Followers

Search Here...

Friday, 21 June 2019

ஞானி எப்படி இருப்பார்? தெரிந்து கொள்வோமே

யார் பண்டிதன்? யார் ஞானி?
'எந்த காரியத்தை செய்தாலும், அது அந்த வாசுதேவனின் ஆராதனை' என்று உணர்ந்து செய்பவனே உண்மையான பண்டிதன்.






ஞானியின் அடையாளம்:
எப்பொழுதுமே ஒரு பலனை கருதி செய்யக்கூடாது.

நான் தான் செய்கிறேன் என்ற கர்வதோடும் செய்யக்கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், பலன் அடையும் மனிதர்களையோ, தெய்வங்களையோ நினைத்தும் செய்ய கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், தெய்வங்களோ, மனிதனோ தனக்கு ஏதாவது பலனாக தருவார்களா? என்றும் எதிர்பார்க்க கூடாது.

எந்த காரியத்தை செய்தாலும் சரி,
அது தெய்வத்துக்காக இருந்தாலும் சரி,
ஒரு மனிதனுக்காக இருந்தாலும் சரி,
விலங்கிற்காக ஆனாலும் சரி,
செய்யும் காரியம் அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கே' என்று மட்டும் உணர்ந்து,
'எதிர்பார்ப்பு, எரிச்சல், ஏமாற்றம், கோபம்' எதுவும் இல்லாமல், 
அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கு ஆராதனை செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து செய்பவனே - உண்மையான பண்டிதன்.
அவனே ஞானி.
ஞானி ஒரு செயலை செய்து, அதில் பலன் எதிர்பார்ப்பதில்லை.
காரணம், அவன் செய்யும் செயல்கள் யாவும் அந்த அந்தர்யாமியான வாசுதேவனை ஆராதனை செய்வதற்கே.



ஒரு செயல் செய்ததிலேயே, ஞானி திருப்தி அடைகிறான். 
'ஆராதனை செய்தோம்' என்ற திருப்தியில் இருக்கிறான். 
இவனே பண்டிதன். அவனே ஞானி.

சர்வேஸ்வரனே செய்கிறார், 
சர்வேஸ்வரனுக்கே இந்த பலன் சேருகிறது,
என்று இருப்பவன் பண்டிதன். அவனே ஞானி.

இப்படி செய்யும் எந்த கர்மாவின் பலன்களும், அவனிடம் சேராது. 

இப்படி செய்யும் எந்த கர்மாவும், அவனுடைய மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுத்து விடும்.