Followers

Search Here...

Friday 18 January 2019

ஸ்ரீவத்ஸ கோத்திரம் என்று எதனால் பெயர் ஏற்பட்டது? ஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும்

ப்ருகு ரிஷியின் பரம்பரையில் வந்த முக்கியமான மேலும் 4 ரிஷிகளின் பெயர்:
  • ம்ருகண்டு
  • மார்க்கண்டேயர்
  • ஹேம ரிஷி
  • சௌனகர்
  • ச்யாவன
  • ஆப்னவான
  • ஔர்வ
  • ஜாமதக்ன்ய



இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.

ப்ருகு ரிஷியை, "பார்கவ" ரிஷி என்றும் அழைப்பது உண்டு.
இந்த ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.
இன்று பிராம்மண சமுதாயம் மட்டும், ரிஷிகளின் வம்சத்தை சொல்லி கடைபிடிக்கிறது.
மற்ற சமுதாய மக்களும் ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.
தெரிந்து கொள்வது மிகஅவசியம். கௌரவமும் கூட.
அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.
ப்ருகுவின் பரம்பரையில் வந்தவர் 'ச்யவனர்' என்ற ரிஷி.
இவர் ஸித்த மருத்துவ முறைப்படி நமக்கு தயாரித்து தந்தது தான், நாம் இன்று கடையில் வாங்கி வாங்கி விழுங்கும் ஸ்யவன்ப்ராஸ் (Chyawanprash) என்ற லேகியம்.

இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும், ஆரோக்கியம் என்று விழுங்கும் நாம்,
அதே ரிஷி தாரக மந்திரமான "ராம நாமத்தை" எப்பொழுதும் சொல்பவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்ற வழியையும் சொன்னார் என்பதை மறக்க கூடாது.
ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) உடம்புக்கு நல்லது என்று விழுங்கும் நாம்,
ஆத்மாவின் ஆரோக்கியத்துக்கு "ராம" நாமத்தையும் சொல்ல வேண்டாமா?
கொஞ்சம் ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.


ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் மூலம் தோன்றிய பரம்பரை என்பதால், இந்த பரம்பரையில் உள்ளவர்கள், "பார்கவ கோத்திரத்தை" (வம்சத்தை) சேர்ந்தவர்கள் என்று அறியலாம்.
ஆடையில்லாது, அறிவில்லாது திரிந்த "ஆதாம் ஏவாள்" வழியில் வந்த 'மடையர்கள்' என்று சொல்லிக்கொள்வதில்லை வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள்.
இப்படி சொல்லிக்கொள்வதை விட அவமானம் ஏதாவது உண்டா?

ஞானத்திலும், தவத்திலும், தெய்வீகத்திலும், ஸித்த மருத்துவத்திலும் தேர்ந்த,  ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.
அறிவாளியாக இருந்த ரிஷிகள் என் முப்பாட்டன் இல்லை, முட்டாள் "ஆதாம், ஏவாள்" தான் என்று என் முப்பாட்டன் என்று சொல்வதே, மதம் மாறுபவனுக்கு அவமானமல்லவா !!.

ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் "பார்கவ கோத்திரம்" என்று சொல்லாமல், "ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம் கவனிக்கலாம்.




பார்கவ கோத்திரத்துக்கு, ஸ்ரீவத்ஸ கோத்திரம் என்று எதனால் பெயர் ஏற்பட்டது?
இதற்கு காரணம் உண்டு...
'ஸ்ரீ' என்ற சொல், மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
'வத்ஸ' என்ற சொல், குழந்தையை குறிக்கும்.
ஸ்ரீமந் நாராயணனுக்கு எப்படி பிறப்பு இல்லையோ,
அது போல,
மஹாலட்சுமிக்கும் பிறப்பு இல்லை.
எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறாள் மஹாலட்சுமி.



எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே, ஒரு சமயம்
தசரதனுக்கு பிள்ளையாகவும்,
கஷ்யபரின் பிள்ளையாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.
அது போல,
மஹாலட்சுமியே,
ஒரு சமயம்,
ப்ருகு ரிஷிக்கு பெண்ணாக அவதாரம் செய்து இருக்கிறாள்.
பாற்கடலில் இருந்து தோன்றியும் இருக்கிறாள்.

ஸ்ரீமந் நாராயணனும், மஹாலட்சுமியும், ஆதிசேஷனும் நித்யமாக எப்பொழுதும் வைகுண்டத்தில் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
லீலையின் காரணமாக, பாற்கடலில், பூலோகத்தில் என்று பல்வேறு லோகங்களில் அவதாரம் செய்கின்றனர். சுதந்திரமானவர்கள், யாருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்ல.

ப்ருகு ரிஷியின் பெண்ணாக மஹாலட்சுமி பிறந்ததால், மஹாலட்சுமிக்கு "பார்கவி" என்றும் பெயர் உண்டானது.

