90% வியாதிகள் பொதுவாக வயிற்றில் இருந்து தான் ஆரம்பிக்கிறது...
வயிற்றை நன்றாக வைத்து கொண்டாலே நீண்ட காலம் ஆரோக்கியம் குறையாமல் வாழலாம்.
நம் பாரத நாட்டில் வயிற்றை ஆரோக்கியமாக வைத்து கொண்டிருந்த வரை, கொடுமையான தீராத நோய்கள் இல்லாமல், நீண்ட நாள் சாதாரணமாக வாழ்ந்தனர்..
வயிற்றை ஓய்வெடுக்க விடாமல், 24 மணி நேரமும் நிரப்பி, வயிற்றை நாசமாக்கி, குடல் கோளாறு, கேன்சர் என்று உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம்..
ஹிந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும். நம் பெருமையை அறிய வேண்டும்.
நோயற்ற வாழ்வுக்கு நம் பாரதமக்கள் கடைபிடித்த வழியை பின்பற்றுவோமே...
உடல் ஆரோக்கியம் பெற,
ஆயுள் வளர,
இறை உணர்வும் வளர,
நமக்கு கிடைத்த எளிதான வழியை கடைபிடிப்போமே
உடல் ஆரோக்கியத்தை அடைவதற்கு, விரதம் நமக்கு பயன் தருகிறது.
சில குறிப்பிட்ட நாட்களில், தெய்வ சிந்தனையோடு விரதத்தை செய்யும் போது, தெய்வ அணுகிரஹமும் சேருகிறது.
விரதங்களில் மிகவும் உன்னதமானது "ஏகாதேசி".
இது மாதத்தில் இரண்டு நாட்களில் வரும்.
ஏகாதேசி விரதத்தை, குழந்தை வயதிலிருந்து கடைசி காலம் வரை கடைபிடிப்பவர்களை, நோய்கள் நெருங்க பயப்படும்.
ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள்,
ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.
தசமியில், இரவு உணவை தவிர்க்க வேண்டும்.
ஏகாதசி அன்று முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும்.
மாதத்தில் இரண்டு தினங்களில் ஏகாதேசி வருகிறது.
விரதம் இருந்தால், நமக்கு "கேன்சர் போன்ற உயிர்கொள்ளும் நோய்கள் கூட வராது" என்று ஆராய்ச்சி செய்து ஜப்பான்காரர் இன்று சொல்லி, நோபல் பரிசு கூட வாங்கி விட்டார்.
* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
* ஏகாதசி திதி முழுவதும், முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும்.
முடியாத பட்சத்தில்,
குளிர்ந்த நீரை குடிக்கலாம்.
ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம்.
உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடலாம்.
பூரண பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது.
குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள்,
காய்கனிகள்,பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பெருமாளுக்கு காண்பித்து உண்ணலாம்.
* ஏகாதசி அன்று பகல் தூக்கம் கூடாது.
* இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜனை செய்து கண் விழிக்கலாம்.
கண் விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்க கூடாது.
* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது.
துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை 'பாரணை' என அழைக்கிறோம்.
துவாதசியன்று அதி காலையில் நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளை உணவாக சேர்த்து
கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை கூறி, சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி, வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை.
'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' கட்டாயம் சேர்த்து சாப்பிடவேண்டும் என்று குறிப்பாக சொல்வதற்கு காரணம் என்ன?
உடல் ஆரோக்கியத்துக்காக சொல்லப்படும் இவை மூன்றும், ஆயுர் வேத மருத்துவ உணவுகள்.
ஒரு நாள் முழுக்க பட்டினி போட்ட வயிற்றில் அக்னி உருவாகி, உடம்பில் இருந்த கெட்ட செல்களை அழித்து விடும்.
அக்னியின் பாதிப்பால், காலியான வயிறும், அதே சமயம் புண்ணாகி இருக்கும்.
இந்த புண்ணை சரி செய்வதற்கே கட்டாயம் 'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' மூன்றையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நம் ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது .
