பட்ட பாரத நாடு, பெருமுயற்சி செய்து "வளரும் நாடாக" இன்று உள்ளது.

ஆதி சங்கரர் இதற்கு முன்னரே அவதரித்து, நம் பாரத மக்களுக்கு,
நம் கலாச்சாரத்தின் பெருமையை,
நம் தர்மத்தின் பெருமையை,
நம் வேதத்தின் உண்மையான மகிமையை,
நம் சனாதன தர்மத்தின் பெருமையை போதனை செய்து,
மக்களை தர்ம வழியில் உறுதியாக நிறுத்தி விட்டார்.

இந்த பலமே, க்ஷத்ரிய அரசர்களை நாம் இழந்தும், இன்று வரை நம்மை ஹிந்துவாக வைத்துள்ளது.

ஆதி சங்கரர் மக்கள் தர்மங்களை புரிந்து கொள்ள, வேதத்தை பாஷ்யம் செய்து கொடுத்தார்.


"பாஷ்யமும் அனைவருக்கும் புரிவதற்கும், படிப்பதற்கும் கடினமே" என்று உணர்ந்து, யாவரும் சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் கொடுத்தார்.
"ஸ்லோகங்கள்" மூலம் தர்மங்களை விளக்கினார்.
எளிதாக பாடக்கூடியதான "பஜ கோவிந்தம்" கொடுத்தார்.

முக்கியமாக, "நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.
ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே' என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார்.


இனி ஹிந்துவாக இருப்பவர்கள், ஆதி சங்கரர் சொன்ன வழியில் பிரார்த்தனை செய்யலாம்.

நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.

1. கர்வம்
தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க  வேண்டியது,
"பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்"
என்று கேட்கவேண்டும்.

நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).

இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்" என்று இருக்கும் கர்வமே காரணம்.

அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.

நிறைய படிப்பதனால், உயர்ந்த பதவி கிடைப்பதால், உடனே கர்வம் நமக்கு வந்து விடும்.
"எத்தனை விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், அது சமுத்திரத்தில் நாம் எடுத்த ஒரு துளி தான்" 
என்ற மனப்பக்குவம் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும்.
இந்த மனப்பக்குவம், நமக்கு விநயத்தை தரும்.

மேலும் "எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம்" என்ற கர்வத்தை உண்டாக்காமல், "மேலும் தெரிந்து கொள்ளலாம்" என்று நம்மை உணர வைக்கும்.

சாஸ்திரம் நம்மை பார்த்து "எல்லோரும் எல்லாமும் தெரிந்தவர்கள் அல்ல" என்று சொல்லி,
"உனக்கு சில விஷயங்கள் தெரியலாம், 
அடுத்தவருக்கு உனக்கு தெரியாத சில விஷயங்கள் தெரியலாம். 
கற்றுக்கொள்ள வேண்டியது உலக அளவு இருக்க, எப்படி உனக்கு கர்வம் வரும்?" என்று கேட்கிறது.

அனைத்து விஷயங்களிலும் "விநயமாக (அடக்கமாக) இரு"
என்று சொல்கிறது நமது சாஸ்திரம்.

"எல்லாம் தெரியும்" என்ற நம் கர்வம், தெய்வத்திடம் போய் கூட கர்வத்துடன் பேச வைக்கிறது.

"எல்லாம் தெரிந்தவர் அந்த பரவாசுதேவனே" என்று தெரிந்தும்,
நான், என் என்று அவரிடம் பேசுவது தகாது. 

"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?

அதனால்,
"நம் விநயத்துக்கு எதிரியாக இருக்கும், நம்மால் அழிக்க முடியாத கர்வத்தை நீக்கு"
என்று முதலில் ப்ரார்த்திக்க வேண்டும் என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


கர்வம் இல்லாதவனிடம் விநயம் (அடக்கம்) தானே வரும். 

விநயம் நம்மில் வளர வளர, "இன்னும் தெரிந்து கொள்வோம்" என்ற ஆசை உண்டாகும்.

விநயம் உள்ளவனுக்கே, கேட்கும் புத்தி வளரும்.

பல விஷயங்கள் கேட்க ஆசை உள்ளவனுக்கு, "உலக அறிவும், ஆன்மீக அறிவும் எளிதில் ப்ரகாசமடையும்".