யாருக்கு மஹாலக்ஷ்மி (ஸ்ரீ) குழந்தையோ (வத்ஸ), அவரே ஸ்ரீவத்ஸன் என்பதால், ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டது.

இதன் காரணமாக, "பார்கவ (ப்ருகு) வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள்" என்று சொல்வதை விட,
"எங்கள் வம்சத்தில் மகாலக்ஷ்மியே குழந்தையாக அவதரித்தாள்" என்று சொல்லி பெருமைப்படும் விதமாக, ப்ருகுவுக்கும் "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டதால், "ஸ்ரீ வத்ஸ" கோத்திரம் என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது.

பொதுவாக,
மஹாலக்ஷ்மியே ப்ருகுவுக்கு மகளாக அவதரித்ததால், மஹாலக்ஷ்மியிடம் வாத்ஸல்ய (தன் குழந்தை) பக்தி இந்த கோத்திரத்தில் வந்த ரிஷிகளுக்கு எப்பொழுதுமே உண்டு.

ப்ருகு ரிஷி, 
யார் சாத்வீக தெய்வம்? என்று தெய்வத்தையே பரீக்ஷை செய்ய ஒரு சமயம் எண்ணினார்.
ப்ரம்மா, ருத்திரன், தேவர்கள் என்று யாருமே சாத்வீக தெய்வம் இல்லை என்று உணர்ந்து, யோக நித்திரையில் இருந்த மகா விஷ்ணுவின் மார்பை காலால் உதைக்க,
இவரின் நோக்கம் அறிந்த எம்பெருமான், கோபத்தை துளியும் காட்டாமல், வரவேற்று உபசரிக்க, நாராயணனே "சாத்வீக தெய்வம்" என்று விஷ்ணு பக்தனானார் ப்ருகு.
ப்ருகுவின் கால் பட்டதால் எம்பெருமாள் மார்பில் மரு ஏற்பட்டது.
பித்ரு (அப்பாவின்) சம்பந்தம் ஏற்பட்ட தன் மார்பில், மகாலட்சுமிக்கு இடம் கொடுத்தார் பெருமாள்.


மகாலட்சுமியை பெற்றதால், ப்ருகுவுக்கு 'ஸ்ரீவத்ஸன்' என்று பெயர் ஏற்பட்டது போல,
ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும் "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு செய்தார் எம்பெருமான்.

வடக்கில் பெருமாளின் மார்பில் இருக்கும் இந்த மருவுக்கு "ப்ருகு சின்னம்" என்று இன்றும் சில கோவில்களில் சொல்கின்றனர்.

பொதுவாக ஸ்ரீவத்ஸம் என்று சொல்வதே உசிதமானது.
மஹாலக்ஷ்மி ஸ்ரீவத்ஸம் உள்ள எம்பெருமான மார்பில் வாசம் செய்கிறாள் என்று சொல்வதே பொருத்தமும், அழகும் கூட.

கோவிலில் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதை நாம் பார்த்து இருப்போம்.

சாதாரணமாக நமக்கு திருமணம் நடந்தால், "இந்த கோத்திரத்தில் (வம்சம்) பிறந்த மணப்பெண்ணை, இந்த கோத்திரத்தில் பிறந்த மணமகனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்" என்று சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுப்பது வழக்கம்.

பிறப்பே இல்லாத பெருமாளுக்கும், பிராட்டிக்கும் எந்த வம்சத்தை சொல்லி திருக்கல்யாணம் செய்வது?
அதற்கான பதிலை, வைகானஸ ரிஷி நிர்ணயம் செய்ய, வெங்கடேச எம்பெருமானே அதை அங்கீகரித்தார்.

வைகானஸ முறைப்படி,  திருகல்யாண உத்ஸவம் செய்யும் போது,
தான் கஷ்யபருக்கு புத்திரனாக வாமன அவதாரம் செய்ததால், தன்னை காஷ்யப கோத்திரத்தை சேர்ந்தவன் என்றும்,

மஹாலக்ஷ்மி ப்ருகுவுக்கு புத்ரியாக அவதாரம் செய்ததால், பார்கவ கோத்திரத்தை சேர்ந்தவள் என்றும் சொல்லலாம் என்று அங்கீகரித்தார் பெருமாள்.
எந்த கோவிலாக இருந்தாலும்,
பெருமாள் "காஷ்யப" கோத்திரம் என்றும்,
பிராட்டி "பார்கவ/ஸ்ரீவத்ஸ" கோத்திரம் என்றும் சொல்லி,
திருக்கல்யாண உத்சவங்கள் இன்று வரை நடந்து வருகிறது. 




HARE RAMA HARE KRISHNA - BHAJAN
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka