பிராணன்
பரப்பிரம்மமாகிய வாசுதேவன்,
"ராவணனை அழித்து, மனிதர்களுக்கு தர்மத்தை வழிகாட்ட, தானே மனித அவதாரம் செய்வேன்" என்று ப்ரம்மதேவனிடம் சொன்னதும், முப்பத்து முக்கோடி தேவர்களும், வாசுதேவன் அவதரிப்பதற்கு முன், அவருக்கு தொண்டு செய்ய பூலோகத்தில் அவதாரங்கள் செய்தனர்.
இந்திரனே வாலியாக அவதரித்தார்.
சூரிய தேவனே சுக்ரீவனாக அவதரித்தார்.
வாயு தேவனின் அம்சமாக ஹனுமான் அவதரித்தார் என்று பார்க்கிறோம்.
உலகத்தில் ஏற்படும் அனைத்து அசைவுக்கும், வாயுவே காரணம்.
"வாயு தேவன்" காற்றுக்கு அதிபதி.
இந்த காற்று(வாயு) வெளியில் மட்டும் இருக்கிறது என்று நாம் நினைத்து விட கூடாது.
இந்த காற்று(வாயு) 5 விதமான காரியங்கள் செய்ய, நம் ஒவ்வொருவரின் உடலிலும் இருக்க செய்து, நம் உடலை இயங்க செய்கிறார் வாயு தேவன்..
இந்த 5 வித காற்றுக்கும் நம் வேத சாஸ்திரம் (ஹிந்து தர்மம்) பெயர் கொடுத்து இருக்கிறது..
1. பிராணன்
2. அபானன்
3. வியானன்
4. உதானன்
5. சமானன்
என்று இந்த 5 வித காற்றுக்கும் நம் வேத சாஸ்திரம் (ஹிந்து தர்மம்) பெயர் கொடுத்து இருக்கிறது.
நம் உடம்பில் இருக்கும் 5 விதமான வாயுவில் (காற்றில்), மிகவும் முக்கியமான இடமான இதயத்தில் இருக்கும் காற்றுக்கு தான் "பிராணன்" என்று பெயர்.
இந்த "பிராணன்" என்ற வாயுவின் அசைவினால் தான், இதயத்தில் ரத்த நாளங்கள் ஒரே இடைவெளியில் ஆயுசு முழுக்க அசைந்து அசைந்து வேலை செய்து கொண்டே இருக்கிறது..
நமக்கு மிகவும் முக்கியமான இடம் இதயம்.
இதயம் நின்றுவிட்டால் ஜீவன் பிரிந்து விடும்.
பிராணன் என்ற இந்த வாயு தடைபடும் போது, இதய கோளாறு ஏற்படுகிறது.
பொதுவாக, ஜீவன் பிரிந்து விட்டால், கூடவே இந்த ஐந்து வாயுவும் உடலை விட்டு கிளம்பி விடும்.
"பிராணன் போய் விட்டது" என்று சொல்வதற்கு காரணம் இது தான்.
ஜீவாத்மா (நாம்) இந்த 5 வாயுவிலும் பயணித்து கொண்டே இருக்கும் வரை, உடலில் ஜீவன் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது.
வாயுவை வாகனமாக கொண்டு ஜீவனாகிய நாம் சஞ்சரிக்கிறோம் என்று வேதம் சொல்கிறது.
ஆத்மா 'வாயுவை வாகனமாக கொண்டு சஞ்சரிப்பதால், ஆத்மா (உயிர்) பிரிந்து விட்டால், ப்ராண வாயுவும் கூடவே வெளியே சென்று விடுகிறது என்று புரிகிறது.
இதனால் தான், "உயிர் போய் விட்டது" என்று சொல்வதை சில சமயம் "பிராணன் போய் விட்டது" என்றும் சொல்கிறோம்.
ஜீவனோடு எப்பொழுதும் பரமாத்மாவும் அந்தர்யாமியாக பல அவதாரங்கள் எடுத்து கொண்டு ஒவ்வொரு ஜீவனோடும் கூடவே பயணிக்கிறார்.
ஜீவன் அழிவற்றவன்.
ஜீவன் பரமாத்மாவின் அம்சமே என்றாலும், ஜீவன் பரமாத்மாவுக்கு பணிந்தவன்..