பர்த்ரு ஹரி ஒரு ஸ்லோகத்தில்,
"ஒரு சமயத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பெரியோர்கள், மகான்கள் சொல்வதை கேட்க கேட்க, எனக்குள் பல விஷயங்கள் மனதில் பதிய பதிய, இப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது என்ற புரிந்து, அடக்க நிலைக்கு வந்து விட்டேன். கர்வம் அழிந்து, இன்னும் தெரிந்து கொள்ள ஆசை கொண்டேன்" 
என்கிறார்.

ஆக,
"ஒருவன் எத்தனை படித்து இருந்தாலும், நமக்கு தெரியாத விஷயங்களும் சிலருக்கு தெரியும்" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

"ஒருவன் எத்தனை செல்வந்தனாக இருந்தாலும், நம்மை விட செல்வந்தன் உண்டு" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

எந்த காலத்திலும், "நான் உயர்ந்தவன் இல்லை", 
எந்த காலத்திலும் "அந்த பரமேஸ்வரன் ஒருவர் தான் உயர்ந்தவர்" 
என்ற ஞானம் (அறிவு) நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

கொஞ்சம் படித்தாலும்,
கொஞ்சம் பணம் சேர்ந்தாலும்,
கொஞ்சம் பேசினாலும்,
நம்மையும் மீறி, நமக்குள் இந்த கர்வம் வந்து விடும்.

இந்த "நான், எனது" என்கிற கர்வத்தை, "நம் முயற்சியால்" போக்கிக்கொள்ளவே முடியாது. 

தெய்வத்திடம் சொல்லி, தெய்வ அணுகிரஹத்தால் மட்டுமே, நம்மில் இருக்கும் இந்த கர்வத்தை அழிக்க கொள்ள முடியும்.

ஆதி சங்கரர், அதனால் தான், பகவானிடம் நீ முதலில் கேட்க வேண்டியது 'பகவானே, முதலில் என் மனசில் இருக்கும் கர்வத்தை நீக்கி விடு'
என்று பிரார்த்திப்பது தான் என்கிறார்.

2. ஆசை
இரண்டாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை,
'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது. 

ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.



முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.
திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.

கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது.

அதனால்தான், ஆதி சங்கரர் இரண்டாவதாக,
"என் மனதில் ஆசையே இனி வரக்கூடாது" என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே,
நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.

3. திருப்தி:
மூன்றாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு"
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்
"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'"
(4 chapter, 22 sloka)
என்று சொல்லும் போது,
"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது" என்கிறார்.

"திருப்தியாக உள்ளவனின் நிலையை" இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

'மனதில்' த்ருப்தி இல்லாத மனிதனுக்கு'மனதில்' சுகம் கிடைக்காது.

கர்வத்தையும், ஆசையையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
"கிடைத்தது போதும்" என்கிற த்ருப்தியும், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் மூன்றாவதாக,
"பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

4. இரக்கம்:
நான்காவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்".
இரக்க குணம் உள்ளவனுக்கு, 
மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.

இரக்க குணம் உள்ளவனுக்கு, 
"உயிரை கொன்று, மாமிசம் சாப்பிட கூடாது" என்ற எண்ணம் தோன்றும். 

"இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.

'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல, 
எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் நான்காவதாக,
"பகவானே! எனக்கு யாரிடத்திலும் இரக்கம் வருமாறு உள்ள குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, 
நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

5. மோக்ஷம்
கடைசியாக ஐந்தாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,
'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். 
எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? 
என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.

இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது "புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"
என்று பாடுகிறார்.
இதற்கு அர்த்தம்,
"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று. 
கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, அக்கரை காண கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார்.
நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும்.
செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும். 
ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது?

'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல,
ஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.
தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.

"உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும், 
பகவானிடம் கேள்" 
என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லிதருகிறார்.

"யாராலும் தர முடியாத, பகவான் மட்டுமே தரக்கூடிய, இந்த 5 விஷயங்களை உனக்கு கேட்டுக்கொள்ளாமல், 
அற்பமான பணத்தையும், 
உனக்கு வந்த நோயை பற்றியும் கேட்டு வீண் செய்யாதே" 
என்று சொல்லி தருகிறார்.
நீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்து கொண்டே இரு. 

பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா?
இதை விட்டு, 
மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு!! உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே !

இப்படி, "தெய்வத்திடம் எதை கேட்க வேண்டும்?" 
என்று எளிதாக நமக்கு காரணத்தோடு விளக்கி சொல்லித்தந்த ஆதி சங்கரர், இது போன்று பல தர்ம தத்துவங்களை பல ஸ்லோகங்களில் நமக்காக சொல்லி இருக்கிறார்.
ஹிந்துவாக உள்ள நீங்கள், 
ஆதி சங்கரரின் ஸ்லோகங்களை, தினமும் ஒவ்வொன்றாக படித்து, 'அர்த்தங்களை புரிந்து கொள்ள' முயற்சி செய்யுங்கள். 

அடிக்கடி அர்த்ததோடு ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்தாலேயே, நமக்கு எப்படி அழகாக நிம்மதியாக வாழ்க்கையை நடத்த வேண்டும்? என்று புரிந்து விடும்.

"பிரச்சனைகள் பதட்டம், பயம்" உள்ள நம் வாழ்க்கையில், உள்ள தவறுகளையும் திருத்தி கொள்ள முடியும்.

"நாம் ஹிந்துவாக இன்றும் வாழ காரணமாயிருந்த"  ஆதி சங்கருக்கு நாம் செய்யும் நன்றி, நம் தவறுகளை திருத்தி கொண்டு, ஆதி சங்கரரின் பாடல்களை அர்த்தத்துடன் மனதில் அனுபவத்து கொண்டு இருப்பதே

"ஹர ஹர சங்கரா, ஜெய ஜெய சங்கரா"

சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை

பிரச்சனை வந்தாலும், உன் கடமையை செய்து கொண்டே இரு

ஆதி சங்கரர் சொல்கிறார், 'பிரச்சனைகள் இல்லாதவர்களே உலகில் கிடையாது. அதனால், பிரச்சனை வந்து விட்டதே என்று உன் காரியத்தை விட்டு விட கூடாது. எந்த பிரச்சனை வந்தாலும், நீ உன் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டும். கடமையை செய்து கொண்டே, நீ பகவானையும் பிரார்த்தனை செய்' என்கிறார்.



பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்து, "தஸ்மாத் சர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர யுத்ய ச" (chapter 8, 7th Sloka) என்று சொல்லும் போது இதையே சொல்கிறார். பிரச்சனை, மனகுழப்பம் இருந்தாலும், நீ உன் கடமையை செய் என்று 'யுத்ய ச' என்று சொல்லி, பகவானான என்னையும் நினைத்துக்கொள் என்று 'மாம் அனுஸ்மர' என்று சேர்த்து சொல்கிறார்.


கவலைகள், பிரச்சனை, மனகுழப்பம் உள்ள யாவருக்கும் தேவையான உபதேசம் இது.

"தளர்ந்து விடாமல், கடமையையும் செய்து, அதே வேளை பகவானையும் பிரார்த்தனை செய்" என்கிறார் ஆதி சங்கரர்.

"பிரச்சனை காலத்தில், கடமை செய்யாமல், சும்மா இருந்து விடாதே.
பிரச்சனை காலத்தில், நான் என் கடமையை செய்கிறேன் என்று மட்டும் இருந்து, பகவானை பிரார்த்தனை செய்யாமல் இருந்தும் விடாதே. உன் செயலுக்கு பலன் கொடுப்பவர் அவர் என்று மறந்து விடாதே.
பிரச்சனை காலத்தில், கடமை செய்யாமல், பகவான் காப்பாற்றுவார் என்றும் சும்மா இருந்தும் விடாதே.

நான் என்னுடைய கடமையை செய்கிறேன், அதனோடு பகவானே உன் அனுகிரகத்தையும் எதிர்பார்க்கிறேன் என்று இருக்க வேண்டும்" என்று நமக்கு சொல்லித் தருகிறார் ஆதி சங்கரர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "மாம் அனுஸ்மர யுத்ய ச" என்று தெளிவாக சொல்கிறார், "பிரச்சனை காலத்தில், துவண்டு விடாமல், என்னை பிரார்த்தித்து கொண்டே, கடமையை செய்" என்கிறார்.