Followers

Search Here...

Friday 11 January 2019

தெய்வத்தால் ஆகாதேனினும் முயற்சி - வள்ளுவன் வாக்கு என்ன சொல்கிறது?


தெய்வத்தால் ஆகாதேனினும்
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் -
திருக்குறள்.




தெய்வம் தன் சக்தியின் மூலம், நமக்கு அருள் (நன்மை) செய்ய இயலாமல் போனாலும்,
கடுமையான மனித முயற்சியால் நாம் ஆசைப்படுவதை அடைய முடியும்.

இப்படி அர்த்தம் கொள்பவன் அறிவில்லாதவன்.
இப்படி அர்த்தம் கொள்பவன் "போலி தமிழன்"
தெய்வ நம்பிக்கை உள்ள வள்ளுவர், தெய்வ பலத்தை தாழ்த்தி, மனித முயற்சியை உயர்த்தி சொல்ல தேவையுமில்லை.




மனிதனின் முயற்சிக்கு பலன் கொடுப்பது இறைவனே, என்கிற பொழுது, 'இறைவனால் முடியாத ஒன்றை, மனித முயற்சியினால் பெற முடியும்' என்று வள்ளுவர் போன்ற தமிழ் புலவர்கள், தெய்வ புலவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். 
தமிழ் சங்கமும் ஏற்று இருக்காது.

தமிழ் இலக்கணம் அறிந்த "உண்மை தமிழன்" இதன் உண்மை பொருளை அறிகிறான்.

தமிழ் இலக்கணப்படி, தெய்வம் என்ற சொல்லுக்கு "விதி" என்றும் பொருள் உண்டு.









"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" ..
என்று வள்ளுவன் கடவுளை "பகவான்" என்ற சொல் கொண்டு அழைக்கிறார்.
'அ' என்ற அகர எழுத்தே பரமாத்மாவை தான் குறிக்கிறது.
எழுத்துக்களில் 'அ' என்ற அகரமாக இருக்கிறேன் 
என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் "அக்ஷரானாம் அகாரோஸ்மி" என்று சொல்வதை தான்,
வள்ளுவர் தன் முதல் குறளிலேயே பயன்படுத்துகிறார். 
"ஆதி பகவன்" என்று பரமாத்மாவை குறிப்பிடுகிறார்.




ஓம் என்ற ஓங்காரம், 'அ' என்ற அகர ஓசையில் தான் ஆரம்பிக்கிறது என்றும் நாம் அறிவோம்.
ஓம் என்ற சொல்லின் பொருளை அறிய, https://www.proudhindudharma.com/2018/01/WhatisAumOM.html?m=1
படிக்கவும்.

தெய்வம் என்ற சொல்லுக்கு தமிழ் இலக்கண படி "விதி" என்று பொருள் இருப்பதை கவனித்தால், 
வள்ளுவர் நமக்கு சொல்லும் பொருள் விளங்கும்.





நாம் இதுவரை செய்த பாவ புண்ணியங்களால் ஏற்படும் எதிர்வினை தான் "விதி" என்கிறோம்.


"விதியின் காரணத்தால், நமக்கு சில காரியங்கள் தடைப்பட்டாலும், நம் கர்ம விதியையும் மாற்ற, நல்ல காரியங்கள் விடாமல் செய்து வந்தால், விதிப்பலனையும் நல்ல காரியங்களால் மாற்றி, நாம் ஆசைப்படுவதை அடைய முடியும்"
என்கிறார் வள்ளுவர்.


HARE RAMA HARE KRISHNA - BHAJAN
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka