நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே..
சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு? அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை தானாக வரும்...
அர்த்தம் புரிந்தால், ஆசை வருமே!! கசக்குமா?
மனிதர்களில் சிலர் ரிஷி ஆகிறார்கள், ரிஷியாகும் சிலர் மேலும் முன்னேறி முனிவர்கள் ஆகிறார்கள்..
ரிஷி, முனி வித்தியாசம் அறிய RishiMuni
ரிஷி, முனி வித்தியாசம் அறிய RishiMuni
நாம் அனைவருக்கும் "காயத்ரி என்ற வேத மந்திரம்" சப்த ப்ரம்மத்தில் (வேதம்) இருப்பதை கண்டுபிடித்து நமக்கு கொடுத்தவர் "விஸ்வாமித்திரர்" என்று தெரியும்.
வேதமே "ஓம் என்ற ஓங்காரத்தில்" அடக்கம்.
அந்த ஓங்காரத்தை நமக்கு கொடுத்த ரிஷி யார்?
யாரை தியானித்து அவர் ஓங்காரத்தை கண்டுபிடித்தார்?
அந்த ஓங்காரத்தை நமக்கு கொடுத்த ரிஷி யார்?
யாரை தியானித்து அவர் ஓங்காரத்தை கண்டுபிடித்தார்?
சந்தியா வந்தனத்தில் இதற்கு பதில் சொல்கிறதே!! நமக்கு தெரியுமா??
பிரம்மாவை படைத்தவர் "சாஷாத் பரவாசுதேவன்".
பரமாத்மாவை தியானித்து கொண்டிருந்த ப்ரம்மாவுக்கு, "ஓம் என்ற ஓங்கார மந்திரம்" கேட்க, அதிலிருந்து வேத மந்திரங்கள் உருவானது.
உலகுக்கு ஓங்காரத்தை கொடுத்த முதல் ரிஷி "ப்ரம்ம தேவன்". அவருக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா?
சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு? அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை தானாக வரும்...
ப்ரணவஸ்ய (ஓங்காரத்திற்கு) ரிஷி: ப்ரஹ்மா (பிரம்மாவே ரிஷி) ,
தேவீ காயத்ரீச் சந்த: (தேவீ காயத்ரீயே சந்தம்)
பரமாத்மா தேவதா ! (பரமாத்மா தேவதை)
என்று சந்தியாவந்தனத்தில் சொல்கிறோம்...
என்று சந்தியாவந்தனத்தில் சொல்கிறோம்...
ப்ரம்மா தேவன் "ஓங்காரத்தை" கண்டுபிடித்து கொடுத்தார் என்ற நன்றியை பிரம்மாவுக்கு காட்டவே, நாம் தலை மேல் கை குவித்து அவரை நமஸ்கரிக்கும் விதமாக "தலையை" தொடுகிறோம்.
ஓங்காரம் ப்ரம்மா காதில் எப்படி கேட்டது? காயத்ரி சந்தஸில் (measurement) கேட்டது. அதே போல நாமும் காயத்ரி சந்தஸில் ஓங்காரத்தை சொல்ல வேண்டும் என்று நம்மை ஜாக்கிரதை படுத்தி கொள்ளவே மூக்கை தொட்டு கொள்கிறோம்.
ப்ரம்மா யாரை நினைத்து ஓங்காரமந்திரத்தை கண்டுபிடித்து பிரார்த்தித்தார்? பரவாசுதேவன் நாராயணன்.
நாமும் ஓங்காரம் சொல்லும் போது அந்த பரமாத்மாவை மனதில் தியானிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டே நம் இதயத்தை தொட்டு கொள்கிறோம்.
தலையை தொட்டு பிரம்மாவுக்கு நன்றியையும்,
மூக்கை தொட்டு, அப்படியே சொல்ல வேண்டும் என்ற நிதானத்தையும்,
மார்பை தொட்டு, பரமாத்மாவை நாமும் தியானிக்கும் போது, பிரம்மாவும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
பரவாசுதேவனும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
மூக்கை தொட்டு, அப்படியே சொல்ல வேண்டும் என்ற நிதானத்தையும்,
மார்பை தொட்டு, பரமாத்மாவை நாமும் தியானிக்கும் போது, பிரம்மாவும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
பரவாசுதேவனும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
இத்தனை சிறிய மந்திரம்.. பெரும் பலனை நமக்கு தருகிறதே....
சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா?
Share and comment...
மேலும் படிக்க.... படிக்கவும்