அந்த பரமாத்மாவை சேர நினைக்காதவரை உலகில் மனித, மிருக, பறவை உடல்களில் புகுந்து பிறந்து, இறந்து கொண்டே இருக்கிறான்.
உடலில் உள்ளிருக்கும் கெட்ட காற்றை, உள்ளிருக்கும் மலம், மூத்திரம் போன்ற கெட்டதை வெளியே உந்தி தள்ள வைப்பது, ஒரு அளவுக்கு சேரும்வரை வெளியே விட்டு விடாமல் தடுப்பது "அபானன்" என்ற வாயு.
இந்த அபானன் வேலை செய்யாது போனால், மலம் மூத்திரம் உடலிலேயே தங்கி விடும்..அல்லது தானாக வெளியேறி கொண்டே இருக்கும்.
உடலில் தொப்புள் வழியாக வயிற்றில் உள்ள உறுப்புகள் சரியான அசைவுகளுடன் வேலை செய்ய உதவும் காற்றுக்கு "சமானன்" என்று பெயர்.
உடலில் தொண்டை பகுதியில் மிகவும் முக்கியமான காற்று உள்ளது.. இதற்கு "உதானன்" என்று பெயர்.
நாம் சாப்பிடும் எந்த உணவையும், நீரையும் வயிற்றுக்குள் உள்ளே தள்ள வைப்பது இந்த "உதானன்" என்று காற்று தான்.
மூக்கின் வழியாக நாம் இழுக்கும் வெளி காற்றில் பல அசுத்தங்கள் இருந்தாலும், இந்த கழுத்தில் உள்ள உதானன் என்ற வாயு அசுத்தங்களை சளியாக தள்ளி, சுத்தமான காற்றை நுரைஈரலுக்கு தள்ளுகிறது..
இந்த உதானன் என்ற வாயு தான், மரண சமயத்தில் உள்ளே வெளி காற்றையும் அனுப்பாமல், வாய் வழியாக உள்ளே தள்ளும் ஜலம், உணவு எதையும் உள்ளே போக விடாமல் தடுத்து விடும்.
இந்த உடலில் வசிக்கும் காலம் முடிந்தவுடன், ஜீவனோடு பயணிக்கும் பரமாத்மா (நாராயணன்) வெளியே கிளம்ப தீர்மானிக்க, ஜீவனும் கிளம்புகிறான்.
உடலில் உள்ள வாயுவில் சஞ்சரிக்கும் பரமாத்மா, ஜீவனோடு கிளம்ப தயார் ஆனதும், உதானன் என்ற வாயு இவர்கள் வெளியே கிளம்ப இடம் கொடுக்க, தன் வேலையை நிறுத்துகிறது..
மரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு, பால், கங்கை ஜலத்தை வாயில் விட்டு பார்ப்பார்கள்..
கழுத்தை தாண்டி உள்ளே போகாமல் இருந்தால், ஜீவன் பிரியபோகிறான் என்று வேதம் மரண அவஸ்த்தையை காட்டுகிறது.
ஜீவன் உடலை விட்டு கிளம்ப தயார் ஆனதும்,
சமானன் என்ற வாயுவும் தன் வேலையை நிறுத்தி விடும்.
வயிறு உப்பி, வயிற்றில் உள்ள உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் ஸ்தம்பித்து விடும்.
அபானன் என்ற வாயுவும் தன் வேலையை நிறுத்த மலம் மூத்திரம் தானாக வெளியேறி விடும்.
மற்ற உறுப்புகளில் அனைத்திலும் வியாபித்து இருக்கும் வாயுவுக்கு வியானன் என்று பெயர்.
இப்படி ஐந்து வாயுக்கள் நம் உடலில் இருந்து, மண்ணால் ஆன இந்த சரீரத்தை இயக்குகிறது..
இந்த வாயுவில் சஞ்சரிக்கும் ஜீவாத்மா, கூடவே இருக்கும் பரமாத்மாவுக்கும் ஆராதனை செய்து விட்டு தான் சாப்பிட்டார்கள் நம் முன்னோர்கள்.
வெளியில் நாம் விக்ரஹ ரூபமாக வழிபடும் பரவாசுதேவனே, நம் ஒவ்வொரு உடலிலும் கூடவே இருக்கிறார்.