வெறும் கடவுள், இறை பக்தி என்று மட்டும் சொல்லும் பொய் மதம் இல்லை, நம் ஹிந்து சனாதன தர்மம்.
நம் ஆரோக்கியத்துக்கும் அறிவுரை சொல்லும் அற்புதமான ஹிந்து தர்மத்தை விட உயர்ந்த தர்மம் உலகில் கிடையாது.
* துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.
* உணவு சாப்பிடும் முன், அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். * ஏகாதசி அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர்.
இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
பகலில் சாப்பிடாமல், இரவில் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று இன்றைய உலக வாழ்க்கையே நமக்கு காட்டுகிறது.
இன்று இரவில் வேலை பார்க்கும் பலர், பகலில் சாப்பிடாமல், இரவில் உண்டு, உடல் ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகின்றனர்.
வருடத்தில், "ஒரு மாதம் முழுவதும் பகலில் பட்டினி இரு, இரவில் நன்றாக அசைவம் சாப்பிடு" என்று அர்த்தமில்லாத விரத கட்டுப்பாடுகளை சொல்லாமல்,
விரதத்தின் மூலம் 'ஆன்மீக வளர்ச்சி'க்கும்,
அதே சமயம், விரதம் முடிக்கும் போது 'மருத்துவமும்' செய்து கொள்ள வழி காட்டி,
'ஆயுள், ஆரோக்கியத்து'க்கு வழி காட்டும் அற்புதமான விரதமே 'ஏகாதசி' போன்ற விரதங்கள்.
நம் ஹிந்து தர்மம் சொன்ன படி, விரதம் இருப்பவர்கள், 100 வயது வரை எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
விரதங்கள் அனுஷ்டித்து தான், ஹிந்துக்கள் ஆரோகியமாக இது நாள் வரை வாழ்ந்தனர்.
விரதங்கள், நம் இறை வளர்ச்சிக்கும் மட்டும் அல்ல, நம் ஆரோக்கியத்துக்கும் மிக மிக தேவையான ஒன்று.
100 வருடம் உழைக்க வேண்டிய இயந்திரங்கள், 50 வருடத்தில் பாழாகி போவதற்கு காரணம், அதற்கான ஓய்வு கொடுக்கப்படாமல் இருப்பதே..
'ஒரு வேளை' மட்டும் உண்டால், யோகி என்றும்,
'இரு வேளை' மட்டும் உண்டால், போகி என்றும்,
'மூன்று வேளை' மட்டும் உண்டால், ரோகி என்றும் சொல்வதுண்டு.
அந்த காலங்களில் அதிக பட்சம் மூன்று வேலைகள் தான் சாப்பிட்டார்கள் என்று தெரிகிறது..
இன்றோ நாலு வேளை, ஐந்து வேளை என்று கிடைக்கும் போதெல்லாம் வாயில் ஏதாவது போட்டுகொண்டு சாப்பிட்டு கொண்டே இருப்பதால், வயிற்றுக்கு ஓய்வு கிடைப்பதே இல்லை.
மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் வயிற்றில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.
இந்த வயிற்றுக்கு மாதம் இரு முறை ஓய்வு கொடுத்து, அந்த ஓய்வையும் ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் கடைபிடித்தால்,
உலகில் உணவு தேவையும் நம்மால் குறைகிறது.
நம் வயிற்றுக்கும் மாதத்தில் இரண்டு நாள் ஓய்வு கிடைக்கிறது.
'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட உணவை விரதம் முடிக்க சாப்பிடும் போது,
உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் பெறுகிறது.

உலகில் அனைவருக்கும் யோகத்தை சொல்லிக்கொடுத்தது ஹிந்து தர்மமே.
விரதங்களின் மகத்துவத்தை என்றுமே வலியுறுத்தக்கூடிய ஹிந்து தர்மத்தை ஆராய்ச்சி செய்து, ஜப்பானியர்கள் இன்று நோபல் பரிசு பெறுகின்றனர்.
ஹிந்துக்கள் நம் பெருமை அறிவோம்.