வெளியில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு நாம் நெய்வேத்யம் செய்யும் போது,
நம் கைகளை கொண்டு பூஜிக்கிறோம்.
மனதால் நன்றி சொல்கிறோம்.
கண்ணால் காண்கிறோம்.
காலால் கோவிலுக்கு நடந்து செல்கிறோம்.
தான் சமைத்ததை அவருக்கு காட்டி நன்றி காட்டுகிறோம்.
உணவு சாப்பிடும் போதும், உள்ளிருக்கும் வாயு பகவானுக்கும், இந்த சரீரத்தில் ஜீவனோடு கூடவே இருக்கும் பரமாத்மாவுக்கும் நெய்வேத்தியம் செய்து விட்டு சாப்பிடுகிறோம். சாப்பிட வேண்டும்.
இந்த வாயுக்கள் (காற்றுகள்) அசைவற்று போனால், உடல் கட்டை போல கிடைக்க வேண்டியதுதான். அதற்கு காரணமான வாயு தேவனுக்கும், பரமாத்மாவாவுக்கும் செய்யும் நெய்வேத்தியமே "பரிசேஷணம்"
என்று சொல்லிக்கொண்டே, 6 முறை ஒவ்வொரு பருக்கையாக சாதத்தை பல்லில் படாமல், வாயில் போட்டு கொண்டு விழுங்கும் போது, ஜீவனாகிய நாம், இந்த 5 வாயுவில் ஜீவனோடு கூடவே சஞ்சரிக்கும் அந்தர்யாமியாக உள்ள பரப்ரம்மத்துக்கு முதலில் நெய்வேத்யம் செய்து விட்டு சாப்பிடுகிறோம்.
மற்ற போலி மதங்களில், தனக்கு கிடைத்த உணவுக்கு நன்றியை சொல்கிறார்கள்.
ஹிந்துக்களோ, வெறும் நன்றியை மட்டும் காட்டுவதில்லை.. கொடுத்த உணவும் அவருடையது தான் என்று அவருக்கு காட்டி நன்றியை சொல்லி, கிடைத்த சாதத்தை கூட பிரசாதமாக சாப்பிடுகிறோம்.
இப்படி, உள்ளும் புறமும் தெய்வ சிந்தனையுடன் வாழ்ந்த ஹிந்துக்கள் அல்லவா நாம்...
நம்மை கண்டு நாம் பெருமை கொள்ள வேண்டாமா!!
உலகில் உள்ள விலங்குகள், பறவைகள் எல்லாம் நாம் சாப்பிட தான் என்று பேசும் போலி மதங்கள் உண்டு..
உள்ளும் புறமும் தெய்வம் எங்கும் இருப்பதை உணரும் ஹிந்துக்கள் எத்தனை அற்புதமானவர்கள்...
ஹிந்துவாக வாழ்வதே புண்ணியம் அல்லவா..
சாப்பிடும் முன், அனைவரும் நம் உடம்பில் உள்ள 5 வாயுவில் சஞ்சரிக்கும் ப்ரம்மத்துக்கு நெய்வேத்யம் செய்து விட்டு, பிறகு சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிப்போம்..
வெறும் சாதமாக உண்ணாமல், இறைவனுக்கு படைத்த பிரசாதமாக மாற்றி கொண்டு உண்போம். நோய்நொடி இல்லாமல் வாழ்வோம்.
தெய்வ சிந்தனையுடன் வாழ்வோம்.
சாப்பிடும் போது, சொல்ல வேண்டிய,
பரிஷேஷன மந்திரம்...
Morning

- ப்ராணாய ஸ்வாஹா (உயிரை தரிக்கும் காற்று)
- அபானாய ஸ்வாஹா (மலத்தை வெளியேற்றும் காற்று)
- வ்யானாய ஸ்வாஹா (உறுப்புக்கள் அதனதன் தொழிலை செய்ய வைக்கும் காற்று)
- உதானாய ஸ்வாஹா (சுத்திகரிப்பு செய்யும் ஒலிக் காற்று)
- சமானாய ஸ்வாஹா (நிரவுக் காற்று)
- ப்ரம்மனே ஸ்வாஹா (ஜீவனோடு கூடவே இருக்கும் பரமாத்மா)

Evening